என் மலர்tooltip icon

    வழிபாடு

    மார்கழி மாத சிறப்பு- ஆண்டாளின் பாவை நோன்பின் பலன்கள்
    X

    மார்கழி மாத சிறப்பு- ஆண்டாளின் பாவை நோன்பின் பலன்கள்

    ஆண்டாள் நாச்சியார் காட்டிய வழியில் இறைவனைத் துதிப்பது ஆத்ம பலத்தைத் தரும்.

    மார்கழி மாதம் என்பது தேவர்களின் அதிகாலை நேரமாகக் கருதப்படுகிறது. "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவே இதன் சிறப்பைக் கூறியுள்ளார். இந்த மாதத்தில் வழிபாடுகள் செய்வதால் கிடைக்கும் ஆன்மீகப் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    மார்கழி மாத அதிகாலை நேரத்தில் ஓசோன் வாயு பூமியில் அதிக அளவில் இருக்கும். அந்த நேரத்தில் எழுந்து நீராடி, கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது உடல் ஆரோக்கியத்தைத் தருவதோடு, மனதை ஒருநிலைப்படுத்தி தன்னம்பிக்கையையும், ஒழுக்கத்தையும் வளர்க்கிறது.

    இங்கு, மார்கழி மாதத்தின் சிறப்பான பாவை நோன்பின பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி நோன்பு நோற்பதால், நற்குணங்கள் கொண்ட கணவன் அமைவார் என்பதும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பதும் நம்பிக்கை. ஆண்டாள் நாச்சியார் காட்டிய வழியில் இறைவனைத் துதிப்பது ஆத்ம பலத்தைத் தரும்.

    இதேபோல், மார்கழி மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வு வைகுண்ட ஏகாதசி. அன்று விரதமிருந்து பெருமாளை தரிசனம் செய்து, சொர்க்கவாசல் வழியாகச் செல்வது இப்பிறவியில் செய்த பாவங்களை நீக்கி, பிறவா நிலை எனப்படும் முக்தியைத் தரும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    Next Story
    ×