என் மலர்tooltip icon

    கோவில்கள்

    முருக கடவுளின் பிற கோவில்களை போலவே மருதமலை செல்லும் கோவிலும் மேற்கு தொடர்ச்சியின் விரிவான இந்த மலை உச்சியில் அமைந்துள்ளது.
    கோவை மாவட்டத்தில் மருதமலை பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம் பாளையம் ஊராட்சியில் உள்ள ஒரு மலை ஆகும். இது கோவையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் கோவில் முருகப்பெருமானின் 7-ம் படை வீடாக கருதப்படுகிறது.

    இக்கோவில் மிகவும் பழமையானது ஆகும். திருமுருகன்பூண்டி கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இக்கோவிலை பற்றிய குறிப்புகள் உள்ளன. அது ஏறக்குறைய 1200 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலுக்கு அருகிலேயே பாம்பாட்டி சித்தர் குகைக்கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோவில் முற்காலத்தில் கொங்கு வேட்டுவ கவுண்டர் மன்னர்களின் சொத்தாக விளங்கியது. முருக கடவுளின் பிற கோவில்களை போலவே மருதமலை செல்லும் கோவிலும் மேற்கு தொடர்ச்சியின் விரிவான இந்த மலை உச்சியில் அமைந்துள்ளது.

    மருதமலையின் சிறப்பு :

    மருதமலையை மருந்து மலை என்று சொல்லும் வகையில் மக்களின் உடற்பிணியும், மனப்பிணியும் நீக்கும் மூலிகைகளும் மரங்களும் உள்ளன. அருமையான காற்றும், அமைதியான சூழலும் மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. தவம் செய்வோர் அருளாளர்கள் இறப்பிலாப் பெருவாழ்வு அடைய காயகல்பம் தேடி இம்மலையில வந்து தங்கினர். காமதேனு என்னும் தெய்வீகப்பசு இம்மலையில பசி நீங்க மேய்ந்து மருத மரத்தின் கீழ் இருந்த நன்னீரைப் பருகியதாக பேரூர் புராணத்தில் கச்சியப்ப முனிவர் கூறியுள்ளார்.

    மருதமலையின் இட அமைப்பு :

    மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் தரை மட்டத்தில் இருந்து 500 அடி உயரத்திலும் கோவையில் இருந்து வடமேற்கு திசையில் 15 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. கோவை மாநகரத்தில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல விமான வசதி மற்றும் ரெயில், பஸ் வசதி ஆகியவை உள்ளன.

    தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கோவை நகருக்கு பஸ் வசதிகள் உள்ளது. கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள் மருதமலை அடிவாரம் வரை செல்கின்றன. மருதமலை அடிவாரத்தில் கோவிலுக்கு செல்வதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    வழிபடும் முறை :

    மருதமலை கோவிலில் முதலில் ஆதி மூலஸ் தானத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகனை நாம் தரிசனம் செய்ய வேண்டும். பின்னர் பஞ்சமூக விநாயகரை வழிபட்டு விட்டு மூலவர் முருகனை மனமுருகி தரிசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து பட்டீஸ்வரர், மரகத அம்பிகை, வரதராஜ பெருமாள் , மற்றும் நவக்கிரக சன்னதியை வழிபட வேண்டும். மேலும் கோவிலில் பாம்பாட்டி சித்தர் சன்னதி, சப்த கன்னியர் சன்னதியையும் படிக்கட்டில் வீற்றிருக்கும் இடும்பன் சன்னதியையும் வழிபட வேண்டும்.

    தல விருட்சம் :

    மிகப்பழமையான காலத்தே நம் முன்னோர்கள் வனத்தை இருப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்தனர். பின்னர் நாகரீக வளர்ச்சியில் காடு கெடுத்து நாடாக்கப்பட்டபின்பு தெய்வங்களுக்குப் பெருங்கோவில்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு கோவில்கள் அமைக்கப்பட்ட போதிலும் ஆதியில் இருந்த மரத்தினை அழிக்காது அதனை இன்றளவும் சுவாமிக்கு அருகில் தல விருட்சம் (தலமரம்) என்ற பெயரில் வளர்த்து வருகின்றனர். அவ்வகையில் மருதமரமானது இங்கு ஸ்தல விருட்சமாக இருந்து வருகிறது.

    பக்தர்களுக்கான வசதிகள்  :

    மருதாசலமூர்த்தியின் அருள்பெற கடலெனத் திரண்டு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. மலையின் அடிவாரத்திலிருந்து மலைகோவிலுக்கு மனங்கவரும் மலைப்பாதை அமைக்கப்பட்டு சிற்றுந்துகள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் இயக்கப்படுகின்றன. மலைச் சாலையிலும், படிக்கட்டுகளின் இருபுறமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் பகலில் மட்டுமின்றி இரவிலும் வந்து செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் 12 அறைகள் கொண்ட மருதம் தங்கும் விடுதி குறைந்த வாடகையில் கோவில் நிர்வாகத்தாரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மலைமீது திருக்கோவில் அமைவிடம் மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் பக்தர்கள் அருந்துவதற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மலைமீது ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

    நித்திய பூஜை கட்டளைகள் மற்றும் அர்ச்சனைகள் :

    மருதமலையானை ராஜ அலங்காரத்தில் தரிசிக்க கண்கோடி வேண்டும். மருதப்பனுக்கு தங்கள் பெயரில் அபிஷேக பூஜை நடத்த ஒருவர் 20 ஆயிரம் செலுத்தினால் நித்திய பூஜாக் கட்டளை என்னும் திட்டத்தில் அத்தொகையை வங்கியில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டி தொகையைக் கொண்டு, ஆண்டுக்கு ஒரு முறை அவர் விரும்பும் நாளில் சுவாமிக்கு அவர் பெயரில் விசேஷ அபிசேக பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் அளிக்கப்படும். மேலும் ரூ. 2 ஆயிரம் மட்டும் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டால், அவர் பெயரில் கிருத்திகை நாட்களில் சுவாமிக்கு அர்ச்சனை செய்து, ஒரு வருடத்திற்கு பிரசாதம் தபாலில் அனுப்பப்படும். பலர் இத்திட்டங்களில் பங்கேற்று மருதமலையானின் அருள் பெற்று வருகிறார்கள்.

    சிறுவாணி தண்ணீர் வசதி :

    மருதமலை முருகன் கோவிலில் சுவைமிகு சிறுவாணி குடிநீர் சுமார் 6 லட்சம் ரூபாய் செலவில் மலையடி வாரத்துக்கு கொண்டு வரப்பட்டு கோவில் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கபட்ட மோட்டார்கள் மற்றும் குழாய்கள் மூலம் தண்ணீர் மலை மேல் கொண்டு செல்லப்பட்டு உள்ளதால் பக்தர்களுக்கு குடிநீர் தாராளமாக கிடைக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    சித்த வைத்திய சாலை :

    பொதுமக்கள் நலனுக் காக மருதமலை கோவில் நிர்வாகம் சார்பில் வடவள்ளியில் சித்த வைத்திய சாலை இயங்கி வருகிறது. இந்த வைத்தி யசாலையில் மருத்துவ சேவை இலவசமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் ஏராளமான பொது மக்களும், பக்தர்களும் நோய்களில் இருந்து நிவாரணம் பெற்று வருகிறார்கள்.

    மருதமலை கோவிலின் கல்வி சேவை  :

    மருதமலை கோவில் சார் பில் வடவள்ளி கிராமத்தில் 1971-ம் ஆண்டில் ஒரு கீற்று கொட்டகையில் ஆரம்பி க்கப்பட்ட உயர்நிலைப்பள்ளி நிரந்தர கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டு தற்போது மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்துள்ளது. மாணவர்களின் நலனுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனேக வகுப்பறைகளும் ஆய்வு கூடங்களும் மற்றும் நூல் நிலையமும் கொண்ட புதிய மேல்தளத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 

    இந்த பள்ளியில் தற்போது 1311 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். அறிவு கல்வியோடு ஆன்மீகமும் இணைந்து ஒழுக்க கல்வியும் இங்கு கற்று கொடுக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. 

    முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் :

    மருதமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறி பிறகு குடும்பத்துடன் வந்து நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள். குழந்தை பிறக்க வேண்டி தொட்டில் கட்டி யும், திருமணம் நடக்க வேண்டி சுவாமிக்கு பொட்டு தாலி, வஸ்திரம் வைத்து கல்யாண உற்சவம் நடத்தியும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

    16 1/2 அடி உயர தங்கத்தேர் :

    மருதமலை முருகன் கோவிலில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் தங்கத்தேர் புறப்பாடு நடந்து வருகிறது. சுமார் 16 1/2 அடி உயரத்தில் ரூ.1.08 கோடி மதிப்பில் தங்க ரதம் செய்யப்பட்டு உள்ளது. தங்க ரதத்தில் ஜொலிக்கும் முருகனை தரிசனம் செய்ய கண் கோடி வேண்டும் என்பது போல் பக்தர்கள் மனமுருகி வேண்டி செல்கிறார்கள்.

    தங்க ரத புறப்பாடு காணிக்கையாக பக்தர்கள் ரூ.1500-ஐ செலுத்தினால் தங்க ரதத்தை இழுத்து வேண்டுதலை நிறைவேற்றலாம். மேலும் ரூ.25 ஆயிரம் முதலீடாக செலுத்தினால் அந்த தொகையில் கிடைக்கும் வட்டியை கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாளில் தங்கரத புறப்பாடு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருமணம் கை கூடும் :

    நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் திருமணத் தடை ஏற்படுவோர் இத்திருக்கோவில் சுவாமிக்கு பொட்டுத்தாலி, வஸ்திரம் வைத்து கல்யாண உற்சவம் நடத்தினால் கட்டாயம் விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை இல்லாத தம்பதியினர் 5 வாரம் வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்தால் நிச்சயம் முருகனின் அருள் கிடைக்கும்.

    குதிரைக் குளம்படிகள் :

    இடும்பனை வணங்கிச் சற்று மேலே சென்றால் குதிரைக்குளம்பு என்னும் சுவடு உள்ளது. அதற்காக எழில்மிகு மண்டபமொன்று அமைக்கப்பட்டுள்ளது. முருக வேள் சூரர்களை வெற்றிகொள்ளப் புறப்படும் போதோ அல்லது திரும்பி வரும் போதோ குதிரைக் குளம்புகள் பதிந்த இடமெனக் கருதப்படுகிறது. உண்டியல் பொருட்களைத் திருடர்கள் களவாடிச் செல்ல அவர்களை முருகப் பெருமான் தேடிச் சென்றபோது ஏற்பட்ட குதிரையின் குளம்படியாகவும் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

    வழிபாட்டு முறை :

    இத்திருக்கோவிலில் காமிகா ஆகம பிரகாரம், தினசரி பூஜைகள் செய்யப்படுகிறது. காலையில் 6.00 மணிக்கு உஷக்காலம் (விஸ்வரூப தரிசனம்) காலை 9.00 மணிக்கு காலசந்தி, மதியம் 12.00 மணிக்கு உச்சிக்காலம் மாலை 5.00 மணிக்கு சாயரட்சை மற்றும் இரவு 8.30 மணிக்கு அர்த்தஜாமம் (இராகாலம்) ஆகிய பூஜைகள் செய்யப்படுகிறது. மதியம் 1.00 மணி முதல் 2.00 மணிவரை திருக்கோவில் காப்பீடுதல் செய்யப்படுகிறது.

    இணைய தளம் :

    மருதமலை கோவில் விவரங்களுக்கு தற்போது இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை அளிக்கும் முருகனின் சிறப்புமிக்க பிரார்த்தனை தலமான மருதமலை கோவிலின் தல வரலாறு, தல அமைவிடம், தலச்சிறப்பு, பூஜை காலங்கள், தீர்த்தங்கள், கலை, கட்டிட கலை, அருகில் உள்ள கோவில்கள், போக்குவரத்து வசதிகள், உணவகங்கள் , தங்கும் விடுதி மற்றும் பாடல்கள் ஆகியவற்றை அழகிய வண்ணப்படங்களுடன் அனைவரும் கண்டு களிக்கும் வகையில் www.maruthamalaimurugantemple.org என்ற இணைய தள முகவரி தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் பக்தர்களும் மின் அஞ்சல் மூலம் பிறந்த நாள், திருமண நாள், அன்புக்குரியவர்களின் நினைவு நாள் விழா நாட்களில் காணிக்கை செலுத்தி அர்ச்சனை, அபிஷேக ஆராதனை செய்ய ஏற்ற வகையில் மின்னஞ்சல் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    அன்னதான திட்டம் :

    மருதமலை கோவிலில் தினமும் மதியம் 12-15 மணிக்கு கோவிலுக்கு வரும் 150 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளிதோறும் வடை பாயசத்துடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    அன்னதானம் கடந்த 23-3-2003-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவுக்கு ரூ.3 ஆயிரம் பணத்தை கோவிலில் செலுத்தி அன்னதான திட்டத்தில் கலந்து கொள்ளலாம். அல்லது ரூ.30 ஆயிரம் செலுத்தி முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகை வட்டியை கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாளில் அன்னதானம் செய்து கொள்ளலாம். அன்னதான திட்டத்துக்கு நன்கொடை செலுத்துவதன் மூலம் வருமான வரிக்கு விலக்கும் பெறலாம்.

    கோவையில் இருந்து பஸ்சில் செல்ல :

    கோவையில் இருந்து மருதமலைக்கு மிக எளிதாக பஸ்சில் சென்று வரலாம். கோவையின் பல பகுதிகளில் இருந்தும் இதற்காக போதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

    கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 70, 70டி, 120, எஸ்.12, 92 ஆகிய எண்கள் கொண்ட பஸ்கள் மருதமலைக்கு செல்கின்றன.
    உக்கடத்தில் இருந்து 120ஏ, 46 ஆகிய பஸ்கள், டவுன்ஹால் பகுதியில் இருந்து எஸ்13, எஸ் 15, எஸ் 13ஏ ஆகிய பஸ்கள், சிங்காநல்லூரில் இருந்து 1 டி பஸ்சும், ஈச்சனாரியில் இருந்து 67ஏ என்ற பஸ்சும் இயக்கப்படுகிறது.
    தொடர்பு கொள்ள...

    மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலை பொது மக்கள் 0422-2422490 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம்.
    ஜாதகரீதியான மிருத்தியுஞ் செய்ய ஹோமங்களுக்கு கலசங்கல் வைத்து பூஜை செய்து ஹோமங்கள் செய்வது இத்திருக்கோயிலின் சிறப்பு.
    ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது.

    இத்திருக்கோயில் தருமபுரம் ஆதீன நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இத்தலத்தில் சிவபெருமான் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது வீரட்டாணமாக திகழ்வது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும் மேலும் திருநாவுக்கரசர் சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய. மூவர் இத்தலத்தை பற்றி பாடல் இயற்றி பாடல்பெற்ற தலமாக திகழ்கிறது.

    ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேற்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தலம் வில்வம் மற்றும் பிஞ்சிலம் மரத்தை தல விருட்சகமாக கொண்டுள்ளது.

    முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர்ந்தளிக்க முயலும்போது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபாடாத காரணத்தால் சினம் கொண்ட விநாயக பெருமான் இத்திருக்கோயிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை ஒளித்துவைத்தார். அக்குடமே பிற்காலத்தில் இத்திருக்கோயிலில் சிவலிங்கமாக உருவானதால் (மாறியதால்) அமிர்தம்+கடம் ‘அமிர்தகடேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார் இங்குள்ள மூலவர். இப்படி செய்த விநாயகர் இத்திருக்கோயிலில் ‘கள்ளவிநாயகர்’ என்று ஒரு தனி சந்நதி பெற்று ‘கள்ளவாரணம்‘ என பெயர் பெற்று அபிராமிபட்டர் மூலமாக ஒரு பதிகம் பாடல் பெற்றார் இவ்விநாயகர்.

    இத்தலத்தில் 63 நாயன்மார்களில் இடம் பெற்றுள்ள குங்கிலிய நாயனார் மற்றும் காரிநாயனார் அருள் பெற்று சிவதொண்டு மேற்கொண்ட தலம் இதுவே. மேலும் சரபோஜி மன்னர் ஆட்சிகாலத்தில் பக்தன் ஒருவருக்காக அபிராமி அம்பாள் ‘தை அமாவாசையை’ முழுப் பௌர்ணமியாக்கி ‘அபிராமி அந்தாதி’ அருள செய்த தலம் இத்தலமே.

    ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் வருடாவருடம் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹார பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுமட்டுமல்லாது ஆடிப்பூரம் தை அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு வைபவம் நடைபெற்று வருவது குறிப்பிடதகுந்த ஒன்றாகும்.

    மூலவர் மேற்கே பார்த்தும் அருள்மிகு அபிராமி அம்பாள் கிழக்கே பார்த்தும் அமையப் பெற்றதால் இத்தலம் நித்திய திருக்கல்யாண தலமாக திகழ்கிறது.

    இத்திருக்கோயிலில் ஆயுஷ்ஹோமம். ஜாதகரீதியான மிருத்தியுஞ் செய்ய ஹோமங்களுக்கு கலசங்கல் வைத்து பூஜை செய்து ஹோமங்கள் செய்வது இத்திருக்கோயிலின் சிறப்பு.

    சித்திரை மாதம் - 18 நாட்கள் மகம் நட்சத்திரத்தன்று எம சம்ஹார திருவிழா சிறப்பாக இத்தலத்தில் நடக்கும்.தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும். 6 ம் நாள் அன்று கால சம்கார மூர்த்தி ஒரே ஒரு முறை வெளியே வரும். கார்த்திகை - சோம வாரம் 1008 சங்காபிசேகம் இத்தலத்தில் மிக சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்படத்தக்கது.

    புரட்டாசி நவராத்திரி, மார்கழி மாதம் விதிபாதம் அன்று ஏக தின உற்சவம் இங்கு சிறப்பாக நடக்கும். ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும்,கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும். தை அமாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேசம்.

    மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

    பூஜை நேரம் : காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

    சிறப்புகள் : அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார். சிவபூஜையின்போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு. மகாவிஷ்ணு மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், மகாவிஷ்ணுவை, அம்பிகையின் அன்னையாகவும் கருதி வணங்குகிறார்கள்.

    அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக்கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை, பவுர்ணமி என்று கூறிவிட்டார். எனவே மன்னர், அந்நாளை பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லிவிட்டார். 

    பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது. அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். 

    அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர்.

    திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் 100 வயது பூர்த்தி, கனகாபிஷேகம் 90 வயது, சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர். 

    கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை. இந்த பூஜை செய்பவர்கள், அருகிலிருக்கும் கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரரையும் வழிபட்டால், இந்த வேண்டுதல் பூர்த்தியாவதாக ஐதீகம். 

    திருக்கடையூரில் 60, 80-ம் திருமணம் செய்பவர்கள் திதி, நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத்தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது. அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும். 

    தினமும் சாயரட்சை பூஜையின்போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச்சென்ற பாதாள குகை இருக்கிறது. திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். 

    இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. 

    இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும். இத்தலத்து முருகனைக் குறித்து, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார். எமன் லிங்கத்தின் மீது பாசக்கயிறை வீசியதால் ஏற்பட்ட வடு இன்னும் சிவலிங்கத்திருமேனியில் உள்ளது. கால சம்கார மூரத்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம், கம்பீரம் எல்லாம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி, வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார்.

    பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார்.நவகிரகங்கள் இங்கு கிடையாது. நவகிரகங்களுக்கு இங்கு பவர் இல்லை. கிரக சாந்தி செய்வோர் கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.

    ராகு தோசங்கள் இங்கு கிடையாது. அம்பாள் மகா விஷ்ணு ஆபரணத்திலிருந்து உண்டானவள். 63 நாயன்மார்களில் காரி நாயனாரும், குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள்.அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் அவதரித்த புண்ணிய பூமியும் இதுதான்.

    இத்தலம் ஆயுள் விருத்தி தலம் என்ற சிறப்பு பெற்றதாகும். பிரார்த்தனை சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிசேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது. 59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள். 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள். 

    அறுபது வயது பூர்த்தி ஆகி தமிழ் வருடம் தமிழ் மாதம் அன்று அவரவர் பிறந்த தேதி அன்று சஷ்டியப்த பூர்த்தி மணிவிழா செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு பக்தர்கள் வருகிறார்கள். 

    50 ஆம் கல்யாண ஆண்டு விழா, ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர். இங்குள்ள அம்பாள் அபிராமி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தைவரம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள்.

    இத்தல மூர்த்தியான காலசம்கார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். எமபயம் அண்டாது. மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழும் இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் அமிர்தகடேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். 

    ஆலய அமைப்பு :

    திருக்கடையூர் கோவில், ஊரின் மையத்தில் வானளாவிய கோபுரங்களுடன் எழிலாகக் காட்சி அளிக்கிறது. மேற்கிலும் கிழக்கிலும் ஆலயத்துக்கு ராஜகோபுர வாயில்கள் இரண்டு அமைந்துள்ளன. 

    கிழக்கு கோபுரத்தில் முனீசுவரர் குடிகொண்டிருப்பதால் முனீசுவர கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதையட்டி அமுத புஷ்கரணி அமைந்துள்ளது. அமுதகடேஸ்வரர் மேற்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். மேற்குக் கோபுர வாயில் வழியாக ஆலயத்தில் நுழைந்தால் இடதுபுறம் ஒரு நூற்றுக்கால் மண்டபம். அதே பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் அபிராமி அன்னைக்கு என தனி ஆலயம் அமைந்துள்ளது. அன்னை அபிராமி எக்கணமும் ஈசனை நோக்கிய வண்ணம் கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறாள். 

    கர்ப்பக் கிரகத்தில் அன்னையின் தரிசனம் கிடைத்ததும் உடல் சிலிர்க்கிறது. பளபளக்கும் பட்டாடை. மின்னல்களை இறைக்கும் ஆபரணங்கள். தனித்து இருக்கும் சந்நிதியில் அமுதகடேஸ்வரர் உள்ளார். அவரது திருமேனியில் ஒரு பிளம்பும், பாசக்கயிறின் தழும்பும் காணப்படுகின்றன. அமுதகடேஸ்வரருக்கு பாலாபிஷேகம் நடக்கும் போது இந்த பாசக்கயிறின் தழும்பினைப் பளிச்சென காணலாம். 
    அமுதகடேஸ்வரருக்கு நேர் எதிரில் இருக்கும் கொடிமரத்தில் அருள்மிகு பிள்ளையார் எழில்மிகு கோலத்துடன் காட்சி தருகிறார். 

    அவரை அடுத்து அதிகார நந்தி வரவேற்கிறார். நந்தி தேவரை இருகரம் கூப்பித் தொழுது ஆலயத்தில் நுழைய வேண்டும். அவர் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தால், இடது பக்கம் திரும்பியவுடன் சுப்ரமணியர். அவரை அடுத்து மகாலட்சுமி. இந்த மூன்றாம் பிராகாரத்தில் வில்வவனேஸ்வரர், பஞ்சபூத லிங்கங்கள் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். இவர்களோடு எமன், அறுபத்துமூவர், சப்த மாதர் ஆகியோர் அலங்கரிப்பதும் இந்தப் பிராகாரத்தைத்தான். 

    மகா மண்டபத்தில் கள்ளவாரணப் பிள்ளையார் ஒருபுறம் அருள்பாலிக்கிறார். இன்னொருபுறம் காலசம்ஹார மூர்த்தி - எமனை எட்டி உதைத்த நிலையில் எழுந்தருளி இருக்கிறார். வலது திருக்கரங்களில் சூலமும் மழுவும் தாங்கியுள்ளார். இடது திருவடியால் உதையுண்ட எமன் தலைகீழாக வீழ்ந்து கிடக்கிறார். இடது பக்கத்தில் பாலாம்பிகை திருமகள் கலைமகளாகிய சேடியருடன் விளங்குகிறார்.

    எம பயம் போக்கும்கால சம்ஹார மூர்த்தி :

    மகாமண்டபத்தின் வடபால் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய சபையில் இயமனை நிக்கிரகானுக்கிரகம் பண்ணின அவசரத்தில் (தோற்றநிலை) தெற்குமுகமாக எழுந்தருளியுள்ளார். வலது திருக்கரங்களில் சூலமும் மழுவும் உள்ளது. இடது திருவடியால் உதையுண்ட இயமனார் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார். வீழ்த்தி கிடக்கும் இயமனை ஒரு சிவபூதம் கயிறுகட்டி இழுத்து அப்புறப்படுத்தும் காட்சி காணற்கரியது. இறைவனார் வலது பாகத்தில் ஸ்ரீமார்க்கண்டேயர் அருளுருவாய்க் காட்சியளிக்கிறார். 

    இடது பக்கத்தில் பலாம்பிகை திருமகள் கலைமகளாகிய விளங்குகின்றார். இம்மூர்த்திக்கெதிரில் வடக்கு முகமாக யமனார் (உற்சவமூர்த்தி) எருமையுடன் ஆண்டவன் அருளை நாடிய வண்ணமாக ஆட்சித்திருக்கோலத்தில் காணப்படுகின்றார். இக்காலசங்கார மூர்த்திக்கு ஆண்டில் பன்னிரண்டுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது. இவர் சித்திரைப் பெருவிழாவில் ஆறாந்திருநாளன்று தான் வீதியுலாவிற்கு எழுந்தருளுவார்.

    கல்வெட்டுகள் :

    கோவிலின் சுற்று மதில்களிலும், கருவறையிலும் ஐம்பத்து நான்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை 1906 மற்றும் 1925-ம் ஆண்டுகளில் கல்வெட்டுத் துறையினரால் படியெடுக்கப்பட்டுள்ளன. முதலாம் ராசராசன் முதல் மூன்றாம் ராசராசன் வரையில் உள்ள ஒன்பது சோழ மன்னர்களுடைய வரலாற்று குறிப்புகளையும், கொடைத் தன்மையையும் இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 

    பாண்டிய மன்னர்களான சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் மற்றும் குலசேகர பாண்டியன் ஆகிய மூவரின் கொடைத்தன்மையை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம். விசயநகர மன்னர்களுள் கிருஷ்ண தேவராயரும், மூக்கண்ண உடையார் பரம்பரையில் விருப்பண்ண உடையாரும் இக்கோயிலுடன் தொடர்புடையவர்களாக இருந்ததை இக்கல்வெட்டுகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.

    1008 சங்கு அபிஷேகம் :

    கார்த்திகை மாத சோமவார நாட்களில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரி சங்குடன் கூடிய 1008 சங்குகள் வைத்து இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும். அச்சமயத்தில் மட்டுமே இறைவன் திருமேனியை வஸ்திரம் ஏதுமின்றி தரிசிக்க முடியும். காலன் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு லிங்கத்திலிருந்து வெடித்துத் தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் ஏற்பட்ட பிளவும் நன்றாகத் தெரியும். 

    அதேபோல் முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து அதிலிருந்து திரிசூலம் ஏந்திய கையுடன் சிவபெருமான் வெளிப்படும்படி தத்ரூபமாக அமைந்துள்ளது. இந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டுக்கு 11 முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அவ்வாறு அபிஷேகம் நடைபெறும் போது இறைவனின் திருமேனி அழகினைக் கண்டு களிக்க முடியும்.

    கோவிலுக்கு செல்ல வழிகள் :

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு மேற்கு மாவட்டங்களான கோவை,ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, ராமேஸ்வரம், காரைக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறை வந்து செல்ல வேண்டும்.
    சென்னை, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் சீர்காழி, சட்டநாதபுரம் வழியாக கோவிலுக்கு செல்லலாம்.

    நாகூர், நாகப்பட்டினம் பகுதிகளில் இருந்து வருபவர்கள் காரைக்கால் வழியாக வர வேண்டும். ரெயிலில் வருபவர்கள் மயிலாடுதுறை வந்து செல்லலாம்.

    திருக்கடையூர் மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்திலும், தரங்கம்பாடி, பொறையாரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
    பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது வெங்கட்டாம்பேட்டை வேணுகோபாலசுவாமி திருக்கோவில்.
    நின்ற நிலை, அமர்ந்த நிலை மற்றும் கிடந்த நிலை என மூன்று கோலங்களில் பெருமாள் காட்சி தரும் ஆலயம், இறைவனை அமர்ந்த நிலையில் வணங்கி நிற்கும் கருடாழ்வார் வீற்றிருக்கும் தலம், சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோவில், உயர்ந்த ஊஞ்சல் மண்டபம் கொண்ட ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது வெங்கட்டாம்பேட்டை வேணுகோபாலசுவாமி திருக்கோவில்.

    புராண வரலாறு:

    கலியுகத்தின் தொடக்கத்தில், சடமர்ஷனர் என்ற மகரிஷி வடநாட்டில் தவமிருந்து வந்தார். ஒரு கட்டத்தில் அப்பகுதி முழுவதும் அமைதி குலைந்து, போர்ச்சூழலும் அதர்மமும் தலைதூக்கியது. எனவே அந்த மகரிஷி அமைதி வேண்டி தென்னாட்டுக்குப் பயனமானார்.

    தென்னாட்டில் இன்றைய திருக்கோவிலூர் பகுதியில் பஞ்ச கிருஷ்ண ஆரண்யம் என்னும் வனப் பகுதியில் அவர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். அப்போது நீர் வற்றியிருந்த கருட நதியின் வெப்பம் தாளாமல் அவர் தவித்தார். அந்த நேரத்தில் தென்கரை ஓரமாக ஒரு நீரூற்று தோன்றி ஓடிக் கொண்டிருந்தது. அதில் தன் காலை நனைத்து வெப்பத்தைத் தணித்துக் கொண்ட மகரிஷி, அதன் பாதையிலேயே பயணத்தைத் தொடர்ந்தார். அந்தப் பாதையானது, தில்லைவனத்தின் வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. அந்த இடம் இயற்கை எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார்.

    தவத்தால் மகிழ்ந்த திருமால், லட்சுமிதேவியோடு மகரிஷிக்கு காட்சி கொடுத்தார். இறைவனின் தரிசனத்தைக் கண்டு அகமகிழ்ந்த முனிவர், ‘இறைவா! தாங்கள் உலகைக் காக்க மேற்கொண்ட அனைத்து அவதாரங்களையும் எனக்கு காட்டி அருள வேண்டும்’ என்று வேண்டினார்.



    பெருமாளும் அவ்வாறே காட்சி கொடுத்து அருளினார். அதன்பின்னர் மகரிஷி, ‘இறைவா! தாங்கள் இந்த திருத்தலத்தில் நின்ற கோலத்திலும், கிடந்த கோலத்திலும் நிரந்தரமாய் தங்கியிருந்து, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அளித்து அருள் செய்ய வேண்டும்’ என்று பணிந்தார்.

    அதன்படியே வரமளித்த பெருமாள், இங்குள்ள ஆலயத்தில் நின்ற கோலத்தில் ருக்மணி- சத்யபாமா சமேத வேணுகோபாலராகவும், கிடந்த கோலத்தில் ஆதிசேஷன் பாம்பணையில் பள்ளி கொண்ட ராமராகவும் காட்சி தருகிறார்.

    ஆலய அமைப்பு :

    ஊரின் கிழக்கே பெரிய மதிற்சுவர்களைக் கொண்டு சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் வாயிலின் முன்பாக கருட மண்டபம் காணப்படுகிறது. ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கி.பி. 1884-ம் ஆண்டின் கல்வெட்டு விஜயநகர மன்னர் காலத்தை உறுதி செய்கிறது.

    கோபுர வாயிலைக் கடந்ததும், பலிபீடம், அதனருகே அபூர்வ கோலத்தில் கருடாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக, இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் இத்தல கருடன் வீற்றிருக்கிறார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி தொடைமீது படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இந்த கருடாழ்வார் காட்சி தருகிறார்.

    வேணுகோபாலர் சன்னிதி :

    மகாமண்டபத்திற்குள் தெற்குநோக்கி இருக்கும் சன்னிதியில், அமர்ந்த நிலையில் வைகுந்தவாசன் சன்னிதி இருக்கிறது. இவருக்கு மேலே ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை விரித்து நிற்கின்றார். இது அமர்ந்த நிலைக் கோலமாகும்.

    இதனையடுத்து, சடமர்ஷன மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப இறைவன் காட்சி கொடுத்த வேணுகோபால சுவாமி சன்னிதி அமைந்திருக்கிறது. சுமார் 6 அடி உயரத்தில் சங்கு, சக்கரங்களை இரு கரங்களில் தாங்கி நின்ற கோலத்தில் இவர் அருள்பாலிக்கிறார். மற்ற இரு கரங்களும் வேங்குழலை பிடித்து ஊதியபடி இருக்கிறது. வேணுகோபாலரின் இருபுறமும் ருக்மணி, சத்யபாமா இருவரும் வீற்றிருந்து அருள்பாலிக் கிறார்கள்.



    மூலவரை தரிசித்து தெற்கே திரும்பினால் செங்கமலவல்லி தாயார் சன்னிதி காணப்படுகிறது. பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் தாயார் காட்சி தரு கிறார். வடக்கே ஆண்டாள் சன்னிதி அமைந்துள்ளது.

    இதன் அருகே, சுமார் 18 அடி நீள பாம்பணையில் ராமபிரான் துயில் கொள்ளும் கிடந்த கோலக் காட்சி நம்மைப் பரவசப்படுத்துகிறது. திருமாலின் மார்பில் திருமகளும், திருவடியில் சீதாபிராட்டியும், வீர ஆஞ்ச நேயரும் வீற்றிருக்கின்றனர். தர்ப்பைப் புல்லில் துயில் கொள்ளும் ராமரின் அபூர்வக் கோலம் திருப்புல்லாணி என்ற திருத்தலத்திலும், தஞ்சை மாவட்டம் திருவெள்ளியங்குடி கோலவல்லி ராமர் திருக்கோவிலிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சூரியனும் சந்திரனும் :

    ஆண்டுதோறும் ஆவணி மாதம் 25-ம் நாளில் இருந்து ஆறு நாட்களும், காலை ஆறு மணிக்கு சூரியன் தன் ஒளிக்கதிர்களால் மூலவரை வணங்குகிறார். அதேபோல, புரட்டாசி மாதப் பவுர்ணமிக்கு முன்னும் பின்னும் தலா மூன்று நாட்கள் சந்திரன் தன் ஒளிக் கதிர்களால் செங்கமலவல்லித் தாயாரை வணங்குகிறார். இது ஓர் அதிசய வழிபாட்டு நிகழ்வாகும்.

    கோவிலின் எதிரே சுமார் 50 அடி உயரத்தில், பதினாறு கற்தூண்கள் கொண்ட ஊஞ்சல் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் குதிரை வீரர்களின் உருவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபம் தற்போது புனரமைப்புக்காகப் பிரிக்கப்பட்டு, தமிழக அரசின் நிதியுதவியால் மறுநிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது.

    திருக்குளம் :

    ஊஞ்சல் மண்டபத்தின் எதிரே அழகிய திருக்குளம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் மையப் பகுதியில் ஏழு கிணறுகள் உள்ளதாக கூறுப்படுகிறது. இந்தக் குளத்தின் கிழக்குக் கரையில் கருடாழ்வார் சன்னிதியும், அதையொட்டி தென் பகுதியில் சமாதி ஒன்றும் காணப் படுகிறது. இது இந்தத் திருக்கோவிலைக் கட்டி முடித்த சிற்பியின் சமாதி எனக் கூறப்படுகிறது. ஊஞ்சல் மண்டபத்தின் வடகிழக்கில் திருமால் தன் சக்கரத்தை ஏவி உருவாக்கிய சக்கரத் தீர்த்தம் கிணறு வடிவில் அமைந்துள்ளதாகக் தல வரலாறு கூறுகிறது.

    தொன்மைச் சிறப்பு :

    தமிழக கோவில்களின் வரலாற்றை அறிய உதவும் மெக்கன்சி என்பவரின் வரலாற்றுக் குறிப்புகளும், கி.பி. 1464-ல் எழுதப்பட்ட செப்புப் பட்டயமும், புதுச்சேரி ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பேடும் இத்தலத்தின் தொன்மையையும், வரலாற்றினையும் அறிய உதவுகிறது. செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் காலத்தில் (கி.பி. 1464-1478) இந்தத் திருக்கோவில் திருப்பணி செய்யப்பட்டு சிறப்புடன் விளங்கியிருக்கிறது.

    தெலுங்கு மன்னனின் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட்டம்மாள் என்ற பெண்மணியின் நினைவாக இவ்வூர் வெங்கட்டம்மாள்பேட்டை என அழைக்கப்பட்டது. பின்னாளில் இது மருவி, வெங்கட்டாம்பேட்டை என்ற பெயருடன் விளங்குகிறது. கி.பி.1464-ல் இருந்து சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் செஞ்சி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இந்த ஊர் மிகச் சிறப்புடன் இருந்தது என்பதை செப்புப் பட்டயத்தின் வாயிலாக அறிய முடி கிறது.

    புதுச்சேரியை ஆண்ட பிரஞ்சுக்காரர்களின் ஆட்சியில், மொழிப் பெயர்ப்பாளராகப் பணிபுரிந்த ஆனந்தரங்கம் பிள்ளை என்பவருக்கு இவ்வூர் மானியமாக வழங்கப்பட்டதாக குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும், புதுச்சேரியின் வரலாற்று ஆவணமாகத் திகழும் ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பில் இவ்வூர் வெங்கட்டம்மாள் பேட்டை என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

    விழாக்கள் :

    இந்த ஆலயத்தில் தெலுங்குப் புத்தாண்டான யுகாதி பண்டிகை, கார்த்திகை தீபத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத் திருநாள் ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோவில் நடைத் திறந்திருக்கும். இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆயத்தில் ஏழு நிலை ராஜகோபுரம், ஊஞ்சல் மண்டபம், மதில்சுவர்கள் போன்றவை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணி நிறைவடைந்ததும் கும்பாபிஷேக விழாக்கள் வெகு விரைவில் நடைபெற உள்ளது.

    அமைவிடம் :

    கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில், குறிஞ்சிப் பாடிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னைக்குத் தெற்கே 215 கிலோமீட்டர் தூரத்திலும், வடலூருக்கு வடக்கே 7 கிலோமீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தெற்கே 35 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது. 
    இருதயத்தால் கட்டிய ஆலயம் என்பதால் இருதய தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் இங்கே வந்து இருதயாலீஸ்வரரையும், இறைவி மரகதாம்பாளையும், பூசலாரையும் வேண்டிக்கொண்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
    ஏழாம் நூற்றாண்டில் திருநின்றவூர் எனும் தலத்தில் மறையவர் குலத்தில் உதித்தார் பூசலார் எனும் சிவபக்தர். வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். ஆனாலும், தினமும் அங்குள்ள லிங்கம் ஒன்றைத் தரிசித்து வந்தார். கூரையற்று அந்த இறைவன் மழையிலும், வெயிலிலும் நனைவதைக் கண்டு மனம் வருந்தினார். 

    அந்த ஊரில் சிவ பெருமானுக்கு ஆலயம் கட்ட யாருமே முன் வராத நிலையில் எப்படியேனும் ஈசனுக்கு கோயில் கட்ட வேண்டுமென்று பேரவா கொண்டிருந்தார். செங்கற்களாலும் கல்லாலும் கட்டினால்தான் கோயிலா என்னும் கேள்வி அவர் மனதில் உதித்தது. கையில் பொருளில்லாமல் வெறும் மனக்கோயில் கட்டினால் என்ன என்று கேட்டுப் பார்த்தார். மனக்கோயில் கட்ட முடியுமா என்று மற்றவர்கள் கேலி செய்தார்கள். அந்த சொற்களையே நினைத்துக்கொண்டிருந்த அவருக்குள் ஒரு ஞானம் பிறந்தது. மனதில் ஒரு வைராக்கியத்தை உருவாக்கியது.

    அவர் மனதிற்குள் கோயில் கட்டத் தொடங்கினார். ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்து சிவபெருமானை நோக்கி வணங்கி விட்டு தன்னிடம் ஏராளமான செல்வம் இருப்பதுபோல் கற்பனை செய்துகொண்டு, சிவனை மனதில் இருத்தி மனதுக்குள்ளேயே அனைத்து வசதிகளும் கொண்ட ஆலயத்தை உண்மையிலேயே கட்ட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அத்தனை ஆண்டுகள் மனதாலேயே ஆலயத்தை வடிவமைக்கத் தொடங்கினார். 

    செங்கல் இல்லாவிடின் என்ன, கற்கள் இல்லாவிடின் என்ன, பொருள் இல்லாவிடின் என்ன, இவை இல்லாமலே ஆழ்ந்த பக்தியை மூலதனமாக்கி, கோயில் கட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக தன் மனதுக்குள்ளேயே கோயிலை வடிவமைத்து முழுதாகக் கட்டி முடித்தார்.

    அப்படிக் கட்டி முடித்த கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த ஒரு நன்நாளையும் குறித்தார். அதேநேரம் காஞ்சியிலும் ஒரு ஆலயம் உருவானது. உலகுக்கே ஒரு உன்னதக் கோயிலாக அதை நிர்மாணித்துக்கொண்டிருந்தவன் பல்லவ மன்னன் காடவர்கோன் ராஜசிம்மன். அந்த கைலாசநாதர் ஆலயம் அவன் மனதுக்கு மிகவும் திருப்தியாக கோயில் அழகுற மிளிர்ந்தது.

    தான் பெருமையுடன் உருவாக்கிய கோயிலுக்குக் குடமுழுக்கு வைபவத்துக்கு நாள் குறித்தான் மன்னன். மறுநாள் குடமுழுக்கு, வெகுநாட்கள் கழித்து அன்று மனத்திருப்தியுடன் கண்ணயர்ந்தான். அவன் கனவில் கயிலைநாதன் தோன்றி ‘நாளை திருநின்றவூரில் என் பக்தனொருவன் கட்டிய கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்துகிறான். 

    நான் அங்கே செல்ல வேண்டும். அதனால் நீ வேறொரு நாள் குறித்தால் அந்த நன் நாளில் நான் வருகிறேன்’ என்று கூறி மறைந்தார். அதைக் கேட்டு திடுக்கிட்டு விழித்த மன்னன் குடமுழுக்கு பணியை நிறுத்த ஆணையிட்டுவிட்டு திருநின்றவூருக்கு புறப்பட்டான். கோயிலைத் தேடி அலைந்து களைத்துப் போனான். எங்கும் கோயிலைக் காணவில்லை. 

    ஒரு விவசாயி, ‘இங்கே பூசலார் என்றொருவர் கோயில் கட்டவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார், இலுப்பை மரத்தடியில் பித்துப் பிடித்தாற் போல ஒருவர் இருப்பார், அவர்தான் பூசலார், அவரைப் பார்த்தால் விவரம் தெரியும்,’ என்று கூறவே தேடி அலைந்து பூசலாரைக் கண்டான் மன்னன். ‘ஆலயம் எங்கே?’ என்று கேட்டான். ‘இதோ என் மனதுக்குள்ளே,’ என்றார் பூசலார். பொருள் இல்லாத காரணத்தால் என் மனதால், பக்தியையும் ஞானத்தையும் குழைத்து மனதுக்குள்ளேயே ஆலயம் அமைத்திருக்கிறேன் என்றார். 

    அவருடைய பக்தியை வியந்து அவருடைய இருதயத்தில் கட்டிய கோயிலுக்கு பூசலாரின் விருப்பப்படி திருநின்றவூரில், பக்தவத்சலப் பெருமாள் ஆலயத்தின் அருகில் சிவாலயம் எழுப்பி இருதயாலீஸ்வரர் ஆலயம் என்று அதற்குப் பெயரிட்டு பூசலார் குறித்த நாளிலேயே குடமுழுக்கும் செய்வித்தான். அதன் பின்னரே காஞ்சிக்கு சென்று கயிலாயநாதர் கோயிலுக்கும் குடமுழுக்கு செய்தான்.

    இந்த இருதயாலீஸ்வரர் கோயிலின் கருவறையில் ஈசனாரின் லிங்கத் திருமேனிக்கு அருகே பூசலாரும் காட்சி தருகிறார். இருதயத்தால் கட்டிய ஆலயம் என்பதால் இருதய தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் இங்கே வந்து இருதயாலீஸ்வரரையும், இறைவி மரகதாம்பாளையும், பூசலாரையும் வேண்டிக்கொண்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். 

    இறைவன் லிங்க ரூபமாகவும், மரகதாம்பாள் நின்ற திருக்கோலத்தில், நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். இருதயாலீஸ்வரரின் விமானம் கஜப்ருஷ்ட விமானமாக தூங்கானை மாடவடிவில் அமைந்துள்ளது. ( இருதய நோய் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகள் பூரண குணமாக இங்கு வந்து வேண்டிக் கொள்கிறார்களாம்.) 

    சென்னை-திருவள்ளூர் ரயில்/சாலை மார்க்கத்தில் அம்பத்தூரைக் கடந்து திருநின்றவூரை அடையலாம். 

    ஆலயத் தொடர்புக்கு : 94441 64108.
    அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும்.
    முருகப்பெருமான், அசுரர்களை எதிர்த்து நிலம், ஆகாயம், கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார். அவர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். இவ்வகையில் அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும்.

    கந்தசுவாமி திருக்கோவில் :

    அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்டபோது, மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர்புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் கண்டறிந்து முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இவ்வாறு மறைந்திருந்த அசுரர்கள், முருகப் பெருமானின் கண்களில் அகப்பட்ட இடமே இன்றும், கண்ணகப்பட்டு (கண் அகப்பட்டு) என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது.

    இந்த ஊரில்தான் திருப்போரூர் கந்தசுவாமி திருக் கோவிலை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் நிர்மாணித்த மகான் சிதம்பர சுவாமிகளின் திருமடம் அமைந்துள்ளது. மதுரையில் சங்கப்புலவர் மரபில் அவதரித்தவர் சிதம்பர சுவாமிகள். இவர் மதுரை மீனாட்சி சொக்க நாதரை அனுதினமும் உள்ளத்தில் இருத்தி தியானித்து வந்தார். மீனாட்சி அம்மனின் மீது கலிவெண்பாவும் பாடியுள்ளார்.

    மீனாட்சி அம்பாள் :

    ஒருமுறை சிதம்பர சுவாமிகள் தியானத்தில் அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி, ‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் உள்ளது. அங்கே குமரக் கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோவில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்து. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருளி மறைந்தார்.

    மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன் காட்டிய திசையில் பயணித்து, யுத்தபுரி, சமராபுரி, போரிநகர் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்போரூரை அடைந்தார் சிதம்பர சுவாமிகள். அப்போது அங்கு ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் மட்டுமே இருந்தது. மற்ற பகுதிகள் பனங்காடாக காணப்பட்டது. அந்தப் பகுதியில் முருகப்பெருமான் திருவுருவத்தை தேடித்திரிந்தார். இறுதியில் ஒரு பெண் பனை மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமான் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தார்.

    கோவில் கட்டும் பணி :

    சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் தோன்றி, சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோவிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோவில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

    ஒருமுறை திருப் பணிக்காக வைத்திருந்த பொருட்களை திருடர்கள் கவர முயற்சிக்க, அவர்கள் பார்வை இழந்து வருந்தினர். சுவாமிகளை வணங்கி மீண்டும் கண் பார்வை பெற்ற கள்வர்கள், தாங்கள் வைத்திருந்த பொன், பொருட்களை திருப்போரூர் ஆலய திருப்பணிக்கு கொடுத்து விட்டு சென்றனர்.

    கோவிலுக்கு நிலம் தானம் :

    அந்த காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது, நவாப் மனைவிக்கு திருநீறு பூச, அவரது வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று அழகிய திருக்கோவில் எழுந்தது. அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில் ஆகும்.

    ஆலயத்தின் தெற்கே அமைந்துள்ள திருக்குளமான ‘வள்ளையார் ஓடை’ என்னும் சரவணப் பொய்கையில் நீராடி, கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கீழே ஒரு சிறு பீடத்தில் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம், அபய வரத திருக்கரங்களுடன் பிரம்ம சாஸ்தா வடிவில் வள்ளி- தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். மூலவர் சுயம்பு என்பதால் இந்த சிறிய மூர்த்தியை சிதம்பர சுவாமிகள், அபிஷேக வழிபாட்டிற்காக அமைத்துள்ளார்.

    உபதேச மூர்த்தி :

    கருவறையில் உள்ள மூலவருக்கு புனுகுச் சட்டம் சாத்தி, கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக் கிறார்கள். எதிரில் யானை வாகனமும், பலிபீடமும் உள்ளன. கணபதி, தண்டாயுதபாணி, பிரம்ம சாஸ்தா, துர்க்கை, அகத்தியர், நாகராஜா, வீரபாகு, வீரபத்திரர் சன்னிதிகளும் ஆலய உட்பிரகாரத்தில் உள்ளன. கருவறை பின்புறம் பஞ்சலோகத்தில் அமைந்த விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பிரம்மா, தேவேந்திரன், நந்தி, த்வனி சண்டேசர், மாத்ரு சண்டேசர், அஸ்திரதேவர், உபதேச மூர்த்தி சன்னிதிகளும் அமைந்துள்ளன.

    சிவபெருமானது மடியில், தந்தையின் திருமுகத்தைப் பார்த்தபடி முருகன் அமைந்திருக்க, சிவபெருமானோ தன் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அதி அற்புத திருவடிவே உபதேச மூர்த்தி ஆகும். இந்த உபதேச மூர்த்தி திருவுருவுக்கு மரிக்கொழுந்து சாத்தி, நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

    கோவில் அமைப்பு :

    ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளது. இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிரிகள், பகைவர்கள் தொல்லை விலகும்.

    கோவில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர், தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். எனவே இத்தல விநாயகரையும், சனீஸ்வரரையும், கந்தசுவாமியையும், பைரவரையும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக் கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகன்று விடும் என்று கூறப்படுகிறது.

    ஆலய தலமரமான வன்னி மரத்தின் அருகே வன்மீகநாதர், புண்ணியகாரணி அம்பாள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வன்னிமர விநாயகர் சன்னிதிகள் உள்ளன. மேலும் இடும்பன், சூரியன் சன்னிதிகளும் இருக்கின்றன. இத் தலத்தில் பைரவர் நாய் வாகனம் இல்லாமல், தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் எழுந்தருளியிருப்பது சிறப்பு அம்சமாகும்.

    திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம் முதலிய இடங்களில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தூரத்தில் திருப்போரூர் அமைந்துள்ளது.
    சந்திரசேகர சுவாமி கோவிலுக்கு வந்து வணங்குபவர்களுக்கு குழந்தை பாக்கியம், தீராதநோய் தீர்க்கும் வல்லமை, இழந்த செல்வத்தை மீண்டும் பெறும் வாய்ப்பு உள்ளிட்ட கிடைக்கும் என்று புராண நூல்களில் குறிக்கப்பட்டு்ள்ளன.
    தமிழகத்தின் முதுகெலும்பாக விளங்கும் காவிரி ஆற்றின் தென் பகுதியில் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது, திருச்செந்துறை கிராமத்தில் அமைந்துள்ள சந்திரகேரர் ஆலயம். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட ஒரு புண்ணிய ஸ்தலம் பல சிறப்புகளை தன்னுள் அடங்கியுள்ளது.

    இந்த கோவில் திருச்சியிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு பகுதியில் கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வந்து வணங்குபவர்களுக்கு குழந்தை பாக்கியம், தீராதநோய் தீர்க்கும் வல்லமை, இழந்த செல்வத்தை மீண்டும் பெறும் வாய்ப்பு உள்ளிட்ட கிடைக்கும் என்று புராண நூல்களில் குறிக்கப்பட்டு்ள்ளன. அதனால் இந்தக் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    பலா மரத்தில் சிவன் :

    பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் பாட்டனார் திருச்சி உறையூரை தலைநகரமாக கொண்டு ஆண்டு வந்தார். காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. பவுர்ணமிக்கு 8 தினங்களுக்கு முன்னர் அந்தி பொழுதில் அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் புடை சூழ காடுகளில் திருடர்களை பிடிக்க மன்னர் செல்வது வழக்கம். அந்த இடம் முழுவதும் பலாமரக் காடாக இருந்தது. 

    மன்னர் தன் படைகளுடன் வந்த போது, அங்கு திருடர்கள் யாரும் இல்லை. அதற்கு மாறாக மான்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து மன்னனுக்கு மான்களை வேட்டையாடும் எண்ணம் தோன்றியது. அப்படி வேட்டையாடும் போது, ஒரு மான் அங்கிருந்து பெரிய மரப்பொந்தில் ஒளிந்து கொண்டது. மன்னன் எய்த அம்பு, குறி தவறி பலாமர பொந்தில்பட்டு, அம்பு பட்ட அந்த இடத்தில் பலா மரப்பாலுக்கு பதிலாக ரத்தம் பீறிட்டது.

    அந்த நேரத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. சிவபெருமான் சுயம்பு ரூபமாக அந்த மரத்தின் அடியில் உள்ளதாகவும், அங்கு ஒரு சிவாலயம் அமைக்குமாறும் முதலாம் பராந்தக சோழனுக்கு கட்டளையிட்டது. மான் மாயமானது. வில் அம்பை மன்னர் கீழே போட்டுவிட்டு, சிவபெருமான் இருக்குமிடத்தில் உயிர்வதை செய்ய வந்துவிட்டோமே என்று நினைத்து வருந்தினான். 

    பின்னர் அரண்மனை சென்று செப்பு தகட்டில் இந்த நிகழ்வை பதிவு செய்தார். அரண்மனையில் இருந்து 13 மைல் தூரத்தில் மேற்கே திருச்சி - கரூர் காட்டு பகுதியில் சிவாலயம் அமைக்க வேண்டும் என்ற அந்தப் பதிவு தகடு, தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகாலின் அரசால் இன்றும் பாதுகாப்பாக மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    கோவில் அமைக்கும் பணி :

    மன்னன் எவ்வளவோ முயற்சி செய்தும் சிவனை கண்ணால் பார்க்கும் பாக்கியமோ, சிவாலயம் அமைக்கும் பாக்கியமோ கிடைக்கவில்லை. அவர் ஆண்ட பகுதியில் கோவில் கட்ட மலைகள் இல்லாத காரணத்தினால் நிறைவேற்ற முடியவில்லை. அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த பூதி ஆதிச்சம்பிடாரி என்ற பெரியகுந்தவை நாச்சியார், இறைவனுக்கு கோவில் கட்டும் பணியை கையில் எடுத்தார். 

    தன்னுடைய எல்லைக்கு வெளியே அமைச்சர்களை அனுப்பி மேற்கு திசையில் முசிறி, தொட்டியம், நாமக்கல், பகுதியிலுள்ள மலைகளிலிருந்து, கல்லெடுப்பதற்கு அந்த பகுதி சாளுக்கிய மன்னனிடம் அனுமதி பெற்றார். பின்னர் அங்குள்ள சிறைக்கைதிகளையும், சோழ மண்டலத்தில் உள்ள சிறை கைதிகளையும் வைத்து கருங்கல் பாறைகளை பெயர்த்து யானைகள் மூலமாக இங்கு கொண்டுவந்தார். இதையடுத்து சுமார் 617 நாட்களில் சிவனுக்கும், சக்திக்கும் ஆலயங்கள் அமைத்து குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த ஆலயம் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.

    பவுர்ணமி தினத்தில் பராந்தகசோழனுக்கு அசரீரி ஒலித்ததால் சந்திரசேகரஸ்வாமி என்று இறைவனுக்கு பெயர் சூட்டப்பட்டது. இத்தல அம்மனின் திருநாமம் மானேந்திய வல்லி என்பதாகும். மானும், மழுவும் சிவனுக்குதான் ஆயுதம். இந்தியா முழுவதும் அம்மன் தாமரை பூவும், தாமரை மொட்டும் தான் கையில் தாங்கி காட்சியளிக்கிறாள். ஆனால் இங்கு மட்டும் தான் சிவனின் ஆயுதத்தை தாங்கி அர்த்தனாரியாய் அம்மன் காட்சி தருகிறாள்.



    இத்தல சிவபெருமானின் உருவம் பலாப்பழத்தின் மேல் முள் போன்றும், வேர் முடுச்சுக்களும் நிறைந்து காணப்படுகி்ன்றன. சிவனின் முகத்தில் ஈசானதிக்கிலும், தென் கிழக்கு திக்கிலும் சிவனின் ருத்ரத்தை தனிக்கும் வண்ணம் இரண்டு சூலங்கள் தாங்கி சாந்தமாக காட்சி தருகிறார். சிவனின் உருவம் கரடுமுரடாக இருப்பதால் சந்திரசேகரனுக்கு உகந்த தினமான திங்கட்கிழமை 8 வாரம் நெய் தீபம் ஏற்றி சிவனின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியை உடலில் பூசிக்கொண்டால், உடலின் மேல்புறம் உள் புறம், உள்ள தீராத மேகநீர் சருமநோய்கள் நீங்கும் என்று நாடி ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    அம்மன் அர்த்தநாரியாக காட்சியளிப்பதால் நினைத்த காரியம், திருமணம், தொழில்வெற்றி, புத்திர பாக்கியம், தொலைந்த செல்வங்கள் மீளும் பாக்கியம் கிடைக்கும் என்று அகத்திய விஜயம் நூலில் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சுற்றுபுற சுவர்களில் நிலமளந்த கோல் என்ற அளவு முறைகள் மற்றும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவம் வீர விளையாட்டுக்கள், ஒற்றுமைக்கான தத்துவங்கள், எழுத்து வடிவிலும், சித்திரவடிவிலும் சொல்லப்பட்டுள்ளன. 

    சிவனின் விமானமானது பாதி அளவு கருங்கல்லாலும், மீதமுள்ளது சுதை வடிவிலும் சித்திரங்கள் உயிரோட்டத்துடன் மின்னுகின்றன. ராஜகோபுரமானதுபஞ்ச பூத சக்திகளை உணர்த்தும் வண்ணம் ஐந்து நிலைகளாக அமைக்கப்பட்டுள்ளன. கோபுரத்தில் மிக விசேஷமாக சதுஷ்காதேவி ஐந்து முகங்களும் பத்து கரங்களையும் கொண்டு சிறப்பாக உள்ளது. மேலும் சரபேஸ்வரர் உருவமும், நரசிம்மன் ஹயக்கீரிஸ்வரர் உருவங்களும் சிறப்பாக உள்ளன. 

    இந்த திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெரிய சுற்றுப்பரப்பையும் தெருவுடன் சேர்த்து மூன்று பிரகாரங்களும் உள்ளன. பொது மக்கள் ஒத்துழைப்புடன் எல்லா வைபவங்களும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு 15 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு விழா விரைவில் நடைபெற உள்ளது.

    இந்த புகழ்பெற்ற சிறப்பு வாய்ந்த கோவிலில் உள்ள பிள்ளையார் சன்னிதி சிறப்பு வாய்ந்ததாகும். இந்த பிள்ளையார் வல்லப உஜ்ஜிஸ்ட கணபதி என்று அமைக்கப்படுகிறார். இங்குள்ள விநாயகர் தன் மடியில் அம்பாளை மடியில் அமர்த்தியபடி உள்ளார். இந்த சிறப்பு வேறு எங்கும் அமைந்திருக்கவில்லை. 

    இது தான் இந்தகோவில் முக்கியமான அம்சமாக விளங்குகிறது. அதற்கு காரணம் ஒரு சமயத்தில் வல்லவாம்பாள் என்ற அரக்கர்களுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் நடைபெற்ற போது தேவர்களை காப்பாற்ற சிவனின் உத்தரவுபடி வெள்ளை மதயானைகொண்டு காட்டில் போர் நடைபெற்றது. அப்போது அரக்கர்கள் ஒருவரை கொன்றால் நூறு பேர் அரக்கர்களாக உருவெடுத்து போருக்கு வந்தனர். அதை கவனித்த விநாயகர் வல்லவாம்பாள் என்ற அரக்கியின் மூலமாக அரக்கர்கள் உருவாவதை கண்டு, தன் துதிகையால் அந்த அரக்கியின் கர்ப்பப்பையை தூக்கி எறிந்தார். அதனால் போரில் அரக்கர்கள் உருவாகி வருவதை தடுத்து நிறுத்தினார்.

    மேலும் உள்ளே செல்லும்போது உள்ள துவார பாலகர் மிகவும் பொற்கால சின்னமாக கருதப்பட்டு வருகிறது. அந்த துவார பாலகர்கள் சோழர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்டவைகள். இந்த துவார பாலகர்கள் மூலம் சோழர்கள் காலத்து சிற்பகலையை நன்கு உணர முடிகிறது. அவர்களின் கலை நயத்தை உணர முடி கிறது.

    சிவன் மற்றும் அம்பிகை ஆகியோரை சந்திக்கும் இடத்தில் பஞ்ச பூத சக்திகளை ஒரு தூணில் அமைத்து உள்ளது மேலும் சிறப்புக்குரியதாக அமைந்துள்ளது. அந்த இடத்தில் கை வைத்து வேண்டியதை நினைத்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற ஐதீகம் நடைமுறையில் உள்ளது. 

    இந்த ஆலயத்தின் ராஜகோபுரத்தில் ஆதிவராகர் எழுந்தருளியுள்ளதால் இக்கோவில் ஆதிவராக ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
    திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரின் மத்தியில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது, அழக மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோவில். தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் மாநவல்லபன் என்ற பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு கோபுரங்களுடனும், விமானங்களுடனும், இரண்டு திருச்சுற்றுக்களுடனும், எண்ணற்ற மண்டபங்களுடனும் காட்சி தருகிறது இந்தக் கோவில்.

    ஆலய முகப்பில் ராஜகோபுரம் மிகவும் கம்பீரமாக நிற்கிறது. இங்கு அழகே வடிவான ராஜ களை நிரம்பிய அழகிய மன்னாரும், வேதங்களுக்கு அதிபதியான வேதநாராயணரும், ஆநிரைகளின் தலைவனான கோபால சுவாமியும் எழுந்தருளியுள்ளனர். கிழக்கு நோக்கி அமைந்துள்ள கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான வேதநாராயண பெருமாள் 8 அடி உயரத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். தேவியர்கள் இருவரும் வேதவல்லி தாயார், குமுதவல்லி தாயார் என்று அழைக்கப்படுகிறார்கள். தேவமாதர்களான ஊர்வசியும், திலோத்தமையும் சாமரம் வீசும் கன்னிகளாக அருகில் வீற்றிருக்கின்றனர்.

    ஸ்ரீகோபாலன் ருக்மணி சத்யபாமா சமேதராய் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அர்த்த மண்டபத்தில் இருந்து காட்சி தருகிறார். இவரை உற்சவமூர்த்தி என்றும் அழைப்பர். வேதநாராயண பெருமாளுக்கு தென்திருச்சுற்றில் ஸ்ரீதேவி தனிக்கோவிலும், வடக்கு திருச்சுற்றில் பூதேவி தனிக்கோவிலும் கொண்டுள்ளனர். இவற்றை தவிர அருள்மிகு செண்பக விநாயகர் தென்பகுதியில் ஒரு சிறிய அளவில் தனி சன்னிதியில் காணப்படுகிறார். உள் திருச்சன்னிதியின் மேற்கே ஸ்ரீ பரமபதநாதர் தமது தேவிமார்களுடனும், ஸ்ரீ ஆதிவராகர் லட்சுமி தேவியை மடியில் அமர்த்திய வண்ணமும், தசாவதார மூர்த்திகளும் காட்சி தருகின்றனர்.

    கருவறையின் மேல்தளத்தில் ஸ்ரீ அழகிய மன்னார் ஸ்ரீதேவி, பூதேவியுடனும் வேறு சில ரிஷிகளுடனும் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அழியாத தாவரக்கலை வர்ணத்தால் இச்சிலைகள் மெருகேற்றப்பட்டு உள்ளன. ஐந்து நிலைகளுடன் கூடிய அன்னக்கூட ராஜகோபுரம், 5 அடுக்கு உயரத்துடன் மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. சுமார் 69 அடி உயரத்தில் கருவறை விமானம் அமைந்து உள்ளது.

    இந்த ஆலயத்தின் ராஜகோபுரத்தில் ஆதிவராகர் எழுந்தருளியுள்ளதால் இக்கோவில் ஆதிவராக ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. பிற்காலத்தில் மலையை (சிறு குன்று) சரி செய்து இத்திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. மூலவர் வர்ணகலாப திருமேனியாக கீழேயும், மேலேயும் எழுந்தருளியுள்ளார். வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே அபிஷேக மூர்த்தியாக காணப்படுகிறார். ஸ்ரீ வித்யா ராஜகோபால மூர்த்தியான இவர், மிகவும் வரப்பிரசாதியாக உள்ளார். இந்த ராஜகோபுரத்தில் தெய்வ சிலைகளை தவிர மனித உருவ வழிபாடுகளே கிடையாது என்பது தனிச்சிறப்பாகும்.

    இக்கோவில் கருவறை மண்டபம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், மணி மண்டபம், உள் பிரகாரம், கருட மண்டபம், வெளி பிரகாரம், பந்தகால் மண்டபம் என்று பலவிதமான அமைப்புகளுடன் அமைந்து உள்ளது. கல்விக்கு அதிபதியான ஸ்தலமாகவும், ராகு-கேது பரிகார ஸ்தலமாகவும், கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் ஸ்தலமாகவும், பூமி, வாகனாதிபதி, யோக, வியாபார மற்றும் சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகவும் இக்கோவில் திகழ்கிறது.

    இங்குள்ள தசாவதார சன்னிதிகள், ஆழ்வார் சன்னிதிகள் மிக அழகாக கண்ணை கவரும் வகையில் அமைந்துள்ளது. கோவில் முழுவதும் மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் கண்ணை கவரும் வகையில் அமைந்து உள்ளன. ஸ்தபன மண்டபத்தில் மிகச்சிறப்பான சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. 51 அடி உயரத்தில் கொடி மரம் மிக கம்பீரமாக அமைந்துள்ளது.

    கொடி மரத்திற்கும், மகா மண்டபத்திற்கும் இடையே கொலு மண்டபம் அமைந்து உள்ளது. கொடிமர மண்டபத்தில் திருக்கோபுரமும், கோவில் நுழைவாயிலில் ராஜகோபுரமும் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தின் ஐந்து நிலைகளிலும் விஷ்ணு புராணமும், சிவ புராணமும் கலந்து சுதையாலான இருநூறுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் காணப்படுகிறது. இரண்டாவது பிரதான நடையின் அருகில் தூண்களுக்கு மேலே சந்திரனை ராகு, கேது விழுங்குவது போல்(கிரகணம்) அருங்காட்சி உள்ளது. கருவறை முதல் ராஜகோபுரம் வரை ஐந்து நிலைகளில் விஷ்ணு, புருஷன், சத்தியன், அச்சுதன், அநிருத்தன் என்கிற முறையில் ஆராதனை (பஞ்சபேத விதானம்) நடைபெறுகிறது.

    கோவிலின் அமைப்பை தெரிந்து கொண்ட நாம் இனிமேல் இத்திருத்தலம் இங்கு அமைந்த வரலாற்றை பார்ப்போம்.

    கர்வம் கொண்டிருந்த பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர்கள் என்ற அசுரர்கள் வேதங்களை அபகரித்து சென்றனர். அவற்றை மீண்டும் பெற பிரம்மா, தனது தந்தையான விஷ்ணுவின் பிம்பத்தை செண்பக விநாயகருக்கு மேற்கு திசையில் வைத்து பூஜை செய்தார். மீன் வடிவெடுத்து, அசுரர்களை அழித்து விஷ்ணு வேதங்களை மீட்டு கொடுத்ததால் வேதநாராயணர் என மூவுலகிலும் புகழ் பெற்றார். வேதங்களை கற்க விரும்புபவர்கள் இத்தலத்திற்கு வந்து செண்பகாரண்யவாசியான வேதநாராயணரை வழிபட்டால் கல்வி, வேள்விகளில் வலிமை பெற்று திகழலாம் என புராணம் கூறுகிறது.

    தாமிரபரணியின் தென்திசை பகுதியில் மணற்படைவீடு என்ற பகுதியினை உக்கிர பாண்டியன் ஆண்டு வந்தான். அவனது மகனான சீவலனுக்கு புத்திர பாக்கியம் இல்லாத நிலையில் புத்திர பாக்கியம் வேண்டி யாத்திரை சென்றான். பஞ்சபாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் பூஜித்த கோபாலனது விக்கிரகத்தை கங்கையாற்றில் விட்டு சென்றதாகவும், அதை எடுத்து வந்து செண்பகாரண்யத்தில் பிரதிஷ்டை செய்தால் சீவலனது விருப்பம் நிறைவேறும் என்று கேள்விப்பட்டு சீவலன் கருடன் வட்டமிடும் கங்கை கரையில் கோபாலனின் விக்கிரகத்தை கண்டெடுத்து அதை கண்வ முனிவர் ஆலோசனைப்படி வேதநாராயணர் எழுந்தருளியிருக்கும் திருமங்கை நகரான செண்பகாரண்ய ஷேத்திரத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும், இதைத்தொடர்ந்து அரசனுக்கு இரு புத்திரர்கள் பிறந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது. இதனால் இன்றும் பக்தர்கள் சந்தான பாக்கியத்திற்காக (குழந்தை பாக்கியம்) கோபாலசுவாமியை பிரார்த்திக்கின்றனர்.

    இக்கோவிலில் வைகாசி ரோகிணி நட்சத்திரத்தில் வருஷாபிஷேகமும், பங்குனியில் பிரமோற்சவமும், வைகுண்ட ஏகாதசி, பவித்ர உற்சவம், ஊஞ்சல் உற்சவம் மற்றும் தினந்தோறும், மாதந்தோறும் நடைபெறும் பூஜைகள், பிற வைபவங்கள் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள இக்கோவிலுக்கு ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது வந்து வேதநாராயணரையும், அழகிய மன்னாரையும், கோபால சுவாமியையும் வழிபட்டு சென்றால் அவர்கள் வாழ்வில் கண்டிப்பாக ஒரு மாற்றம் வந்தே தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    மூன்றாவது பெரிய கருவறை :

    தஞ்சை பெரிய கோவில் கருவறை தமிழகத்தில் உள்ள கோவில் கருவறைகளில் முதலாவதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறை இரண்டாவதாகவும் அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கருவறையை கொண்டதாக இத்திருத் தலம் திகழ்கிறது. இக்கோவில் துவித்தலம் (இரண்டு அடுக்கு) என்ற சிறப்பை பெற்றுள்ளது. 

    கீழே அமர்ந்த கோலத்திலும், மேலே 9 அடி உயரத்தில் நின்ற கோலத்திலும் வேதநாராயணர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கருவறையில் வீற்றிருக்கும் தேவமாதர்களான ஊர்வசி, திலோத்தமை ஆகியோரின் சிகை அலங்காரத்தை காண கண்கோடி வேண்டும். நாராயணர் கோவிலுக்கு நான்கு வாசல்கள் என்பார்கள். அதுபோல் இக்கோவிலிலும் நான்கு வாசல்கள் உள்ளன. தட்சிணாயன, உத்தராயண வாசல்கள் உள்ளன.

    தஞ்சை பெரிய கோவில் கருவறை தமிழகத்தில் உள்ள கோவில் கருவறைகளில் முதலாவதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறை இரண்டாவதாகவும் அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கருவறையை கொண்டதாக இத்திருத் தலம் திகழ்கிறது. இக்கோவில் துவித்தலம் (இரண்டு அடுக்கு) என்ற சிறப்பை பெற்றுள்ளது. 

    கீழே அமர்ந்த கோலத்திலும், மேலே 9 அடி உயரத்தில் நின்ற கோலத்திலும் வேதநாராயணர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கருவறையில் வீற்றிருக்கும் தேவமாதர்களான ஊர்வசி, திலோத்தமை ஆகியோரின் சிகை அலங்காரத்தை காண கண்கோடி வேண்டும். நாராயணர் கோவிலுக்கு நான்கு வாசல்கள் என்பார்கள். அதுபோல் இக்கோவிலிலும் நான்கு வாசல்கள் உள்ளன. தட்சிணாயன, உத்தராயண வாசல்கள் உள்ளன. 

    அமைவிடம் :

    திருநெல்வேலி மாநகரின் மையப்பகுதியில் இந்தக் கோவில் அமைந்து உள்ளதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ரெயில், பஸ் மூலம் கோவிலுக்கு சென்று வரலாம். திருநெல்வேலி சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. 
    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாயை வழிபட செவ்வாயின் தீய தசாபுத்தி நடப்பவர்கள் அது நீங்கி சுகம் பெறலாம்.
    துர்க்கையை வழிபட்டு வந்தால் செவ்வாயின் அருள் பெறலாம். வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாயை வழிபட செவ்வாயின் தீய தசாபுத்தி நடப்பவர்கள் அது நீங்கி சுகம் பெறலாம்.

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமி, தன்வந்திரி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இக்கோவில் நவகிரகங்களில் செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். 

    செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் திருமண இக்கோவிலுக்கு வந்து அரசமரத்தடி விநாயகர், ஆதி வைத்தியநாதரை வழிபட்டு ஆலமரத்தை சுற்றி வரவேண்டும். பின்பு மூலவர் சன்னதியில் உள்ள அங்காரகன் சன்னதியில் உள்ள அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை கூறி சங்கல்பம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். 

    அதனை தொடர்ந்து சிவப்பு அரளி மாலை அணிந்து அங்கு வழங்கப்படும் நிவேதனத்தை தங்களது கரங்களால் பக்தர்களுக்கு வழங்கி கோவிலை வலம் வந்து வழிபடவேண்டும். முன்னதாக வைத்தியநாதசுவாமி, தையல்நாயகிஅம்மன், செவ்வாய்க்கு அதி தேவதையான முருகப்பெருமானை வழிபடவேண்டும். பரிகார பூஜைகள் சிறப்பு வழிபாடு செய்திட பக்தர் ஒருவருக்கு ரூ.300 வரை ஆகும்.

    சீர்காழியிலிருந்து 6கி.மீ தொலைவில் உள்ளது வைத்தீஸ்வரன்கோவில் உள்ளது. சீர்காழி ரெயில் நிலையத்தில் இறங்கிய பின் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியாக செல்லும் அனைத்து பஸ்களிலும் வைத்தீஸ்வரன் கோவில் செல்லலாம். மயிலாடுதுறையில் இருந்து இத்தலம் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    இத்தலத்திற்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு. வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் வேதபுரி, கந்தபுரி, பரிதிபுரி, அங்காரபுரி, அம்பிகாபுரி என்ற பெயர்களும் உண்டு. இறைவனின் திருவிளையாடல்படி வேர்வைத் துளியிலிருந்து அங்காரகன் செந்நிற வடிவத்துடன் வேலுடன் தோன்றி சிவபெருமானை வணங்கினார். அப்போது அங்காரகனுடைய மேனியில் செங்குட்டம் இருப்பதைக் கண்டு இந்திராதி தேவர்கள் அஞ்சினார்கள். சிவபெருமான் அங்காரகனிடம் காவிரிக்கரையருகில் வைத்தியநாத தலம் ஒன்று உள்ளது. 

    அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் மூழ்கி இறைவனைப் பூசித்து வணங்கினால் உனக்கு ஏற்பட்டுள்ள செங்குட்டம் நீங்கி விடும் என்று கூறினார். அதன்படி அங்காரகன் சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி செங்குட்டம் நீங்கப் பெற்றார் ஸ்ரீ வைத்தியநாதரை தினசரி முழு ஈடுபாட்டுடன் தியானம் செய்தார். இறைவன் மனமகிழ்ந்து அங்காரகன் முன்தோன்றி அவருக்கு வேண்டிய வரங்களைக் கேட்க கூறினார்.

    அங்காரகன் இறைவன் திருவடியை மறக்காத மனமும், செவ்வாய்க்கிழமைகளில் வந்து தன்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் சற்புத்திரப் பேற்றையும் அளிக்கும்படி வேண்டினார். சிவபெருமானும் அங்காரகனுக்கு “செவ்வாய் கிழமைகளில் உன்னை வந்து துதிப்போருக்கு கிரகபீடையை நீக்கி நன்மை செய்யவும், நவக்கிரகங்களில் மூன்றாவதாகத் திகழ்க” என வரம் அளித்தார்.

    வைத்தீஸ்வரன் கோவிலில் அங்காரகன் மூலவர் சன்னதி கிழக்குக் கோபுர வாசலில் நுழைந்தவுடன் தண்டாயுதபாணி சன்னதிக்குத் தெற்கில் தெற்கு முகமாக அமைந்துள்ளது. நான்கு கைகளில் முறையே சூலம், சக்தியாயுதம், அபயக்கை, தண்டம் தாங்கிய கையுடன் காட்சியளிக்கிறார். அங்காரகன் உற்சவர் ஸ்ரீ வைத்தியநாதர் மூலவர் சன்னதிக்குத் தெற்கில் வெள்ளிமஞ்சத்தில் காட்சியளிக்கிறார்.
    செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் இங்கு வந்து அர்ச்சனை செய்து துவரை அன்னம் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். இதனால் தோஷம் நீங்கும். இங்கு விற்கப்படும் வைத்தியநாதர் மருந்து என்ற திருச்சாந்துருண்டையை வாங்கி உண்டால் நோய்கள் நீங்கும்.

    அர்ச்சனைத் தட்டுடன் வெல்லம் மற்றும் உப்பும், மிளகும் கலந்து விற்பனை செய்கிறார்கள். வெல்லத்தை உள்ளே உள்ள (தீர்த்தத்தில்) குளத்தில் கரைத்து விட வேண்டும், உப்பை தையல் நாயகி சந்நிதி எதிரில் உள்ள இடத்தில் சேர்க்க வேண்டும். மிகச் சிறிய அளவு உப்பு மற்றும் மிளகை அதிலிருந்து எடுத்து வாயில் போட்டு மென்று தின்பதும் வழக்கம்.

    கீழசந்நிதி நுழைவாயிலில் வேப்ப மரத்தடியில் ஆதிவைத்திய நாதர் காட்சியளிக்கிறார். இந்த மரத்தினை மூன்று முறை வலம் வந்து பணிந்து அவ்விடம் அமர்ந்து தியானித்தால் சகல நலன்களும் கிடைக்கும். கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும். இத்தலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் இரவில் ஆடு வாகனத்தில் வலம் வந்து ஆண்டவனை வணங்குவதாகக் கூறப்படுகிறது.
    நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள பெருமாள், நாச்சியார்கள், கருடன், நம்மாழ்வார் மற்றும் இத்தல புளியமரத்துக்கு தலா 9 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் அகலும்.
    திருப்பதிசாரம் (திருவண்பரிசாரம்) என்ற இடத்தில் திருவாழ்மார்பன் கோவில் இருக்கிறது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் அருகில் உடைய நங்கை என்ற விஷ்ணு பக்தை வாழ்ந்து வந்தார். இதே போல் திருநெல்வேலி அருகில் உள்ள ஆழ்வார் திருநகரி (திருக்குருகூர்) என்ற இடத்திலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஆதிநாதன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகில் வசித்து வந்தவர் காரி. இவரும் சிறந்த விஷ்ணு பக்தர் ஆவார். உடைய நங்கைக்கும், காரிக்கும் திருமணம் நடைபெற்றது.

    நம்மாழ்வார் திருத்தலம் :

    திருப்பதிசாரத்தில் மகாவிஷ்ணுவின் அருளால், அந்த தம்பதியினருக்கு நம்மாழ்வார் அவதரித்தார். பிறந்தவுடன் அழாமல், தாய் அமுது உண்ணாமல் மவுனத்தோடு இருந்த நம்மாழ்வாரை, அவரது பெற்றோர் திருக்குருகூரில் உள்ள ஆதிநாதன் சன்னிதியில் விட்டனர். அந்த குழந்தை தவழ்ந்து போய் அங்கிருந்த புளியமரத்தின் பொந்தில் புகுந்து கொண்டது.

    பின்னர் யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்து விட்டது. பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் தல மரமான புளியமரத்திலேயே நம்மாழ்வார் தவ நிலையில் இருந்தார். பிறகு வேதத்தின் சாரத்தை திருவாய் மொழியாக மொழிய, அதனை திருக்கோளூரில் (ஆழ்வார் நவ திருப்பதியில்) பிறந்த மதுரகவியாழ்வார் ஏட்டில் எழுதினார்.

    பாசுரம் பாடினார் :

    பல திவ்ய தேசங்களிலும் எழுந்தருளி உள்ள எம்பெருமான்கள் திருக்குருகூர் எனும் ஆழ்வார் திருநகரியில் உள்ள புளியமரத்தின் இலைகளிலும், கிளைகளிலும் அமர்ந்து கொண்டு, ‘எம்மைப் பாடுக!, எம்மைப் பாடுக!’ என நம்மாழ்வாரிடம் பாடல் கேட்டதாக தல வரலாறு கூறுகிறது. நம்மாழ்வாரும் எந்த திவ்ய தேசத்திற்கும் நேரில் செல்லாது புளியமரத்தின் பொந்தில் இருந்து கொண்டே திவ்ய தேச தலங்களுக்கு பாசுரம் பாடி அருளினார்.

    நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு, நம்மாழ்வாரே பிரத்யட்சமாகி நாலாயிரம் பாக் களையும் அருளியதாகவும், அதனை நாதமுனிகள் ஏட்டில் எழுதி தொகுத்தார் என்றும் கூற்று நிலவுகிறது. கம்பர் ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றும் போது, பெருமாள் ‘சடகோபனை (நம்மாழ்வார்) பாடினாயோ?’ என்று கேட்க, கம்பர் உடனே நம்மாழ்வாரைப் போற்றி பாடினார்.

    ஆழ்வார் திருநகரிக்கு வந்த ராமானுஜர், ‘இதுவோ திருநகரி, ஈதோ பொருநை இதுவோ பரமபதத்து எல்லை’ என்று கூறுகிறார். அதாவது ஆழ்வார் திருநகரியை பரமபதத்து எல்லை என்று கூறுகிறார் ராமானுஜர்.

    கோவில் அமைப்பு :

    ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் கோவிலில் உள்ள புளியமரத்தில் பெருமாள் பிரம்மச்சர்ய யோகத்தில் இருப்பதால், மகாவிஷ்ணு மகாலட்சுமியை மகிழ மாலையாக ஏற்றுக்கொண்டாராம். இத்தலத்தில் நம்மாழ்வார் சன்னிதியும், மூலவர் ஆதிநாதன் சன்னிதியும் தனித்தனியே உள்ளது. ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என இரு நாச்சியார்களுக்கு தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன.

    மூலவர் ஆதிநாத பெருமாள் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மணவாள மாமுனிகள் மற்றும் நம்மாழ்வாரின் மங்களாசாசனம் பெற்ற திருத்தலமாக இந்த தலம் விளங்கு கிறது. மூலவரின் முன்புறம் உள்ள கருட மண்டபத்தை மணவாள மாமுனிகளே கட்டினர். மூலவரின் கருவறை விமானத்தை விட, நம்மாழ்வார் சன்னிதியின் விமானம் பெரியதாகும். அடியவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டவன் ஆதிநாத பெருமாள் என்பதால் இவ்வாறு கட்டப்பட்டுள்ளது.

    பிரம்மாவுக்கு உபதேசம் :

    இந்த கோவிலில் உள்ள நம்மாழ்வாரின் விக்கிரகம் தாமிர பரணி தண்ணீரைக் காய்ச்சி, அதில் ஆழ்வாரால் அவரது சக்தி பிரயோகிக்கப்பட்டு உருவானது என்று கூறப்படுகிறது. இத்தல ‘மோகன வீணை’ எனும் ‘கல் நாதஸ்வரம்’ உலக அதிசயமாகும். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் சுயம்புவாகத் தோன்றியவர். அவரின் பெரிய திருமேனியுடைய திருப்பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக கருதப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு நடைபெறும் அரையர் சேவை, இத்தல ஆதிநாத பெருமாளுக்கும் உண்டு.

    இத்தலத்தின் தெற்கு மாடத் தெருவில் திருப்பதி ஏழு மலையானும், ஸ்ரீரங்கம் அரங்கனும் தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளனர். வடக்கு மாட வீதியில் ஆண்டாளுக்கும், தேசிகனுக்கும் சன்னிதிகள் உள்ளன. காசிப முனிவரின் சாபத்தால், இந்திரன் தனது செல்வங்களை இழந்தான். பின்னர் இத்தல ஆதிநாத பெருமாளை வழிபட்டு, அவற்றை மீண்டும் பெற்றான்.

    பிரம்மதேவருக்கு குருவாக இருந்து இத்தல ஆதிநாதன் உபதேசம் செய்ததால் இத்தலம் குருகூர் என்றானது. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குரு பார்வை ஜாதகத்தில் வேண்டுவோர் இத்தல ஆதிநாதரை வழிபட்டால் நலம் உண்டாகும். ராமர், வேணுகோபாலன், நரசிம்மர், கருடன், ராமானுஜர் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன.

    வைகுண்ட பதவி :

    ‘குருகு’ என்பதற்கு தமிழில் சங்கு என்று பொருள். இத்தல பெருமாளை சங்கன் எனும் கடலில் வாழும் சங்குகளின் அரசன் வந்து வழிபட்டு பேறு பெற்றதால் இத்தலம் குருகூர் என்று ஆனதாகவும் கூறப்படுகிறது. பின்னர் நம்மாழ்வாரால் ஆழ்வார் திருநகரி என்றானது.

    இத்தலத்தில் யானையும், வேடனும் போரிட்டு மடிந்தனர். இங்கு இறந்த ஒரே காரணத்திற்காக இருவரும் வைகுண்டம் சென்றனர். எனவே இத்தலத்தில் வழிபட்டால் பாவங்கள் பறந்தோடி, வைகுண்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த தலத்தில் அமாவாசை மட்டுமின்றி எந்த நாளிலும் இறந்து போன நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்.

    அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் ஆன்மா நரகம் சென்றிருந்தாலும், நாம் இத்தலத்தில் திதி கொடுத்த உடனேயே விஷ்ணு தூதர்கள் வந்து அவர்களை நரகத்தில் இருந்து வைகுண்டம் அழைத்துச் செல்வார்கள் என்பதும் நம்பிக்கையாகும். மகாளய அமாவாசை அன்று ஆழ்வார் திருநகரி வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நிச்சயம். திதி கொடுத்த பின்னர் கோபுரத்திலோ, கோபுரத்தின் அருகிலோ மோட்ச தீபம் ஏற்றலாம். நல்லெண்ணெயால் ஏற்றப்படும் தீபம் சிறப்பு வாய்ந்தது.

    நாகதோஷம் நீங்க...

    இங்குள்ள புளியமரம் ஆதிசேஷனே ஆகும். எனவே இத்தலத்திற்கு ‘சேஷ ஷேத்திரம்’ என்றும் பெயர் உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள பெருமாள், நாச்சியார்கள், கருடன், நம்மாழ்வார் மற்றும் இத்தல புளியமரத்துக்கு தலா 9 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் அகலும்.

    திருநெல்வேலி- திருச்செந்தூர் வழிப்பாதையில் தென்கிழக்காக 30 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் திருக் குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி அமைந்துள்ளது.
    கேரளா மாநிலம் திருக்காட்கரை என்ற இடத்தில் ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய கோவில் ஒன்று அமைந்துள்ளது.
    கேரளா மாநிலம் திருக்காட்கரை என்ற இடத்தில் ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலில் மகாவிஷ்ணு, வாமன அம்சமாக எழுந்தருளி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

    நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றை ஏந்தியபடி நிற்கும் இந்த பெருமாளுக்கு, ‘திருக்காட்கரை அப்பன்’ என்பது திருநாமமாக உள்ளது. தாயார் பெருஞ்செல்வ நாயகி, வாத்சல்யவல்லி என்னும் திருப் பெயரில் அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலில் சாஸ்தாவிற்கும், மகாலட்சுமிக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. 

    இந்த கோவிலின் விமானம் விருத்த விமானமாகும். இங்குள்ள சிவலிங்கத்தை, மகாபலி சக்கரவர்த்தி வழிபட்டதாக தல புராணம் தெரிவிக்கிறது. முதன் முதலாக திருக்காட்கரை அப்பன் கோவிலில் தொடங்கப்பட்ட ஓணம் திருவிழா தான், காலப்போக்கில் கேரளா மாநிலம் முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.

    கபில முனிவர் இந்த தலத்தில் உள்ள வாமனப் பெருமாளை வழிபட்டதால், இங்குள்ள தீர்த்தம் கபில தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கபில தீர்த்தத்தில் உள்ள நீரைதான் மகாபலி கமண்டலத்தில் எடுத்து வாமனருக்கு மூன்றடி நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடுத்ததாகவும் கூற்று நிலவுகிறது.

    திருக்காட்கரை அப்பனுக்கு நேந்திரம் வாழைக்குலை வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றதாகும். தங்களது கோரிக்கைகள் நிறைவேற பக்தர்கள் ஓணம் பண்டிகையன்று, அதிகாலையிலேயே நேந்திரம் குலைகளைத் தோளில் சுமந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று திருக்காட்கரை அப்பனுக்கு சமர்ப்பிப்பதைக் காணலாம். அந்தக் குலைகள் கோவில் முன் விதானங்களில் கட்டித் தொங்கவிடப்படுகின்றன. 

    கேரள மக்களின் வீட்டிலும் ஓணம் பண்டிகை நாளன்று மரத்தாலான திருக்காட்கரை அப்பன் சிலை வைத்து வழிபாடு நடைபெறுகிறது. 
    மனநோய் உள்ளவர்கள், வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள், தொழில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் மற்றும் மன அமைதியை தேடியவர்கள் இக்கோவிலுக்கு வந்து வணங்கி சென்றால் எல்லாம் கிடைக்கும் என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.
    திருவண்ணாமலையில் இருந்து வேட்டவலம் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஆவூர் கிராமம். இக்கிராமத்தின் பெரிய ஏரிக்கரையின் அருகே சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் திருவகதீஸ்வரர் கோவில் உள்ளது.

    சோழர் காலத்தில் (கி.பி.985-1014) திருமடப்பாறை உடையார் கோவில் எனவும், கி.பி. 1271-ல் ஆவூர் திருவகட்டீஸ்வரமுடைய நாயனார் கோவில் என்றும் அழைக்கப்பட்டுள்ளது இந்த ஆலயம். இதனை அங்குள்ள கோவில் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகிறது.

    கோவில் அமைப்பு :

    இந்தக் கோவில் தெற்குப்புறமாக நுழைவு வாசல் கொண்டது. மதில் சுவர் 4 அடி கன அளவும், 34 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கோவில் பிரகாரத்தில் திருவகதீஸ்வரர் சன்னிதி, லோகநாயகி அம்மன் சன்னிதி, விநாயகர் சன்னிதி, மடப்பள்ளி, திருக்கல்யாண மண்டபம் ஆகியவை உள்ளன. கோவில் கலை நயத்துடன் கல் சுவரால் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் சிறப்பும் காலமும் :

    இங்குள்ள கல்வெட்டு தகவல்கள் படியும், ஆய்வாளர் களின் கருத்துப்படியும் இந்த ஆலயம் 10-ம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது தெளிவாகிறது. கோவிலில் உள்ள கல்தூண்களில், குறிப்பாக திருக்கல்யாண மண்டபத்தின் கல்தூண்களில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள், அப்போதிருந்த சிற்பக் கலையின் உன்னத நிலையை அறிய உதவுகிறது. இதில் நாயக்க மன்னர்களின் சிற்பங்களும் உண்டு. இதிலுள்ள 28 கல்வெட்டுகளில் ராஜராஜசோழன் கால கல்வெட்டு ஒன்றும், பாண்டிய அரசர்கள் காலத்தை குறிக்கும் கல்வெட்டுகளும், பல்லவ மன்னர்கள் காலத்தை குறிக்கும் கல்வெட்டுகளும், ஹய்சாள மன்னர்கள் காலத்தை குறிக்கும் ஒரு கல்வெட்டும், விஜயநகர மன்னர்கள் காலத்தை குறிக்கும் ஒரு கல்வெட்டும் உள்ளன.

    15-ம் நூற்றாண்டில் மன்னர்கள் படையெடுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆலயம் சிதிலமடைந்து போனது. தற்போது இந்த ஆலயத்தில் பூஜை நடை பெறாமல் உள்ளது.

    மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு முன்பே இந்த ஆலயம் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள தீர்த்தக்குளம் ‘மகாதேவ தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. கோவிலுக்கு எதிரில் குளம் இருப்பது சிறப்பு அம்சமாகும். இந்தக்குளம் இதுவரை வற்றியது இல்லை.

    மேலும் மனநோய் உள்ளவர்கள், வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள், தொழில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் மற்றும் மன அமைதியை தேடியவர்கள் இக்கோவிலுக்கு வந்து வணங்கி சென்றால் எல்லாம் கிடைக்கும் என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.

    அதேபோல் பவுர்ணமி நாட்களில் வேட்டவலம் ஸ்ரீஅகதீஸ்வரரை வணங்கிய பின்பு ஆவூரிலுள்ள திருவகதீஸ்வரரை வணங்கி விட்டுதான் திருவண்ணாமலைக்கு கிரிவலம் பக்தர்கள் செல்கிறார்கள்.



    இந்த நிலையில் கடந்த 8-ம் ஆண்டுக்கு முன் பூமியில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட லிங்கத்தை எடுத்து கோவில் முன்பு பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்குமுன் அறநிலையத்துறை சார்பாக கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்தப்பணி இன்னும் நிறைவு பெறவில்லை.

    திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டதன் மூலம் சத்தியத்தை மீறியதால் சுந்தரரின் இரு கண்பார்வையும் பறிபோனது.

    பிறகு அவரது உள்ளம் உருக்கும் தமிழ்ப்பதிகம் கேட்டு காஞ்சீபுரத்தில் இடது கண்ணையும், ‘மீளா அடிமை’ என்று பாடி வழிபட்டதால் திருவாரூர் தூவாநாயனர் கோவிலில் வலது கண்ணையும் வழங்கி கருணை செய்தார் இறைவன்.

    அத்தகைய சிறப்பு மிக்க திருவாரூர் திருத்தலத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓர் ஊரில் இன்னொரு அற்புதத்தையும் நிகழ்த்தியிருக்கிறார் அம்பிகை துணைவனான சிவபெருமான்.

    கண் கொடுத்தவர் :

    முன்னொரு காலத்தில் சிவ பக்தை ஒருத்தி இருந்தாள். அவளுக்கு பிறந்த குழந்தை ஒன்று, பிறவியிலேயே இரு கண் பார்வையையும் இழந்திருந்தது. இதனால் அந்தப்பெண், தான் வணங்கும் சிவனை தினமும் பூக்களால் பூஜை செய்தும் பலனில்லையே என்று மனம் வருந்தினாள். மேலும் தனது குழந்தைக்கு கண் பார்வை வழங்கும்படி, தன்னுடைய கண்களையே காணிக்கையாக செலுத்தி பூஜை செய்தாள்.

    அவளது பக்தியில் மெய்சிலிர்த்து போன சிவபெருமான், உடனடியாக அவளுக்கு காட்சி கொடுத்தார். மேலும் அந்தப் பெண்ணின் குழந்தைக்கும் விழிகளின் பார்வையை வழங்கி பேரருள் செய்தார். இதன் காரணமாக அந்த ஊருக்கு, ‘கண் கொடுத்த வனிதம்’ என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இங்குள்ள சிவாலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இறைவன் ‘நயன வரதேஸ்வரர்’ என்ற திருப்பெயருடன் அழைக்கப்படுகிறார்.

    நயனம் என்றால் கண். வரத ஈசுவரர் என்றால் அருள் தரும் இறைவன் என்று பொருள். எனவே சுவாமி கண் பார்வை கிடைக்க அருள் தந்த ஈசன் ஆனார்.

    வெண்ணாற்றின் கிளை ஆறான பாண்டவாற்றின் வடகரையில் உள்ளது கண் கொடுத்த வனிதம். அதன் மறுகரையில் தான் சம்பந்தரால் பாடல் பெற்றதாக கண்டுபிடிக்கப்பட்ட 275-வது தேவாரத்தலமான ‘விடைவாய் என்னும் திருவிடைவாசல்’ திருக்கோவில் இருக்கிறது.

    இந்தப் பகுதியில் தான், எண்கண் என்ற தலத்தில் பிரமபுரீசுவரர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் முருகன், மன்னனால் குருடாக்கப்பட்ட பின்னும் தனது சிலையை வடித்த சிற்பியின் கண்களை மீண்டும் உயிர்ப்பித்து ஒளிபெறச் செய்தார் என்பது வரலாறு.

    கண்கொடுத்த கோவில் :

    இவ்வளவு சிறப்பு மிகு தலங்களுக்கு இடையில் விளங்குகிறது கண் கொடுத்த வனிதம் திருக்கோவில். இந்த நயனவரதேஸ்வரர் திருக்கோவில், சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு நாளடைவில் சிதைவுற்று போனது. பின்னர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறது. இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லை. வெட்ட வெளியில் நந்தி அமர்ந்துள்ளார்.

    விழிகளை ஒளி பெறச் செய்யும் விமலனான சிவபெருமான், கருவறையில் கிழக்கு பார்த்த வண்ணம் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தில் அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்று அனைத்தும் கற்கோவிலாகவே காட்சி தருகின்றன. பழைய கருங்கல் சன்னிதியில் தெற்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார் அம்மன். அம்பிகையின் பெயர் தேவநாயகி என்பதாகும்.

    இவ்விரு சன்னிதிகளையும் இணைத்து, கடந்த ஆண்டு நடந்த குடமுழுக்கின் போது புதிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கன்னி மூலையில் கணபதியும், அதை அடுத்து உயரமான புகழா பரமேஸ்வரர் லிங்கமும் உள்ளன. வட மேற்கு மூலையில் முருகப்பெருமான் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரும், அவர்களுக்கு எதிரே சண்டேஸ்வரர் தனிச் சன்னிதியிலும் வீற்றிருக்கின்றனர். ஈசானிய மூலையில் பைரவர், சனீஸ்வரர், சூரியன் ஆகியோர் புதிய மண்டபத்தில் இருக்கிறார்கள். இந்த ஆலயத்தில் நவக்கிரக சன்னிதி இல்லை.

    திருக்கோவிலுக்கு எதிரே பெரிய திருக்குளம் உள்ளது. அதன் கரையில் கொக்குமந்தாரை என்னும் ஒருவகை ஆத்தி மரம் உள்ளது. அதுதான் தலவிருட்சம் என்கிறார்கள். அதன் பூ, இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.

    பிரார்த்தனை :

    இத்திருக்கோவிலில் எந்த மாதிரியான பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படுகிறது என்பது பற்றி, திருக்கோவிலுக்கு அருகிலேயே குடியிருக்கும் அர்ச்சகர் கீழ்க்கண்ட விவரங்களைச் சொன்னார்.

    இத்தலத்தில் பிறவியிலேயே ஏற்பட்ட குருடைத் தீர்த்து கண்ணொளி வழங்கிய பெருமான், மனமுருக வேண்டி பிரார்த்திக்கும் பக்தர்களுக்கு கண் நோய்கள், பார்வைக் குறைபாடு போன்ற அனைத்தையும் நீக்கி அருள் செய்கிறார்.

    இத்தல இறைவனை பதினொரு ஞாயிற்றுக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, இறுதி வாரம் அபிஷேக ஆராதனை செய்தால் கண் கண்ட பலன் கிடைக்கும். தொடர்ந்து வர இயலாதவர்கள் முதல்வாரமும், கடைசி வாரமும் நேரில் வந்து இடைப்பட்ட வாரங்களில் அவர் பெயரால் அர்ச்சனை செய்து கொண்டால் போதும்.

    இத்திருக்கோவில் ஒரு ‘ஆப்தால்மிக் கிளினிக்’காகவும் இறைவன் கண் மருத்துவராகவும் இருப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக் கிறார்கள்.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இத்திருக்கோவில், காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் கொரடாச்சேரி என்ற ஊர் உள்ளது. இங்குள்ள வெண்ணாற்றின் வாசல் என்னும் வெண்ண வாசலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் கண் கொடுத்த வனிதம். வெண்ணவாசலில் இருந்து மினி பஸ் மூலமாக இந்த திருக்கோவிலை அடையலாம். திருவாரூரில் இருந்து நகரப் பேருந்து காலை, மாலை இருவேளையும் இயங்குகின்றன. கமலாபுரம் என்ற ஊரிலிருந்து 6 கி.மீ தொலைவிலிருக்கும் இவ்வூருக்கு தனி வாகனத்திலும் வந்து சேரலாம்.
    உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது.
    உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.

    விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.

    தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் ’சந்திர புஷ்கரணி’. நட்சத்திரங் களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும் ஆனது.

    உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.

    புதிய சுவாமி மடத்தின் பொறுப்பை ஏற்கும் விழா பர்யாய வைபவம் என்று கொண்டாடப்படுகின்றது. உடுப்பியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக இது அமைகிறது. இவ்விழாவின் போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகுதான் கோயில் சமையலுக்குப் பயன்படுகின்றது.

    முன்பு கனகதாசர் என்ற மகான் தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் உடுப்பி கோவிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி வழிபட்டு வந்தார். ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனக தாசருக்கு காட்சியளித்தார்.

    கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பலகணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது. தற்போது அதுவே நடைமுறையில் உள்ளது.
    ×