என் மலர்
கோவில்கள்
நெல்லை மாநகரில் தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் உள்ள வண்ணார்பேட்டையில், பாளையங்குட்டத்துறையில் அமைந்துள்ளது பேராத்து செல்வியம்மன் கோவில்.
நெல்லை மாநகரில் தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் உள்ள வண்ணார்பேட்டையில், பாளையங்குட்டத்துறையில் அமைந்துள்ளது பேராத்து செல்வியம்மன் கோவில். மூலவரான பேராத்து செல்வியம்மன், கருவறையில் வடக்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
கோவிலின் முன் மண்டபத்தில் பரிவார தேவதைகள் உள்ளனர். பிற சன்னிதிகளில் சங்கிலி பூதத்தார், நல்ல மாடசாமி, பைரவர், கன்னிமூலை கணபதி, தளவாய் பேச்சி, வேதாளம் முதலிய தெய்வங்களும் வீற்றிருக்கின்றனர். இக்கோவிலில் தினமும் காலை, மதியம், மாலை, இரவு என நான்கு கால பூஜைகள் நடை பெறுகிறது.
தல வரலாறு :
பல நூறு வருடங்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றின் மத்தியில், பேராத்து செல்வி அம்மனின் திருவுருவம் பக்தர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது. அதை அவர் ஆற்றின் கரையிலேயே பிரதிஷ்டை செய்தார்.
துற்கன் என்ற அரக்கனை அழிக்க வேண்டி, தேவர்கள் அனைவரும் சிவ பெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான், தனது அருகில் இருந்த பார்வதி தேவியை பார்த்து, ‘ஆடலாற் காளி வருதி’ என்றார். உடனே ஆதிநாயகியிடம் இருந்த காளி, பேராற்றல் கொண்டவளாக வெளிவந்தாள். இவ்வாறு வெளிவந்த இவள் செல்வி என பெயர் பெற்றாள். பின்னர் அந்த தேவி, அரக்கனுடன் போரிட்டு அவனை அழித்தாள். பின்னர் பேராற்றின் நிலையானாள் என தல புராணம் கூறுகிறது.
பாண்டிய மன்னனின் பொறுப்பாளர் ஒருவர், தாமிரபரணியில் நீராட வந்தார். அப்போது ஆற்றின் வேகத்தில் அடித்து செல்லப்படாமல் எலுமிச்சைப்பழம் ஒன்று, ஒரே இடத்தில் மிதப்பதைக் கண்டார். அந்த எலுமிச்சை பழத்தை அவர் எடுக்க முயன்றபோது, எண்கரம் கொண்ட அம்மன் சிலை ஒன்று தட்டுப்பட்டது. அதனை வெளியில் எடுத்து பிரதிஷ்டை செய்து, பின் பாண்டிய மன்னரால் ஆற்றங்கரையில் இத்திருக்கோவில் எழுப்பப்பட்டது என்றொரு செவிவழிச் செய்தியும் உள்ளது. பேராற்றில் கண்டெடுக்கப்பட்டதால், இந்த அம்மன் ‘பேராற்று செல்வி’ என்று பெயர் பெற்றாள். பின்னர் இதுவே மருவி பேராத்து செல்வி என்றானது.
ஆலன் என்ற ஆங்கிலேயருக்கு தொழு நோய் இருந்தது. அவர் இந்த ஆலயத்திற்கு வந்து அம்பாளை இடைவிடாது வழிபட்டதால், அவரது நோய் குணமானது. குட்ட நோய் தீர்த்த தலம் என்பதால், இந்த இடம் குட்டத்துறை என சிறப்பு பெயர் பெற்றது.
திருவிழா :
சித்திரை மாதம் மூன்றாவது செவ்வாய் மற்றும் நான்காவது செவ்வாய்க்கிழமைகளில், இந்த ஆலய கொடை விழா நடக் கிறது. ஆடி மாதம் நடைபெறும் ‘முளைக்கட்டும் திருவிழா’ விமரிசையான ஒன்றாகும். விஜயதசமி அன்று ‘தசரா திருவிழா’வும் வெகு விமரிசையாக நடைபெறும். தை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் ஆண்டு வருசாபிஷேக விழா சிறப்பாக நடைபெறு கிறது.
தொழு நோய் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து அம்மனை மனதார வேண்டி சென்றால், அவர்களுக்கு ஏற்பட்ட நோய் நீங்கும் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள், இத்தலத்து அம்பாளை வழிபடுவதற்காக வந்து செல்கிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் அம்பாளுக்கு செவ்வரளி மாலையிட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு பயபக்தியுடன் வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை இல்லாத பெண்கள் இத்தலத்து அம்பாளை வழிபட்டால் அவர்களுக்கு அம்பாள், அருள்பாலித்து குழந்தைபேறு வழங்குவதாக ஐதீகம்.
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து பாளையங்கோட்டை செல்லும் சாலையில், வண்ணார்பேட்டையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். திருநெல்வேலி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை செல்லும் டவுன் பஸ்களில் ஏறி வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறங்கி, சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால் கோவிலை அடைந்து விடலாம். ஆட்டோ, கார் போன்ற வாகனங்களிலும் சென்று வரலாம்.

வடதிருப்பதிக்கு நேர்ந்த நேர்த்திக்கடன்களை இத்தலத்தில் நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால் இத்தலத்தில் நேர்ந்த நேர்த்திக்கடன்களை வட திருப்பதியில்(திருப்பதி) செலுத்த இயலாது என்பது இத்திருக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் குன்னத்தூர் குன்றுக்கு தெற்கே அமைந்துள்ளது மேலத்திருவேங்கடநாதபுரம். தாமிரபரணி ஆற்றின் வடகரை ஓரமாக ஒரு சிறு குன்றின் மீது ஊரும், ஊருக்கு நடுவே மேடான இடத்தில் வெங்கடாசலபதி கோவிலும் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மகிமைகளை உடைய இக்கோவில் தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.
ஆலய அமைப்பு :
ஊரின் முகப்பில் காணப்படும் குளத்தின் கரையோரம் யானை சரிவு பாதை ஒன்று செல்கிறது. சரிவு பாதை வழியாக மேலே ஏறிச்சென்றால் கோவிலுக்கு முன்பாக உள்ள கீழ ரத வீதியை அடையலாம். இங்குதான் கோவிலுக்கு செல்லும் படிகள் தொடங்குகின்றன. இங்குள்ள பன்னிரண்டு படிகளும் பன்னிரு ஆழ்வார்களாக கருதப்படுகின்றன. இந்த படிகளை கடந்து சென்றால், திருக்கோவிலின் பெரிய முற்றத்தினை அடையலாம். இங்கு நின்று பார்த்தால் கோவிலின் நுழைவு வாசலின் மீது அமைந்துள்ள சிறிய கோபுரம் தென்படுகிறது. ஆலயத்தில் படிப்படியாக அமைந்துள்ள ஏழு மேடுகளை ஏறி கடந்த பின்னர்தான், கருவறையில் இருக்கும் வேங்கடவனை(பெருமாளை) காண முடியும். இந்த ஏழு நிலைகளின் மேல் ஏழு மண்டபங்கள் அமைந்துள்ளன. நுழைவு வாசல் மண்டபம் கல்லால் ஆனது. நுழைவு வாசல் மண்டபத்தின் இரு பாதைகளுக்கும் நடுவே பலிபீடம் இருக்கிறது. இதையடுத்து கொடிமரம். இதன் பின்புறம் உள்ள கருவறையை நோக்கிய சிறிய மண்டபம், ‘கருட மண்டபம்’ என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாவது மண்டபமாகிய மணி மண்டபத்தில் இரண்டு பெரிய மணிகள் தொங்குகின்றன. இந்த மண்டபத்தை ஏழு கல்தூண்கள் தாங்குகின்றன. இந்த தூண்களில் கற்பக விநாயகர், நவநீதகிருஷ்ணன், துவார பாலகர்கள், மகாவிஷ்ணு, நரசிம்மன், ராமர், சீதை, லட்சுமணன், நடராஜர், முருகன், மன்மதன் சிற்பங்கள் மற்றும் பல்வேறு முனிவர்களின் திருவுருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
ஐந்தாவது மண்டபமாகிய ஆஸ்தான மண்டபத்தின் நடுவில் உள்ள மேடையில் உற்சவர் சீனிவாச பெருமாள், இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் விற்றிருக்கிறார். மேலும் உற்சவருக்கு அருகில் தனியாக வடவேங்கத்திலே(திருப்பதி) எழுந்தருளியுள்ள, அதே அலர்மேலுமங்கை பிராட்டி இங்கேயும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்கின்றனர். கருவறையில் எழுந்தருளியிருக்கின்ற மூலவருக்கு ‘திருவேங்கடநாதர்’ என்று பெயர். இவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
தல வரலாறு :
புராண காலத்தில் இந்த பகுதி பெருங்காடாக இருந்தது. மகாபாரதம் அருளிய வியாசரின் முதன்மை சீடரான பைலர் என்ற முனிவர், இந்த தாமிரபரணி ஆற்றின் கரை ஓரம் அமர்ந்து சீனிவாச பெருமாளை நினைத்து தவம் செய்தார். அப்போது அங்கு கோவிலோ, பெருமாள் சிலையோ, பூஜை செய்ய சிலைகளோ கிடையாது.
பைலர், தனது மனதிற்குள்ளே பெருமாளை மனதாலே பூஜை மலர்களை போட்டு அர்ச்சனை செய்து வழிபட்டார். மனதிற்குள்ளே ஒரு கோடி மலர்களை போட்ட பின்னர், ஏழாவது நாள் அர்ச்சனை பூக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மிகப்பிரகாசமான ஒளியாக வானத்தில் எழுந்தது. அந்த ஒளி தீபத்திற்குள் சீனிவாச பெருமாள் தோன்றினார். அவர் காலடியில் தாமிர பரணி நதி தெய்வத்தையும் பைலர் கண்டார்.
பெருமாளின் அருள்வடிவத்தை கண்ட முனிவர், இருவரையும் வணங்கி இருவருக்கும் பூஜை செய்தார். பின்னர், ‘சீனிவாச பெருமாளே! உன் ஆனந்த வடிவத்தை காண நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். வடக்கே வேங்கடமலையான திருப்பதியில் குடிகொண்ட வெங்கடாசலபதி பெருமாளே, தாங்கள், தங்கள் புடை சூழ எப்போதும் இங்கு இருந்து அருட்செய்ய வேண்டும்’ என்று வேண்டினார்.
சுமார் 650 ஆண்டுகளுக்கு முன், மதுரை திருமலை நாயக்கரின் ஆட்சியின் கீழ் சிற்றரசராக வெங்கடப்ப நாயக்கர் ஆண்டு வந்தார். அவர் குழந்தைபேறு இல்லாமல் பல்வேறு கோவில்களுக்கு சென்று வந்தார். அப்போது இங்கு வந்து தாமிரபரணி ஆற்றில் மூழ்கி எழுந்ததும் ஒரு அசரீரி ஒலி கேட்டது. ‘மன்னா! நீ ஆயிரம் குழந்தைகளுக்கு கோவிலில் வைத்து, அவர்கள் பசியை போக்கினால் உனக்கு குழந்தை பேறு கிடைக்கும்’ என்றது அந்தக் குரல்.
மன்னனும் பெருமாளை வணங்கி எழுந்து ஒரு பெரிய உருளி பானையில் பொங்கலிட்டு பெருமாளுக்கு படைத்து ஆயிரம் குழந்தைகளின் பசியை போக்கினான். அவனுக்கு குழந்தை செல்வம் கிடைத்தது. தன் மகனுக்கு சீனிவாசன் என்று பெயர் வைத்தான். மன்னன் நீராடிய இடம், அசரீரி ஒலித்த இடம் “சீனிவாச தீர்த்த கட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. தனக்கு குழந்தைசெல்வம் கிடைத்த மகிழ்ச்சியில் மன்னன் இக்கோவிலை மிகப்பெரிதாக கட்டினான். கோவிலுக்கு வருகின்றவர்களின் பசியை போக்க நிலங்கள் பலவற்றை தானம் செய்து கோவிலுக்கு எழுதி வைத்தான். தன் பெயரால் வேங்கடநாதபுரம் என்ற ஊரை கோவிலை சுற்றி அமைத்தான்.
இக்கோவிலில் சித்திரை பிரமோற்சவம், புரட்டாசி சனி, மார்கழி திருப்பள்ளி எழுச்சி, வைகுண்ட ஏகாதசி ஆகிய திருவிழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறும். இக்கோவிலுக்கு நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதியும், நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மினி பஸ் வசதியும் உண்டு.
கோவில் தல விருட்சம் :
இக்கோவில் மணி மண்டபத்திற்கெதிரே மதிற்சுவரின் உட்புறம் தென் கிழக்கு மூலையில் ஒரு நெல்லி மரம் உள்ளது. இதற்கு பூஜைகள் நடைபெறுகின்றன. சிலர் இதனை தலவிருட்சம் என்கின்றனர். வேறு சிலர், இத்திருத்தலம் முன்பு மூங்கில் காடாக(வேணுவனம்) இருந்ததால் நெல்லையப்பர் கோவிலைப்போன்று இங்கும் மூங்கில் மரமே தல விருட்சம் என்கிறார்கள்.
மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரும் இந்த பெருமாள் மீது பெரும் பக்தி கொண்டு இருந்தார். இவரும், விசுவநாத நாயக்கரும், இந்த கோவிலுக்கு வந்து தாமிரபரணி ஆற்றில் உள்ள ஸ்ரீனிவாச தீர்த்த கட்டத்தில் நீராடி பெருமாளை வழிபட்டு சென்றதுடன் இக்கோவிலுக்கு பல மானிய உதவிகளையும், கட்டளைகளையும் செய்துள்ளனர்.
வடவேங்கடமாகிய திருப்பதிக்கு செல்ல இயலாத பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து இங்குள்ள வெங்கடேச பெருமாளை தரிசித்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வணங்கி செல்கிறார்கள். ஒவ்வொரு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து பெருமாளின் கருட சேவை காட்சியை கண்டு தரிசித்து செல்கிறார்கள்.
வடதிருப்பதிக்கு நேர்ந்த நேர்த்திக்கடன்களை இத்தலத்தில் நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால் இத்தலத்தில் நேர்ந்த நேர்த்திக்கடன்களை வட திருப்பதியில்(திருப்பதி) செலுத்த இயலாது என்பது இத்திருக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
கோவிலுக்கு வெளியே கொடிமரம் :
பொதுவாக எல்லா கோவில்களிலும் கொடிமரமானது கோவிலுக்கு உள்ளேயே இருக்கும். ஆனால் இக்கோவிலில் கொடிமரம் கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது. இக்கொடிமரத்தில் ‘கம்பத்தடியான்’ என்ற தெய்வம் இருப்பதாக சொல்லப்படுகிறது. உயரமான கட்டிடங்களில பணி செய்வோர் இத்தெய்வத்தினை வழிபட்டால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேராது என்று அவர்கள் நம்புகின்றனர்.
குழந்தை இல்லாத தம்பதியினர் திருவோண நட்சத்திரத்தன்று பாயசம் நிவேதனம் செய்து கம்பத்தடியானுக்கு படைத்து பின்பு அந்த நிவேதனத்தை கோவிலுக்கு வருபவர்கள், குழந்தைகளுக்கு கொடுத்து பாயசம் செய்த உருளியை கொடிமரம் அருகில் கவிழ்த்து வைத்தால் அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்றும் பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது.

ஐயப்பன் கோவிலுக்கு இடதுபுறம் சுமார் முன்னூறு அடி தூரத்தில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மனின் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை பற்றி பார்க்கலாம்.
ஐயப்பன் கோவிலுக்கு இடதுபுறம் சுமார் முன்னூறு அடி தூரத்தில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மனின் கோவில் அமைந்துள்ளது. ஐயப்பனின் தரிசனம் முடிந்ததும் கீழே இறங்காமல் மஞ்சமாதா கோவில் செல்வதற்கு நடைமேடை அமைத்திருக்கிறார்கள்.
மஞ்சமாதாவின் கோவில் சென்றதும் முதலில் நாம் வணங்க வேண்டியது ஸ்ரீ கடுத்தசுவாமியைத்தான். மிகுந்த சக்தி படைத்த தெய்வம். பிறகு அங்கிருந்து மணிமண்டபம் செல்ல வேண்டும். இந்த மணிமண்டபம் ரொம்ப அழகானது. இங்கே தான் மகரவிளக்கன்று வரும் திருவாபரணப் பெட்டியை இறக்கி வைப்பார்கள்.
ஜோதி தரிசனத்திற்கு பிறகு சபரிமலை வரும் பந்தள ராஜ பரம்பரை மன்னரும் அவர் குடும்பத்தாரும் இங்குதான் தங்குவார்கள்.
இந்த மஞ்சமாதா கோவிலில் மணிமண்டபத்திற்கு அருகில் நாகராஜா, அதற்கு அருகில் நவக்கிரகங்கள் உள்ளன. இவற்றை ஐயப்ப பக்தர்கள் சுற்றி வந்து வணங்குவார்கள்.
இதன் வலது பக்கம் சுவரை அடுத்து காட்டுத் தேவதைகள், நாகயட்சி அமைந்துள்ளன. இவற்றுக்கு மஞ்சள் தூவி வழிபடுவது வழக்கமாக உள்ளது.
மஞ்சமாதா கோவில் எளிமையாகக் காணப்பட்டாலும் வெகு அழகாக நேர்த்தியாக உள்ளது. மஞ்சமாதாவின் வரலாறும் சுவையானது.
மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலிருந்து லீலா என்ற தேவதை போன்ற பெண்ணொருத்தி வெளிவந்து ஐயப்பனை வணங்கி ‘நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன். என் சாபம் நீங்குவதற்கு காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வரவேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்...’ என வேண்டினாள்.
ஐயப்பன் அவளிடம் ‘நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாகச் சத்யப்பிரமாணம் செய்துள்ளேன்...’ என்று கூறி அந்த பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்து கோவிலின் இடப்புறம் மாளிகைபுறத்து அம்மன் என்ற பெயரில் அமர்ந்து இங்கே என்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஐயப்பன் கேட்டுக்கொண்டபடி, அந்த பெண் சபரிமலையில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுறத்தம்மனாக அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறாள்.
பக்தர்கள் மஞ்சமாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், அவளது திருக்கோவில் பிரகாரத்தைச் சுற்றி தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அவளது அருளைப் பெற்று வருகிறார்கள்.
மஞ்சமாதா கோவிலில் சில ஐயப்ப பக்தர்கள் ரவிக்கைத் துண்டு வைத்தும், வெடிவழிபாடு செய்தும் வணங்குகிறார்கள். திருமணம் வேண்டிய சிலர் இரண்டு ஜாக்கெட் துண்டுகளைக் கொடுத்து, ஒன்றைத் திரும்பப் பெற்று அதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். இப்படி வேண்டுதல் செய்திட அடுத்த ஆண்டிலேயே அவர்களது திருமணம் ஏற்பாடாகி இனிதே நடைபெறுகிறது என்று சொல்லப்படுகிறது.
மாளிகைபுரத்திற்கு என்று தனியாக மேல்சாந்தி ஒருவர் இருக்கிறார். மஞ்சமாதா கோவில் பூஜைகள் போன்றவற்றை இவர்தான் செய்கிறார். சபரிமலையில் நடத்தப்படும் முக்கியப் பூஜைகளில் ஒன்று பகசதி பூஜை. இதற்கு ரூபாய் நூற்றி ஒன்றை மஞ்சமாதா கோவிலில் உள்ள தேவஸ்தானம் கவுண்டரில் கட்டி ரசீது பெற வேண்டும். இப்பூஜையை மேற்குறிப்பிட்ட மேல்சாந்திதான் நடத்தி கொடுப்பார்.
பெண்களுக்கு ஏற்படும் சகல நோய், நொடி, பிரச்சினைகளையும், திருமணத்தடையையும் நீங்கச் செய்கிறது இப்பூஜை என்று கூறுகிறார்கள். மஞ்சமாதா கோவில் அருகே உள்ள மணிமண்டபத்தின் எதிரிலே சின்ன வாத்தியம் என்ற இசைக்கருவியைப் புள்ளுவன்கள் என்கிற வாத்தியக்காரர்கள் இசைக்கக் காணலாம்.
சிறுதொகையை அவர்களுக்குப் பக்தர்கள் அன்பளிப்பாக கொடுத்து வாசிக்கச் சொல்கிறார்கள். அந்த இசை கேட்டு அங்கே இருக்கும் சகல தெய்வங்களும் அருளாசி வழங்கி ஆசிர்வதிப்பதாக நம்பப்படுகிறது. ஐயப்பனைக் கண்குளிர தரிசனம் செய்த பிறகு கற்பூர ஆழிவழிபாடு என்றொரு சடங்கை நடத்துகிறார்கள் ஐயப்ப பக்தர்கள்.
குங்குமம், விபூதி, மஞ்சள், மிளகு, பேரீச்சம்பழம், கல்கண்டு, காணிக்கைப் பணம் போன்றவற்றைத் தனித்தனி தட்டில் ஏந்தி ஊதுபத்தி கட்டைக் கொளுத்தி, அதைக் கையில் ஏந்தியவாறு ஒருவரும், பன்னீர் தெளித்துக்கொண்டே இன்னொருவரும், கூட்டமாக குருசாமி தலைமையில் சரணம் கூறிக்கொண்டே அங்கே கண்ணுக்குத் தென்படும் ஒவ்வொரு தெய்வத்தையும் பார்த்து வழிபட்டுக்கொண்டே கோவிலைச் சுற்றி வருவதுதான் இந்த கற்பூர ஆழிவழிபாடு என்பது! இப்படி வழிபடச் செல்லும் போது விபூதித் தட்டில் சூடம் எரிய எடுத்துச் செல்கிறார்கள்.
கூட்டமாகக் குருசுவாமி தலைமையில் செல்பவர்கள் ஐயப்பனின் சன்னதி சென்று, கொடிமரத்துக்கு அப்பால் நின்று சூடம் தீபாராதனை காட்டி ஐயப்பனை மனதார வணங்கி விட்டு உண்டியலில் காணிக்கைப் பணத்தைப் போடுகின்றனர். பின்னர் கன்னி மூல கணபதியையும், அதன் பின் நாகராஜாவையும் வணங்கி விட்டு சரணம் கூறியபடி 18-ஆம் படிக்கு வருகின்றனர்.
அங்கு கருத்தசாமி, கருப்பண்ணசாமி, 18 படிகளுக்கு தீபராதனை செய்து பின்பு வாபர் சன்னதி சென்று வணங்கி விட்டு மஞ்சமாதா சன்னதிக்கும் சென்று வணங்கி விட்டு தங்களது தங்குமிடத்திற்குத் திரும்பி வந்து குருசாமி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக் கொள்வார்கள்.

பல சிறப்புகளை கொண்ட குன்றத்தூரில் கோத பரமேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவன் பெயர் கோதபரமேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திலும், ராகு பகவான் 18 ஆண்டுகள் ஆட்சி செய்வார். அந்த சமயத்தில் அந்த மனிதர் ராகு திசையின்போது நடக்கும் சஞ்சாரத்திற்கேற்ப அவரது பலன்கள் மாறுபடும். ராகுவின் தாக்கம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால் அவர் பரிகாரம் செய்ய வேண்டிய தலம் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நான்காம் கயிலாயம் என்று அழைக்கப்படும் சங்காணியாகும்.
காணி என்றால் நிலம். செங்+காணி என்றால் செந்நிறத்தில் உள்ள நிலம் என்று பொருள். அதன்படி பொத்தையில் மண் செந்நிறமாக காட்சியளிக்கிறது. மேலும் குன்று போன்ற இடத்தில் இந்த ஊர் உள்ளதால், இந்த ஊர் குன்றத்தூர் எனவும் அழைக்கப்படுகிறது.
கோதபரமேஸ்வரர் கோவில் :
பல சிறப்புகளை கொண்ட இந்த ஊரில் கோத பரமேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவன் பெயர் கோதபரமேஸ்வரர் என்கிற கயிலாசநாதர். இறைவி சிவகாமி அம்மன். கோவிலின் தீர்த்தம் தாமிரபரணி. தல விருட்சம் வில்வம். நெல்லையப்பர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் செப்பேடு ஒன்றில், இத்திருத்தலத்தின் பெயர் திருநாங்கீசநேரி என்றும், இத்தலத்து இறைவன் திருநாகீசர்(ராகு தலமான திருநாகேசுவரம் போன்று) என்றும் அழைக்கப்பட்டுள்ள செய்தி தெரியவருகிறது.
அகத்திய மாமுனிவரின் முதல் சீடரும், பிரம்மனின் பேரனுமான உரோமச மகரிஷி, தான் முக்தியடைய நவ கயிலாயத்தை உருவாக்கினார். அதில் நான்காம் கயிலாயம் சங்கானி எனும் திருவேங்கடநாதபுரம். இது, ராகு ஸ்தலமாக அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் தாமிரபரணி கரையில் கோவில் இருந்ததாகவும், இயற்கை சீற்றத்தினால், தற்போது ஆற்றின் கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தல வரலாறு :
முற்காலத்தில் உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்த சிவனை வணங்கி பலரும் நன்மை அடைந்தனர். ஆனால் பிற்காலத்தில் ஏற்பட்ட இயற்கை மாற்றத்தினால் சங்கானி கிராமமே காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் குன்னத்தூரை குறுநில மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். இவருக்கு சொந்தமான செங்கானி அருகில் பொத்தை இருந்தது. இந்த பொத்தையில் அரியவகையான மரம் ஒன்று இருந்தது.
இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூ பூத்து, ஒரே ஒரு காய் காய்த்து, அந்த காய் பழமாகும். இந்த பழத்தை சாப்பிட்டால் நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும். இதனால் இந்த பழம் மீது அந்த குறுநில மன்னனுக்கு அளவற்ற விருப்பம். அந்த மரத்தை மன்னர் மிகவும் பாதுகாத்து வந்தார். ஒரு சமயம் அந்த ஊரில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர், குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காக குடத்துடன் சென்றாள். அந்த மரத்தின் அடியில் அந்த பெண் சென்றபோது எதிர்பாராதவிதமாக அந்த அரியவகை மரத்தில் இருந்த பழம், கர்ப்பிணிப்பெண் எடுத்து சென்ற குடத்தில் விழுந்து விட்டது.
அதை கவனிக்காத அந்தப் பெண், வழக்கம்போல் தண்ணீர் எடுத்து விட்டு தனது வீட்டிற்கு சென்று குடத்தை வைத்து விட்டாள். மறுநாள் மரத்தில் இருந்த பழத்தை காணாததை கண்ட மன்னர் திகைத்துப்போனார். யாரோ அந்தப் பழத்தைத் திருடிச் சென்று விட்டனர் என்று எண்ணிய மன்னர், பழத்தை திருடியவர்களை கண்டுபிடிக் குமாறு தன் பணியாளர்களுக்கு உத் தரவிட்டார்.
மன்னரின் உத்தரவையடுத்து சேவகர்கள், அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சோதனையிட்டனர். இறுதியில் கர்ப்பிணிப்பெண்ணின் வீட்டில் இருந்த குடத்தில் அந்தப் பழம் கிடப்பதை கண்டனர். பழத்தினை அந்தப் பெண்தான் திருடிச் சென்று விட்டதாக சேவகர்கள் கருதினர். இதனையடுத்து அந்தப் பெண்ணை மன்னரிடம் அழைத்து சென்றனர்.
அந்தப் பெண்ணிடம், ‘பழம் உனது குடத்தில் எப்படி வந்தது?’ என்றார் மன்னன்.
அதற்கு அந்த பெண்மணி, தனது குடத்தில் அந்த பழம் எப்படி வந்தது என்று தனக்கு தெரியாது என்று கூறினாள். ஆனால் அந்த பெண் கூறியதை மன்னன் நம்பவில்லை. அந்த பெண்ணை கழுவில் ஏற்றுமாறு உத்தரவிட்டான்.
அவளைக் கழுவேற்றும்போது, ‘என்னை கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல், செய்யாத தவறுக்கு என்னை கழுவேற்றிய அரசே... இனி இந்த ஊரில் பசு, பெண்கள் தவிர வேறு எவரும் உயிர் வாழ மாட்டார்கள்’ என்று சாபமிட்டாள்.
அந்த கர்ப்பிணிப்பெண் இட்ட சாபத்தின்படி அந்த ஊரே அழிந்து காடாகிப் போனது. அந்த ஊரில் பசுக்கள் மட்டும் வாழ்ந்தன. மேலும் உரோமச முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் கேட்பாரற்று கிடந்தது. அப்போது சிவபெருமான் தனது திருவிளையாடலை தொடங்கினார்.
அந்த காட்டில் இருந்த லிங்கத்தின் மீது பசுக்கள் எல்லாம் சென்று பால் சொரிந்தன. இதை அறிந்த சேவர்கள் இந்த தகவலை மன்னரிடம் கூற, அவரும் அந்த அற்புத காட்சியைக் கண்டார். உடனே அவர் சிவபெருமானுக்கு கோவில் கட்டினார். அந்த கோவில்தான் தற்போது உள்ள கோதபரமேசுவரர் ஆலயம்.
இந்தப் பகுதியில் உள்ள சிவபக்தர்கள் மூலமாக இக்கோவில் சீரமைக்கப்பட்டு, இங்கு தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் சிவராத்திரி, பிரதோஷம் போன்றவை சிறப்பாக நடைபெறும். திருமணம், குழந்தை பாக்கியம், கால தோஷம், நாகதோஷம் போன்றவைக்கு ராகு கால பூஜை செய்யப்படுகிறது.
ஆலய அமைப்பு :
இத்திருக்கோவில் கிழக்கு பார்த்து இருப்பதால் உள்ளே நுழைந்ததும் பக்தர்கள் முதலில் அம்மனை தான் வணங்குகிறார்கள். கருவறைக்குள் விநாயகர், சிவலிங்கம், நந்தி பகவான் ஆகியோர் உள்ளனர். எந்த கோவிலிலும் இல்லாத ஒரு அதிசயம் இக்கோவிலில் உள்ளது. அது என்னவென்றால் மூலவர் கயிலாசநாதர் நெஞ்சில் சர்ப்பம் ஒன்று உள்ளது. இதை எப்போதும் காண முடியாது. அபிஷேக நேரத்தில் மட்டுமே இதைப் பார்க்க முடியும்.
கோவிலுக்கு வெளியில் உள்ள நந்திய பெருமான் எழுந்து நிற்க முயல்வது போல் அபூர்வமாக காட்சியளிக்கிறார். மேலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருவாச்சியுடன் கூடிய பன்னிரண்டு கரங்களுடன் ஆறுமுக நயினார் சன்னிதி உள்ளது. சண்டிகேசுவரர், பைரவர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் உள்ளனர். இத்தல மானது ராகுவின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோர் பரிகாரம் செய்ய வேண்டிய தலமாகும்.
இத்தலத்து இறைவனை வழிபடுவது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேசுவரம் சிவபெருமானை வழிபடுதலுக்கு சமமான ஒன்றாகும். வயிற்றுக்கோளாறு, மனநோய், மூலநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் இத்தலத்து இறைவனை வழிபட இந்த நோய்கள் நீங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் கல்வித்தடை, திருமண தடை, புத்திர தோஷம் ஆகியவைகளையும் நீக்கும் அற்புத தலமாக இக்கோவில் திகழ்கிறது. இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
திருநெல்வேலி ரெயில் நிலையம் மற்றும் திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில், மேலத்திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது கீழத்திருவேங்கடநாதபுரம். நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் மற்றும் நெல்லை நகரில் இருந்து மினி பஸ்களில் இக்கோவிலுக்கு பக்தர்கள் சென்று வரலாம்.

திருக்கார்த்திகை திருநாளில் சுசீந்திரம் சென்று, தாணுமாலயனை வழிபட்டு வந்தால், நம் வாழ்வும், நம் சந்ததியினரின் வாழ்வும் ஒளிமயமாகும்.
திருக்கார்த்திகை தீபம் என்றாலே நினைவுக்கு வருவது திருவண்ணாமலை திருத்தலம் தான். நினைத்தாலே முக்தியைத் தரும் ஆலயம் அல்லவா அது... ஜோதி ரூபனாய் ஆதியும், அந்தமும் இல்லாமல் உயர்ந்து நின்ற சிவபெருமானின் திருவடியையும், திருமுடியையும் காண முடியாமல் விஷ்ணும், பிரம்மனும் திணறிப் போயினர்.
அவர்களில் திருமாலை முடியிலும், பிரம்மாவை அடியிலும் வைத்து, தன்னை நடுவில் இணைத்துக் கொண்டு சிவலிங்க வடிவமாக, ஈசன் அருள்புரியும் இடமே சுசீந்திரம். இங்கு இறைவன் மும்மூர்த்திகளின் வடிவமாக தாணுமாலயன் என்ற பெயர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தாணு (சிவன்), மால் (விஷ்ணு), அயன் (பிரம்மா) ஆகியோர் இணைந்த உருவமே தாணுமாலயன். தன்னுடைய அடியையும், முடியையும் காண முடியாத விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும், கார்த்திகை திருநாளில் தன்னை வழிபட்டதால், தனது முடியிலும், அடியிலும் இடமளித்து அருள்புரிந்தார். ஆகையால் அந்த திருக்கார்த்திகை திரு நாளில் சுசீந்திரம் சென்று, தாணுமாலயனை வழிபட்டு வந்தால், நம் வாழ்வும், நம் சந்ததியினரின் வாழ்வும் ஒளிமயமாகும்.
அத்ரி மகரிஷிக்காகவும், அவரது மனைவி அனுசுயாதேவிக் காகவும், ஈசன் இங்கு மும்மூர்த்திகளாய் காட்சி தருகிறார். இத்தல தாணுமாலய சுவாமியின் லிங்க வடிவில் சாத்தப்பட்டுள்ள தங்கக் கவசத்தில், சுவாமியின் திருமுகம், அதன் மேற்புறம் 14 சந்திரப் பிறைகளும், அதன் மேல் ஆதிசேஷனும் காட்சி யளிக்கின்றன. தாணுமாலய சுவாமி கருவறை கோஷ்டத்தின் பின்புறம், உள்பிரகாரத்தில் மரச் சட்டத்தினால் ஆன 27 நட்சத்திர தீபக் குழிகள் உள்ளன. கார்த்திகை திருநாள் மற்றும் பவுர்ணமி நாட்களில் தூய பசு நெய் கொண்டு, தாமரைத் திரி போட்டு, 27 நட்சத்திர தீபக் குழிகளிலும் தீபமேற்றி வழிபட்டால், ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், நம் கர்மவினைகள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.
கருவறை கோஷ்டத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் மூடு விநாயகர், துர்க்கை, அமர புஜங்கப் பெருமாள், சங்கரநாராயணர், சண்டேஸ்வரர், நடராஜர் சன்னிதிகள் உள்ளன. இத்தல மூடு விநாயகரையும், சங்கரநாராயணரையும் தொடர்ந்து 8 பவுர்ணமி நாட்கள், 5 அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சுப காரியத் தடைகள் அகலும்.
ஆலயம் 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் முதலில் நந்தீஸ்வரரையும், சிதம்பரேஸ்வரரையும் வழிபடலாம். பின்னர் கிழக்கு பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, ஆதிசன்னிதி எனப்படும் கொன்றையடியில் உள்ள மும்மூர்த்திகளை வழிபட வேண்டும். இங்குள்ள அலங்கார மண்டபத் தூணில் உள்ள விநாயகியை, 8 அமாவாசை தினங்கள் தீபம் ஏற்றி வழிபட்டால், பெண்களின் மாதவிலக்கு பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது. நீலகண்ட விநாயகரின் முன்பு உள்ள வசந்த மண்டபத்தின் மேற்கூரையில் பன்னிரண்டு ராசிகளும், நவக்கிரகங்களும் உள்ளன. இந்த வசந்த மண்டபத் தூணில் கால பைரவர் சிற்பம் உள்ளது. இங்கு 8 செவ்வாய்க் கிழமைகளில் தீபமேற்றி வழிபட, வீடு கட்டும் யோகம் உண்டாகும். தடைபட்ட கட்டிட வேலைகளும் தடையின்றி நடைபெறும்.
இத்தலத்தில் 18 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால், உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும். செவ்வாய், சனி, மூல நட்சத்திர நாள், அமாவாசை நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது உகந்தது. சுசீந்திரம் ஆலயத்திற்குள் பெருமாள் சன்னிதியும் உள்ளது.
இவ்வாலய தெப்பக்குளத்தின் வடகரையில் முன் உதித்த நங்கை என்னும் ஆதிபராசக்தி ஆலயமும், அதனை அடுத்துள்ள திருவாவடுதுறை திருமடத்தில் காலபைரவர் தனி ஆலயமும் உள்ளது. இங்குள்ள முன் உதித்த நங்கை அம்மனும், காலபைரவரும்தான், மும்மூர்த்தி தலமான சுசீந்திரம் திருத்தலத்தின் காவல் தெய்வங்களாவர்.
இந்திரன் வழிபட்ட ஈசன் :
தாணுமாலய சுவாமியின் கருவறையில் அர்த்தஜாம பூஜைகளை, அர்ச்சகர்கள் யாரும் செய்வ தில்லை. ஆனால் அர்த்த ஜாம பூஜைக்கான அனைத்து பொருட்களையும் வைத்து விடுவார்கள். அப்படி இரவு நேர பூஜைக்காக பொருட்களை வைத்த அர்ச்சகர், மறுநாள் பெருமாள் கோவிலுக்குச் சென்று விடுவார். முன்தினம் பெருமாள் ஆலயத்தில் இரவு பூஜை செய்தவர், மறுநாள் காலையில் தாணுமாலையன் கருவறைக்கு அர்ச்சனை செய்ய வருவார்.
காரணம்.. இங்கு ஒவ்வொரு நாளும் அர்த்த ஜாம பூஜையில் தாணுமாலையனை, இந்திரன் பூஜிப்பதாக ஐதீகம். முன்தினம் வைத்த பொருட்கள், மறுநாள் மாறுதல் அடைந்திருக்குமாம். எனவேதான் இந்த அர்ச்சகர் மாறுதல். ‘அகம் கண்டதை புறம் சொல்லேன்’ என சத்தியம் செய்து இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
ஒரு முறை சாபம் காரணமாக இந்திரனின் உடல் முழுவதும் கோரமாக மாறியது. அந்த சாபத்தில் இருந்து விடுபட, இத்தல இறைவனை இந்திரன் வழிபட்டான். அதன் பயனாக அவனது கோர உடல், முன்பு போலவே அழகாகவும், சுத்தமாகவும் மாறியது. இந்திரனின் உடன் சுத்தமானால் இந்த தலத்திற்கு சுசீந்திரம் என்று பெயர் வந்தது. சுசி என்றால் சுத்தமான என்று பொருள். (சுசி+ இந்திரன்=சுசீந்திரன் என்பது மருவியே சுசீந்திரம் என்றானது)
நாகர்கோவில்- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் உள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா திண்ணியம் கிராமத்தில் உள்ள சண்முகநாத சுவாமி கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. அதை பற்றி பார்க்கலாம்.
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகாவில் உள்ளது திண்ணியம் கிராமம். இங்குள்ள சண்முகநாத சுவாமி கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. 1000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயம் ராஜராஜசோழனின் சகோதரியான குந்தவை நாச்சியார் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். இக்கோவிலில் முருகப்பெருமான், வள்ளி – தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
‘குமார தந்திரம்’ என்ற ஆகம சாஸ்திர விதிப்படி, திண்ணியம் சண்முகநாத சுவாமி கோவில் அமைப்பு களும், நித்திய பூஜைகளும் அமைந்துள்ளன. பொதுவாக முருகப்பெருமான் மட்டுமே மயில் மேல் அமர்ந்திருக்கும் கோலத்தைத் தான் அனைவரும் தரிசித்திருப்போம். ஆனால் இங்கு, வலதுபுறத்தில் வள்ளியும், இடது புறத்தில் தெய்வானையுமாக முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்திருக்கிறார்.
இதன்படி திண்ணியம் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவில் ஊரில் நுழைந்த உடனே காணும் படி அமைந்துள்ளது. வேலும், மயிலும் துணை என்பார்கள். அந்தவகையில் கோவிலுக்குள் நுழைந்தவுடன் பெரிய வேல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திண்ணியம் சண்முகநாத சுவாமி கோவில் தியானம் செய்வதற்கு ஏற்ற வகையில் அமையப்பெற்றுள்ளது.
சுவாமிக்கு எதிரில் அருணகிரிநாதரை பிரதிஷ்டை செய்துள்ளனர். அருகில் உற்சவமூர்த்திகளும் உள்ளனர். மேற்கில் அபிஷேக மண்டபம், கோடிஷ்வர சிவலிங்கம், கிழக்கு நோக்கிய சிவன் சன்னிதி, இடது பக்கம் ஸ்ரீபெரியநாயகி அம்பாள் கோவில் இருவருக்கும் முன்னே நந்திகேஷ்வரர், கோஸ்டிஷ்வர சுவாமி, வலது புறம் காசி விஸ்வநாத சுவாமி விசாலாட்சி அம்மனுடன் இருக்கிறார்கள்,
மேலும் விநாயகர், சூரியன், பைரவர், சண்டிகேஷ்வரர், நவக்கிரகங்கள் ஆகிய பரிவார தேவர்களும், மகாலட்சுமியின் சகோதரியான ஜேஷ்டாதேவிக்கு தனி சிலையும் கோவிலுக்குள் உள்ளது. மேலும் கோவிலின் தென் கிழக்கே மீனாட்சி சுந்தரேஷ்வரர் ஆலயமும், எதிர்புறம் மேற்கே ஸ்ரீசந்தான கோபால சுவாமி பெருமாள் கோவிலும், பின்புறம் திரவுபதி அம்மன் கோவில் மற்றும் கிராம தேவதைகள் கோவில்களும் உள்ளன.
திண்ணியம் சண்முகநாத சுவாமியை வழிபடுபவர்களுக்கு காரிய சித்தி உண்டாகும். இக்கோவிலில் கோபுர வாசல் படி மேடையில் கிழக்கு நோக்கியபடி இடும்பன் சன்னிதி உள்ளது. வழக்கமாக நவக்கிரகங்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத கோணத்தில் இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் நேருக்கு நேராக பார்த்துக் கொள்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மூலவரான முருகப் பெருமானை தரிசித்து விட்டு நின்ற இடத்தில் இருந்து திரும்பிப் பார்த்தால், சிவன், பார்வதி இருவரையும் ஒருசேர தரிசனம் செய்யலாம்.
இக்கோவிலில் காலை, மாலை என இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி, கார்த்திகை, தைபூசம், ஆகிய விசேஷ நாட்களில் விசேஷ அபிஷேகங்கள் மற்றும் சஹஸ்ரநாம அர்ச்சனைகள் நடத்தப்படுகின்றன. மேலும் பங்குனி உத்திரத்தின் போது வள்ளி திருமணம், கந்த சஷ்டி விழாவின் போது சண்முகா அர்ச்சனை, வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி பூஜைகளும் செய்யப்படுகின்றன. திருமணத்தடை உள்ளவர்கள் தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகள், செவ்வரளி பூக்கள் கொண்டு முருகப்பெருமானை சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திண்ணியம் கிராமத்தைச் சுற்றி பாடல் பெற்ற சிவ தலங்களும், வைணவ தலங்களும் அமைந்துள்ளன. வட காவிரி என்ற கொள்ளிடத்திற்கு நேர் வடக்கே திண்ணியம் சண்முகநாத சுவாமி ஆலயம் இருக்கிறது. திருமழபாடி, திருவையாறு பகுதிகளில் உள்ள முக்கிய சிவ தலங்கள் கிழக்கிலும், ரதிதேவிக்கு மாங்கல்ய சித்தி அளித்த பூவாளூர் என்ற ஷேத்திரம் மேற்கிலும், ஆலங்குடி, கீழப்பழுர், சிதம்பரம் பகுதிகளில் உள்ள சரித்திர பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்கள் வடக்கிலும், தெற்கில் திருத்தவத்துறை என்று அழைக்கப்படும் லால்குடி, அன்பில் என்ற அன்பிலாதுறை சிவதலம் மற்றும் மகா மாரியம்மன் கோவில்களும் இருக்கின்றன.

அகமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே உள்ளது ‘கோலியாக்’ என்ற கடற்கரை கிராமம். இந்த கோவில் பற்றிய வரலாற்றை கீழே விரிவாக பார்க்கலாம்.
அகமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே உள்ளது ‘கோலியாக்’ என்ற கடற்கரை கிராமம். இங்குள்ள கடற்கரைதான் பலரையும் வியப்பையும், அதன் வாயிலாக மெய்சிலிர்க்க வைக்கும் பக்தியையும் வழங்கி வருகிறது. இந்த கடற்கரையில் இருந்து சுமார் 1½ கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் ஒரு சிவாலயம் இருக்கிறது. எல்லா நேரங்களிலும் இந்த ஆலயம் கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆனால் குறிப்பிட்ட இடைவெளியில் சுமார் 6 மணி நேரம் மட்டும் கடல் உள்வாங்கி சிவாலயம் வெளிப்படுவதுதான் விசேஷம். அதிலும் இந்த அதிசய சம்பவம் தினமும் அதே நேரத்தில் அதே அளவு கால இடைவெளியில் நடைபெறுவது மேலும் வியப்பை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது.
காலை 8 மணி அளவில் இந்தப் பகுதியில் கடல் உள்வாங்குவதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இறைவனை வழிபடுவதற்காக கடற் கரையில் காத்திருக்கும் பக்தர்கள், நடந்தே கடலுக்குள் செல்கின்றனர். உள்ளே மேடை போன்ற மணல் திட்டில் அந்த சிவாலயம் அமைந்திருக்கிறது. மேட்டின் மீது ஆங்காங்கே தனித்தனியாக 5 சிவலிங்கங்கள் உள்ளன. பெரிய கல் கொடி மரம் ஒன்றும் இருக்கிறது. இது தவிர சூலம் கொண்ட நான்கு தூண்களும் அமைந்துள்ளன. நந்தியும் உண்டு.
பெளர்ணமி காலங்களில் அதிக தூரம் உள்வாங்கக் கூடியது. ஆகஸ்ட் -செப்டம்பர் மாதம் பல மணி நேரம் கடல் உள்வாங்கிய நிலையில் இருக்கும். கடல் உள்வாங்க நாமும் அப்படியே நடந்து போகலாம்.
இந்த சிவாலயத்தில் உள்ள இறைவனை அந்தப் பகுதி மக்கள் ‘நிஷ்களங்க மகாதேவர்’ என்று போற்றி வழிபடுகின்றனர். இந்த ஆலயம் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது. கடலுக்குள் சிவலிங்கங்கள் அமைந்திருக்கும் மேட்டின் ஒரு சுனையும் இருக்கிறது. இது மேலும் வியப்பை தருகிறது. மகாபாரதப் போரில் தங்களுடைய கவுரவர்களை எதிர்த்து போரிட்டனர்.
அவர்கள் அனைவரும் ஒருவகையில் உறவினர்களே, போரில் உறவினர்களையே கொன்றதால், அவர்களுக்கு களங்கம் உண்டானது. அந்த களங்கத்தைப் போக்கிக் கொள்வதற்காக, பாண்டவர்கள் ஐந்து பேரும் சிவபெருமானை வழிபட எண்ணினர். அதன்படி கடலுக்குள் 5 சிவலிங்கங்களை தனித்தனியாக அமைத்து வழிபாடு செய்தனர். அவர்களின் வழிபாட்டில் மனமிரங்கிய சிவபெருமான், அவர்களின் களங்கத்தைப் போக்கினார். இதனால் இந்த இறைவன் ‘நிஷ்களங்க மகாதேவர்’ என்று அழைக்கப்படுவதாக காரண காரியம் கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தை கண்டு வணங்குவது எளிதான காரியம் அல்ல. கடல்நீர் வற்றியதும், கடலுக்குள் குறுக்கே நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழி, பள்ளமும், சேறும் நிறைந்த பாதை. ஒன்றரை கி.மீ. நடக்க வேண்டும். ஆடையெல்லாம் நனைந்து, தடுமாறி விழுந்து, அடிபட்டு ஒருவழியாக சமாளித்து தான் ஆலயத்தை அடைய முடியும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் சிந்திக்காத பக்தர்கள், இங்கு நூற்றுக்கணக்கில் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
சென்னை - அகமதாபாத் நவஜிவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அகமதாபாத் சென்று, அங்கிருந்து பாவ்நகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்க வேண்டும். பாவ் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோலியாக் கடற்கரைக் கோவில்.
குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கோலியாக் என்ற இடத்தில்தான் இந்த கடல் கோயில் இருக்கிறது..பாவ்நகர்....எளிதில் சென்றடையும் வகையில் ரயில் மற்றும் விமான போக்குவரத்து உண்டு. பாவ்நகரில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது கோலியாக். இந்த சிறு கிராமத்தை தாலாட்டுகிறது அரபிக் கடல்..

கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் தான் தனிக்கோவில் உள்ளது. இதன் வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும், கற்றுணர்ந்த சரஸ்வதி ஒரு முறை தவம் செய்ய நினைத்தார். இதற்காக பூவுலகில் அமைதியும், அழகும், நிறைந்த கூத்தனூரை தேர்ந்தெடுத்தாள். அம்பாளே இங்கு தவம் புரிந்ததால் இந்த ஊர் ‘அம்பாள் புரி’ எனவும் அழைக்கப்படுகிறது.
கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார்.
ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.
தலவரலாறு :
சத்தியலோகத்தில் ஒரு முறை சரஸ்வதிக்கும், பிரம்மனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கு அரசியான தன்னால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத்தொழிலால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று பிரம்மனும் வாதிட்டனர். வாதம் முற்றி, ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர்.
இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணிய கீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற பெயரில் மகனாகவும், சிரத்தை என்ற பெயரில் மகளாகவும் பிறந்தனர்.
அவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் வரன் தேட தொடங்கினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்கும். இது இயலாத காரியம். பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொள்வது இயலாத காரியம் என்று கூறி, சரஸ்வதியிடம் நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாய் என்று கூறி அருள்பாலித்தார். அதன்படி சரஸ்வதி தேவி, கூத்தனூரில் தனியாக கோவில் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்வி செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.
சரஸ்வதி தேவியை தேடி சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து குப்த கங்கையாக காட்சி அளிக்கிறது.
குழந்தைகளுக்கு கல்வி தோஷம் போக்கி ஞானப்பால் ஊட்ட, திருவுளம் கொண்ட சரஸ்வதி அமைதியே தவழும் வடிவம் கொண்டாள். வெள்ளை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். கீழ் வலது கையில் சின்முத்திரை, கீழே இடது கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கரத்தில் கலசமும் தாங்கி காட்சி தருகிறாள்.
ஜடாமுடியுடன் கருணை புரியும் விழிகளும், ஞானசஷஸ் என்ற மூன்றாவது திருக்கண்ணும், புன்னகை தவளும் திருவாயுமாக கிழக்கு முகமாக அருளாட்சி புரிகிறாள்.
சிவன் கோவிலில் மகா துர்க்கையும், பெருமாள் தலத்தில் மகாலட்சுமியும் தனிக்கோவில் கொண்டு, கூடவே சரஸ்வதியும் விளங்குவதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை.
பூஜைகள், திருவிழாக்கள் :
கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் வசந்த ராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படும். சாரதா நவராத்திரி 12 நாட்களும், அடுத்த 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். இந்த நாட்களில் சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, மலர் அலங்காரம் என பல்வேறு கோலங்களில் அம்பாள் காட்சி தருவாள். சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம்.
விஜயதசமியன்று காலை ருத்ராபிஷேகம் நடைபெறும். இரவு அன்னவாகனத்தில் அம்பாள் வீதி உலா நடைபெறும். அன்று நூற்றுக்கணக்கான கார், வேன்களுக்கு ஆயுதபூஜை செய்வார்கள்.
அன்னைக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கும். அதன்பிறகு விடையாற்றி விழாவும், 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். அந்த நாட்களில் அம்பாளை ஊஞ்சலில் வைத்து ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம் செய்வர்.
சித்திரை மாதம் முதல் தேதியில் தொடங்கி 45 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். இவை தவிர ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு அலங்காரமும் உண்டு. மாதந்தோறும் கலைமகளுக்கு பவுர்ணமி அன்று மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், மூல நட்சத்திரம் அன்று சிறப்பு அபிஷேகம் உண்டு.
கும்பாபிஷேகம் நடத்த ஆனி மாதம் மக நட்சத்திரத்தன்று ஸமவித்ஸரா அபிஷேகம் நடை பெறும்.
நவராத்திரி 10 நாட்களும் காலை, மாலை என 2 வேளைகளிலும் விநாயகரின் வீதி உலா நடைபெறும். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
அம்பாள் கோவிலில் காலை, மாலை, அர்த்த ஜாமம் என 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. பெருமாள், சிவன், கோவில்களில் காலை, மாலை என இருகால பூஜைகள் உண்டு. பிரம்மபுரீஸ்வரருக்கு மகா சிவராத்திரி அன்று விசேஷ அபிஷேக அலங்காரம் நடக்கும்.
அமைவிடம் :
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தில் இறங்கினால் 5 நிமிட நடைபயணத்தில் கோவிலை அடையலாம். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்காலுக்கு பூந்தோட்டம் வழியாக செல்லும் பஸ்சிலும் வரலாம்.
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறையில் செல்லும் பஸ்சில் ஏறி 25 கிலோ மீட்டர் பயணித்தால் கோவிலை சென்று அடையலாம்.

நாகை மாவட்டம், சீர்காழி அருகே திருநகரி கிராமம் உள்ள கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் திருமங்கையாழ்வார் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே திருநகரி கிராமம் உள்ளது. இங்கு 108 திவ்யதேசங்களில் ஒன்றான கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் திருமங்கையாழ்வார் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
குழந்தைப்பேறு :
திருநகரிக்கு அருகே உள்ள திருக்குறவளூரில் கி.பி.398-ம் ஆண்டு நள வருடம் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்முகத்தின் அம்சமாய் அவதரித்தார், திருமங்கையாழ்வார். இவர் இளமையிலேயே ஆயுத வித்தையில் தேர்ச்சி பெற்று விளங்கினார். அதனால் இவருக்கு ‘பரகாலன்’ என்ற பெயரும் உண்டு. சோழ மன்னன் திருமங்கையாழ்வாரை குறுநில மன்னராக ஆக்கினான். அதனால் தன் ஆட்சியை சிறப்பாக செங்கோல் செலுத்தி புகழ் பெற்று விளங்கினார் திருமங்கை.
‘திருவெள்ளக்குளம்’ என்று அழைக்கப்படும் அண்ணன் பெருமாள் கோவில் என்ற திருத்தலத்தில் உள்ள தாமரைப் பொய்கையில் பல கன்னியர்கள் நீராடினர். அவர்களில் ஓர் அழகிய நங்கை, குமுத மலரை கொய்து கொண்டிருந்தாள். அப்போது அவளுடைய தோழிகள் அவளை தனியே தத்தளிக்கவிட்டுச் சென்றனர். அந்த நேரம் பார்த்து அங்கு ஒரு வைத்தியர் வந்தார். அவர் அந்தப் பெண்ணிடம் விசாரிக்க, அவள் தோழிகள் தன்னை விட்டுவிட்டுச் சென்றதைக் கூறினாள். மேலும் தன்னை பாதுகாத்து அருள வேண்டும் என்றும் வேண்டினாள். வைத்தியரும் மன மகிழ்ச்சியோடு அந்தப் பெண்ணை, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மனைவியிடம் ஒப்படைத்தார். வைத்திய தம்பதியினருக்கு குழந்தைப்பேறு இல்லை. எனவே அந்த நங்கையை தங்கள் மகளாக நினைத்து வளர்த்து வந்தனர்.
குமுதவல்லி :
அந்த நங்கை, குமுத மலரை கொய்த காரணத்தால் ‘குமுதவல்லி’ என்று அழைத்தனர். அவள் திருமண வயது அடைந்தவுடன், அவளுக்கேற்ற கண வனைத் தேடினர்.
இந்த நிலையில் திருமங்கை மன்னனுடைய ஆதரவாளர்கள் சிலர், குமுதவல்லியின் அழகைப்பற்றியும், குணாதிசயங்களைப் பற்றியும் அவரிடம் கூறினர். திருமங்கை மன்னன் திருவெள்ளக்குளத்தில் இருந்த வைத்தியர் இல்லத்திற்கு சென்று வைத்தியரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்து பார்த்த குமுதவல்லியை திருமங்கை கண்டார். கண்டவுடன் காதல் மேலோங்கி ‘இவளை எனக்கு திருமணம் செய்து தரவேண்டும்’ என்று கேட்டார்.
இதைக்கேட்ட குமுதவல்லி குறுக்கிட்டு, ‘சங்கு சக்கர முத்திரையும், திருமண்ணும் தரித்த வைணவருக்கே வாழ்க்கைப்படுவேன்’ என்று கூறினாள். மேலும் ‘நீர் ஓராண்டு, தினமும் 1,008 வைணவர்களுக்கு அன்னதானம் வழங்கி அவர்களுடைய திருவடித் தீர்த்தத்தையும், அவர்கள் உண்ட சேடத்தையும் உட்கொண்டால் உம்மை நான் கணவராக ஏற்றுக் கொள்வேன்’ என்று கூற அவள்பால் கொண்ட வேட்கையினால், அதற்கு உட்பட்டு அப்படியே செய்வதாக வாக்குக்கொடுத்தார் திருமங்கை.
அன்னதானம் :
திருமங்கை மன்னன் தினமும் 1,008 வைணவருக்கு அன்னதானம் செய்து வந்தார். சோழ மன்னனுக்கு செலுத்த வேண்டிய பகுதி பணம் முழுவதும், இந்த நல்ல காரியத்திற்கு செலவழிந்தது. எனவே திருமங்கையால் பகுதி பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் சோழ மன்னன் திருமங்கையை பிடித்து சிறை வைத்தான். திருமங்கை உணவு இல்லாமல் 3 நாட்கள் பட்டினி கிடந்தார்.
பெருமாள் திருமங்கையின் முன்பாக தோன்றி ‘உனக்கு உணவு மற்றும் வேண்டிய பொருட்களை தருகிறேன் வா’ என்று அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்த ஒரு நதிக்கரையில் பொருள் உள்ள இடத்தை சுட்டிக்காட்டினார். திருமங்கை அந்த பொருளை எடுத்து வந்து அரசனுக்குச் சேர வேண்டியதை செலுத்தினார். மீதம் உள்ள பொருளை அன்னதானத்திற்கு வைத்துக்கொண்டார். திருமங்கை கைவசம் இருந்த பொருட்கள் எல்லாம் அன்னதானம் செய்து செலவழித்தார். அனைத்தும் செலவழிந்த நிலையில், என்ன செய்வதென்று அறியாமல், தன்னுடைய கையாட்கள் துணையோடு, வழிப்பறி செய்து அதன் மூலம் இறைவனை பூஜித்து, அன்னதானம் செய்தும் வந்தார்.
கலியன் :
திருமங்கையை நல்வழியில் திருப்புவதற்கு பெருமாள் சித்தம் கொண்டார். அதன்படி அந்தணர் வேடம் பூண்டு, தன் தேவியரோடு, நகைகளை அணிந்தபடி திருநகரியில் உள்ள வேதராஜபுரம் சென்றார். அங்கு அரச மரத்தடியில் பதுங்கி இருந்த திருமங்கை, அந்தண உருவில் இருந்த பெருமாளையும், தேவியரையும் தன் பரிவாரங்களின் துணையோடு ஆயுதம் தாங்கியபடி வழிமறித்தார். அவர்களிடம் நகைகளை பறித்தபோது, தேவியின் கால் விரலில் அணிந்திருந்த மெட்டியை, திருமங்கையால் கழற்ற முடியவில்லை. பலமுறை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. அதனால் திருமங்கைக்கு ‘கலியன்’ என்ற பெயரும் வந்தது.
பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட மற்ற பொருட்களை எல்லாம் மூட்டையாகக் கட்டி, அந்த மூட்டையை தூக்க முயன்றார். அதுவும் அசைக்க முடியாதபடி ஆயிற்று. இதனால் ஆத்திரம் அடைந்த திருமங்கை, அந்த அந்தணரை (பெருமாளை) நோக்கி ‘நீ என்ன மந்திரம் பண்ணினாய்’ என்று தனது படையைக் காட்டி மிரட்டினார். அந்தணரும் அந்த மந்திரத்தினை உமக்கு சொல்லுகிறேன்; அருகில் வாரும்’ என அழைத்தார். அருகில் வந்த திருமங்கையின் காதில், ‘ஓம் நமோ நாராயணா’ எனும் மந்திரத்தை உபதேசித்து அருளினார். பின்னர் கருட வாகனத்தில் திருமகளோடு காட்சியளித்தார்.
மந்திர உபதேசம் பெற்ற திருமங்கை, அஞ்ஞானம் அழிந்து தத்துவ ஞானம் கைவரப்பெற்றார். இறைவன் மீது நான்கு வகை கவிகளையும் பாடினார். தொடர்ந்து இறைவனின் பல தலங்களுக்குச் சென்று பெருமாளை வணங்கி, மங்களாசாசனம் பாடியுள்ளார். இதன் பிறகு திருமங்கை மன்னன் திருமங்கையாழ்வார் என அழைக்கப்படுகிறார்.
சிறப்பு வழிபாடு :
திருநகரி கல்யாணரங்கநாதர் கோவிலில், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாதந்தோறும் கார்த்திகை நாளில் திருமங்கையாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
அந்நாளில் திருமங்கையாழ்வாரை வழிபட்டால் கல்வி செல்வம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்பட சகல செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும். இவரது சன்னிதியில் திருமங்கையாழ்வார் பூஜை செய்த ‘சிந்தனைக்கினியான் பெருமாள்’ தேவியர்களுடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் கார்த்திகை மாதம் 10 நாட்கள் திருமங்கை ஆழ்வார் கார்த்திகை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு உற்சவம் அடுத்த மாதம் 4-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருமங்கை ஆழ்வார் தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைதிறந்து இருக்கும்.
வழியும் தூரமும் :
இந்த கோவில் நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் புதுத்துறை மண்டபம் என்ற இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும் திருநகரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காருவள்ளி ஊராட்சியில் உள்ள பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி கோவில் தான், ‘சின்ன திருப்பதி’ என்று பெயர் பெற்று விளங்குகிறது.
மக்கள் அனைவரும் வழிபடும் முக்கியமான கோவில்களில் ஒன்று திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம். ஆனால் தமிழக மக்கள் பலராலும் இந்த ஆலயத்திற்கு சென்றுவர முடியாத நிலை இருக்கலாம். அவர்களுக்காகவே தமிழகத்திலும் பெருமாள் அருள்பாலிக்கிறார். அந்த திருத்தலம் சின்ன திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காருவள்ளி ஊராட்சியில் உள்ள பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி கோவில் தான், ‘சின்ன திருப்பதி’ என்று பெயர் பெற்று விளங்குகிறது. இங்கு சுமார் 30 அடி உயர குன்றின் மீது வீற்றிருந்து பிரசன்ன வெங்கட்ட ரமண சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமலை திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால், திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பேறை அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும் இந்த பகுதியில் உள்ள சுற்றுவட்டார பக்தர்கள், சின்ன திருப்பதி கோவிலுக்கு வந்து உத்தரவு பெற்ற பின்னரே திருமலை யாத்திரை மேற்கொள்வார்கள். அங்கு சென்று திரும்ப வரும் பக்தர்கள் மீண்டும் சின்ன திருப்பதி பிரசன்ன வெங்கட்டரமண சுவாமியை வணங்கிய பின்னரே தங்கள் ஊர்களுக்கு செல்கிறார்கள்.
தல வரலாறு :
வைகுண்டத்தில் வீற்றிருக்கும் வைகுண்டநாதரை தரிசிக்க வாயு தேவன் விரைந்து வந்தார். திருத்தல காவலர் ஆதிசேஷன் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் ‘யார் பலசாலி?’ என்ற போட்டி எழுந்தது. ஆதிசேஷனோ மேருமலையின் குமாரரான ஆனந்த பர்வதத்தை சுற்றிக்கொண்டு நின்றார். வாயு பகவான், பலமாக காற்றை வீசி அந்த மலையை பெயர்த்திட முயன்றார். சுற்றிச் சுழன்றடிக்கும் கடும் சூறாவளியை கண்டு, அனைத்து உயிர்களும் அஞ்சி நடுங்கின. தேவர்கள் ஓடிச்சென்று இருவரையும் சமாதானம் செய்து கொள்ளும்படி வேண்டினர்.
தேவர்கள் வேண்டுகோளை ஏற்று செவிமடுத்த ஆதிசேஷன், தன் ஆயிரம் தலைகளில் ஒன்றை மட்டும் சற்றே நகர்த்தினார். அப்போது காற்றின் வேகத்தால் ஆனந்த பர்வதத்தின் ஒரு பகுதி பிளந்து வீசி எறியப்பட்டது. அது இரு துண்டுகளாகி பூமியில் விழுந்தது. அதில் ஒன்றே தொண்டை நாட்டு பெரிய திருப்பதி. மற்றொன்று கொங்கு நாட்டில் விழுந்த சின்ன திருப்பதி மலையாகும்.
இவ்வாறு தோன்றிய மலையில் ஒரு புற்றில் மகாவிஷ்ணு தங்கி இருந்தார். புற்றில் இருந்த திருமாலுக்கு அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுக் கூட்டங்களில் இருந்து பிரிந்து வந்த பசு ஒன்று, தினமும் பாலை சொரிந்தது. தனித்து செல்லும் பசுவின் மீது சந்தேகம் கொண்ட பசு மேய்ப்பவன், அந்தப் பசுவை பின்தொடர்ந்து, அது செய்து வந்த செயலைக் கண்டான். மேலும் அங்கிருந்த குன்றின் மீது ஒரு சிறிய அழகிய கோவில் உருவாகி இருந்ததையும் கண்டு அதிசயப்பட்டான். அதனால் அவனுக்கு மலைக்கண்டான் என்னும் பெயர் வந்தது. அந்த வம்சத்தினரே சுவாமி காரியங்களை செய்து வந்தனர்.
தான் கண்ட காட்சியை மலைக்கண்டான், அந்த ஊர் மக்களிடம் அறிவித்தான். திரண்டு வந்த மக்கள், அவதார மூர்த்தியாகிய வெங்கட்டரமண சுவாமி சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக் கண்டு பேரானந்தம் கொண்டனர். குன்றெடுத்து பசுக்கூட்டங்களை குளிர்மழையில் இருந்து காத்த தெய்வம், பசுவாலே அடையாளம் காட்டப்பட்டு அன்பர்களுக்கு தரிசனம் தரும் தலம் இந்த புனித தலமாகிய சின்ன திருப்பதியே ஆகும்.
இங்குள்ள அலர்மேலு மங்கை அம்மன், வெங்கட்டரமண சுவாமியுடன் இணைந்ததற்கு ஒரு வரலாறு கூறப்படுகிறது. அதைப் பார்க்கலாம்.
ராவண வதம் முடிந்த பிறகு சீதையை ராமர் தீக்குளிக்கச் செய்தார். அப்போது சீதாதேவி இரு உருவமாக தீயில் இருந்து வெளியே வந்தார். ஓர் உருவம் சீதை, மற்றொரு உருவம் வேதவதி. ராவணன் மாயா சீதையை தான் இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்திருந்தான். அந்த மாயா சீதையே வேதவதி. கற்பு தெய்வத்தை காக்க வேண்டி சீதையாக உருவெடுத்து துன்பப்பட்ட வேதவதியை, அவர் விருப்பப்படி ராமர் திருமணம் செய்து கொள்ள இசைந்தார். ஆனால் ராமர் இருமாதரை சிந்தையாலும் தொடாத ஏகதார நோன்பினர். எனவே கலியுகத்தில் வேதவதியை, பத்மாவதியாக பிறக்க வைத்து தான் வெங்கடேசனாக மணப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து வேதவதி தீயில் மறைந்தார். அதன்பிறகு சின்ன திருப்பதியில் பத்மாவதி தாயாருடன் வெங்கட்டரமணராக சுவாமி அருள் பாலிப்பதே இந்த கோவிலின் தல வரலாறு ஆகும்.
திருமாலின் திருமார்பில் வீற்றிருந்த திருமகள், கருத்து வேறுபாட்டால் பெருமாளை பிரிந்திருந்தார். பத்மாவதி தாயார் தனக்கு வாழ்வு கொடுத்த லட்சுமி அம்மையை மறக்காது, தம்முடன் சேர்ந்திருக்க அழைத்து வரச்சொன்னார். கபில மாமுனிவர் சென்று அன்னை ஸ்ரீதேவியை அழைத்து வந்ததாக தல வரலாறு கூறுகிறது. எனவே இந்த ஆலயத்தில் இருபக்கமும் தேவியர் நிற்க வெங்கட்டரமண சுவாமி நடுவே நின்று அருள்காட்சி வழங்குகிறார்.
தனி சன்னிதியில் பத்மாவதி தாயார்:
வெங்கட்டரமண சுவாமி ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக நின்று, இரு புறங்களிலும் அலர்மேலுமங்கையுடனும், லட்சுமியுடனும் காட்சி அளித்து அருளாட்சி புரிந்து வருகிறார். கோவிலின் உள் பிரகாரத்தில் ராம பக்தராகிய ஆஞ்சநேயரை தரிசித்து அவருடைய அனுக்கிரகத்தை பெற்று உள்ளே நுழையலாம். கோவில் வளாகத்தில் தனிச் சன்னிதியில் பத்மாவதி தாயார், வீரலட்சுமியாக வீற்றிருக்கிறார். திருமண தடை, புத்திரப்பேறு, செல்வம், பருவத்தில் மழை போன்ற வரங்களைப் பெற, ஆண்டாள் வழங்கிய திருப்பாவை பத்மாவதி தாயார் முன் மண்டபத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பாகும். கோவிலின் வடபுறத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமும், ராம காரியமாக இலங்கை புறப்படும் முன்பு தன் விஸ்வரூபத்தை காட்டிய திருக்கோலத்தோடும் ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார்.
பூஜை - திருவிழாக்கள் :
இந்த கோவிலில் ராமானுஜரும், நம்மாழ்வாரும் எழுந்தருள்வதால், ஆரம்ப காலங்களில் இங்கு வேதமும், பிரபந்தமும் சிறப்புற நடைபெற்றிருப்பதை உணர முடிகிறது. கோவிலில் 3 கால பூஜை நடந்து வருகிறது. அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, சுப்ரபாதம், விசுவரூப தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து காலை 7 மணிக்கு திருவாராதனம் சாற்றுமுறை, மதியம் 1 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை நடை அடைப்பு. 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாலை 6 மணி முதல் சாயரட்சை, திருவாராதனம் முடிந்து 6.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. திருவிழா காலங்களிலும், சனிக்கிழமை, அமாவாசை நாட்களிலும் இந்த கால அட்டவணை மாறுபடும்.
மாதாந்திர உற்சவங்கள், திருவிழாக்கள், தமிழ்ப்புத்தாண்டு, ஆடிப்பெருக்கு, நவராத்திரி, கார்த்திகை தீப உற்சவம், புரட்டாசி தேர்த்திருவிழா, மார்கழி நோன்பு, வைகுண்ட ஏகாதசி உற்சவம், ராமநவமி போன்ற விழாக்கள் இந்த கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த கோவிலின் தல விருட்சம் அரப்பு மரம் (ஊஞ்ச மரம்) ஆகும்.
அமைவிடம் :
சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா காருவள்ளி ஊராட்சி அருகே அமைந்துள்ளது, சின்ன திருப்பதி கோவில். ரெயில் மூலமாக சென்றால் சேலம் சந்திப்பில் இருந்து பெங்களூரு மார்க்கத்தில் காருவள்ளி ரெயில் நிலையத்தில் இறங்கி கோவிலை அடையலாம். ஓமலூரில் இருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு டவுன் பஸ்சும் உள்ளது.

இருதயாலீசுவரராக அருள் பொழியும் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகரில் உள்ள இத்தல இறைவனை வழிபட்டு இதய நோய் நீக்கம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் இருக்கும். ஆசை என்பது ஆளுக்கு ஆள் மறுபடலாமே தவிர, ஆசை என்பதே இல்லாதவர் இருக்க முடியாது. குடியிருக்க சொந்தமாக வீடு கட்ட வேண்டும், ஊரைச் சுற்றி பவனி வர கார் வாங்க வேண்டும், பிறர் முன்பு அந்தஸ்தாக இருக்க நல்ல உடைகளை வாங்கி அணிய வேண்டும் என்ற ஆசைகள் அனைவருக்கும் உரியதுதான்.
இதயத்தில் எழுப்பிய ஆலயம் :
ஆனால் திருநின்றவூரில் வசித்த பூசலார் என்ற சிவபக்தருக்கு வந்த ஆசை சற்று வித்தியாசமானது. தனது இஷ்ட தெய்வமான சிவபெருமானுக்கு, கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து மகிழ வேண்டும் என்பது தான் அந்த ஆசை. ஆனால் விதி வலியது அல்லவா? கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த நினைத்த பூசலாரோ, மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்பவர். தினமும் உணவுக்கே அல்லாடும் ஒருவர் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது?. அவரது இந்த எண்ணத்தைக் கேட்ட பலரும் எள்ளிநகையாடினார்கள்.
ஆனால் அந்த சிவபக்தர் மனம் சோர்ந்து போய்விடவில்லை. பணம்தானே கையில் இல்லை. மனம் இருக்கிறது. மனதிலேயே என் அன்புக்குரிய இறைவனுக்கு ஆலயம் எழுப்புகிறேன் என்றவர், ஒவ்வொரு நாளும் ஆலயத்தின் வடிவம் குறித்த சிந்தனையிலேயே ஆழ்ந்தார். அவரை மக்கள் அனைவரும் சிவ பித்தன் என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். கோவிலின் கருவறை, மண்டபங்கள், உள்சுற்று, வெளிச்சுற்று, மதில்சுவர் என்று தினம் தினம் உள்ளத்தினுள்ளே, சிவபெருமானுக்கான ஆலயத்தை அற்புதமாக எழுப்பினார். அந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்கான தேதியையும் தன் மனதிலேயே குறித்து விட்டார்.
அப்போது காஞ்சியை ராசசிம்மன் என்ற பல்லவ மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் அந்தப் பகுதியில் சிவபெருமானுக்கு கலை நயத்தோடு கூடிய ஆலயம் ஒன்றைக் கட்டி முடித்து, பூசலார் தன் மனதில் குறித்து வைத்திருந்த தேதியிலேயே கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நாள் பார்த்திருந்தான். விடிந்தால் கும்பாபிஷேகம் என்ற நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு தூங்குவதற்காக புறப்பட்டான் ராசசிம்மன்.
கனவில் தோன்றிய ஈசன் :
அப்போது அவனது கனவில் தோன்றிய சிவபெருமான், ‘நாளை நீ கட்டியிருக்கும் கோவில் கும்பாபிஷேகத்திற்கு என்னால் வர இயலாது. ஏனெனில் திருநின்றவூரில், பூசலார் என்ற என்னுடைய பக்தன் கட்டியிருக்கும் ஆலயத்தின் கும்பாபிஷேகமும் நாளை அதிகாலையில்தான் நடக்கிறது. நான் அங்குதான் எழுந்தருளப் போகிறேன்’ என்று கூறினார். கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தான் மன்னன். இறைவன் தனக்கு ஏதோ செய்தி சொல்வதாகவே கருதிய மன்னன், அந்த நள்ளிரவிலும், தன் பட்டத்து ராணி மற்றும் அமைச்சர்கள், காவலர்கள் புடைசூழ திருநின்றவூர் நோக்கி பயணப்பட்டான். அதிகாலைக்கு முன்பாகவே திருநின்றவூரை அடைந்து விட்டான்.
செல்லும் வழி முழுவதும் மன்னனுக்கு, பூசலார் கட்டியிருக்கும் ஆலயத்தைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. ‘நான் கட்டியிருப்பதை விட மிகப்பெரிய ஆலயமாக இருக்குமோ? கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடக்குமோ? அதனால்தான் இறைவன் என் இடத்திற்கு வருவதைக் காட்டிலும், இங்கு எழுந்தருளப்போகிறார் போலும். இறைவனே வருகிறார் என்றால் அந்த விழா வெகு சிறப்பாகத்தான் நடைபெற வேண்டும்’ என்று எண்ணியபடியே வந்தான்.
ஆனால் ஊருக்குள் நுழைந்த மன்னனுக்கும், அவனுடன் வந்தவர்களுக்கும், அப்படி ஒரு விழா நடப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. இறைவனின் வாக்குப்படி இங்கு நடைபெறும் கும்பாபிஷேகம் பற்றி, ஊர் மக்களிடம் மன்னன் விசாரித்தான். ஆனால் ஊரில் உள்ளவர்களோ, ‘அப்படி எதுவும் இங்கு நடைபெறவில்லையே’ என்றனர். மேலும் ‘பூசலார் என்று ஒருவர் பல நாட்களாக, உணவின்றி இலுப்பை மரத்தடியில் கண்மூடி அமர்ந்திருப்பதையும் தெரிவித்தனர்.
பூசலார் நெஞ்சில் இறைவன் :
மன்னன் பூசலார் இருந்த இடத்திற்கு விரைந்து சென்றான். அங்கு பூசலார், சிவபெருமானை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவர் முன்பாக மன்னனும், அவனுடன் வந்தவர்களும் கைகூப்பி நின்றனர். சிறிது நேரம் கழித்து விழிகளைத் திறந்த பூசலார், எதிரே அரசனும், அரசியும், அமைச்சரும் நிற்பதைக் கண்டார்.
மன்னன், ‘என் கனவில் தோன்றிய இறைவன் இங்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதாகவும், அங்கு எழுந்தருளப் போவதாகவும் கூறியிருந்தார். அந்த கும்பாபிஷேகத்தைக் காணவே நாங்கள் வந்தோம். ஆனால் இங்கு அதுபோல் விழா நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லையே’ என்றான் மன்னன்.
பூசலாரோ, ‘ஆலயம் கட்டப்பட்டிருப்பது உண்மைதான். அது என் இதயத்திற்குள் கட்டப்பட்டிருக்கிறது. அந்த ஆலயத்திற்குத்தான் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது’ என்று விளக்கம் அளித்தார்.
மன்னன், தானும் அந்த இதயக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை தரிசிக்க விரும்புவதாக தெரிவித்தார். உடனடியாக பூசலார் தனது இடது பக்க நெஞ்சைத் திறந்து காட்ட, அங்கே உள்ளம் பெரும் கோவிலாக, உத்தமர் சிவன் அதற்குள் இருப்பது போன்ற காட்சி தென்பட்டது. அரசனும் மற்றவர்களும் வியந்து போயினர். ‘எத்தனை உயர்ந்த பக்தி’ என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். மன்னன், பூசலாரின் பாதம் பணிந்து வணங்கினான்.
பின்னர் பூசலார் இதயத்தில் எழுப்பிய ஆலயத்தைப் போலவே, அங்கு ஒரு ஆலயத்தை எழுப்பினான். அந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவன், இருதயாலீஸ்வரர் என்று பெயர் பெற்றார். அதைத் தொடர்ந்து மன்னன், தன் ஊருக்குத் திரும்பி தான் கட்டிய ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தினான் என்பது தல வரலாறு.
இதய நோய் :
உடலின் முக்கியமான உறுப்பு இதயம். இது சீராக இயங்கினால்தான் நாம் நல்லமுறையிலே நடமாட முடியும். இவ்வளவு ஏன்? இதயம் என்ற கைப்பிடியளவு உறுப்பு துடித்தால்தான் நாம் உயிர்வாழவே முடியும்.
அப்படிப்பட்ட இதயத்திற்கு எத்தனையோ நோய்கள் வந்து அதன் செயல்பாட்டை சீரழிக்குமானால் மனிதனுக்கு இதய நோய்களும் இறப்பும் தவிர்க்க முடியாதது ஆகும்.
அதனைத் தடுக்கவும், சிகிச்கை பெறவும் நவீன மருத்துவ உலகில் எத்தனையோ வழிகள் உண்டு. இருப்பினும் இறைவனை நம்பி வழிபடுவதால் மனதுக்கு அமைதியும் நம்பிக்கையும் கிடைப்பதால் உள்ளமும் உடலும், உடலை இயக்கும் இதயமும் சீராகும் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.
அந்த வகையில் இருதயாலீசுவரராக அருள் பொழியும் இத்தல இறைவனை வழிபட்டு இதய நோய் நீக்கம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகரில் உள்ள இத்திருக்கோவிலில் இதய நோய் உள்ளவர்கள் இறைவனை வழிபட்டு தீபம் ஏற்றி தனது சக்திக்கேற்ப அபிஷேகம், அர்ச்சனை செய்து வருகிறார்கள். திங்கட்கிழமை தோறும் தொடர்ந்து இந்த கோவிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபட்டால் நல்ல பலன் கிடைப்பதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

அகோர முகத்தை கொண்டு, சிவபெருமான் அகோரமூர்த்தியாக திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தனிசன்னிதியில் வீற்றிருந்து பக்தர்கள் வேண்டும் வரத்தை நிறைவேற்றி தருகிறார்.
உலக இயக்கத்தை மேற்கொள்ளும் சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உள்ளன. அவை ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகியவை ஆகும். இந்த ஐந்து முகங்களையும் நினைத்து தியானம் செய்தாலோ அல்லது வழிபாடு செய்தாலோ சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பிரம்மதேவனின் வாக்காகும்.
இந்த முகங்களில் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய நான்கு முகங்களும் வழிபட முடியாத உருவங்கள் ஆகும். ஆனால், இதில் அகோர முகத்தை (அழகியமுகம்) கொண்டு, சிவபெருமான் அகோரமூர்த்தியாக திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் (புதன் ஸ்தலம்) கோவிலில் தனிசன்னிதியில் வீற்றிருந்து பக்தர்கள் வேண்டும் வரத்தை நிறைவேற்றி தருகிறார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இத்தலத்தின் சிறப்புகள் பற்றி திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடி உள்ளனர். இத்தலத்தில் இறைவனாக சுவேதாரண்யேஸ்வரரும், இறைவியாக பிரம்ம வித்யாம்பிகை அம்மனும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
தலவரலாறு :
முன்னொரு காலத்தில் ஜலந்தாசுரன் என்ற அசுரனின் மகனாக பிறந்தவன் மருத்துவாசுரன். இவன் தனக்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்காக பல்வேறு ரிஷிகளின் ஆலோசனையை ஏற்று சிவனை வேண்டி நடுக்கடலில் நெடுங்காலமாக பெரும் தவம் இருந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவபெருமான் மருத்துவாசுரன் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
அப்போது அந்த அசுரன், சிவனிடம் உள்ள சூலாயுதத்தை கேட்டான். இதனையடுத்து சிவபெருமான் அவனுக்கு சூலாயுதத்தை வழங்கினார். அதனை பெற்ற மருத்துவாசுரன் நல்லகாரியங்களை செய்யமால், உலகத்தில் உள்ள தேவர்கள், மனிதர்கள் ஆகியோரை துன்புறுத்தினான். அவனால் துன்புறுத்தப்பட்டவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.
உடனே சிவபெருமான் தனது வாகனமான நந்தியை மருத்துவாசுரனிடம் அனுப்பினார். நந்திபகவான் மருத்துவாசுரனிடம் சென்று அறிவுரைகளை கூறினார். அதனை ஏற்காத மருத்துவாசுரன் நந்தியை போருக்கு அழைத்தான். அப்போது ஏற்பட்ட சண்டையில் மருத்துவாசுரன் நந்தியை தாக்கி, அதன் கொம்பை முறித்தான். மேலும், நந்தியின் உடலில் 9 இடங்களில் காயத்தை ஏற்படுத்தினான். (திருவெண்காடு ஆலயத்தில் உள்ள நந்தியின் உடலில் காயங்களையும், கொம்பு முறிக்கப்பட்டு இருப்பதையும் இப்போதும் காணலாம்).
அஷ்ட பைரவர்கள் :
இதனை அறிந்த சிவபெருமான் சினம்கொண்டு, நெருப்பு பிழம்பாக வெடித்து சிதறி மருத்துவாசுரன் முன்பு தோன்றினார். அப்போது அவருடைய உருவம் கரிய திருமேனியுடன், செவ்வாடை அணிந்து, இடது காலை முன் வைத்து, வலது கால் கட்டை விரலையும், அடுத்த விரலையும் ஊன்றி நடைகோலமாக கம்பீரமான போர்க்கோலத்துடன் காட்சி அளித்தார்.
மேலும், எட்டு கரங்களில் மணி, கேடயம், கத்தி, வேதாளம், உடுக்கை, கபாலம், திரிசூலம், எரிசி போன்றவற்றை தாங்கியிருந்தார். கோரைப் பற்களுடன், 14 பாம்புகளை தன் மேல் அணிந்து, மணிமாலை சாத்தி, அஷ்ட (எட்டு) பைரவர்களுடன் புன்னகை முகத்துடன் காட்சி அளித்தார். அகோரமூர்த்தி மாசி மாதம் தேய்பிறை பிரதமை பூர நட்சத்திர ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு அவதரித்தார். இந்த தோற்றத்தை பார்த்த மருத்துவாசுரனுக்கு பயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் உடனடியாக அகோரமூர்த்தியின் பாதத்தில் சரண அடைந்தார். இதனால் மனம் இரங்கிய அகோரமூர்த்தி மருத்துவாசுரனுக்கு உபதேசம் செய்தார். அகோரமூர்த்தி, அவனுக்கு அனுக்கிரகம் செய்தபோது மருத்துவா சுரன் அகோரமூர்த்தியிடம் தங்களை வழிபடும் பக்தர்களுக்கு நவக்கிரக தோஷம், பித்ரு தோஷம், எம பயம், எதிரிகளால் ஏற்படும் தொந்தரவுகளை நீக்கி அருள வேண்டும். மேலும் வாழ்வில் செழிப்பு, ஆரோக்கிய வாழ்வு, செல்வாக்கு, இடைவிடாத இறை பக்தி தர வேண்டும் என்று வேண்டினான். அகோரமூர்த்தியும் அவனது வேண்டுகோளை ஏற்று, சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.
தலசிறப்புகள் :
இந்தக் கோவிலில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய 3 பொறிகள், சூரியன், சந்திரன், அக்னி என முக்குளங்கள் உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இந்த குளங்களில் புனிதநீராடி சுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள பிரம்மவித்யாம்பாள், பிரம்மனுக்கு ஞானத்தை போதித்ததாக கூறப்படுகிறது. இவரை வழிபட்டால் கல்வி, ஞானம் கிடைக்கும். நவக்கிரகங்களில் ஒன்றான புதனுக்கு இங்கு தனிசன்னிதி உள்ளது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற அகோரமூர்த்திக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றாலும், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை அதிலும் குறிப்பாக கார்த்திகை 3-வது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூஜையில் கலந்து கொள்வது நல்லது. இந்த ஆண்டு கார்த்திகை 3-வது ஞாயிற்றுக்கிழமை வருகிற 4-ந் தேதி வருகிறது.
அன்றைய தினம் காலையில் காவிரியில் இருந்து நீர் எடுத்து வந்து அகோரமூர்த்திக்கு அபிஷேகம் நடைபெறும். மாலையில் பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்த பால் மூலம் அபிஷேகம் நடைபெறும். அத்துடன் பல்வேறு வாசனை திரவியங் களின் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். 4-ந் தேதி இரவு 7 மணி தொடங்கும் அபிஷேகம் 11 மணி வரை நடைபெறும். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொண்டால் கல்விச்செல்வம் உள்பட சகல செல்வங்களும் கிட்டும்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இத்தலம் நாகை மாவட்டம் திருவெண்காட்டில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீட்டர் தூரமும், சீர்காழியில் இருந்து 12 கி.மீட்டர் தூரமும் உள்ளது.