என் மலர்
கோவில்கள்
சென்னை மயிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் ஆலயத்திற்கு அருகில் திருவள்ளுவர் கோவில் தெருவில் திருவள்ளுவர் திருக்கோவில் அமைந்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ளது முண்டகக்கன்னியம்மன் கோவில். இந்த ஆலயத்திற்கு அருகில் திருவள்ளுவர் கோவில் தெருவில் திருவள்ளுவர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருவள்ளுவர் கி.பி. 2-ம் நூற்றாண்டு முதல் 8-ம் நூற்றாண்டு வரையான இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. இவர் வடித்த திருக்குறள், அனைத்து மொழியினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. எனவே அவரது சமகாலத்தைச் சேர்ந்த ஏலோலங்கர் என்பவர் இந்த ஆலயத்தை கட்டமைத்ததாக செவி வழிச் செய்தி உள்ளது. தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், 1970-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு இரண்டு தோரண வாசல்கள் அமைக்கப்பட்டன.
முதல் தோரண வாசலின் முகப்பை கடந்து உள்ளே சென்றால், திருவள்ளுவர் சன்னிதியை தரிசிக்கலாம். மூலவராக திருவள்ளுவர் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது கையில் சின்முத்திரையுடனும், இடது கையில் ஜெபமாலை மற்றும் ஏட்டுடனும், தலையில் லிங்கத்துடனும், அமைதியாகவும், சாந்தமுகத்துடனும் காட்சி தருகிறார்.
திருவள்ளுவர் சன்னிதிக்கு இடதுபுறத்தில் தனிச் சன்னிதியில் வாசுகி அம்மையாருக்கு சன்னதி இருக்கிறது. இவர் வலது கையில் பூச்செண்டும், இடது கையில் பரதம், சிரசில் லிங்கம் மற்றும் கோடாங்கிக் கொண்டை அணிந்து காட்சி தருகிறார். இங்கு வந்து திருவள்ளுவரையும், பதிவிரதையான வாசுகி அம்மையாரை நினைத்து தியானித்தால், தம்பதி ஒற்றுமை மேம்படுவதாக நம்பப் படுகிறது.
இரண்டாவது தோரண வாசலை கடந்து சென்றால் இடது புறத்தில் விநாயகர், அனுமன், நர்த்தன விநாயகர், பால கணபதி, பாலமுருகன் ஆகியோர் காட்சி தருகின்றனர். இவர்களை கடந்து சென்றால் கிழக்கு நோக்கியபடி ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னிதியில் அருள் புரிகிறார். இவருக்கு நேரேதிரே நந்தியம்பெருமான் அமர்ந்துள்ளார்.
இறைவன் சன்னிதிக்கு இடதுபுறம் காமாட்சியம்மன் சன்னிதி இருக்கிறது. அம்மன் சன்னிதிக்கு வெளியே தெற்கு நோக்கிய பைரவரும், கிழக்கு நோக்கிய வள்ளி -தெய்வானை சமேத சுப்ரமணியரும், மேற்கு நோக்கிய வல்லப கணபதியும், தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் கருமாரியம்மன் வீற்றிருக்கிறார். இவருக்கு இடதுபுறத்தில் சப்த கன்னியர்கள் நேர்கோட்டில் அமர்ந்து அருள்புரிகிறார்கள்.
வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி லிங்கோத்பவரும், தெற்கு நோக்கி சண்டிகேஸ்வரரும், வடக்கு நோக்கி பிரம்மாவும், துர்க்கையம்மனும் காட்சி தருகிறார்கள். பிரகாரத்தை விட்டு வெளியே வருகையில், நவக்கிரக சன்னிதியை தரிசிக்கலாம். இதையடுத்து சனீஸ்வரர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
இந்த ஆலயத்தில் வள்ளுவர் தினம் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. மாசி உத்திரத்தில் வள்ளுவருக்கு குரு பூஜையும் நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமி அன்று நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். அறுபத்தி மூவர் திருவிழாவில் திருவள்ளுவர் மற்றும் வாசுகிஅம்மையார், கபாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு எழுந்தருளி, எல்லா சுவாமிகளுடனும் மாடவீதியில் திருவீதி உலா வருகின்றனர். ஆவணி மூல நட்சத்திரத்தில் திருவள்ளுவர் -வாசுகிஅம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசால், அரசு விழா ஒன்று வருடம்தோறும் நடத்தப்படுகிறது. அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை மாணவர்களுக்கு திருக்குறள் நூல் இலவசமாக வழங்கப்படுகிறது. அன்று மதியம் அன்னதானம் நடைபெறுகிறது. தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

தங்கக்கோவில் வளாகத்தில் ரூ.10 கோடியில் கலைநயத்துடன் சீனிவாச பெருமாள் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வரலாற்றை பார்க்கலாம்.
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் தங்கக்கோவில் இந்தியாவின் அனைத்துப்பகுதி பக்தர்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவருகிறார்கள். தற்போது தங்கக்கோவில் வளாகத்தில் ரூ.10 கோடியில் கலைநயத்துடன் சீனிவாச பெருமாள் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ என்றால் மகாலட்சுமி, புரம் என்றால் வாழும் இடம் மகாலட்சுமி வாழும் இடம் தான் ஸ்ரீபுரமாகும். இங்கு தினமும் இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து அன்னையை தரிசனம் செய்கின்றனர். ஸ்ரீபுரத்திற்கு மேலும், சிறப்பு சேர்க்கும் வகையில் மகாலட்சுமியின் மணாளனும், உலகத்தை காக்கும் கடவுளான மகாவிஷ்ணு என்று போற்றப்படும் சீனிவாசபெருமாளுக்கு தனி கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் மகாலட்சுமி அன்னையுடன் சீனிவாசபெருமாளின் அருளையும் பக்தர்கள் பெற்று வாழ வேண்டும் என்ற நோக்குடன் 108 அடி நீளத்தில் 45 அடி அகலத்தில் அழகான, நூதனமான, பிரம்மாண்டமான, நுட்பமான கலை நயத்துடன் கோவில் கட்டப்பட்டது. இங்கு மூலஸ்தானம், அர்த்தமண்டபம், கர்ப்பகிரகத்து மகாமண்டபத்துடன் ஆனந்த விமானம், கஜப்ருஷ்டவிமானம், சுந்தர விமானம் மற்றும் மகா மண்டபத்துடன் மூலஸ்தானத்தில் 9 அடி உயரத்தில் ‘கிருஷ்ண சிலா’ என்ற கருப்பு கல்லில் சீனிவாச பெருமாளின் சிலை வடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபுரத்தில் அருள்புரியும் சீனிவாசபெருமாளுக்கு ஸ்ரீபுரசீனிவாசர் என்ற திருநாமம் சூட்டப்பட்டுள்ளது.
கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சீனிவாசபெருமாள் சிலையானது 4 கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 2 கரங்களில் சங்கு, சக்கரமும், மற்ற இரு கரங்களில் அபயம் (காத்தல்), வரதம் (வரம் அளித்தல்) முத்திரைகளில் நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு அதிசயமாக, உலகில் இது வரையில் எந்த பெருமாளுக்கும் இல்லாத வகையில் அபயம், வரதம் ஆகிய இரு கரங்களில் மகாலட்சுமி தேவியின் யந்திரம் ரேகையாக சீனிவாச பெருமாளின் விக்ரகத்தில் வடிக்கப்பட்டுள்ளது. சீனிவாச பெருமாளுடன் உற்சவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீபுரம் ஸ்ரீமகாலட்சுமி மற்றும் ஜெயவிஜய, கருடாழ்வார் போன்ற விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தவறாமல் சீனிவாச பெருமாள் கோவிலுக்கும் சென்று பெருமாளையும் தரிசனம் செய்துவிட்டு செல்வதுடன் ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் திருவருளும் பெற்று வருகின்றனர்.

வாழ்க்கையின் சிறப்புக்கு உதவும் பொருள் வளத்தை வாரி வழங்கும் தலமாகத் திருநெல்வேலி மாவட்டம், கீழக்கல்லூர் புரவுவரிநாதர் கோவில் இருக்கிறது.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது வள்ளுவரின் வாக்கு. அத்தகைய பெருமைக்குரியப் பொருளைச் சேர்ப்பதும், செலவழிப்பதும் சிறப்பாக நடைபெற்றால்தான் வாழ்வு சிறக்கும். வாழ்க்கையின் சிறப்புக்கு உதவும் பொருள் வளத்தை வாரி வழங்கும் தலமாகத் திருநெல்வேலி மாவட்டம், கீழக்கல்லூர் புரவுவரிநாதர் கோவில் இருக்கிறது.
பிரம்மதேசத்தின் ஒரு பகுதியாக இருந்த சபேசபுரத்தில் நெல் விளையக் கூடிய விவசாய நிலங்கள் அதிகமாக இருந்தன. விவசாயத்திற்கு உதவும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தேவையான மேய்ச்சல் நிலங்களும் சில இடங்களில் இருந்தன. சபேசபுரத்திலிருக்கும் அனைத்து மாடுகளையும் தினமும் காலையில் மேய்ச்சலுக்குக் கொண்டு சென்று விடுவதுடன், மாலையில் அவைகளை அங்கிருந்து ஓட்டி வந்து திரும்பவும் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை ஒருவன் செய்து கொண்டிருந்தான்.
அவன் மேய்ச்சலுக்குக் கொண்டு சென்ற மாடுகளில் ஒரு பசு மட்டும் தினமும் அந்தக் கூட்டத்திலிருந்து தனியே பிரிந்து செல்வதும், வீடு திரும்பும் மாலை வேளையில் மீண்டும் அந்தக் கூட்டத்தோடு வந்து சேர்ந்து கொள்வதுமாக இருந்தது. அதைக் கண்ட அவன், அந்தப் பசு தினமும் எங்கே செல்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்தான்.
மறுநாள் காலையில், மேய்ச்சலுக்குக் கொண்டு சென்ற மாடுகளிடமிருந்து அந்தப்பசு மட்டும் பிரிந்து சென்றதைப் பார்த்த அவன், அந்தப் பசுவை பின் தொடர்ந்து சென்றான். அந்தப்பசு ஒரு இடத்தில் போய் நின்று கொண்டு, அங்கிருந்த கல் ஒன்றின் மீது தானாகப் பாலைச் சுரந்தது. மேய்ச்சலுக்குக் கொண்டு வந்த பசு, தானாகச் சுரந்து பாலை வீணாக்குகிறதே என்று நினைத்த அவன், அந்தப்பசுவை நோக்கிச் சிறிய கல் ஒன்றை எடுத்து வீசினான்.
அதனால் அச்சமடைந்த பசு, தான் பால் சுரந்து கொண்டிருந்ததை நிறுத்தி விட்டுக் கீழேயிருந்த கல்லை மிதித்தபடி ஓடியது. அந்தக் கல்லில் பசுவின் கால் பட்ட இடத்திலிருந்து ரத்தம் வெளியேறத் தொடங்கியது. கல்லில் இருந்து வந்த ரத்தத்தைக் கண்டு பயந்த அவன் அங்கிருந்து ஊரை நோக்கி ஓடினான்.
ஊருக்குள் சென்று, அங்கிருந்த பெரியவர்களிடம் தான் பார்த்ததைச் சொன்னான். ஊர்ப் பெரியவர்கள் அந்த ஊரிலிருந்த மக்களுடன் சேர்ந்து அவன் சொன்ன இடத்தை வந்து பார்த்தனர். அங்கிருந்த கல், சுயம்புலிங்கமாக அவர்களுக்குக் காட்சியளித்தது. அந்தச் சுயம்புலிங்கத்தின் மேற்பகுதியில் பசு மிதித்ததால் ஏற்பட்ட கால் குளம்புத் தடத்திலிருந்து, ரத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது.
சுயம்புலிங்கத்தை வணங்கிய மக்கள், அந்த இடத்தில் இறைவனுக்குக் கோவில் கட்டி வழிபடுவதாகச் சொல்லி வேண்டினார்கள். அவர்கள் வேண்டிய நிலையில், சுயம்புலிங்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த ரத்தம் நின்றது. அதன் பிறகு, அந்த இடத்தில் இறைவனுக்குக் கோவில் கட்டப்பட்டது. கோவிலில் இருக்கும் இறைவனைப் பசு அடையாளம் காட்டியதால், அந்த இறைவனுக்குத் தேனுபுரீஸ்வரர் (தேனு பசு) என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர். இந்த லிங்கத்தில் இன்றும் பசு மிதித்ததன் அடையாளமாகப் பசுவின் கால் குளம்புத் தடம் இருப்பதைக் காண முடியும்.
புரவு வரி நாதர் :
தற்போது கீழக்கல்லூர், நடுக்கல்லூர், மேலக்கல்லூர், கோடகநல்லூர் என்று அழைக்கப்படும் சில ஊர்களைக் கொண்டிருந்த அன்றைய பிரம்மதேசம் பகுதி ராஜராஜ சோழன் மன்னராக இருந்த காலத்தில், அவனுடைய ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. பிரம்மதேசம் பகுதியில் விளைந்த கோடகன் சம்பா என்கிற உயர்வகை நெல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு மிகவும் ருசியாக இருந்ததுடன், அந்த உணவு சில நாட்கள் வரைக் கெட்டுப் போகாமலும் இருந்தது.
இதனையறிந்த மன்னன், அந்த நெல்லை இறைவழிபாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டான். அவன், இப்பகுதியில் விளையும் நெல்லில் ஆறிலொரு பங்கினைத் தாங்களாகவே கணக்கிட்டு, சபேசபுரத்திலுள்ள (தற்போதைய கீழக்கல்லூர்) தேனுபுரீஸ்வரர் கோவிலில் இருக்கும் இறைவன் முன்னிலையில் அரசிறையாகச் (வரி) செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டான்.
இப்பகுதி மக்களும் தாங்கள் விளைவித்த நெல்லிலிருந்து ஒரு பகுதியை அரசிறையாக இந்தக் கோவிலில் இருக்கும் இறைவன் முன்பாகச் செலுத்தத் தொடங்கினர். அரசிறையாகப் பெறப்பட்ட நெல் திருநெல்வேலி, திருச்செந்தூர், பாபநாசம், சங்கரன்கோயில், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி போன்ற மன்னனின் ஆட்சிப் பகுதியிலிருந்த பல்வேறு இடங்களில் அமைந்திருந்த கோவில்களுக்குப் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
நெல்லை அரசிறையாக வசூலிக்கும் அரசிறைக் கணக்கர் எனும் பணியை இக்கோவில் இறைவனே செய்தமையால் இறைவனுக்குப் புரவு வரி நாதர் (புரவு வரி அரசிறைக் கணக்கன்) என்கிற புதிய பெயரும் ஏற்பட்டது. இந்தப் புதிய பெயரும் பேச்சு வழக்கில் நாளடைவில் மாற்றமடைந்து, தற்போது புறவேலி நாதர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இக்கோவிலில் இருக்கும் முன் மண்டபத்தில் இருக்கும் தனிச்சன்னிதியில் அழகாம்பிகை தெற்கு நோக்கிப் பார்த்தபடி நின்ற நிலையில் இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில், யோக தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன், நாக கன்னிகைகள், சண்டிகேஸ்வரர், தர்மசாஸ்தா, காலபைரவர், பூதத்தார், மங்கள சனீஸ்வரன், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோருக்குத் தனித்தனியாகச் சிறிய சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இக்கோவில் வளாகத்தில் முன் பகுதியில் இறைவன் முன்னிலையில் நெல்லை அரசிறையாகப் பெறுவதற்காக அமைக்கப்பட்ட சதுரவடிவ வரி தானியச் சிறப்பு மேடை இன்றும் இருக்கிறது.
அமைவிடம் :
திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கீழக்கல்லூர் எனும் ஊரில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குத் திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து பேட்டை வழியாகச் சேரன்மகாதேவி, முக்கூடல் போன்ற ஊர்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகளில் செல்லலாம்.

மகாலட்சுமியின் அவதார தலமாக கருதப்படுவதாலும், இருந்த இடத்திலேயே தவமிருந்து பெருமாளை தம் இருப்பிடத்திற்கே வரவழைத்து மணம் புரிந்த மகிமையாலும் இத்தலம் சிறப்பு பெறுகிறது.
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த ஆலயம் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 108 திவ்வியதேசங்களில் ஒன்றான இந்த ஆலய இறைவனை, பெரியாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்கள் மங்களாசா சனம் செய்துள்ளனர். நாலாயிர திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாக இது கருதப்படுகிறது.
மூலவர் திருநாமம் சாரங்கபாணி என்பதாகும். இவரை ஆராவமுதன், அபர்யாப்தாம்ருதன், சார்ங்கராஜா, சார்ங்கேசன் போன்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள். மூலவர் பெருமாள் இரு திருக்கைகளுடன் வலது திருக்கையை திருமுடியின் கீழ் அமர்த்தி, உத்தான சயன கோலத்தில் பாம்பணை மீது பள்ளி கொண்டுள்ளார். உற்சவர் நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம், உடைவாள் ஆகிய ஐந்து திவ்விய ஆயுதங்களுடன் வலது திருக்கை அபயம் அளிக்கும் முத்திரையுடன் அழகாக காட்சியளிக்கிறார். சார்ங்கம் என்ற வில்லை வைத்து இருப்பதால் சார்ங்கபாணி என அழைக்கப்படுகிறார்.
மூலஸ்தானத்தில் கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மா, தலைப்பகுதியில் சூரியன் உள்ளனர். சுவாமியின் கருவறையை சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளன.பெருமாள் பள்ளிக்கொண்டுயிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு உத்தான சயன கோலத்தில் இருக்கிறார். தாயாரின் திருநாமம் கோமளவல்லி என்பதாகும். பொற்கொடி என்பது இதன் தமிழ் பதம். பொற்றாமரை திருக்குளத்தில் அவதரித்தபடியால் தாயாரை பொய்கையில் பூத்த பொற்கொடி என்பது சாலப்பொருந்தும். நான்கு திருக்கைகளுடன் அருளே வடிவாக இறைவனின் கருவறைக்கு வலது பக்கத்தில் தனிக்கோவிலில் தாயார் எழுந்தருளியிருக்கிறார்.
தலவரலாறு :
ஒரு சமயம் முனிவர்கள் ஒன்று கூடி யாகம் வளர்த்தனர். யாகத்தின் அவிர்பாகத்தை மும்மூர்த்திகளில் சாந்தமானவர்கள் யாரோ அவருக்கு வழங்க முடிவுசெய்தனர். அதைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பிருகு மகரிஷியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் பிரம்மா, சிவனிடம் சென்றார். அவர்கள் பிருகு முனிவரை கண்டும் காணாததுபோல் இருந்தனர். வைகுண்டம் சென்ற பிருகு முனிவர் திருமாலின் சாந்தகுணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைத்தார். திருமால் அதைத் தடுக்காமல் பிருகுவின் பாதத்தை வருடினார்.
இதைப் பார்த்த மகாலட்சுமி கோபத்துடன், ‘சுவாமி! முனிவர் உங்கள் மார்பில் உதைக்கும் போது, அதைத் தடுக்காமல் விட்டுவிட்டீர்கள். இனி உங்களுடன் சேர்ந்து வாழமாட்டேன்’ எனக்கூறி கணவரை பிரிந்து பூலோகம் வந்தார். பூலோகத்தில் கும்பகோணத்தில் உள்ள ஹேமபுஷ்கரணியில் 1008 தாமரை இதழ்களில் அழகிய குழந்தையாக அவதரித்தாள். அந்த நேரத்தில் அங்கு தவம் செய்துகொண்டிருந்த ஹேம மகரிஷி, குழந்தையை எடுத்து அவளுக்கு கோமளவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். கோமளவல்லிக்கு திருமண வயது வந்ததும், அவள் திருமாலை திருமணம் செய்யவேண்டி தவம் இருந்தாள். கோமளவல்லியின் தவத்துக்கு மகிழ்ந்து திருமால் வைகுண்டத்திலிருந்துதான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் இங்கு வந்து கோமள வல்லியை திருமணம் செய்துக்கொண்டார்.
மகாலட்சுமியின் அவதார தலமாக கருதப்படுவதாலும், இருந்த இடத்திலேயே தவமிருந்து பெருமாளை தம் இருப்பிடத்திற்கே வரவழைத்து மணம் புரிந்த மகிமையாலும் இத்தலம் சிறப்பு பெறுகிறது. கோமளவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, புடவை சாத்தி வழிபட்டால், பெண்களுக்கு திருமணம் கைகூடும். மேலும் இறைவனையும் இறைவியையும் ஒரு சேர வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
தாயாரை மணந்துக்கொள்ள வைகுண்டத்தில் இருந்து இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார். எனவே சுவாமியின் சன்னிதி, தேரின் அமைப்பில் இருக்கிறது. இந்தத் தேரில் குதிரை, யானை, தேர் சக்கரங்கள் எல்லாம் கல்லினால் ஆனவை. பார்ப்பவர்கள் பரவசப் படுத்தும் வகையில் இக்கோவில் கோபுரம் 150 அடி உயரத்தில் 11 நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தில் 108 கரணவகைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோவிலில் உத்ராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல் உண்டு. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்ராயண வாசல் திறந்திருக்கும். பின்னர் அந்த வாசல் மூடப்படும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்பது ஐதீகம்.
திருமால், தாயாரை திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். ஆகவே தாயாருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே, பெருமாளை வணங்க வேண்டும். ஆகையால் தாயார் சன்னிதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னிதிக்குள் செல்லும் வகையில் ஆலயம் வடிவமைப்பு உள்ளது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னிதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோவிலில் கோமளவல்லித் தாயார் சன்னிதி முன்பாக நடத்துகின்றனர். பின்னரே, சுவாமி சன்னிதியில் கோ பூஜை நடக்கிறது.
மகப்பேறு கிட்டாத தம்பதியர், இந்தத் திருக்கோவிலில் பெருமாள் சன்னிதியில் உள்ள, சந்தான கிருஷ்ணன் விக்கிரத்தினை பூஜை செய்வதன் மூலம் புத்திரபாக்கியம் பெறலாம் என்பது நம்பிக்கை. இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
திருவிழா :
இந்த ஆலயத்தில் சித்திரைத் திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மகத் தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும். ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
பக்தனுக்கு மகனாக மாறிய பெருமாள் :
லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர், சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். தனது இறுதி காலம் வரையில் பெருமாளுக்கு சேவை செய்தார். இந்த ஆலயத்தின் கோபுரத்தை கட்டியவரும் இவரே. அந்த பக் தருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு தீபாவளி நன்னாளன்று அவர் பெருமாளின் திரு வடியை அடைந்தார்.
ஒருவருக்கு சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், அந்த நபர் நரகம் செல்லும் நிலை ஏற்படும். எனவே தன்னுடைய பக்தருக்கு, தானே மகனாக இருந்து, சாரங்கபாணி இறுதிச்சடங்குகளை செய்தாராம். இது நடந்த மறுநாள் கோவிலை திறந்தபோது, பெருமாள் விக்கிரகத்தில் ஈர வேட்டியும், மாற்றிய பூணூலுமாக இறைவன் காட்சியளித்துள்ளார். அருகில் தர்ப்பைகள் கிடந்துள்ளன. இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று உச்சி காலத்தில், திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆனால் இதை பக்தர்கள் பார்க்க அனுமதியில்லை.
பாதாள சீனிவாசன் :
திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் சீனிவாசப் பெருமாளே, பிருகு மகரிஷி காலத்தில் அங்கிருந்து கும்பகோணத்திற்கு எழுந்தருளி சிலகாலம் தங்கி இருந்ததாக தலபுராணம் கூறுகிறது. மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக வந்த சீனிவாசன், பூமிக்கு கீழே ஒளிந்துகொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள்முன் தோன்றிய சுவாமி தாயாரை மணந்துகொண்டார். திருமால் ஒளிந்த இடம் கோவில் நிலவறைக்கு கீழ், பாதாள சீனிவாசன் சன்னிதி என்றப்பெயரில் உள்ளது. திருமணத்திற்கு பிறகு இவர் மேடான இடத்தில் மேட்டு சீனிவாசராக தாயார்களுடன் தனிசன்னிதியில் இருக்கிறார்.

நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தி அம்மன் கோவில். குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது அருள்மிகு பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில். இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னையை, ‘வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி’ என்றும் அழைக்கிறார்கள். தற்போது இந்த அம்மன் ‘புட்டாத்தி அம்மன்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.
கோவிலுக்குள் நுழைந்ததும் சிறிய பலி பீடமும், கொடிமரமும், பெரிய பலிபீடமும் உள்ளது. அதைத் தொடர்ந்து வடக்கு முகமாக அனுக்ஞை விநாயகரும், வடமேற்கு முனையில் கிழக்கு முகமாக அகோர விநாயகரும் காட்சி தருகிறார்கள். இதனையடுத்து மகா மண்டபம் உள்ளது. இங்கு நின்றுதான் அம்மனை வழிபட வேண்டும்.
இங்குள்ள அம்மன் நான்கு திருக்கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக் கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள். அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை), சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள். இந்த ஆலயத்தில் விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி, நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன.
அம்மனை கருவறையை அடுத்து அர்த்த மண்டபமும், அதற்கு அடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய இருக்கையில்(பீடத்தில்) வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி எழிற்கோலம் காட்டுகிறாள். இந்த எழிற்கோலத்தினை தசரா அன்று காணலாம்.
இந்த அன்னைக்கு நடைபெறும் இரு நேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். (பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டா புரத்தி அம்மன் என்று பெயர் வந்துள்ளதாக தெரிகிறது). இந்த பிட்டை இக்கோவிலில் பூஜை செய்து வரும் பல்லவராயர் வகுப்பை சேர்ந்தவர்கள், கோவிலிலேயே தயார் செய்து அம்மனுக்கு படைத்து வருகிறார்கள்.
அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் ஒப்பனையில் (அலங்காரத்தில்) ஏற்படும் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி, மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.
மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.
வைகாசி பெருவிழா, புரட்டாசி தசரா திருவிழா, தை அமாவாசை, பங்குனி மாதம் நடைபெறும் ஆண்டு திருமுழுக்கு ஆகிய திருவிழாக்கள் இக்கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது.
அகோர விநாயகர் :
இந்த ஆலயத்தில் உள்ள அகோர விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். கோவிலின் பின்புறம் இப்போது உள்ள விநாயகருக்கு முன்பு இந்த அகோர விநாயகரை வழிபட்டனர். சிதையுற்ற இந்த விநாயகரை வழிபடக்கூடாது என்று கூறியதால் இந்த விநாயகரை (அகோர விநாயகர்) அகற்றி விட்டு, புதிதாக ஒரு விநாயகரை (இப்போது உள்ள விநாயகர்) பிரதிஷ்டை செய்தனர். இதனையடுத்து அப்புறப்படுத்தப்பட்ட விநாயகரை தொண்டர்கள் நயினார் கோவிலில் வைத்திருந்தனர். பின்னர் அங்கிருந்து அகற்றி குளத்தில் போட எண்ணினர்.
அப்போது அகோர விநாயகரை வழிபட்டவர்கள், பிட்டாபுரத்தி அம்மன் அனுமதியுடன் மீண்டும் இக்கோவிலில் எழுந்தருள செய்து பிரதிஷ்டை செய்தனர். பழமை வாய்ந்த இந்த விநாயகரின் துதிக்கையும், இரு கைகளும், இடது செவியும் சிதைந்து போய் உள்ளது. இவர் 3 அடி உயரத்தில், 2 அடி அகலத்தில், குறுகிய கால்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். சக்திவாய்ந்த இந்த விநாயகர் முன்பு இருந்துதான், பூசாரி (கோவில் அர்ச்சகர்) நோய் வாய்ப்பட்டு வரும் குழந்தைகளுக்கு, திருநீறு அளித்தும், மை இட்டும், வேர் கட்டியும் வருகிறார்.

தமிழகத்தில் சிறப்பு பெற்ற பல ஸ்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘உத்திர கோச மங்கை’ என்ற திருத்தலம். இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.
உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் இல்லாத சிறப்பு, நமது பாரத தேசத்திற்கு உண்டு. இந்தியாவை புண்ணிய பூமி, புனித பூமி, ஞான பூமி என்று எல்லோரும் அழைக்க காரணம், நம் நாட்டில்தான் பல்வேறு புண்ணிய ஷேத்திரங்களும், தீர்த்தங்களும், மூர்த்திகளும் உள்ளன. ஆதிசங்கரர், ராமானுஜர், சாய்பாபா, ரமண மகரிஷி போன்ற மகான்கள் அவதரித்த அற்புத பூமியும் இதுதான்.
தமிழகத்தில் சிறப்பு பெற்ற பல ஸ்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘உத்திர கோச மங்கை’ என்ற திருத்தலம். ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக அறியப்படுகிறது. ராவணனும், அவர் மனைவியான மண்டோதரியும் வழிபட்டு வரம் பெற்றத் தலம் இது என்று கூறப்படுகிறது. ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே சென்றபோது, அவர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு திருமணப் பேறு பெற்றதாக வரலாற்று தகவல் காணப்படுகிறது.
அதே போல ராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம் முடிந்த பின்னர், புத்திர பாக்கியத்திற்காக காத்திருந்தனர். அப்போது ராவணனின் வழிகாட்டு தலின்படி, மண்டோதரி இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு புத்திரப் பேறு அடைந்தார். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கக் கூடிய ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் தோன்றுவதற்கும், முன்னரே தோன்றிய ஆலயம் இது. இதனை ‘மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது’ என்ற சொல் மொழியின் மூலமாக அறியலாம்.
உத்திர கோச மங்கை என்று தற்காலத்தில் அறியப்பட்டாலும், இத்தலத்தின் முழுப் பெயர் ‘திரு உத்திர கோச மங்கை’ என்பதேயாகும். ‘திரு’ என்றால் அழகு மற்றும் சிறந்த என்று பொருள். ‘உத்திரம்’ என்பதற்கு ரகசியம் என்றும், ‘கோசம்’ என்பதற்கு சொல்லுதல் என்றும் பொருள்படும். ‘மங்கை’ என்பது அம்பாளைக் குறிக்கும். அம்பாளுக்கு ‘ஓம்’ என்றும் பிரணவ மந்திர விளக்கத்தை, இறைவன் விளக்கும் இடம் என்பதே இதற்கு சரியான பொருளாகும். அம்பாளுக்கு மட்டுமின்றி, மாணிக்கவாசகர் அடங்கிய ஆயிரவருக்கும், பிரணவப் பொருளை இங்கு இறைவன் உபதேசித்து உள்ளார்.
இந்த ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன் ‘மங்களநாதர்’ என்றும், இறைவி ‘மங்கள நாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். எல்லாத் தலங்களிலும் இறைவனும், இறைவியும் சமேதராக இருப்பார்கள். இங்கு இருவருக்கும் தனித்தனி சன்னிதியும், தனித்தனி விமானமும், ராஜகோபுரமும் உள்ளன. மங்களநாதர் என்ற திருப்பெயரானது, இறைவன் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயராகும். ராவணனுக்கு மங்கள நாண் அணிவிக்கும் பாக்கியத்தை, இத்தலத்தில் இருந்தே அருள்பாலித்தமையால், இறைவன் ‘மங்களநாதர்’ ஆனார்.
மண்டோதரி, புத்திரப்பேறு வேண்டி இத்தல இறைவனை நோக்கி தவம் இருந்தாள். பரிவு கொண்ட சிவபெருமான், அவளுக்கு புத்திரப் பேறு வரம் அளிப்பதற்காக, இலங்கைக்கு எழுந்தருள எண்ணினார். அதற்கு முன்பாக தன் அடியார்கள் ஆயிரவர்களிடம், ‘எனது திரு மேனியை ராவணன் தீண்டும் போது, இங்குள்ள குளத்தில் அக்னி தோன்றும்’ என்று கூறி மறைந்தார். பின்னர் இலங்கையில் எழுந்தருளிய இறைவன், மண்டோதரியின் முன்பாக சிறு குழந்தையாக உருவெடுத்து வரமளித்தார்.
அப்போது அங்கு வந்த ராவணன், குழந்தையின் அழகைப் பார்த்து, அதனை தன் கைகளால் அள்ளி எடுத்து கொஞ்சி மகிழ்ந்தான். ராவணன் தீண்டியவுடன் உத்தர கோச மங்கை ஆலயத்தில் உள்ள திருக் குளத்தில் அக்னி வளர்ந்தது. பிரணவப் பொருளை உபதேசம் பெற்ற ஆயிரவரும் அந்த அக்னியில் இறங்கி கயிலாயம் சென்றனர். ஆனால் இறைவன் அவர்கள் அனைவரையும் மீண்டும் அழைத்து அருள்பாலித்தார். இந்த ஆயிரவரும், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனோடு கலந்து விட்டனர். அதனை இங்குள்ள சகஸ்ர லிங்கத்தில் காணலாம். திருக்கோவில் குளத்தின் கரையில் வேதாகம சுவடிகளுடன் கோவில் கொண்டுள்ள மாணிக்கவாசகர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
முற்காலத்தில் இந்தப் பகுதி இலந்தை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. ஆலயத்தின் தல விருட்சமும் இலந்தை மரம்தான். இங்குள்ள இலந்தை மரம் பல நூற்றாண்டைக் கடந்தது என்று கூறுகிறார்கள்.
இந்த ஆலயம் முற்பிறவி பாவங்கள், சாப-விமோசனங்கள், ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் தலமாக விளங்குகிறது. சிவன் கோவில்களிலும், சிவ வழிபாடுகளிலும் சிவபெருமானுக்கு, தாழம்பூ படைத்து வழிபாடு நடைபெறுவதில்லை. ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் சிவபெருமானுக்கு, தாழம்பூவைக் கொண்டு பூஜிக்கப்படுகிறது.
ஒருமுறை நான்முகனுக்கும், திருமாலுக்கும் ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி நிலவியது. சிவபெருமான் அக்னி பிழம்பாக உயர்ந்து நிற்க, ஒருவர் அடியையும், மற்றொருவர் முடியையும் தேடிச் செல்வது என்றும், யார் முதலில் அடியையோ, முடியையோ பார்த்து வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது.
பிரம்மன் முடியைத் தேடியும், விஷ்ணு அடியைத் தேடியும் புறப்பட்டனர். அப்போது ஈசனின் முடியில் இருந்து பல நூற்றாண்டு காலமாக தாழம்பூ ஒன்று கீழே வந்து கொண்டிருந்தது. வழியில் அந்த தாழம்பூவை சந்தித்த பிரம்மன், ஈசனிடம் வந்து தான் முடியை கண்டுவிட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி கூறினார். தாழம்பூவும் இறைவனிடம் வந்து பொய் சாட்சி சொன்னது. இதையடுத்து இறைவன், தாழம்பூ தன்னுடைய பூஜையில் இடம்பெறாது என்று சாபம் கொடுத்தார்.
அந்த சாபம் நீங்குவதற்காக தாழம்பூ, உத்தர கோச மங்கை திருத்தலத்தில் உள்ள இறைவனை நினைத்து தவம் இருந்து பூஜை செய்தது. இதையடுத்து அதன் சாபத்தை நீக்கி, ‘இத்தலத்தில் தாழம்பூ பூஜையில் பயன்படுத்தப்படும்’ என்று இறைவன் அருளியதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.
இங்குள்ள நடராஜர் திருமேனி, மரகதத்தால் ஆனது. இந்த மரகதத் திருமேனியை மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே காண முடியும். மற்றபடி வருடம் முழுவதும் இந்த நடராஜர், சந்தனக் காப்பு அலங்காரத்திலேயே காட்சியளிப்பார். எனவே வீதி உலா வருவதற்கும், நித்திய அபிஷேகத்திற்காகவும், பஞ்சலோகத்தால் ஆன மற்றொரு நடராஜர் திருமேனி இங்கு இருக்கிறது. ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர், இங்கு தனது பள்ளியறையில் அம்பாளுக்காக தனிமையில் நடனம் ஆடினார் என்பது தல வரலாறு. இதன் பிறகே சிதம்பரத்தில் நடராஜர், நடனக்காட்சியை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. வாழ்வில் ஒரு முறையேனும், இந்த மரகத மேனியனை தரிசனம் செய்து வருவது வாழ்வில் சிறப்பு தருவதாக இருக்கும்.
முன்னோர் சாபம், திருமணத் தடை, குழந்தைப் பேறு இல்லாமை, கல்வியில் தடை, வெளிநாட்டுப் பயணத்தில் தாமதம் போன்ற இடையூறுகளில் இருந்து விடுபட, இத்தல இறைவன் வழிவகை செய்கிறார். தினமும் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கையாகும். இங்கு தட்சிணாமூர்த்தி பகவான் யோக நிலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்தர கோச மங்கை ஆலயம்.

சுப்பிரமணியர் கோவில்கள் தமிழ்நாட்டின் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமான திருத்தலமாக இருக்கக்கூடியது குன்றத்தூரில் குடி கொண்ட குமரனது ஆலயமாகும்.
தமிழ் மக்களின் பெரும் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானுக்கு நிறைய பெயர்கள் இருந்தாலும் ‘சுப்பிரமணியர்’ என்ற பெயருக்கு தனிப்பட்ட பொருள் இருக்கிறது. அதாவது ஞானத்தை தனது அடியார்களுக்கு அருள்கின்றவன் என்று அர்த்தமாகும். ஞானத்தின் திருவடிவாக முருகனது உருவம் திகழ்வதாக பல்வேறு மகான்கள் விளக்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட முருகனை மனதால் நினைத்தால்கூட ஞானம் ஏற்படும் என்பது அடியார்களது நம்பிக்கை. அத்தகைய சுப்பிரமணியர் கோவில்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ளன. அவற்றில் முக்கியமான திருத்தலமாக இருக்கக்கூடியது குன்றத்தூரில் குடி கொண்ட குமரனது ஆலயமாகும்.
சிறு குன்றின்மீது அமைக்கப்பட்ட இக்கோவிலை தரிசிக்க 80 படிகளுக்கும் மேலாக ஏறிச்செல்ல வேண்டும். வழியில் இருக்கும் வலஞ்சுழி விநாயகர் நமது தடைகளை சுலபமாக விலக்கி அருள் புரியக்கூடியவர். அவரை அன்புடன் வணங்கிவிட்டு மேலே சென்றவுடன் கலைத்திறனுடன் அமைக்கப்பட்ட கொடி மரத்தை தரிசிக்கலாம். கொடி மரத்தை வணங்கிய பிறகு மூலவரை வழிபட செல்ல வேண்டும். இந்த திருத்தலத்தில் மூலவராக வீற்றிருப்பவருக்கு சுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகிறார்.
கருவறை சிறப்பு :
கருவறை சன்னிதி முன்புள்ள துவாரபாலகர்களுக்கு வஜ்ரம், சூலாயுதம் என்று முருகனுக்கு உரிய ஆயுதங்கள் இருக்கின்றன. கருவறையில் முருகன், தெய்வானை, வள்ளி ஆகிய திருமூர்த்தங்கள் உள்ளன. கருவறைக்கு வெளியில் நின்றபடி மூவரையும் ஒரே சமயத்தில் தரிசனம் செய்வது சிரமம். காரணம் கருவறை மற்றும் சிலைகளின் வடிவமைப்பு அவ்வாறு அமைந்துள்ளது. அதை சுவாரசியமாக சொல்வதென்றால், ஒரு பக்கமாக நின்று தரிசனம் செய்யும்போது முருகனும், வள்ளியும் மட்டும் தெரிவார்கள்; தெய்வானையின் உருவம் தெரியாது. இன்னொரு பக்கத்தில் நின்று தரிசித்தால் முருகனும், தெய்வானையும் தெரிவார்கள்; வள்ளியின் உருவம் தெரியாது.
கருவறைக்கு வெளியே வாசலில் நின்று தரிசிக்கும்போது மூவரையும் ஒரு சேர தரிசனம் தர மாட்டார்கள். மூலவரான முருகனை மட்டுமே பார்க்க முடியும். பக்தர்களது பெரும் நம்பிக்கையானது இத்தலத்து முருகனுக்கு திருமணத்தடைகளை விலக்கக்கூடியவராக விளங்குகிறார் என்பதாகும். அதன் காரணமாக திருமணத்தடை உள்ளவர்கள் அதிக அளவில் இங்கு நேர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்களது நேர்த்திக்கடனுக்காக முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்தும், அபிஷேகம் செய்தும் வழிபாடு செய் கிறார்கள்.
மூலஸ்தான தரிசன வைபவம் முடிந்த பிறகு திருக்கோவிலை வலம் வரவேண்டும் என்பது ஆகம விதியாகும். அப்படி முருகனது சன்னிதியை வலம் வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. கோவிலின் பிரகாரத்தில் காசி விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், நாகர், நவக்கிரக சன்னிதிகள் ஆகியவை அமைந்துள்ளன. மூலவர் சன்னிதி மீதுள்ள விமானம் ‘ஷட்கோண’ அமைப்பில் அதாவது முருகனின் சடாட்சர மந்திர அலைகளுக்கு உகந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. கோவில் அமைந்துள்ள மண்டபத்தின் ஓரத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் நாகலிங்கேஸ்வரர் அருள் தருகிறார்.
தொட்டில் கட்டி வழிபாடு :
அரச மரத்தின் கிளைகளில் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி தொட்டில்கள் கட்டியதன் வாயிலாக குழந்தை வரம் கிடைத்துள்ளது என்பது பலருக்கும் அனுபவமாக உள்ளது. இங்குள்ள வில்வ மரத்தடியில் வில்வ விநாயகர் வீற்றிருக்கிறார். அவரை வழிபட்டால் சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம். இத்தலத்தில் முருகன் வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பது மிகவும் விசேஷமானது. ஏனென்றால் வடக்கு திசை நோக்கியவாறு தமது திருமுக மண்டலத்தை வைத்துள்ள திருத்தலம் தமிழக அளவில் குன்றத்தூர் மட்டும்தான் என்பது ஆச்சரியமானது.
விபூதி பிரசாதம் :
பாடல் பெற்ற இத்தலத்தில் மூலவர் சுப்பிரமணியருக்கு நடத்தப்படும் அபிஷேக விபூதிதான், தினமும் அனைவருக்கும் பிரசாதமாக தரப்படுகிறது. கந்த சஷ்டி விழாவானது இத்தலத்தில் எட்டு நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும். சூரசம்ஹார விழாவின் 6-வது நாள் சூரசம்ஹாரம். 7-வது நாள் வள்ளி திருமணம். 8-வது நாள் தெய்வானை திருமணம் என்ற முறையில் விழா நடத்தப்படுகிறது. இங்கு சிவாகம முறைப்படி அன்றாட பூஜைகள், வாராந்திர பூஜைகள், மாதாந்திர பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
குன்றத்தூரானது பெரியபுராணம் படைத்த சேக்கிழார் பிறந்த ஊர். எனவே மலை அடிவாரத்தில் அவருக்கு தனி சன்னிதி உள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் சேக்கிழார் குரு பூஜையின் போது மலையில் இருந்து முருகன் இறங்கி வந்து சேக்கிழாருக்கு காட்சி தருவது ஐதீகமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
மூன்று நிலையில் அமைக்கப்பட்ட ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், பைரவர், நவக்கிரகங்கள், தீர்த்தக் கிணறு, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, வில்வமரத்தடி விநாயகர் என்று சிறப்புற விளங்குகிறது குன்றத்தூர் முருகனின் திருக்கோவில்.
இங்கேயுள்ள அரச மரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக கடைப்பிடித்து வரப்படுகிறது. தங்களது பிரார்த்தனை நிறைவேறியவர்கள், குழந்தையின் எடைக்கும் எடை பழம், சர்க்கரை, வெல்லம் என்று ஏதாவது காணிக்கையாக செலுத்துவது வழக்கம். குழந்தைகளுக்கு வரக் கூடிய உடல் ரீதியான கடுமையான நோய்களுக்கு இங்கு வந்து, தவிடு மற்றும் வெல்லம் வழங்கி, ‘இது உனது குழந்தை அதனால் நீயே காப்பாற்ற வேண்டும்’ என்று சொல்லி முருகனுக்குத் தத்து கொடுத்து, வழிபாடுகள் செய்து முடித்து குழந்தையை அழைத்து சென்று விடுவார்கள். அந்த குழந்தையை கந்த கடவுள் குறைகள் ஏதுமின்றி காப்பார் என்பது பக்தர்களது உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.
முருகன் பூஜித்த சிவன்:
தேவர்களை கொடுமைப்படுத்திய தாரகாசுரனை அழிக்க முருகப்பெருமான் படையுடன் வந்தார். திருப்போரூர் திருத்தலத்தில் நடந்த போரில் தாரகாசுரனை முருகன் வதம் செய்தார். அந்த சம்ஹாரம் முடிந்ததும் மனம் அமைதி பெற திருத்தணி நோக்கி புறப்பட்டார். வழியில் குன்றத்தூர் மலையின் மீது அமர்ந்தார். குன்றத்தூர் மலையில் தங்கி இருந்த முருகன், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். அந்த சிவன், மலை அடிவாரத்தில் ‘கந்தழீஸ்வரர்’ என்ற பெயரில் தனி கோவில் கொண்டு அருள்புரிந்து வருவதை காணலாம். கந்தனால் உருவாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டதால் அவருக்கு இந்த பெயர் வந்தது. அதன் பிறகு இத்தலத்தில் இருந்து புறப்பட்டு திருத்தணியை அடைந்ததாக தலவரலாறு கூறுகிறது.
அமைவிடம்:
சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலும், பூந்தமல்லியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது குன்றத்தூர் திருத்தலம்.

தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்.
தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை விளங்குகிறாள்.
தல வரலாறு :
ஆதியில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் பிரம்மா யாரையும் மதிக்காமல் ஆணவத்துடன் நடந்து கொண்டார். அவருக்கு பாடம் கற்பிக்கும் வகையில், பரமேஸ்வரன் சூலாயுதத்தால் பிரம்மாவின் ஒருதலையை வெட்டினார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.
சித்தம் கலங்கி, பித்துபிடித்த நிலையில் கையில் மண்டையோடும், மற்றொரு கையில் சூலாயுதத்துடனும் உடலெங்கும் சாம்பலைபூசி கொண்டு ஊர், ஊராக அலைந்து திரிந்தார். நாடு முழுவதும் அலைந்து திரிந்த சிவன் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்காள பரமேஸ்வரி அம்மன், சிவன் கையில் இருந்த கபாலத்துக்கு உணவிட்டு, சாதத்தை கீழே சிதறிபோகும் படி செய்தார். அப்போது சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்கியது. உடனே அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபம் எடுத்து கபாலத்தை காலால் மிதித்து அதை அடக்கினார். அப்போது சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது.
கபாலத்தை அடக்கிய பிறகும், அங்காளம்மனின் கோபம் தணியவில்லை. அவளது கோபத்தை தணிப்பதற்காக மகாவிஷ்ணுவின் யோசனைப்படி தேர்த்திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. தேவர்களும், முனிவர்களும் அந்த ரதத்துக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும், மாடங்களாகவும், மரப்பலகைகளாகவும், சிம்மாசன மேடையாகவும் மாறி நின்றனர். அங்காள பரமேஸ்வரி கோபம் தணிந்து அந்த தேரில் ஏறி அமர்ந்து வீதி வலம் வந்தாள்.
தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும், முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்து விடுகின்றனர். இந்த ஐதீகத்தின்படி ஒவ்வொரு வருடமும் தேரோட்ட நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்த தேரை பிரித்துவிடுவார்கள். அடுத்த வருட தேரோட்டத்துக்கு புதிய தேர் செய்யப்படும்.
ஆண்டு தோறும் மகாசிவராத்திரியையொட்டி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறும். அப்போது நடைபெறும் தேரோட்டத்தின் போது புதிதாக தேர் செய்யப்படும். அந்த தேரில் அம்மன் அமர்ந்து வீதிஉலா வருவார். இந்த முறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
குறி கேட்கும் பக்தர்கள் :
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் குறி சொல்லப்படுகிறது. கோவிலின் பலபகுதிகளில் குறி சொல்பவர்களை காணலாம். நினைத்த காரியம் நடக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? காணாமல் போன பொருள் திரும்பவும் கிடைக்குமா? வேலை எப்போது கிடைக்கும்? கோர்ட்டு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? என்பது பற்றி பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு குறி சொல்பவர்கள் விடை கூறுகிறார்கள். குறி கேட்க செல்பவர்கள் கற்பூரம் வாங்கி செல்லவேண்டும். இங்கு குறி கேட்க வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நம்பிக்கை...
இந்த கோவிலில் பேய் பிடித்தவர்களுக்கு பேய் விரட்டப்படுகிறது. பேய் பிடித்த பெண்கள் இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ஈரச்சேலையுடன் கோவிலுக்கு வருகிறார்கள். கோவில் பூசாரி அந்த பெண்ணின் தலையில் கபால தீர்த்தத்தை தெளிக்கிறார். அப்போது அந்த பெண் ஆவேச சத்தம் போடுகிறாள். பூசாரி அந்த பெண்ணிடம் கற்பூரத்தை கொளுத்தி கொடுக்க அதை வாங்கி அவள் வாயில் போட்டுக் கொள்கிறாள். சிறிது நேரத்தில் அந்த பெண் அமைதி ஆகிறாள். அதன் பிறகு அந்த பெண் உடல் முழுவதும் மயான சாம்பல் பூசப்படுகிறது. இந்த நிலையில் அவளைப்பிடித்து இருந்த பேய்விலகி சென்று விடுவதாக நம்புகிறார்கள். அங்காளம்மன் கோவிலின் காவல் தெய்வம் பாவாடை ராயர் ஆவார்.
அமைவிடம் :
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்குதிசையில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.

தெய்வீக சக்தியாக வாழ்ந்த திரவுபதிக்கு, நம் நாட்டில் நிறைய ஆலயங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஆலயம் ஒன்றுதான் புத்தூரில் உள்ள திருத்தலம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தூர். இங்குள்ள அரசு மருத்துவமனை அருகே இருக்கிறது திரவுபதி அம்மன் ஆலயம்.
மகாபாரதத்தின் நாயகி திரவுபதி. துருபதன் என்ற மன்னன் பாஞ்சாலதேசத்தில் நல்லாட்சி செய்து வந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. தனக்கு வாரிசு வேண்டியும், துரோணரை அழிப்பதற்காகவும் ஒரு பெரிய யாகம் செய்தான். அந்த யாகத்தில் அவனுக்கு ஒரு மகனும், மகளும் தோன்றினார்கள். மகனுக்கு துஷ்டத்துய்மன் என்றும், மகளுக்கு திரவுபதி என்றும் பெயரிட்டார்.
திரவுபதி முற்பிறவியில் நளாயினியாகப் பிறந்தவள். மறு பிறவியில் காசி ராஜனுக்கு மகளாகப் பிறந்து சிவபெருமானை நோக்கி தவமிருந்தாள். அவளது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய சிவபெருமான் அவள் முன் தோன்றினார்.
‘பெண்ணே, உன் தவத்திற்கு மெச்சினோம். என்ன வரம் வேண்டும்? கேள்” என்றார் சிவபெருமான்.
ஈசனைக் கண்ட மகிழ்விலும், பதற்றத்திலும், அவள் தன்னை மறந்து ‘பதம் தேஹி’ என ஐந்து முறை கூறினாள்.
‘மறுபிறவியில் உனக்கு அந்த பாக்கியம் கிட்டும்’ என அருள்புரிந்து மறைந்தார் ஈசன். அதன்படியே துருபதன் நடத்திய வேள்வியில் திரவுபதியாக உருக்கொண்டாள்.
கன்னிப் பருவம் அடைந்ததும் அவள், சுயம்வரம் மூலமாக அர்ச்சுனனை மணந்தாள். பின், அர்ச்சுனன் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்களும் குந்திதேவியை சந்திக்கச் சென்றனர். பஞ்ச பாண்டவர்கள் வீட்டில் வாசலில் நின்றபடி, ‘தாயே! கனி கொண்டு வந்துள்ளோம்’ என குந்தியிடம் கூற, குந்தியும் திரும்பி பாராது ‘பகிர்ந்து உண்ணுங்கள்’ என்றாள். பின் கனிக்குப் பதிலாக திரவுபதி இருப்பதைக் கண்ட குந்திதேவி பதறினாள்.
அப்போது குந்தியின் முன் தோன்றிய நாரதர், ‘திரவுபதி முற்பிறவியில் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தாள். அந்த தவத்தின் பலனாக ஐந்து சிவ கணங்களும் அவளுக்கு கணவர்களாக இப்போது வாய்த்துள்ளனர்’ என்றார்.
திரவுபதியும் ஐவரையும் சிவ சக்தியாக மணந்து பராசத்தியாக வாழ்ந்தாள்.
பாரதப்போர் நடந்து கொண்டிருந்த போது, கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்கு திரவுபதி காளியின் வடிவம் என்பதை உணர்த்தினார்.
தருமர் சூதாடி திரவுபதியை இழந்தார். துச்சாதனன் துரியோதனனின் பேச்சைக் கேட்டு, திரவுபதியை துகிலுரித்தான். சினம் கொண்டாள் திரவுபதி. ‘பாண்டவர்கள் கவுரவர்களை போரில் வென்ற பின்பே தன் கூந்தலை முடிவேன்’ என சபதம் செய்தாள். இப்படி தெய்வீக சக்தியாக வாழ்ந்த திரவுபதிக்கு, நம் நாட்டில் நிறைய ஆலயங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஆலயம் ஒன்றுதான் புத்தூரில் உள்ள திருத்தலம்.
ஆலய அமைப்பு :
இந்த ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. அழகிய முகப்பைக் கடந்து உள்ளே சென்றால், மலர் செடிகளின் அணிவகுப்பைப் பார்க்கலாம். அடுத்து இன்னொரு அழகிய முகப்பு. முகப்பைக் கடந்ததும் மகா மண்டபம். அந்த மண்டபத்தின் இடதுபுறம் ஆஞ்சநேயர் சன்னிதியும், அடுத்து பிரதோஷ நாயகன், முருகன், வள்ளி, தெய்வானை, சத்யநாராயணர் சன்னிதியும், விஷ்ணு துர்க்கை சன்னிதியும் உள்ளன. வலதுபுறம் தட்சிணாமூர்த்தி, நடராஜர், சிவகாமி, கிருஷ்ணர் சன்னிதிகள் இருக்கின்றன. மகா மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் அன்னை திரவுபதி அமர்ந்த நிலையில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னையின் வலதுபுறம் நாகதேவதை சன்னிதி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி நிறைய பாம்பு புற்றுகள் இருந்ததாகவும், அதனாலேயே இந்தப் பகுதி புற்றூர் என அழைக்கப்பட்டு, நாளடைவில் அதுவே மருவி புத்தூர் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இறைவியின் இடதுபுறம் தனி சன்னிதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அன்னையின் கருவறை முகப்பில் கற்பக விநாயகரும், பால முருகனும் வீற்றிருக்கின்றனர். மகாமண்டப வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் வடக்கில் காலபைரவர் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்திற்கு அரசு, வேம்பு, வன்னி மரம் என மூன்று தல விருட்சங்கள் உள்ளன.
திரு விழாக்கள் :
இந்த ஆலயம் பெரும்பாலான நாட்களில் திருவிழா கோலம் பூண்டே காணப்படுகிறது. தை மாத வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சித்திரை பவுர்ணமியில் பால்குட ஊர்வலம் நடக்கிறது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் கூழ் வார்க்கும் திருவிழாவும், நவராத்திரி விழாவும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
திருமணத்திற்கு காத்திருக்கும் கன்னியர், அன்னையிடம் வேண்டிக்கொள்ள அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவது கண்கூடான நிஜம் என்கின்றனர் பக்தர்கள். வேண்டு தலால் திருமணம் கைகூடிய பெண்கள், அன்னைக்கு புடவை சாத்தி தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர்.
தம்மை நாடும் பக்தர்களின் துயர் தீர்க்க அன்னை திரவுபதி தவறுவதில்லை என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுவது நிஜமே.
மாலை தரும் யோகம் :
கந்த சஷ்டி திருவிழா இங்கு 7 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. 6-ம் நாள் சூரசம்ஹாரமும், 7-ம் நாள் முருகன் - தெய்வானை திருக்கல்யாணமும் நடக்கிறது. மண மாலைக்கு காத்திருக்கும் கன்னியர், அன்றைய தினம் இரண்டு மாலை வாங்கி வந்து முருக பெருமானுக்கு சாத்துகின்றனர். அதில் ஒரு மாலையை, கோவில் அர்ச்சகர், திரும்பவும் அந்தப் பெண்ணிடமே தரு கிறார்.
அந்த மாலையை அந்தப் பெண் தங்கள் வீட்டு பூஜை அறையிலோ அல்லது தான் வணங்கும் இறைவனின் அருகிலோ மாட்டி வைக்கின்றார். அவ்வாறு செய்யும் பெண்களுக்கு ஒரு ஆண்டிற்குள் திருமணம் நடப்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள். மணமானதும் அந்த மாலையைக் கொண்டு போய் காவிரி ஆற்றில் விட்டு விடுகின்றனர்.

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ராஜேந்திரம் ஆலயத்தை ராஜேந்திர சோழனே கட்டியுள்ளான். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர் மத்யார்ஜூனர் என்பதாகும்.
வான் பொய்ப்பினும் வற்றாத வளம் பெருக்கும் வன்மை பொருந்தியது காவிரி நதி. பொன் விளையும் பூமியாக மாற்றுவதால் பொன்னி நதி என்ற பெயரும் இந்த நதிக்கு உண்டு. இந்த புனித நதியின் தென்கரையில் பல சிவத்தலங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று ராஜேந்திரம். இத்தலத்திற்கு தேவாரப்பாடல் பெறவில்லை. எனினும் தேவாரப் பாடல்கள் பெற்ற ஐயர்மலை, திருக்கடம்பந்துறை, திருஈங்கோய்மலை போன்ற திருக்கோவில்களுடன் நெருங்கிய தொடர்புடையது.
கரிகாலனின் ஆர்வம் :
நம் பாரத புண்ணிய பூமி, புராணங்களில் கர்ம பூமி எனப் போற்றப்படுகிறது. முற்காலத்தில் முனிவர்கள் பலர் பாரத தேசம் முழுவதும் கால் நடையாக வலம் வந்து ஆங்காங்கே இறைவனின் திருமேனிகளை நிலை நிறுத்தி வழிபட்டு வந்தனர். பின்னால் வந்த பல மன்னர்கள் ஆலயம் அமைப்பதில் அக்கறை காட்டினர். சில மன்னர்கள் தன் வாழ்நாள் முழுவதையும் இறைபணிக்கே அர்ப்பணம் செய்தனர்.
கரிகால் பெருவளத்தான் காடு கெடுத்து நாடாக்கினான் என்று வரலாறு கூறுகிறது. இம்மன்னன் காவிரிக்கு இருபுறமும் கரை எடுத்தான். கல்லணை கட்டினான். இதனால் இரு கரைகளிலும் ஊர், பேரூர், நகர் ஆகியவை தோன்றி செழிப்புற்றன. ஆலயம் கட்டுவதில் சோழ மன்னர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ராஜேந்திரம் ஆலயத்தை ராஜேந்திர சோழனே கட்டியுள்ளான்.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர் மத்யார்ஜூனர் என்பதாகும். இறைவியின் திருநாமம் தேவநாயகி.
ஆலய அமைப்பு :
ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கொடிமர விநாயகர், கொடி மரம், பீடம், நந்தி ஆகியவைகள் உள்ளன. பிரகாரத்தின் வலதுபுறம் பைரவர் சன்னிதியும் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும் அருள்பாலிக்கின்றனர். அடுத்துள்ள மகா மண்டபத்தின் முகப்பில் இடதுபுறம் கணபதியும், வலதுபுறம் பாலதண்டாயுதபாணியும் வீற்றிருக்கின்றனர்.
மகா மண்டபத்தின் வலதுபுறம் அன்னை தேவநாயகியின் சன்னிதி உள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் மத்யார்ஜூனர், லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள் பாலிக்கிறார். தேவக்கோட்டத்தின் தென் திசையில் சனீஸ்வரனும், தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியும் அமர்ந்திருக்க, வடக்கில் விஷ்ணு, துர்க்கை திருமேனிகள் உள்ளன.
சனீஸ்வரன் சன்னிதி :
தேவக்கோட்ட தென்திசையில் நர்த்தன கணபதி இருக்க வேண்டிய இடத்தில், சனீஸ்வரன் சன்னிதி இருப்பது இந்த ஆலயத்தின் மிகவும் சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது.
நள மாமன்னன் ஏழரை நாட்டுச் சனியால் பாதிக்கப்பட்டு மிகவும் அல்லல்பட்டான். சனியின் பார்வையில் இருந்து தப்ப, ஊர் உராகச் சுற்றித்திரிந்தான். இந்த ஆலயம் வந்த நள மாமன்னன் தெற்கு நோக்கி அமைந்துள்ள சனீஸ்வரனை வழிபட்டு அருள்பெற்றார். இறுதியாக திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை வழிபட்டு சனியின் தாக்கம் குறையப் பெற்றார். இதை உறுதிபடுத்தும் வகையில் சனீஸ்வர சன்னிதியில் மேல்புறத்தில் யோகநிலையில் அமர்ந்திருக்கும் திருவுருவம் நளமகராஜனின் உருவம்தான் என்கின்றனர்.
ஆலயத்தின் மேற்கு திருச்சுற்றில் முருகன், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகங்கள், 12 கரங்களுடன் மயில் வாகனத்தில் அருள்பாலிக்கிறார். தவிர முருகப்பெருமானின் ஒரு கரம் சின் முத்திரையுடன் அமைந் திருப்பது எங்கும் காண இயலாத அபூர்வ அமைப்பாகும். ஆலய தல விருட்சமான மருதமரம் மேற்குப் பிரகாரத்தில் செழுமையாக வளர்ந்துள்ளது.
முனிவர்களாலும், சித்தர்களாலும் உருவாக்கம் செய்யப்பட்டு, பிற்கால சோழ மன்னன் ராஜேந்திர சோழனால் இந்த ஆலயம் முழுமையான தோற்றம் பெற்றதாக செவி வழி செய்தி. அதனால்தான் இந்த ஊர் ராஜேந்திரம் என அழைக்கப்படுகிறது. இந்த ஊருக்கு மேற்கில் 20 கி.மீ. தொலைவில் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் என்ற ஊரில் சிவன் கோவில் ஒன்று அமைந் திருப்பது இந்தத் தகவலை உறுதிபடுத்துகிறது.
சிறப்பு ஆராதனைகள் :
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இறைவன், இறைவிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆனி மாத பவுர்ணமி அன்று இறைவனுக்கு மா, பலா, வாழை என முக்கனி அபிஷேகம் நடைபெறும். ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும்.
மார்கழி 30 நாட்களும் தனுர்மாத பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரியின்போது அன்னை தேவநாயகி ஒன்பது நாட்களும் ஒன்பது அலங்காரத்தில் அருள்பாலிப்பதுடன், 10-ம் நாள் அம்பு போடும் உற்சவம் நடைபெறும்.
வைகாசி விசாகத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும் வழக்கம். கந்த சஷ்டியிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். நட ராஜருக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய ஆறு மாதங்களில் முறையே திருவோணம், உத்திரம், வளர்பிறை சதுர்த்தசி, திருவாதிரை நாட்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடக்கிறது.
இந்த ஆலய கும்பாபிஷேகம் கடந்த 6.6.11-ல் நடைபெற்றுள்ளது. ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. புதிதாக 5 நிலை ராஜகோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த ஆலயத்தில் தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.
தன்னை ஆராதிக்கும் பக்தர் களின் மனத்துயரைக் களைந்து அவர்கள் மங்களகரமாய் வாழ இத்தல இறைவன் மத்யார்ஜூனேஸ்வரரும், இறைவி தேவநாயகியும் அருள்புரிவார்கள் என்ற பக்தர் களின் நம்பிக்கை நிஜமே.
இத்தலம் குளித்தலை என தற்போது அழைக்கப்படும் திருக்கடம்பந்துறைக்கு கிழக்கேயும் பெட்டவாய்த்தலைக்கு மேற்கேயும் அமைந்துள்ளது. திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் மருதூர் பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜேந்திரம் என்ற கிராமத்தில் உள்ளது இந்த மத்யார்ஜூனேஸ்வரர் ஆலயம்.

சென்னை அருகே உள்ள புதுப்பாக்கத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இந்த தலத்தில் உள்ள மலையை சுற்றி ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக ஐதீகம் கூறப்படுகிறது.
பஞ்சபூதங்களையும் வென்றவர் என்பது ராமாயணத்தில் அனுமனுக்கு கிடைத்த பெருமையாகும். சுந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட அனுமனைப் பற்றியும், அவரது பராக்கிரமங்களைப் பற்றியும் கூறுவது என்பதால், அந்த பகுதிக்கு ‘சுந்தர காண்டம்’ என்று பெயர். கலியுகத்தில் சகல தோஷங்களையும் களைந்தெறியும் வல்லமை, சுந்தரகாண்ட பாராயணத்திற்கு உண்டு.
மூலிகை மலை :
சென்னை அருகே உள்ள புதுப்பாக்கத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இந்த தலத்தில் உள்ள மலையை சுற்றி ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக ஐதீகம் கூறப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தைப் பற்றி இங்கு காணலாம்.
சீதாதேவியை மீட்பதற்காக ராம- ராவண யுத்தம் நடந்து கொண்டிருந்தது. யுத்தத்தின் போது மாயப் போரில் வல்லவனான ராவணனின் மைந்தன் இந்திரஜித், பலம் பொருந்திய பாணம் ஒன்றை விட்டான். அந்த மூர்க்கத்தனமான பாணத்திற்கு, லட்சுமணன் மற்றும் வானரப் படை வீரர்கள் பலர் மூர்ச்சையாகிப் போனார்கள்.
அவர்களுக்கு மீண்டும் சுயநினைவு வர சஞ்சீவி மலையில் உள்ள அமிர்த சஞ்சீவினி மூலிகை தேவைப்பட்டது. காற்றை விட வேகமாக செல்ல, வாயுவின் புத்திரனைத் தவிர வேறு யாரால் முடியும்? எனவே அவரையே மூலிகையை கொண்டுவரும்படி ஜாம்பவான் பணித்தார். ராம பிரானின் ஆசியுடன் மூலிகையை தேடிப் புறப்பட்ட அனுமன், மூலிகையை அடையாளம் காண முடியாமல், மூலிகை இருப்பதாக கூறப்பட்ட சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து தூக்கியபடி பறந்தார்.
ஆஞ்சநேயர் பாதம் :
அவ்வாறு வந்து கொண்டிருந்தபோது மாலை வேளையானது. அதனால் நித்திய கர்மாவாகிய, சந்தியா வந்தனம் செய்வதற்காக ஆஞ்சநேயர் ஓரிடத்தில் இறங்கினார். தன் வழிபாடு முடிந்ததும் ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்று விட்டார். முசுகுந்தச் சக்கரவர்த்திக்காக, மகான் வியாச ராஜ தீர்த்தன் என்பவர் ஆஞ்சநேயர் பாதம்பட்ட மலை உச்சியில் அனுமனின் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
இந்த மலையில் ஆஞ்சநேயருக்கு, திருமங்கை ஆழ்வார் கோவில் கட்டியதாக கூறப் படுகிறது. பின்னாளில் செங்கல்வராய மகாராஜா மற்றும் பல பல்லவ மன்னர்களால் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன என்று இந்த திருத்தலத்தின் தல வரலாறு விரிகிறது.
மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் சன்னிதியை வழிபட்டு, அதன் பக்கவாட்டில் உள்ள நவக்கிரக சன்னிதியையும் தரிசித்து விட்டு கஜகிரி என்னும் மலையை ஏறிச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் மலை உச்சியில் வீர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் அழகை தரிசனம் செய்யலாம். இந்த ஆஞ்சநேயர் சாளக்கிராமத்தால் ஆனவர். எதிரில் சீதாதேவி, லட்சுமணன் சமேதராக ராமபிரான் ஒளிர்கிறார். ராமபிரானின் திருவடிக்கு அருகிலும் அனுமன் உள்ளார்.
வீர ஆஞ்சநேயரின் வலது திருப்பாதம் தரையில் ஊன்றி, இடது திருப்பாதம் உயர்த்தி தரையில் படாமல், பறப்பதற்குத் தயாராக இருப்பதுபோல் அமைந்துள்ளது. அவரது நாபிக் கமலத்தில் தாமரையும், வாலில் மணியுடன் தலைக்கு மேல் வால் தூக்கப்பட்ட நிலையில் பக்தர் களுக்கு அபயம் தந்து அருள்கிறார்.
கோவில் பிரகாரத்தில் கருவறையைச் சுற்றிலும் ராமாயணக் காட்சிகள் அழகிய சித்திரங் களாக செதுக்கப்பட்டு மிளிர்கின்றன. அவற்றில் சேது பாலம் அமைத்தலும், ஆஞ்சநேயர் சூரியனைப் பழம் என்றுக் கருதி பிடிக்க செல்லுதலும், சிவபெருமானின் உடம்பு முழுவதும் ஆக்கிரமித்தருளும் ஆஞ்சநேயர் சிற்பமும் உயிரோட்டமானவை.
கிரிவலம் வருதல் :
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை ஆதிவராக சுவாமி (நித்திய கல்யாணப் பெருமாள்) தலத்தின் ‘பரிவேட்டை’ தலமாகவும் இத்தலம் உள்ளது குறிப்பிடத்தக்கது. வீரஆஞ்சநேயர் திருத்தலத்தில் பக்தர்களுக்கு வலம்புரிச் சங்கில் தீர்த்தம் கொடுப்பது தனிச்சிறப்பாகும். பவுர்ணமி தோறும் இரவு நேரத்தில், ஆஞ்சநேயர் இந்த கஜகிரி மலையை கிரிவலம் செய்வதாக ஐதீகம். அப்போது பக்தர்களும் கிரிவலம் வந்தால் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
அமாவாசை நாளில் புதுச் செங்கலில் ராம நாமம் எழுதி, அதனை தலையில் வைத்து படியேறி வந்து ஆஞ்சநேயரை வழிபட்டால் வெகுவிரைவில் வீடு வாங்கும் யோகம் கூடிவரும் என்று கூறப்படுகிறது. மூல நட்சத்திர நாட்களில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சாத்தி வழிபட்டால் காரிய தடைகள், திருமணத் தடைகள் அகலும்.
வேலைவாய்ப்பு கிட்டவும், உயர் பதவி கிடைக்கவும், செவ்வாய்க்கிழமை மாலை வேளைகளில் வெண்ணெய் சாத்தி, அருகம்புல்லுடன் வெற்றிலை வைத்துக் கட்டிய மாலையை ஆஞ்சநேயருக்கு சூட்டி வழிபட வேண்டும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தியும், ராம நவமியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி கிரிவலமும் சிறப்பாக நடக்கிறது. இந்த ஆலயத்தில் அருகிலேயே திருவெளிச்சை சிவன் கோவிலும், மாம்பாக்கம் தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவிலும் உள்ளன.
அமைவிடம் :
சென்னை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தூரத்திலும், கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் மிருககாட்சி செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்திலும் புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரிசூழ்ந்தமங்கலம் என்னும் ஊரில், தாமிரபரணி ஆற்றின் கரையில் சுதர்சன மூர்த்திக்குத் தனிக்கோவில் ஒன்று அமைந்துள்ளது.
மும்மூர்த்திகளில் காத்தல் தொழிலை செய்து வரும், விஷ்ணு பகவானின் கையில் வைத்திருக்கும் ஐந்து வகையான ஆயுதங்கள் இருப்பதைக் காணலாம். சங்கு, சக்கரம், வாள், வில் மற்றும் கதாயுதம் என்கிற ஐந்து ஆயுதங்களில், ‘சக்கராயுதம்’ முதன்மையான இடத்தைப் பெறுகிறது. இந்தச் சக்கராயுதத்தை விஷ்ணு தனக்கு நிகரான சக்தியுடையதாக உருவாக்கினார்.
சக்கராயுதத்தில் இருக்கும் இறைவனை பக்தர்கள் அனைவரும், ‘சுதர்சனர்’ என்று போற்றிப் புகழ்கின்றனர். அவருக்கு பொதுவாக ‘சக்கரத்தாழ்வார்’ என்ற பெயரே நிலைபெற்று விளங்குகிறது. சக்கரத்தாழ்வாரைச் சக்கரராயர், திருவாழி ஆழ்வான், சக்கரராஜன், ஹேதிராஜன், யந்திரமூர்த்தி, மந்திரமூர்த்தி என்கிற வேறு சில பெயர் களாலும் அழைப்பதுண்டு.
சுதர்சனர் வழிபாடு :
பொதுவாக சுதர்சன பெருமாளை வழிபட்டு, வலது புறமாகச் சென்று அவருக்கு பின்புறமுள்ள யோக நரசிம்மரை வணங்க வேண்டும். அவ்வாறு செய்வதால், மனதில் உள்ள அச்சங்கள் அகன்று, மனத் துணிவும், தன்னம்பிக்கையும் ஏற்படும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால் விஷ்ணு பக்தர்களிடம், சுதர்சன வழிபாடு மிகச் சிறப்பானதாக கருதப்படுகிறது.
இதனை அடிப்படையாகக் கொண்டுதான் விஷ்ணு கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார், எட்டு கரங்களைக் கொண்டிருந்தால் ‘சுதர்சனர்’ என்றும், பதினாறு கரங்களைக் கொண்டிருந்தால் ‘சுதர்சன மூர்த்தி’ என்றும், முப்பத்திரண்டு கரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தால் ‘மகா சுதர்சனர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
சுதர்சனருக்கு தனி ஆலயம் :
திருநெல்வேலி மாவட்டத்தில் கரிசூழ்ந்தமங்கலம் என்னும் ஊரில், தாமிரபரணி ஆற்றின் கரையில் சுதர்சன மூர்த்திக்குத் தனிக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. சுதர்சன பெருமாளுக்காக அமைந்துள்ள ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக திகழ்கிறது இந்த ஆலயம். இங்கு மூலவராக சுதர்சனப் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு 16 திருக்கரங்கள் உள்ளது. அந்த கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என பதினாறு வகையான ஆயுதங்களைக் கொண்டிருக்கிறார். எனவே இவர் ‘சுதர்சன மூர்த்தி’ என்றும் அழைக்கப்படுகிறார்.
உற்சவர் வெங்கடாசலபதி:
இந்த ஆலயத்தின் மூலவராகச் சுதர்சன மூர்த்தியும், உற்சவராக வெங்கடாசலபதியும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். சுதர்சன மூர்த்தியே மூலவராக இருந்தாலும், கோவில் என்னவோ, உற்சவர் வெங்கடாசலபதி பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆலயத்தின் கருவறை முன்பாக இருக்கும் மண்டபத்தில் உற்சவரான வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் வீற்றிருக் கிறார். செப்புத் திருமேனி உருவங்களாக இருக்கும் இந்த உற்சவமூர்த்திகளை அழகிய ஆபரணங்களால் அலங்கரித்து வைத்திருக்கிறார்கள். இங்கு மூலவருக்குச் செய்யப்படும் வழிபாடுகளைப் போலவே, உற்சவருக் கும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுவது சிறப்பம்சமாகும்.
இத்தல இறைவனான சுதர்சன மூர்த்தியை வழிபடுவதால், பல்வேறு பலன்களை பக்தர்கள் அடையலாம். குறிப்பாக மனிதனுக்கு வரும் பல்வேறு பாதிப்புகளுக்கும் முதன்மைக் காரணமாக இருக்கும் கடன் (ருணம்), நோய் (ரோகம்), எதிரி (சத்ரு) எனும் மூன்றையும் அழித்து, மன அமைதியை தரும் இறைவனாக இத்தல இறைவன் திகழ்கிறார். மேலும் கல்வி தொடர்பான தடைகள் அனைத்தும் நீங்கவும், சுதர்சன மூர்த்தியை வழிபடுபவர்கள் ஏராளம். இவைத் தவிர கெட்ட கனவுகள், மனக்குழப்பம், மனநோய், தீய சக்திகளால் ஏற்படும் மனம் தொடர்புடைய பாதிப்புகள், அதனால் வரும் துன்பங்களில் இருந்து விடுபடவும் இவரை பக்தர்கள் வழிபடுகிறார்கள். சக்கரத்தாழ்வார் எனப்படும் சுதர்சன மூர்த்தி, நவக்கிரகங்களில் சுக்ரனுக்கு அதிபதியாக விளங்குபவர். எனவே இத்தலம் சுக்ரனுக்குரிய பரிகார தலமாகவும் இருக்கிறது.
குழந்தை வரம் அருளும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது. திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் தவிப்பவர்கள் ஏராளம். அப்படி இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்குச் சென்று, மூலவரான சுதர்சன மூர்த்தியையும், சுதர்சன நரசிம்மரையும் வழிபட்டு வணங்க வேண்டும். பின்னர் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள படித்துறையில் வைத்து, பக்தர்களுக்கு பாயாசம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினால், அவர்களுக்கு விரைவில் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நிகழ்வுக்கு ‘படிப்பாயச நேர்த்திக்கடன்’ என்று பெயர்.
சுதர்சன நரசிம்மர் :
சுதர்சனருக்குப் பின்புறம் நான்கு கரங்களோடு யோக நரசிம்மர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். நரசிம்மரின் நான்கு கரங்களிலும் சுதர்சனச் சக்கரங்கள் இருக்கின்றன. பொதுவாக, விஷ்ணு கோவில்களில் இருக்கும் சுதர்சனர் சன்னிதிகளைப் போன்று, இங்கு யோக நரசிம்மரைக் கண்டு வணங்க பின்புறமாகச் செல்வதற்கான வழி இல்லை.
இங்கு சுதர்சன மூர்த்திக்குப் பின்பகுதியில் இருக்கும் யோக நரசிம்மரை வணங்குவதற்குப் பின்புறச் சுவரில் நிலைக்கண்ணாடி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. நரசிம்மருக்குத் தீப ஆராதனை செய்யப்படும் பொழுது, அதன் ஒளி நிலைக் கண்ணாடியில் பிரதிபலிக்கும் போது தான், நரசிம்ம உருவத்தைக் கண்டு வணங்க முடியும். இந்த நரசிம்மரை, ‘சுதர்சன நரசிம்மர்’ என்றே அழைக் கிறார்கள். இவருக்கு தொடர்ச்சியாகப் பதினோரு பிரதோஷ நாட்களில், பானகம் படைத்து வழிபாடு செய்து வந்தால், நினைத்த காரியம் நினைத்த படி நிறைவேறும் என்பது நம்பிக்கை.
அமைவிடம்:
திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேலப்பாளையம் வழியாகச் சேரன்மகாதேவி செல்லும் வழியில் இருக்கிறது பத்தமடை. இங்கிருந்து தனியாக பிரிந்து செல்லும் பாதையில் 2 கிலோமீட்டர் சென்றால் கரிசூழ்ந்த மங்கலம் என்ற திருத்தலத்தை அடையலாம். இந்த ஊரில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரையிலேயே ‘வெங்கடாசலபதி கோவில்’ அமைந்துள்ளது.