என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோரக்கர் நீராடிய அத்திரி கங்கை
    X

    கோரக்கர் நீராடிய 'அத்திரி கங்கை'

    • ஆதிசிவசைலம் எனப்படும் அத்திரி மலைக்கோவில் உள்ளது.
    • ஆறுபட்டை வடிவ லிங்க ரூபமாக உள்ள அம்பிகையின் நாமமும் அத்திரி பரமேஸ்வரி என்பதே ஆகும்.

    கோரக்கரின் பூர்வ ஜென்மத்தில், அத்திரி என்ற முனிவருக்கு 8 சீடர்கள் இருந்தனர். அவர்களில் கோரக்கரும் ஒருவர். கோரக்கரின் குருபக்திக்காக அத்திரி மகரிஷி தாம் தவம் செய்ய அத்தி மரத்தடியில் தண்டத்தால் தட்டி, தம் கமண்டலத்தில் உள்ள நீரை தெளித்து அங்கேயே கங்கையை உற்பத்தி செய்து அதில் கோரக்கரை நீராட செய்தார்.

    அத்திரி கங்கை

    இன்றும், அது அத்திரி கங்கை என்றே அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் ஆதிசிவசைலம் எனப்படும் அத்திரி மலைக்கோவில் உள்ளது.

    இங்குள்ள ஆதி சிவசைல நாதரை அத்திரி முனிவர் வழிபட்டதால் 'அத்திரி பரமேஸ்வரர்' என்றும் கோரக்கரால் வழிபடப்பட்டதால் 'கோரக்க நாதர்' என்றும் பெயர்கள் கொண்டுள்ளார். இங்குள்ள ஆறுபட்டை வடிவ லிங்க ரூபமாக உள்ள அம்பிகையின் நாமமும் அத்திரி பரமேஸ்வரி என்பதே ஆகும்.

    Next Story
    ×