என் மலர்
கோவில்கள்
புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சிறப்பு மிக்க தலமாக வாணியம்பாடி தலம் உள்ளது.
சரஸ்வதிதேவிக்கு தானே வாக்குக்கு அதிபதி என்ற கர்வம் சற்று தலைதூக்கியது. அதனால் ஒரு முறை அவர் பிரம்மதேவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார். இந்த வாக்குவாதத்தில் ஒரு கட்டத்தில் பிரம்மதேவருக்கு கோபம் ஏற்பட்டது. எனவே அவர் சரஸ்வதியை நோக்கி, ‘நீ உன்னுடைய வாக்கு (பேசும்) சக்தியை இழந்து போவாய்’ என்று சாபமிட்டார்.
யாழை மூடினாள் :
இதையடுத்து தன் தவறை எண்ணி வருந்திய சரஸ்வதி தேவி பூலோகத்தில் வேதங்கள் வழிபட்ட வேதாரண்யம் (திரு மறைக்காடு) சென்று அங்குள்ள ஈசனை நோக்கி தவம் இருந்து வழிபட்டாள். அப்போது வேதாரண்யத்தில் உள்ள அம்பாளிடம் கலைவாணி தனது யாழை இசைத்து காண்பிக்க வந்தாள். அப்போது அம்பாளின் குரல், தனது யாழில் இருந்து வெளிவந்த இசையைக் காட்டிலும் மிகவும் இனிமையாக இருந்ததை உணர்ந்த கலைவாணி யாழை மூடி வைத்தாள்.
இதன் காரணமாகவே வேதாரண்யத்தில் உள்ள அம்பாளின் திருநாமம், ‘யாழைப் பழித்த மென்மொழியாள்’ என்று மாறியது. வடமொழியில் ‘வீணாவாத விதூஷணி’ என்பதாகும்.
வாணியம்பாடி தலம் :
இந்த நிலையில் தன்னுடைய சாபத்தால் பேசும் சக்தியை இழந்த கலைவாணியைத் தேடி, சத்தியலோகத்தில் இருந்து பூலோகம் வந்தார் பிரம்மதேவர். அங்கே கலைவாணி சிருங்கேரி என்னும் தலத்தில் தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார். பின்னர் கலை வாணியை சமாதானம் செய்து, அங்கிருந்து நேராக வாணியம்பாடி என்னும் ஊரில் உள்ள சிவ தலத்திற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் அந்த தலத்தில் இருந்த ஈசன் அதிதீஸ்வரரையும், அம்பாள் பெரியநாயகியையும் வழிபட்டு, கலைவாணிக்கு மீண்டும் வாக்குசக்தியை அருளும்படி கேட்டு பிரம்மதேவர் வழிபட்டார். அவருடன் கலைவாணியும் தன் சாபம் நீங்க வேண்டி தவத்தில் ஈடுபட்டார். இருவரின் வேண்டு தலையும் நிறைவேற்ற எண்ணிய அதிதீஸ்வரரும், பெரியநாயகி அம்பாளும் அவர்கள் முன்பாக தோன்றினர்.
வாக்கு சக்தி அளித்த ஈசன் :
தொடர்ந்து ஹயக்ரீவர் முன்னிலையில் வீணையை மீண்டும் சரஸ்வதி இசைக்க அருள்புரிந்தனர். மேலும் கலைவாணி இழந்த பேசும் சக்தியையும் திரும்ப அளித்தனர். வாணிக்கு அருள் செய்து அவளைப் பாடும்படி கூறினர். வாணியும் மீண்டும் யாழை இசைத்து, தனது இனியக் குரலில் கீதம் இசைத்தாள். வாணி பாடிய தலம் என்பதால் இந்தத் தலம் ‘வாணியம்மைபாடி’ என்றானது. பின்னர் காலப்போக்கில் மருவி ‘வாணியம்பாடி’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த தலத்தில் உள்ள அதிதீஸ்வரர் சுயம்புவாய் தோன்றியவர். மேற்கு நோக்கி எழிலாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். அம்பாள் பெரியநாயகி தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு சரஸ்வதி தேவிக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதியில் சரஸ்வதிதேவி கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில், மடியில் வீணையுடன், வலது காலைத் தொங்க விட்டு, இடது காலை மடித்து ஒய்யாரமாக வீற்றிருக்கிறாள்.
சங்கரநாராயணர் சன்னிதி :
இந்தக் கோவிலில் சிவனும், விஷ்ணுவும் இணைந்த வடிவான சங்கர நாராயணர் சன்னிதியும் இருக்கிறது. சங்கர நாராயணரை பிரதோஷ காலங்களில் அபிஷேகித்து வழிபட்டால் கிடைக்கும் பலன் நூறு மடங்காக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்குள்ள பைரவர் எடுப்பான தோற்றத்தில் நாய் வாகனத்துடன் அருள்பாலித்து வருகிறார். இவரை ராகு காலங்களில் வழிபட்டு வந்தால் சர்ப்ப தோஷங்கள் அகலும். சனிக்கிழமைகளில் பைரவரை வழிபாடு செய்தால் ஏழரைச் சனி, கண்டச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அஷ்டமத்துச் சனி ஆகிய சகல சனி தோஷங்களும் அகன்று நற்பயன் கிடைக்கும். நெய் தீபம் ஏற்றி பைரவரை வழிபடும் போது, அருகிலேயே எள்தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சிறப்பு மிக்க தலமாக இந்தத் தலம் உள்ளது.
தீபம் ஏற்றி...
இந்த தலத்தில் நவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். சரஸ்வதி பூஜையன்று இந்த தலத்தில் ஈசனையும், அம்பாளையும், கலைவாணியையும் முறையே ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால் கல்வியறிவு ஊற்றெடுக்கும் என்பது இங்கு வந்து வழிபட்டு சென்ற பக்தர்கள் கூறும் மொழியாகும். ஞானம், தெளிவு பிறக்கவும், கல்வியிலும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெறவும், உயர்பதவிகள் கிடைக்கவும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வேலூரில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும், ஜோலார்பேட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது வாணியம்பாடி.

கோயம்புத்தூர் மாநகரின் மையப்பகுதியில் ராம் நகர் என்ற இடத்தில் அமைந்துள்ளது கோதண்ட ராமசுவாமி திருக்கோவில்.
கோயம்புத்தூர் மாநகரின் மையப்பகுதியில் ராம் நகர் என்ற இடத்தில் அமைந்துள்ளது கோதண்ட ராமசுவாமி திருக்கோவில். இந்த ஆலயத்தில் சீதா, லட்சுமண சமேதராக கோதண்ட ராமசுவாமி அழகிய திருக்கோலத்துடன் வீற்றிருந்து, நம்பிக்கையுடன் வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி வருகிறார்.
ராமபிரானின் சன்னிதிக்கு எதிராக, ராமனை வணங்கும் நிலையில் ஆஞ்சநேயரின் சன்னிதி அமைந்துள்ளது. ராமநாமத்தை சொன்னாலே நன்மைகள் கோடி பெறலாம் என்பதை இங்கு வந்து ராமனை தரிசனம் செய்யும் பக்தர்கள் உணர்வார்கள். இங்குள்ள ராமர் மற்றும் ஆஞ்சநேயர் அருள் பெற வரும் பக்தர்கள் கூட்டம் ஏராளம்.
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கட்டப்பட்ட கோதண்ட ராமசுவாமி கோவிலுக்கு 5.2.1933-ந் தேதியன்று முதல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து ராமர் கோவிலின் விரிவாக்க பணிகள் படிப்படியாக நடத்தப்பட்டது. 1941-ம் ஆண்டு ராமர் கோவிலில் நவக்கிரகத்திற்கு தனி சன்னிதி கட்டப்பட்டது. இதன் பின்னர் ராமர்கோவிலின் பல்வேறு திருப்பணிகள் படிப்படியாக செய்யப்பட்டது.
தொடர்ந்து ராமர் கோவிலுக்கு 5 நிலை ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. பலரின் நன்கொடையால் இந்தப் திருப்பணி இனிதாக முடிவடைந்து, கடந்த 2013-ம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ராஜகோபுரத்தின் கீழ், சிவபெருமானை வழிபடும் பக்தர் களுக்காக, வில்வலிங்கேஸ்வரர் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள அரச மரத்தடியில் கோவிலின் ஆரம்ப காலத்தில் இருந்தே பக்தர்கள் வழிபட்டு வரும் விநாயகர் பெருமான் மற்றும் நாகர் சன்னிதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
கோவில் நடை தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு 6.15 மணிக்கு முதல் கால பூஜையும், 7.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், 10.45 மணிக்கு 3-ம் கால பூஜையும் நடைபெறுகிறது. பின்னர் பகல் 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு 4-ம் கால பூஜையும், இரவு 7.30 மணிக்கு 5-ம் கால பூஜையும், இரவு 8.25 மணிக்கு 6-ம் கால பூஜை முடிந்ததும் 8.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
ராமநவமி தினத்தன்று ராமருக்கு சிறப்பு அபிஷேகமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும் நடைபெறும். மாலையில் சாமி திருவீதி உலா வருவார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை கோவிலில் உள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அன்று சீதா, லட்சுமணர் சமேதராக காட்சியளிக்கும் ராமர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று மகா சுதர்ஷன ஹோமம், தன்வந்த்ரி ஹோமம், ஹயக்கீரிவா ஹோமம் நடைபெறுகிறது. இதேபோன்று பவுர்ணமி தினத்தன்று சத்யநாராயணா பூஜை நடைபெறுகிறது. இந்த சிறப்பு ஹோமங்களில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றலாம். மேலும் பண்டிகை நாட்கள், விழா காலங்களில் ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
சிவன் சன்னிதி :
கோதண்ட ராமசுவாமி கோவிலின் பின் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வில்வ மரத்தின் அடியில் வில்வ லிங்கேசுவரர் சன்னிதி உள்ளது. இங்கு வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் தினமும் பக்தர்களே நேரடியாக அபிஷேகம் செய்து வழிபடலாம். ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் வில்வலிங்கேசுவரருக்கு, பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பொருட்களை வைத்தே அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்து நெய் விளக்கேற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வழிபடலாம்.
சிவராத்திரியின் போது வில்வலிங்கேசுவரருக்கு 4 கால அபிஷேகம் விடிய, விடிய நடைபெறும். இந்த பூஜையிலும் பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்து இறைவன் அருளை பெறலாம். அன்றைய தினம் கோவிலே விழாக்கோலத்துடன் காணப்படும். மார்கழி திருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் மூன்றாவது தலமாகவும், கடலூர் மாவட்டத்தில் உள்ள 19 பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும் இத்தலம் விளங்குகிறது.
சைவசமய குரவர்கள் நால்வரில், மிகவும் சிறுவயதில் இறையருளும், இறைதரிசனமும் கிடைக்கப்பெற்றவர் திருஞானசம்பந்தர். மூன்று வயதில் உமையவளிடம் ஞானப்பால் குடித்து பண்பாடிய இவர், பின்காலத்தில் ஒரு பசித்த பொழுதினில் சிவபெருமானின் திருக்கரத்தால் உணவைப் பெறும் பாக்கியத்தையும் பெற்றார். இந்த வரலாற்றின் நிகழ்விடமாக திகழ்வதுதான் திருநெல்வாயில் எனப்படும் சிவபுரி திருத்தலம். இந்த ஊர் திருவுச்சி என்ற பெயராலும் குறிப்பிடப்படுகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து தென்கிழக்கில் 4 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
ஆலய வரலாறு :
சீர்காழியில் சிவபாத இருதயர்- பகவதி அம்மாள் ஆகியோரின் புதல்வராக பிறந்தவர் ஞானசம்பந்தர். தந்தையார் கோவிலுக்குச் செல்லும் போது, முரண்டு பிடித்து தானும் அவருடன் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் சிவபாத இருதயர், குழந்தை சம்பந்தனை கோவிலின் பிரம்மதீர்த்தக் கரையில் அமரச் செய்துவிட்டு, சிவ மந்திரத்தை உச்சரித்தபடி நீரில் இறங்கி மூழ்கினார். ஏற்கனவே பசியிலிருந்த குழந்தை தந்தையை காணாத பயத்தில், ‘அம்மை.. அப்பா..’ என்று அழைத்து அழுதது. இதை செவியுற்ற உமையவள், அந்தக் குழந்தைக்கு ஞானப் பால் ஊட்டினாள். மேலும் அம்மையும், அப்பனும் தரிசனமும் அளித்தனர்.
குளித்து முடித்து கரையேறி வந்த சிவபாத இருதயர், கடைவாயில் பாலொழுக நின்ற மகனைப் பார்த்து ‘என்ன நடந்தது?’ என்று கேட்டார்.
குழந்தை சம்பந்தன் பாலருந்தியதைக் கூற ‘யார் பாலைக் கொடுத்தால் குடித்து விடுவதா?’ என்று கோபத்தில் அருகில் கிடந்த குச்சியை எடுத்து குழந்தையை அடிக்க முற்பட்டார். அப்போது அன்னையிடம் ஞானப்பால் பருகிய அந்த மூன்று வயது குழந்தை, சிவபார்வதி தரிசனம் தந்த இடத்தைக் சுட்டிக்காட்டியவாறு ‘தோடுடைய செவியன்...’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார். இதனைக் கண்டு ஆச்சரியமுற்ற தந்தை இறைவனின் அருள் தன் குழந்தைக்கு கிடைத்ததை எண்ணி பரவசமடைந்தார்.
அதன்பிறகு தந்தையின் உதவியுடனும், ஒரு கட்டத்தில் தந்தையின் துணையின்றியும் ஒவ்வொரு சிவாலயமாக சென்று வழிபடத் தொடங்கினார் திருஞானசம்பந்தர். இறைவனின் மீது மகன் பக்தி கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், திருமணம் செய்யாமல் இப்படியே இருந்து விடுவானோ என்ற அச்சமும் தந்தைக்கு இருந்தது. அதற்கேற்றாற்போல் திருஞானசம்பந்தரும், ‘இறைவனை பணிந்து பாடுவதற்கே என்பிறவி’ என்று கூறிவிட்டார்.
அவரை சம்மதிக்க வைக்கும் விதமாக, ‘இறைவனுக்காக குடும்பத்தார் சார்பில் நடத்தப்படும் மாபெரும் வேள்வியில் தம்பதி சமேதராக இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும்’ என்று பொய்யுரைத்து மகனின் சம்மதத்தைப் பெற்றனர்.
திருநல்லூர் பெருமணம் எனப்படும் நல்லூரைச் சேர்ந்த நம்பாண்டார்நம்பி என்பவரின் மகளான தோத்திரபுரணி என்பவரை மணப்பெண்ணாக நிச்சயித்தனர். மேலும் அங்குள்ள சிவலோக தியாகேசர் ஆலயத்தில் திருமணம் செய்வது என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில் திருஞானசம்பந்தர், திருவேட்களம் என்ற இடத்தில் சிவதரிசனம் செய்து கொண்டிருந்தார். எனவே அங்கிருந்தே திருமண நிகழ்ச்சிக்கு அனைவரும் புறப்படுவது என்று முடிவு செய்யப்பட்டது.
பசி போக்கிய இறைவன் :
திருமணத்தை நடத்தி வைக்க திருநீலநக்க நாயனாரும், திருமணத்தைக் காண முருக நாயனார், பெருமபாண நாயனார் உள்ளிட்ட அடியார்கள் பலரும் வருகை தந்திருந்தனர். அனைவரும் சிதம்பரம் நடராசரையும், திருவேட்களம் பாசுபதேசுவரரையும் தரிசித்து விட்டு, திருநெல்வாயில் என்ற ஊரை அடைந்த போது உச்சிப்பொழுது (மதியம்) வந்து விட்டது. வெயில் தாக்கம் காரணமாக அனைவரும் சற்று இளைப்பாற முடிவு செய்தனர்.
அப்பொழுது அனைவருக்கும் பசி மேலிட, களைத்துப் போயினர். இதை உணர்ந்த இறைவன் கோவில் பணியாளர் உருவத்தில் தோன்றி, அனைவருக்கும் அமுது பரிமாறி பசி போக்கினார். பின்னர் அனைவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார். உச்சிப் பொழுதில் அருள்புரிந்தவர் என்பதால் இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் ‘உச்சிநாதர்’ என்று பெயர் பெற்றார். திருஞானசம்பந்தருக்கும் அவருடன் வந்தவர்களுக்கும், சிவன் உணவளித்த வரலாற்றின் நிகழ்விடமே திருநெல்வாயில் எனப்படும் சிவபுரி திருத்தலம்.
அருணகிரிநாதர் இவ்வாலயம் வந்து வழிபட்டு, இங்குள்ள முருகன் மீது ஒரு பாடல் பாடியுள்ளார். அப்பாடல் அவரின் திருப்புகழில் இடம்பெற்றுள்ளது. கண்வ மகரிஷியும் இவ்வாலய ஈசனை தரிசித்துள்ளார்.
ஞானசம்பந்தர் மற்றும் அவருடன் வந்த பரிவாரங்களின் பசியை இறைவன் போக்கிய இத்தலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால் காலம் முழுமைக்கும் அவர்களது வாழ்வில் உணவு பிரச்சினை இருக்காது என்பதும், சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாத்தினால் நிம்மதியும் மன அமைதியும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.
ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கிய திருக்கோவில், ஐந்துநிலை ராஜகோபுரத்துக்கு முன்னால் கிருபா சமுத்திரம் என்னும் தீர்த்தக்குளம் உள்ளது. ஒரே ஒரு பிரகாரத்தைக் கொண்ட ஆலயத்தின் உட்புறத்தில் இடதுபக்கமாக அதிகார நந்தி வீற்றிருக்கிறார். பெரும்பாலான ஆலயங்களில் பிரகார சுற்றில் பரிவார தெய்வங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால் இவ்வாலயத்தில் பிரகாரச் சுற்றுக்கும், கருவறைக்கும் இடைபட்ட இடத்தில் பரிவார தெய்வங்களின் சன்னிதிகள் இடம் பெற்றுள்ளன. அதாவது அனைத்து மூர்த்தங்களையும் ஒருசேர சுற்றும் விதமாக பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலய வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள பெரிய மண்ட பத்தில் சுவாமி - அம்பாள் சன்னிதிகளும் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னிதிகளும் ஒருசேர இடம் பெற்றுள்ளன. இதே போன்ற அமைப்பை சிதம்பரம் அனந்தீஸ்வரர் ஆலயத்திலும் காண முடியும். இரண்டு ஆலய திருப்பணிகளும் நகரத்தார் சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இந்த ஒற்றுமை ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
வசந்தமண்டபத்தில் பலிபீடமும், நந்தியம் பெருமானும் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு நேரெதிரில் துவாரபாலகர்கள் காவல் புரிய, மூலவர் உச்சிநாதர் கருவறையில் சுயம்புலிங்கமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு இடது புறத்தில் அர்த்த மண்டபத்திலிருந்து தென்முகமாக ஆடிய கோலத்தில் அருள்புரிகிறார் நடராசபெருமான். பலிபீடத்தையும், நந்தியம் பெருமானையும் ஒட்டினார் போல, தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார் கனகாம்பிகை. வசந்த மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பள்ளியறையும், நவக்கிரக சன்னிதியும் அமையப்பெற்றுள்ளன. மண்டபச்சுற்றில் விநாயகர் மற்றும் தனி சுப்ரமணியர் சன்னிதிகள் உள்ளன.
இவ்வாலய முருகப்பெருமான் ஒருமுகம், நான்கு திருக் கரங்களுடனும் காட்சியளிக்கிறார். கருவறைச் சுற்றில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜதுர்கை இடம்பெற்றுள்ளனர். சுவாமி சன்னிதியின் கோமுகம் அருகே சண்டிகேஸ்வரரும், அம்பாளின் கோமுகம் அருகே காசி விசுவநாதரும் இடம் பெற்றுள்ளனர். பிரகாரத்தின் வடகிழக்கில் மதில்சுவரை ஒட்டி பைரவரும், பஞ்சலிங்கம் எனப்படும் ஐந்து லிங்கங்களும், சனீஸ்வரன் மற்றும் சந்திரன் சன்னிதியும் உள்ளன. தென்கிழக்கு மூலையில் சூரியன் சன்னிதியும், மடப்பள்ளியும் இருக்கிறது.
தினமும் ஐந்துகால புஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், காலை 6 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும். சிதம்பரத்திலிருந்து இவ்வாலயத்திற்குச் செல்ல குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து வசதியும், எல்லா நேரங்களிலும் ஆட்டோ வசதியும் உள்ளன.
அகத்தியர் வழிபட்ட தலம் :
தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் மூன்றாவது தலமாகவும், கடலூர் மாவட்டத்தில் உள்ள 19 பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும் இத்தலம் விளங்குகிறது. இத்தல இறைவன் உச்சிநாதர், மத்யானேஸ்வரர் என்றும், இறைவி கனகாம்பிகை, கனகாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். தலவிருட்சம் நெல்லி, தலதீர்த்தம் கிருபாசமுத்திரம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட கற்றளி கோவிலாகும்.
கயிலாயத்தில் சிவனுக்கும்- பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது அனைத்து தேவர்களும், முனிவர்களும் அங்கு கூடினர். இதனால் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. இதையடுத்து அகத்தியரை தென்திசைக்கு சென்று உலகை சமநிலைக்கு கொண்டு வரும்படி பணித்தார் சிவபெருமான்.
‘தங்களது திருமணத்தைக் காணும் பாக்கியம் எனக்கில்லையா?’ என அகத்தியர் முறையிட்டார் அகத்தினர். அதற்கு ஈசன், ‘நீ என்னை எங்கெங்கிருந்து வழிபடு கிறாயோ, அங்கெல்லாம் உமக்கு எனது திருமணக்காட்சியை காட்டியருள்வேன்’ என்று கூற, அகத்தியர் மன நிறைவுடன் தென்திசை நோக்கி புறப்பட்டார்.

திருமணம் நடைபெற வேண்டியும், தடைபட்ட திருமணம் நடக்க வேண்டியும் கல்யாண சுந்தரேஸ்வரர் முன் ஹோமம் வளர்த்து ஆராதனைகள் செய்தால் பலன் நிச்சயம் என்று பலன் பெற்றவர்கள் கூறுகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிவாலயம் என்ற கிராமம். இங்கு சிவபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகே அய்யர்மலை இருப்பதால், இந்த ஊர் சிவாயமலை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் சிவபுரீஸ்வரர் என்ற திருநாமத்திலும், இறைவி பெரியநாயகி அம்மன் என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த ஆலயம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்க, முகப்பில் இடதுபுறத்தில் விநாயகரும், வலதுபுறத்தில் முருகன் வள்ளி- தெய்வானையும் அருள்பாலிக்கின்றனர். கோபுரத்தின் எதிரே 16 கால் மண்டபம் உள்ளது. மண்டப தூண்களில் நாகர் சிற்பங்களும், ஆஞ்சநேயர் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன.
ஆலய அமைப்பு :
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முதல் கோபுரக் கதவு பிரமாண்டமாக காட்சி தருகிறது. இதை ராமாயணக் கதவு என்று கூறுகின்றனர். கோபுரத்தைத் தாண்டியதும் நீண்ட பிரகாரம் உள்ளது. அடுத்து மூன்று மாடங்களை கொண்ட கோபுரம் உள்ளது. சுற்றிலும் உயர்ந்த மதில் சுவர்களுடன் இரண்டு பிரகாரங்களுடன் காட்சி தருகிறது ஆலயம்.
அடுத்துள்ள முகப்பு மண்டபத்தின் இடதுபுறம் தூணில் கல்யாண சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். திருமணம் நடைபெற வேண்டியும், தடைபட்ட திருமணம் நடக்க வேண்டியும் கல்யாண சுந்தரேஸ்வரர் முன் ஹோமம் வளர்த்து ஆராதனைகள் செய்தால் பலன் நிச்சயம் என்று பலன் பெற்றவர்கள் கூறுகின்றனர்.
மண்டபத்தின் வலதுபுறம் காலபைரவர் அருள்பாலிக்கிறார். தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு நடக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.
அடுத்துள்ள மகாமண்டபத்தில் அர்த்த மண்டபத்தின் எதிரே நந்தியும், பெரிய அளவில் விநாயகர் சிலையும் எதிரே மூஞ்சுறுவும் உள்ளன. கருவறையில் இறைவன் சிவபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
இறைவனுக்கு எதிரே வெளியே விநாயகர் பெரிய பீடத்தில் அமர்ந்திருப்பது, எந்த சிவாலயத்திலும் இல்லாத ஓர் அபூர்வ அமைப்பு இது என்கின்றனர் பக்தர்கள். உட்பிரகாரத்தின் தென் திசையில் நாயன்மார்களும், மேற்கில் கஜலட்சுமி சித்தி விநாயகர், காசி விசுவநாதர் - விசாலாட்சி, வள்ளி- தெய்வானை சமேத முருகர், வடக்குப் பிரகாரத்தில் சோழபுரீசர், சண்டீஸ்வரர் சன்னிதிகளும், வடக்கில் அம்மன் பெரியநாயகியின் சன்னிதியும் உள்ளன. வடகிழக்கு மூலையில் தல விருட்சமான மகிழமரம் தழைத்தோங்கி காட்சி தருகிறது. தேவக்கோட்டத்தின் தென்திசையில் தட்சிணாமூர்த்தியும், வடக்கில் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.
நடராஜர் - சிவகாமி :
மகாமண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராஜர் - சிவகாமி திருமேனிகள் உள்ளன. ஐம்பொன்னால் ஆன இந்தத் திருமேனிகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம்; அவ்வளவு அழகு. திருவாதிரை அன்று நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று இருவரும் ஆலயம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி ஒரு நாள் முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள்புரிவார்கள். சுற்று வட்டாரத்தில் உள்ள 32 கிராம மக்கள் அன்று ஆலயம் வந்து நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க தவறுவதில்லை.
தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
தல வரலாறு:
சூரியவன்னி என்ற பெயர் கொண்ட மன்னன், மிக நேர்மையுடனும் மக்கள் மனம் கோணாது ஆட்சி செய்து வந்தான். அது சமயம் மயிடம் என்ற அசுரன், பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். அவனது கடுந்தவத்தை கண்டு மனம் இரங்கிய பிரம்மன் அவன் முன்னே தோன்றினார்.
‘மயிடா! உன் தவத்தைக் கண்டு மெச்சினோம். உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’ என்றார் பிரம்மன்.
அவனோ, ‘இறைவா! மானிடப் பிறவிகளாலோ அல்லது பிற உயிரினங்களாலோ எனக்கு மரணம் ஏற்படக்கூடாது. தவிர இவர்களைவிட அசுர பலம் கொண்டவனாக நான் இருத்தல் வேண்டும்’ என்ற வரத்தைக் கேட்டான்.
பிரம்மனுக்கு, அவன் கேட்டபடியே வரத்தை அளித்து அங்கிருந்து மறைந்தார்.
அசுர பலம் பெற்ற மயிடம், கர்வம் தலைக்கேற ஆணவத்தில் ஆட்டம் போடத் தொடங்கினான். தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினான். கண்களில் பட்ட மக்களை எல்லாம் துன்புறுத்தினான். அவனது துன்புறுத்தல் தாங்காது மக்கள் மன்னனிடம் ஓடினர். அசுரனது அராஜகம் பற்றி முறையிட்டனர். மன்னன் தன் படைபலத்தைக் கொண்டு அசுரனை அழிக்க முயன்றான், முடியவில்லை. தொடர்ந்து போரிட்டும் தோல்வியே எஞ்சியது. துவண்டு போன மன்னன், ‘என்ன செய்வது?’ என்று புரியாது தவித்தான்.
இதையடுத்து இறைவன் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கினான் மன்னன். தினமும் இறைவனை வேண்டி தங்கள் துன்பங்களைத் தீர்த்தருள வேண்டும் என்று வேண்டினான்.
துர்க்கையான தேவி:
மன்னனின் வேண்டுதலைக் கேட்ட கயிலைநாதன், தேவியை அழைத்தார். அசுரனை அழித்து வரும்படி பணித்தார்.
தேவி புறப்பட்டாள். துர்க்கையின் வடிவம் கொண்டாள். சப்தகன்னியர் புடை சூழ அசுரனை நோக்கிச் சென்ற தேவி அவனை போருக்கு அழைத்தாள். அசுரன் யாருடன் போரிடுகிறோம் என்று புரியாது துர்க்கையுடன் போரிட்டான். கடுமையான போர் நடந்தது. தேவி, அசுரனின் இரு கொம்புகளைப் பிடித்து கீழே தள்ளினாள். தலை மேல் ஏறி நின்று வாளால் சிரசைத் துண்டித்தாள். அசுரனின் கதை முடிந்தது. ஆனால் தேவியை, பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தேவி பல தலங்களுக்குச் சென்று இறைவனைத் துதித்தாள். பின்னர் இத்தலம் வந்து சிவபெருமானை வணங்க, தேவியின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. தேவர்கள் இந்த இடத்தை சிவாயம் என்று கொண்டாடினர்.
இந்த இடம் தற்போது இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒரு பகுதி அய்யர்மலை எனவும், மற்றொரு பகுதி சிவாயம் கிராமமாகவும் அழைக்கப்படுகிறது.
பிரதோஷம் :
இங்கு மாதப் பிரதோஷங்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. சுமார் 300 பேர் இதில் கலந்து கொண்டாலும், சனி பிரதோஷ நாட்களில 1000 பேருக்கும் மேல் கலந்து கொள்வது சிறப்பானதாகும். தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.
சிவாயம் செல்லும் பக்தர்கள் இங்கு அருள்பாலிக்கும் சிவபுரீஸ்வரர் மற்றும் பெரிய நாயகி அம்மனை தரிசிப்பதுடன், அருகே உள்ள அய்யர்மலை மீது வீற்றிருக்கும் ரத்தினகிரீசுவரர் மற்றும் கரும்பர் குழலி அன்னையையும் தரிசித்து பயன் பெறலாமே.
சிவாயம் செல்ல குளித்தலை - மணப்பாறை பேருந்தில் பயணித்து அய்யர்மலையில் இறங்கி 2 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். திருச்சியில் இருந்து நேரிடையாக சிவாயம் செல்ல பேருந்து வசதிகளும் உள்ளன.
கல்வெட்டுகள் :
இந்த ஆலயத்தில் ஆறு கல்வெட்டுகள் உள்ளன. அவைகளை 1913-ல் அரசின் கல்வெட்டுத் துறையினர் படியெடுத்துள்ளனர். ஓய்சாள நாட்டு வீர ராமநாதன், மூன்றாம் ராசேந்திரன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய அரசர்கள் காலத்து கல்வெட்டுகள் இந்த ஆலயத்தில் உள்ளதால், இந்த ஆலயம் 1000 ஆண்டுகள் பழமையானது என அறிய முடிகிறது. கண்டைக்காய்பாறை கல்வெட்டில் வீரமல்லன், சீயமித்திரன் என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இந்த பாறையில் ஐந்து கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்தின் திருமதிற்சுவற்றில் உட்புறம் ஒருவர் நடந்து செல்லும் அளவிற்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது வியக்க வைக்கக்கூடியது. மதிலின் உச்சியிலிருந்து சுமார் நான்கு அடி கீழே, உட்புறம் உள்ள இந்தப்பாதையில் பயணித்தால் ஆலயம் மற்றும் வெளிப்புற கிராமத்தை முழுமையாக நாம் தரிசிக்கலாம்.

இந்த கோவிலில் வழிபட்டால் தீராத நோய்கள், நரம்பு தொடர்புடைய கோளாறுகள் சரியாவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
திருமலைக் கல்லில் தோன்றிய சிவன் வாழும் தலம், அகத்தியர் ஆசிரமம் மற்றும் யாக குண்டங்களையும் அமைத்து சிவ வழிபாடு செய்த ஊர், உயரமான சூரியன் சிலை உள்ள ஆலயம், பெரிய விஷ்ணு துர்க்கை விளங்கும் ஊர் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஊராகத் திகழ்வது மேலக்குண்டையூர். இந்த ஊரில் எழுந்தருளியுள்ள இறைவனே திருமலை நாதீஸ்வரர் ஆவார்.
புராண வரலாறு :
கயிலையில் நடந்த சிவன்- பார்வதி திருமணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், பூலோக மக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களுமே கயிலைக்குச் சென்றனர். அதன் காரணமாக வடதிசை தாழ்ந்தது. அகத்தியர் இறைவனின் வேண்டுகோள்படி பூமியைச் சமன் படுத்திட தென்திசை நோக்கிப் பயணமானார். பயணத்தின் போது திருமலையில் அவருக்கு ஒரு சிவலிங்கம் கிடைத்தது. இதை வைத்துப் பூஜை செய்ய ஒரு நல்ல இடத்தைத் தேடிய போது, நீர்வளமும் நிலவளமும் பொருந்திய ஒரு பசுமையான பகுதி தென்பட்டது. அங்கேயே ஓர் ஆசிரமம் அமைத்தார். அதன்மூலம் பல்வேறு கலைகள் வளர உதவினார். மேலும் மிகப் பெரிய யாக குண்டங்களை அமைத்து சிவபூஜையும் செய்து மகிழ்ந்தார்.
யாக குண்டங்கள் நிறைந்த ஊராக இப்பகுதி விளங்கியதால், இவ்வூர் குண்டமூர் என்று அழைக்கப்பட்டது. இது நாளடைவில் மருவி குண்டையூர் என்றும் தற்போது மேலக்குண்டையூர் என்றும், கீழக்குண்டையூர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. அகத்தியரால் ஆசிரமம் மற்றும் குண்டங்கள் வளர்த்த இடத்தினை ஊர்மக்கள் இன்றும் அடையாளம் காட்டுகின்றனர்.
விஷ்ணு துர்க்கை :
இதே போல, இவ்வூரில் ஒரு இடம் மிகப்பெரிய மண்மேடாகக் காட்சி தருகிறது. இது மன்னர் கால அரண் மனையாக இருந்து பின்னர் அழிந்து போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த மணல் மேட்டில் அழகிய விஷ்ணு-துர்க்கை உருவம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் காட்சி தருகிறது. சிற்பக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இது விளங்குகிறது.
ஏரிகள், குளங்கள், பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளின் நடுவே அமைந்துள்ளது மேலக்குண்டையூர். இனி ஆலயம் செல்வோம்.
ஊரின் ஈசான்ய மூலையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, காமாட்சி அம்மன் உடனுறை திருமலை நாதீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் 144 அடி நீளமும், 96 அடி அகலமும் கொண்டு விளங்குகிறது. சூரியன், பைரவர், சண்டிகேஸ்வரர், விநாயகர், மகாவிஷ்ணு, பாலமுருகன் சன்னிதிகளும், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை போன்ற பரிவார தெய்வங்களின் சன்னிதிகளும் அமைந்துள்ளன. தனியே நவக்கிரக சன்னிதியும் உள்ளது. பழமையானகோவில் என்பதற்குச் சான்றாக இறைவனின் திருமேனியும், கருவறையும் காட்சி தருகின்றன.
ஏழு பாறைகள் - சித்தர்கள்:
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந் திருந்த இந்த சிவன் கோவிலை, சிவனடியார் ஒருவர் ஊர் மக்களின் ஒத்துழைப்போடு சீரமைக்க விரும்பினார். அதன்படி சிவலிங்கம் மற்றும் அதன் பீடத்தினை நகர்த் தினார். என்ன ஆச்சரியம்! அங்கே பிரகாசமான ஒளி வீசிக்கொண்டிருந்தது. உள்ளே பெரிய சுரங்கப்பாதை அமைப்பில் குகை ஒன்று கீழ்நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மேலும் ஏழு பாறைகள் அடுத்தடுத்து காணப்பட்டன. குகையில் இருந்து ஓங்காரம் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. இது சித்தர் பூமி என்பதையும், சித்தர்கள் தவயோகத்தில் தியானம் செய்வதையும் உணர்ந்த சிவனடியார் மற்றும் ஊர்மக்கள், உடனடியாக சிவலிங்கத்தை அதன் பீடம் இருந்த இடத்தில் திரும்பவும் பொருத்திவிட்டனர். இந்த வரலாறு செய்தி வழிவழியாக இன்றும் இவ்வூரில் கூறப்பட்டு வருகிறது.
சூரிய பகவான்:
ஆலயத்தில் நுழைந்ததும் இடதுபுறம் சூரியன் சன்னிதி உள்ளது. கோவில் புனரமைப்பின் போது பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட இந்த சூரியபகவான் சிலை, மிகப்பெரிய உருவமாக காட்சியளிக்கிறது. இவ்வளவு பெரிய சூரியன் சிலை வேறு எங்கும் இல்லை என்றே பக்தர்கள் தெரிவிக்கின்றனர். புதிய 16 கால் கல் மண்டபம் வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் தலமரமான வில்வத்தின் அடியில் சிறிய அனுமன், அவரது அருகே நால்வர், அடுத்து மூஷிக விநாயகர், மகாவிஷ்ணு, பாலமுருகன், சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள், சொர்ண பைரவர், சந்திரன் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. கருவறைக் கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை ஆகியவை ஒருங்கே அமைந்துள்ளன.
திருமலை நாதீஸ்வரர் :
இதனைத் தாண்டினால் நந்திதேவர், சிவனை நோக்கிய வாறு காட்சி தருகிறார். எதிரே மூலவர் இறைவன் எளிய உருவில் கிழக்கு நோக்கி அருள் வழங்குகிறார். இவரின் திருமேனியைக் கண்டதும் நம் மெய் சிலிர்க்கிறது. வேண்டிய வரத்தைத் தர வல்லவர் இவர் என்ற எண்ணம் மனதில் ஆழமாய்ப் பதிகிறது. அருகே எழிலான கோலத்தில் அன்னை காமாட்சி தெற்கு முகமாகக் காட்சி தருகிறார். கீழ் இரு கரங்கள் அபய ஹஸ்தத்துடனும், மேல் இரு கரங்கள் பாசம், அங்குசத்துடனும் காணப்படுகின்றன.
கருவறையின் வலப்புறத்தில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வில்வமரம், அகன்று நீண்டு வளர்ந்துள்ளது. இதன் இலைகள் பிணி தீர்க்கும் அருமருந்து என்ற அசையாத நம்பிக்கை நிலவுவதால், பக்தர்கள் அனைவரும் வில்வ இலையைப் பறித்துச் செல்ல மறப்பதில்லை. இதன் காய்கள் லிங்க பாண வடிவில் இருப்பது அதிசயமான ஒன்று. இந்தக் காய்களைத் தங்கள் இல்லங்களில் மஞ்சள் பூசி, அரிசி கிண்ணத்தில் வைத்து வழிபடுகின்றனர். இதன் மூலம் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
ஆலய தரிசன நேரம் :
காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவில் நடை திறந்தே இருக்கும். தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்ப தால் இத்தகைய ஏற்பாடு நிர்வாகத்தினரால் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊர் சித்தர்கள் வாழும் பூமியாகத் திகழ்வதால், முதலில் நம் ஆன்மா தூய்மை பெறுகிறது. தீராத நோய்கள், நரம்பு தொடர்புடைய கோளாறுகள் சரியாவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைவிடம் :
ஆலயம் அமைந்திருக்கும் மேலக்குண்டையூர் என்ற ஊர், திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் தாலுகாவில் அமைந்துள்ளது. சென்னைக்கு மேற்கே சுமார் 43 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த ஊர்.
திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில் திருநின்றவூரில் இருந்து வடக்கே 8 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். திருநின்றவூர் ரெயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து பெரியபாளையம் செல்லும் பேருந்து மூலம் காவனூர் எனக் கேட்டு இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் மேலக்குண்டையூர் உள்ளது.
ஊரைச் சுற்றி :
இந்த ஆலயம் அமைந்திருக்கும் மேலக்குண்டையூரைச் சுற்றிலும் பல்வேறு ஆலயங்கள் அமைந்துள்ளன. இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலையில் தாமரைப்பாக்கம் என்ற இடத்தில் சர்வேஸ்வரர் கோவில் உள்ளது. வடகிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் திருமுல்லைவாயில் அம்மன் கோவில், வடக்கே 35 கிலோமீட்டர் தொலைவில் சுருட்டைப்பள்ளி சயனக்கோல சிவபெருமான் ஆலயம் போன்றவை அமைந்துள்ளன.

விஷக்கடியால் அவதிப்படுபவர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மனிதன் இந்தப் பூவுலகில் வாழும் போது, விலங்குகள், புழு, பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றின் ஊடே தான் தனது வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்த வேண்டும்.
அப்படி வாழும் போது கண்ணுக்குத் தெரியாத பூச்சி, புழு போன்ற உயிரினங்களாலோ சில தாவரங்களின் ஒத்து வராத தன்மையினாலோ மனித உடலுக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் உடல் தோல் தடிப்பு, மூச்சிரைப்பு, ஆத்மா போன்ற உபாதைகள் ஏற்படும். இதற்கு ஆங்கில மருத்துவத்தில் உடனடியாக மருந்து மாத்திரை ஊசி மூலம் தீர்வு உண்டு. நாட்பட்ட நோய்கள் சில சித்தா, ஓமியோபதி போன்ற மருத்துவத்திலும் குணமாவது உண்டு.
ஆனால் இவைகளில் எல்லாம் குணம் காண முடியாத மக்கள் பலரும், இறுதியில் இறைவனைத் தஞ்சம் அடைகின்றனர். அந்த நம்பிக்கையே அவர்களை குணப்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டு வருகிறது.
பூவனூர் :
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு தெற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் மன்னார்குடி செல்லும் சாலையில் இருக்கிறது பூவனூர் என்ற சிற்றூர். பாம்பணி ஆறு எனப்படும் பாமிணி ஆற்றின் மேல் கரையில் சாலையில் இருந்து பார்த்தாலே ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் உயர்ந்து நிற்கும் திருக்கோவிலைக் காணலாம்.
சுகப்பிரம்மர் என்னும் கிளி முகம் கொண்ட ரிஷி, முன்காலத்தில் இங்கு வந்து பூவனம் ஒன்றை உருவாக்கி, அதில் இறைவனை ஸ்தாபனம் செய்து பூஜித்துள்ளார். பூவனத்திற்கு நடுவே அமைந்த இறைவன் என்பதால், இத்தலத்தில் உள்ள மூலவர் பூவனநாதர் என்றும், புஷ்பவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கிளி முகம் கொண்ட சுகபிரம்ம ரிஷி வழிபட்ட இந்த தலத்தில் இன்றும் ஏராளமான கிளிகள் பறந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
ஆலயத்தின் உள் பிரகாரத்தை வலம்வரும் போது, கோட்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தி சுவாமியும், மேற்கே பிரம்மன், விஷ்ணு பகவான் சூழ அண்ணாமலையாரும், வடக்கே நான்முகனும் இருக்கின்றனர். துர்க்கையின் இருப்பக்கமும் அர்த்தநாரி, பிச்சாடனர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இவர்களுக்கு எதிரே சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது.
கன்னி மூலையில் பிரதான விநாயகரும், லட்சுமி நாராயணர், காசி விசுவநாதர் - விசாலாட்சி திரு உருவங்கள் உள்ளன. வாயு மூலையில் வள்ளி -தெய்வானையுடன் சுப்பிரமணியரும், ஈசான மூலையில் சனீஸ்வரரும், கால பைரவரும் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருக்கின்றனர். சுவாமி சன்னிதிக்கும் பின்புறம் தலவிருட்சமான பலா மரம் பசுமையாக நிழல் தந்து நிற்கிறது.
சுவாமி சன்னிதிக்கு எதிரே உள்ள பெரிய மண்டபத்தில் தெற்கு நோக்கி ராஜராஜேஸ்வரியும், கற்பகாம்பிகையும் இரு சன்னிதிகளில் இருந்து அருள்புரிகின்றனர். ஆலயத்திற்கு இரண்டு அம்மன் இருப்பது தனிச்சிறப்பாக உள்ளது.
சாமுண்டீஸ்வரி :
கொடிமரத்தின் எதிரே வடக்கு நோக்கிய தனிக் கோவிலில் சாமுண்டீசுவரி அம்மன் அமர்ந்து அருள்மழை பொழிகிறாள். மைசூர் மலையில் இருக்கும் அம்பிகை இங்கும் இருப்பது சிறப்பென கருதப்படுகிறது.
‘குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர்
மற்றும் தீவினை செய்தன மாய்க்கலாம்
புற்ற ராவினன் பூவனூர் ஈசன்பேர்
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே’
தீவினை தீர பூவனூர் வந்து தரிசிக்கலாம் என்பது அப்பர் பெருமானின் அருள் வாக்கு.
கயிறு கட்டுதல் :
விஷக்கடியால் அவதிப்படுபவர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வழிபாடு என்ன என்று விசாரித்தோம்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலையில் இங்கு வரும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், திருக்கோவிலின் எதிரில் உள்ள ஷீர புஷ்கரணி என்ற திருக்குளத்தில் மூழ்குகிறார்கள். பின்னர் அவர்கள் கோவிலுக்குள் சென்று சுவாமியையும், அம்பாளையும் வணங்குகின்றனர்.
அதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னிதியில் முன்பாக நிறுத்தப்படும் அவர்களுக்கு, மந்திரித்த வேர்க் கயிறு கட்டி விடப்படுகிறது. பின்னர் அனைவரும் சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டு வீடு திரும்புகின்றனர். இவ்வாறு செய்வதால் விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், விரைவில் குணமடைகிறார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆலயம் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையில் நடை திறந்திருக்கும்.

சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம் இதுவாகும்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ளது சங்கரநாராயணர் திருக்கோவில். சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம் இதுவாகும்.
இந்த ஆலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரம் மூலவர் சங்கரலிங்கத்தையும், அம்பாள் கோமதி அம்மனையும் காண நம்மை அழைக்கிறது. இத்தல கால பைரவரை அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு வழிபாடு செய்தால், முன்ஜென்ம வினைகளும், நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்களும், பாவங்களும் விலகும்.
சங்கர நாராயணர் சன்னிதி :
இந்த ஆலயத்தில் சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையே சங்கரநாராயணர் சன்னிதி அமைந்துள்ளது. மூலவர் சன்னிதி பிரகாரத்தில் புற்று வடிவில் அமைந்த வன்மீகநாதர் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் அகல இப்புற்றில் மஞ்சள் பூசி, இங்குள்ள பஞ்ச நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளலாம். இவ்வாறு வழிபட நாக தோஷங்கள் அகலும்.
பெரும்பாலும் சிவாலயங்களில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, அர்த்த நாரீஸ்வரர் ஆகிய மூவரில் ஒருவர் தான் கருவறை பின்புறம் இருப்பார். ஆனால் இங்குள்ள ஈசன் கருவறை சுற்றுச் சுவரின் பின்புறத்தில் யோக நரசிம்மர் அருள் பாலிக்கிறார். இந்த யோக நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் நெய்தீபம் ஏற்றி, பானகம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். ஆலயத்தில் சிவபெருமானின் எதிரில் அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்த, ருத்ராட்சப் பந்தலின் கீழ் நந்தி பகவான் அமர்ந்துள்ளார்.
ஆடித் தபசு :
சங்கரநாராயணர் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும். ‘தபசு’ என்றால் ‘தவம்’ என்று பெயர்.
தற்போது அமைந்திருக்கும் கோமதி அம்பாள் சன்னிதி முன்பு, நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர். இதில் சங்கன் என்னும் நாகர் சங்கரனாகிய சிவபெருமான் மீதும், பதுமன் என்னும் நாகர் பாற்கடலில் பள்ளி கொண்டருளும் பரந்தாமன் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார்கள்.
இருவரும் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று தங்களுக்குள் வாதம் செய்து கொண்டனர். அது பற்றி அறிந்து கொள்வதற்காக பார்வதிதேவியிடம் சென்று முறையிட்டனர். அம்பாள் சிவபெருமானை வேண்ட, ஈசன் அம்பாளை பொதிகை மலை பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பாள் தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் சங்கரநாராயணராக வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். அன்றைய தினம் ஆடித்தபசு ஆகும்.
சங்கர நாராயணராக காட்சி :
அரியும் அரனும் ஒருங்கே இணைந்து ஓருருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர். சங்கர நாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன், திருவாசியில் நாகவடிவில் சங்கன் குடைபிடிக் கிறான். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சங்கரநாராயணர் சன்னிதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் தருகிறார்கள். பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது.
இங்கு சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்படிக லிங்கமாக வெள்ளிப் பேழையில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்குத் தான் அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தல உற்சவருக்கே சிவராத்திரி மற்றும் ஏகாதசி நாட்களில் அபிஷேகங்கள் நடைபெறும். ஆடித்தபசு நாளில், இந்த உற்சவரே அம்பாளுக்கு சங்கர நாராயணராக எழுந்தருளி காட்சி தருகிறார். ஆலய வடக்குப் பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்படும்.
12 நாள் திருவிழா :
கோமதி அம்பாள் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாளுக்கு திங்கட்கிழமைகளில் மலர் பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அணிவித்து அலங்காரம் செய்விக்கிறார்கள். அம்பாளுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை, புத்திரதோஷம், நாகதோஷம் முதலியவை அகலும் என்று கூறப்படுகிறது. அம்பாள் சன்னிதி முன்புள்ள ஸ்ரீசக்கரம், ‘ஆக்ஞா சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. அதில் உட்கார்ந்து அம்மனை வேண்டி தியானித்தால் சகலமும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம். கூடவே நிலையான மன அமைதியும் பெறலாம்.
ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். ஆடித்தபசு அன்று காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார்.
தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
மீண்டும் தவம் :
பின்பு அம்மன் மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம்?. அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெருமானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது?. எனவேதான் அம்மன் மீண்டும் ஈசனை வேண்டி சங்கரலிங்கமாக காட்சி அருள வேண்டுகிறாள்.
இரவு 11.30 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பின் அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். பின்னர், சுவாமி- அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
நோய் தீர்க்கும் புற்றுமண் :
இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு, புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த புற்று மண்ணை நீரில் கரைத்து குடித்து வந்தால் விரைவில் நோய்கள் தீர்ந்து விடுகின்றன. வீடுகளில் கொடிய விஷ ஜந்துகள் தொல்லை இருந்தால், இறைவனை வேண்டிக்கொண்டு அவற்றின் வெள்ளி உருவங்களை வாங்கி நேர்ச்சையாக செலுத்தி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விஷ ஜந்துகள் தொல்லை தீரும்.
புற்று மண்ணை வயல் வெளிகளில் தூவினால், பயிர்கள் மிகவும் செழிப்பாக வளரும், அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. புற்று மண்ணை வீட்டிற்கு வெளியே ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டால், தீவினைகள், தீய சக்திகளை அண்டவிடாமல் குடும்பத்தை காக்கும்.
திருநெல்வேலியில் இருந்து வடமேற்கே 48 கிலோமீட்டர் தூரத்தில் சங்கரன்கோவில் அமைந்துள்ளது.

மலைக் கோவிலில் வேதகிரீஸ்வரராக அமர்ந்த ஈசன், பக்தர்களுக்காக மலையின் கீழே தனிக்கோவிலில் பக்தவச்சலேஸ்வரராக அருள்பாலிக்கிறார்.
வேதமே, மலையாய் இருப்பதால் ‘வேதகிரி’ எனப் பெயர் பெற்றது. வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள்.
மலைமேல் ஒரு கோயில் உள்ளது. ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில் தாழக்கோயில் என்றழைக்கப்படுகின்றன. மலையில் தினமும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்குப் ‘பட்சி தீர்த்தம்’ என்று பெயர். மலைமீது உள்ள கோயிலில் வீற்றிருந்தருளும் இறைவன் – வேதகிரீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி), இறைவி – சொக்கநாயகி. இங்கு சுனை ஒன்றும் உள்ளது.
திருக்கயிலையில் பரமேஸ்வரன் :
பார்வதி திருமணம் நடைபெற்றவுடன், ஈசன் பார்வதி தேவியுடன் தனியாக எழுந்தருளி அருள்புரிந்த இடம் திருக்கழுக்குன்றம். மேலும் திருவாலங்காட்டில் காளியுடன் போட்டியிட்ட சிவன், ஊர்த்துவ தாண்டவம் ஆடிய களைப்புத் தீர, இத்தலத்திலேயே இளைப்பாறியதாகவும் புராண தகவல்கள் கூறுகின்றன.
சிவலிங்கத்தின் முன் மார்க்கண்டேயரும், பின்புறச் சுவரில் திருமாலும், திருமகளும் தம்பதியராக பரமேஸ்வரன்– பார்வதியை வணங்கிய வண்ணம் உள்ளனர். ஆலயக் கருவறை வெளிச்சுவரில் யோக தட்சிணாமூர்த்தியும், பிரம்மதேவரும் உள்ளனர். வேதகிரீஸ்வரர் முன் மண்டப வாசலின் இருபுறமும் விநாயகரும், முருகனும் அருள்பாலிக்கின்றனர்.
இந்த கோவிலில் உள்ள அம்மன் பாதாள அம்மன் என்னும் சொர்க்கநாயகி அம்மன். இவரது கருவறை வேதகிரீஸ்வரரை பார்த்த வண்ணம் பாதாளத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஈசன் கோவில் கொண்டுள்ள இந்த மலை 500 அடி உயரம் கொண்டது. 650 திருப்படிகள் இந்த மலைக்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ளன.
இடி வழிபாடு :
வேதகிரீஸ்வரர் கருவறைக் கூரையில் சிறிய துவாரம் ஒன்று உள்ளது. அதன் வழியாக இந்திரன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடி மூலமாக ஈசனை வழிபடுவதாக ஐதீகம். ‘இடி வழிபாடு’ மறுநாள் ஆலயக் கருவறையில் கடுமையான அனல் இருக்குமாம். இடி பூஜை மூலம் ஆலயத்திற்கோ, பக்தர்களுக்கோ பாதிப்பு ஏற்படாது.
மழைக்காலங்களில் மின்னல், இடி இவைகள் நம்மை தாக்காமல் இருக்க கழுக்குன்றத்து ஈசனை நினைத்து வழிபட்டாலே போதும். மலைக் கோவில் அடிவாரத்தில் இரண்டு விநாயகர்கள் தனித்தனி சன்னிதியில் வீற்றிருக்கின்றனர். பூரணை புஷ்கலா தேவி சமேதராக சாஸ்தாவும் எழுந்தருளியுள்ளார்.
கழுகுகளுக்கு விமோசனம் :
கிருதயுகத்தில் சிரவர முனிவரின் மகன்களான சண்டன், பிரசண்டன் தீய குணங்களுடன் இருந்தனர். அடுத்தடுத்து வரும் யுகங்களில் கழுகாய் பிறந்து, கலியுகத்தில் கழுக்குன்றத்து ஈசனை வழிபட்டு சாப விமோசனம் அடையலாம் என அறிந்து, அவ்விருவரும் கழுகாகப் பிறந்து தினமும் காலையில் காசி விஸ்வநாதரையும், பகலில் கழுக்குன்ற நாதனையும், இரவில் ராமேஸ்வரத்து மகாதேவரையும் வணங்கி, மறுநாள் காலை காசி என ஈசனை வழிபட்டு வந்தனர். இதில் பகலில் திருக்கழுக்குன்ற ஈசனை வழிபட்டு, பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் தரும் நைவேத்தியப் பிரசாதத்தையும் அக்கழுகுகள் உண்டு வந்தன. சிறிது நாட்களில் அக்கழுகுகள் சாபம் நீங்கப்பெற்றன.
வேதங்களே இங்கு மலையாக இருப்பதால் இத்தலத்தில் கிரிவலம் செய்வது சிறப்பாகும். புத்திர பாக்கியத்துக்கான பிரார்த்தனை தலமாக இது உள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அல்லது பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது உகந்தது. 48 நாட்கள் அதிகாலை வேளையில் திருக்கழுக்குன்ற மலையை வலம் வந்து வேதகிரீஸ்வரரை வழிபட்டால் புத்திரப் பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மாணிக்கவாசகருக்கு இத்தல இறைவன் தனது பற்பலத் திருக்கோலங்களைக் காட்டி குருவடிவாக காட்சியளித்துள்ளார். பிரகஸ்பதி இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார்.
தாழக்கோவில் :
மலைக் கோவிலில் வேதகிரீஸ்வரராக அமர்ந்த ஈசன், பக்தர்களுக்காக மலையின் கீழே தனிக்கோவிலில் பக்தவச்சலேஸ்வரராக அருள்பாலிக்கிறார். அருகிலேயே பார்வதி தேவிக்காக காட்சியளிக்கும் பொருட்டு மலைக்கோவிலில் வேதகிரீஸ்வரரே பிரத்யட்ச வேதகிரீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். இந்தக் கோவிலை ‘தாழக்கோவில்’ என்று அழைக்கின்றனர். இந்த கோவிலில் அம்பாள் திரிபுரசுந்தரி என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார்.
இந்த ஆலயத்தில் நெடிதுயர்ந்த நான்கு கோபுரங்கள் உள்ளன. இதில் வடக்கு கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. மேற்கு கோபுரம் 6 நிலைகளையும், கிழக்கு மற்றும் தெற்கு கோபுரங்கள் 7 நிலைகளைக் கொண்டது. கிழக்கு கோபுரமே ராஜ கோபுரமாகும். ராஜ கோபுரத்தின் உள்ளே கோபுரச் சுவரில் திருவண்ணாமலையைப் போல் கோபுரத்து கணபதி உள்ளார்.
சனி பகவான் வழிபாடு :
கோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால் பதினாறு கால் மண்டபம் உள்ளது. அதில் உள்ள சனிபகவான் சிலை அழகு. இவரை சனிக்கிழமைகளில் 5 நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 5 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் சகல விதமான சனிக்கிரக தோஷங்களும் அகலும்.
அடுத்ததாக நான்கு கால் மண்டபம் உள்ளது. அதன் இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர். இருவரையும் வணங்கி நிமிர்ந்தால், 5 நிலை கொண்ட உள்கோபுரத்தைத் தரிசிக்கலாம். அங்கிருக்கும் அனுக்கிரக நந்திகேஸ்வர தம்பதியரை வணங்கி உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், நந்தி உள்ளது. அருகில் அகோர வீரபத்திரர் உள்ளார். இவருக்கு பவுர்ணமி நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது சிறப்பாகும். அப்படியே உள்ளே நுழைந்தால் மூலவர் பக்தவச்சலேஸ்வரரை தரிசிக்கலாம்.
சுயம்பு அம்பாள் :
இத்தல அம்பாள் திரிபுரசுந்தரி சுயம்புவாய் தோன்றியவள். இதனால் வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் அம்மனின் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். நான்கு திருக்கரங்களுடன், கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அம்பாள் வீற்றிருக்கிறார். அம்மன் சன்னிதியின் எதிரில் தனியாக கொடி மரமும், பலிபீடமும் இருக்கிறது.
சங்கு தீர்த்தம்:
மிகப் பழமையான கோயில். நாற்புறமும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன – கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம். கோயிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சந்நிதிக்கு நேர் எதிரில் வீதியின் கோடியில் மிக்க புகழுடைய ‘சங்கு தீர்த்தம்’ உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இதிற்கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்துதந்ததாகவும், அதுமுதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பது மிகவும் விஷேசமாகும்.
சங்கு தீர்த்தம் – பெரிய குளம். ஒரு பாதி படித்துறைகள் மட்டுமே செம்மையாக்கப்பட்டுள்ளன. நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன.
செங்கல்பட்டு, திருப்போரூர், கல்பாக்கம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கழுக்குன்றம் திருத்தலம்.
800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக்கோவில், ஆசியாவிலேயே ராஜகோபுரத்துடன் தனி மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் ஒரு சில ஆலயங்களில் ஒன்றாகும்.
நெல்லை சந்திப்பில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மணிமூர்த்தீஸ்வரம். இங்கு விநாயகப்பெருமானுக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. தாமிர பரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்து உள்ள இந்தக் கோவிலின் மூலவரான விநாயகப்பெருமான், நீல சரஸ்வதியை தன் மடியில் அமர்த்தி வைத்தப்படி காட்சி தருகிறார். தன்னுடைய 32 தோற்றங்களில் 8-வது வடிவமாக போற்றப்படும் உச்சிஷ்ட கணபதியாக இத்தலத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார்.
800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக்கோவில், ஆசியாவிலேயே ராஜகோபுரத்துடன் தனி மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் ஒரு சில ஆலயங்களில் ஒன்றாகும். 8 நிலை மண்ட பங்கள், 3 பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இந்தக் கோவிலில் சிவலிங்கம், காந்திமதி அம்மன், 16 சோடஷ கணபதிகள், கன்னி மூல கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இந்த ஆலயத்திற்கு ரிஷி தீர்த்தம், ருத்ரபாத தீர்த்தம் என்ற இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. வன்னிமரம், பனைமரம் ஆகிய இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன.
கோவில் தல வரலாறு :
முன்னொரு காலத்தில் வித்யாகரன் என்ற அரக்கன் பிரம்மாவை நினைத்து கடுந்தவம் புரிந்தான். பிரம்மாவும், வித்யாகரனுக்கு காட்சி அளித்து வரம் தருவதாக கூறினார். அப்போது வித்யாகரன், ‘என்னைப் போரில் வெல்லக்கூடியவன் மனிதனாகவோ, மிருகமாகவோ இருக்கக்கூடாது. அகோரமானவனாகவும் இருக்கக்கூடாது. தேவ அசுர சபைகளின் முன்பு யாருடைய உதவியும் இல்லாமல் என்னுடன் போரிட வேண்டும். அந்த சமயம் அவன், தனது சக்தியுடன் இணைந்த கோலத்தில் இருக்க வேண்டும்’ என தன்னை யாரும் அழிக்க முடியாத ஒரு அரிய வரத்தை கேட்டான்.
பிரம்மாவும் வித்யாகரன் கேட்ட வரத்தை வழங்கினார். வரம் பெற்ற வித்யாகரன், தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகங்காரத்துடன் தேவர்கள், முனிவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி, அவர்களுக்கு பல்வேறு துன்பங்களைக் கொடுத்தான். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றுகூடி மும்மூர்த்திகளிடம் சரண் அடைந்தனர்.
மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்து பராசக்தி மாதாவான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியை மனதில் நினைத்து மிகப்பெரிய யாகத்தினை நடத்தினர். மேலும் வித்யாகரனை அழிக்க விநாயகரை வேண்டினர். விநாயகரும் ஒப்புக்கொண்டு யாகத்தின் முடிவில் யாகத்தீயில் இருந்து அஷ்டமி திதியில் வெளிப்பட்டார். அதேபோல் பிரம்மாவின் ஏற்பாட்டால் பதங்க முனிவர் வேள்வி நடத்த, அதில் இருந்து பிரம்மாவின் மகளாக நீல சரஸ்வதி வெளிப்பட்டாள். விநாயகருக்கு நீல சரஸ்வதி தேவியை நவமி திதியில் திருமணம் செய்து வைத்தனர்.
மும்மூர்த்திகளும் இந்திரனிடம், வித்யாகரனை போருக்கு அழைக்குமாறு கூறினர். வித்யாகரனும் கோபத்துடன் போரிட வந்தான். அவன் கர்ஜனையுடன் வரும்போது உச்சிஷ்ட கணபதி, தனது மனைவியான நீல சரஸ்வதி தேவியை தனது இடது தொடையில் அமர செய்து, தன் இரு கைகளால் அணைத்த வண்ணம் துதிக்கையை தேவியின் மடியில் வைத்து அதே கோலத்துடன் பாசம், அங்குசம் இருக்கும் கைகளில் வில்லும், அம்பும் ஏந்தியபடி இருந்தார். அப்போது விநாயகர் ஒரு கோடி சூரியனுடன் இணைந்து வந்தது போல் ஒளிப் பிரகாசமாக காட்சியளித்தார்.
விநாயகரை பார்த்த வித்யாகரன், அவருடைய ஒளிக்கதிர் வீச்சு தாங்காமல் அவன் நாக்கை அவனே கடித்துக்கொண்டு வலியால் துடித்து இறந்து போனான். அவன் வாங்கிய வரத்தின்படியே அசுரர்கள், தேவர்கள் கூடிய சபையிலே உச்சிஷ்ட கணபதி யாருடைய உதவியும் இல்லாமல், தேவியுடன் இருக்கும்போது போரிடாமல் விநாயகருடைய பார்வையினாலேயே அவனை வதம் செய்தார்.
வித்யாகரன் இறந்ததும் அனைவரும் மகிழ்ந்து விநாயகரை வணங்கினார்கள். முனிவர்கள், விநாயகரிடம் பராசக்தியின் அவதாரமான நீல சரஸ்வதி தேவியை தனது மடியில் இருத்திய கோலத்துடன், பூமியில் தாமிரபரணி நதிக்கரை ஓரம் ரிஷி தீர்த்தக்கட்டம் அருகே வீற்றிருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார்கள். விநாயகரும் அதற்கு இசைந்து, சூரிய பகவானின் தேரில் ஏறி தாமிரபரணி நதிக்கரையில் மணிமூர்த்தீஸ்வரத்தில் முனிவர்களுக்கு காட்சியளித்து அருளினார்.
சூரிய பகவான், விநாயகரை வணங்கி, ‘நான் ஒவ்வொரு சித்திரை மாதமும் முதல் நாள் அன்று தங்கள் மேல் எனது ஒளியை விழச்செய்து வணங்கி ஆசி பெறுவேன். அன்றைய தினம் தங்களை உள்ளன்போடு வழிபடுகின்றவர்களுக்கு, சகல செல்வங்களையும் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார். உச்சிஷ்ட கணபதியும் அவ்வாறே அருளினார் என்கிறது, இந்த ஆலயத்தின் தல வரலாறு.
உச்சிஷ்ட கணபதி மூலவராக, மூர்த்தி விநாயகர் என்ற பெயரில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் காட்சியளிக் கிறார். அவர் தனது மனைவியான நீல சரஸ்வதி தேவியை மடியில் வைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் சுற்றிலும் கோட்டைச்சுவருடன் கம்பீரமாக அமைந்து உள்ளது இந்தத் திருக்கோவில். கோபுரத்தின் முன்புறமும், பின்புறமும் 16 வகையான விநாயகர் உருவங்கள், அமர்ந்த மற்றும் நின்ற கோலங்களில் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள் உயர்ந்த கொடி மரம், பலி பீடத்துடன் அமைந்துள்ளது. கொடி மண்டபத்திற்கு வடக்கு பக்கம் சொர்ண ஆகர்ஷன பைரவர் சன்னிதியும், அதற்கு முன்பாக பைரவ தீர்த்தம் உள்ள கிணறும் இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
விநாயகர் தன் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால் கணவன்-மனைவி ஒற்றுமை, சந்தோஷம், திருமணத்தடை நீக்குதல், பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்தல் ஆகிய வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறுகிறது என்பது இக்கோவிலின் சிறப்பாகும்.
பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், பேரையூர் நாகநாத சுவாமி கோவிலுக்கு வந்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்து உள்ள முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது பேரையூர் நாகநாத சுவாமி கோவில். புதுக்கோட்டை-பொன்னமராவதி வழித்தடத்தில் புதுக்கோட்டையில் இருந்து 13-வது கிலோ மீட்டரில் அமைந்து உள்ளது இக்கோவில். மெயின் ரோட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் வடக்கே பயணித்து கோவிலுக்கு செல்ல வேண்டும்.
தற்போது உள்ள மூலக்கோவில் கி.பி. 12-13-ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். கருவறையின் வெளிச்சுவற்றில் உள்ள மாடங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தியும், மேற்கே லிங்கோத்பவரும், வடக்கே பிரம்மாவும் அலங்கரிக்கின்றனர். கோவில் விமானம் பிற்காலத்தில் செங்கல்லினால் கட்டி புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
கோவில் அமைப்பு :
கருவறையின் முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சுரங்கப்பாதை எங்கே செல்கிறது என்பது தெரியவில்லை. இது, போர்க்காலங் களில் கோவில் சிலைகளையும், சொத்துக்களையும் மறைத்து வைக்க தரைமட்டத்திற்கு கீழ் கட்டப்பட்ட சிறிய அறையாக இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.
இந்த கோவில் வளாகத்தில் காலத்தால் முற்பட்டது மேலக்கோபுரமாகும். இதன் கட்டுமான அமைப்பைக்கொண்டு இது கி.பி.11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதலாம். மேலும் இங்கு ராஜேந்திர சோழன் காலத்து (கி.பி.1012-44) கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. ஆகவே இங்குள்ள (மூல) கோவிலும், இக்காலத்திலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் 12-13-ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். கிழக்கு கோபுரம் காலத்தால் பிற்பட்டதாகும். இது பிற்கால பாண்டியர்கால கட்டுமானமாகும். கோவிலில் உள்ள பிற மண்டபங்களும் காலத்தால் பிற்பட்டவையாகும்.
இங்குள்ள அம்மன் சன்னிதியின் அமைப்பைக்கொண்டு இது விஜயநகர மன்னர்களின் ஆட்சி காலத்தில் (15-16-ம் நூற்றாண்டு) கட்டப்பட்டதென தெரிய வருகிறது. அம்மனின் பெயர் ஸ்ரீபிரகதாம்பாள். கோவிலில் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், அறந்தாங்கி தொண்டமான் மன்னர்கள், பல்லவராயர் ஆகியோரது கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. காலத்தால் முற்பட்ட கல்வெட்டு ராஜேந்திர சோழன் காலத்தை சேர்ந்ததாகும்.
பல்லவராயர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தபோது இவ்வூர் ‘பேரையூர் நாடு’ என சிறப்புடன் விளங்கியது. பல்லவராயருள் புகழ்மிக்க சிவந்தெழுந்த பல்லவராயர் இக்கோவில் இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார்.
நாகநாதர் சுவாமி :
பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் இக்கோவிலுக்கு வந்து தாங்கள் அணிந்துள்ள ஆடைகளுடன் நீராடி அந்த ஆடைகளை அங்குள்ள தீர்த்த குளத்தில் விட்டு விட்டு வேறு ஆடை அணிந்து கொண்டு நாகநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஐந்து தலைகளுடன் கூடிய நாகச்சிற்பங்களை(கல், வெள்ளி, தங்கத்தில்) காணிக்கையாக வைத்து செலுத்துகின்றனர். பக்தர்கள் இவ்வாறு வைத்துள்ள ஆயிரக் கணக்கான கல்லினால் ஆன நாக சிற்பங்கள் கோவில் வளாகம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது.
இந்த கோவிலில் ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் பங்குனி மாதத்தில் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் மட்டம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும். அப்போது கடவுள் வழிபாட்டின்போது இசைக்கப்படும் இசைக்கருவிகளின் ஒலி கேட்பதாக சொல்லப்படுகிறது. பூமிக்கு கீழ் ஆதிசேஷன் நடத்தும் வழிபாட்டு நிகழ்ச்சியின் ஒலியாகும் இது என கோவிலின் கர்ண பரம்பரை கதை தெரிவிக்கிறது.
கோவிலின் அமைப்பை பொதுவாக காணும்போது இது பல முறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிகிறது. 1995-ல் தொண்டைமான் மன்னர் ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி தெரிவிக்கிறது.
திருவிழாக்கள் :
வழக்கமான சிவன் கோவில்களில் நடைபெறும் பூஜைகள் இந்த கோவிலிலும் நடைபெறுகிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் வந்து நாகருக்கு பால் அபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்து தங்களது தோஷம் நிவர்த்தியாக வேண்டி வழிபட்டு செல்கிறார்கள்.
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் பஸ்சில் ஏறி பேரையூர் விலக்கு என்ற இடத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து ஆட்டோக்களின் வாயிலாக கோவிலுக்கு செல்லலாம். மெயின் ரோட்டில் இருந்து கோவில் அமைந்துள்ள 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தும் செல்லலாம். இதேபோல் காரைக்குடி, மதுரை பகுதிகளில் இருந்து இக்கோவிலுக்கு பஸ் மற்றும் ரெயில் மூலம் வரும் பக்தர்கள் நமணசமுத்திரத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து பேரையூர் கோவிலுக்கு செல்லலாம். ஆட்டோ, டவுன் பஸ் வசதியும் உண்டு.
கோவில் முகவரி :
அருள்மிகு நாகநாதர் கோவில்
பேரையூர் - 622422
புதுக்கோட்டை மாவட்டம்
கோவில் பற்றிய தகவல்களை பெற இந்த +91-4322-221084, 9486185259 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முத்து + ஆற்று + அம்மன், உடம்பில் உள்ள அம்மை முத்துக்களை ஆற்றும் அம்மன் முத்தாரம்மன்.
அகத்தியரின் சாபத்தால் வரமுனி என்ற முனிவர், எருமைத் தலையும், மனித உடலும் கொண்ட ‘மகிஷ’ உருவத்தில் அழையும்படி ஆனது. அசுர குலத்தில் பிறந்த மகிஷன், கடுமையான தவம் இருந்து சிவபெருமானிடமும், பிரம்மதேவரிடமும் பல வரங்களை வரமாகப் பெற்றான். அந்த வரங்களின் காரணமாக அவன் தேவர் களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
சிவபெருமான், பார்வதி தேவியை உதவி புரிய கோரினார். இதையடுத்து அன்னை தேவர்களுக்கும், முனிவர்களுக்கு அபயம் அளிக்க முன்வந்தாள். பின்னர் மகிஷா சுரனை வதம் செய்வதற்காக ஒன்பது நாட்கள் தவமிருந்து, பத்தாம் நாளில் காளி வடிவம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தாள்.
தசரா திருவிழா :
இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் ‘தசரா திருவிழா’ வெகு சிறப்பாக நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் 9 நாட்கள் அம்மன் தவம் செய்யும் நிகழ்வும், 10-ம் நாளான விஜயதசமி அன்று, மகிஷாசுரனை அன்னை வதம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகின்றன. இந்த விழாவிற்காக பக்தர்கள் பலர் காப்பு கட்டி, பல்வேறு வேடங்கள் தரித்து அம்மனுக்கு விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது.
புரட்டாசி மாத அமாவாசை கழிந்த மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது ‘தசரா திருவிழா’. மைசூர், உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் நடைபெறும் தசரா விழாவைப் போன்று தமிழகத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலயம் சிறப்புக்குரிய இடமாக உள்ளது. இந்த ஆலயத்தில் ஒரே பீடத்தில் வடக்கு திசை நோக்கி ஈசன் ஞானமூர்த்தீஸ்வரராகவும், அம்பாள் முத்தாரம்மனாகவும் சுயம்புவாக இருந்து அருள்பாலித்து வரு கிறார்கள்.
தல வரலாறு :
குலசேகரப்பாண்டியன் என்னும் மன்னனே இந்த கோவிலை கட்டியுள்ளான். மேலும் இந்த ஊரில் உள்ள அறம் வளர்த்த நாயகி சமேத கச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவிலையும் இந்த அரசனே கட்டி முடித்துள்ளான். அக்கசாலை விநாயகர் கோவில், விண்ணகரப் பெருமாள் கோவில், சிதம்பரேஸ்வரர் கோவில், வீரகாளி, பத்ரகாளி, கருங்காளி, முப்புடாதி, உச்சினி, மகாகாளி, அங்காளம்மன், ஈஸ்வரி அம்மன், வண்டி மறித்த அம்மன் என அஷ்ட காளி கோவில்களும் குலசையில் அமைந்துள்ளன.
மயிலாடியில் சிலை :
முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரரின் சுயம்பு விக்கிரகங்களை ஆரம்ப காலத்தில் வழிபட்டு வந்த பக்தர்கள், அம்மையப்பன் இருவரையும் பெரிய திருஉருவில் வழிபட விருப்பம் கொண்டனர். அப்போது கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய முத்தாரம்மன், ‘எங்கள் திருமேனியை கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி என்ற ஊரில் உள்ள சிற்பி சுப்பையா என்பவரிடம் பெற்றுக்கொள்ளுங்கள்’ என கூறி மறைந்தாள்.
அம்மனின் அருளால் சிலையை செதுக்கிய சிற்பியிடம் இருந்து அம்மையப்பனின் சிலையைப் பெற்று வந்து 1934-ம் ஆண்டு கருவறையில் பிரதிஷ்டை செய்தனர். பழைய சுயம்பு சிலைகள் தற்போது கருவறையின் அடியில் உள்ளதாக கூறப்படுகிறது. இத்தல கருவறையின் எதிரில் நின்றாலே ஆன்மிக அதிர்வுகளை பக்தர்கள் உணர்வார்கள்.
இத்தல ஞானமூர்த்தீஸ்வரர் இடது காலை மடக்கிய நிலையில் இரண்டு திருக்கரங்களுடன், வலக்கரத்தில் செங்கோலும், இடக்கரத்தில் விபூதிக் கொப்பரையும் கொண்டு அருள்பாலிக்கிறார். முத்தாரம்மன் வலது காலை மடக்கிய நிலையில் நான்கு திருக்கரங்களுடன், வலது மேல் கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் திரி சூலமும், இடது மேல் கரத்தில் நாகபாசமும், கீழ் கரத்தில் விபூதி கொப்பரையும் கொண்டுள்ளாள்.
வழிபாட்டு தெய்வங்கள் :
முத்தாரம்மனுக்கு எலுமிச்சை பழ மாலையும், செவ்வரளி மாலையும் உகந்தவையாகும். ஆலய மகா மண்டபத்தில் கருப்பசாமி, பேச்சியம்மன், பைரவர் சன்னிதிகள் உள்ளன. பேய், பிசாசு, காத்து கருப்புகளை நம்மை அண்ட விடாது கருப்பசாமி காத்தருள்வார். மூன்று வயதாகியும் சரியாக பேச்சு வராத குழந்தைகளை இந்த தலத்திற்கு அழைத்து வந்து பேச்சியம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.
இங்குள்ள பைரவரை அஷ்டமி நாட்களில் மாலை வேளையில் நெய் தீபம் ஏற்றி, வில்வ இலையால் அர்ச்சித்து, உளுந்துவடை மாலை சாற்றி வழிபட்டால் வறுமை அகலும். வளங்கள் பெருகும். கோவில் பிரகாரத்தை வலம் வரும் போது, விநாயகர், துர்க்கை, அர்த்த நாரீஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகிய தெய்வங்களையும் வழிபடலாம்.
அம்மை நோய் :
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் சக்தியாக முத்தாரம்மன் வீற்றிருக்கிறாள். குறிப்பாக அம்மை நோய். உடலில் அம்மை நோய் முத்து முத்தாக இருந்தால், ஆமணக்கு விதை வாங்கி அம்மனுக்கு காணிக்கை செலுத்து கின்றனர்.
பொடிப் பொடியாக இருந்தால் அரிசியும், தடிமனாக இருந்தால் பூசணிக்காயும் வாங்கி முத்தாரம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்கு உடனடி பலன் கிடைப்பதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். முத்து + ஆற்று + அம்மன், உடம்பில் உள்ள அம்மை முத்துக்களை ஆற்றும் அம்மன் முத்தாரம்மன்.
செவ்வாய் தோஷம் நீங்க செவ்வாய்க்கிழமையில் அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை கிடைக்கும். ராகு தோஷம் அகல செவ்வாய்க் கிழமையில் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும். எலுமிச்சை பழத்தின் மேற்புறத்தில் துவாரமிட்டு, சாற்றை எடுத்து விட்டு, அதனுள் சிறிது நெய்விட்டு, திரியிட்டு எலுமிச்சை பழ தீபமேற்ற வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள். ஆடி மாதம் 3-ம் செவ்வாய் அன்று திருவிழா நடைபெறும். சித்திரை வருடப் பிறப்பில் சிறப்பு வழிபாடு உண்டு. தசரா எனப்படும் நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்தி பெற்றதாகும்.
தினம் ஒரு அலங்காரம் :
புரட்டாசி மாத அமாவாசை அடுத்து வரும் பிரதமை திதியில் கொடியேற்றத்துடன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடங்குகிறது. நவராத்திரி விழாவின் முதல் நாள் முத்தாரம்மன் துர்க்கையாகவும், இரண்டாம் நாள் விஸ்வகர்மேஸ்வரராகவும், மூன்றாம் நாள் பார்வதிதேவியாகவும், நான்காம் நாள் பாலசுப்பிரமணியராகவும், ஐந்தாம் நாள் கிருஷ்ணராகவும், ஆறாம் நாள் மகிஷாசுரமர்த்தினியாகவும், ஏழாம் நாள் நடராஜராகவும், எட்டாம் நாள் மகாலட்சுமியாகவும், ஒன்பதாம் நாள் சரஸ்வதியாகவும் காட்சி தந்து வீதி உலா வருவாள்.
பத்தாம் நாள் விஜயதசமி அன்று இரவு 11 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், சூரசம்ஹாரத்துக்குக் கொண்டு செல்லப்படும் சூலத்துக்கும் பூஜைகள் நடைபெறும். இரவு 12 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் ஆலயத்துக்கு முன்பாக எழுந்தருள்வாள். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பின்னர் முத்தாரம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு சூரனை சம்ஹாரம் செய்ய, சுற்றிலும் வாண வேடிக்கை நிகழ்த்தப்படும். தொடர்ந்து முத்தாரம்மன் திருத்தேர் மற்றும் பூச்சப்பரத்தில் வீதி உலா வருவாள். இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவர்.
இந்த ஆண்டுக்கான தசரா விழா 2-10-2016 அன்று தொடங்குகிறது.
திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றத் தலமாக விளங்கும் திருப்பாம்புரத்தில், ராகுவும்- கேதுவும் ஏக சரீரம் எனப்படும் ஓருடலாய் இணைந்து வீற்றிருப்பது சிறப்புக்குரியதாக உள்ளது.
மனிதர்களுக்கு சில பழக்கங்கள், வழக்கங்களாக மாறிப்போய் விட்டால், அந்தப் பழக்கத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும், அவை அவர்களை விட்டு விலக மறுக்கின்றன. அப்படிப்பட்ட பழக்கங்களில் ஒன்றுதான் மது குடிக்கும் பழக்கம். கடைசியில் அதற்கு அடிமையாகி உடல் நலம், மன நலம், வாழ்க்கை வளம் எல்லாவற்றையும் தொலைத்து நிர்க்கதியாக நிற்க வைத்து விடுகிறது. மது என்பது மகிழ்ச்சியில் மின்னி, துயரத்தில் தொலைவது என்று சொன்னால் மிகையல்ல.
மதுவுக்கு அடிமையானவர்கள் இறுதியில் மது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்து விடுகிறார்கள். சமுதாயத்தில் கவுரவம், பணம் எல்லாவற்றையும் இழந்து தனது குடும்பத்தில் இருந்து தனித்து விடப்படுகின்ற அவலம் இன்று பெருகி விட்டது.
அதுமட்டுமல்ல அவர்களது உடலில் நரம்புத் தளர்ச்சி, மூளை ஒருங்கிணையாமை, கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட்டு கடைசியில் மரணத்தையே அரவணைக்கும் அவலம் ஏற்படுகிறது.
இன்று மது அடிமை மறுவாழ்வு மையங்கள் வந்து அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் மட்டுமல்லாது, மனோதத்துவ ரீதியிலும் சிகிச்சை அளித்து மதுவினை மறக்க வைக்க முயல்கிறார்கள்.
ஆன்மிக முறையில் போதைப் பழக்கம் ஒழியுமா? என்றால் முடியும் என்கிறார்கள் சில ஆன்மிக ஆன்றோர்கள்.
ராகு- கேது போன்ற சர்ப்ப கிரகங்கள் ஜாதகத்தில் சரியான இடத்தில் இல்லாமல் தோஷம் இருந்தால் அவர்கள் மனநிலையில் ஒரு தெளிவில்லாமல் இருப்பார்கள். அதற்கு நாக தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் என்பது சிலரின் கூற்றாக உள்ளது.
ஏக சரீர ராகு-கேது :
ராகு - கேது திருநாகேஸ்வரம், பெரும்பள்ளம் போன்ற தலங்களில் தனித்தனியாக இருக்கிறார்கள். காளகஸ்தி போன்ற புகழ்பெற்ற திருக்கோவில்களில், சிவபெருமானே ராகு-கேதுக்களாக வீற்றிருந்து பக்தர்களின் தோஷம் நீக்கி அருள்பாலிக்கிறார்.

திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றத் தலமாக விளங்கும் திருப்பாம்புரத்தில், ராகுவும்- கேதுவும் ஏக சரீரம் எனப்படும் ஓருடலாய் இணைந்து வீற்றிருப்பது சிறப்புக்குரியதாக உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இது 122-வது தலமாகும். மேற்கு பார்த்த சன்னிதியில் இருந்து இறைவனை நெஞ்சில் நிறுத்தி வணங்கிய நிலையில் ராகு-கேது உள்ளனர். இருவரும் ஒருவராய் வீற்றிருப்பதால், மற்ற நாக பரிகார தலங்களைக் காட்டிலும், இந்தத் தலம் சிறப்புக்குரியதாக விளங்குகிறது.
இத்தல இறைவன் பாம்புரேஸ்வரர் என்றும், பாம்புரநாதர் என்றும், சேஷபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். நாகராஜனான ஆதிசேஷன் மட்டுமல்லாது அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் எனும் அஷ்ட நாகங்களும் வழிபட்ட சிறப்புக்குரிய தலம் இதுவாகும்.
பாம்புரேசுவரர் வீற்றிருக்கும் விமானத்தின் அருகே, திருமலை ஈசுவரர் சன்னிதி படிக்கட்டு களுடன் இருப்பது சிறப்பு. சுவாமிக்கு இடதுபுறம் வண்டார்குழலி என்ற பெயரில் அம்பிகை நின்ற கோலத்தில் அருள்மழை பொழிகிறாள். அவளது சன்னிதிக்கு எதிரே தான் ஏக சரீர ராகு-கேது சன்னிதி அமைந்துள்ளது.
திருக்கோவிலின் பின்புறம் தல விருட்சமாக பெரிய வன்னி மரம் உள்ளது. அந்த மரத்தின் அடியில் வன்னி ஈஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக் கிறார். இந்த வன்னி மர ஈஸ்வரரை, பிரார்த்தனை செய்து கொண்டு மஞ்சள் துணியில் முடிச்சு போட்டு மரத்தில் கட்டி தொங்க விட்டால், எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. காள சர்ப்ப தோஷம், ராகு- கேது சதுர்த்தி உள்ளவர்கள், இந்த தோஷங்களால் திருமணம் மற்றும் குழந்தை பேறு தடை உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
பரிகாரம் :
மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு பரிகாரம் இந்த ஆலயத்தில் செய்யப்படுகிறது. மது பாதிப்பு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, இந்த ஆலயத்திற்கு எதிரே உள்ள சேஷ தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் கோவிலுக்குள் சென்று சுவாமியையும், அம்பாளையும் பிரார்த்தனை செய்து விட்டு, ராகு- கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் பலர் மது மயக்கத்தில் இருந்து மாறுதல் அடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கு நம்பிக்கைதான் முக்கியம் என்றும் சொல்கிறார்கள்.
தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு முறை இந்தத் திருத்தலத்திற்கு சென்று வரலாமே.
அமைவிடம் :
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பாம்புரம் திருத்தலம். குடந்தை- காரைக்கால் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரில் இருந்து 4 கிலோமீட்டர் தூரம் வயல் பாதையில் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.