என் மலர்
நீங்கள் தேடியது "மருத்துவ பரிசோதனை முகாம்"
- சாகுபுரத்தில் இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- முகாமில் நீரழிவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., எக்கோ, கண் பரிசோதனை ஆகியவை நடந்தன.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரத்தில் டி.சி.டபிள்யூ. நிறுவனம், ஆன்மா தொண்டு நிறுவனம் மற்றும் சாகுபுரம் அரிமா சங்கம் ஆகியவற்றின் சார்பில் இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நெல்லை ஷிபா மருத்துவமனை டாக்டர் அகமது யூசுப் தலைமையிலான 30 மருத்துவர்களை கொண்ட குழுவினர் முகாமை நடத்தினர்.டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.சீனிவாசன் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். உற்பத்தி பிரிவு உதவி தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
முகாமில் நீரழிவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., எக்கோ, கண் பரிசோதனை, பல் சிகிச்சை ஆகியவை நடந்தன. இதில் 150 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முகாமில் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர், பொது மேலாளர்கள், துணை பொது மேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.






