என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை கடத்தல்"

    • சுங்க அதிகாரிகள் விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • வயிற்றில் 125 கிராம் தங்கத்தையும், இன்னொருவர் ஜூஸ் பாட்டிலிலும் தங்கத்தை கடத்தி வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்க சுங்க அதிகாரிகள் விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து கொச்சிக்கு வந்த விமானத்தில் 2 பயணிகளை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். இதில் அவர்கள் 900 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதில் ஒருவர் வயிற்றில் 125 கிராம் தங்கத்தையும், இன்னொருவர் ஜூஸ் பாட்டிலிலும் தங்கத்தை கடத்தி வந்தனர். இதன் மதிப்பு ரூ.48 லட்சம் ஆகும்.

    இதையடுத்து பயணிகள் அபுபக்கர் மற்றும் அப்துல்லா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×