என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    சீரடி சாய்பாபாவை வேண்டிக் கொண்டு, வியாழக்கிழமை தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்தால்... நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை சாய் பக்தர்களிடையே சமீபகாலமாக மிக வேகமாக பரவி வருகிறது.
    சீரடி சாய்பாபாவை வேண்டிக் கொண்டு, வியாழக்கிழமை தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்தால்... நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை சாய் பக்தர்களிடையே சமீபகாலமாக மிக வேகமாக பரவி வருகிறது. பாபா ஆலயங்களுக்கு வரும் பக்தர்களில் பலர், “9 வாரம் விரதம் இருந்தேன். என் வேண்டுதல்களை சாய்பாபா நிறைவேற்றி வைத்து விட்டார்” என்று சொல்வதைக் கேட்க முடிகிறது.

    சாய்பாபாவை நினைத்து மேற்கொள்ளும் இந்த விரதம் மிக, மிக எளிதானது. சுலபமாக கடை பிடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இதனால் 9 வாரம் வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.

    ஆனால் 9 வார வியாழக்கிழமை விரத வழிபாடு பற்றி சீரடியில் உள்ள சாய்பாபா ஆலயம் எந்தவித தகவலையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. “விரதம் இருப்பது எப்படி?” என்ற குறிப்புகளையும் சீரடி ஆலயம் வெளியிட்டதே கிடையாது.

    என்றாலும் இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் 9 வார சாய்பாபா விரத கதை புத்தகங்கள் வெளியாகியுள்ளது. எப்படி விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற சிறு, சிறு கையடக்கப் புத்தகங்களும் வெளி வந்த வண்ணம் உள்ளன.

    இந்த விரத கதை எப்படி தோன்றியது? எப்படி உலகம் முழுவதும் உள்ள சாய் பக்தர்களிடம் பரவியது? என்றெல்லாம் தெரியவில்லை. இதையும் பாபா நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாக கருதுகிறார்கள். பக்தர்கள் மத்தியில் பரவியுள்ள அந்த விரத கதை வருமாறு:-

    குஜராத் மாநிலத்தில் ஒரு ஊரில் மகேஷ்-கோகிலா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். மகேஷ் சற்று முரட்டுக்குணம் கொண்டவர். கோபம் வந்து விட்டால் வரை முறை இல்லாமல் பேசுவார்.

    சிடுமூஞ்சியாக இருந்ததால் அக்கம் பக்கத்தினர் அனைவரிடமும் அவர் சண்டையிட்டார். இதனால் அவர் குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் நல்ல உறவு இல்லாமல் இருந்தது. இது மகேஷ் செய்து வந்த வியாபாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    நாளடைவில் அவர் வருமானம் இல்லாமல் தவித்தார். குடும்பத்தில் அமைதியே இல்லாமல் போய்விட்டது. மகேஷ் குணத்தால் குழப்பம் அதிகரித்தது.

    இந்த நிலையில் ஒரு நாள் அவர்கள் வீட்டு முன்பு சாது ஒருவர் வந்து நின்றார். அவர் கோகிலாவிடம், சாதம், பருப்பு கேட்டு வாங்கினார். பிறகு அவர், ஆசீர்வாதம் செய்தார்.

    அப்போது கோகிலா, “என் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் உள்ளது” என்று கூறினார். அவர் கண்ணீர் விட்டதால் இரக்கப்பட்ட அந்த சாது, “சாய்பாபாவை வேண்டிக் கொண்டு 9 வாரம் வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால், நீ நினைத்தது நடக்கும்” என்றார். அதோடு 9 வாரம் வியாழக்கிழமை எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தார்.

    மேலும், “இந்த விரதம் கலியுகத்துக்கு ஏற்ற மிக உன்னதமான அற்புதங்கள் நிகழ்த்தும் விரதம். இந்த விரதத்தை தூய மனதுடன், நம்பிக்கையோடு யார் இருக்கிறார்களோ, அவர்களது அத்தனை ஆசைகளையும் பாபா நிறைவேற்றி வைப்பார். ஆனால் விரதம் இருப்பவர்கள் சாய்பாபா மீது உறுதியான நம்பிக்கையும், பொறுமையும் வைக்க வேண்டியது மிக, மிக அவசியம்” என்றும் தெரிவித்தார்.



    அந்த சாது கூறியபடி கோகிலா 9 வாரம் வியாழக்கிழமை விரதம் இருந்தார். அதன் பிறகே மகேஷ் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டது. அவர் குணம் மாறியது. அவர் கடையில் வியாபாரம் அதிகரித்தது. குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.

    இந்த நிலையில், கோகிலாவின் உறவினர்கள் சூரத்தில் இருந்து வந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகள் ஒழுங்காக படிப்பது இல்லை என்றும் இதனால் தேர்வில் தோற்று விட்டனர் என்றும் கூறி வருத்தப்பட்டனர்.

    அவர்களிடம் கோகிலா தான் மேற்கொண்ட 9 வார வியாழக்கிழமை விரதம் பற்றி கூறி அந்த விரதம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்றார். சூரத் குடும்பத்தினரும் அந்த விரதத்தை கடைபிடித்தனர். 9 வார முடிவில் அவர்களின் குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் காணப்பட்டது.

    இதற்கிடையே சூரத் குடும்பத்தினர் மூலம் தோழி ஒருவர் குடும்பத்தினருக்கு சாய்பாபாவின் 9 வார வியாழக்கிழமை விரதம் தெரிய வந்தது. அவர்களுக்கும் வெற்றி கிடைத்தது. சாய்பாபாவின் 9 வார வியாழக்கிழமை விரதம் இப்படித்தான் கொஞ்சம், கொஞ்சமாக பரவி நாடு முழுவதும் பக்தர்கள் மத்தியில் இரண்டற கலந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த விரதம் இருப்பவர்கள் 9 வாரம் வியாழக்கிழமையும் ஒரு வேளை உணவு அருந்தி விரதம் இருக்க வேண்டும். பழவகைகள், குளிர் பானங்கள் சாப்பிடலாம் என்றெல்லாம் விரதத்துக்கு விதிமுறை களை உருவாக்கி யுள்ளனர். இது தவிர மேலும் சில விதிமுறைகள் உள்ளன.

    ஒரு தூய ஆசனத்தில் மஞ்சள் துணியை விரித்து, சாய்பாபா படத்தை வைக்க வேண்டும். சந்தனம் பூச வேண்டும். மஞ்சள் நிறப்பூ சாத்த வேண்டும்.

    பிறகு பாபாவுக்கு விளக்கு ஏற்றி, ஊதுபத்தி காட்டி வழிபட வேண்டும். ஆரத்தி எடுக்க வேண்டும். இதையடுத்து பாபாவின் மூல மந்திரத்தை உச்சரித்து வழிபட வேண்டும்.

    இந்த விரதத்தை ஆண்-பெண் இரு பாலரும் கடை பிடிக்கலாம். விரதம் இருக்கும் 9 வியாழக் கிழமைகளில் காலை- மாலை இரு நேரமும் ஆலயத்துக்குச் சென்று பாபாவை வழிபடுவது நல்லது. வெளியூர் பயணம் செய்ய நேரிட்டாலும் இந்த விரதத்தை தொடரலாம்.

    பெண்களுக்கு விலக்கு தொடர்பான உபாதைகள் ஏற்பட்டால் அந்த வாரம் விட்டு விட்டு, அடுத்த வாரம் விரதத்தை தொடரலாம். பெண்கள் இடையில் ஒரு வாரம் விரதம் இருக்க இயலாமல் போனாலும் பிரச்சினை இல்லை. இப்படி 9 வார விரதத்துக்கு சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிகளை உருவாக்கியது யார் என்று தெரியவில்லை. இந்த விரத விதிகளுக்கு என்று உறுதியும் இல்லை. என்றாலும் உலகம் முழுவதும் உள்ள பாபா பக்தர்கள் இந்த விரத விதிமுறைகளை பாபாவே உத்தரவிட்டதாகக் கருதி கடை பிடிக்கிறார்கள்.

    9-வது வாரம் விரதம் நிறைவு பெறும் போது, 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று ஒரு விதி உள்ளது. ஆனால் நிறைய பேரால் நேரடியாக உணவு அளிக்க முடிவதில்லை.

    அத்தகைய நிலையில் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்படும் பாபா ஆலயங்களில், அதற்கான பணத்தை வழங்கலாம் என்று விரத விதிமுறைகளில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விரத முறைகளின் படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக நினைத்தது நடக்கும் என்பது சாய் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இந்த விரத நிறைவு விதிமுறைகளில் ஒன்று மட்டும் பலராலும் ஏற்புடையதாக இல்லை. அதாவது விரதத்தை பூர்த்தி செய்யும் 9-வது வியாழக்கிழமை விரத கதைகள் கொண்ட புத்தகத்தை 5 அல்லது 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில் வாங்கி அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.



    இந்த விதிமுறை இடைச்சொருகலாகக் கருதப்படுகிறது. சாய் சத் சரிதம், ஆரத்தி பாடல்கள் கொண்ட புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் விரத கதை கொண்ட புத்தகத்தை கண்டிப்பாக வாங்கிக் கொடுத்தே தீர வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

    சாய் சத் சரிதம் உள்பட சீரடி ஆலயக் குறிப்புகள் எதிலும் இத்தகைய விரத விதிமுறைகள் இல்லை.இதன் காரணமாக பல சாய்பக்தர்களிடம் 9 வார வியாழக்கிழமைகளில் விரதம் இருக்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்த சந்தேகம் இயற்கையானதே.

    9 வாரம் விரதம் இருந்தால் நினைத்ததை சாய் நடத்திக் காட்டுகிறார் என்று நிறைய பக்தர்கள் நம்பிக்கையோடு சொல்கிறார்கள். இதை நம்பித்தான் மற்றவர்களும் விரதம் இருக்கிறார்கள்.

    ஆனால் விரதம் இருக்காவிட்டாலும், சாய் மீது முழு பக்தி வைத்திருந்தால், அவர்அற்புதங்கள் நிகழ்த்துவார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

    சில பக்தர்கள், வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால், நாள் முழுக்க பாபா நினைவுடன் இருக்க முடிகிறது. எனவே பாபாவை நெருங்குவதற்கு இந்த விரதம் உதவியாக இருக்கிறது என்கிறார்கள். இது ஏற்கக் கூடியதாக உள்ளது.

    சிலர் பாபாவை சோதித்துப் பார்க்கும் வகையில் 9 வார வியாழக்கிழமை விரதத்தை கடை பிடிப்பதுண்டு. ஒரு போதும் அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அது விரதமாக இல்லாமல் விரோதமாக மாறி விடக்கூடும்.

    ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். விரதம் இருங்கள் என்று பாபா சொன்னதே இல்லை. எனவே பாபாவை வேண்டிக் கொண்டு விரதம் இருப்பதும், இருக்காததும் அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது.

    சாயிடம் நெருங்க வேண்டுமானால், அவர் அன்பை பரிபூரணமாக பெற வேண்டுமானால், அவர் மீது நம்பிக்கை வைப்பது ஒன்றே போதுமானது. இல்லை... நான் பாபாவுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று உங்கள் மனம் துடிக்கிறதா?

    கவலைப்படாதீர்கள்... பாபாவுக்கு தினமும் ஆரத்தி செய்யுங்கள். சீரடியில் தினமும் 4 தடவை ஆரத்தி காட்டப்படுகிறது. இந்த ஆரத்தி அற்புதங்கள் நிறைந்தது. அந்த அற்புதங்களைப் பெற நீங்களும் பாபாவுக்கு தினமும் ஆரத்தி காட்டுங்கள். அதை எப்படி செய்வது என்பதை அடுத்த வாரம் வியாழக்கிழமை காணலாம்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் இருந்து அம்பிகையை வழிபாடு செய்ய வேண்டும்.
    தோஷங்களில் பலவகையான தோஷங்கள் உள்ளன. அவற்றில் சந்திர தோஷமும் முக்கியமான ஒன்று ஆகும்.

    ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும்.

    தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடுவதுடன், திருவோண நட்சத்திரமன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷமான வாழ்வு அமையும்.
    பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து, திருமுருகனை வேண்டி 48 ஆண்டுகள் தொடர்ந்து இவ்விரதமிருந்து வந்தால், அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீக தன்மையை அடையலாம் என புராணங்கள் கூறுகின்றன.
    பங்குனி உத்திர நாளில், ஸ்ரீ ராமருக்கும், சீதா தேவிக்கும், ஸ்ரீ ரங்கநாதருக்கும், ஸ்ரீ ஆண்டாளுக்கும், சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சிக்கும் திருமணம் நடைபெற்றது என்பதால் கல்யாண விரத நாள் என்றும் அழைப்பார்கள். சிறப்பான முகூர்த்த நாளாக பங்குனி உத்திர நாளை இந்துக்கள் கொண்டாடுகின்றனர்.

    பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து, திருமுருகனை வேண்டினால், பிறவிப்பலனையும், நாற்பத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து இவ்விரதமிருந்து வந்தால், அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீக தன்மையையும் அடையலாம் என புராணங்கள் கூறுகின்றன.



    அதே நேரம், வருடம் முழுவதும் ஒழுக்கக்கேடாக இருந்து விட்டுப் பலன்கள் பெறும் நோக்கோடு பங்குனி உத்திர விரதத்தை மட்டும் தொடர்ந்து இருப்பவர்களை, சூரியன் சுட்டெரித்து விடுவான் என சூரிய புராணம் எச்சரிக்கிறது. ஏனெனில், பாவங்களை சுட்டுப் பொசுக்கக்கூடிய உத்திர நட்சத்திரத்தின் அதிபதியான சூரியன், மார்கழி மாதம் தொடங்கி புரட்டாசி மாதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக சக்தி பெற்று பங்குனியில் உச்சத்தை நோக்கி செல்கின்றான்.

    முருகனுக்கு உகந்த இந்நாளில், சிவபெருமானையும், பார்வதி தேவியையும் திருமண கோலத்தில் நினைத்து தியானம் செய்து, வீட்டிலோ அல்லது ஆலயத்திற்கு சென்றோ வழிபட்டு ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், உடுத்திக் கொள்ள வேட்டி புடவையும் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்து வந்தால், முருகப்பெருமானின் அருளோடு சிவபெருமானின் அருளையும் பெறலாம்.

    பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஒன்று உண்டு. இந்த விரதம் குழந்தைகளுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்கானவும் கடைபிடிக்கப்படுகிறது.
    பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஒன்று உண்டு. ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழ் நாட்டில் கருட பஞ்சமி விரதம் மிகவும் பரவலாக அனுஷ்டிக்கப்படுவதில்லை என்றாலும் கருட சேவையைப் பற்றி எழுதி வருவதால் இவ்விரதத்தைப் பற்றி படித்த சில தகவல்களை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.



    கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு. இப்போதும் கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப் பெற்றுக்கொள்கிறார்கள். கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.

    நாக சதுர்த்தி தன் குழந்தைகள் நன்றாக இருக்க அக்குழந்தைகளின் தாய் நோன்பு செய்து வேண்டிக்கொள்ளும் நாள். தன் குழந்தைகள் நன்றாக இருக்க அக்குழந்தைகளின் தாய் நோன்பு செய்து வேண்டிக்கொள்ளும் நாள்.. இந்த நாளில் தாய்மார்கள் உபவாசம் இருக்கவேண்டுமென்பது ஐதீகம். நாகசதுர்த்தி அன்று செய்யப்படும் நாகபூஜை குழந்தைகளின் நல்வாழ்விற்கானது.
    திங்கள் முதல் ஞாயிற்று கிழமை வரை உள்ள நாட்களில் பைரவருக்கு விரதமிருந்து இந்த வழிபாடுகளை தொடர்ந்து செய்து வந்தால் அனைத்து விதமான தடைகளும் அகலும்.
    ஞாயிற்றுக்கிழமை :

    (சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
    தள்ளிப்போகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண விரதமிருந்து மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் (4.30--6.00) பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் இராகு காலத்தில் கால பைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.

    திங்கட்கிழமை :

    (கடக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
    வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

    செவ்வாய்க்கிழமை :

    (மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
    மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளைத் திரும்பப் பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.



    மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோயிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜையறையில் பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.

    புதன்கிழமை :

    (மிதுனம், கன்னி ராசிக் காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
    நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.

    வியாழக்கிழமை :

    (தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
    விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும்.

    வெள்ளிக்கிழமை:

     (ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
    மாலையில் வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி, செல்வப் பேறு கிட்டும்.

    சனிக்கிழமை :

    (மகரம், கும்ப ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
    சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும்.
    பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்க இந்த சந்திராயன விரதத்தை அனுஷ்டிக்கலாம். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    சந்திராயன விரதத்தை மேற்கொள்ளுபவன் பவுர்ணமியன்று 15 கவளம், அடுத்த நாள் முதல் 14, 13 என்று குறைத்துக் கொண்டே வந்து அமாவாசை அன்று சுத்த உபவாசம் இருக்க வேண்டும். அடுத்த நாள் ஒரு கவளம் மட்டும் உட்கொண்டு அது முதல் ஒவ்வொன்று கூட்டி பவுர்ணமி அன்று 15 கவளம் உட்கொள்ள வேண்டும்.

    ஒரு மாதத்திற்கு இரண்டு அமாவாசை வந்தால், அது மலமாசம், அந்த மாதங்களில் விரதம், ஓமம், பிரதிக்ஞை-திருவுருவப் பிரதிஷ்டை கூடாது. ஒரு பவுர்ணமி முதல் அடுத்த பவுர்ணமி வரை உள்ள நாட்கள் கொண்டது சாந்திர மாசம்; முப்பது நாட்களை உடையது சவுர மாசம்;

    சூரியன் ஒரு ராசியில் தங்கி இருக்கும் காலம் சவுர (அ) சூரிய மாதம்; 27 நாட்களைக் கொண்டது நட்சத்திர மாதம் எனப்படும். விரதகாலத்தில் தரையில் உறங்க வேண்டும். ஜபங்களை விடாமல் செய்ய வேண்டும். பிராமணர்களுக்குத் தக்ஷிணை, தானம் தர வேண்டும். பசு, சந்தனக்கட்டை, பாத்திரங்கள், நிலம், குடை, கட்டில் போன்றவை தானப் பொருள்களாகும்.
    விஷ்ணு பகவானுக்கு உரிய விரதங்களில் ஏகாதசி விரதம் மிகவும் மகிமை வாய்ந்தது. அதை உணர்த்தும் புராண வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
    இராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத சுக்லபட்ச (வளர்பிறை) ஏகாதசி யன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கபடுகிறது.

    திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலைகடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது. இந்தயோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார்.

    இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும் . மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம். ஒருவருடம் முழுவதும் ஏகாதசிவிரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடிய வில்லை, அம்பரீஷ மஹாராஜாவை திருமாலின் சுதர்சன சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.



    திருக்குறுங் குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வுபெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராக்ஷனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.

    ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்தவிரதத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்றபெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது. பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்தவிரதத்தை செய்யமுடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.

    பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருசேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்தநாள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
    சித்திரை மாதத்தில் வரும் சில குறிப்பிட்ட நாட்களில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் உங்கள் வாழ்வை வளமாக்கும். இப்போது இந்த விரதங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
    சித்திரை மாதத்தில் வரும் சுக்லபட்ச வெள்ளிக் கிழமைகளில் அன்னை பார்வதி தேவியை துதித்து கடைப்பிடிக்கப்படுவது இந்த விரதம். இந்த விரதம் மேற்கொள்பவர்கள் அம்பாளுக்கு பூஜை செய்து, சர்க்கரையை நைவேத்தியம் செய்து வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.

    சித்திரைமாதம் வரும் பரணி நட்சத்திரத்தன்று பைரவருக்கு பூஜை செய்ய வேண்டும். பைரவருக்கு தயிர்சாதம் படைத்து விரதம் இருந்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். நமக்கு தீங்கு செய்த எதிரிகள் பாதிக்கப்படுவர். வாழ்வில் வளம் சேர்க்க இந்த விரதம் ஏற்றது. இதனை பரணி விரதம் என்பர்.



    சித்திரை சுக்லபட்சத்தின் திரிதியை திதியில் உமாமகேஸ்வரரை துதித்து பூஜை செய்வது மிகவும் நல்லது. அன்று தான, தருமங்கள் செய்வதால் இப்பிறவியில் வளமான வாழ்வும் மறுபிறவியில் கயிலாச லோக பிராப்தியும் கிடைக்கும். இதை சவுபாக்கிய சயனவிரதம் என்பர்.

    சித்ராபவுர்ணமியன்று கடைப்பிடிக்கப்படும் சித்ரகுப்த விரதம் ஆயுளை அதிகரிக்க செய்யும். இந்த விரதம் இருப்போருக்கு புண்ணியங்கள் சேரும்.
    சங்கடஹர சதுர்த்தி வரும் நாட்களில் விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் வெற்றி மீது வெற்றி வந்து சேரும். ஹேவிளம்பி வருடத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி விரத நாட்களை பார்க்கலாம்.
    சங்கடஹர சதுர்த்தி வரும் நாட்களில் விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் வெற்றி மீது வெற்றி வந்து சேரும். சங்கடங்கள் தீர்ந்து சந்தோஷம் வந்து சேர வைக்கும் சதுர்த்தி நாட்கள்:-

    சித்திரை 1 (14.4.2017) - வெள்ளிக் கிழமை

    சித்திரை 2 (15.4.2017) - சனிக்கிழமை (சதுர்த்தி விரதம்)

    சித்திரை 31 (14.5.2017) - ஞாயிற்றுக் கிழமை

    வைகாசி 30 (13.6.2017) - செவ்வாய்க் கிழமை

    ஆனி 28 (12.7.2017) - புதன்கிழமை

    ஆனி 29 (13.7.2017) - வியாழக்கிழமை (சதுர்த்திவிரதம்)



    ஆடி 26 (11.8.2017) - வெள்ளிக்கிழமை (மஹா சங்கடஹர சதுர்த்தி)

    ஆவணி 24 (9.9.2017) - சனிக் கிழமை

    புரட்டாசி 22 (8.10.2017) - ஞாயிற்றுக் கிழமை இரவு

    புரட்டாசி 23 (9.10.2017) - திங்கட் கிழமை (சதுர்த்தி விரதம்)

    ஐப்பசி 21 (7.11.2017) - செவ்வாய்க் கிழமை

    கார்த்திகை 20 (6.12.2017) - புதன் கிழமை



    கார்த்திகை 21 (7.12.2017) - வியாழக் கிழமை (சதுர்த்தி விரதம்)

    மார்கழி 21 (5.1.2018) - வெள்ளிக் கிழமை

    தை 21 (3.2.2018) - சனிக்கிழமை

    மாசி 21 (5.3.2018) - திங்கட்கிழமை

    பங்குனி 20 (3.4.2018) - செவ்வாய்க் கிழமை

    பங்குனி 21 (4.4.2018) - புதன் (சதுர்த்தி விரதம்)
    சத்யநாராயணா பூஜையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும். ஒருவர் இந்த விரதத்தை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
    சித்திரை மாதத்தின் முதல் நாளில்தான் பிரம்மதேவன், பூமியைப் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் சூரியனின் ஒளியும், அதன் சக்தியுமே உயிர்ப்பை தருகின்றன. இதனால்தான் பழங்காலத்தில் சூரியனையே கடவுளாக நினைத்து மக்கள் அனைவரும் வழிபட்டு வந்திருக்கின்றனர்.

    சூரியன் நிற்கும் நிலையைக்கொண்டு இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு பருவகாலங்கள் ஒருவருடத்தில் ஏற்படுகின்றன.

    சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல்நாள் ஆகும். இது வசந்த ருது எனவும், இளவேனிற்காலம் எனவும் அழைக்கப்படுகிறது. சித்திரை முதல்தினத்தை தமிழக மக்கள் முக்கியமான பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அன்று வீட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். படிகளுக்கு மஞ்சள் குங்குமமிட்டு, வாசல் நிலைகளில் மாவிலைத்தோரணங்களை கட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் திருமகள் விரும்பி வருவாள். கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து குரு, பெற்றோர், பெரியோரை வணங்கி அவர்களின் ஆசி பெற வேண்டும்.

    முடிந்தவரை தான, தருமங்களை செய்ய வேண்டும். புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதை பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி நல்லநேரம் பார்த்து குத்துவிளக்கேற்றி நிறைகுடம் வைத்து வணங்க வேண்டும். பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்யவேண்டும். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் விசிறிகளை தானம் செய்யவேண்டும். அன்று சமையலில் வேப்பம்பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் செய்வார்கள்.

    சித்திராபவுர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி, குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும். சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு குடிப்பதற்கு மோர் கொடுத்தால் பாவம் விலகும். சர்க்கரை கலந்த பானகம் குடிக்கக் கொடுத்தால், மோட்சம் கிடைக்கும்.

    மகாவிஷ்ணுவிற்கு ‘சத்யநாராயணர்’ என்ற திருப்பெயரும் உண்டு. சத்யநாராயணா பூஜையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும். மாலை 7 மணிக்கு இந்த பூஜையை செய்யலாம்.

    ஸ்ரீசத்யநாராயணபூஜையை செய்பவர்கள் பகவானின் அருளை பூரணமாக பெறுவார்கள். ஏழ்மை விலகி செல்வம் சேரும். பொய் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பயம் நீங்கும். பக்தர்கள் விரும்பிய கோரிக்கைகள் நிறைவேறும். இந்த கதையை படிப்பவர்களின் பாவம் நீங்கும்.



    பவுர்ணமியன்று இந்த பூஜையை செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும் தீபாவளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் ஜாதகத்தில் சந்திரன் அனுகூலமாக இருக்கும் போது செய்யலாம்.

    ஒரு சமயம் நாரதர் பூமிக்கு வந்தார். அப்போது வாழ்வில் பல வழிகளிலும் துன்பப்பட்ட மக்களை சந்தித்தார். இவர்களின் துன்பத்தை போக்கும் வழி என்ன என்று மகாவிஷ்ணுவிடம் கேட்டார். அதற்கு அவர் கலியுகத்தில் சத்யநாராயண விரதம் பலன் அளிக்க கூடியது. ஒருவர் இதை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்று கூறினார்.

    வழிபாடு செய்வது எப்படி?

    சத்ய நாராயண பூஜை செய்வதற்கு முன்னதாக பவுர்ணமியன்று வீட்டில் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். கணவன்-மனைவி இருவரும் சந்திரன் உதயமாகும் முன் குளித்துவிட்டு பூஜை செய்ய வேண்டும்.

    கோலமிட்டு அதன்மீது மூன்று வாழை இலைகளை வைக்க வேண்டும். வாழை இலையின் மீது அரிசியை பரப்ப வேண்டும். வெள்ளி, பித்தளை, செம்பினால் ஆன கலசத்தை நூலினால் சுற்றி அரிசியின் மேல் வைக்க வேண்டும். ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம், குங்குமப்பூ ஆகியவை கலந்த நீரை கலசத்தில் நிரப்ப வேண்டும். கலசத்தின் உள்ளே மாவிலைகளை வைத்து கலசத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு இட வேண்டும். மஞ்சள்பொடியை தண்ணீரில் குழைத்து தேங்காயின் மீது தூவி கலசத்தின் மீது வைக்க வேண்டும். இரண்டு வஸ்திரத்தை கலசத்திற்கு அணிவித்து மாலை சாத்த வேண்டும்.

    பிறகு சத்யநாராயணர் படத்தை அலங்கரித்து பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும். தொன்னையிலான 9 கிண்ணங்களில் தானியங்கள் நிரப்பி அவற்றை நவக்கிரகங்களுக்காக பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும். சூரியனுக்கு சிவப்பு, சந்திரனுக்கு வெள்ளை, செவ்வாய்க்கு சிவப்பு, புதனுக்கு பச்சை, குருவுக்கு மஞ்சள், சுக்ரனுக்கு வெள்ளை, சனிக்கு கருப்பு, ராகுவுக்கு நீலம் கேதுவுக்கு பலவண்ண நிறங்களில் வஸ்திரம் அணிவிக்க வேண்டும்.

    சூரியனுக்கு கோதுமை, சந்திரனுக்கு அரிசி, செவ்வாய்க்கு துவரை, புதனுக்கு பச்சைப்பயறு, குருவுக்கு கடலை, சுக்ரனுக்கு மொச்சை, சனிக்கு எள், ராகுவுக்கு உளுந்து, கேதுவுக்கு கொள்ளு ஆகியவற்றை படைக்க வேண்டும். விநாயகர் பூஜை, நவக்கிரக பூஜை முதலியவற்றை செய்து அதன் பிறகு சத்யநாராயணர் பூஜை செய்ய வேண்டும். பின்பு ஸ்ரீசத்யநாராயணர் அஷ்டோத்திர சத்நாமாவளியை உச்சரிக்க வேண்டும். பின்னர் தூபம், தீபம், நிவேதனம், கற்பூரதீபம் முதலிய வற்றை காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் தான, தர்மங்கள் செய்வது அதிக பலனை கொடுக்கும்.

    இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் புத்திர பாக்கியம், செல்வம், பதவி, திருமண யோகம், மோட்சம் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும் என்கிறது புராணங்கள்.
    48 நாட்கள் விரதம் இருந்து ராஜ ராஜேஸ்வரி அம்மனை தியானிக்க வேண்டும். அவ்வாறு நாம் விரதம் இருக்கும் நாட்களில் நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பார்க்கலாம்.
    48 நாட்கள் விரதம் இருந்து ராஜ ராஜேஸ்வரி அம்மனை தியானிக்க வேண்டும். அவ்வாறு நாம் விரதம் இருக்கும் நாட்களில் நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளன.

    அவை : இறைச்சி, மது, தாம்பத்தியம் போன்றவை நீக்கி விரதம் இருக்க வேண்டும். எந்த இடத்தில் விரதம் ஆரம்பிக்கிறோமோ அதே வீட்டிலேயே 48 நாட்களும் விரதம் இருக்க வேண்டும். வேறு வீடுகளிலோ வெளியிலேயோ சென்று விரதம் நிறைவு செய்யக்கூடாது. இரவில் எங்காவது வெளியில் தங்கி விட்டால் விரதம் நிறைவுற்றதாக ஆகிவிடும்.

    விரத நாட்களில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து அம்மனை வணங்க வேண்டும். ராஜ ராஜேஸ்வரி அம்மனின் பிரேம் போடாத எந்திரம் மற்றும் ராஜ ராஜேஸ்வரி அம்மனின் பிரேம் போட்ட படம் வைத்து, எந்திரம் மற்றும் படத்திற்கு பூக்கள் அணிவித்து தீப, தூப ஆராதனைகள் செய்து வணங்க வேண்டும்.



    ராஜ ராஜேஸ்வரி அம்மனின் மந்திரத்தை தினமும் உங்களால் முடிந்தவரை சொல்லி வர வேண்டும். 48 நாட்களுக்குள் லட்சம் எண்ணிக்கையை மந்திரம் தொட்டால் மிகவும் சிறப்பு.

    எவ்வளவு சுத்தமாக இருந்து அம்மனை நினைத்து தியானம் செய்கிறோமோ கேட்டதை விட அதிகமாக வரங்களை அளிப்பாள் ராஜ ராஜேஸ்வரி. நாம் விரதத்தின் மூலம் மிக உயர்வான சக்திகளை பெற்றுக் கொண்டு வருகிறோம் என்பதை விரதம் இருக்கும் நாட்களில் உணர்ந்து கொள்ளலாம்.

    அனுதினமும் வாழ்க்கையில் நமக்கு துணையாக அம்மன் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 48 நாட்கள் விரதம் முடிந்த பிறகும் தினமும் அம்மன் மந்திரத்தை தொடர்ந்து உச்சாடணம் செய்து கொண்டு வர அதிசய சக்திகளை நாம் பெறலாம். மூன்று வேளைகளும் அம்மனுக்கு பூஜை செய்து வணங்க வேண்டும். அம்மனை மனதார தியானிக்க வேண்டும்.
    சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் சுக்கிரவாரம் (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஒவ்வொரு சுக்கிரவாரமும் உமாதேவியாரை வணங்கி மனம் உருகி இருக்கும் விரதம் சுக்கிரவார விரதம் எனப்படும்.
    சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் சுக்கிரவாரம் (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஒவ்வொரு சுக்கிரவாரமும் உமாதேவியாரை வணங்கி மனம் உருகி இருக்கும் விரதம் சுக்கிரவார விரதம் எனப்படும். இதை வெள்ளிக்கிழமை விரதம் என்று கூறுவதுண்டு.

    அரக்கர்களால் அவதிப்பட்ட தேவர்கள் அம்பாளை நோக்கி தொழுது வேண்டினர். அப்போது அம்பாள் அவர்களுக்கு அபயம் அளித்து அரக்கர்களை வதம் செய்தாள். தேவர்களையும் முனிவர்களையும் காத்து ரட்சித்தாள். இதை முன்னிட்டே அம்பாளை தொழும் சுக்கிர வார விரதம் இருக்கும் வழக்கம் ஏற்பட்டது.

    இவ்விரத தினங்களில் ஒரு பொழுது பகலில் உணவு கொள்ள வேண்டும். அம்பாளை பற்றிய பாராயணம், கதைகள் ஆகியவற்றை படிக்கலாம். மாலை பொழுதில் இல்லத்தில் அம்பாள் படத்தின் முன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பூஜிக்கலாம். கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து அம்பாளை வழிபடலாம்.
    ×