என் மலர்
கோவில்கள்
நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு உரிய தலமாக விளங்குவது, திரு நாகேஸ்வரம் நாகநாதர் கோவில். ராகுபகவான் சிவபெருமானை பூஜை செய்த திருத்தலம் இது.
நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு உரிய தலமாக விளங்குவது, திரு நாகேஸ்வரம் நாகநாதர் கோவில். ராகுபகவான் சிவபெருமானை பூஜை செய்த திருத்தலம் இது. ராகு பூஜை செய்ததால் இத்தலத்திற்கு ‘திருநாகேஸ்வரம்’ என்ற பெயர் வந்தது. நாகநாதர் கோவில் வெளிப்பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் ராகு பகவான், தனது இரு தேவிகளான நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் எழுந்தருளியுள்ளார். இத்திருத்தலத்தில் ஐந்தலை அரவு எனும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்தால், பால் நீலநிறமாக மாறுவது இங்கு தனிச் சிறப்பாகும். இதை பக்தர்கள் கண்ணார கண்டு வழிபடலாம்.
கடந்த பல வருடங்களுக்கு முன்பு ராகுவின் திருமேனியில் 5½ அடி நீளமுடைய பாம்பு தனது சட்டையினை உரித்து மாலையாக அணிவித்து இருந்த காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். அந்த பாம்புச்சட்டையை பெரிய கண்ணாடி பேழைக்குள் வைத்து பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.
நாகநாதர்:
ராஜ வம்சத்து மன்னன் ஒருவருக்கும் அசுரகுல பெண்ணுக்கும் மகனாக பிறந்தவர் ராகு. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணு விடம் இருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது தலையில் அடிக்க, தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆனது. ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்கு கொடுத்து, அவனை ஒரு நிழல் கிரகமாக ஆக்கினார்.
சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மனை, நாக அரசனான தக்கன் தீண்டியது. இதை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, தன் மகனை தீண்டிய தக்கன் பூலோகத்தில் மனிதனாக பிறக்கும்படி சாபம் கொடுத்தார். இந்த சாபம் நீங்க காசிப முனிவரின் ஆலோசனைப்படி, தக்கன் பூமிக்கு வந்து திருநாகேஸ்வரத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தனது மனைவியருடன் வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் நாகநாதர் என்ற பெயரில் அருளாசி வழங்கி வருகிறார்.
தலவரலாறு :
கயிலாயத்தில் சிவபெருமானை மட்டுமே பிருகு முனிவர் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பார்வதி, சிவனிடம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தாள். பார்வதியின் தவத்துக்கு மகிழ்ந்த இறைவன் அவளுக்கு தன் உடலில் பாதியை கொடுத்து உமையொரு பாகமானார். அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உலகில் பல இடங்களில் அமைய வேண்டும் என்று வேண்டினாள்.
அதன்படி இந்த தலத்தில் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவபெருமான், பார்வதி தேவி காட்சியளிக்கின்றனர். இறைவன் பெயர் நாகேஸ்வரர். சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவியின் பெயர் பிறையணிஅம்மன். மகாசிவராத்திரி அன்று ராகு பகவான், நாகநாதரை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார். இதனால் அவர் தினமும் சிவதரிசனம் பெறவேண்டி தனது மனைவிகள் நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் மங்கள ராகுவாக திருநாகேஸ்வரத்தில் தங்கி விட்டார்.
பொதுவாக ராகுபகவான் மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் ராகுபகவான் தனிச்சன்னிதியில் மனித வடிவில் காட்சி தந்து தம்மை வழிபடுவோருக்கு கிரக தோஷம் நீக்கி, யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்கிறார்.
இத்திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர். இத்தல இறைவனுக்கு நாகநாதர், அர்த்தநாரீஸ்வரர் என இரு சன்னிதிகள் உண்டு. அதைப்போல அம்மனுக்கும் 2 சன்னிதிகள் உள்ளன.
இத்தலத்தில் ராகுபகவான் உருவாக்கிய நாக தீர்த்தம், சூரிய தீர்த்தம், எம தீர்த்தம் உள்ளிட்ட 12 தீர்த்தங்கள் இருக்கின்றன. ஆதி விநாயகர், கிரிகுஜாம்பிகை, சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகங்கள், அறுபத்து மூவர்கள் மற்றும் இதர தெய்வங்களுக்கும் சன்னிதி உண்டு. நாகதோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார தலம் இதுவே ஆகும். காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.
வழியும்-தூரமும்:
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து வரும் பக்தர்கள் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இறங்கி, பஸ், ஆட்டோ மூலமாக நாகநாதர் கோவிலை சென்றடையலாம். கும்பகோணத்தில் இருந்து நாகநாதர் கோவிலுக்குச் செல்ல அடிக்கடி நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவநல்லூரில் உள்ளது திருப்புடை மருதூர். இங்குள்ள நாறும்பூநாதர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
காசிக்கு ஒப்பாக மூன்று தலங்கள் உள்ளன. ஒன்று உத்தர காசியாகிய மல்லிகார்ச்சுனம். இது ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம். மற்றொன்று மத்திய காசியாகிய மத்தியார்ச்சுனம். இது தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர். மூன்றாவது தட்சிண காசியாகிய புடார்ச்சுனம் எனப்படும் திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி திருக்கோவில். இந்த மூன்று ஆலயங்களுக்கு மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது. அது என்னவெனில், மூன்று ஆலயங்களிலும் தல விருட்சம், மருத மரம் ஆகும்.
நாறும்பூநாதர் கோவில் :
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவநல்லூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புடை மருதூர். இங்குள்ள நாறும்பூநாதர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். ஊருக்கு மேற்கில் ஆற்றின் கிழக்கு கரையோரமாக அமைந்து உள்ள ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையும், பதினோரு கலசங்களையும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கருவறை, விஜயநகர பேரரசர்கள் மற்றும் நாயக்கர்களால் செய்யப்பட்ட திருப்பணி களால் கோவில் சிறப்புற்று விளங்குகிறது.
நாறும்பூநாதர் என்பது இங்கு எழுந்தருளியுள்ள இறைவனின் திருநாமம் ஆகும். இத்தலத்திற்கு திருப்புடைமருதூர் என்ற பெயரோடு மருதபுரம், சுந்தரவனம், புடார்ச்சுனம், தட்சிணகாசி, சுரேந்திரபுரி என்ற பெயர்களும் உள்ளன. தற்போது திருப்புடைமருதூர் என்ற பெயர் மட்டுமே நிலைத்து விட்டது.
ஆதி பிரம்மாவின் மகனாகிய மனு பல சுயம்பு லிங்கங்கள் உள்ள தலங்களுக்கெல்லாம் சென்று வணங்கி வந்த நிலையில் அகத்திய முனிவரின் அருளாணைப்படி இத்தலத்திற்கும் வந்தான். மருத மரத்தின் அடியில் லிங்கமாய் நின்ற சிவபெருமானை கலைமகள், மலைமகள், அலைமகள் ஆகியோர் வழிபடும் காட்சியை தூரத்தில் இருந்து பார்த்த ஆதிமனு தானும் வழிபடுவதற்காக விரைந்து வந்தார். அருகில் வந்ததும் அந்த காட்சி மறைந்ததை கண்டு வருந்திய ஆதிமனு தனது வாளினை மரத்தில் குத்தி தனது தலையை துண்டிக்க முயன்றான். அப்போது மரத்தில் இருந்து ரத்தம் பொங்கியதால் அதிர்ந்து நின்றான்.
அப்போது ‘நிறுத்துக’ என்று அசரீரி ஒலித்தது. உடனே மருத மரத்தின் பொந்தில் இருந்து இறைவன் ஆதிமனுவுக்கு காட்சி கொடுத்தார். சிவபெருமானை வழிபட்ட ஆதிமனு அவ்விடத்தில் இறைவனுக்கு ஆலயம் கட்டுவதற்கு அருள்செய்ய வேண்டும் என்று கேட்டான். இறைவனும் ‘மரத்தின் கீழ்திசையில் சிறிது தொலைவில் அமைந்துள்ள சுயம்பு லிங்கம் இருக்கும் இடத்தில் ஆலயம் எழுப்பி வழிபடுக’ என்று அருள ஆதி மனு அங்கு கோவிலை எழுப்பினான்.
ஆதிமனு கட்டிய கோவில் காலப்போக்கில் மறைந்து விட்டது. அப்போது களக்காடு பகுதியை ஆட்சி செய்த வீரமார்த்தாண்ட மன்னன் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தான். ஒரு மானை கண்டு தனது அம்பை எய்தான். அப்போது மான் மறைந்து விட்டது. ஆனால் மன்னன் எய்த அம்பு மருத மரத்தின் பொந்தில் குத்தி நிற்க, அங்கே சிவலிங்கத்தை மன்னன் கண்டான். உடனே அந்த இடத்தில் மிகப்பெரிய ஆலயத்தை எழுப்பினான்.
கருவூர் சித்தர் பல்வேறு கோவில்களுக்கு சென்று வணங்கி வருகையில் தாமிரபரணியின் வடக்கரை வழியாக வரும்போது மறுக்கரையில் இக்கோவிலை கண்டார். கோவிலுக்கு செல்ல முடியாதபடி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அங்கு உறையும் இறைவன் பெயர் அறியாத கருவூரார் அங்கிருந்து வரும் மலர்களின் மணத்தை அறிந்து இறைவனை ‘நாறும்பூநாதா’ என சத்தம் போட்டு அழைத்தார். “நாறும்பூநாதா, உன்னை காண முடியாமல் ஆற்றிலே வெள்ளம் போகிறதே, நான் சொல்வது உனக்கு கேட்கிறதா?” என்று கேட்க இறைவன் தனது திருமேனியை இடப்பக்கம் சரித்து செவிமடுத்து கேட்க சித்தர், வெள்ளத்தை நிற்கும்படி இறைவனிடம் வேண்ட சித்தருக்கு இறங்கி வெள்ளம் வழிவிட்டு நிற்க இறைவனை வணங்கி கருவூர் சித்தர் அருள் பெற்றதாக வரலாறு தெரிவிக்கிறது.
இதன் வெளிப்பாடாக இன்றும் சாய்ந்த நிலையிலேயே பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் புடார்ச்சுன பெருமான். இங்குள்ள அம்மனின் பெயர் கோமதி அம்பாள். அபூர்வமான நீலக்கல் திருமேனி உடைய இந்த அம்பாள் அருளே வடிவானவள். இந்த அம்பாள் பெண்களின் நோய்களை தீர்ப்பதில் சிறப்பானவள். பேய் மற்றும் கெட்ட ஆவி பிடித்த பெண்கள், மனநலம் சரியில்லாதவர்கள் அம்பாள் சன்னிதியில் இருந்து தினமும் வழிபட்டால் 21 நாட்களில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பெண்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்கள் நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் பாயாசம் வைத்து ஆற்றங்கரையில் நீராடி படித்துறையை கழுவி அதில் வைத்து சாப்பிடுவார்கள். இதை படி பாயாசம் என்பர்.
தீர்த்தத்தின் சிறப்பு :
புண்ணிய நதியாம் தாமிரபரணி, கடனா நதி, ராமநதி ஆகிய மூன்றும் சங்கமித்து வடக்கு நோக்கி தாமிரபரணி இங்கே உத்தரவாகினியாக ஓடுவதே தனி சிறப்பாய் கருதப்படுகிறது. உலகில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் இவளை உபாசனை பண்ணியே தீர்த்த சக்தி பெறுகின்றன. சிவசக்தி ரூபினியான இவள்(ஆறு) பரமசிவன் அம்சமாகவும், பார்வதி அம்சமாகவும் மற்ற அங்கங்கள் பல்வேறு தேவர்கள் அம்சமாகவும் விளங்குகின்றன என தாமிரபரணி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது. இத்தலத்தினை சுற்றி இவ்வாற்றில் பதினோரு தீர்த்தங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இக்கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்து இருக்கும். திருநெல்வேலி-பாபநாசம் வழித்தடத்தில் வீரவநல்லூர் சென்று அங்கிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலுக்கு மினி பஸ், ஆட்டோவில் சென்று வரலாம்.
மும்மூர்த்திகள் வழிபட்ட தலம் :
திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள், அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டபோது சிலகாலம் மறைந்து இருக்க எண்ணினர். எனவே அதற்காக காசிக்கு ஒப்பான திருத்தலம் ஒன்றை காண்பிக்குமாறு சிவபெருமானை வேண்டினர். இறைவன் பிரம்மனிடம், அவரது தண்டத்தை கங்கையில் இட்டு அது எங்கு சென்று நிற்கின்றதோ, அந்த இடமே சிறந்த இடம் என்று அருளினார்.
அதன்படி பிரம்மதண்டம் கங்கையில் விடப்பட்டது. திருமால் தனது கருட வாகனத்திலும், பிரம்மன் அன்னப்பறவை மீதும் தொடர்ந்துவர அந்த தண்டம் கடலினை அடைந்து பின்னர் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமமாகும் இடத்திற்கு வந்து நதியில் புகுந்து எதிர் திசையில் சென்று திருப்புடைமருதூர் கோவிலின் மேற்புறம் வந்து குத்தி நின்றது. பின்னர் தேவர்கள் அனைவரும் கூடி இவ்விடத்தில் பிரம்ம தண்டத்தை பிரதிஷ்டை செய்து இறைவனை வணங்கி வழிபட்டு நின்றனர். இந்த இடமே தற்போது கோவில் உள்ள இடமாகும். மும்மூர்த்திகளும் இத்தலத்திற்கு வந்ததால் இத்தலம் பேறு பெற்ற தலமாக திகழ்கிறது.
தைப்பூச தீர்த்தவாரி உற்சவம் :
திருப்புடைமருதூரை தைப்பூச தீர்த்தவாரி ஊர் என்றும், இங்குள்ள கோவிலை பூக்கோவில் என்றும் இந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு தைப்பூச திருவிழா இங்கு வெகு சிறப்பாக நடைபெறும். தைப்பூச தீர்த்தவாரியில் கலந்து கொண்டு இத்தலத்து இறைவனை வழிபடுவது மிக சிறப்பாகும். இவ்வாறு வழிபட்டால் ஆண்டு முழுவதும் உடல் நலத்துடன், செல்வ செழிப்பும் கிடைக்கும் என்பது பக்தர் களின் நம்பிக்கையாகும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் இவைகளில் மேம்பட்ட தட்சிண காசி என்ற திருப்புடைமருதூரில் அமைந்து உள்ள இக்கோவிலுக்கு பக்தர்கள் வந்து தைப்பூச தீர்த்தவாரியில் நீராடி கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமியை வழிபடுவோருக்கு இறைவனின் திருவருள் நிச்சயம் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சிங்கிரிக்குடி நவக்கிரக தோஷ நிவர்த்தியாகும் தலம் என்று சொல்லப்படுகிறது. நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக் கடன் என்று நம்பப்படுகிறது.
சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது. புராண காலத்தில் கிருஷ்ணா ரண்யசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
சிங்கிரிகுடி கோவிலில் சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தியன்று தேர்த்திருவிழா, மாசி மகத்தன்று புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி, ஐப்பசியில் பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசியன்று மாலையில் கருட சேவை மாட்டுப்பொங்கலன்று தீர்த்தவாரி நடத்தப்படுகிறது.
வசிஷ்டர் சிங்கிரிக்குடி கோவிலில் நரசிம்மரைக் குறித்துத் தவமியற்றி பாவங்கள் தொலைத்துப் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார். பாவன விமானத்தின் கீழ் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உற்சவர் பிரகலாத வரதன் அருள்பாலிக்கிறார். கருவறை மட்டும் பழமையானது. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முழுமையடையாத கல்வெட்டு ஒன்று கோவில் தூணில் கண்டறியப்பட்டுள்ளது.
இக்கோவில் நரசிம்ம அனுஷ்டுப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துக்களைக் கொண்டது என்பதை சிறப்பாகச் சொல்கிறார்கள். இங்கு வைகானச ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. மன்னர் கிருஷ்ணதேவராயர் இந்த கோவிலில் திருப்பணிகள் பல செய்துள்ளார். ஆற்காடு நவாப் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் ஆகியோர் நரசிம்மருக்கு அணிகலன்கள் அளித்துள்ளனர்.
இத்தலத்தில் பாவன விமானத்தின் கீழ் அதிசயிக்கத்தக்க வகையில் லட்சுமி நரசிம்மர் உக்கிர நரசிம்மராக 16 திருக்கரங்களுடன், மேற்கு பார்த்து நின்று இரணியனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார்.
பெருமாள் தாங்கியுள்ள ஆயுதங்கள்: 1. பாதஹஸ்தம், 2. பிரயோக சக்கரம், 3. ஷீரிகா என்ற குத்துக்கத்தி, 4. காணம், 5. அரக்கனின் தலை அறுத்தல், 6. கத்தியால் அசுரன் ஒருவனைக் கொல்லுதல், 7. இரணியனின் காலை அழுத்திப் பிடித்தல், 8. இரணியனின் குடலைக்கிழிப்பது (இடது கை), 9. இரணியனின் குடல் மாலையைப் பிடித்திருப்பது, 10. சங்கம், 11. வில், 12. கதை, 13. கேடயம், 14. வெட்டப்பட்ட தலை, 15. இரணியனின் தலையை அழுத்தி பிடித்திருப்பது, 16. இரணியனின் குடலைக் கிழிப்பது ஆகியனவாகும்.
இது ஒரு பரிகாரத்தலம். நவக்கிரக தோஷ நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நலம் பெற தாயாரிடம் வேண்டுதல்கள் செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
சுவாதி நட்சத்திரத்தன்றும், பிரதோஷ நாளன்றும், மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் நரசிம்மரைத் தரிசித்தால் குறைகள் தீரும். வேண்டுதல்கள் நிறைவேறும். நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக் கடன் என்று நம்பப்படுகிறது.
16 கரங்களுடன் கம்பீரமான தோற்றம் :
அபிஷேகப்பாக்கம், அபிஷேக சேத்திரம் என்றும் மார்க்கண்டேய புராணத்தில் ஸ்ரீநரசிம்மவனம் என்றும் சிங்கர்குடி வர்ணிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் சோழர் காலமான கி.பி. 1051--ம் ஆண்டில் அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று குறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டுக்களின் மூலம், சோழ அரசர்களின் நன்கொடையும், பின்னர் வந்த ஸ்ரீகிருஷ்ண தேவராயர் என்ற விஜயநகர அரசரின் நன்கொடையும் இத்தலத்துக்கு கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
மூல விக்ரமாகிய உக்ர நரசிம்மர் மேற்கு பார்த்து சந்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மற்றும் பல திவ்ய தேவதைகள் கிழக்கு மூலையில் உள்ளனர். லீலாவதி என்கிற ஹிரண்யகசிபுவின் மனைவி, குழந்தை பிரகலாதன் அசுரர்களின் குர சுக்ராச்சாரியார், தேவகுரு வசிஷ்ட மகரிஷி ஆகியோரது சிலா உருவங்கள் சாமியின் கீழ் நிலைமேடையில் இத்திருக்கோவிலில் உள்ளன.
முதன்மைக் கடவுளான திருவந்திபுரம் தேவநாதன்தான் இங்கு நரசிம்மராக சேவை சாதிக்கிறார் என்பர். ஆனால் திருமங்கையாழ்வார் நரசிம்ம சாமிதான் திருவந்திபுரத்தில் தேவநாத சாமியாக உள்ளார் என்று பாடியிருக்கிறார்.
ஸ்ரீஅஹோபில மடத்தில் 4-வது தலைமை பீடாதிபதியின் பிருந்தாவனமும் இங்குள்ளது.
ஸ்ரீவைகாசன ஆகமவிதிகளின் படியும், ஸ்ரீநரசிம்ம சாமியின் அனுஷ்டான விதிகளின்படியும் இக்கோவிலில் பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீநரசிம்மர் அவருடைய திவ்ய மங்கள விக்ரகத்தில் மனித உடலில் சிங்கமுகத்தில் கோபமாகவும் நாக்கை தொங்க விட்டுக் கொண்டும் அகன்ற மார்பை உடையவராகவும், வாயையும் உடையவராகவும் விளங்குகிறார்.
இங்கு நரசிம்மர் சிங்க முகத்துடனும், மனித உடலில் 16 கரங் களுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். ஸ்ரீநரசிம்மர் தன் கண்களை உருட்டுவது போன்றும், அடர்ந்த மீசையை உடையவராகவும், அந்த மீசையை முறுக்குவது போலவும், தம் கோரைப் பற்களைக் காண்பிப்பது போன்றும் காட்சியளிக்கிறார்.
பதினாறு கரங்களில், ஐந்து கரங்கள் ஹிரண் யகசிபுவை கொல்வது போன்றும், 3 கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் சேவை சாதிக்கிறார். அவருடைய இடது கரம் அந்த அரக்கனுடைய தலையை தம் மடி மீது அழுத்துவது போன்றும், மற்றொரு வலது கரம் அசுரனுடைய தொடையை அழுத்துவது போன்றும், மற்ற கரங்களினால் அரக்கனுடைய கால்களை நன்றாக அழுத்தி மடித்திருப்பது போன்றும், மற்ற இரு கரங்களினால் இரண்யனுடைய மார்பைக் கிழித்து கொல்வது போலவும் மிக அற்புதமாக சேவை சாதிக்கிறார்.
மேல்கை அபய முத்திரையாகவும், தன்னுடைய பக்தர்களைக் காப்பது போன்றும், இடது மேல்கை அவருடைய அவதார ரூபத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. வலது திருக்கரத்தால் அவருடைய அன்பிற்குரிய குழந்தை பிரகலாதனை ஆசீர்வதிப்பது போலவும், மற்ற கரங்களால் பலவிதமான ஆயுதங்களை ஏந்தியிருப்பது போலவும் சேவை சாதிக்கிறார்.
யார் இந்த ஸ்ரீநரசிம்மர் குடி கொண்டுள்ள சிங்கர்குடிக்கு வந்து வணங்க வருகிறார்களோ அவர்களுடைய கஷ்டங்கள் எல்லாம் பகவான் அருளால் நீங்குகின்றன. மேலும் அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகவும், தீர்காயுளுடன் கூடியதாகவும் விளங்குகிறது.
கோவில் பற்றி தகவல்கள் அறிய இந்த எண்ணில் +91- 413-261 8759 தொடர்பு கொள்ளவும்.

மங்கலான பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளீஸ்வரரை வழிபட்டு சென்றால் பலன் பெறுவது நிச்சயம் என்கிறார்கள்.
கோவில் வரலாறு :
தேவியின் திருக்கரம் பற்றி அழைத்துவர மாங்காட்டை நோக்கி ஈசனும் புறப்பட்டார். தேவியை நாடி ஓடோடி வந்த சிவனின் திருவடிகள் மாங்காட்டை நெருங்கியதும் அசையாமல் நின்று விட்டன. சிவநாமம் உச்சரித்து தவமிருக்கும் மாமுனிவன் குரல் கேட்டு உலகம்மையை நெருங்காமல் உறைந்துபோய் நின்று விட்டார். இடைவிடாமல் சிவமந்திரத்தை உச்சரித்து கடுந்தவமிருக்கும் மாமுனிவர் சுக்கிர முனிவனாவார்.
திருமால் வாமன அவதாரத்தின்போது மகாபலி சக்கரவர்த்தி தானதர்மங்கள் செய்யும்போது திருமால் வாமன வடிவத்தில் வந்து தானம் கேட்டார். அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் தானம் கேட்க வந்திருப்பது சிறுவனல்ல மகாவிஷ்ணவே என்பதை உணர்ந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் “தானம் கொடுக்காதே” என்று கூறுகிறார்.
வாமன வடிவில் வந்த திருமால் மூன்றடி மண் கேட்க, “நீங்கள் கூறும் தானத்தைக் கொடுக்கிறேன்” என்று கூறி கெண்டியிலிருந்து நீரை வார்த்துக் கொடுக்க முனைய அந்த கெண்டியின் துளை வழியில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் கருவண்டு வடிவத்தில் உருமாறித் தடுத்தார். வாமன அவதாரத்தில் வந்த மகாவிஷ்ணு தன்னிடம் வைத்திருந்த தர்ப்பைப் புல்லினால் துளைப்பகுதியில் குத்தியவுடன் அதில் மறைந்திருந்த சுக்கிராச்சாரியார் வெளிவந்தார். அப்போது சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் பார்வையை இழந்து விட்டது.
தானம் கொடுப்பவர்கள் கொடுப்பதை யாரும் தடுக்கக் கூடாது என்பதை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிய முடிகிறது. பிறகு திருமாலிடம் சுக்கிரன் மன்னிப்புக் கேட்டு தன்னுடைய பார்வையை திரும்பவும் தருமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு திருமால் “இப்பூவுலகில் மாங்காடு என்னும் தலத்தில் பார்வதிதேவி காமாட்சியாக வடிவெடுத்து பஞ்சாக்னி வளர்த்து தவம் செய்கிறாள். அவளது தவத்தை பூர்த்தி செய்ய இறைவன் பூவுலகம் வருவார்.
நீ மாங்காடு சென்று தவமிருந்தால் அத்தருணத்தில் உன் விழிக்கு பார்வை கிடைக்கும்” என்று கூறினார். பின்னர் சுக்கிராச்சாரியார் மாங்காட்டுக்கு வந்து சிவலிங்கம் அமைத்து இறைவனுக்கு பூஜை செய்யச் சுக்கிர தீர்த்தக்குளம் ஒன்றை உருவாக்கி சிவனை எண்ணி தவம் செய்தார். இறைவன் கயிலாயத்தில் இருந்து இப்பூவுலகில், கடும் தவம் புரிந்த காமாட்சி அம்மனுக்கு காட்சி தர வந்தார்.
வரும் வழியிலேயே சுக்கிர முனிவர் சிவனை வழிபடுவது அறியவே, சுக்கிர முனிவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், முனிவரின் முன்தோன்றி அருள்புரிந்து சுக்கிர முனிவருக்கு பார்வை கொடுத்தார். “உன் கடுந்தவம் என்னை மிகவும் ஈர்த்தது” எனக்கூறி ஈசன் தொண்டருள் அடக்கம் என்பதை மெய்ப்பிக்க அவருக்கு நல்லருள் புரிந்ததுடன், அவரது விருப்பத்தின் பேரில் அங்கேயே கோயில் கொண்டு அமர்ந்து விட்டார்.
ஈசன் சுக்கிராச்சாரியாருக்கு கண் பார்வை இத்தலத்தில் கிட்டியதால் ஒரு கண் பார்வை மாறு கண் பார்வை, மங்கலான பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தலத்திற்கு வந்து வெள்ளீஸ்வரரை வழிபட்டு சென்றால் பலன் பெறுவது நிச்சயம் என்கிறார்கள். சுக்கிரனுக்கு வெள்ளி என்ற ஒரு பெயர் உண்டு. எனவே அவருக்கு அருள் புரிந்ததையட்டி ‘வெள்ளீசுவரர்’ என்ற திருநாமத்துடன் இன்றும் கோயில் கொண்டிருப்பதைக் காணலாம். அதேபோல வடமொழியில் சுக்கிரனுக்கு பார்கவன் என்ற பெயர் உண்டு. அதையட்டி இந்த வெள்ளீசுவரர் வடமொழியில் ‘பார்கவேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
எளியோர்க்கும், வறியோர்க்கும் கடுந்தவம் முனைவோர்க்கும் காட்சி தரும் இறைவன் அம்மையை மட்டும் “மீண்டும் தவம் செய்வாய். காஞ்சிபுரத்துக்கு வந்து தவத்தை தொடர்வாய்” என்று கூறி அங்கு அம்மையை மணம் புரிவதாக அசரீரியாய்க் கூறி மறைந்தார்.
சுக்கிரமுனிவர் தாம் தவம் செய்த வெள்ளீஸ்வரராகிய லிங்கத்திற்கு தொடர்ந்து பூஜை செய்து வந்தார். மாங்காட்டின் நடுவே பிலத்தில் கன்னிப்பெண் கடுந்தவம் செய்வதை அறிந்து, அவள் இறைவியே என்பதை உணர்ந்து அம்மையின் அருகில் சென்று வணங்கினார். இறைவன் தனக்கு காட்சி கொடுத்த வரலாற்றையும் தன்பெயர் தாங்கி வீற்றிருப்பதையும் சிவனின் கருணைப் பொழிவையும் எடுத்துரைத்து, வெள்ளீஸ்வரரை சென்று தரிசனம் செய்து பின்னர் இறைவன் கட்டளைப்படி காஞ்சி மாநகர் சென்று திருமணம் செய்து கொண்டாள். வெள்ளீசுவரர் திருக்கோயில் புனிதம்மிக்கதாகக் கருதப்பட்டு மக்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

தாரமங்கலத்தில் நடைபெற்ற கயிலாசநாதர், சிவகாமி அம்மன் திருமணத்திற்கு, இந்தப் பகுதியில் ஹோமம் வளர்த்ததாகவும், இதில் சரபங்க முனிவர் கலந்துகொண்டு ஹோமபூஜை செய்ததாகவும் தல வரலாறு கூறுகிறது.
சேலத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் வடமேற்கு திசையில் சரபங்கா நதியோரம் இருக்கிறது ஓமலூர் கோட்டை. இது 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கெட்டி முதலி வம்ச மன்னரான வணங்காமுடி என்பவரால் எழுப்பப்பட்டதாக கருதப்படுகிறது. இந்தக் கோட்டையில் வசந்தீஸ்வரர், விஜயராகவ பெருமாள், கோட்டை மாரியம்மன் கோவில்கள் உள்ளன. கி.பி.1641 முதல் கி.பி.1768 வரை நடந்த தொடர் போர்களால் கோட்டை சிதைவுற்றது. வசந்தீஸ்வரர் கோவிலும், விஜயராகவ பெருமாள் கோவிலும் மட்டுமே தற்போது கோட்டையின் சின்னங்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
சித்தர் வாழ்ந்த பூமி :
வசந்தீஸ்வரர் கோவிலுக்கும், ராமாயணத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதற்கு ஆதாரமாக இருக்கிறது கோவிலில் அமைந்துள்ள சரபங்க முனிவரின் ஜீவ சமாதி.
சேலத்தை அடுத்த தாரமங்கலத்தில் நடைபெற்ற கயிலாசநாதர், சிவகாமி அம்மன் திருமணத்திற்கு, இந்தப் பகுதியில் ஹோமம் வளர்த்ததாகவும், இதில் சரபங்க முனிவர் கலந்துகொண்டு ஹோமபூஜை செய்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே இப்பகுதி ‘ஹோமலூர்’ என அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி ‘ஓமலூர்’ என மாறியது என்கிறார்கள். மேலும் சரபங்க முனிவர் நினைவாக இங்கு ஓடிய நதியும் ‘சரபங்கா நதி’ எனப் பெயர் பெற்றது.
தவ வலிமையில் சிறந்து விளங்கிய சரபங்க முனிவருக்கும், ராமபிரானுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கம்பராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் சரபங்கர் பாடப்படுகிறார். தண்ட காரண்யம் என்பது மிகவும் பயங்கரமான காடாகும். இந்த வனத்தில் தான் சரபங்க முனிவரின் ஆசிரமம் இருந்தது. ஒருநாள் பிரம்மதேவரின் உத்தரவுப்படி, இந்திரன் தனது ரதத்தோடு வந்து சரபங்கரை விண்ணுலகத்திற்கு வருமாறு அழைத்தான்.
சரபங்கரோ, இந்திரனோடு வர மறுத்தார். ‘நான் ராமனின் வருகைக்காக காத்திருக்கிறேன். அவனது தரிசனம் கண்ட பின்பே, பிறவி பேறு அடைவேன். இப்போது என்னால் வர இயலாது’ என்றார்.
அந்த நேரத்தில் ராம பிரான், மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனோடு சரபங்க முனிவரின் ஆசிரமத்துக்கு எழுந்தருளினார். இதனைக் கண்ட இந்திரன் அங்கிருந்து மறைந்தான். ராமனைக் கண்டதும் சரபங்க முனிவர் மெய்சிலிர்க்க, உள்ளம் உருக ஆனந்த கூத்தாடினார்.
சரபங்கர் ஜீவ சமாதி :
‘ராமா! உன் வருகையால் என்னுள்ளம் உவகை அடைந்தது. உடல் புனிதமானது. என் உள்மனம் ‘ராமன்’ வரும் வரை காத்திரு என்று ஆணையிட்டது. அதற்காகவே இதுவரை காத்திருந்தேன். ராமா! உன் தரிசனம் கண்டுவிட்டேன். இனி இந்த உடலை விட்டு மகிழ்ச்சியுடன் விண்ணுலகம் செல்வேன்’ என்றார்.
ராமன் அவருக்கு அருளாசி புரிந்தார். மேலும், தான் வனத்தில் தங்கிட நல்லதொரு இடத்தை உரைக்குமாறு ராமபிரான் கேட்டார். உடனே சரபங்கர், தமது நண்பரான சுதீட்சன முனிவரது ஆசிரமத்திற்கு சென்று தங்கும்படி கூறினார்.
பின்னர் ராமபிரானிடம் விடைபெற்ற சரபங்கர், தமது ஆசிரமத்தின் முன்பு அக்னி வளர்த்து அதில் புகுந்தார். சிறிது நேரத்தில் அக்னியில் இருந்து 30 வயது வாலிபராக வெளிவந்த சரபங்கர், ராமபிரானை தரிசித்தபடியே வானுலகம் சென்றார். அக்னியில் புகுந்த இடத்தில் தான் தற்போது சரபங்கர் ஜீவசமாதி உள்ளது. அந்த பீடத்தின் மீது சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
வசந்தம் தரும் வசந்தீஸ்வரர் :
ஒரு சமயம் தொடர் போர்களால் இந்தப் பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மழை பொய்த்ததால் விளைநிலங்கள் வானம் பார்த்த பூமியாயின. எங்கும் வறட்சி, பசி, பட்டினி. மக்களின் வறுமை நிலை கண்டு, கெட்டி முதலி மன்னர் பரம்பரையில் வந்த மங்கை நல்லாள் மனம் வருந்தினார். மீண்டும் இந்தப் பகுதியில் வசந்தம் வீசவும், மக்களின் வாழ்க்கை வளம் பெறவும் வேண்டி, இங்கு சுயம்புவாக எழுந்தருளி இருந்த இறைவனுக்கு கோவில் கட்டினார்.
இதையடுத்து எம்பெருமான் திருவுளப்படி வருண பகவான் மும்மாரி பொழிந்திட, எங்கும் பசுமை, செழுமை பரவியது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்க்கையில் ‘வசந்தம்’ வீசத் தொடங்கியது. இதன்காரணமாக இந்தக் கோவிலில் உள்ள இறைவன் ‘வசந்தீஸ்வரர்’ என அழைக்கப்பட்டார்.
வசந்தீஸ்வரர் கோவில், ஓமலூர் கோட்டையின் உள்ளே வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மூலவரின் திருநாமம் வசந்தீஸ்வரர், அன்னையின் நாமம் அபிதகுசலாம்பிகை. தல விருட்சமாக வன்னிமரமும், தீர்த்தமாக சரபங்கா நதியும் உள்ளன. கோவிலின் வலதுபுறத்தில் சூரியனார், நடனமாடும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன் ஆகியோர் சன்னிதிகள் இருக்கின்றன. தனி சன்னிதியில் வலம்புரி விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
கோவிலின் பின்புறம் அரசமரமும், வேப்பமரமும் ஒன்றிணைந்த அதிசய மரம் உள்ளது. இதன் அடியில் நாகர் சிலைகள் உள்ளன. திருமணம் ஆகாத பெண்கள், இந்த மரத்தை மூன்று முறை வலம் வந்து, மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி நாகரை வழிபட்டால் தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
நாகர் சிலைகளை அடுத்து பஞ்சலிங்க சன்னிதி உள்ளது. இங்கு காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் (நிலம்), திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் (நீர்), திருவண்ணாமலை அண்ணாமலையார் (நெருப்பு), காளஹஸ்தி காளத்தீஸ்வரர் (காற்று), சிதம்பரம் நடராஜர் (ஆகாயம்) ஆகியோர் வீற்றிருந்து அருளாசி வழங்கு கிறார்கள். இவர்களை ஒருசேர தரிசித்தால் பஞ்சபூத தலங் களுக்கு சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து நவக்கிரக சன்னிதியும், சரபங்க முனிவரின் ஜீவசமாதியும் இருக்கிறது. கோவிலின் இடதுபுறத்தில் அபிதகுசலாம்பிகை தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
விஜயராகவ பெருமாள் :
சரபங்க முனிவருக்கு, ராமபிரான் தரிசனம் கொடுத்ததன் நினைவாக, வசந்தீஸ்வரர் கோவிலின் தென்மேற்கே விஜயராகவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சீதா, லட்சுமணனோடு கோதண்டராமராக பெருமாள் வீற்றிருக்கிறார். கோட்டையின் தென்கிழக்கே காவல் தெய்வமான எல்லை முனியப்பன் கோவில் உள்ளது. இவர் ‘ராஜமுனியப்பன்’ என்றும் அழைக்கப்படுகிறார். வசந்தீஸ்வரர் கோவிலுக்கு செல்வதற்கு முன்னதாகவே, கோட்டை மாரியம்மன் கோவில் இருக் கிறது.
இந்த ஆலயத்தில் பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், பவுர்ணமி, சஷ்டி, திருக்கார்த்திகை, சங்கடகர சதுர்த்தி, ராகுகால பூஜை, நவக்கிரக பூஜை, பைரவர் பூஜை, அன்னாபிஷேக விழா ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது. கோவில் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந் திருக்கும்.
ஓங்கார வடிவில் கோவில்கள் :
ஓமலூர் கோட்டை வளாகத்தில் சரபங்க நதிக்கரையில் விஜயராகவ பெருமாள் கோவில், ஆற்றங்கரை அதிசய விநாயகர் கோவில், கருமாரி அம்மன், நாகர் சன்னிதி, பாலமுருகன் சன்னிதி, அனுமன் சன்னிதி, கோட்டை மாரியம்மன் கோவில், வசந்தீஸ்வரர் கோவில் ஆகியவை ஓமலூர் என்ற பெயருக்கேற்ப ‘ஓம்’ என்கிற வரி வடிவப் பாதையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மனைவியருடன் நவக்கிரகங்கள் :
வசந்தீஸ்வரர் கோவிலின் இடதுபுறத்தில் அதிசய நவக்கிரக சன்னிதி உள்ளது. பெரும்பாலான கோவில் களில் நவக்கிரகங்கள் தனித்து இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள், தங்கள் மனைவியருடன் தம்பதி சமேதராக வீற்றிருந்து அருள் வழங்குகிறார்கள். மேலும் சிறப்பம்சமாக, எந்த கோவிலிலும் இல்லாத வகையில் சூரியபகவான் நடுநாயகமாக, அழகிய 7 குதிரைகள் பூட்டிய ரதத்தில் தமது மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவி ஆகியோருடன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இங்குள்ள நவக்கிரகங்களை வணங்கினால் கணவன்-மனைவி இடையே உள்ள பிரச்சினைகள் தீரும். விவாகரத்து வரை சென்ற தம்பதிகள் கூட, இங்கு வந்து தரிசனம் செய்தால் ஒன்றுபடும் வாய்ப்பு உருவாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அமைவிடம் :
சேலத்தில் இருந்து ஓமலூர் டவுன் வரை 15 கி.மீ. தூரமும், ஓமலூரில் இருந்து மேட்டூர் சாலையில் 1.4 கி.மீ. தூரத்திலும் வசந்தீஸ்வரர் கோவில் உள்ளது. சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக மேட்டூர், தாரமங்கலம் செல்லும் பஸ்சில் சென்றால், மேச்சேரி பிரிவு ரோட்டில் இறங்கி நடந்து செல்லும் தூரத்தில் கோவில் உள்ளது. சங்ககிரி, மேட்டூர் பக்கம் இருந்து வந்தாலும் மேச்சேரி பிரிவு ரோட்டில் இறங்கவேண்டும். ரெயில் மார்க்கத்தில் சென்றால் ஓமலூர் ரெயில் நிலையத்தில் இறங்கி நடந்து செல்லும் தூரத்தில் கோவில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சூரியனின் ஒளிக்கதிர்கள், மூலவரின் மீது விழும் அதிசய நிகழ்வு நடப்பது விசேஷம். திருமணம் ஆகாத பெண்கள், திருமணமாகி வாழ்க்கையில் துன்பப்படும் பெண்கள், இத்தல இறைவனை வேண்டிக்கொண்டால், வாழ்வில் வசந்தம் வீசும்.

நாகை மாவட்டம் அனந்தமங்கலம் என்ற சிற்றூரில் ராஜகோபால் பெருமாள் சன்னிதியில் திரி நேத்ர தஜ புஜவீர ஆஞ்சநேயர் என்ற திருநாமத்துடன் தனி சன்னிதியில் வடக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக போற்றப்படும் ஜெயவீர அனுமன் சிவபெருமானின் அவதாரமாக தோன்றியவர். அன்புக்கும், தொண்டுக்கும், வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஆஞ்சநேயர், சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்.
ராமநாமத்தின் உயிர் உருவமான ஆஞ்சநேயர் எந்தவிதமான பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும் பக்தியுடனும் ராமனுக்கு பணிவிடை செய்தார். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வீரம், ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் வாயு தேவனுக்கும்- அஞ்சனா தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது பிறந்த தினம், அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
நாடு முழுவதும் அனுமனுக்கு கோவில்கள் இருந்தாலும் நாகை மாவட்டம் அனந்தமங்கலம் என்ற சிற்றூரில் ராஜகோபால் பெருமாள் சன்னிதியில் திரி நேத்ர தஜ புஜவீர ஆஞ்சநேயர் என்ற திருநாமத்துடன் தனி சன்னிதியில் வடக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.
இங்கு எழுந்தருளி இருக்கும் அனுமன் நவக்கிரக தோஷங்களை போக்கும் ஆற்றல் படைத்தவர். அனுமன் மூன்று கண்களையும், பத்து கரங்களையும், உடையவர். சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு பாசம், வில், அம்பு, சாட்டை, நவநீதம் ஆகியவற்றை கரங்களில் ஏந்தி முதுகின் இருபக்கங்களிலும் கருடனுக் குரிய சிறகுகளோடு எழுந்தருளி காட்சி தருகின்றார்.
இதுபோன்ற ஆஞ்சநேயரின் திருமேனி இக் கோவிலில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை தரிசிப்பதால் அறிவு கூர்மையாகும். உடல் வலிமைபெறும். அச்சம் அகலும். வியாதி விலகும். வாக்கு வன்மை வளமாகும். இந்த கோவிலின் கருவறையில் உள்ள மூலவர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி உடனாகிய வாசுதேவப்பெருமாள் ஆவார். அருகில் உற்சவர் ராஜகோபாலப்பெருமாள் ருக்மணி, சத்யபாமாவுடன் அருளாசி புரிகிறார்.
தனிச்சன்னிதியில் கிழக்குநோக்கி அமர்ந்த கோலத்தில் செங்கமலவல்லித் தாயார் அருள்பாலிக்கிறார். தனிக்கோவிலில் வடக்கு முகமாக உள்ள ஆஞ்சநேயர் உற்சவத்திருமேனி கோவில் அருகே இடதுபுறமாக எழுந்தருள செய்யப்பட்டுள்ளது. ஆஞ்சநேயருக்கு அருகில் இடதுபுறம் பூமிதேவித் தாயார் எழுந்தருளியுள்ளார்.
தலவரலாறு:
ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட சீதையை மீட்பதற்காக ராமன் இலங்கை சென்று யுத்தம் செய்து வெற்றிபெற்று சீதையை சிறைமீட்டார். பின்னர் ராமன் சீதை, லக்குவன், அனுமன் முதலியோர் புட்பகவிமானத்தில் ஏறி அயோத்திக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். வழியில் பரத்வாஜ் மகரிஷியின் அழைப்பிற்கு இணங்க அவரது ஆசிரமத்தில் தங்கி உணவு உண்டனர். அப்போது அங்கு வந்த நாரதர் ராமனை வாழ்த்தினார்.
மேலும் அவர் ராமனிடம், ராவணனை அழித்து விட்டீர்கள். ஆனாலும் இன்னும் சில அரக்கர்கள் ஆங்காங்கே இருக்கவே செய்கின்றனர். அவர்களுள் ரக்தபிந்து, ரக்தராட்சசன் ஆகிய இருவரும் மிக கொடியவர்கள். அவர்கள் தற்சமயம் கடலுக்கடியில் கடுந்தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தவம் பூர்த்தியானால் அவர்கள் கடும் வல்லமையுடன் உலகை அழித்து விடுவர். ஆதலால் உலக மக்கள் நன்மைக்காக அவர்களை நீ அழிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
அதைக்கேட்ட ராமன் அரக்கர்களை அழிப்பதற்கு ஒத்துக்கொண்டார். ஆனால் அவர் பரதனுக்கு கொடுத்த வாக்கின்படி உடனே அயோத்திக்கு திரும்ப வேண்டும். என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தார். பின்னர் அனைவரின் ஆலோசனை படி அரக்கர்களை அழிக்க எல்லையில்லா ஆற்றலை படைத்த மாவீரன் அனுமனை அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு அனுமனும் ஒப்புக்கொண்டார்.
அவரை மும்மூர்த்திகளும், தேவர்களும் வெற்றிவாகை சூடி வர வாழ்த்தினர். அரக்கர்களை வெல்ல திருமால் தம் சங்கு, சக்கரத்தை அனுமனுக்கு அளித்தார். பிரம்மா பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும், வழங்கினர். ராமன் வில்லையும் அம்புகளையும் அளித்தார். இந்திரன் வஜ்ஜிராயுதத்தையும் வழங்கினார். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர் பத்து கரங்களுடன் காட்சி தந்தார்.
அப்போது கருடாழ்வார் தம் இருசிறகுகளையும் அவருக்கு தந்தார். சிவபெருமான் ஆஞ்சநேயருக்கு தம்முடைய சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணையே வழங்கினார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்) பத்து கைகளும் (தஜபுஜம்) கொண்டு வீர ஆஞ்சநேயர், அங்கிருந்து ‘ஸ்ரீராம்’ என்று வீரமுழக்கமிட்டுச்சென்று கடலுக்கு அடியில் பதுங்கி தவம் செய்துகொண்டிருந்த ரக்தபிந்து, ரக்தராட்சசன், ஆகிய இருவரையும் தேடிச்சென்று சம்காரம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமனைச்சந்திக்க வந்தார். வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பியுள்ள ஓரிடத்திற்கு வந்ததும் அவர் ஆனந்த பரவச நிலையை அடைந்தார். அந்த இடத்தில் இறங்கி சற்றுநேரம் ஆனந்தமாகத்தங்கி இருந்தார். இந்த இடமே அனந்தமங்கலம் ஆயிற்று.
தெப்பக்குளம்:
ஆஞ்சநேயர் சன்னிதிக்கு முன்பு தெப்பக்குளம் உள்ளது. அதன் பெயர் தாமரைக்குளம். இந்த குளத்தில் கால், கைகளை தூய்மை செய்து கொண்டு ஆஞ்சநேயரை வணங்கி வலம்வந்து பெரிய கோவிலான ராஜகோபாலப்பொருமாள் கோவிலுக்கு செல்லலாம்.
ஆனந்தநிலையில் வீற்றிருக்கும் ஸ்ரீதிரிநேத்ர தஜபுஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமால், சிவபெருமான் பிரம்மா, ஸ்ரீராமன், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
உடல், மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், பில்லி, சூனியம், ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு அல்லல் நீங்கி ஆனந்தம் பெறுகின்றனர்.
இத்திருக்கோவில் இந்துசமய அறநிலைய ஆட்சி துறையின் நிர்வாகத்தில் உள்ளது. தினமும் 6 காலபூஜை நடைபெற்று வருகிறது. அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மார்கழிமாதம் அமாவாசையின் போது அனுமன் ஜெயந்தி விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையிலும், வியாழக்கிழமையிலும் ஆஞ்சநேயரை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அனந்தமங்கலம் ஆஞ்சநேயரின் நித்யவாசஸ்தலம் ஆகும். இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட காலநேரம் பார்க்க வேண்டியது இல்லை. எப்போதும் வழிபடலாம். ஆங்கிலப்புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, தமிழ்ப்புத்தாண்டு, ஸ்ரீராமநவமி, ஸ்ரீகோகுலாஷ்டமி ஆகியவை முக்கியமாக கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும்.
கோவில் அமைவிடம் :
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ளது அனந்தமங்கலம். சிதம்பரத்தில் இருந்து சீர்காழி, திருக்கடையூர், தரங்கம்பாடி, காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் செல்லும் சாலையில் திருக்கடையூருக்கும், தரங்கம்பாடிக்கும் இடையே உள்ளது அனந்தமங்கலம்.
அனந்தமங்கலம் பஸ்நிலையத்தை நாராயணநாயக்கன் சாவடி என்று அழைப்பர். அங்கிருந்து ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அனந்தமங்கலம்.

பிடாரி கருக்காத்தம்மனை வேண்டினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்றும், அற்புத சக்தி கொண்டவள் இந்த அன்னை என்றும் வழிபட்டு பேறு பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர்.
மாமல்லபுரம் நகரின் எல்லையில் அமைந்துள்ளது, பிடாரி கருக்காத்தம்மன் கோவில். இங்குள்ள அம்மனை, அந்தப் பகுதி மக்கள் காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மாமல்லபுரம் ஊரின் கிழக்கே தல சயன பெருமாள் ஆலயமும், மேற்கே ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக கருக்காத்தமன் ஆலயமும் திகழ்கிறது.
இந்த அம்மனை வேண்டினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்றும், அற்புத சக்தி கொண்டவள் இந்த அன்னை என்றும் வழிபட்டு பேறு பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர். இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு, சுகாசன நிலையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் கருக்காத்தம்மன். இந்த அன்னையின் கண்களில் கருணையும், வீரமும் பிரதிபலிக்கிறது.
தல வரலாறு :
பூலோக மக்களும், தேவர்களும், மகிஷாசூரன் என்ற அரக்கனால் துன்பங்களை அனுபவித்து வந்தனர். இதனால் அவனை அழிக்கும்படி அனைவரும் காளி தேவியிடம் முறையிட்டனர். இதையடுத்து மைசூரில் தோன்றிய காளியம்மன், கோபமான தோற்றத்துடன், எருமை தலையைக் கொண்ட மகிஷாசூரனை வதம் செய்ய சிங்கத்தின் மீது அமர்ந்து மாமல்லபுரம் நோக்கி வந்தாள்.
மாமல்லபுரத்தில் பிடாரி ரதம் அருகில் உள்ள மலையில், மகிஷாசூரனை சூலாயுதம் கொண்டு சம்ஹாரம் செய்தாள். ஆனால் அந்த அசுரனின் உடலில் இருந்து விழுந்த ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்து ஒரு அரக்கன் தோன்றினான். இதையடுத்து அன்னையானவள், அனைத்து அரக்கர்களையும் வதம் செய்து, அவர்களின் ரத்தம் பூமியில் சிந்தும் முன்பாக கபால ஓட்டில் தாங்கி குடித்தாள்.
அன்னையின் வெற்றியைத் தொடர்ந்து தேவர்கள், பூமாரி பொழிந்து அவளை வேண்டினர். பின்னர் காளியானவள், கோபம் குறைந்து சாந்தமாகி, மாமல்லபுரம் காட்டில் மலைப்பாறையில் அமர்ந்து, அங்குள்ள மக்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினாள் என்று தல வரலாறு கூறுகிறது.
கோவில் சிறப்பு :
முன்னோர்களின் சாபத்தால் கரு தங்காமல், குழந்தை பாக்கியமில்லாமல் தவித்தாள் ஒரு பெண். அவள் இத்தல அம்மனை தினமும் வேண்டி, தனக்கு குழந்தை பாக்கியம் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தாள். இதையடுத்து அந்தப் பெண், கருவுற்று அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். எனவே ஊரைக் காக்கும் தெய்வமாக விளங்கிய இந்த அம்மனை, கருவை காக்கும் தெய்வமாகவும் மக்கள் வழிபடத் தொடங்கினர். அம்மனுக்கும் ‘கரு காத்த அம்மன்’ என்ற பெயர் வந்தது.
அதேபோல் கருச்சிதைவு ஏற்பட்டு, மீண்டும் பல ஆண்டு காலம் கரு தங்காமல் இருந்த பெண்கள் இருவர், இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டனர். கோவில் தீர்த்தத்தில் நீராடி, ஈரத்துணியுடன் ஆலயத்தை வலம் வந்து அம்மனை வணங்கினர். இதையடுத்து அவர்களுக்கு கரு தங்கி, குழந்தை பாக்கியம் கிடைத்தது என்பதும் செவி வழிச் செய்தியாக உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் இங்கு வந்து, கருக்காத்த அம்மனை வணங்கினால் பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர் களுக்குக் கூட குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
மேலும் ஏவல், பில்லி, சூனியம் அகலவும், சித்தபிரம்மை விலகவும், வறுமை நீங்கி குடும்பம் வளம் சேரவும், தீராத சாப நோய்கள் தீரவும், மாங்கல்ய பாக்கியம் பெறவும் கருக்காத்தம்மன் அருள்புரிகிறாள். திருமணம் ஆன பெண்கள், மஞ்சள் கயிற்றில் ஒரு துண்டு மஞ்சளை கட்டி அம்மனை நினைத்து தலவிருட்சமான எட்டி மரத்தில் கட்டி மூன்று முடிச்சி போடுகின்றனர். இதனால் அவர்களுக்கு மாங்கல்யம் பலம் பெறும் என்பது நம்பிக்கை.
இத்தல அம்மன், 6 மாதம் ஆக்ரோஷமான முகத்துடனும், 6 மாதம் சாந்தமான முகத்துடனும் காட்சி தருவது ஆலயத்தின் மற்றொரு சிறப்பாகும். திருவிழா நாட்களில் பெண்கள் கூட்டம் இங்கே அலைமோதும்.
ஆடி மாதம் பிறந்து விட்டாலே இந்த கருக்காத்தம்மன் கோவிலில் தினமும் திருவிழாக்கோலம்தான். இந்த ஆலயத்தில் வள்ளி- தெய்வானையுடன் கூடிய முருகர் சன்னிதி, விநாயகர், நவக்கிரகங்களின் சன்னிதிகளும் உள்ளன. அதேபோல் கோவில் முகப்பில் விநாயகப் பெருமாளின் அவதாரமான, இரண்டு யானைகளின் சிலைகள் உள்ளன. அம்மனை வணங்க வரும் பக்தர்கள், இந்த யானை சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்குவது மரபாக உள்ளது.
பெண்கள் பலரும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து, இத்தல அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்கின்றனர். சில பெண்கள் வேப்பிலை ஆடை உடுத்தி அம்மனை வழிபட்டு தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றுகிறார்கள். ஆடி மாத நாட்களில் அம்மனுக்கு சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, குங்குமகாப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
கோவில் அமைப்பு :
பெரும்பாலும் அம்மன் கோவில்கள் வடக்கு பார்த்த முகமாக காட்சி தரும். ஆனால் இந்த பிடாரி கருக்காத்தம்மன் ஆலயம், கிழக்கு பார்த்த முகமாக காட்சி அளிப்பது சிறப்பம்சமாகும். மூலஸ்தானத்தில் உள்ள அம்மன் ஜடா முடியுடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். பழமை வாய்ந்த இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். மாமல்லபுரம் ஊரின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
திருவிழாக்கள் :
இந்த அம்மனுக்கு நடைபெறும் திருவிழாக்களிலேயே, புரட்டாசி மாதம் நடைபெறும் 10 நாள் நவராத்திரி விழா சிறப்பு வாய்ந்ததாகும். விழாவின் 10 நாட்களும், கருக்காத்தம்மன் வீணை ஏந்தும் சரஸ்வதி, அஷ்டலட்சுமி, பத்ரகாளி, மகிஷாசூரனை (அரக்கனை) சம்ஹாரம் செய்தல், சிவனுடன் கூடிய பார்வதி உள்பட பல தேவதைகளின் திருக்கோலங்களில், பூக்களாலும், ஆபரணங் களாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருவார். இந்த அருள்காட்சிகள் பார்ப்பதற்கு மனநிறைவைத் தருவதாக அமைந்திருக்கும். 10-ம் நாளான இறுதி நாள் அன்று, கருக்காத்தம்மன் சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட கோலத்தில் மாமல்லபுரத்தில் வாணவேடிக்கைகளுடன் திருவீதி உலா வருவார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனுக்கு பூமாலை சாத்தி பயபக்தியுடன் வழிபடுவார்கள்.

மன்னர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, குலோத்துங்க வள நாட்டிற்குள் அமைந்திருந்த ஊர் காரப்பாக்கத்தில் கங்கையம்மன் ஆலயம் உள்ளது.
மன்னர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, குலோத்துங்க வள நாட்டிற்குள் அமைந்திருந்த ஊர் காரப்பாக்கம். இங்கு கங்கையம்மன் ஆலயம் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த அம்மனின் தோற்றம் சுயம்புவான சிறு கல்லாகும். குளக்கரை ஓரம் மரத்தடியில் தோன்றிய இந்த அம்மன், ஆரம்ப காலத்தில் குளக்கரையில் சிறு குடில் அமைக்கப்பட்டு, அதனுள் வாழ்ந்து அருள் வழங்கி வந்தாள்.
இந்தப் பகுதி வாழ் மக்கள் தங்கள் விவசாயத்தின் தொடக்கமான விதை விதைப்பிற்கும், அதன் அறுவடைக்கும் அன்னையின் உத்தரவு பெற்றே, தங்கள் தொழிலைச் செய்துவந்தனர். அன்னை தந்த அமோக விளைச்சலின் காரணமாக, அவளுக்கு நன்றிக்கடனாக ஆடி மாதத்தில் கூழ் ஊற்றி, கும்பம் வைத்து, ஊரணிப் பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.
மகாபலிபுரத்திலிருந்து சென்னைக்கு மாட்டு வண்டி மூலம் செல்லும் யாத்திரிகர்கள் இத்தலத்து அன்னையை வழிபட்டு, இளைப்பாறிய பின்பு பயணத்தைத் தொடருவார்கள்.
இந்தச் சூழ்நிலையில் அம்மனின் அருள் வெள்ளம் பரவத் தொடங்க, இவ்வூரின் ஐயப்ப குருசாமியும், மண்டல குழுத் தலைவருமான லியோ சுந்தரம் என்ற அடியாரின் பெருமுயற்சியாலும், பொருளுதவியாலும் இன்று ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் பிரமாண்ட ஆலயம் எழும்பி நிற்கிறது. அம்மன் ஆலயத்தின் பின்புறம் கற்பகாம்பாள் உடனுறை கற்பகேஸ்வரர் திருக்கோவிலும் அமைந்துள்ளது, இதன் கூடுதல் சிறப்பாகும்.
ஆலய அமைப்பு :
கங்கை அம்மனுக்கு வடக்கு முகமாக ஐந்து நிலை ராஜகோபுரம் எழிலாக அமைந்திருக்க, எதிரே சதுர வடிவத் திருக்குளம் நீர் நிறைந்து அழகு சேர்க்கின்றது.
ராஜகோபுரத்திற்குள் நுழைந்ததுமே பெரிய துவாரபாலகிகள் இருவர், வண்ணக் கோலத்தில் காவல் நிற்கின்றனர். உள்ளே சுமார் ஆறடி உயர கங்கை அம்மன் அமர்ந்த நிலையில் கருவறைக்குள் காட்சி தருகின்றாள். இவள், திருவடி சூலம் மலைக்கல்லில் உருவானவள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் கீழே பழைய கங்கை அம்மன் எழிலோடு காட்சியருள, அதன் கீழே சுயம்புவான கங்கை அம்மன் சிறு கல் வடிவில் காட்சியளிக்கின்றாள். இவளே பல நூற்றாண்டுகளைக் கண்டவள்.
ஆலயத்தில் இடமிருந்து வலமாக முதலில் துர்க்கை, வலம்புரி விநாயகர், நெய் அபிஷேகப் பிரியன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், அதையொட்டி மேற்கு முக சன்னிதியில் 11 அடி உயரமுள்ள பக்த ஆஞ்சநேயர் சன்னிதிகளும், கபிலமுனி, பகீரதன் சுதைச் சிற்பங்களும் அமைந்துள்ளன. இதனை அடுத்து நவக்கிரகங்கள், தனி சனீஸ்வரர், கால பைரவர், வீர ஆஞ்சநேயர் சன்னிதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன.
கற்பகேஸ்வரர் கோவில் :
கங்கையைத் தன் தலைமுடியில் வைத்து தாங்கிய சிவபெருமானுக்கு, தன் ஆலயத்திற்குத் தனி ஆலயம் எழுப்பிட இடமளித்துள்ளாள் கங்கை. இவ்வாலயம் கங்கையம்மன் சன்னிதியின் பின்புறம் அமைந்துள்ளது. கொடிமரம், பலிபீடம், நந்திதேவரைக் கடந்து முன்மண்டபம் சென்றதும், இறைவனின் கருவறை வரவேற்கின்றது.
கருவறைக்குள் அடியார்களைக் கவர்ந்து இழுக்கும் கற்பகேஸ்வரர் வட்ட வடிவ ஆவுடையாரைக் கொண்டு அழகிய திருமேனியில் ஜொலிக்கின்றார். வேண்டிய வரம் அருளும் இறைவன் இவர். இவரின் இடதுபுறம் எதிரில் எளிய வடிவில் அன்னை கற்பகாம்பாள் அருளாசி வழங்குகிறாள். கொடிமரத்தின் அருகே தென்புறத்தில் நாகலிங்க மரத்தடியில் ஆதி கற்பகேஸ்வரர், நாகராஜன், நாகராணி சிலா வடிவங்கள் அமைந்துள்ளன.
இத்திருக்கோவிலில் மாதந்தோறும் 4-ம் வார ஞாயிற்றுக்கிழமைகளில், காலை முதல் மாலை வரை அடியார்களால் திருவாசக முற்றோதல் மற்றும் தேவாரப் பாடல்கள் ஓதப்படுகிறது.
கங்கையம்மன் ஆலயம் முழுமையும், அழகிய சுதை தூண்கள், கலைநயம் மிக்க சுதைச் சிற்பங்கள் என அனைத்துமே கலைநயத்தினைப் பறைசாற்றுகின்றன.
அம்மன் ஆலயங்கள் நிறைந்த ஊர் :
இவ்வூரில் பழமையான வேண்டவராசி அம்மன், காளியம்மன், திரவுபதியம்மன், பெரியபாளையத்தம்மன், அங்காளம்மன், நாகாத்தம்மன் என அம்மன் ஆலயங்கள் நிறைந்துள்ளன. இது தவிர பெருமாளுக்கான பஜனைக்கோவிலும் உள்ளது.
கங்கை அம்மனுக்கு ஆடித் திருவிழா ஆடி மாத நான்காம் வார செவ்வாய் அன்று தொடங்கி, ஐந்தாம் வார ஞாயிறு வரை அம்மனுக்கு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். விழாவில் கும்பம் வைத்தல், கூழ்வார்த்தல், ஊரணிப் பொங்கல் வைத்தல் என இப்பகுதியே களைகட்டும்.
கற்பகேஸ்வரருக்கு பிரதோஷம், அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம், திருக்குளத்தில் தெப்பல் திருவிழா என அனைத்தும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.
அமைவிடம் :
சென்னை- பழைய மகாபலிபுரம் சாலையில், சென்னையில் இருந்து தெற்கே 23 கி.மீ. தொலைவில், சோழிங்கநல்லூருக்கு முன்பாக காரப்பாக்கம் அமைந்துள்ளது. காரப்பாக்கம் பேருந்து நிறுத்தம் ஆலயத்தை ஒட்டியே உள்ளது. இவ்வழியே ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன.

சனிபகவான் என்று சொன்னவுடனேயே நம் சிந்தையில் அருள்மிகு திருநள்ளாற்று உறை சனிபகவானின் நினைவே தோன்றும். இந்த தலத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
நவக்கிரக மூர்த்திகளில் சனிபகவான் நிரம்பவும் பெருமை உடையவர். ஈஸ்வரனுக்கு சமமாக அவருக்கு மட்டுமே ஈஸ்வரப்பட்டம் இருக்கிறது. அதனாலேயே சனீஸ்வரன் என்று போற்றப்படுகிறார்.
கோவில்களில் நவக்கிரகப் பிரதிஷ்டை இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் சனீஸ்வரன் பிரதிஷ்டை இல்லாமல் இருக்காது. உயர்ந்த மேடை ஒன்றில் அவரது பிரதிஷ்டை அமைந்திருக்கும்.
மன்னாதி மன்னர்கள் என்றாலும் சனிபகவானை வழிபடாதவர்களே இல்லை.
சனீஸ்வர மூர்த்தியை வழிபட்டே தசரத மகாராஜா பலகாரியங்களில் வெற்றி அடைந்திருக்கிறார். புரூவரசு சக்கரவர்த்தியும், நளச்சக்கரவர்த்தியும் சனிபகவானை வழிபட்டே புகழும், சிறப்பும் எய்தி ஆட்சி செய்திருக்கிறார்கள்.
சனீஸ்வர மூர்த்தியை வழிபட்டு அவரது அருளைப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்தும், சிறந்தும் விளங்குவர். சனிபகவான் என்று சொன்னவுடனேயே நம் சிந்தையில் அருள்மிகு திருநள்ளாற்று உறை சனிபகவானின் நினைவே தோன்றும்.
புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் பகுதியில் திருநள்ளாறு அமைந்துள்ளது. காரைக்காலுக்கு மேற்கே 5 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்தில் 45 கி.மீ தொலைவிலும், மயிலாடுத்துறையிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 23 கி.மீ தொலைவிலும் உள்ளது.
இந்த தலம் ஆதிகாலத்தில் பிரமதேவர் பூஜை செய்ததால் ஆதிபுரி, தருப்பாரண்யம், நகவிடங்கபுரம், நளேச்சுரம் என்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. இந்நான்கு பெயர்களும் முறையே நான்கு யுகங்களுக்கும் வழங்கப்படுகின்றன. நளன் என்னும் பெயர் சொல்லின் “அன்” விகுதி கெட்டு ஆறு என்னும் சொற்புணர்ந்து நள்ளாறு என்றாயிற்று. அதாவது நளனுக்கு நன்னெறி காட்டிய தலம் என்று பொருள்படும். நல்லாறு என்பது நள்ளாறு என மருவி அழைக்கப்படுகிறது.
திருநள்ளாற்று கோவில் கிழக்கு நோக்கி திசையில் உள்ளதாகும். இரண்டு திருச்சுற்று மதில்கள் உள்ளன. இறைவர் சன்னதி கிழக்கு முகமாகவும், அம்மையார் சன்னதி முதல்பிரகாரத்தில் சோபன மண்டபத்தில் தெற்கு முகமாகவும் இருக்கிறது. சனீசுவர பகவான் சன்னதி கிழக்கு முகமாய் அம்மையார் சன்னதிக்கு முன்புறம் அமைந்துள்ளது.
திருநள்ளாற்றுக் கோவில் அழகும், அருளும் நிறைந்த ஓர் கலைக்கோவிலாகும். கோவிலை வலம் வரும்போது தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் உருவங்கள் காணப்படுகின்றன.
இக்கோவிலின் நீண்ட வெளிப்பிரகாரத்தை வலம் வந்தால் அருள்மிகு காளத்தியப்பர் சன்னதிக்கு வந்து சேரலாம். இக்கோவில் ஓரு சிற்றாலயமாக எழிலுற அமைந்திருக்கிறது. காளத்தியப்பர் சிவஜோதியாக வீற்றிருக்கிறார். இத்தலம் சனி பகவானுக்கு மட்டுமில்லாமல் ராகு, கேது இவர்களுக்காகவும் வழிபட வேண்டிய தலமாகும்.
ஸ்ரீசனிபகவான் சன்னதி இரண்டாவது கோபுர வாயிலின் வலது புறமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக சனிபகவான் சன்னதி மேற்கு நோக்கியே இருக்கும்.
உக்ரமூர்த்தியாகிய சனீஸ்வரன் இங்கு அனுக்கிரக தேவதையாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன் அருள் வழங்குகின்றார். ஏனைய நவக்கிரகங்கள் இத்தலத்தில் தனியாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பதும் இவருடைய முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும்.
நளச்சக்கரவர்த்தியை துன்புறுத்தி கொண்டிருந்த ஸ்ரீசனிபகவான் நளன் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரரை வந்து வணங்கி தரிசித்தவுடன் விலகி விடுகின்றார். பின்பு எம்பெருமானுடைய அருளாணையின் வண்ணம் பக்தர்களுக்கு அருள் வழங்கும் அனுக்ரக மூர்த்தியாக ஈஸ்வரப்பட்டம் பெற்றுக்கொண்டு துவார தேவதையாக இரண்டாவது கோபுர வாயிலில் விளங்குகின்றார்.
இங்கு நளன் விடுதலை பெற்று திருப்பணிகள் செய்து முடித்து திருக்கோவில் அமைத்து இறைவனை பூசித்தான். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல எண்ணத்தினால் நளன் இறைவனிடத்தில் வரங்களை வேண்டினான்.
அவையாவன:
இங்கு என்னைப்போல் ஸ்ரீசனிபகவானை வந்து வணங்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ சனிபகவான் அருள்செய்து துன்பம் போக்கி நலம்பல செய்திடல் வேண்டும் என்று ஒரு வரமும். இரண்டாவதாக இத்தலத்தின் ஒருகாத விஸ்தீரணம் பரப்புகளில் சனிபகவான் அனுக்கிரஹ பார்வை உடையவராக இங்கு இருப்பவர்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்று ஒரு வரமும்.
மூன்றாவதாக, இந்த பகுதிக்கு இன்று முதல் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் என் பெயரில் விளங்கிட வேண்டும் என்று வேண்டினான். சனிபகவானும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு அவ்வாறு அருள் செய்தனர். ஆகையால் இங்கு நளனுக்கு விமோசனம் அளித்தபடியால் இறைவனுக்கு ஸ்ரீநளேஸ்வரர் என்ற பெயரும் திருக்குளத்திற்கு நளத்தீர்த்தம் என்ற பெயரும் இவ்வூருக்கு திருநள்ளாறு என்ற பெயரும் விளங்கலாயிற்று.
முதலில் நளதீர்த்தம் சென்று அந்த தீர்த்த குளத்தை வலமாக பிரதட்சிணம் செய்து குளத்தின் நடுவில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி தமயந்தி குழந்தைகளின் உருவச்சிலைகளை வணங்கி வழிபடுதல் வேண்டும். பின்னர் நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ ஒன்பது முறை ஸ்நானம் செய்து தலை முழுக்காட வேண்டும்.
பின்னர் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகிய திருக்குளத்திலும் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். பிறகு கோவிலுக்குள் நுழைந்து வலமாக வந்து ஸ்ரீசொர்ண கணபதியை முதலில் வழிபட்டு ஸ்ரீசுப்ரமணியர் சன்னதியை தரிசனம் செய்துக்கொண்டு, மூலஸ்தானமாகிய ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரருக்கு அர்ச்சனை பூஜைகள் செய்து ஸ்ரீ தியாகேசர் சன்னதியை தரிசிக்க வேண்டும்.
பிறகு இரண்டாவது முறை வலமாக வந்து அம்மன் சன்னதியை அடைந்து அர்ச்சனை பூஜைகள் முடித்துக்கொண்டு கடைசியாக ஸ்ரீசனிபகவான் சன்னதியில் வந்து வழிபடுதல் வேண்டும். அவரவர்களுடையே வசதிக்கும், சக்திக்கும் ஏற்றபடி ஸ்ரீசனிபகவானுக்கு அர்ச்சனை, தீபாராதனை, அபிஷேகம், ஜபம், ஹோமம், தர்ப்பணம், தானம் முதலியன செய்யலாம்,,
காலை, மாலை இரு வேளையிலும் ஸ்ரீசனிபகவானை நவப்பிரதட்சிணம் செய்வது நல்ல பயன் தரும்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாயை வழிபட செவ்வாயின் தீய தசாபுத்தி நடப்பவர்கள் அது நீங்கி சுகம் பெறலாம்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமி, தன்வந்திரி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இக்கோவில் நவகிரகங்களில் செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் திருமண இக்கோவிலுக்கு வந்து அரசமரத்தடி விநாயகர், ஆதி வைத்தியநாதரை வழிபட்டு ஆலமரத்தை சுற்றி வரவேண்டும். பின்பு மூலவர் சன்னதியில் உள்ள அங்காரகன் சன்னதியில் உள்ள அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை கூறி சங்கல்பம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.
அதனை தொடர்ந்து சிவப்பு அரளி மாலை அணிந்து அங்கு வழங்கப்படும் நிவேதனத்தை தங்களது கரங்களால் பக்தர்களுக்கு வழங்கி கோவிலை வலம் வந்து வழிபடவேண்டும். முன்னதாக வைத்தியநாதசுவாமி, தையல்நாயகிஅம்மன், செவ்வாய்க்கு அதி தேவதையான முருகப்பெருமானை வழிபடவேண்டும். பரிகார பூஜைகள் சிறப்பு வழிபாடு செய்திட பக்தர் ஒருவருக்கு ரூ.300 வரை ஆகும்.
சீர்காழியிலிருந்து 6கி.மீ தொலைவில் உள்ளது வைத்தீஸ்வரன்கோவில் உள்ளது. சீர்காழி ரெயில் நிலையத்தில் இறங்கிய பின் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியாக செல்லும் அனைத்து பஸ்களிலும் வைத்தீஸ்வரன் கோவில் செல்லலாம். மயிலாடுதுறையில் இருந்து இத்தலம் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இத்தலத்திற்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு. வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் வேதபுரி, கந்தபுரி, பரிதிபுரி, அங்காரபுரி, அம்பிகாபுரி என்ற பெயர்களும் உண்டு. இறைவனின் திருவிளையாடல்படி வேர்வைத் துளியிலிருந்து அங்காரகன் செந்நிற வடிவத்துடன் வேலுடன் தோன்றி சிவபெருமானை வணங்கினார். அப்போது அங்காரகனுடைய மேனியில் செங்குட்டம் இருப்பதைக் கண்டு இந்திராதி தேவர்கள் அஞ்சினார்கள். சிவபெருமான் அங்காரகனிடம் காவிரிக்கரையருகில் வைத்தியநாத தலம் ஒன்று உள்ளது. அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் மூழ்கி இறைவனைப் பூசித்து வணங்கினால் உனக்கு ஏற்பட்டுள்ள செங்குட்டம் நீங்கி விடும் என்று கூறினார்.
அதன்படி அங்காரகன் சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி செங்குட்டம் நீங்கப் பெற்றார் ஸ்ரீ வைத்தியநாதரை தினசரி முழு ஈடுபாட்டுடன் தியானம் செய்தார். இறைவன் மனமகிழ்ந்து அங்காரகன் முன்தோன்றி அவருக்கு வேண்டிய வரங்களைக் கேட்க கூறினார்.
அங்காரகன் இறைவன் திருவடியை மறக்காத மனமும், செவ்வாய்க்கிழமைகளில் வந்து தன்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் சற்புத்திரப் பேற்றையும் அளிக்கும்படி வேண்டினார்.
சிவபெருமானும் அங்காரகனுக்கு “செவ்வாய் கிழமைகளில் உன்னை வந்து துதிப்போருக்கு கிரகபீடையை நீக்கி நன்மை செய்யவும், நவக்கிரகங்களில் மூன்றாவதாகத் திகழ்க” என வரம் அளித்தார்.
வைத்தீஸ்வரன் கோவிலில் அங்காரகன் மூலவர் சன்னதி கிழக்குக் கோபுர வாசலில் நுழைந்தவுடன் தண்டாயுதபாணி சன்னதிக்குத் தெற்கில் தெற்கு முகமாக அமைந்துள்ளது. நான்கு கைகளில் முறையே சூலம், சக்தியாயுதம், அபயக்கை, தண்டம் தாங்கிய கையுடன் காட்சியளிக்கிறார். அங்காரகன் உற்சவர் ஸ்ரீ வைத்தியநாதர் மூலவர் சன்னதிக்குத் தெற்கில் வெள்ளிமஞ்சத்தில் காட்சியளிக்கிறார்.
செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் இங்கு வந்து அர்ச்சனை செய்து துவரை அன்னம் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். இதனால் தோஷம் நீங்கும். இங்கு விற்கப்படும் வைத்தியநாதர் மருந்து என்ற திருச்சாந்துருண்டையை வாங்கி உண்டால் நோய்கள் நீங்கும்.
அர்ச்சனைத் தட்டுடன் வெல்லம் மற்றும் உப்பும், மிளகும் கலந்து விற்பனை செய்கிறார்கள். வெல்லத்தை உள்ளே உள்ள (தீர்த்தத்தில்) குளத்தில் கரைத்து விட வேண்டும், உப்பை தையல் நாயகி சந்நிதி எதிரில் உள்ள இடத்தில் சேர்க்க வேண்டும். மிகச் சிறிய அளவு உப்பு மற்றும் மிளகை அதிலிருந்து எடுத்து வாயில் போட்டு மென்று தின்பதும் வழக்கம்.
கீழசந்நிதி நுழைவாயிலில் வேப்ப மரத்தடியில் ஆதிவைத்திய நாதர் காட்சியளிக்கிறார். இந்த மரத்தினை மூன்று முறை வலம் வந்து பணிந்து அவ்விடம் அமர்ந்து தியானித்தால் சகல நலன்களும் கிடைக்கும். கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும். இத்தலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் இரவில் ஆடு வாகனத்தில் வலம் வந்து ஆண்டவனை வணங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்த தலம் மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் இத்தலத்து இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இதன் வரலாற்றை கீழே விரிவாக பார்க்கலாம்.
இறைவனின் திருவிளையாடல்கள் ஏராளம். தன் பக்தர்களைக் காக்க அவர் எடுத்த உருவங்களும் எண்ணில் அடங்காதவை. சிவபெருமானும், பார்வதியும் மான் உருவெடுத்து தாயின்றி தவித்த மான் குட்டிகளுக்கு பாலூட்டிய வரலாறும் ஒரு திருவிளையாடல்தான்.
இந்த திருவிளையாடல் அரங்கேறிய தலம் திருமாந்துறை. தற்போது மாந்துறை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆலயம் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஆம்பரவனேஸ்வரர். இவருக்கு ஆதிரத்னேஸ்வரர், சுந்தரத்னேஸ்வரர், மிருகண்டீஸ்வரர் போன்ற பெயர்களும் உள்ளன. இறைவியின் பெயர் வாலாம்பிகை. அன்னையின் மற்றொரு திருநாமம் அழகம்மை என்பதாகும்.
ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. எதிரே நந்தி மண்டபம் உள்ளது. கோபுரத்தைக் கடந்ததும் அழகிய நீண்ட பிரகாரம். ஆலயம் ஒரு திருச்சுற்றுடன் விளங்குகிறது. திருச்சுற்றின் தெற்கில் தல விருட்சமான மாமரம் உள்ளது. ஆம்ரம் என்றால் மாமரம் என்று பொருள். இந்த தலம் மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் இத்தலத்து இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
ஆலய திருச்சுற்றின் தென் மேற்கில் விநாயகர் சன்னிதி, மயில் வாகனத்தில் சாய்ந்தபடி வள்ளி- தெய்வானை சமேத முருகன் சன்னிதி, கஜலட்சுமியின் சன்னிதிகள் உள்ளன. திருச்சுற்றின் வடக்கில் சண்டிகேசுவரர் சன்னிதி இருக் கிறது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இங்கு நடுநாயகமாக சூரியன் தன் இரு தேவிகளுடன் மேற்கு நோக்கி இருக்க, மற்ற அனைத்து கிரகங்களும் அவரை பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வித்தியாசமான தோற்றமாகும்.
ஆலயத்திற்குள் நுழைந்ததும் விசாலமான மகா மண்டபமும், வலதுபுறம் அன்னை வாலாம்பிகையின் சன்னிதியும் உள்ளது. அன்னை நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள். மகா மண்டபத்தின் கிழக்கு திசையில் நால்வர் திருமேனிகள் உள்ளது. மகாமண்டபத்தை அடுத்துள்ள இறைவன் கருவறையின் முன்பாக நந்தியும், இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டபாணியும் அருள்பாலிக்கிறார்கள்.
கருவறை நுழைவு வாசலில் சுதை வடிவில் துவாரபாலகர்களின் திருமேனி காணப்படுகிறது. அர்த்த மண்டபத்தின் வலதுபுறம் விநாயகர், சந்திரசேகரர், ஆம்பரவனேஸ்வரர், வாலாம்பிகை, நடராஜர், சிவகாமி, மாணிக்க வாசகர், பிரதோஷ நாயகர் ஆகியோரின் உற்சவ திருமேனியில் கிழக்கு திசைநோக்கி அருள் பாலிக்கின்றனர். இறைவனின் தேவக்கோட்டத்தின் தென்புறம் ஆதிசங்கரர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தியும், மேல் திசையில் மகாவிஷ்ணுவும் வடக்கில் பிரம்மா, துர்க்கையும் வீற்றிருக்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் பெரிய வில்வ மரம் உள்ளது.
தல வரலாறு :
அடர்ந்த காடாக இருந்த இந்தப் பகுதியில், ஏராளமான மிருகங்கள் வசித்தன. அதில் ஆணும், பெண்ணுமான இரண்டு மான்கள் தங்கள் இரு குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு வேட்டையாட வந்த வேடன் ஒருவன், ஆண் மானையும், பெண் மானையும் அம்பெய்து கொன்றான். பின்னர் அவற்றைத் தூக்கிக்கொண்டு இல்லம் திரும்பினான். ஆனால் தாய், தந்தையரைக் காணாத குட்டிகள் தவித்துப்போயின. உணவு கிடைக்காமல் பசியால் வாடின.
இதைக்கண்ட மிருகண்டு முனிவரின் சீடர்கள், மனம் வெதும்பி இந்தச் சம்பவம் பற்றி முனிவரிடம் கூறினர். மிருகண்டு முனிவர், சிவபெருமானையும், பார்வதிதேவியையும் பிரார்த்தனை செய்தார். அவரது குரலைக் கேட்டும், கேட்காததுபோல் இருந்தார் சிவபெருமான். அவரைப் பார்த்த பார்வதிதேவி, ஈசனை நோக்கி, ‘சுவாமி! நாம் வசிக்கும் இந்த வனத்தில் தாய்- தந்தையரை இழந்து இரண்டு மான் குட்டிகள் துன்பப்படுகின்றன. தாங்கள் அவைகளை காப்பாற்ற வேண்டும்’ என்றாள்.
‘தேவி! உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் அவர்களின் கர்ம பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். இந்த மான் குட்டிகளும், அதன் தாய், தந்தையரும் முற்பிறவியில் மானிடராய் பிறந்தவர்கள். தங்கள் வீட்டு கன்றுகுட்டியை அவிழ்த்து விட்டு விட்டு, அது பால் குடிக்கும் முன்பாகவே, பசுவின் மடியில் இருந்து பால் முழுவதையும் கறந்துவிடுவார்கள். பசுவிற்கும் சரியான உணவு கொடுப்பதில்லை. மாடு மேய்க்கும் இடையனுக்கும் கூலி கொடுப்பதில்லை. அந்தப் பாவங்களால்தான் இவர்கள் இங்கு மான்களாக பிறந்துள்ளனர். வேடனாக வந்து மான்களை வேட்டையாடியவன், முற்பிறவியில் இவர்களிடம் இடையனாக இருந்தவன். தன்னுடைய கூலியின் நிமித்தம், இரு மான்களையும் வேட்டையாடிச் சென்று உணவாக்கிக் கொண்டான்’ என்றார் இறைவன்.
பார்வதிதேவிக்கு இன்னொரு சந்தேகம் எழுந்தது. ‘சரி.. சுவாமி! இடையன் ஏன் வேடனாகப் பிறந்தான்?’ என்று கேட்டாள்.
இடையன், பசுக்களை மேய்க்கும் போது அவைகளை அடித்து துன்புறுத்தினான். அந்தப் பாவத்தால் வேடனாகப் பிறந்தான்’ என்றார் இறைவன்.
‘ஆனால் இந்த புனித வனத்தில் பிறப்பவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டுமே?. இவர்கள் பாவம் அல்லவா செய்திருக்கிறார்கள்?’ என்றாள் தேவி.
இறைவன் பதிலளித்தார். ‘உண்மைதான். எனது சிறந்த பக்தரான உக்ரதபஸ், ஒருமுறை யாத்திரையாக இங்கு வந்து தங்கினார். என்னை பூஜிக்க அவருக்கு மலர்கள் கிடைக்கவில்லை. உடனே போன பிறவியில் சிறுவர்களாக இருந்த இந்த மான் குட்டிகளிடம், பூஜைக்கு மலர் வேண்டும் என்று கேட்டார். அந்த இரண்டு சிறுவர்களும் தூய்மையானவர்களாக மாறி, தொலைவில் இருந்த தோட்டத்தில் இருந்து மலர்களை பறித்து, அதை தாமரை இலையில் வைத்து உக்ரதபஸிடம் கொடுத்தனர். அவருக்கு ஏற்பட்ட மகிழ்வுக்கு அளவே இல்லை. அந்த மலர்களால் என்னை பூஜித்து மகிழ்ந்தார். என்னை பூஜித்த எனது பக்தனுக்கு மலர் கொடுத்ததால், இந்த சிறுவர்களின் பாவங்கள் கரைந்து போய், இந்த புண்ணிய வனத்தில் மான் குட்டி களாய் பிறந்தனர்’ என்றார்.
‘பிள்ளைகளைப் பற்றிச் சொன்னீர்கள். அவர்களின் தாய் தந்தையர் பாவிகள் தானே. அவர்கள் எப்படி இந்த புண்ணிய வனத்தில் பிறக்க அருள்புரிந்தீர்கள்?’ என்று பார்வதி தனது சந்தேகத்தைக் கேட்டாள்.
‘பிள்ளைகள் செய்யும் புண்ணியம், அவர்களைப் பெற்ற வர்களுக்கும் நற்பயனைத் தரும். அவர்களது பிள்ளைகள் செய்த புண்ணியத்தால் அவர்களது தாய், தந்தையரும் இங்கு பிறந்தனர்’ என்றார் இறைவன்.
சிவபெருமானின் விளக்கத்தால் பார்வதி தேவி தெளிவு பெற்றார். பின்னர் இருவரும் மான் உருவம் கொண்டு, மான் குட்டிகளிடம் சென்றனர். பார்வதிதேவி, குட்டிகளுக்கு பால்கொடுத்து அதனைக் காத்தார் என்பது இந்த ஆலயத்தின் தல வரலாறு.
ஆலயம் காலை 6 மணி முதல் 11½ மணி வரையிலும், மாலை 4½ மணி முதல் இரவு 7½ மணி வரையிலும் திறந்திருக்கும். தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில், ஐப்பசி பவுர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். மாதப் பிரதோஷங்களும் இங்கு வெகு சிறப்பாக நடைபெறுகிறது. "
ஆராதனைகள் :
சித்திரை முதல் நாள், நவராத்திரி, தீபாவளி, சோமவாரம், கார்த்திகை தீபம், மார்கழியின் 30 நாட்கள், தை மாதப் பிறப்பு, பொங்கல், மகாசிவராத்திரி போன்ற நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பங்குனி மாதத்தில் முதல் மூன்று நாட்கள் கருவறை இறைவன் மேல் சூரிய ஒளி படுவது இங்குள்ள சிறப்பு அம்சமாகும்.
அமைவிடம் :
திருச்சி - லால்குடி சாலையில் திருச்சியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது மாந்துறை. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து லால்குடி செல்லும் நகரப் பேருந்துகளில் சென்றால், இந்தக் கோவிலின் அருகே இறங்கிக் கொள்ளலாம். ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் பேருந்துகளும் இந்த தலம் வழியாகவே செல்கின்றன.

கங்கை தீர்த்தமாகத் தோன்றிய தலம் என்ற சிறப்பை பெற்றது, திருக்கடவூர் மயானம் எனும் திருக்கடவூர் திருமெய்ஞானம் திருக்கோவில்.
பிரம்மன் வழிபட்டுப் பேறு பெற்றதலம், மார்க்கண்டேயன் தன் ஆயுள் நீட்டிக்க வழிபட்ட 108 தலங்களில் 107-வது தலம், கங்கை தீர்த்தமாகத் தோன்றிய தலம் போன்ற சிறப்புகளைப் பெற்றது, திருக்கடவூர் மயானம் எனும் திருக்கடவூர் திருமெய்ஞானம் திருக்கோவில். சிவபெருமான், பிரம்மனை அழித்து நீறாக்கியதால், ‘கடவூர் மயானம்’ என்றும், மீண்டும் உயிர்ப்பித்து அவருக்கு ஞானத்தை அருளி படைப்புத் தொழிலை வழங்கியதால், ‘கடவூர் திருமெய்ஞானம்’ எனவும் இத்திருத்தலம் வழங்கப்படுகிறது.
ஆலய அமைப்பு :
இந்த ஆலயம் ராஜகோபுரம் ஏதுமின்றி, எளிய நுழைவு வாசலைக் கொண்டு மேற்கு முகமாய் அமைந்துள்ளது. நுழைவு வாசலின் உள்ளே நுழைந்ததும், விசாலமான பிரம்மாண்ட வடிவில், நீளமான சுற்றுச் சுவரோடு ஆலயம் தென்படுகிறது. சுவாமி சன்னிதியை நெருங்கும் போது பலிபீடம், கிழக்கு நோக்கிய நந்திதேவர் காட்சி தருகின்றனர். மகாமண்டபத்தில் நுழைந்ததும், நேர் எதிரே கருவறையில் பிரம்மனை உயிர்ப்பித்து அருளிய பிரம்மபுரீஸ்வரரின் எழிற்கோலம் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. பிரம்மனின் பெயராலேயே இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். சதுர வடிவ ஆவுடையாரில் வீற்றிருந்தபடி மேற்கு முகமாய் அருள் வழங்குகிறார். மார்க்கண்டேயர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானவர்களுக்கு காட்சி தந்த இறைவன் இவர்.
வில்லேந்திய சிங்கார வேலன் :
சுவாமியின் மகாமண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் அழகுற அணிவகுக்கின்றன. இதில் குறிப்பாக சிங்காரவேலனின் உற்சவத் திருமேனி கலைநயம் மிகுந்து காணப்படுகிறது. கையில் வில்லேந்தியபடி, தன் துணைகளான வள்ளி- தெய்வானையுடன் கம்பீரமாக காட்சியளிக் கிறார் சிங்காரவேலர் இவருக்கு இங்கு கந்தசஷ்டி விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. மேலும் நடராஜர் சபை, மறுபுறம் பைரவர் சன்னிதிகளும் அமைந்துள்ளன.
கருவறைச் சுற்றில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், கல்யாணசுந்தரர் திருவுருவங்கள் கலைநயத்தோடு காட்சி தருகின்றன. தட்சிணாமூர்த்தி கல்லால மரம் இன்றி காட்சி தருவது அபூர்வமான அமைப்பாக உள்ளது. அவரது திருவடியில் ஆறு சீடர்கள் அமர்ந்திருக்கின்றனர்.
இறைவி மலர்க்குழல் மின்னம்மை :
சுவாமி சன்னிதியின் எதிரே இடதுபுறம் தென்மேற்கு மூலையில், இறைவி மலர்க்குழல் மின்னம்மை, மூன்று நிலை ராஜகோபுரத்துடன் தனிச்சன்னிதி கொண்டு கிழக்கு முகமாய் சுவாமி சன்னிதியை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அன்னையின் சன்னிதி மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை கொண்டு விளங்குகிறது. துவாரபாலகிகள் காவல்நிற்க, அன்னை நின்ற கோலத்தில் அபய-வரத முத்திரையுடன்கூடிய நான்கு கரங்களுடன் அருள்புரிகிறார். அன்னைக்கு அம்மலக் குஜநாயகி, அமலக்குயமின்னம்மை போன்ற பெயர்களும் உள்ளன.
இந்தத் திருக்கோவிலின் தலமரம் கொன்றை ஆகும். தலத் தீர்த்தம் காசித் தீர்த்தம். ஆலயத்தை ஒட்டியுள்ள பெரிய திருக்குளம் ‘பிரம்ம தீர்த்தம்’ என வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, ஆலயத்தில் இருந்து சுமார் ½ கிலோமீட்டர் தொலைவில், கிணறு வடிவில் காசித் தீர்த்தம் அமைந்துள்ளது.
மார்க்கண்டேயருக்காக பங்குனி மாதம், அஸ்வினி நட்சத்திரத்தன்று கங்கையே தீர்த்தமாகத் தோன்றினார் எனத் தலபுராணம் கூறுகிறது. இதுவே கடவூர் தீர்த்தக் கிணறு என்றும், காசி தீர்த்தம் என்றும், அஸ்வினித் தீர்த்தம் என்றும் வழங்கப்படுகிறது. இந்த ஐதீகத்தினை உறுதிப்படுத்தும் விதமாக பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று பஞ்சமூர்த்திகள் வழிபாடு நடைபெறுகிறது. இந்த தீர்த்தத்தைக் கொண்டே திருக்கடவூர் அபிராமி மற்றும் ஈஸ்வரருக்கு நாள்தோறும் அபிஷேகம் செய்யப்பயன்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
எமனை எட்டி உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்த அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருஆக்கூர், திருதலைச்சங்காடு, திருவலம்புரம், திருவிடைக்கழி, அனந்தமங்கலம் என பழம்பெரும் திருக்கோவில்கள் பல இந்த ஆலயத்தின் அருகே அமைந்துள்ளன. பிரம்மனுக்கு ஞானத்தை அருளியதால், கல்வி, ஞானம் பெற ஏற்ற தலமாக திருக்கடவூர் மயானம் விளங்குகிறது.
அமைவிடம் :
நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில், மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடத்தில் திருக்கடவூர் எனும் புகழ்மிக்க திருத்தலம் உள்ளது. இதன் பின்புறம் கிழக்கே 2 கிலோமீட்டர் தொலைவில் திருக் கடவூர் திருமெய்ஞானம் திருத்தலம் இருக்கிறது. சென்னையில் இருந்து தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்காலுக்கு வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும், தரங்கம்பாடிக்கு வடமேற்கே 12 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.