என் மலர்
கோவில்கள்
தஞ்சாவூர் பெரிய கோவில் ஆலயக் கோபுரம், விமானம் மட்டுமல்ல.. சுவாமி, அம்பாள், நந்தி என அனைத்து சிலைகளும் அளவில் மிகப்பெரியவை.
ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரம், மாமன்னன் ராஜராஜசோழனின் அவதார திருநாள் ஆகும். கல்லிலே கலை வண்ணம் மட்டுமின்றி, கடவுளையும் புகுத்தி அகிலம் காக்கும் ஈசனுக்கு மிகப்பெரிய ஆலயம் அமைத்தவன். தஞ்சாவூர் பெரிய கோவில் ஆலயக் கோபுரம், விமானம் மட்டுமல்ல.. சுவாமி, அம்பாள், நந்தி என அனைத்து சிலைகளும் அளவில் மிகப்பெரியவை.
திருநாவுக்கரசர் தேவாரத்தில் போற்றிப்பாடியுள்ள தஞ்சாவூர் தளிக்குளத்து ஈசன் கோவிலையே, ராஜராஜ சோழன் மாற்றி அமைத்து பெரிய கோவிலாக்கினான் என்று கூறப்படுகிறது. இந்த கலிகாலத்தில் நமக்கு ஏற்படும் இன்னல்களை அகற்றப் பரிகாரமாகப் பயன்படுபவை, தேவாரப் பதிகங்கள். அந்தப் பதிகங்களை சிதம்பரம் கோவிலின் மூடிக்கிடந்த அறையில் இருந்து எடுத்து வந்து நமக்கு அளித்தவன் ராஜராஜ சோழன்.
கி.பி.1003-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பெரிய கோவில் அமைக்கும் பணி, 1009-ம் ஆண்டு முடிவடைந்தது. கோவிலைச் சுற்றிலும் மதில் சுவரும், அகழியும் அமைக்கப்பட்டது. கோட்டை போல் இருக்கும் கோவிலின் நுழைவு வாசலுக்கு ‘கேரளாந்தகன் திருவாயில்’ என்று பெயர். அதனைக் கடந்தால் ‘ராஜராஜன் திருவாயில்’. இந்த இரண்டு வாசல்களையும் கடந்து சென்றால், மிகவும் விசாலமான பரந்த வெளியில் ஆலயம் அமைந்துள்ளது.
இத்தல விநாயகர் கன்னி விநாயகர். ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. வலது கையில் உலக்கையுடனும், இடது கையில் கலப்பையுடனும் காட்சி தருகிறார் வராகி அம்மன். கன்னி விநாயகருக்கு அடுத்த மரியாதை-பூஜை இந்த அம்மனுக்கே. பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபட்டால் வறுமை, பிணி, பில்லி, செய்வினைகள் அகலும். எதிரிகள் விலகுவர் என்பது ஐதீகம்.
மூலவர் கருவறையின் நேர் எதிரில் நந்தி மண்டபம் உள்ளது. இந்த நந்தி ஒற்றைக் கல்லால் ஆனது. 12 அடி உயரம், 19½ அடி நீளம், 8¼ அடி அகலம் கொண்டது. இந்த நந்தியை தரிசித்து விட்டு, மூலவரை தரிசிக்கச் செல்லும் வழியில் சிறிய வடிவில் பைரவர் காட்சியளிக்கிறார். இவரை அஷ்டமி நாட்களில் உளுந்து வடை மாலை சாத்தி, நெய் தீபமிட்டு வழிபட்டால் கல்வியும், செல்வமும் நம்மை நாடி வரும்.
கருவறையில் பெருவுடையார் என்னும் பிரகதீஸ்வரர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்தின் உயரம் 13 அடி. அதன் கீழ் பகுதியான வட்டவடிவ பகுதியின் சுற்றளவு 54 அடியாகும். சுமார் 25 ஆயிரம் கிலோ எடை கொண்டது இந்த சிவலிங்கம். பிரகதீஸ்வரரை தரிசித்த மாத்திரத்திலேயே நமது கவலைகள், வறுமைகள், பிணிகள் அகன்று விடுவதை அனுபவத்தில் உணரலாம். வர்ணிக்க முடியாத கன கம்பீரமான, அழகான, எடுப்பான தோற்றத்தில் ஈசன் அருள்பாலிக்கிறார். இந்த பிரகதீஸ்வரரை பிரதிஷ்டை செய்தவர், பதினெண் சித்தர்களில் ஒருவரான கருவூரார். கோவிலின் மேற்கு பிரகாரத்தில் கருவூர்த் தேவருக்கு சிறிய கோவில் உள்ளது. இவர் பாடிய ‘திருவிசைப்பா’ பதிகம் பெருவுடையார் மீது பாடப்பட்டுள்ளது. கருவூர் சித்தரின் சன்னிதியில் வியாழன் தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
பிரகதீஸ்வரர் கோவிலின் பக்கச் சுவர்களிலும், மாடங்களிலும் சந்திரசேகரர், பிட்சாடனர், சூல தேவர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்த நாரீஸ்வரர், கங்காதரர், கல்யாண சுந்தரர், மகிஷாசுரமர்த்தினி, மகாலட்சுமி முதலியோர் அருள்பாலிக்கிறார்கள். இங்குள்ள சுப்பிரமணியர், அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றவர். சண்டிகேஸ்வரரும் பெரிய தனிச் சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார்.
இத்தல அம்பிகை பெரியநாயகி, 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நவராத்திரியில் அம்பாளுக்கு தினமும் ஒவ்வொரு அம்மன் வடிவில் அலங்காரம் செய்யப்படுகிறது. நவராத்திரியில் இத்தல அம்மன் முன் அமர்ந்து, இரவில் ‘அபிராமி அந்தாதி’ பாராயணம் செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். இத்தல நவக்கிரகங்களை வழிபட்டால் சகல நவக்கிரக தோஷங்களும் அகலும்.
இங்கு வைகாசியில் ‘ஆட்டைத் திருவிழா’ என்னும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. திருக்கார்த்திகை, ஆடிப்பூரம், சிவராத்திரி, நவராத்திரி என பல்வேறு திருவிழாக்களை தஞ்சை பெரியகோவில் கண்டாலும், அவற்றுள் மிகவும் விசேஷமான பெருவிழாவாக இருப்பது ‘ஐப்பசி சதயம் விழா’ ஆகும். ராஜராஜ சோழனின் திருஅவதார நாளே ‘ஐப்பசி சதயம்’. இந்த விழாவில், ராஜராஜேஸ்வர நாடகம் பாவனையாக நடித்துக் காட்டப்படுகிறது. மேலும் அன்றைய தினம் மூலவர் பெருவுடையாருக்கு பிரமாண்ட அபிஷேகம் நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தொடர்ந்து அபிஷேக, ஆராதனை நடத்தப்படும். இரவில் சுவாமி புறப்பாடும் உண்டு.
ஐப்பசி சதயம் விழாவிலும் முதல் பூஜை வராகி அம்மனுக்குத்தான். ராஜராஜ சோழனின் குலதெய்வம் இந்த வராகி அம்மன் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ராஜராஜ சோழன் அவதார நாளான, ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தன்று, பெருவுடையாருக்கு வில்வம், வன்னி, பிச்சி, நொச்சி, சாம்பிராணி, தைலம், திரவியப்பொடி, வாசனைப் பொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், மாதுளை முத்து, பலாச்சுளை, திராட்சை, விளாம்பழம், அன்னாசி, சந்தனம், அன்னம், பன்னீர், இளநீர் உள்பட 47 வகையான அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. ஐப்பசி மாதம் நடைபெறும் அன்னாபிஷேகமும், இந்த ஆலயத்தில் நடைபெறும் முத்திரைப் பதிக்கும் விழாக்களில் ஒன்றாகும்.
தஞ்சாவூர் நகரின் மத்தியிலேயே பெரியகோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் இடமாக விளங்கும் தலங்களில் ஒன்றுதான் திருவாதவூர் திருத்தலம்.
மூளையில் இருந்து நரம்புகளுக்கு உணர்வோட்டமோ அல்லது ரத்த ஓட்டமோ இல்லாமல் நின்று போனால், அந்தந்த உறுப்புகளின் தசைகள் இயங்காமல் சோர்ந்து போய்விடும். அதனை கை, கால் வாதம் என்றும், பக்கவாதம் என்றும் கூறுகிறோம். அதற்கு மருத்துவம் செய்வதுடன், கை, கால்களுக்கு பிசியோ தெரபி என்னும் உடலியக்க பயிற்சி கொடுத்து நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறார்கள்.
வாத நோய் தீர்க்கும் தலம் :
இத்தகைய மருத்துவத்தோடு இறைவனை வழிபடுபவர்களும் உண்டு. வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் இடமாக விளங்கும் தலங்களில் ஒன்றுதான் திருவாதவூர் திருத்தலம்.
‘எங்கோ கேள்விபட்ட பெயராக இருக்கிறதே!’ என்று யோசிக்கிறீர்களா? ஆம்! திருவாதவூரர் என்னும் பெயர் பெற்ற மாணிக்கவாசகர் அவதரித்த தலம்தான் இது.
வாதவூர் என்றதும் வாத நோய் உள்ளவர்கள் உள்ள ஊர் என்பது பொருள் அல்ல. வேதங்களின் பொருளை வாதம் செய்து (ஞிமீதீணீtமீ), மெய்ப் பொருளை அறிந்த ஊர் என்று பொருள் கொள்ள வேண்டும். அதனால் தான் இத்தல இறைவன் ‘வேதநாதர்’ என்றும், ‘திருமறை நாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
சனி பகவானுக்கு, ஒரு முனிவரின் சாபத்தால் முடக்கு வாதம் ஏற்பட்டது. அவர் இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் திருமறை நாதரை வழிபட்டதன் பயனாக நோய் தீர்ந்தது என்று தல புராணம் கூறுகிறது. இந்த ஆலயத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார் சனி பகவான். அவர் ஒரு காலை மடக்கி வைத்து, மற்றொரு காலைத் தொங்கவிட்டபடி, காகத்தின் மீது அமர்ந்து அருள்பாலிக் கிறார். சனி பகவானுக்கு வாதநோய் தீர்த்த வாதவூர் பெருமான், தன்னுடைய பக்தர்களை மட்டும் காப்பாற்றாமல் விட்டு விடுவாரா என்ன?.
பரிகாரம் :
கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும். மேலும் மூல வருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, கை, கால்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் அல்லது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ச்சியாக தேய்த்து வந்தால், வாத நோய் குணமாவதாக கூறப்படுகிறது. சித்தா, ஆயுர் வேத மருத்துவத்திலும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது ஒரு வைத்திய முறையாகும். வாதநோய் குணமான பிறகு, இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து, அன்னதானம் செய்து வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.
மாணிக்கவாசகர் :
சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர், அரிமர்த்தனப் பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர். அவர் சிவன் மீதுள்ள பக்தியின் காரணமாக மன்னன் கொடுத்த பொற்காசுகளைக் கொண்டு ஆவுடையார் கோவில் என்னும் ஊரில் கோவில் அமைக்கும் பணிக்காக செலவிட்டார். அத்தகைய சிறப்புமிக்க அன்பரான மாணிக்கவாசகருக்கு, திருவாதவூரில் தனிக்கோவில் கட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அவரைத் தரிசித்து விட்டு சிறிது தூரம் நடந்து சென்றால், ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட கிழக்கு நோக்கிய சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயம்தான் திருமறை நாதர் வீற்றிருக்கும் கோவிலாகும். இதன் முன்பாக தீர்த்தக்குளம் ஒன்றும் இருக்கிறது. திருமாலுக்கு ‘மறையின் பொருள் நானே’ என்று இத்தல ஈசன் உபதேசித்தார். எனவே அவர் திருமறைநாதர் என்று பெயர் பெற்றுள்ளார். பசுவின் குளம்பு பதிந்த சுயம்புத் திருமேனியுடன் விளங்கும் எம்பெருமானை, திருமால், பிரம்மன், அக்னிபகவான், வாயு, சனீஸ்வரர் ஆகிய தேவர்கள் வழிபட்டு நற்பேறு பெற்றுள்ளனர்.
ஆரணவல்லி அம்பிகை கிழக்கு பார்த்த சன்னிதியில் இருந்து அருள்கிறார். இந்த அம்பாளுக்கு ‘திருமறை நாயகி’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவர் பிரம்மனின் வேள்வியில் தோன்றியதாகத் தல புராணம் சொல்கிறது.
தாமரை தடாகத்தில் உள்ள ஒரு மலருக்கு பசுவொன்று பால் சொரிந்து அபிஷேகம் செய்து வந்தது. இதைப் பார்த்த திருமால் அங்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு, அதற்கு பூஜை செய்தார். இதன் வாயிலாக பிருகு முனிவரிட்ட சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார் என்பது புராணக் கதை.
இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. பழமையான கோவில் என்றாலும் இத்தலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய பதிகங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் பாண்டிநாட்டு தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாக இந்த ஆலயம் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் தான் மாணிக்கவாசகருக்கு, இறைவன் சிலம்பொலி ஓசை கேட்கச் செய்தார்.
இந்த தகவலை, ‘வாத வூரினில் வந்தினிது அருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்’ என்ற திருவாசக வரிகள் எடுத்துரைக்கின்றன.
திருமண வரம், குழந்தைப் பேறு, தொழில் வளர்ச்சி போன்றவற்றிற்கும், இத்தல இறைவனை வழிபடும் பக்தர்கள் ஏராளம். பொதுவாக சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் இந்த ஆலயத்திலும் நடைபெறுகின்றன. என்றாலும் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா சிறப்புக்குரியது. இந்த விழா மாணிக்கவாசகருக்காக இறைவன் நரியை பரியாக மாற்றிய கதையை நினைவுபடுத்துகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் திருவாதவூர் திருத்தலம் அமைந்துள்ளது. மேலூரில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன. மதுரை ஒத்தக்கடையில் இருந்து வைணவ திவ்ய தேசமான சக்கரத்தாழ்வார் அருள்பாலிக்கும் திருமோகூர் சென்று, அங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் சென்றால் திருவாதவூர் ஆலயத்தை அடையலாம்.

பூரி ஜகன்னாதர் கோவிலைப் போல வடிவமைக்கப்பட்ட இந்துக் கோவில் ஒன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது.
தென்னாங்கூர் (Thennangur) தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கு பூரி ஜகன்னாதர் கோவிலைப் போல வடிவமைக்கப்பட்ட இந்துக் கோவில் ஒன்று உள்ளது. இது இந்துக் கடவுளாகிய மீனாட்சியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. தென்னாங்கூர் மாநில தலைநகரான சென்னையில் இருந்து 110 கிலோமீட்டர் (68 மைல்) தொலைவில் இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில், காஞ்சீபுரம் - வந்தவாசி சாலையில் அமைந்து உள்ளது தென்னாங்கூர். காஞ்சீபுரத்தில் இருந்து 34 கி.மீ. தூரத்தில், வந்தவாசிக்கு முன்பாக இந்த ஊர் உள்ளது.
காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் அனைத்து பஸ்களும் தென்னாங்கூர் வழியாகவே செல்லும். சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாகவும் வரலாம். உத்திரமேரூரில் இருந்து 21 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த தலம்.
இங்கு உள்ள ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீபாண்டுரங்கர் ஆலயம் நம்மை அப்படியே ஈர்த்துக் கொள்ளும். அத்தனை அழகு. பூரி ஜகந்நாதர் ஆலயம் போன்று கட்டப்பட்ட கோபுரம், நம்மை வியக்கச் செய்யும்.
ஆதிசங்கரரின் ஆம்நாய மடங்களில் ஒன்றான ஜோதிர் மட பரம்பரையில் ஆறாவது பீடாதிபதியாக விளங்கிய சத்குரு ஸ்ரீஞானாநந்த கிரி சுவாமிகளின் சீடரான ஸ்ரீஅரிதாஸ்கிரி சுவாமிகள், தன் குருஜியின் பெயரில் ஸ்ரீஞானானந்த கிரி பீடத்தையும், இந்தக் கோவிலையும், தான் பிறந்த ஊரான தென்னாங்கூரில் கட்டினார். இந்தக் கோவில் கும்பாபிஷேகம் 1996-ல் நடைபெற்றது. கோவிலின் சிறப்பு, வடக்கும் தெற்கும் சேர்ந்த கட்டிடக் கலையே.
இந்தியாவின் நான்கு நாதர்கள் (அதாவது சுயம்பு மூர்த்திகள்) பிரசித்திப் பெற்றவர்கள். தெற்கே-டோடாத்திரிநாத், வடக்கே- பத்ரிநாத், மேற்கே- பண்டரிநாத், கிழக்கே- ஜெகந்நாத் என்பார்கள். நேர்க்கோட்டில் அமைந்துள்ள இந்தத் தலங்களைச் சுற்றி வந்தாலே, மகா புண்ணியம் என்பது ஐதீகம். தவிர 1008 சிவ தலங்கள், 108 வைணவ தலங்களை தரிசித்த புண்ணியமும் வந்து சேரும்.
இங்கு, மாதந்தோறும் உற்சவம் நடைபெறுகிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் மாலை 6 மணிக்கு தங்கத் தேரில் பவனி வரும் விட்டலனைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். தமிழகத்தின் 19 தங்கத் தேர்களில், இது உயரமானது என்று சொல்கிறார்கள்.
கோவில் மூலவர் ஸ்ரீபாண்டுரங்கர் ஸ்ரீருக்மாயியுடன் தினமும் ஒவ்வோர் அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். ஸ்ரீகுருவாயூரப்பன், ஸ்ரீவேணுகோபாலன், ஸ்ரீராமர், ஸ்ரீ லட்மி நாராயணன் கோவர்த்தன கிரி, சயன அலங்காரம் காளிங்க நர்த்தனம் போன்ற அலங்காரங்களில் காட்சி தரும் ஸ்ரீபாண்டுரங்கனை தரிசித்தால், நம் பாவம் எல்லாம் பறந்தோடும். ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்யப்படும் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரம், ஏழுமலையானை கண்முன் நிறுத்துகிறது.
புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் வெள்ளித் தேரில் உற்சவம் நடைபெறும். அப்போது கருட சேவையைத் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள்.
மீனாட்சி அம்பிகை பிறந்த ஊர் தென்னாங்கூர் என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை. எனவே ஸ்ரீ மீனாட்சி அம்மைக்கும் இங்கு சந்நிதி இருப்பது விசேஷம்.

இந்த உலகில் நிலைபெற்று இருக்கும் கடவுள் என்னும் பொருளில் இத்தல இறைவனுக்கு மன்னாதீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.
கயிலாயத்தில் ஒருநாள் சிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் சிறு பேச்சு முரண்பாடு ஏற்பட்டது. சண்டையை தவிர்ப்பதற்காக, சிவபெருமான் தான் உலக உயிர்களுக்குப் படியளக்கச் செல்வதாக கூறி வெளியே சென்றுவிட்டார்.
சிவனை சோதிக்க நினைத்த பார்வதிதேவி ஒரு எறும்பைப் பிடித்து, சிமிழ் ஒன்றுக்குள் அடைத்து வைத்தார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தார் சிவபெருமான். அவரிடம், ‘உங்களின் படியளக்கும் வேலை முடிந்ததா?’ என்று கேட்டார் பார்வதி.
‘ஆமாம்’ என்று பதிலளித்தார் ஈசன்.
உடனே பார்வதிதேவி, தான் அடைத்து வைத்திருந்த எறும்பை காட்டுவதற்காக சிமிழை திறந்தார். அதற்குள் ஒரு அரிசி இருந்தது. அதை அந்த எறும்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து பார்வதிதேவி அதிர்ந்தார். ஈசனின் பெருமையை எண்ணி வியந்தார்.
அப்போது சிவபெருமான், ‘எல்லாம் சரி.. என்னை சோதிக்க ஒரு பாவமும் அறியாத எறும்பை சிறைவைத்து பாவத்தை சேர்த்துக் கொண்டாயே.. அதற்கு என்ன செய்யப் போகிறாய்’ என்றார்.
தன் தவறை உணர்ந்து வருந்திய பார்வதியிடம், ‘நேரம் வரும்போது இதற்கான தண்டனையை நீ அடைவாய்’ என்று கூறினார்.
பிருங்கி மாமுனிவர் தீவிர சிவபக்தர். அவர் சிவனை மட்டும் வழிபடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். சிவனின் அருகில் இருக்கும் பார்வதியை தவிர்த்து, சிவனை மட்டுமே வலம் வந்து வழிபட்டுச் செல்வார்.
இது பார்வதிதேவிக்கு மனக்கவலையை அளித்தது. அவர் இறைவனிடம், ‘சுவாமி! பிருங்கி முனிவர் உங்களை மட்டும் வணங்குவது என்ன நியாயம். எல்லாம் உணர்ந்த முனிவரே இப்படிச் செய்யலாமா? அவர் மீண்டும் இந்தத் தவறை செய்யாமல் இருக்க உங்கள் உடலில் சரிபாதி எனக்கு வேண்டும்’ என்று வேண்டினார்.
அதற்கு சரியான வழி தவம் ஒன்றே என்பதை உணர்ந்து சிவ பெருமானை நினைத்து தவம் இயற்ற முடிவு செய்தார் பார்வதி தேவி. இதற்காக பூலோகம் வந்த பார்வதி, இமயம் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து தலங்களிலும் நீராடி, ஈசன் குடிகொண்டுள்ள தலங்களில் எல்லாம் தரிசனம் செய்ய விரும்பினார். அவருடன், அவரது தோழியரான 64 யோகினியர் துணையாகச் சென்றனர்.
அன்னையானவள், கேதாரம், காசி போன்ற தலங்களை தரிசித்து விட்டு, உஜ்ஜயினி வந்தடைந்தார். அந்த நகரை அக்னி வீரன், ஆகாச வீரன் உள்ளிட்ட 7 சகோதரர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் பெண் பித்தர்களாகவும், அநீதி இழைப்பவர்களாகவும் இருந்தனர். பார்வதிதேவியின் படை பரிவாரங்கள் கிளப்பிய புழுதி, அந்த அசுரர்களை கோபம் கொள்ளச் செய்தது. பார்வதியின் அழகைக் கண்டு, அவளை மோகிப்பதாகக் கூறினான் அக்னி வீரன். அவனை சினந்து கடிந்த பார்வதி, சிவபெருமானை வேண்டினார். இதையடுத்து திருமால், பிரம்மா மற்றும் மகரிஷிகள், அசுவினி தேவர்கள் அவளுக்கு துணையாக வந்தனர்.
தன் சகோதரியிடம் தகாத வார்த்தை பேசிய அக்னி வீரனைக் கண்டு கோபமடைந்து, பிரமாண்ட உருவம் கொண்டார் திருமால். அவர் வான் அளவு வளர்ந்து அக்னி வீரனை அழித்தார். எனவே வான் முனி என்று அழைக்கப்பட்டார். அதுவே காலப்போக்கில் மருவி, வாழ்முனி என்று ஆனது. உடன் வந்த பிரம்மா, மகரிஷிகள் ஆகியோரும் திருமாலைப் போன்று பெரிய உருவம் கொண்டு மற்ற அரக்க சகோதரர்களுடன் போரிட்டனர். அக்னி வீரன், ரண வீரன், ரத்த வீரன் போன்றவர்கள் சாகாவரம் பெற்றிருந்ததால், அவர்களை பூமிக்குள் அழுத்தி செயல்படாதவாறு செய்தனர் மகரிஷிகள்.
அக்னி வீரனின் மகனான வீரமுத்துவிற்கு இந்த தகவல் கிடைத்தது. தன் தந்தை மற்றும் சிறு தந்தைகள் அனைவரும் துன்புறுத்தப்பட்டதை அறிந்த அவன் வெகுண்டெழுந்து போரிட வந்தான். அவனை வாழ்முனியான திருமால், அழிக்க முற்பட்டபோது, வீர முத்துவின் மனைவி குறுக்கிட்டு மடிப்பிச்சை கேட்டாள்.
இதையடுத்து அவனை அம்பிகையின் கோவில் காவலராக இருக்கும்படி உத்தரவிட்டார் திருமால். தேவர்கள் தம்மிருப்பிடம் திரும்ப, திருமால் நீ வேண்டும் போது நாங்கள் துணைக்கு வருவோம். தற்போது உனக்குத் துணையாக மகாலட்சுமி என்கிற வேங்கடமலை நாச்சியார், சரஸ்வதி எனும் பூங்குறத்தி நாச்சியார், இந்திராணி ஆகிய ஆனைக்குறத்தி, ரதி எனப்படும் முடியால் அழகி, வள்ளியாகிய வனக்குறத்தி ஆகியோர் இங்கு தங்கி இருப்பார்கள் எனக்கூறிச் சென்றார்.
பின்னர் அன்னை வடநாட்டில் ஒவ்வொரு இடமாக சிவபெருமானை நினைத்து வழிபட்டு வந்தார். பின் தமிழகத்தில் உள்ள காஞ்சி நகரின் கம்பை நதிக்கரையில் சிறிது காலம் தங்கியிருந்து தவம் இயற்றினார். அங்கிருந்து திருவண்ணாமலையில் உள்ள பவழப்பாறை என்ற இடத்திற்குச் சென்று ஈசனை நினைத்து தவம் செய்தார். அவரது தவத்திற்கு துணை நிற்க நினைத்த திருமால், வாழ்முனியாக அன்னை தவம் செய்த இடத்திற்கு வந்தமர்ந்தார். மற்ற முனிவர்களும் அவருக்கு காவலாக வந்தனர். தேவேந்திரன் தேவலோகத்தில் இருந்து யானை, குதிரை போன்றவற்றைக் கொண்டுவந்தான்.
பவழப்பாறையில் அன்னை செய்த கடுமையான தவம், அக்னி பிழம்பாக சிவலோகத்தை எட்டியது. தவத்தின் தீவிரத்தை உணர்ந்த சிவபெருமான் கார்த்திகைப் பவுர்ணமியில் தன் உடலின் இடப் பாகத்தில் பார்வதிக்கு இடம் தந்து, ‘அர்த்தநாரீஸ்வரராக’ மாறி சந்தியா நிருத்தம் என்னும் நடனம் ஆடினார். பார்வதியின் கடும் தவத்தால் முன்பு அவர் செய்த தவறுகள் நிவர்த்தியானதுடன், ஈசனின் இடப்பாகமும் கிடைத்தது. இதையடுத்து அன்னை கயிலாயம் சென்றடைந்தார்.
இமயமலையிலிருந்து திருவண்ணாமலையில் இறைவனுடன் சேரும் இடம் வரை, ஈசனை அன்னை தரிசித்த இடங்களில் எல்லாம் அவருக்கு கோவில்கள் எழுப்பப்பட்டன. அன்னை தவம் இயற்றிய இடங்களில் ஒன்றான காஞ்சீபுரம் பாலாற்றங்கரையில் உள்ள இடத்தில்தான் அன்னைக்கு ஞானம் கிடைத்தது. இதனால் அந்த இடம் ஞானகிரி என்றும் பெயர் பெற்றது. அந்த இடத்தில் அன்னை தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று தேவர்கள் அனைவரும் விரும்பினர். அதற்கு அன்னையும் ஒப்புக்கொள்ள, அன்னைக்கு அங்கு பச்சையம்மன் என்ற பெயரில் கோவில் எழுப்பப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த இந்த ஆலயம், தற்போது மலையின் பின்புலத்தில் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. பச்சையம்மன் சமேத மன்னாதீஸ்வரர் ஆலயம் என்று இந்தக் கோவில் அழைக்கப்படுகிறது. ‘மன்னுதல்’ என்றால் நிலைபெற்று இருத்தல் என்று பொருள். இந்த உலகில் நிலைபெற்று இருக்கும் கடவுள் என்னும் பொருளில் இத்தல இறைவனுக்கு மன்னாதீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.
கோவிலின் நுழைவிடத்தில் வேங்கைப்புலி உருவம் உள்ளது. ஆலய முன்புறத்தில் வடக்கு நோக்கியவாறு பெரிய வாழ்முனி மட்டும் அமைந்துள்ளது. மற்ற முனிவர்கள் இல்லை. கருவறையில் பார்வதி என்று அழைக்கப்படும் பச்சையம்மன் நின்ற நிலையில் காட்சி தருகிறார். அதே கருவறையில் விநாயகர், காத்தாயி, வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகியோரும் எழுந்தருளி இருக்கின்றனர். கருவறையில் அம்பிகையின் பெரிய சுதைச் சிற்பம் உள்ளது.
வெளி மண்டபத்தில் ஒரே கருவறையில் மன்னாதீஸ்வரரும், பச்சையம்மனும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இருவரும் ஒரே கருவறையில் இருப்பதால், அதற்கு முன்பாக சிம்மமும், நந்தியும் ஒரு சேர அமைந்துள்ளன.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஆலயத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை ஏராளம். தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 11 மணி வரையும் தரிசனத்திற்கென திறந்து வைக்கப்படுகிறது. விழாக்காலங்களில் தரிசன நேரம் அதிகரிக்கப்படுகிறது. பச்சையம்மன் தவம் செய்த இடமாதலால், இங்கு அம்பாளுக்குத் திருமணம் கிடையாது. மாறாக, செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்குத்தான் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
செங்கல்பட்டு பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், ரெயில் நிலயத்திலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது. செங்கல்பட்டு பைபாஸ் சாலையில் காஞ்சீபுரம் செல்லும் வழியில் பாலத்தின் கீழ் இறங்கி சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.

ராகு-கேதுவுக்கு தனிச் சன்னிதி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருவாரூரில் அமைந்துள்ள திருப்பாம்புரம் திருத்தலம்.
பாம்புகள் அனைத்தும் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற பூமி, ராகு-கேதுவுக்கு தனிச் சன்னிதி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பாம்புரம் திருத்தலம்.
புராண வரலாறு :
கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமானை, விநாயகர் வழிபட்டார். அப்போது சிவனின் கழுத்தில் இருந்த நாகம், விநாயகர் தன்னையும் வழிபடுவதாக எண்ணி கர்வம் கொண்டது. இதையறிந்த ஈசன், நாகங்கள் தங்களின் சக்தியை இழக்கச் சாபமிட்டார். ஒரு நாகத்தின் கர்வத்தால் நாக வம்சம் அனைத்துமே சாபத்தில் சிக்கித் தவித்தது. அவை அனைத்தும் சாப விமோசனம் வேண்டி பல்வேறு தலங்களைத் தரிசித்ததும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் திருப்பாம்புரம் தலம் வந்து, அங்கிருந்த ஈசனை வழிபட்டு தங்களின் சக்தியை மீண்டும் பெற்றன.
இதே போல, உலகைத் தாங்கிய சுமை பொறுக்காமல் உடல் நலிவுற்ற ஆதிசேஷன், இத்தலத்து இறைவனைச் சரணடைந்தார். ஈசனின் வழிகாட்டுதலின்படி, மகாசிவராத்திரியன்று கும்பகோணம், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், நாகூர் என நான்கு தலங்களையும், நான்கு காலங்களில் வழிபட்டுப் பேறு பெற்றது ஆதிசேஷன் என்கிறது தல புராணம்.
ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கிய ஆலயம். மூன்று நிலை ராஜகோபுரங்களைக் கொண்டுள்ளது. எதிரே ஆதிசேஷன் தீர்த்தம் இருக்கிறது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியம் பெருமான் காட்சி தருகின்றார். இதனையடுத்து நேரே இறைவன் திருப்பாம்புரநாதர் சன்னிதி உள்ளது. கருவறை விமானத்தில் சட்டைநாதர் வீற்றிருக்கிறார்.
தென் பிராகாரத்தில் மலையீசர் சன்னிதி தனிக் கோவிலாக அமைந்துள்ளது. சிறிய மலை போன்ற அமைப்புடைய இதில் ஏறப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மீதேறி நின்றால் மலையீசரையும் வணங்கலாம். இறைவன் கருவறை விமானத்தையும் கண்டு மகிழலாம். கருவறையைச் சுற்றி அகழி போன்ற அமைப்பு காணப்படுகிறது. அகழியை மூடி, மூன்று புறங்களிலும் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கே கன்னி மூலையில் ராஜராஜ விநாயகர் சன்னிதியும், அருகே வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதியும் அமைந்துள்ளன. இதன் அருகே தல விருட்சமான வன்னி மரம் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. இதன் அடியில் வன்னியீஸ்வரர் அமர்ந்துள்ளார்.
திருப்பாம்புரநாதர் :
கிழக்கு நோக்கிய இறைவன் லிங்க வடிவில் ராஜகோபுரத்தை நோக்கியவாறு காட்சி தருகின்றார். உற்சவ மூர்த்தியான ஆதிசேஷன் இறைவனைத் தொழுத வண்ணம் அமைந்துள்ளார். வடக்கில் அன்னை வண்டுசேர் குழலி சன்னிதி கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஒரு கையில் தாமரை, மறு கையில் ருத்திராட்ச மாலை கொண்டு வரத, அபய முத்திரையுடன் அருள் வழங்குகின்றாள்.
உற்சவமூர்த்திகள்:
இறைவன் சன்னிதியில் மகாமண்டபத்தில் விநாயகர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள், நடராஜர், சோமாஸ்கந்தர், முருகப்பெருமான் என அனைத்தும் கலைநயத்துடன் அமைந்துள்ளன. இதில் முருகப்பெருமான் சிலை வள்ளி தெய்வயானையோடு கையில் வஜ்ராயுதம் தாங்கி, இடது காலால் மயிலை மிதித்தபடி காட்சி தருவது ரசிக்கும்படி உள்ளது.
ராகு- கேது சன்னிதி :
ராகுவும், சேதுவும் ஒரே உடலெடுத்து ஈசனை நெஞ்சில் நிறுத்தி வணங்கி பேறு பெற்ற தலம் இது. ராகு காலங்களில் இங்குதான் பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. ஜாதகத்தில் கால சர்ப தோஷம், களத்திர தோஷம், திருமணத்தடை, புத்திரதோஷம் என ராகு- கேதுவின் கடுமையான தோஷங்கள் எதுவாக இருந்தாலும், இத்தலம் வந்து பரிகார பூஜையை மேற்கொண்டால், அனைத்தும் விலகி நன்மை பெறலாம்.
விழாக்கள்:
சிவாலய விழாக்கள் அனைத்தும் நடைபெற்றாலும், மகாசிவராத்திரி மிகவும் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. அதிலும் ஆதிசேஷன் வணங்கிய மூன்றாம் காலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதிசேஷன் உற்சவராக புறப்பட்டு இறைவன் திருமுன் வந்தபின்பு, அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். மாசி மாதத்தில்,பஞ்சமூர்த்தி அபிஷேகம் சிறப்புடன் நடத்தப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ராகு கேது தோஷம் உள்ளவர்கள் பலன்பெற, நம்பிக்கையோடு வந்து செல்ல வேண்டிய தலம் திருப்பாம்புரம் என்றால் அது மிகையல்ல.
அமைவிடம் :
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் திருப்பாம்புரம் அமைந்துள்ளது. கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழித் தடத்தில், கற்கத்தி என்ற ஊரின் தெற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து 25 கிலோமீட்டர், பேரளத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. ரெயில் வழியில் வர விரும்புவோர் மயிலாடுதுறை - திருவாரூர் வழித்தடத்தில் பேரளம் ரெயில் நிலையம் இறங்கி, பேருந்து மூலம் எளிதில் வரலாம்.

கோதண்டராமர் நின்றக் கோலம், கிடந்த கோலம், அமர்ந்த கோலம் ஆகிய மூன்று கோலங்களிலும் அருளும் பெருமாளை தரிசிப்பது தெய்வீக பலனை அளிக்கக் கூடியதாகும்.
சென்னை மாம்பலம் ரெயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ½ கிலோமீட்டர் தொலைவிலும், மேட்லி ரோடு சுரங்கப் பாதைக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது, பிரசித்திபெற்ற கோதண்டராமர் திருக்கோவில்.
கோதண்டராமர் கோவில் :
இத்திருத்தலம் பத்ராசலம் ராமதாசர் வம்சாவழியில் வந்த, ஆதிநாராயண தாசரால் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. சிறிய அளவில் அமைந்திருந்த இந்த ஆலயத்தை வங்காலய குப்பைய செட்டியார் என்பவர் 1926-ம் ஆண்டு பெரிய அளவில் கட்டி, கோதண்டராமரை பிரதிஷ்டை செய்தார்.
ஸ்ரீமாபில ஷேத்திரம், தட்சிண பத்ராசலம் என்ற திருநாமங்களால், இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இந்தத் திருக்கோவிலில் மூன்று நிலைகளில் பெருமாள் அருள்பாலிக்கிறார். நின்றக் கோலம், கிடந்த கோலம், அமர்ந்த கோலம் ஆகியவை அந்த மூன்று கோலங்களிலும் அருளும் பெருமாளை தரிசிப்பது தெய்வீக பலனை அளிக்கக் கூடியதாகும்.
இந்த ஆலயத்திற்கு இன்னுமொரு சிறப்பும் உள்ளது. அது யாதெனில், இந்த ஆலயத்திற்கான கும்பாபிஷேகம் நடைபெற்ற போது, திருநீர்மலை ரங்கநாதப் பெருமாள் எழுந்தருளி மங்களாசாசனம் செய்தார் என்று கூறப்படுகிறது. பட்டாபிராமர், தனது இடப்பக்கத்து மடியில் சீதாப்பிராட்டியை வைத்தபடி அருள்பாலிக்கிறார். வலது பக்கத்தில் லட்சுமணன் குடை பிடித்து சேவை செய்ய, சிறிய திருவடி அனுமன் ராமரின் பாதங்களை தாங்கியபடி மெய்மறந்த நிலையில் வீற்றிருக்கும் கோலத்துடன் பெருமாள் அருள்புரிகிறார்.
கோவிலின் வடகிழக்கு மூலையில் நின்று தரிசனம் செய்தால், பெருமாளின் மூன்று விமானங்களையும் ஒரு சேர தரிசிக்கலாம். கொடி மரம் முன்பாக அமைந்துள்ள விமானத்தில், சுதைச் சிற்பமாக ராமர், சீதாப்பிராட்டி, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோரது சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. பட்டாபிராமர் சீதாப்பிராட்டியாரை மடியில் அமர்த்தியவாறு காட்சி தரும் சிற்பம், ரெங்கநாதர் சயனத் திருக்கோலம், யோக நரசிம்மப் பெருமாள் போன்றவர்களை சுதைச் சிற்பமாக விமானத்தில் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. இவைத் தவிர அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து செல்லும் காட்சி, பஞ்ச முக ஆஞ்சநேயர் போன்ற சிற்பங்களும் வண்ணமயமாக வடிக்கப்பட்டிருக்கின்றன.
கோவில் பிரகாரம், பக்தர்கள் நெருக்கடி இன்றி வலம் வருவதற்கும், பெருமாளை வழிபடுவதற்கும், பெருமாள், தாயார், ஆழ்வார், மற்றும் ஆசாரியர்கள் உள் புறப்பாடு செய்யும் வகையிலும் விசாலமாக கட்டப்பட்டுள்ளது.
அனுமன் சன்னிதியைக் கடந்து சென்றால், இடது புறம் தெப்பக்குளம் உள்ளது. அதன் அருகில் தனிச் சன்னிதியில் அரங்கநாயகி தாயார் அமர்ந்து கோலத்தில் காட்சியளிக்கிறார். தாமரை போன்று மலர்ந்த முகத்துடனும், சவுந்தர்யத்துடனும் சாந்த சொரூபினியாகவும், வருவோர் குறைகளை தீர்ப்பவளாகவும் அன்னை அருள்புரிகிறார். தலைமுறை தலைமுறையாக இந்த தாயாரின் அபிமானிகள் இங்கு வந்து தாயாரின் அனுக்கிரகம் பெற்றுச் செல்கின்றனர்.
தாயார் சன்னிதியை விட்டு வெளியே வருகையில், நம் கண்ணில் கருவறை மண்டபம் தென்படுகிறது. இந்த கருவறையில் நின்ற கோலத்துடன் கோதண்டராமர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். வலது பக்கம் சீதாப்பிராட்டியும், இடது பக்கம் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருகணனும் உள்ளனர்.
கோதண்டராமருக்கு முன்பாக உள்ள மற்றொரு கருவறையில், பட்டாபிராமர் இடப்பக்கம் மடியில் சீதாப்பிராட்டியாரை வைத்தபடி அமர்ந்திருக்க, வலது புறம் லட்சுமணன் குடை பிடிக்க, சிறிய திருவடி அம்சமான அனுமன் ராமரின் பாதங்களைத் தாங்கியபடி அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். கோதண்டராமர் சன்னிதிக்கு வலப்புறமாக அமைந்துள்ளது ரெங்கநாதப் பெருமாள் சன்னிதி. இந்த சன்னிதியில் ரெங்கநாதர் பாம்பணையில் பள்ளி கொண்டபடி சயன கோலத்தில் உள்ளார். அவரது திருவடியின் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருவரும் வீற்றிருந்து சேவை சாதிக்கின்றனர். பிருகு மகரிஷி சயன கோல பெருமாளை வணங்கியபடி உள்ளார்.
கோதண்டராமர் சன்னிதிக்கு இடப்புறமாக யோக நரசிம்மப் பெருமாள் சன்னிதி இருக்கிறது. நரசிம்மப் பெருமாள் யோகப்பட்டத்துடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றார். கருவறை மண்டபத்திலிருந்து வெளியே வருகையில் பிரகாரத்தின் இடப்புறத்தில் சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகின்றார். பெண்கள் திருமணம் நடைபெறவும், வாழ்வில் ஏற்றம் பெறவும் ஆண்டாளை பிரார்த்தித்து பயனடைகின்றனர்.
இது தவிர விஷ்வக்சேனர், சேனை முதலியார், கருடாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், உடையவர் மற்றும் மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு தனித்தனிச் சன்னிதிகள் உள்ளது. ஆலயத்தின் தல விருட்சமாக அரச மரம் உள்ளது. இந்தக் கோவிலின் விமானம் அஷ்டாங்க விமானம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தக் குளம் அனுமன் தீர்த்தம் என்றும், திருமடப்பள்ளி அருகில் உள்ள கிணறு, லட்சுமி தீர்த்தம் என்று பெயர் பெற்றுள்ளது.
திருவிழாக்கள் :
சித்திரை மாதம் 10 நாட்கள் பிரமோற்சவம், 10 நாட்கள் உடையவர் உற்சவம், வைகாசி மாதம் வசந்த உற்சவம், தோட்ட உற்சவம், நம்மாழ்வார் சாற்றுமறை, ஆனி மாதம் யோக நரசிம்மர் கருட சேவை, ராமர் ஜேஷ்டாபிஷேகம், ஆடி மாதம் கஜேந்திர மோட்சம், ரெங்கநாதர் கருட சேவை, ஆடிப்பூரம், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி, புன்னைமர வாகன உற்சவம், குடமுழுக்கு தினம், மூலவர் புஷ்பாங்கி சேவை, புரட்டாசி மாதம் திருபவித்திர உற்சவம், நவராத்திரி உற்சவம்,
ஐப்பசி மாதம் 10 நாட்கள் மணவாள மாமுனிகள் சாற்றுமறை, சேனை முதலியார் சாற்றுமறை, கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை, திருமங்கை ஆழ்வார் சாற்றுமறை, மார்கழி மாதம் திருப்பாவை உற்சவம், வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் திறப்பு, அனுமன் ஜெயந்தி, போகி, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், தை மாதம் 5 நாட்கள் தெப்ப உற்சவம், தை அமாவாசையன்று லட்ச தீபம், மாசி மகம், ராமர் கருட சேவை, குலசேகர ஆழ்வார் சாற்றுமறை, பங்குனி மாதம் ராமநவமி, பங்குனி உத்திரம், தாயார் திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட பல விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.
காலை சந்தி, சாயரட்சை என இரண்டு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கிறது.
முன்னேற்றம் தரும் ஆஞ்சநேயர் :
கோவிலின் நுழைவு வாசலைக் கடந்து செல்லும்போது, சஞ்சீவி பர்வத ஆஞ்சநேயர் சன்னிதியை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இந்த சன்னிதியானது, கோதண்டராமர் சன்னிதியை நோக்கிய திசையில் அமைந்திருக்கிறது.
வலது திருக்கரத்தில் சஞ்சீவி மலையையும், இடது கையில் அபய முத்திரை காட்டியபடியும் ஆஞ்சநேயர் காட்சியளிக்கின்றார். இவர் வடக்குப் புறமாக குபேர மூலையை நோக்கி பார்த்த வண்ணம் காட்சி தருவது ஒரு விசேஷமானதாகும்.
சங்கடங்கள், பயம் நீங்கவும், இழந்த செல்வத்தை பெறவும், வாழ்வில் முன்னேற்றம் அடையவும், எதிரிகள் தொல்லை விலகவும் பக்தர்கள் இந்த ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்து பலனடைவதாகக் கூறுகின்றனர்.

நெல்லி மரத்தை தல விருட்சமாக கொண்டு விளங்கும் ஆலயம் உள்ள திருத்தலம் தான் திருநெல்லிக்கா ஆகும். இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவன் நெல்லி வனநாதர் என்பதாகும்.
கோபம் என்பது நோயல்ல என்றாலும், அது பிணியை விடக் கொடியது. நோய் வந்தால், அதனால் பீடிக்கப்பட்டவன் மட்டுமே பாதிக்கப்படுகிறான். ஆனால் கோபமானது, கொண்டவனை மட்டுமல்லாது அவனைச் சேர்ந்தவர்களையும் சாகடித்துவிடும்.
இதைத்தான், ‘சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்றும், ‘தன்னையே கொல்லும் சினம்’ என்றும் பத்துக் குறள்களை வெகுளாமை என்ற அதிகாரத்தின் கீழ் வழங்கி, மனிதர்களை கோபம் கொள்ளாதீர்கள் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
சினம் என்னும் கோபம் உணர்ச்சிகளின் வெளிப்பாடு; ஒரு மனிதன் கொந்தளித்துக் கோபம் கொள்ளும் போது, அவனது உடலின் இயக்கு நீர்களின் சுரப்பு மாறுபடுகிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் மூளையில் குருதிக் கசிவு, இதய தாக்கம் போன்ற உடல் இயக்கக் கோளாறுகளையும், மன நிலையில் மாறுபாடுகளையும் ஏற்படுத்தி, அவனைக் கொன்றுவிடும் குணமுடையது.
எனவே கோபத்தை விட வேண்டும். உடனே விடமுடியவில்லை எனினும், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் இன்று யோகா, தியானப் பயிற்சிகள் வாயிலாக கோபத்தைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறார்கள்.
நெல்லியின் மகிமை :
முரட்டுக் குணம், முன்கோபம் போன்றவை இருப்பின் அதனைப் பரணிதோஷம் என்பார்கள். நெல்லி மரம் பரணி நட்சத்திரத்தின் நல்ல மின்காந்த கதிர் வீச்சுகளை உள்வாங்கி சேமித்து வைத்து, குளிர்ச்சியைத் தரும். நெல்லி இலையும், காயும் குளிர்ச்சிப் பொருள் என்பதால், அதனை அரைத்து தலைக்கு தேய்த்துக் கொண்டால் கண்களும், உடலும் குளுமை பெறும்.
அரிதான நெல்லிக்கனியை அவ்வைக்கு அதியமான் கொடுத்தான் என்றால், தமிழ் வளர்த்த அந்த மூதாட்டியின் ஆயுளை நீட்டிக்கும் அரிய பொருள் அது என்பது புலனாகிறதல்லவா?
இத்தகைய நற்குணங்கள் கொண்ட நெல்லி மரத்தோடு தொடர்பு கொண்டால், நம் உடல் சூடு தணிந்து கோபம் குறையுமல்லவா?
நெல்லிவனநாதர் :
இந்த நெல்லி மரத்தை தல விருட்சமாக கொண்டு விளங்கும் ஆலயம் உள்ள திருத்தலம் தான் திருநெல்லிக்கா ஆகும். இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவனின் நாமம் நெல்லி வனநாதர் என்பதாகும். வடமொழியில் ஆம்லவனநாதர் (ஆம்லா என்றால் நெல்லி) என்று வழங்கப்படுகிறார். திருவானைக்கா, திருக்கோலக்கா, திருக்கோடிக்கா, திருக்குரங்குக்கா போல, இத்தலமான திரு நெல்லிக்காவும் சிறப்பு பெற்றது.
மேற்கு நோக்கி எழுந்து நிற்கும் ஐந்துநிலை ராஜகோபுரத்தின் முன்பே, வெளியில் கொடிமரமும், நந்தி மண்டபமும் இருப்பது வித்தியாசமான அமைப்பாக உள்ளது. உள்ளே சுயம்பு மூர்த்தியான மூலவர் நெல்லிவனநாதரும், மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்.
ஆண்டுதோறும் மாசி மாதம் 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை, ஏழு நாட்கள், மாலை 5 மணி அளவில் சிவலிங்கத்தை, சூரியக் கதிர் தழுவிச் செல்லும் காட்சியைக் காணலாம். இது பக்தர்களை பரவசம் கொள்ளச் செய்யும் நிகழ்வு மட்டுமின்றி, சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் வானவியல் அறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ் கிறது. தெற்கு நோக்கிய சன்னிதியில் அம்பிகை மங்களேஸ்வரி என்ற பெயரில் அருள்புரிகிறாள். இந்த அம்மனுக்கு ஒரு வரலாறு உண்டு.
திருவாரூரை ஆண்டு வந்த உத்தம சோழனும், அவனுடைய மனைவியும் சிறந்த சிவ பக்தர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு நெடுங்காலமாக குழந்தைப் பாக்கியம் இல்லை. இதனால் அவர்கள் இருவரும் திருவாரூர் சிவபெருமானை உருகி வேண்டினர். அப்போது மன்னன் மடியில் மூன்று வயதுச் சிறுமி வந்து அமர்ந்தாள். ‘உமக்கு மங்களம் வழங்க, பராசக்தியே மகளாக வந்துள்ளாள். அவளுக்கு ‘மங்கள நாயகி’ என்று பெயரிட்டு அழைத்து வா’ என்று ஒரு அசரீரி ஒலித்தது.
மன்னன் மகளாக மாறிய மங்கள நாயகி வளர்ந்து பெரியவள் ஆனாள். அப்போது ஆரூர் ஆலயத்தில் மங்கள நாயகி வழிபட்டுக் கொண்டிருந்தபோது, ‘ஆவணி முதல் வெள்ளிக்கிழமையன்று திருநெல்லிக்காவில் உம்மை மணமுடிப்போம்’ என்ற வாக்கு, ஈசனின் கருவறையில் இருந்து ஒலித்தது. அதன்படியே திருநெல்லிக்காவில் தெய்வத் திருமணம் நடைபெற்றது.
எனவே இந்தத் திருத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால், திருமணத் தடை உள்ளவர்களுக்கு தடை நீக்கும், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை, விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன், சனீஸ்வரர் ஆகியோர் வழிபட்டு சாப-விமோசனம் பெற்றுள்ளனர். இத்தலத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சக்கர தீர்த்தம், நிவாரண தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் போன்றவை உள்ளன. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நெல்லிவனநாதரை வழிபாடு செய்த திவ்யரூபன் என்ற கந்தர்வன், தனது குஷ்ட நோய் நீங்கப்பெற்றான் என்பது தலவரலாறு கூறும் செய்தி.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 181-வது தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.
ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் தல விருட்சமான நெல்லி மரமும், அதன் அருகே சிறிய கோவிலில் சிவலிங்கமும் இருப்பது ஆலயத்தின் சிறப்பை உயர்த்துவதாக உள்ளது.
கோபம் குறைந்த துர்வாசர் :
முனிவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் யுக்திகளை அறிந்தவர்கள். பிறருக்கும் உபதேசித்தவர்கள். அவர் களில் ஒருவரான துர்வாச முனிவருக்கு, எதற்கெடுத்தாலும் கோபம் பொங்கி வந்து விடும். உடனடியாக சாபம் கொடுத்து விடுவார் என்பது புராணக் கதைகளில் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படிப்பட்ட துர்வாச முனிவர், இந்த தலத்தில் கோபம் குறைந்து சாந்தமானார் என்று தல வரலாறு கூறுகிறது.
இந்த ஆலயத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி, நெல்லிவனநாதரின் பாதத்தில் எல்லா பாரங்களையும் இறக்கி வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்னர் தல விருட்சமான நெல்லி மரத்தை சுற்றி வந்து அதன் அடியில் அமர்ந்து சற்று நேரம் கண்களை மூடி தியானிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கோபம் குறைந்து உள்ளம் சாந்தமாகும் என்று கூறுகிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், மன்னார்குடியில் இருந்து கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருநெல்லிக்கா திருத்தலம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி செட்டிப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கொண்டத்துக் காளியம்மன் கோவில் ஆகும்.
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி செட்டிப்பாளையத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் கோபி செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் முதன்மை தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் ஆகும்.
வரலாறு :
இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது இருக்கும் கோவில் 1950ல் புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இந்த இடம் புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கபட்டது. கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்ற பழைமையான ஓலைச்சுவடி இத்தலச்சிறப்பினை விளக்குகிறது. இதற்கு முன் இவ்விடம் அழகாபுரி/ பாராபுரி என்று வழங்கப்பட்டு வந்தது. இங்குள்ள அம்மன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் என்று நம்பப்படுகிறது. எனவே, “பாரியூர்” என்று பெயர் மாற்றம் பெற்றது. அருள்மிகு கொண்டத்து மாரியம்மன் ஊரின் வளமைக்கு முக்கியக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது.
கோபிசெட்டிபாளையம் முன்பு வீரபாண்டி கிராமம் என்று அழைக்கப்பட்டது. கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் இப்பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்ததால் கோபிசெட்டிபாளையம் என்று பெயர் பெற்றது. அவர் ஒருமுறை வறியோருக்குக் கொடுக்கத் தன்னிடம் பொருளின்றி வருந்தி கொண்டத்துக் காளியம்மனிடம் முறையிட்டு புலிப்புதருக்குச் சென்று உயிர்விடத் துணிந்தார். கருணை கொண்ட அம்பிகை புலிப்புதரில் புலிக்குப் பதிலாக பொற்காசுகள் கொண்ட முடிப்பு இருக்கும்படிச் செய்தாள். அவர் அம்மனின் கருணையை எண்ணி வியந்து பொன்முடிப்பை எடுத்துச் சென்று மீண்டும் கொடையளித்தார்.
இத்திருக்கோயிலின் துணைக்கோயிலான அமரப்பணீஸ்வரர் கோயிலிலிருந்து கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. பாரியூர் முன்பு சிறப்பான நகரமாக இருந்துள்ளது. பின்பு நடந்த அந்நியப் படையெடுப்பால் மக்கள் புலம்பெயர்ந்து சென்றனர். புலம்பெயர்ந்து சென்ற இடங்கள் இன்றும் பாரியூர் வெள்ளாளபாளையம் என்றும் பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையம் என்றும் அறியப்படுகிறது.
படையெடுப்பின் போது அம்மன் சிலையைப் பகைவர்களால் ஏதும் செய்ய இயலவில்லை. பின் தடப்பள்ளி வாய்க்கால் வெட்டப்பட்டு பாரியூர்ப் பகுதி வயல்வெளியானது. வெகுநாட்களாக சிறு கோயிலாக இருந்து பின் திருப்பணிச்செம்மல் தங்கமணி முத்துவேலப்பக் கவுண்டர் அவர்களின் பெருமுயற்சியாலும் அறநிலையத்துறையின் ஒத்துழைப்பாலும் தற்போதுள்ள பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் திருக்கோயில் கரும்பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. இத்திருக்கோயிலின் பிற வரலாற்றுத் தகவல்கள் காலவெள்ளத்தில் அழிந்து விட்டன.
கோவில் கட்டமைப்பு மற்றும் தெய்வங்கள் :
கோவில் முன்னர் ஐந்து அடுக்கு ராஜ கோபுரம் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது. அம்பாள் உடன் விநாயகர், மகா முனியாப்பன், கன்னிமார், பொன்காளியம்மன் மற்றும் இதர தெய்வங்களுக்கும் சந்நிதிகள் உண்டு. இக்கோவிலின் பிரதான கோபுரம் தெற்கு மூலையில் அமைந்து உள்ளது. கருவறையைச் சுற்றி கருப்பு பளிங்குக்கற்களால் ஆன வெளி மண்டபம் அமைந்துள்ளது.
கோவிலின் தூண்களில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று, ஒரு சிங்கத்தின் வாயில் காணப்படும் பந்து வடிவிலான ஒற்றைக்கல். அம்மனின் பிராதன வாகனமாக சிங்கம் கருதப்படுகிறது. அம்மனின் தலையில் நெருப்பிலான கிரீடமும் காலடியில் ஒரு அரக்கனை மிதித்துக்கொண்டிருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அம்மனின் தலையில் ருத்ரன் உள்ளதாக நம்பப்படுகிறது.
இக்கோவிலில் ஸ்ரீ பொன் காளியம்மன், சித்தி விநாயகர் மற்றும் ஏழு கன்னிமார் சிலைகளும் கானப்படுகின்றன. அது தவிர ஸ்ரீ மகா முனியப்பனின் மாபெரும் சிலை ஒன்றும் காணப்படுகின்றது. இவர் குழந்தை வரம் அளிப்பதோடு அல்லாமல், பயத்திலிருந்தும் தீய சக்திகளிடத்திலிருந்தும் மக்களைக் காப்பாற்றி வருவதாக நம்பப்படுகிறது. இரு சந்நிதிகளிலிருந்தும் அளிக்கப்படும் தாயத்துகள் மக்களை தீய சக்திகளிடத்திலிருந்தும் நோய்களிலிருந்தும் காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது.
இவற்றைத் தவிர காவல் தெய்வம், பிரம்மா மற்றும் இன்னும் பல சிலைகள் காணப்படுகின்றன. இக்கோவிலில் பிராமினி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்னவி, மஹேந்த்ரி மற்றும் சாமுண்டி ஆகியோரது சிலைகளும் காணப்படுகின்றன. “சின்ன அம்மன்” என்று அழைக்கப்படும் உற்சவர் சிலையும் இங்கு உள்ளது. மேலும், அருகில் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அருள்மிகு அமரபநீஸ்வரர் திருக்கோவில், அருள்மிகு ஆதிநாரயனபெருமாள் திருக்கோவில் மற்றும் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்களும் அமைந்துள்ளன.
பூஜை அட்டவணை :
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். காலை 6.15 மணி, 11.15 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய நேரங்களில் அம்மனுக்கு அபிஷேகம் நடைப்பெரும். மேலும், 7 மணி, 9 மணி, 10.30 மணி, 12 மணி, 5 மணி, 7 மணி என்று 6 கால பூஜைகள் நடைபெறுகிறது.
திருவிழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் :
இந்த திருகோவிலின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இது ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் நடைபெரும். பல லட்சம் பக்தர்கள் இங்கு வந்து பூ மிதிப்பர். குண்டத்திற்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அன்னை ராஜராஜேஸ்வரியாக புஷ்பத்தேரில் எழுந்தருள்வாள். திருவிழாவில் சிறப்பம்சம் இதுவே. மேலும், நவராத்திரி திருவிழாவின் போது ஒன்பது நாட்களும் அம்பாள் வெவ்வேறு உருவங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சித்திரை திருவிழா மற்றும் பொங்கல் விமர்சையாக கொண்டாடப்படும் மற்ற பண்டிகைகள் ஆகும்.
முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு மக்கள் அம்மனிடம் “வாக்கு கேட்டல்” முறையைக் கடைபிடிக்கின்றனர். அம்மன் சிலையின் இரு பக்கங்களிலும் பூக்கள் வைத்து எப்பக்கத்திலிருந்து பூ கீழே விழுகின்றது என்பதைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிறப்பு நாட்களில் அம்மனைச் சந்தனம் அல்லது மஞ்சள் பூசி அலங்கரிக்கின்றனர். திருவிழாவில் குண்டம் இறங்குதல் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
தங்கத்தேர் மற்றும் திருப்பணி :
கோவில் கும்பாபிசேகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெரும். மேலும், தினமும் அம்பாள் தங்க தேரில் ஊர்வலம் செல்வார். மேலும் இரண்டு மரத்தேர்கள் மற்றும் ஒரு தங்க கவசம் அம்பாளுக்கு உரித்தானது ஆகும்.

ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108. அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணி நதி கரையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு கிரக தோஷம் நீக்கக்கூடியதாகும்.
தரிசிப்பது எப்படி?
நவகிரகங்களில் தலைமை பதவி வகிக்கும் சூரியன் மகா விஷ்ணுவே ஆவார். அவரை சூரிய நாராயணன் என்றும் கூறுகின்றனர். ஈஸ்வரப்பட்டம் பெற்ற சனி பகவானைத் தவிர மற்ற கோள்கலெல்லாம் நெற்றியில் நாமம் திருமண் எனும் வைணவச் சின்னத்தை அணிந்திருப்பதில் இருந்து நவக்கிரகங்கள் வைணவத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதை உணர்கிறோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி ஆலயங்களை திருவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி (தேவர்பிரான்) இரட்டை திருப்பதி (அரவிந்தலோசனார்) பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய வரிசைப்படி தரிசிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் இந்த வரிசைப்படியே தலங்களுக்கு செல்கின்றன.
ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108. அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணி நதி கரையில் அமைந்துள்ளன. நவ திருப்பதிகள் என அழைக்கப்படும் அந்த தலங்கள் 1.ஸ்ரீவைகுண்டம், 2-நத்தம், 3. திருப்புளியங்குடி, 4.தொலைவில்லி மங்கலம், 5. தொலைவில்லி மங்கலம் (இங்கு 2 கோவில்கள் உள்ளதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது). 6.பெருங்குளம், 7. தென்திருப்பேரை, 8. திருக்கோளூர், 9. ஆழ்வார் திருநகரி. நவக்கிரக தோஷம் போக்கும் இந்த தலங்களில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வழிபாடு நடத்துவது சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு கிரக தோஷம் நீக்கக்கூடியதாகும். அந்த கோவில்களின் சிறப்புகளை காண்போம்.
1. ஸ்ரீவைகுண்டம்

நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீவைகுண் டத்தில் வைகுண்ட நாதன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஒரு காலத்தில் சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவனிடம் இருந்து படைப்புத் தொழில் குறித்த ரகசியம் அடங்கிய ஏடுகளை ஒளித்து வைத்துக்கொண்டாராம். அந்த ஏடுகளை மீட்க தாமிரபரணி ஆற்றங்கரையில் விஷ்ணுவை நோக்கி பிரம்மா தவம் இருந்தார்.
கடும் தவம் செய்துகொண்டிருந்த பிரம்மாவுக்கு திருமால் நேரில் காட்சியளித்து படைப்புத் தொழில் குறித்த ரகசியத்தை சோமுகாசுரனிடமிருந்து மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார். தனக்கு காட்சி கொடுத்து நின்ற திருக்கோலத்திலேயே இங்கு வைகுண்டநாதனாக காட்சியளிக்க வேண்டும் என்று பிரம்மா வேண்ட திருமாலும் அப்படியே ஆகட்டும் என வைகுண்டநாதனாக நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காலதூஷகன் எனும் திருடன் திருடிய பொருளில் பாதியை ஸ்ரீவைகுண்டம் பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்தி வந்துள்ளான். ஒருநாள் திருடனின் கூட்டத்தினர் திருடச்சென்றபோது பிடிபட்டனர். உடனே திருடன் வைகுண்டநாதனிடம் சரணடைந்து தன்னை காக்க வேண்டினான். அதன்பொருட்டு வைகுண்டநாதனே அரண் மனைக்கு வந்து அரசனுக்கு தனது சுயரூபத்தைக்காட்டி, தர்மம் காக்க உன்னை தர்மத்தில் ஈடுபடச்செய்யவே நான் வந்தேன் என்று கூற, அரசனும் தனக்கு கிடைத்த பாக்கியம் மக்களுக்கும் கிடைக்க உற்சவமூர்த்தியை கள்ளபிரான் என்று கூறி வழிபடதொடங்கினான். ஸ்ரீவைகுண்டத்தில் மூலவர் வைகுண்டநாதனாகவும், உற்சவர் கள்ளபிரானாகவும் எழுந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இது சூரியகிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.
2. வேதவிக்கு காட்சி கொடுத்த தலம்

நவ திருப்பதியின் 2-வது திருப்பதி நத்தத்தில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவரகுணமங்கை எனப்படும் நத்தத்தில், மூலவர் விஜயாசன பெருமாள் ஆதிசேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலத்தில் தாயார்கள் வரகுண வல்லித் தாயர், வரகுண மங்கைத் தாயாருடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இது சந்திரகிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.
திருவரகுணமங்கையில் வேதவி என்பவர் தன் மாதா, பிதா, குரு ஆகியோருக்குரிய கடன்களை முடித்து திருமாலை நோக்கி ஆசன மந்திரத்தை ஜெபித்து கடும் தவம் புரிந்தார். அப்போது திருமால் அங்கு தோன்றி வேதவிக்கு காட்சியளிதார். திருமாலின் அருள் பெற்று வேதவி பரம பதம் அடைந்தார்.
ஆசன மந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமாதலால் விஜயாசனர் என்னும் திருநாமம் திருமாலுக்கு உண்டானது. இத்திருப்பதியில் உயில் நீத்தால் மோட்சம் கிட்டும் எனரோமேச முனிவர் கூறியுள்ளார். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
3. பூமி தேவியை சமாதானம் செய்த தலம்

நவதிருப்பதியின் அடுத்த தலம் திருப்புளியங்குடியில் உள்ளது. திருவரகுண மங்கையில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் திருப்புளியங்குடியில் மூலவர் காய்சினவேந்தன் தாயார் மலர்மகள், திரு மகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.திருமால் இலக்குமி தேவியுடன் நதிக் கரையில் தனித்திருந்த போது, தன்னை திருமால் கண்டுகொள்ளாதிருக்கிறாரோ என பூமாதேவி சினங்கொண்டு பாதாள லோகம் செல்ல திருமால் அங்கு சென்று பூமாதேவியை சமாதானம் செய்து அழைத்து வந்து இரு வரும் சமமே என இரு தேவியருடனும் திருமால் இங்கு எழுந்து காட்சியளிக்கிறார். பூமி தேவியை சமாதானம் செய்து பூமியை காத்ததால், பூமிபாகர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு. இது புதன்கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.
4. பெருங்குளம்

திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் பெருங்குளத்தில் மூலவர் வேங்கட வாணனாகவும், உற்சவர் மாயக்கூத்தன் தாயார் அலமேலுமங்கை, குழந்தைவல்லி தாயாருடன் அருள் பாலிக்கிறார். இது நவதிருப்பதியில் 4 வது தலம்.
பெருங்குளத்தில் வசித்து வந்த வேதசாரண் குமுதவல்லி தம்பதியினரின் மகள் கமலாவதி, தான் திருமணம் செய்தால் பெருமாளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி, பெருமாளை நோக்கி கடும் தவம்புரிந்தார். பெருமாளும் நேரில் தோன்றி தன்னுடைய மார்பில் கமலாவதியை ஏற்றுக்கொண்டார்.
ஒரு சமயம் வேதாசாரண் மனைவி குமுதவல்லியை அச்மசாரன் என்னும் அரக்கன் கவர்ந்து சென்றான். குமுதவல்லியை அரக்கனிடமிருந்து பெருமாள் மீட்டுவந்தார். பெருமாளுடன் அரக்கன் போரிட்டான். அரக்கனை நர்த்தனம் செய்து அவனை வதம் செய்ததால், மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெருமாளுக்கு ஏற்பட்டது. இது சனி கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.
5. தொலைவில்லி மங்கலம் (இரட்டைதிருப்பதி) தெற்குகோவில்

பெருங்குளத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் மங்களகுறிச்சியில் இருந்து வலது புறமாக திரும்பி 2 கிலோமீட்டர் மேற்கு நோக்கி வந்தால், இரட்டை திருப்பதி ஸ்தலங்கள். தெற்கு கோவிலில் மூலவர் தேவபிரான் உற்சவர் ஸ்ரீனிவாசன் தாயார் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் காட்சியளிக்கிறார்.
ஆத்ரேயசுப்ரபர் என்ற ரிஷி யாகம் செய்வதற்காக இத்தலத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, பூமியில் புதையுண்டு கிடந்த மிக ஒளிமயமான ஒரு வில்லையும் தராசையும் எடுத்தார். அவர் கையில் எடுத்தவுடன் வில் ஆணாகவும், தராசு பெண்ணாகவும் மாறியது. இருவரும் குபேர சாபத்தால் வில்லாகவும் தராசாகவும் மாறி இத்தல மண்ணில் புதையுண்டு கிடந்ததாக கூறி பரமபத முக்தி அடைந்ததால் இத்தலம் தொலைவில்லி மங்கலம் எனப் பெயர் பெற்றது. இத்தலம் ராகு தோஷநிவர்த்தி ஸ்தலம்.
6. தொலைவில்லி மங்கலம் வடக்கு கோவில் (இரட்டை திருப்பதி)

தெற்கு கோவிலில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வடக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் அரவிந்த லோசனார் வீற்றிருந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். உற்சவர் செந்தாமரைக் கண்ணன் தாயார் கருத்தடங்கண்ணியுடன் எழுந்தருளியுள்ளார்.
தினமும் தேவபிரானுக்கு வடக்கு தடாகத்தில் இருந்து சுப்ரபர் தாமரை மலர்களை எடுத்து வந்து பூஜித்து வந்தார்.
ஒருமுறை சுப்ரபர் எங்கிருந்து தாமரை மலர்களை கொய்து கொண்டு வருகிறார் என்பதை பார்ப்பதற்காக, பின் தொடர்ந்து சென்றார். இதை அறிந்த சுப்ரபர் தன்னை பின் தொடர்வதற்கான காரணம் கேட்க தேவ பிரானோடு சேர்த்து தனக்கும் அபிஷேகம் செய்ய பெருமாள் கூறியதால், அங்கேயும் ஒரு பெருமாளை பிரதிஷ்டை செய்து சுப்ரபர் பூஜைகள் செய்து வந்தார். அந்த பெருமாளே செந்தாமரைக் கண்ணனாக காட்சி அளிக்கிறார். இது கேது கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.
7. தென்திருப்பேரை

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் தென் திருப்பேரை உள்ளது. இங்கு மூலவர் மகர நெடுங்குழைக்காதர் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். உற்சவர் நிகரில் முகில் வண்ணன், தாயார் குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
துர்வாச முனிவரின் சாப விமோசனம் பெறுவதற்காக பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நராயணாய என்ற மந்திரத்தை ஜெபம் செய்தார். பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும்போது இரண்டு மகர குண்டலங்கள் கிடைக்க திருமாலுக்கு அணிவித்து மகிழ்ந்தார். அப்போது தேவர்கள் பூமாரி செரிய பூமா தேவியின் மேனி அழகானது. லக்குமியின் உடலுடன் பூமாதேவி தவமிருந்ததால் இவ்வூர் ஸ்ரீபேரை என்றழைக்கப்பட்டது. இத்தலத்தில் மழை வேண்டி பிரார்த்தனை செய்தால் இன்று வரை பெய்ப்பதில்லை. இது சுக்கிர கிரகதோக நிவர்த்தி ஸ்தலம்.
8. திருக்கோளூர்

தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வாரிதிருநகரி செல்லும் வழியில் 3 கிலோமீட்டர் மேற்காக வந்து இடது புறம் செல்லும் ரோட்டில் திரும்பி 2 கிலோமீட்டர் சென்றால் திருக்கோளூர். இது மதுரகவி ஆழ்வார் அவதார தலம். இங்கு மூலவர் வைத்தமாநிதி பெருமாள், உற்சவர் நிக்சோவித்தன், தாயார் குமுத வல்லி, கோளூர் வல்லி ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
குபேரன் சிவனை வழிபட கைலாயம் சென்றபோது அங்கே பார்வதியை கெட்ட நோக்கத்தோடு பார்த்தானாம். உடனே பார்வதி கோபம் கொண்டு குபேரனை சபித்தாள். உடனே குபேரனின் உடல் விகாரமானது. குபேரன் தன் தவறை உணர்ந்து பார்வதியை அடி பணிந்தான். பார்வதி கோபம் தணியாதவளாய் குபேரனை பார்த்து உன் உடல் விகாரம் மாறாது.
இனி உனக்கு ஒரு கண் தெரியாது. நீ இழந்த நிதிகளை அவை தஞ்சம் அடைந்துள்ள வைத்தமாநிதி பெருமாளிடம் தவம் செய்து பெற்றுக் கொள் என்று கூறினாள். குபேரன் திருக்கோளூர் பெருமாளை நோக்கி கடும் தவம் செய்து இழந்த நிதியில் பாதியை பெற்றான். எனவே இழந்த செல்வத்தை பெற திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை வழிபடலாம். இது செவ்வாய் கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.
9. ஆழ்வார் திருநகரி (திருக்குருகூர்)

திருமாலிடம் பிரம்மா தவம் இருக்க இடம் கூறுமாறு வேண்டினார். அதற்கு திருமால் நான் உன்னை படைப்பதற்கு முன்பே தாமிரபரணி நதிக்கரையில் யாம் எழுந்தருளி உள்ளோம் என்று கூறினார். திருமால் கூறிய இடமான ஆழ்வார்திருநகரி பெருமாள் ஆதியிலே தோன்றிய நாதன் என்பதால் ஆதிநாதன் என திருநாமம் ஏற்பட்டது. திருமாலே பிரம்மனுக்கு குருவாக காட்டிய இடமாகியதால் குருகூர் என அழைக்கப்படுகிறது.
ஆற்றில் வந்த சங்கு இப்பெருமானை வழிபட்டு மோட்சம் பெற்றதால், சங்கின் மறுபெயரான குருகு என்பதில் இருந்து குருகூர் என்று அழைக்கப் படுகிறது. சங்கு மோட்சம் பெற்ற தலம் இன்றும் திருச்சங்கண்ணிதுறை என்று அழைக்கப் படுகிறது. வராக அவதாரம் காண முனிவர்கள் இத் தலத்தில் தவமிருந்து அவர்களுக்கு பிராட்டி யுடன் வராக நாராயணன் காட்சி அளித்ததால் வராக ஷேத்திரம் எனவும், நாய்க்கும் மோட்சம் அளித்த தீர்த்தகரை என்பதால் தீர்த்த ஷேத்திரம் எனவும், பஞ்ச மஹா ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் குழந்தையாக தவழ்ந்த புளியமரத்தில் இன்றும் குழந்தையின் உருவம் உள்ளது. இது வியாழ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தலைமை பதியான சாமிதோப்பு வைகுண்டபதியை அடுத்ததாக, வெகு விமரிசையாக திருவிழா நடத்தப்படுவது சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்டர் தர்மபதியும் ஒன்று.
கலியுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச் செய்யும் நோக்கில் இறைவன் மறு அவதாரம் எடுத்து வந்தார் என்பது அய்யா வழியின் வரலாறு. உருவ வழிபாடு இல்லாத கண்ணாடி தத்துவம், இறைவன் ஒருவனே, மனிதர்கள் அனைவரும் சம உரிமையுடன் இருக்க வேண்டும் போன்ற உன்னத கோட்பாடுகளைக் கொண்டது அய்யா வழி.
மனிதர்களின் மனதில் புகுந்து கெட்டச் செயல்களைச் செய்யத் தூண்டும் ‘கலி’ என்னும் உருவம் இல்லாத அரக்கனை அழிப்பதற்காகவே, இறைவன் மனித அவதாரம் எடுத்து வந்தார். தர்மத்தின் வழி நடப்பதையும், தர்மம் செய்வதையும், பிறரிடம் அன்பாக இருப்பதையும் வலியுறுத்தியவர் அய்யா வைகுண்டர். அவ்வாறு தர்மத்தின் வழி செல்வதால், மாயையான கலியை அழிக்க முடியும் என்று அவர் நம்பினார். அந்த நம்பிக்கையை தன்னைச் சார்ந்திருந்த மக்களுக்கு வலியுறுத்தினார். அவரே ‘அய்யா வைகுண்டர்’ என்று அகிலத்திரட்டு புராண வரலாறு தெரிவிக்கிறது.
குறோணி அசுரன் :
நீடிய யுகத்தில் குறோணி என்ற அசுரன் தோன்றினான். உலகையே விழுங்கி விடும் அளவுக்கு பெரிய தோற்றத்தில் இருந்தான். அவனது பசிக்கு இந்த உலகம் இரையாகி விடாமல் தடுப்பதற்காக ஈசனும், திருமாலும் சேர்ந்து அந்த அசுரனை ஆறு துண்டுகளாக்கினர். இந்த ஆறு துண்டுகளும் யுகம் தோறும் ஒவ்வொரு அரக்கனாக மாறி தேவர்களையும், முனிவர்களையும், உலக உயிர்களையும் துன்பத்தில் ஆழ்த்தி வந்தன. நீடிய யுகம், சதுர் யுகம், நெடிய யுகம், கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் ஆகிய ஆறு யுகங்களிலும் தோன்றிய அரக்கர்களை நாராயணமூர்த்தி பல அவதாரங்கள் எடுத்து அழித்தார். தற்போது நடந்து கொண்டிருப்பது கலி யுகம்.
ஆசைகளால் அழிவு :
இந்தக் கலியுகத்தில் அசுரன் உருவம் இல்லாதவனாக, ‘கலியனாக’ பிறப்பெடுத்தான். அவன் மக்களின் மனதிற்குள் புகுந்து, அவர்களிடம் தேவையில்லாத ஆசைகளையும், அடிமைப்படுத்தும் எண்ணத்தையும் விதைத்து பிரிவினையை உண்டாக்கி, அதன் மூலம் உலகை அழிக்க முடிவு செய்தான். உருவ வடிவம் இல்லாமல் தோன்றியதால், இந்த யுகத்தில் கலியனை நேரடியாக நின்று இறைவனால் அழிக்க முடியவில்லை. இதையே ‘முன்னின்று கொல்ல மூவராலும் அரிது’ என்கிறது அகிலத் திரட்டு.
அதனால் கலியுகத்தில், அய்யா வைகுண்டராக மனித அவதாரம் எடுத்தார் இறைவன். தவ முனியைப் போல் வாழ்ந்து, மக்களிடம் பல போதனைகளை எடுத்துரைத்தார். ‘அன்பு, பொறுமை, தர்மம் இவற்றை ஆயுதமாக மக்களுக்கு கொடுத்து அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, தர்மம் செய்பவர்களாக, சுய மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக மாற்றுவதன் மூலம், கலி தன்னாலேயே அழிந்துபோகும். தர்மயுகம் பிறக்கும்’ என்று அய்யா வைகுண்டர் நம்பினார்.
கடலில் தோன்றினார் :
இதற்காகவே கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல், வைகுண்டர் திருச்செந்தூர் பதியில் கடலுக்குள் இருந்து வெளிப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமி தோப்பை அடைந்த அவர், அங்கு ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும், மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. முதல் இரண்டு வருடங்கள் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டு ஆண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் தரையில் இருந்து மேலெழுந்த நிலையிலும் தவம் இருந்தார். அவர் தவம் செய்த இடம் சுவாமிதோப்பில் உள்ள ‘வடக்கு வாசல்’ ஆகும்.

அய்யா வைகுண்டர் அடிமைத்தனத்தில் இருந்து சான்றோர் மக்களை விடுவிக்க போராடினார். அவர்களுக்கு பல போதனைகளை வழங்கினார். இதைப்பொறுக்க முடியாத சிலர், அய்யா வைகுண்டருக்கு விஷம் கொடுப்பது, சுண்ணாம்புக் களவாயில் வைத்து நீற்றுவது, புலிக்கூண்டில் அடைப்பது என்று பல்வேறு துன்பங்களைக் கொடுத்தனர். இவையாவும் இறைவடிவான வைகுண்டரை எதுவும் செய்ய முடியவில்லை. இப்போதும் கலியை அழிக்க மக்களின் மனதில் நிலைத்து நின்று அரசாட்சி செய்து வருகிறார்.
மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, திருவிழாக்கள் நடத்தி மகிழ்ந்திருந்தால், மனதைக் கலைக்கும் கலி மாய்ந்து போகும் என்ற வைகுண்டரின் வார்த்தைகளை நிறைவேற்றும் வகையிலேயே அய்யா வைகுண்ட பதிகள் அனைத்திலும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
இவற்றில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தலைமை பதியான சாமிதோப்பு வைகுண்டபதியை அடுத்ததாக, வெகு விமரிசையாக திருவிழா நடத்தப்படுவது சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்டர் தர்மபதியும் ஒன்று. அய்யா வைகுண்டர் தொட்டில் வாகனத்தில் பதி வலம் வருவது சாமி தோப்பு பதியைத் தொடர்ந்து இந்த பதியில் மட்டுமே நடைபெறும் தினசரி நிகழ்வாகும்.
மற்ற அய்யா வைகுண்டர் பதிக்கு இல்லாத மேலும் ஒரு சிறப்பு மணலிபுதுநகர் பதிக்கு உண்டு. அது அய்யா வழி பதிகளிலேயே முதன் முதலில் ராஜகோபுரம் கட்டப்பட்டது இங்குதான். அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 7 யுகங்களை குறிக்கும் விதமாக, 7 நிலைகளுடன் இந்த ஆலய ராஜ கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் தர்மம் செய்வதை முன்னுறுத்திய அய்யா வைகுண்டரின் வாக்கை நிறைவேற்றும் வகையில், இங்கு தினமும் அன்னதானம் செய்யப்படுகிறது.
திருவிழா :
மணலி புதுநகர் தர்மபதியில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள் உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்த் திருவிழா நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு திருத்தேரில் அய்யா வீதி வலம் வருவார். அய்யா வைகுண்டர்பதி அமைந்த இடங்களிலேயே, மிகப்பெரிய தேர் இருக்கும் இடம் என்ற சிறப்பையும் மணலி புதுநகர் தர்மபதி பெற்றுள்ளது. 36 டன் எடையுடன், 36 அடி உயரம் கொண்டது இந்தத் தேர்.
தேர்த் திருவிழாவை தொடர்ந்து அன்று இரவு 10.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும், பின் இரவு 1.45 மணிக்கு பூப்பல்லக்கு வாகனத்தில் அய்யா பதிவலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
தலைப்பாகை ரகசியம் :
அய்யா வைகுண்டரை வழிபடுபவர்கள் தலைப்பாகை அணியும் வழக்கம் உள்ளவர்கள். இதற்கு காரணம், மன்னர்கள் ஆட்சி காலத்தில் உயர் சாதியினர் எதிரில் வந்தால், மற்ற சாதியை சேர்ந்த ஆண்கள் துண்டை இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும் அல்லது கை இடுக்கில் வைத்து குனிந்து நிற்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. கலி அடிமைத் தனத்தை உடைத்தெறியும் பொருட்டு, சாதி, பேதமின்றி எல்லோரும் இந்த நாட்டு மன்னர்கள் என்ற அடிப்படையில் தனது பக்தர்கள் தலையில் துண்டை தலைப்பாகையாகக் கட்ட வைத்தார் அய்யா வைகுண்டர். ‘என் முன்பு கூட நீ தலைப்பாகையோடு தான் நின்று பேச வேண்டும்’ என்று அய்யா சொன்னதும் இங்கே நினைவு கூரத்தக்கது.
தாமரையும்.. ஜோதியும்..
அய்யா வழியின் சமயச் சின்னமானது, சுடரை தாங்கும் தாமரையாகும். இந்தத் தாமரையானது 1000 இதழ்களைக் கொண்டதாகும். மனிதனின் நெற்றி மையத்தில் தலை, மூளை நரம்புகளின் சங்கமம் இருப்பதாக அறிவியல் கூறுகிறது. இவற்றின் எண்ணிக்கையும் ஆயிரத்தைக் கொண்டதுதான். ஒருவரை எளிதாக மெஸ்பரிசம் செய்யக் கூடிய இடம் நெற்றிதான். மெஸ்பரிசம் போன்ற செயல்களை தடுக்கவே அய்யா வழியில், நெற்றில் திருநாமம் இடுவதாக கூறப்படுகிறது.
அதே போல் தாமரை மீது உள்ள சுடர், மனிதனின் ஆன்ம ஜோதியாகி பரம்பொருளைக் குறிக்கும். தீச்சுடரானது கீழ்நோக்கி பிடித்தாலும், மேல்நோக்கியே எரியும் தன்மை கொண்டது. அதே போல எப்போதும் மேல் நோக்கிய நிலையிலேயே மக்கள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே தாமரையின் மீதான சுடர் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர தாமரையின் மீதுள்ள நாமம், ஒன்று என்ற எண்ணைப் போல் காட்சியளிக்கும். இதற்கு எப்போதும் முதன்மையானவனாக இருக்க வேண்டும் என்பது பொருளாகும்.
சென்னை அடுத்த திருவொற்றியூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மணலிபுதுநகர். சென்னை உயர்நீதிமன்றம் பஸ் நிலையத்தில் இருந்து மணலி புதுநகருக்கு நேரடியாக பஸ் வசதி உள்ளது.

சிவபெருமான் வைத்தியநாதராக வீற்றிருந்து நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளையும் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டு அருள்பாலிக்கும் தலம் இதுவாகும்.
உலகில் தோன்றிய உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான உடலின் அமைப்பும், உடல் இயக்கமும் அமைந்துள்ளன.
மனித குலத்தில் வயது? வாழ்விடம்? உணவுப் பழக்க வழக்கத்துக்கு ஏற்றபடி உடல் அமைப்பும்? இயக்கமும் இருந்தாலும், பல காரணங்களால் அவைகளில் மாற்றம் ஏற்படும்போது அதனை நோய் என்று சொல்கிறோம். உடல் இலகுவாக இயங்கவும், மனிதனின் ‘உள்ளம்’ இறுக்கமின்றி இருக்கவும் அந்த நோய் நீங்க வேண்டும்.
நோய் நீங்க பல வழிகள் இருப்பினும் ஆதிகாலம் தொட்டு இறைவன் என்ற மூலப்பரம்பொருளிடம் இருந்து சித்தர்களும், முனிவர்களும் தாங்கள் உணர்ந்து அறிந்தவைகளைக் கொண்டு, ஏடுகளில் எழுதி வைத்து மருத்துவம் செய்து மனித சமுதாயத்துக்கு மகத்தான தொண்டு ஆற்றி உள்ளனர்.
நோய் தீர்க்கும் அற்புதத்தை சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் கற்றுக் கொடுத்த இறைவனே, வைத்தியர்களின் நாதனாக, வைத்தீஸ்வரனாக இருந்து பூலோக மக்களுக்கு நன்மை அளித்து வருகிறார்.
ஆம்! சிவபெருமான் வைத்தியநாதராக வீற்றிருந்து வினைதீர்க்கும் தலம் தான், ‘புள் இருக்கு வேளூர்’ எனும் வைத்தீஸ்வரன் கோவில். இறைவன் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளையும் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டு அருள்பாலிக்கும் தலம் இதுவாகும். இறைவனும், அம்பாள், தையல் நாயகி என்ற திருநாமத்துடன் கையில் தைல பாத்திரமும், வில்வ மரத்தடி மண்ணும் ஏந்தி காட்சியளிக்கிறார்.
நோய் நீக்கும் தலங்கள் என்றாலே அதில் முதன்மையாகவும், முழுமையானதாகவும் வரக்கூடியது இந்த வைத்தீஸ்வரம் தான். பெயரிலேயே எல்லாம் அடங்கி இருக்கிறதே! இவ்வாலயம் பக்தர்களுக்கு ஓர் பாலி கிளினிக். மருத்துவரிடம் சிகிச்சை செய்து கொண்டு மருந்து சாப்பிட்டாலும், மனது நம்பிக்கையுடன் இருந்தால்தான் வியாதிகள் தீரும். அத்தகைய நம்பிக்கையை தரும் ஆலயமாக இந்தத் திருத்தலம் விளங்குகிறது.
மேற்கு திசை நோக்கி வைத்திய நாதரும், தெற்கு திசை நோக்கி நின்று தையல்நாயகி அம்பிகையும் திருவருள் வழங்கும் பெருங்கோவில். இந்தத் தலத்தில் பதினெட்டு தீர்த்தங்கள் இருக்கின்றன. இருப்பினும் அம்பாள் சன்னிதிக்கு எதிரே, திருக்கோவில் வளாகத்தின் உள்ளேயே, சுற்றிலும் அழகிய மண்டபங்களுடன் காட்சிதரும் ‘சித்தாமிர்த தீர்த்தம்’ என்னும் திருக்குளம் சிறப்பு பெற்றதாக திகழ்கிறது.
சிவபெருமானின் உள் பிரகாரச்சுற்றில் தென்புறம் கிழக்கு நோக்கிய வலம்புரி விநாயகரும், வடபுறம் சிவசக்தியின் செல்லப் பிள்ளையாக அருணகிரிநாதர், குமரகுருபர் ஆகியோர் பாடல் பெற்ற பெருமைக்குரிய ‘செல்வ முத்துகுமரன்’ வள்ளி– தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கார்த்திகை தோறும் இரவில் தங்கத்தேரில் முருகன் வலம் வரும் காட்சியை கண்டு தரிசிக்கலாம்.
அடுத்தடுத்த சன்னிதிகளில் கஜலட்சுமியும், அஷ்டலட்சுமியும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இவர்களுக்கு அருகே நடராஜர் சபை உள்ளது. கோஷ்ட தேவதைகளாக துர்க்கை தேவியும், தென்புறம் நோக்கி அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி சன்னிதியும், மேலே விமானத்தில் சீர்காழி சட்டைநாதர் திருக்காட்சியும், எதிரே விபூதி நிறைந்த ஜடாயு குண்டமும் சிறப்புடன் விளங்குகின்றன.
ஆலய பிரகாரத்தில் சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கியபடி ஒன்பது கிரகங்களும் ஒரே வரிசையில் நிற்கின்றன. எங்கே இறைவன் அருளாட்சி உயர்ந்து கோள்கள் வலிமை குறைந்து இருக்கின்றனவோ, அங்கேதான் நவக்கிரங்கள் இப்படி ஒரே வரிசையில் இருக்குமாம். இந்தத் தலத்தில் வைத்தியநாதரின் ஆணைக்கு கட்டுப்பட்டு கிரகங்கள் இயங்குகின்றன.
தென்கிழக்கு பகுதியில் வைத்தியநாதரை வழிபட்டு முக்தி அடைந்த, மருத்துவ சித்தரான தன்வந்திரி சன்னிதி அமைந்துள்ளது. இது இத்தலம் வந்தால் நோய் நீங்கிவிடும் என்ற தன்நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்துகிறது.
நோய் நீங்க இத்திருத்தலம் வரும் பக்தர்களுக்கு விபூதியும், திருச்சாந்துருண்டையும் வழங்கப்படுகிறது. சுக்ல பட்சத்தில் ஒரு நன்னாளில் அங்க சந்தான குளத்தின் மையத்தில் உள்ள மண்ணை எடுத்து, புதுப்பாத்திரத்தில் வைத்து விபூதி குண்டத்தில் உள்ள விபூதியையும், சித்தாமிர்த தீர்த்தத்தையும் கலந்து வில்வ இலை, வேம்பு இலை மற்றும் சந்தனக் குழம்பினையும் சேர்த்து அரைத்து மாத்திரைகளாகத் தயார் செய்கின்றனர். இதனை அம்பிகை திருவடியில் வைத்து மந்திரம் சொல்லி உரு ஏற்றி நோய் பாதிப்புள்ள பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.
இந்தத் திருக்கோவிலுக்கு வந்து மனமுருக தையல் நாயகியையும், வைத்திய நாதரையும் வணங்கி விட்டு, இந்த மாத்திரையை நம்பிக்கையுடன் பெற்றுச் சென்று சாப்பிடுவது சிறப்பு.
வேப்பமரம் :
இந்த ஆலயத்தில் அமைந்துள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், அடர்ந்து பரந்து கம்பீரமாக நிற்கும் வேப்பமரம் காட்சியளிக்கிறது. இது ‘நோய் தீர்க்க நானிருக்கிறேன்’ என்று சொல்லாமல் சொல்லி, தன்னுடைய மூலிகைக் காற்றை வருபவர்களுக்கெல்லாம் வாரி வழங்குகிறது. மற்ற சிவத்தலங்களில் இல்லாத சிறப்பாக, மருத்துவ குணம் கொண்ட வேப்பமரம் இந்த ஆலயத்தில் தல விருட்சமாக இருக்கிறது.
இந்த இடத்திற்கு ஆதி வைத்திய நாதபுரம் என்ற பெயரும் உண்டு.
‘இத்தாரணியில் எவருடைய நோய் பிணியும்
சித்தாமிர் தக்கரையில் தீருமே – சக்திதையல்
மாதுக் கியைந்த வைத்தியரே நீர்மருந்தை
ஏதுக்கு மண்ணாக்கி னீர்’ என்ற பாடல் மூலமாகவும்,
‘திறன் கொண்ட அடியார் மேல் தீவினை நோய்
வாராம
அறங் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான்
அமருமிடம்
செடியாய உடல்தீர்ப்பான் தீவினைக்கோர்
மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூர்’ என்ற பாடலும் இந்த தலத்தின் சிறப்பு பற்றி எடுத்துரைக்கின்றன. இது திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற நல்வாக்காகும்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ராமலிங்க அடிகள், சிதம்பரநாத முனிவர், காளமேகப் புலவர் உள்ளிட்ட பலரும் பாடல் புனைந்த, காவிரி வடகரைத் தலங்களில் 16–வது தேவார திருத்தலமாக, இந்த ஆலயம் சிறப்புற்று விளங்குகிறது.
புள்ளிருக்கு வேளூர் :
ராமாயண காவியத்தின் தலைவனாக ராமபிரான், தன்னுடைய பெரிய தந்தையாக ஏற்றுக் கொண்ட ஜடாயு என்னும் பறவை (புள்) இங்கே தகனம் செய்யப்பட்டுள்ளது.
நால்வகை வேதங்களில் முதன்மையான ‘இருக்கு’ (ரிக்) வேதம் இறைவனை வழிபட்ட தலம் இது.
‘வேள்’ – முருகப்பெருமான் செல்ல முத்துக்குமரனாக இங்கே எழுந்தருளி தந்தை வைத்தியநாதரைப் பூசித்து பேறுபெற்ற திருத்தலம்.
எனவே தான் இந்தத் தலம் ‘புள்ளிருக்கு வேளூர்’ என்று சிறப்புப் பெயர் பெற்றுள்ளது.
செவ்வாய் என்னும் அங்காரகன் தனிச்சன்னிதியில் இருந்து, பக்தர்களின் தோஷம் நீக்குவதால் ‘அங்காரக ஷேத்திரம்’ என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. இந்தத் திருக்கோவில் தருமபுர ஆதீனகர்த்தரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் இந்தக் கோவில் நடை திறந்திருக்கும்.
நாகை மாவட்டத்தில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். மயிலாடுதுறையிலிருந்து வடக்கே 13 கிலோமீட்டர் வடக்கிலும், சீர்காழியில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

தூவாய்நாதர் திருக்கோவில் ‘பிறந்தாலே முக்தி கிடைக்கும் தலம்’ என்ற பெருமைக்குரியது.
மனுநீதிச் சோழனின் மகன் வீதிவிடங்கன். இவன் ஒரு நாள் தேரோட்டி சென்றபோது, வழியில் நின்ற கன்றின் மீது தேரை ஏற்றிக் கொன்று விட்டான். கன்றை இழந்த தாய்ப் பசு, மனுநீதிச் சோழனின் அரசாட்சியில் நீதி கேட்பவர்களுக்காக கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை அடித்தது.
இதையடுத்து நடந்த விசாரணையில் இளவரசன் வீதிவிடங்கன், கன்றைத் தேர் ஏற்றிக் கொன்றது தெரியவந்தது. கன்றைப் போலவே, தனது மகனையும் தேர் சக்கரத்தில் வைத்து கொன்றான் மன்னன். அந்த நீதி வழுவாத அரசனுக்கு, இறைவன் காட்சி கொடுத்து, இறந்த கன்றையும், இளவரசனையும் மீட்டுக் கொடுத்தார். இந்த அதிசயம் நடந்த இடம் திருவாரூர். இது ‘பிறந்தாலே முக்தி கிடைக்கும் தலம்’ என்ற பெருமைக்குரியது.
பஞ்சபூதத் தலங்களில் நிலத்திற்கான திருத்தலமாக கருதப்படும் தியாகராஜ பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயம் இங்கு அமைந்துள்ளது. இந்தத் திருவாரூரில் உள்ள தூவாய்நாதர் ஆலயம் சிறப்பு வாய்ந்ததாகும். மூவரின் தேவாரப் பாடல் பெற்றத் தலமாக விளங்கினாலும், இந்தத் தலம் சுந்தரருக்கு மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஆலயமாக திகழ்கிறது. ஏனெனில் சுந்தர மூர்த்தி நாயனாரின் வலது கண் பார்வையை மீண்டும் வழங்கிய திருத்தலம் இதுவாகும்.
தல வரலாறு :
ஒரு முறை பிரளய காலம் வந்தது. அப்போது கடல் பொங்கி எழுந்தது. இதையடுத்து உலகை காப்பாற்றக் கோரி, தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் துர்வாச முனிவரிடம், தற்போதைய தூவாய்நாதர் திருக்கோவிலின் அக்னி மூலையில் குளம் அமைத்து வழிபட்டால், கடல் அமைதி அடையும். உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கூறினார். அதன்படி துர்வாச முனிவரின் தலைமையில், மற்ற முனிவர்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடி குளம் அமைத்து ஈசனை வழிபட்டு வந்தனர்.
முனிவர்கள் செய்த பூஜையில் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், பொங்கி வந்த கடலை, அக்னி மூலையில் முனிவர்கள் அமைத்த குளத்தின் மூலம் ஈர்த்துக் கொண்டார். துர்வாச முனிவர் பூஜித்து வழிபட்டவர் என்பதால், இத்தல இறைவன் ‘துர்வாச நாதர்’ என்ற பெயரையும் பெற்று சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.
கண்பார்வை பெற்ற சுந்தரர் :
இந்த ஆலயம் சுந்தரர் பெருமானுக்கு கண்பார்வையை பெற்றுக்கொடுத்த திருத்தலம் என்ற சிறப்புடன் திகழ் கிறது. சுந்தரமூர்த்தி நாயனார், முன்பிறவியின் பயனாக சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்டு திருவொற்றியூரில் வசித்து வந்தார். அப்போது அவர் சங்கிலி நாச்சியாரிடம், ‘உன்னை விட்டு பிரியமாட்டேன்’ என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தார். ஆனால் சில காலம் கழித்ததும், திருவாரூரில் இருக்கும் தனது முதல் மனைவியான பரவையாரைப் பார்க்கும் ஆவல் சுந்தரருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அங்கிருந்து திருவாரூர் நோக்கிப் புறப்பட்டார். செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால், சுந்தரரின் கண்பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர், அடியார்களின் உதவியுடன் ஒவ்வொரு சிவாலய மாகச் சென்று தனக்கு கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று சிவபெருமானை மனமுருக வேண்டினார். அவர் காஞ்சீபுரம் வந்தபோது, காமாட்சி அம்மனின் கருணையால், ஏகாம்பரேஸ்வரநாதர், சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் கிடைக்கும்படி அருளினார்.
ஒருகண் பார்வை கிடைத்ததும், அங்கிருந்து புறப்பட்ட சுந்தரர், வழியில் இருந்த பல சிவன் கோவில்களில் தரிசனம் செய்து விட்டு, இறுதியாக திருவாரூர் வந்தடைந்தார். பின்னர் இத்தலத்துக்கு வந்து, ‘மீளா அடிமை உமக்கே ஆளாப் பிறரை வேண்டாதே’ என்று தொடங்கி செந்துருத்திப் பண்ணில் அமைந்த 11 பதிகங்களைப் பாடினார். இதில் ‘கண்பார்வையைத் திருப்பித்தா’ என்று அவர் ஈசனிடம் உரிமையுடன் உருகி வேண்டிய பாடல்களுக்கு இது ஓர் உதாரணம்.
‘விற்று கொள்ளீர் ஒற்றி அல்லேன்
விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்த தில்லை
கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் எண்கண் கொண்டீர்
நீரே பழிபட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே’ என்பது அந்தப் பாடல்.
சுந்தரரின் வேண்டுதலைக் கேட்ட இறைவன், ‘இத்தலத்தில் உள்ள அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி என்னை வணங்கு. உனக்கு கண்பார்வை கிடைக்கும்’ என்றார். அதன்படியே செய்த சுந்தரருக்கு மற்றொரு கண்ணின் பார்வையும் கிடைத்தது.
திருவாரூர் தேர் அழகு என்பார்கள். அந்த ஆழித்தேர் நிறுத்தப்பட்டிருக்கும் கிழக்கு ரத வீதியில், சற்று தெற்குப் புறத்தில் கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்துடன் உள்ளது தூவாய்நாதர் திருக்கோவில். இந்த ஆலயத்தை ‘பரவையுண் மண்தளி’ என்கிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.
‘தூவாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள்
காவாயா கண்டு கொண்டார் ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேன்
காவாஎன் பரவையுண் மண்டளி அம்மானே’ என்று சுந்தரர் பாடும் தூவாய்நாதர்தான் இங்கு மூலவராக வீற்றிருக்கிறார்.
இந்த ஆலயத்தில் உள்ள அனைத்து விக்கிரகங்களும், விஸ்வகர்மாவால் செய்யப்பட்டது என்கிறது தல புராணம். சனி பகவான் தெற்கு நோக்கியபடி, அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சுந்தரருக்கு இங்கு கண் பார்வை கிடைத்ததன் அடையாளமாக, இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது, அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதைக் காணமுடியும். சிவபெருமானின் சன்னிதியை ஒட்டி தெற்கு நோக்கிய சன்னிதியில் அம்பாள் திருஉருவம் அமைந்துள்ளது. இந்த அம்மனை சுந்தரர், ‘பஞ்சேரும் மெல்லடி யாளை ஓர் பாகமாய்’ என்று கூறுகிறார். இதற்கு இந்தத் தலத்து அம்பாள், பஞ்சை விடவும் மென்மையான பாதங்களை உடையவள் என்பது பொருள்.
மூலவரின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பெருமாள், நான்முகன், துர்க்கை ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் தெற்கில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஐயப்பன் சன்னிதியும், துர்வாச முனிவர் வழிபட்ட சிவலிங்கமும், கன்னி மூலையில் கணபதியும், வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமானும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். வடக்கில் நந்தவனமும், அதன் அருகே தீர்த்தக் கிணறும் உள்ளன.
சுவாமியின் மகாமண்டபத்திற்கு முன் உள்ள மண்டபத்தில், கயிலாயநாதரும், அவர் அருகே சுந்தரரும், பரவை நாச்சியாரும், சுந்தரரின் தோழர் சேரமான் பெருமானும் கைகூப்பியபடி நிற்கின்றனர்.
எதிரே மேற்கு நோக்கிய நிலையில் பைரவர் காட்சியளிக்கிறார். தமிழகத்தின் முதலமைச்சர் ஒரு வேளை பூஜை திட்டத்தின் கீழ் வழிபாடு நடைபெறுகின்றது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் பலா மரம், தல விருட்சமாக உள்ளது. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
திருவாரூர் கீழராஜ வீதியில் தூவாய்நாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.