திருப்பதி கோவிலில் வைகுண்ட வாசல் திறப்பு

வருகிற 2-ந்தேதி முதல் நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று காலை ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் தங்க ரதத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி கோவிலில் வைகுண்ட வாசல் திறப்பு
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை தனுர் மாத சுபமுகூர்த்தத்தில் 1.30 மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது.

முதலில் வி.ஐ.பி.க்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, தனது மனைவி குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.

இதேபோல் நடிகர் சிரஞ்சீவி தனது மனைவி சுரேகா, மகள்கள் சுஷ்மிதா, ஸ்ரீஜா ஆகியோருடன் தரிசனம் செய்தார். காலை 6 மணிக்கு மேல் சாதாரண பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இன்று முதல் 3 நாட்கள் ஏற்கனவே தரிசன டிக்கெட் வைத்துள்ள பக்தர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வருகிற 2-ந்தேதி முதல் நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் தங்க ரதத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வைகுண்ட வாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பக்தர்களை கட்டுப்படுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய சவுத்ரி கூறியதாவது:-

வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 8-ந்தேதி வரை அதிகாலை 1.30 மணி முதல் இரவு 11.45 மணி வரை தொடர்ந்து 20 மணி நேரம் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் வந்தால் 2 அல்லது 3 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 16 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது.

மேலும் குடிநீர், டீ, காபி போன்றவையும் வழங்கப்படுகிறது. சிறுவர்களுக்கு பால் வழங்கப்பட்டு வருகிறது. 4.50 லட்சம் லட்டுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com