என் மலர்
முக்கிய விரதங்கள்
வடஇந்தியாவில் பெண்கள் தங்களின் கணவரின் நீண்ட ஆயுள் வேண்டி கடைபிடிக்கும் விரதம் கர்வா சாத் ஆகும்.
கர்வாசௌத் அன்று திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். அதைப் பற்றி பல கதைகள் உண்டு. அந்தக் காலத்தில் பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்ததாகத் தெரிய வருகிறது. சூரியனைப் பார்த்து இன்று நீ மறைய வேண்டாம் என்று சொன்னால் சூரியன் அன்று மறையாமல் இருந்ததாக சொல்கிறார்கள்.
பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள். இப்படி பல கதைகள் உள்ளன. கதைகள் பலரை ஊக்குவிப்பதற்காக சொல்லப் பட்டன. ஒரு பெரிய நல்ல காரியத்துக்காக சொல்லப்பட்டன. எனவே கர்வா சௌத் என்பது இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு இன்றியமையாத பண்டிகையாகும்.
திருமணமான இந்து பெண்கள் தங்கள் கணவனின் நலன் வேண்டி ஒரு நாள் முழுவதும் விரதம் இருக்கும் தினமே 'கர்வா சாத்’ ஆகும்.
இது இந்தியாவின் வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தேய்பிறை தொடங்கிய நான்காவது நாளில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை ' கிருஷ்ண பக்ஷ' என்றும் அழைக்கப்படுகிறது.
திருமணமாகாத பெண்களும் நல்ல கணவன் வேண்டி இந்த விரதத்தை மேற்கொள்வார்கள்.

ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் பாபாங்குசா ஏகாதசி விரதத்தை பற்றியும், கிடைக்கும் பலன்களையும் பார்க்கலாம்.
மாதந்தோறும் வரும் ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவற்றுள் ஐப்பசி மாத ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்த மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியை, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்று அழைக்கிறார்கள்.
ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியான இது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது என்றால் மிகையல்ல. கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், உயர்ந்த தான- தர்மங்கள் முதலானவற்றால் என்ன பலன் உண்டாகுமோ, அவ்வளவு பலன்களையும் இந்த ஓர் ஏகாதசியே கொடுக்கும். இந்த விரதத்தைக் கடைபிடிப்பவர்கள், எம வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறைகள் தெரியாமல், விதிப்படி இல்லாமல், ஊரார் மெச்ச வேண்டும் என்பதற்காகவோ அல்லது கபடமாகவோ கூட இந்த விரதத்தைக் கடைபிடித்தாலும் பலன் கிடைக்கும். அப்படியானால், இந்த விரதத்தை முறைப்படி செய்தால், அதனால் விளையும் நன்மைகளையும், மேன்மைகளையும் சொல்லவும் வேண்டுமா என்ன?
இந்த விரதத்தை கடைபிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம்.

ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லையை அனுபவிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய தேவனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.
நவக்கிரகங்களில் ‘ராஜகிரகம்’ என்று வர்ணிக்கப்படுவது சூரியன். இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களும் வாழ உறுதுணையாக இருப்பவர் சூரியன். அப்படிப்பட்ட சூரியனுக்கு உரிய கிழமையாகக் கருதப்படுவது ஞாயிற்றுக்கிழமையாகும். அன்று விடுமுறைநாள் என்பதால், எல்லோருமே அந்தக் கிழமையில் மகிழ்ச்சியாக இருப்பர்.
ஓய்வு பெற்றுக் கொள்ளும் அந்த நாளில் பிறந்தவர்கள், ஓய்வில்லாமல் உழைப்பவர்களாக விளங்குவர். சுற்றித் திரிவதிலும் பிரியம் கொண்டவர். அலைச்சலுக்கென்றே பிறந்தவர்கள் என்று கூடச் சொல்லலாம்.
ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்று விளங்குபவர்கள், அதாவது சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிறந்திருந்தால் பெற்றேர்களின் முன்னேற்றத்தில் பாதிப்புகள் ஏற்படலாம்.
எனவே, சூரியனுக்கு விரதமிருந்து பரிகாரம் செய்து கொள்வது நல்லது. ஐப்பசி மாதம் சூரியன் நீச்சம் பெறுகிறார். எனவே, அந்த மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகளைச் சந்திப்பர். அவர்களும் விரதமிருந்து பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

அனந்த விரதம் கடைபிடிக்கும் முறையும், இந்த விரதம் அனுஷ்ப்பதால் கிடைக்கும் பலன்களையும் கீழே பார்க்கலாம்.
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தை பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்ய வேண்டும். இவற்றில் பதினான்கை, ஏழைகளுக்குத் தந்து தாம்பூலம் மற்றும் தட்சணை அளிக்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும். பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத அளவுக்கு செல்வங்கள் வந்து சேரும்.

புரட்டாசி பவுர்ணமி (15.10.2016) தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள்.
புரட்டாசி மாதத்தில் நவராத்திரியில் அன்னை கொலு விருந்து 10-வது நாள் விஜயதசமி அன்று மகிஷனை வதம் செய்தாள்-. அதனால் எழுந்த கோபத்தினால் அன்னை உக்கிரமாக இருந்தாள்.
பவுர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றித் துதித்தனர். அதன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பவுர்ணமியில் சாந்த சொரூபிணியாக அன்னை காட்சி அளித்தாள். நவராத்திரி விரதமிருப்பவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.
மகாளயபட்சம் நாளை ஆரம்பமாவதால் பித்ருக்கள் சந்திரனின் அமுத பானத்தைப் பருகத் தயாராக இருப்பார்கள். அத்துடன் தங்களின் சந்ததியினர் கொடுக்கும் தர்ப்பனங்களையும் ஏற்றுக் கொள்ள காத்திருப்பார்கள்.
புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினிடைய அமுதமாய் விளங்குவாள். இதனால் அன்னைக்கு ‘சந்திர மண்டல மத்யகா’ என்ற திருநாமம் உண்டு. ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு இரவு காலம். இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும்.
நடுநிசியான புரட்டாசி மாதத்தின் பவுர்ணமி என்பது அம்பிகையின் பிரகாசம் ஆகும். இந்தக் கோடி சந்திர பிரகாசத்தை சவுந்தர்ய லஹரியில் அம்பிகையின் சவுந்தர்யத்தை “உன்னுடைய புன்முறுவல் அமுதம் போன்றது. உன் முகமாகிய சந்திரனிடமிருந்து பெருகும் அந்த அமுதம் போன்ற நிலவுக் கதிர்களை உண்ணும் பறவைகளுக்கு அந்த அமுதத்தின் தித்திப்பு திகட்டவே அவற்றை அலகுகள் உணர்ச்சி இழந்ததாக ஆகிவிட்டன.
ஆகையால் அப்பறவைகள் ருசி மாற்றம் வேண்டி புளிப்பில் ஆசை கொண்டு குளிர்ந்த கதிர்கள் கொண்ட சந்திரனின் நிலவாகிய அமுதப் பெருக்கைப் புளித்த கஞ்சு என்று எண்ணி வேண்டிய மட்டும் இரவு தோறும் நிறைய பருகுகின்றன” என்று ஜகத்குரு ஆதிசங்கரர் கூறியிருப்பதாக தெய்வத்தின் குரலில் மகா பெரியவர் குறிப்பிட்டுள்ளார்கள்.
புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.
இந்நாளில் விரதம் இருப்பவர்கள் இரவில் குறைவான எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஆகாரத்தை உண்ண வேண்டும். இவ்வாறு உண்டால் நள்ளிரவில் தியானம் செய்வதற்கும், பிராணாயமம் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும். இந்தச் சக்தியை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும். இப்படிபட்டவர்களுக்கு நல்ல தேஜசும் நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தியும் கிடைக்கும். இவர்கள் எந்த காரியத்தைத் தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.
கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு.
ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார். சனியின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி அமர்ந்தார்.
இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனியின் தலைமீது வைத்தார். பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி, தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி.
அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.

ஸ்ரீபாலாஜிக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம் தான். அதிலும், சனிக்கிழமை தான் தனக்கு உகந்த நாள் என்கிறார்கள்.
புரட்டாசி மாதம் என்றாலே கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி பாடல் பரவச ஒலி தான் பெருமாள் பக்தர்களின் வீடெங்கிலும் தேவகானமாக பரவும். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் ஆடை உடுத்தி, திருநாமம் தரித்துக்கொண்டு பெருமாளை மனதிலே நினைத்து வழிபடுவார்கள்.
சிலர் தான் நினைக்கும் காரியம் நல்லபடியாக நிறைவேறி விட்டால் திருப்பதிக்கு வருகிறேன் என்றும், இன்னும் சிலர் திருப்பதிக்கு வந்து மொட்டை போடுகிறேன் என்றும் அவர்களால் இயன்ற வேண்டுதல்களை நினைத்து காசை மஞ்சள் துணியில் முடிந்து வைப்பர்.
சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில் தான் திருவேங்கடமுடையானுக்கு பிரமோத்சவமும் நடைபெறுகிறது.
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில். ஆனால் ஸ்ரீபாலாஜியோ, எனக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம் தான். அதிலும், சனிக்கிழமை தான் தனக்கு உகந்த நாள் என்கிறார் தம் பக்தன் ஒருவனுக்கு அருள் புரிந்த கதையின் மூலமாக அந்த கதை வருமாறு:--
மன்னன் தொண்டைமானுக்கு மலையப்பன் மீது மாசிலா காதல். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன் மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான். இவ்விதம் பூஜை செய்து வரும் வேளையில் ஒரு நாள் பொன்மலர்களுக்கு இடையே மண் மலர்களும் வந்து விழுவதை கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண் மலர்கள் தானா என கூர்ந்து நோக்கினான். அவை மண் மலர்களால் தான் என்பதை மீண்டும், மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன.
கதவுகள் அனைத்தும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையை தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான். குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.
பிறவிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் கடவுள் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும், அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார். பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம்.
பீமய்யாவும், தனக்கு கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் மாலவனின் உருவத்தை வடித்து மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். பிரதி வாரம் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யா, பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான்.
இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும்போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களிமண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகிவிட்டது.
இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒரு நாள் அபூர்வ கனவொன்றை கண்டான். அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, தமது பக்தன் பீமய்யா செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்த பூஜையை நீயும் சென்று பார், அப்போது உண்மை விளங்கும் என்று கூறி மறைந்தார்.
தொண்டை மானும், திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யா செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனிக்கலானான். அனுதினமும் செய்வது போலவே பீமய்யா தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலையருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களை தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டை மன்னன்.
உடன் பீமய்யாவை சென்று கட்டித்தழுவிய தொண்டை மான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி, உனது வழிபாட்டை திருமால் ஏற்றுக்கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றான். இதற்கிடையில் அந்த பரந்தாமன் பீமய்யாவின் கனவில் தோன்றி உன் பக்தியின் பெருமையை என்று பிறர் கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்து கொள்வேன் என கூறியிருந்தார்.
அதன்படியே தொண்டை மான், பீமய்யாவின் பக்தியை பாராட்டியதை கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது. பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழு மலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

கல்வி கடவுள் சரஸ்வதி தேவி ஞானத்தின் பிறப்பிடம் அவளை வணங்கி ஞான தெளிவை பெறுவோம்.
நவராத்திரி விழா ஒன்பது நாட்களும் இந்தியா முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இதில் முதன் மூன்று வீரத்தின் அடையாளமாய் துர்க்கையையும் அடுத்த மூன்று நாள் செல்வத்தின் அடையாளமாய் லட்சுமியையும் கடைசி மூன்று நாள் கல்வியின் வடிவமாய் திகழும் சரஸ்வதியையும் வணங்கி வழிபடுகிறோம்.
கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை கொண்டு பண்டிகை முடிவதால் அந்த பண்டிகை நாளை சரஸ்வதி பூஜை என்றவாறு அனைத்து மக்களும் கொண்டாடுகின்றனர். கல்வி கேள்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி கலைமகளை வணங்கிடும் நன்னாளே சரஸ்வதி பூஜை.
கல்வியோடு நாம் செய்யும் தொழிலும் இருகண்கள் ஆக திகழ்கின்றது, அதனாலேயே அன்றைய தினம் தொழில்களையும் வணங்கி மகிழ்கிறோம்.
அனைத்து விதமான பண்டிகைகளையும் நாம் பல பெயர்களில் கொண்டாடி மகிழ்ந்தாலும் பூஜை என்ற கனடா மொழியுடன் கொண்டாடப்படும் பண்டிகை சரஸ்வதி பூஜை மட்டுமே அத்தனை சிறப்பு பெற்றதே சரஸ்வதி பூஜை.
சரஸ்வதி பூஜையின் சிறப்பு :
ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் கொண்டாடி இறைவனை வணங்க பூஜை செய்கிறோம். ஆனால் அந்த பண்டிகையின் பெயருடன் பூஜை என்ற சொல் சேர்ந்து வருவதில்லை.
ஞான கடவுளான சரஸ்வதியை வணங்கும் பூஜைக்கு மட்டுமே சரஸ்வதி பூஜை என்று பெயர். அதற்கு காரணம் பூஜா என்ற வார்த்தையில் பிறந்ததே பூஜை என்றசொல், அதில் பூஜா என்பதில் உள்ள பூ-பூர்த்தியையும், ஜா என்பது உண்டாக்குவது நாம் செய்யும் பூஜை என்பது நமக்குள் ஓர் ஞான பூர்த்தியை ஏற்படுத்த வேண்டும். மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை-யை அகற்றி ஞானத்தை உண்டாக்க செய்வதே பூஜை. அத்தகைய ஞானத்தை தருபவளான சரஸ்வதிக்கு மட்டுமே பூஜை என்ற மொழி சேர்ந்து வரும்.
சரஸ்வதி தேவியை வழிபடும் முறை :
வீட்டில் மற்றும் அலுவலகங்களில் சரஸ்வதி தேவியை வணங்கி பூஜைகள் செய்வர், பெரும்பாலும் அலுவலகங்களில் யாகம் செய்து பெரும் பூஜையாக மேற்கொள்கின்றனர். வீட்டிலும் அது போல் முறைப்படியான பூஜைகள் மேற்கொள்ளலாம்.
அது முடியாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று வழிபாட்டிற்குரிய இடத்தில் சரஸ்வதி படம் (அ) அவர் முக உருவம் வைத்து அலங்கரித்து வழிபாடு செய்யலாம்.
சரஸ்வதிக்கு அருகம்புல் மற்றும் மலர்மாலை சார்த்தி மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும் நவராத்திரி முழுவதும் விரதமிருந்து அன்னையை வணங்காதவர்கள் கூட சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதியை வணங்கினால் போதுமானது. கலசம் வைத்து கலைவாணியே எழச்செய்தும் பூஜைகளை மேற்கொள்ளலாம்.
சரஸ்வதி படத்திற்கு அலங்காரம் செய்த பின் ஐந்து முக குத்து விளக்கினை ஏற்றி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து தலைவாழை இலையில் பழங்கள், அவல், பொறிகடலை போன்றவை வைத்து ஓம் கணேஷாய நமஹ என்றும் ஓம் துர்க்கா லட்சுமி சரஸ்வதீப்யோ நம என்றும் கூறி பூஜையை தொடங்க வேண்டும். சரஸ்வதிஸ்தோத்திரம் மற்றும் ஆராதனை பாடல்களை பெரியவர்களும், குழந்தைகளும் ஒரு சேர சொல்லி பின் அவளுக்கு பிடிதத நைவைத்தியமான பால்பாயாசம், வெள்ளைகடலை சுண்டல், பொங்கல் போன்றவை வைத்து கற்பூர தீபாரதனை செய்திட வேண்டும்.
சரஸ்வதி தேவியின் படத்தின் முன் நமது வீட்டின் கணக்கு புத்தகங்கள், எழுதுகோல், குழந்தைகளின் பாடபுத்தகங்கள் அவசியம் வைத்து வணங்குதல் வேண்டும்.
அன்றைய தினம் தங்களால் இயன்ற கல்வி சார்ந்த பொருட்கள், பேனா, நோட்டு புத்தகம், புத்தகங்கள், படிப்பதற்கான பணஉதவி போன்றவைகளை தானாமாக வழங்கலாம்.
சரஸ்வதி பூஜை முடிந்த பின் மறுநாள் காலை மறுபடியும் சரஸ்வதி தேவியின் முன் புதிய இலையில் வெற்றிலை பாக்கு, பழம், பொறிக்கடலை வைத்து பூஜை செய்த பின் தான் படத்தை எடுக்க வேண்டும். முகம் மற்றும் கலசம் வைத்திருந்தால் எடுத்து நீர் நிலைகளில் கறைதது விடலாம்.
சரஸ்வதி தேவியை வணங்க ஏற்ற பூக்கள் :
சரஸ்வதி தேவி வெண்மை நிறத்துடன் இருப்பவர், அதனால் வெண்தாமரை, மல்லி, முல்லை, இருவாட்சி, சம்பங்கி போன்ற பூக்கள் அவளுக்கு ஏற்ற பூக்களாய் உள்ளன. அலங்கரித்த சரஸ்வதி உருவமாய் இருப்பின் முத்துமாலை அணிவித்த பூஜை செய்யலாம். சரஸ்வதி தேவி ஞானத்தின் பிறப்பிடம் அவளை வணங்கி ஞான தெளிவை பெறுவோம்.

செவ்வாய் தோஷம் காரணமாக சிலருக்கு திருமணம் நடைபெறக் காலதாமதம் ஏற்படக்கூடும். அவர்கள் 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
செவ்வாய் தோஷம் காரணமாக சிலருக்கு திருமணம் நடைபெறக் காலதாமதம் ஏற்படக்கூடும். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகும். செவ்வாய் தோஷ பரிகாரங்கள் பல வகைகளில் செய்யப்படுகின்றன.
செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். விரதநாள் அன்று அதிகாலை எழுந்து நீராடி சிவந்த ஆடை உடுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
விரதம் பூர்த்தி செய்யும் நாள் ஐந்து பேருக்கு விருந்து அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிவப்பு நிறத்தில் ஆடைகள், செம்புச் சொம்பு, தம்ளர் மற்றும் தாம்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசிபெற வேண்டும்.
செவ்வாய் தோஷமுள்ள பெண்ணுக்கு திருமணம் தடங்கலாகிக் கொண்டே வந்தால் வளர்பிறையில் வரும் செவ்வாய்க்கிழமையில் பரிகாரம் செய்ய வேண்டும். அந்த பரிகாரத்தை நாமே நம் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நீராடி சிவந்த ஆடை உடுத்தி மாங்கல்யத்தை தெய்வத்தின் முன் மஞ்சள் சரட்டில் கோர்த்து வைத்து வணங்கி எடுத்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.
செவ்வாய்க்கிழமை முழுவதும் மாங்கல்யத்தை அவிழ்க்க கூடாது. மறுநாள் காலை நீராடி நெற்றியில் குங்குமமிட்டு தெய்வத்தை வணங்கி மாங்கல்யத்தை அவிழ்த்து ஏதாவது ஓர் ஆலயத்தின் உண்டியலில் சிறிது காணிக்கை சேர்த்து சமர்ப்பித்து விட வேண்டும். சிவந்த ஆடையை யாருக்காவது தானம் செய்து விட வேண்டும். இவ்விதம் செய்தால் திருமணம் தடையின்றி விரைவாக நடைபெற்று விடும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் காகத்திற்கு ஆலிலையில் வெல்லம் கலந்த அன்னம் வைப்பதும், ஏழைகளுக்கு ஆடைகள் வழங்குவதும், அன்னதானம் செய்வதும் சனிபகவானுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
கன்னியா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதத்தில் தான் சனி பகவான் சனிக்கிழமையில் பிறந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
இந்தக் கன்னியா மாதத்தில் கன்னிகா விருட்சம் தோன்றியது புரட்டாசி மாத முதல்சனிக்கிழமை ஆகும். இத்தினத்தில் சூரியபகவானின் சக்திகளுள் ஒன்றாக விளங்கும் இச்சா சக்தியான உஷா தேவி தன் கணவனாகிய சூரியனை அன்புடன் நோக்கியதால் சூரியனது அருளால் ஓர் குழந்தை உஷா தேவிக்குப்பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சனி என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.
இந்தச் சனியானவன் கிரகப்பதவியை அடைந்ததும் ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட நாழிகை அல்லது வருடம் தன் ஆதிக்கத்திற்குக் கீழ் வரும்படி செய்வார். இதனைத்தான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, பொங்கு சனி என்று பலவாறு சொல்வர். உண்மையில் சனிபகவான் மிகவும் நல்லவர். இவரின் பார்வையில் இருக்கும் பொழுது நீதி, நேர்மையுடன் நடந்தால் நல்லதே செய்வார். அள்ளி, அள்ளி வழங்குவார். தவறான வழியில் சென்றால் தான் தண்டனையும், நோய், நொடிகளையும் கொடுத்து முடக்கி துன்பத்திற்கு உள்ளாக்குவார்.
சனிபகவான் புரட்டாசி சனிக்கிழமையில் பிறந்ததால் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடித்து நவக்கிரகத் தொகுப்பிலிருக்கும் சனி பகவானுக்கு நீல மலர்கள் சாத்தி, எள் விளக்கு ஏற்றி வழிபட்டால் அன்புடன் நம் கோரிக்கையை ஏற்று நல்லது செய்வார்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் அன்று அதிகாலையில் எழுந்து அன்றைய காலைக்கடன்களை முடித்துக் கொண்டு நீராடி, அவரவர்கள் குல வழக்கப்படி நெற்றியில் சமயச்சின்னத்தை- விபூதி, திருமண், சந்தனம், குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை இட்டுக்கொண்டு விநாயகப்பெருமானை வழிபட வேண்டும். பிறகு கருட தரிசனமும், ஆஞ்சநேயர் தரிசனமும் செய்தால் மிகவும் நல்லது. விநாயகரும், ஆஞ்சநேயரும் சனியால் பிடிக்கப்படாதவர்கள் என்பது யாவரும் அறிந்ததே.

துன்பங்களை போக்க நாம் வழிபட வேண்டியது அஜா அல்லது புரட்டாசி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி விரதமாகும். இந்த விரதம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.
முன் வினை காரணமாக நாம் ஏராளமான துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இந்த துன்பங்களை போக்க நாம் வழிபட வேண்டியது அஜா அல்லது புரட்டாசி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி விரதமாகும். வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) புரட்டாசி வளர்பிறை ஏகாதசி தினமாகும். இதனை விளக்கப் புராணத்தில் அரிச்சந்திர மகாராஜா கதை சொல்லப்பட்டிருக்கிறது. அரிச்சந்திர மகாராஜா அரசனாகப் பிறந்து செல்வ போகங்களை எல்லாம் அனுபவித்தார். மனதால் கூட பொய் பேசாமல் சத்தியம் காத்தார்.
இருந்தும் அவரது முன் வினைப் பயனாக அரசுரிமை இழந்தார். அது மட்டுமா? கட்டிய மனைவியை அடிமையாக விற்றார். மகனைப் பறி கொடுத்தார். இத்தனை துன்பங்களும் அவருக்கு முன்வினைப் பயனாக ஏற்பட்டன.
அரிச்சந்திர மகாராஜாவின் நிலை கண்டு மனம் இரங்கிய கவுதம மகிரிஷி, புரட்டாசி மாதம் வளர்பிறை ஏகாதசியில் பெருமாளை வழிபட்டு விரதம் இருப்பதால் கிடைக்கும் நற்பற்பலன்களை எடுத்துக் கூறினார். அரிச்சந்திரனும் அப்படியே செய்ய அவரது முன்வினைகள் அழிந்து, மீண்டும் ராஜ்ஜியமும் சகல வைபோகங்களும் பெற்று வாழ்ந்தார்.
புரட்டாசி மாதத்தில் நாமும் நம்மால் இயன்ற விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். இதனால் இந்த ஜென்மத்து வினைகள், போன ஜென்மத்துப் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபடலாம். அதோடு முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து அவர்களது பசியையும் தாகத்தையும் தீர்த்து அவர்களது ஆசிகளைப் பெறலாம்.

நவராத்திரி விழாவின் 9-ம் நாள் விழா சரஸ்வதி பூஜையாகும். அன்றைய தினம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவின் 9-ம் நாள் விழா சரஸ்வதி பூஜையாகும். அன்றைய தினம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். சரஸ்வதி வழிபாட்டுக்கு முன்னதாக, வழிபாடு செய்யும் இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். சந்தனம் தெளித்து குங்குமம் இட வேண்டும். சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து, குங்குமம் இடுவதும் அவசியம்.
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி அன்னையின், அருள் பார்வையில் படும் படியாக புத்தகங்களை வைத்து முன்பாக வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்ட நிவேதனங்களை வைக்க வேண்டும். சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை சரஸ்வதி தேவிக்கு நிவேதனமாக படைக்கலாம். அவல், பொரி, கடலை, பழங்களும் வைக்க வேண்டும், செம்பருத்தி, ரோஜா, வெண் தாமரை போன்றவை சரஸ்வதி தேவிக்கு உகந்த மலர்களாகும். இவற்றை மாலை தொடுத்து கல்வியின் அதிபதிக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.
எதற்கும் விநாயகரே முழு முதலானவர். மூலப் பரம்பொருள். எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதனை சரஸ்வதி பூஜையில் வைப்பதுடன்,
‘சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சஸிவர்ணம் சதுர்புஜம்!
ப்ரசந்த வதனம் த்யாயேத் சர்வ
விக்நோப சாந்தயே’
என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே, சரஸ்வதிக்கான பூஜையை தொடங்குதல் வேண்டும். சரஸ்வதி பூஜையின் போது ‘துர்க்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம’ என்று கூறி பூஜையை தொடங்குவது நன்மை பயக்கும். பூஜையில் கலசம் வைத்தும் கலைமகளை வழிபடலாம். கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் பலன் கிடைக்கும்.
நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜை செய்ய இயலாதவர்கள், சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினாலே போது மானது. அம்பிகையின் அருள் பூரணமாய் அருளப்படும் என்பதில் எந்தவித ஐயமும் தேவையில்லை.
விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை மரத்தை வெட்டுவது கோவில்களில் வழக்கமாக உள்ளது. ஒரு முறை பண்டாசுரனுடன், பார்வதி தேவி போர் புரிந்தார். பலமுறை போரிட்டும், பார்வதி தேவியால், பண்டாசுரனை அழிக்க முடியவில்லை. இதையடுத்து பார்வதி தேவி, சிவபெருமானை வேண்டினார். அப்போது சிவபெருமான், விஜயதசமியில் போரிடும் படி கூறினார். அதன்படி பார்வதியும், விஜயதசமி தினம் ஒன்றில் பண்டாசுரனுடன் போரிட்டார்.
அப்போது போரில் தோல்வியுற்ற பண்டாசுரன், வன்னி மரத்தில் புகுந்து ஒளிந்துகொண்டான். இதனை பார்த்ததும் பார்வதிதேவி, வன்னி மரத்தை வெட்டி, அதில் ஒளிந்திருந்த அசுரனை சம்ஹாரம் செய்தார். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கப்படலாயிற்று. பண்டாசுரனை அழித்த மாலை வேளையில், இதனை நினைவு கூறும் விதமாக வாழை மரத்தை வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.