என் மலர்
முக்கிய விரதங்கள்
இன்று புரட்டாசி 4-வது சனி. ஏழைகளுக்கு ஆடை தானம் செய்ய வேண்டும். இதனால் கிரக ரீதியிலான தோஷங்கள் விலகும்.
புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். புரட்டாசி மாதத்தை பெருமாள் மாதம் என்றே அழைப்பர்.
108 திவ்ய தேசங்கள் உள்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாத வழிபாடுகள், உற்சவங்கள் மிகவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற பிரசித்தி பெற்ற பெருமாள் தலங்களில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்கும். குலதெய்வ பூஜைகள் செய்யவும், காணிக்கை, நேர்த்திக் கடன்கள் செலுத்தவும் இந்தமாதம் மிகவும்சிறந்தது. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களுள் ஒன்றாக அக்னிபுராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுள் திருமாலை வணங்குவது சிறப்பாகும்.
இன்று புரட்டாசி 4-வது சனிக்கிழமையாகும். இதையொட்டி பெருமாள் தலங்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர் உண்டியல் ஏந்தி கோவிந்தா, நாராயணா, கோபாலா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர்.
தானமாக பெற்ற அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் தலங்களுக்கு நடைபயணமாகச் சென்று காணிக்கை செலுத்துவர். புரட்டாசி மாதத்தில்தான் திருவேங்கட முடையானுக்கு பிரமோற்சவமும் நடைபெறுகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) கருட சேவை நடைபெற்றது.
புரட்டாசி சனியன்றுதான் திருப்பதியில் விஷ்ணு பகவான் சீனிவாசனாக அவதாரம் செய்தார். இதன் காரணமாகவும் புரட்டாசி சனி முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நாளில் பெருமாளை நினைத்து சனிக்கிழமை விரதம் இருக்கும் போது துளசி மற்றும் மலர்களைத் தூவி ஏழுமலையான் குறித்த திவ்ய பிரபந்தப் பாடல்களைப் பாட வேண்டும். காலையில் ஏற்றும் தீபம் மாலை வரை எரியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். நாளை மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நைவேத்யம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்ய வேண்டும். இதனால் கிரக ரீதியிலான தோஷங்கள் விலகும்.

புரட்டாசி மாத விரத வழிபாடு எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை கீழே பார்க்கலாம்.
ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் (அக்டோபர் முதல்வாரம்) கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.
பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை (இவ்வாண்டு அக்.5,13) இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம்.
தைரியம், செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த விரத பூஜை நடத்தப்படுகிறது.

நவராத்திரிக்கு விரதமிருந்து வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
நவராத்திரி கன்னி பெண்களை கவுரவித்து அவர்களுக்கு புதிய ஆடை பரிசளிப்பது பெரும்பலனை அளிக்கும். அதுபோல் நவராத்திரியில் குழந்தை வடிவமாய் அருள் புரியும் அம்பிகை அவள் கொலுவிற்றிருக்கும் கொலுவை காண குழந்தைகளை தன் வசம் இழுக்கிறாள்.
வரும் குழன்தைகளை ஒவ்வொரு தெய்வமாக மதித்து உபசரித்து அனுப்புதல் வேண்டும். நவராத்திரியில் அம்பிகையை வணங்கி பெண்கள் மட்டும் விரதமிருக்க வேண்டும் என்று இல்லை. ஆண்களும் நவராத்திரி விரதமிருந்து அம்பிகையின் அருளை பெறலாம். நவராத்திரி விரதம் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்க கூடியது.
நவராத்திரி வழிபாடும் சிறப்பான பலன்களும்:
* நவராத்திரி நாட்களில் வீடுகளிலும் ஆலயங்களிலும் இரவு ஏழு மணி முதல் ஒன்பதரை மணி வரை தேவியை வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
* நவராத்திரி தினங்களில் கன்யா பூஜை செய்தால் சகல செல்வங்களையும் பெறலாம்.
* நவராத்திரி தினங்களில் பகல் பொழுதில் சிவபெருமானை வணங்கி ஆயிரெத்தெட்டு சிவ நாமாவளிகளை ஜெயித்தால் அளவில்லா பலன்கள் கிட்டும்.
* அம்பிகை இசை பிரியை. எனவே தினமும் அம்பிகையை ஒரு பாட்டாவது பாடி வணங்குதல் வேண்டும்.
* நவராத்திரி ஒன்பது தினங்களில் வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினம். அன்றைய தினம் ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுபாவாடை தானம் செய்வது நல்லது.
* நவராத்திரி நாளில் சப்தமி திதியன்று ஹயகிரிவிரை வணங்குதல் வேண்டும்.
* விஜய தசமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் வன்னி மரத்தடியில் பெருமாளை எழுந்தருள செய்து பூஜை செய்வார்கள். அதில் கலந்து கொண்டு வழிபட்டால் கிரக தோஷம் விலகி விடும்.

ஜேஷ்டா நட்சத்திர பூஜையை நவராத்திரி ஜேஷ்டா நட்சத்திரத்திலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு ஜேஷ்டா நட்சத்திரத்தன்றும் செய்வது நல்லது.
நவராத்திரியில் வரும் ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி விரத பூஜை மிகவும் விசேஷமானதொரு பூஜையாகும். மூல நட்சத்திரத்திற்கு முதல் நாள் கேட்டை நட்சத்திரம் அன்று ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி விரத பூஜை செய்யலாம்.
சாதாரணமாக இந்த லட்சுமி பூஜை படம், படி அரிசி, குத்து விளக்கு, இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும். இதனால் வறுமை அகலும் என்பது ஐதீகம். அன்று சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். மகாலட்சுமியை குறித்து சொல்லும் சுலோகங்கள், அக்ஷ்டோத்திரம், சகஸ்ர நாமம் சொல்லி குங்குமம், புஷ்பம், அட்சதைகளினால் அர்ச்சிக்கலாம். சகஸ்ர அர்ச்சனை மிகவும் விசேஷம்.
இந்த ஜேஷ்டா நட்சத்திர பூஜையை நவராத்திரி ஜேஷ்டா நட்சத்திரத்திலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு ஜேஷ்டா நட்சத்திரத்தன்றும் செய்வது நல்லது. காலையில் பூஜை செய்து விட்டு மாலையிலும் நெய் விளக்கேற்றி லட்சுமி ஹ்ருதயம், நாராயண ஹ்ருதயம் படிக்க வேண்டும்.
கடைசியில் சொடல் வைத்து ஆரத்தி எடுத்து விட்டு லட்சுமி நாராயண ப்ரீத் யாதம் என்று சொல்லி கிருஷ்ணா பணமஸ்து செய்ய வேண்டும். இப்படியாக ஒரு வருடம் வரும் ஜேஷ்டா நட்சத்திரங்களிலோ அல்லது இவ்வளவு நட்சத்திரங்கள் செய்வதாகவோ மனதில் நினைத்துக் கொண்டு செய்யலாம். ஜேஷ்டா நட்சத்திர காலத்தில் லட்சுமி பூஜை செய்வதும், லட்சுமி ஹ்ருதயம், நாராயண ஹ்ருதயம் படிப்பதும் வறுமை அகன்று செல்வம் பெருகும் என்பது பொருள்.
சாமுத்ரிகா லட்சணப்படி சகல விதமான அழகும் பொருந்தியவள் ஸ்ரீமகாலட்சுமி. அதனால் லட்சணங்கள் பொருந்தியவள் லட்சுமி என்று கூறுவர்.
அதுமட்டுமல்ல மிக அழகானப் பெண்களை ‘‘பெண் மகாலட்சுமி மாதிரி அழகாக இருக்கிறாள்’’ என்று கூறுவதும் இதனால்தான்.
பொதுவாக மகாலட்சுமி, தம் பக்தர்களுக்கு உலகில் உள்ள சகல சவுபாக்கியங்களை குறைவின்றி கொடுக்கிறாள். அதோடு பேரின்பமாகிய முக்தி, மோட்சம் எனும் வீடுபேற்றினைப்பெற அவ்வழிகளில் முன்னேறும் பக்தர்களுக்கு மோட்ச இன்பத்தையும் அவரவர்களுக்கு ஏற்றவாறு, அவரவர் தகுதிக்குத் தக்கவாறு அள்ளி அள்ளித்தரும் வள்ளலாகத் திகழ்கிறாள்.

இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள்.
அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும், ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக அன்னையை வழிபடக்கூடிய நவராத்திரி விழா முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிவபெருமானை தரிசிக்க ஒருநாள் சிவராத்திரி என்பதைப் போல், அம்பாளை வழிபட சிறந்த ஒன்பது நாட்கள் இந்த நவராத்திரி விழாவாகும். புரட்டாசி மாதத்தின் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 10–வது நாளான தசமி அன்று விஜயதசமி விழாவாகும்.
மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். பெரும்பாலும் கோவில்களில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். அவற்றை பிரம்மோற்சவ விழா என்று அழைப்பார்கள். அதுபோல் வீட்டில் 10 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஒரே விழாவான நவராத்திரி விழா, வீடுகளில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் என்று கூறினால் அது மிகையாகாது.
சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங்களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே சக்தி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது. இதில் சாரதா நவராத்திரி அனைவரும் கொண்டாடும் தனிச்சிறப்பு பெற்றது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்ய வேண்டும். முதல் மூன்று நாட்களில் துர்க்கையை மகேசுவரி, கவுமாரி, வராகியாகவும், இடை மூன்று தினங்களில் லட்சுமிதேவியை மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை சரஸ்வதி, நரசிம்கி, சாமுண்டியாகவும் முறையாக விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.
லட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அடையும் பொருட்டு ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு. அதன் காரணமாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதாகவும் கூற்று உள்ளது. நவராத்திரி விழாவை வைணவர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இதேபோன்று நவராத்திரி பற்றி பல கதைகள் உலவுகின்றன.
இந்தியா மட்டுமின்றி இலங்கை உள்பட ஆசிய நாடுகள் மற்றும் உலகில் உள்ள மக்களால் எங்கும் நவராத்திரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களில் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. இதன் தத்துவம் தாமச குணம், ரஜோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களையும் குறிக்கும். முதல் இரண்டு குணங்களைக் கடந்து சத்துவ குணத்தை அடையும் வழியையே இந்த நவராத்திரி கொலுப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக இந்திரன், விருத்திராசுரனை அழித்தார் என்று புராணம் கூறுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய பலனை அடையலாம் என்றும் கூறுகிறார்கள். இவ் விரதம் இருப்பவர்கள் வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று பலன்களையும் அடைவார்கள்.
இந்த விரதம் பெண்களுக்கே உரியதாகும். அனைத்து வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்களும் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயனாகும். அதே போல் இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள். மூத்த சுமங்கலி பெண்கள் மன மகிழ்ச்சியையும், மன நிறைவையும் பெறுவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும்.

பெண்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து கருட பஞ்சமி விரதத்தை கடைபிடித்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர்.
கருடன் பஞ்சமியில் பிறந்ததாலும், ஆவணி மாதம் வளர்பிறையில் பஞ்சமி அன்று அமிர்தத்தைக் கொண்டு வந்ததாலும், அன்றைய தினம் ‘கருட பஞ்சமி’ ஆனது.
சுமங்கலி பெண்கள் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து விட்டு தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்கள் கொண்ட கோலங்கள் போட வேண்டும்.
நடுவில் ஒரு பலகை போட்டு அதன் மேல் வாழை இலையை விரித்து பச்சரிசியை கொட்டி வைத்து நமது சக்திக்கு ஏற்றப்படி வெள்ளி, தாமிரம் அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் உருவம் செய்து அரிசியின் மேல் வைக்க வேண்டும். பாம்பின் படத்தின் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பத்து முடியுள்ள நோன்பு கயிற்றை கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பெண்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறி, சகல விதமான செல்வங்களையும் அடைவர். இந்த பூஜை செய்வதால் நாகதோஷம் நீங்கும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.
இன்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது மிகவும் நல்லது.
‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக போற்றப்படுகிறார். ‘வேங்’ என்றால் ‘பாவம்’ ‘கடா’ என்றால் ‘தீர்த்து வைக்கும் சக்தி’ என்று பொருள். ஆதலால் திருப்பதிக்கு ‘வேங்கடாச்சலம்’ என்ற பெயர் வந்தது.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீவேங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார்.
ஏழுமலையான் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கு வந்த கதை தெய்வாம்சம் மிக்கது. ஒருமுறை முனிவர்கள் எல்லோரும் கூடி கங்கை நதி கரையில் யாகம் ஒன்றை நடத்த திட்டமிட்டனர். அப்போது அங்கே நாரதர் தோன்றி ‘மும்மூர்த்திகளில் யார் பெரியவர்’? யாருக்கு ‘அவிர்பாகம்’ கொடுப்பீர்கள்? என்று கேட்டார். இது முனிவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர்கள் பிருகு முனிவரிடம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படி கேட்டுக்கொண்டனர். பிருகு முனிவர் மும்மூர்த்திகளை தேடிச் சென்றார்.
முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு பிரம்மா வேதத்தை ஓதி கொண்டிருந்தார். இன்னொரு வாயினால் நாராயண நாமத்தை உச்சரித்துக்கொண்டு இருந்தார். பிருகு முனிவரை கவனிக்கவில்லை. அடுத்ததாக கயிலாயத்துக்கு சிவனை காணச்சென்றார் பிருகு முனிவர். அங்கு சிவன் தியானத்தில் இருந்தார். பிருகு முனிவரை கவனிக்க முடியாமல் போய்விட்டது.
ஆகவே முனிவர் வைகுண்டத்தை நோக்கி சென்றார். அங்கு மகாவிஷ்ணு திருமகளுடன் இருந்தார். பிருகு முனிவரை வரவேற்கவில்லை. ஆத்திரம் அடைந்த பிருகு முனிவர், விஷ்ணுவின் மார்பு மீது தன் காலால் உதைத்து விட்டார். விஷ்ணு கோபப்படவில்லை. மாறாக வாஞ்சையுடன் பிருகு முனிவரின் காலை வருடினார்.
பிருகு முனிவரின் செயலால் ஆத்திரமடைந்த திருமகள், திருமாலின் செய்கையால் மேலும் ஆவேசமடைந்து அவரை பிரிந்து வைகுண்டத்தை விட்டு பூலோகம் வந்து விட்டாள். திருமகளை விட்டு பிரிந்து இருக்க முடியாத மகா விஷ்ணுவும், வைகுண்டத்தை விட்டு கீழே இறங்கி சேஷசலத்தை (திருமலை) தன் இருப்பிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். இது விஷ்யோத்தர மஹாத்மியத்தில் உள்ள கதையாகும்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும்.
பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.
மகாளய அமாவாசை அன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் நம் முன்னோர்கள் நம்மை வாழ்த்துவார்கள். நம் முன்ஜொன்ம பாவங்களும் நீங்கும்.
மகாளய அமாவாசை (புரட்டாசி) இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை மகாளய அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.
இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு காலமாக பிரித்துள்ளனர். அதில் தை முதல் ஆனி மாதம் வரை பகல் காலம். இதை “உத்தராயண காலம்” என்றும், ஆடி முதல் மார்கழி வரை இரவு காலம். இதை “தட்சணாயன காலம்” என்றும் அழைக்கப்படுகிறது.
புராணப்படி உத்தராயண காலம் என்பது தேவர்களின் பகல் நேரம். தட்சணாயன காலம் எனப்படும், அதாவது இரவு காலத்தில் தேவர்கள் உறங்குவதாகவும், இதனால்தான் நரகாசுரன், மஹிஷாசுரன் போன்ற அசுரர்களின் அட்டகாசம் அதிகமானதாகவும் அவர்களை தேவர்களால் எதுவும் செய்ய முடியாமல் அவதிப்பட்டார்கள் எனவும், இதனால்தான் இந்த மாதங்களில் அம்மனும், கிருஷ்ணரும் தேவர்களை காப்பாற்ற அவதாரம் எடுத்து வந்ததாக புராணம் சொல்கிறது.
துஷ்டசக்திகளின் அட்டகாசத்தால் பூலோகவாசிகளுக்கு பிரச்னை உருவாகும் என்பதால்தான் ஆடி மாதம் பித்ருக்கள் மற்றும் முன்னோர்களுக்கு உகந்த மாதமாக அமைத்து அவர்களின் குடும்பத்தை துஷ்டசக்திகளிடம் இருந்து காக்க அவர்களை பூலோகத்திற்கு அனுப்பி வைப்பதாக கருட புராணம் சொல்கிறது.
மகாளய (புரட்டாசி) அமாவாசையில் பித்ருக்களை நினைக்க வேண்டும்
சூரியனை பிதுர்காரகன் அதாவது தந்தையின் நிலை, தந்தை வழி முன்னோர்களை அறிவது, என்றும் சந்திரனை மாதுர்காரகன் அதாவது தாயின் நிலை, மற்றும் தாய் வழி முன்னோர்களை அறிவது என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. அமாவாசையில் முன்னோர்களை வணங்கினால் நன்மை ஏற்படும். அதிலும் புரட்டாசி அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு. ஒரு குடும்பத்தை சார்ந்த இறந்து போன முன்னோர்கள், தம் குடும்பத்தினரின் வம்சம் செழிக்க அருள் தரட்டும் என்ற எண்ணத்தில் இறைவன், புரட்டசி மாதத்தில் முன்னோர்களின் ஆத்மாக்களை பூமிக்கு அனுப்பி வைக்கிறார் என்கிறது புராணம்.
கந்தனுக்கு உகந்த கார்த்திகை விரத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.
முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் கிருத்திகை. ஒவ்வொரு மாதத்திலும் வரும் கிருத்திகை நட்சத்திரமன்று முருகப் பெருமானை நினைத்து வழிபடுவார்கள்.
அன்றைய தினம் விரதம் மேற்கொள்வதால் முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்றைய தினம் முருகன் கோவில்களில் விசேஷ ஆராதனைகள் நடைபெறும். அந்த தினத்தில் வீட்டிலும் முருகப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் இருக்கும் படத்தை வைத்து மாங்கனி நைவேத்தியம் படைத்து, கந்த கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
மேலும் கந்தனுக்கு பிடித்த கந்தரப்பம், பருப்பு பாயாசம், நைவேத்தியம் செய்து வழிபட்டால் 12 கரங்களை கொண்ட வேலன் வரங்களை அள்ளித் தருவான். ஆடி மாதம் வரும் கார்த்திகை மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் அன்னதானம் செய்வது நல்லது.
விஜயதசமி நாளில் விரதமிருந்து வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
மகிஷன் என்னும் அசுரன், பிரம்மதேவரை நோக்கி தவம் இருந்தான். இதையடுத்து அவன் முன் தோன்றினார் பிரம்மன். அவரிடம், அழிவில்லாத வரத்தைக் கேட்டான் மகிஷன். அதற்கு பிரம்மன் மறுக்கவே, பெண்ணால்தான் அழிவு வரவேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான்.
பெண்கள் மென்மையானவர்கள். எனவே அவர்களால் நமக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் மகிஷன் அந்த வரத்தைக் கேட்டுப் பெற்றிருந்தான். வரம் கிடைத்ததும் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். அவர்கள் விஷ்ணுவிடம் தங்கள் நிலையை எடுத்துரைத்தனர்.
விஷ்ணுவோ, ‘மகிஷனுக்கு பெண்ணால்தான் ஆபத்து என்ற நிலை இருக்கிறது. எனவே பராசக்தியிடம் போய் வேண்டுங்கள்’ என்று அனுப்பிவைத்தார். இதையடுத்து அனைவரும் பராசக்தியை நோக்கி தவம் இருந்தனர். அவர்களுக்கு அன்னை காட்சி கொடுத்தாள். அவளிடம் தேவர்கள் தங்கள் துன்பத்தைக் கூறியதுடன், அவர்களுக்கு உதவும் பொருட்டு, அசுரனுடன் போருக்கு தயாரானாள் அம்பிகை.
சிவபெருமான், அன்னைக்கு சூலத்தை வழங்க, விஷ்ணு பகவான் சக்கரத்தை கொடுத்தார். அக்னி தனது சக்தியையும், வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள்.
போர்க்களம் புகுந்ததும் தன் முன் நின்ற மகிஷனைப் பார்த்து அன்னைக்கு இரக்கம் ஏற்பட்டது. அவனைக் கொல்வதை விடுத்து முதலில் பாசத்தை வீசி தன் வசப்படுத்த நினைத்தாள். ஆனால் அது முடியாமல் போனது. ஏனெனில் தீயவை எதுவும் நல்லதை விரும்பாது. என்ன செய்தாலும் அது தீவினையை மட்டுமே சார்ந்திருக்கும். அதற்கு அழிவு மட்டுமே முடிவு என்பதை உணர்ந்து கொண்ட அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10–ம் நாளில் மகிஷாசுரனை அழித்தாள். அப்போது தேவர்கள் அனைவரும் மேலுலகில் நின்று பொம்மை போல் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் இருந்துதான் கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று நிலவுகிறது.
எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். அந்த வெற்றியை தந்தருளும் நாளாக விஜயதசமி தினம் திகழ்கிறது. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந் நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது அனைவரது நம்பிக்கை. படிப்பு மட்டுமில்லாமல் சுப விஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.
பொதுவாக கோவில்களில் வில்வம், வேம்பு, அரச மரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னி மரத்தை வலம் வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது.
அவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னி மரம் ஒன்றின் கீழ் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் விரதமிருந்து வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும்.
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும்.
சக்தியை, முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்ட மாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்தவள் என்பதால் சாமுண்டா எனவும் அழைப்பர். கோபம் கொண்டவளாக காட்சியளிக்கும் இந்த அன்னையின் கோபம் மற்றவர்களை திருத்தி நல் வழிப்படுத்தவே ஆகும். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம்.
இரண்டாம் நாளில் அன்னையை வராகி தேவியாக வழிபட வேண்டும். வராகி (பன்றி) முகமும் தெத்துப்பற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்துப்பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளுக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம். தயிர் சாதம் நிவேதனம் சிறந்தது.
மூன்றாம் நாளில் சக்தித் தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாகேந்தரி, சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரி பாலனம் செய்பவளும் இவளே ஆகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளது அருட்பார்வை கட்டாயம் வேண்டும். மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள்புரிபவளும் இந்த அன்னையே ஆவாள். வெண் பொங்கலை நைவேத்தியம் செய்யலாம்.
நான்காம் நாளில், சக்தித் தாயை, வைஷ்ணவி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை தன் கையில் கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன் ஆகும். எலுமிச்சை சாதத்தை அன்னைக்கு நைவேத்தியமாக படைப்பது நலம் தரும்.
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள். அளக்க முடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற இந்த அன்னையின் அருள் அவசியம் வேண்டும். புளியோதரை நிவேதனம் சிறந்தது.
ஆறாவது நாளில் அன்னையை கவுமாரி தேவியாக நினைத்து வழிபடவேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் கையில் ஏந்தியவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கி விடுபவள். வீரத்தை தருபவள். தேங்காய் சாதம் படைத்து வழிபட வேண்டும்.
அன்னையை ஏழாம் நாள் அன்று மகா லட்சுமியாக கருதி வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள். இந்த அன்னையை வேண்டினால் அனைத்து செல்வங் களும் வந்து சேரும். கல்கண்டு சாதத்தை நிவேதனம் செய்யுங்கள்.
எட்டாம் நாள் அன்று அன்னையை, நரசிம்கி ஆக வழிபாடு செய்ய வேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம்.
கடைசி நாளான ஒன்பதாம் நாளன்று, அன்னையை பிராக்மி ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூப மானவள். கல்விச் செல்வம் பெற இந்த அன்னையின் அருள் மிகவும் அவசியமாகும். நைவேத்தியமாக அக்கார வடிசலை படைக்கலாம்.
விநாயகரின் அருள் கிடைக்க கடைபிடிக்க வேண்டிய விரத வழிபாட்டு முறைகளை கீழே பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமையும், சனிக்கிழமையும் விநாயகருக்கு உகந்த நாட்கள். அன்றைய தினம் விரதமிருந்து செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி விநாயகரை வணங்க வேண்டும்.
சுக்ல சதுர்த்தசி அன்று விரதமிருந்து அருகம் புல்லை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டால் செயல்கள் பெற்றி பெறும்.
வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வணங்கி நல்லருள் பெறலாம்.
மஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் விரதமிருந்து பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமணக்காலம் விரைவில் வரும்.
நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய்தீபம் ஏற்றிவர பீடைகள் விலகும்.
வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றிவர குடும்பத்தில் வறுமை விலகும்.
சதுர்த்தியன்று அரிசி நொய்யைச் சாதமாக்கி பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளைகளாய் பாவித்துத் தூவ விநாயகர் மகிழ்ந்து குழந்தை வரம் தருவார்.
உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் படிப்பு வர வேண்டும் என்றால் சுக்ல சதுர்த்தி நாளில் குழந்தை பெயரில் விநாயகர் சன்னிதியில் அர்ச்சனை செய்து பென்சில் நோட்டுக்களை 11 குழந்தைகளுக்கு இனிப்புடன் தானம் செய்ய வேண்டும்.
நாக்குப் பிறழாத குழந்தைகளுக்குத் தமிழ் மாதத்தில் 3-ம் செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு இனிப்பு பழங்கள் படைத்து தானம் செய்தால் பலன் கிடைக்கும்.