என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பதி தற்கொலை"
திருப்பதி அருகே தண்டவாளத்தில் தலை வைத்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி அடுத்த பூதலப்பட்டு அய்யப்ப காரிபல்லியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், இவரது மகன் கார்த்திக் (வயது20), சந்திரகிரியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் கார்த்திக் கல்லூரிக்கு செல்லவில்லை. நேற்று பிற்பகல் சந்திரகிரி அருகே பணப்பாக்கம் என்ற இடத்தில் ரெயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த ரெயில் கார்த்திக் கழுத்து மீது ஏறியது. இதில் கார்த்திக்கின் தலை வேறு உடல் வேறாக துண்டானது.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பதி போலீசார் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து கார்த்திக் காதல் தோல்வியில் தற்கொலை செய்தாரா? அல்லது தேர்வு பயத்தில் தற்கொலை செய்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.