என் மலர்
முக்கிய விரதங்கள்
மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பவுர்ணமி தினத்தன்று விரதமிருந்து வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும்.
பொதுவாக ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி பவுர்ணமி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் சிறப்பு பவுர்ணமியாகும். எனவே அன்று குல தெய்வத்தை தேடிச் சென்று வழிபட வேண்டியது மிக, மிக அவசியமாகும். மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி பவுர்ணமி தினத்தன்று வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும்.
பங்குனி உத்திர திருநாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நம் குலம் சிறப்பதோடு, குடும்பமும் மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும். குல தெய்வம் என்பது ஒவ்வொரு குடும்ப வகையறாவைப் பொருத்தது.
அண்ணன்-தம்பி குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும். கிராமங்களில் இருப்பவர்களுக்கு அவர்கள் அருகிலேயே குலதெய்வ கோவில் இருக்கும்.

எனவே எளிதாக வழிபாடுகளை செய்து கொள்வார்கள். பலருக்கும் குல தெய்வம் காடு, மலை, வயல்வெளி, சாலை வசதி இல்லாத இடங்களில்தான் இருக்கிறது. அதனால் எப்போதும் சென்றுவர முடியாது. ஆனால் குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். வருடம்தோறும் இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலிற்குச் சென்று வருவது நல்லது.
கிராமங்களில் இருந்து வெளியேறி நகர்ப்பகுதிகளில் குடியேறியவர்களுக்கு குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கலாம். அத்தகையவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கும் ஒரு பரிகாரம் உள்ளது.
உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குல தெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும். எனவே பங்குனி பவுர்ணமி அன்று மறக்காமல் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள். முடிந்தால் பவுர்ணமிதோறும் குலதெய்வ வழிபாட்டை செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையும் பவுர்ணமி போல பிரகாசிக்கும்.

வெள்ளி, செவ்வாய் மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மன் கோவில்களில் குங்கும அர்ச்சனை நடைபெறும். விரதமிருந்து இதில் கலந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி பெருகும்.
நாம் உபயோகிக்கும் பரிமள பொருட்களில் ஒன்று குங்குமம். ‘மங்கள மங்கையர் குங்குமம், மதுரை மீனாட்சி குங்குமம்’ என்று வர்ணித்துக் கூறுவர். பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டால், குடும்ப அமைதியைக் காட்டும்.
கல்யாணம் ஆன பெண்கள் தன் கணவருடைய ஆயுள் பெருகவும், இல்லறம் நல்லறமாக அமையவும் தன்னுடைய மாங்கல்யத்திலும், நெற்றி வகிட்டிலும் குங்குமத்தை வைத்துக் கொள்வார்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் இருந்தால், துர்க்கைக்கு குங்கும அர்ச்சனை செய்வது வழக்கம்.
குங்குமம் சுமங்கலி பாக்கியத்தைக் கொடுக்கும் பொருளாகும். எனவே வெள்ளி, செவ்வாய் மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மன் கோவில்களில் குங்கும அர்ச்சனை நடைபெறும். விரதமிருந்து இதில் கலந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி பெருகும்.

பன்னிரண்டு மாதங்களில் வரும் பவுர்ணமியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் சித்ரா பவுர்ணமி கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
வழிபாடுகளே நம் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வழிபாடுகளிலும் கூட நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடி பலன்களை வழங்கக்கூடியவை.
அப்படிப்பட்ட பலம் வாய்ந்த நாட்களில் தான் இயற்கையில் ஏராளமான மாற்றங்கள் நடைபெறும். கடல் தண்ணீர் மேல் எழும்பும். அலையடிக்கும் அந்த நாளில் விரதமிருந்தால் அலைபாயும் உள்ளங்களுக்கு அமைதி கிடைக்கும். அப்படிப்பட்ட நாட்களில் ஒன்றுதான் சித்ரா பவுர்ணமி. சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி என்பதால், ‘சித்ரா பவுர்ணமி’ என்று அழைக்கப்படுகிறது. இது பன்னிரண்டு மாதங்களில் வரும் பவுர்ணமியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார். அந்த மாதத்தில் வரும் பவுர்ணமியன்று சந்திரன் முழுமையடைகிறார். ராஜ கிரகங்களாக விளங்கும் சூரியனும், சந்திரனும் பலம்பெறுவதால் அந்த மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முன்னோர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து விழா எடுத்துள்ளனர். இந்த ஆண்டின் சித்ரா பவுர்ணமி 10-5-2017 அன்று (புதன்கிழமை) வருகிறது. மற்ற பவுர்ணமி நாட்களை விட, சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்பு மிகுந்தது. அன்றைய தினம் மலை வலம் வந்து முருகனை வழிபட்டால் மகத்தான வாழ்வு மலரும்.
சித்ரா பவுர்ணமியில் சித்ரகுப்தனையும் வழிபட வேண்டும். இந்த வழிபாட்டால் ஆயுள் விருத்தியும், ஆதாயம் தரும் செல்வ விருத்தியும் உண்டாகும். நமது பாவ புண்ணியங்களைப் பதிவு செய்து வைக்கும், சித்ரகுப்தனுக்கு அவர் அவதரித்த நாளில் விழா எடுப்பது சிறப்புக்குரியதாகும். ‘நாம் மலையளவு செய்த பாவத்தைக் கடுகளவு ஆக்குக, கடுகு அளவாகச் செய்த புண்ணியத்தை மலையளவு ஆக்குக’ என்று வணங்க வேண்டும்.
சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கிப் பொங்கல் வைத்து, சித்ரகுப்தனைச் சிந்தையில் நினைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பச்சரிசி கொழுக்கட்டை, இனிப்புப் பலகாரங்கள் போன்றவற்றை இலையில் பரப்பி வைத்து, பழங்களில் பலாச்சுளை, முழு நொங்கு, இளநீர், நீர்மோர், பானகம், திராட்சை, மாம்பழம் போன்றவற்றையும் படைக்க வேண்டும்.

அன்றைய தினம் வைக்கும் குழம்பில் கூட, தட்டைப்பயிறும், மாங்காயும் சேர்த்து வைப்பது வழக்கம். ஜவ்வரிசிப் பாயாசம் வைத்து அப்பளம் வைத்து, பூஜை அறையின் நடுவில் கோலமிட்டு, அதன் மேல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, சங்கு ஊதி வழிபடுவது அவசியமாகும். பவுர்ணமி விரதம் இருப்பவர்கள், விரதத்தைத் தொடங்க வேண்டிய நாள் சித்ரா பவுர்ணமி தான். விரதத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பவர்கள் இரவு நிலவு பார்த்த பின் உணவு அருந்த வேண்டும்.
சித்ரகுப்தனுக்கு காஞ்சீபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலி லும் தனிச் சன்னிதி இருக்கிறது. இந்த ஆலயங்களுக்குச் சென்றும் சித்ர குப்தனை வழிபட்டு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.
மதுரையில் சித்ரா பவுர்ணமி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். சொக்கநாதப் பெருமான்- மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் செய்து கொள்ளும் வைபவத்தைக் காண, கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருள்வார்.
தேவேந்திரன் சொக்கநாதப் பெருமானை வழிபட்டு, பாவத்திற்கு பரிகாரம் தேடிக் கொண்டது சித்ரா பவுர்ணமியில் தான் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்திரனுக்கு இனிய வாழ்வு தந்த இந்தத் திருநாளில் நீங்களும் விரதமிருந்து சித்ரகுப்தனை வழிபட்டு உங்கள் வாழ்க்கையும் உன்னதமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளுங்கள்.
சித்ரா பவுர்ணமியன்று சித்ரகுப்தனை, அவரது துதிபாடல்களைப் பாடி வழிபாடு செய்யுங்கள்.
சித்ரகுப்தனை வழிபடுவதோடு நில்லாமல், இனி பாவச் செயல்கள் செய்யாமல், புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்ற உறுதியையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியது அவசியம். அன்றைய தினம் மாலையில் சிவாலயம் சென்று சொக்கநாதர், மீனாட்சியம்மனை வழிபட்டு, இரவு நிலவு பார்த்தபின் உணவு அருந்துவது சிறப்பு தரும். மதிநிறைந்த நன்நாள் என்பதால், பவுர்ணமி தினத்தில் நேர்மறைச் சிந்தனையோடு செயல்படுவது நல்லது. நினைத்ததை நிறைவேற்றும் நாள் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதத்தை அனுஷ்டித்து வந்தால் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவியை பெறுவார்கள் என்கின்றன புராணங்கள்.
9-4-2017 இன்று பங்குனி உத்திரம்
பங்குனி மாதம் உத்தர நட்சத்திரத்தன்று கடைப்பிடிக்கப்படும் விரதம் ‘பங்குனி உத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. முருகப்பெருமானையும், சிவபெருமானையும் வேண்டி வழிபடும் விரதம் இது.
சபரிமலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஐயப்பன் அவதரித்த நாள் மட்டுமின்றி, மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஆண்டாள்-அரங்கநாதர் திருமணம், ராமர்-சீதை திருமணம் என பல தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற தினம் இதுவாகும். எனவேதான் இந்த விரத நாளை, ‘கல்யாண விரதம்’ என்றும் அழைக்கிறார்கள்.
திருமணமாகாதவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும். வேண்டுவோருக்கு வேண்டுபவனவற்றை வழங்கி அருளும் தெய்வங்களை இத்தினத்தில் தேவர்களும் வழிபட்டு வரங்களை பெற்று உள்ளனர்.
விஷ்ணுவின் திருமார்பில் திருமகள் இடம் பிடித்தது, இந்த விரதத்தை கடைப்பிடித்து தான். இந்திரனும் இந்த விரதத்தை மேற்கொண்டுதான் இந்திராணியை கரம் பிடித்தான். பிரம்மன் சரஸ்வதியை தன் நாவில் குடிகொள்ளச் செய்ததும், சந்திரன் இருபத்து ஏழு அழகு வாய்ந்த பெண்களை மணம் முடித்ததும் கூட இந்த விரதத்தை மேற்கொண்டுதான். இந்த விரதத்தை கடைப்பிடித்தவர்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் எண்ணிலடங்காதவர்கள். இந்த விரதத்தின் மகிமையை அளவிட முடியாது. திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய விரதம் இது.
பங்குனிஉத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பார்வதி விரதம் இருந்து சிவ பெருமானை மணாளனாக அடையப்பெற்றது முக்கியமானது.
ஒருமுறை உமாதேவி தக்கனுக்கு மகளாக பிறந்து வளர்ந்தார். ஆணவத்தினால் தக்கன் சிவபெருமானை இகழ்ந்தான். இதனால் வெகுண்டெழுந்த தாட்சாயிணியாக குண்டத்தில் வீழ்ந்தார். தக்கனுக்கு மகளாக பிறந்த காரணத்தினால் ஏற்பட்ட களங்கத்தை போக்கி கொள்வதற்காக பார்வதி என்ற பெயருடன் மலையரசன் இமவான் மகளாக தோன்றினார். அவர் காஞ்சீபுரத்தில் கம்பை ஆற்றில் மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து வழிபட்டார். திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.

ஆற்று நீரில் மணலால் செய்த சிவலிங்கம் சிதைந்து விடுமே என்று அன்பால் பதறிய உமையம்மை சிவலிங்கத்தை மார்போடு அணைத்து தழுவினாள். அவரது அன்பை பார்த்து வியந்த பரமேஸ்வரன் வெளிப்பட்டு உமையம்மையை திருமணம் செய்து கொண்டார். அந்நாளே பங்குனி உத்திர திருநாள் ஆகும்.
பங்குனி உத்திரத்தன்று சிவாலயங்களில் திருக்கல்யாண விழா விமரிசையாக நடத்தப்படுகிறது. பங்குனி உத்திரத்தையொட்டி ஆண்டு தோறும் மகோற்சவம், நடைபெறும். மதுரையில் ஸ்ரீ மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தில் நிகழ்த்தப்படுகிறது.
சிவனையும் சக்தியையும் ஆடை, அணிகலன்களால் அழகு செய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க வேத பாராயணங்கள் ஒலிக்க ஹோமம் வளர்த்து மந்திரம் கூறி மாலை அணிவித்து பல பேர் சாட்சியாக தாலிகட்டி வாழ்த்து கூறி அவர்களை திருமணக்கோலத்தில் கண்குளிரக்கண்டு களித்து அருள் பெற்று பக்தர்கள் அகமகிழ்கின்றனர்.
ஊஞ்சலில் இறைவனையும், இறைவியையும் அமர்த்தி பாட்டுப்பாடி ஆட்டுகின்றனர். பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.
காஞ்சீபுரம், ஏகாம்பரநாதர் கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவில்களில் இவ்விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விரதம் இருப்பது எப்படி?
பங்குனி உத்திர விரதத்தை 8 வயதில் இருந்து 80 வயது உள்ளவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். விரதம் இருப்பதற்கு முன்தினம் இயல்பாக உண்பதைவிட குறைவாக உண்ண வேண்டும். அன்று மூன்று வேளை பழச்சாறு அருந்தலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் ஒரு வேளை உண்ணலாம். பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பவர்கள் காலைக்கடனை முடித்து விட்டு பூஜை பாராயணங்களை செய்து முடிக்க வேண்டும்.
அன்று சிவபெருமானுக்கும் உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து முடிக்க வேண்டும். ஒரு தம்பதியினரை அழைத்து வந்து அவர்களுக்கு பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும். சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். விரதத்தின் போது மவுனமாக இருப்பது சிறப்பு.
அன்று முழுவதும் இறைவனைப்பற்றிய சிந்தனையில் மூழ்கி சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றைப் படிக்கலாம். இறைவனின் நாமாவளிகளைக் கூறலாம். பட்டினி கிடந்து பசித்திருக்க வேண்டும். துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப்படுக்கவேண்டும்.
தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் இந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவியை பெறுவார்கள் என்கின்றன புராணங்கள்.

பங்குனி உத்திர தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.
பங்குனி உத்திர விரதத்தை எப்படி மேற்கொள்வது?
ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து முருகன் துதிப்பாடல்களை பாடலாம். அன்று முழுவதும் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் மேற்கொள்ளலாம். முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர்ளுக்கு அன்னதானம் செய்யலாம்.
இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள்.
மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உளள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

விரத பலன்கள் :
பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபுரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிவிப்பதே நம் வீட்டில் மங்கள விழாக்கள் நடக்க வேண்டியதை நாம் சிந்திப்பதற்காக அமைந்தவைகள் ஆகும்.
இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும். இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களை இன்று நினைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும். பங்குனி உத்திரம் விரதம் இருந்து நாராயணர் லட்சுமிதேவியை அடைந்ததைப் போல் நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.
கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும், சிறந்த வேலையை பெறுபவர்களாகவும் நாம் அமைகின்றோம்.
லாபம் பெருகும், நிம்மதி தொடரும். உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்ப ஒற்றுமையுடன், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.

பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து தம்பதிகளாய் தினமும் தெய்வங்களை வழிபட்டால் பாவங்கள் விலகி மாங்கல்ய பலம் பெருகும் எனப்புராணங்கள் கூறுகின்றன.
உத்திர நட்சத்திரத்தின் நாயகன் சூரியன் உத்திர நட்சத்திரம் பூரண சந்திரனுடன் இணையும் திருநாள் பங்குனி உத்திரத் திருநாள் சூரியன்-சந்திரன் இருவருடன் தொடர்பு பெற்றிருப்பதால் இத் திரு நாளுக்கு தனிச்சிறப்பு உண்டு.
பனிக்காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பமாகும். இம் மாதத்தில் பெய்யும் மழையை பங்குனிப் பழம் என்று கூறுவர். தெய்வத் திருமணங்கள் பல பங்குனி உத்திரத் திருநாளில் நடைபெற்ற தாகப் புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக பங்குனி உத்திர திருநாளை கல்யாண விரத நாள் என்று கூறுவர்.
சிவன்-பார்வதி திருமணம் நடந்த தினம் பங்குனி உத்திரத் திருநாள் தான் அன்று காமாட்சியாக இறைவன் கரம்பித்தாள் இறைவி. தெய்வாணையை முருகப் பெருமாள் திருமணம் செய்து கொண்டதும் வள்ளித் குறத்தி அவதரித்த பெருமையும் பங்கு உத்திரத் திருநாளுக்கு உண்டு.
பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து தம்பதிகளாய் தினமும் தெய்வங்களை வழிபட்டால் பாவங்கள் விலகி மாங்கல்ய பலம் பெருகும் எனப்புராணங்கள் கூறுகின்றன.
பனிக்காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பமாகும். இம் மாதத்தில் பெய்யும் மழையை பங்குனிப் பழம் என்று கூறுவர். தெய்வத் திருமணங்கள் பல பங்குனி உத்திரத் திருநாளில் நடைபெற்ற தாகப் புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக பங்குனி உத்திர திருநாளை கல்யாண விரத நாள் என்று கூறுவர்.
சிவன்-பார்வதி திருமணம் நடந்த தினம் பங்குனி உத்திரத் திருநாள் தான் அன்று காமாட்சியாக இறைவன் கரம்பித்தாள் இறைவி. தெய்வாணையை முருகப் பெருமாள் திருமணம் செய்து கொண்டதும் வள்ளித் குறத்தி அவதரித்த பெருமையும் பங்கு உத்திரத் திருநாளுக்கு உண்டு.
பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து தம்பதிகளாய் தினமும் தெய்வங்களை வழிபட்டால் பாவங்கள் விலகி மாங்கல்ய பலம் பெருகும் எனப்புராணங்கள் கூறுகின்றன.
சனிப்பிரதோஷமான இன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவது சகல தோஷங்களும், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களும் விலகும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
8-4-2017 சனிப்பிரதோஷம்
தோஷங்களை நீக்கும் நாளே பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் சிவபெருமானையும், நந்தியையும் வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை. சிவபெருமானை தேவர்கள் வழிபடுவதற்கு என்று ஒரு காலம் உண்டு. அதே போல மனிதர்கள் சிவனை வழிபடுவதற்காக அமையப்பெற்றதே பிரதோஷ காலம் ஆகும். இதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உரியது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களின் வழிபாட்டுக்குரியது என்கிறது புராணங் கள்.
தேய்பிறை பிரதோஷங்கள் அனைத்தும் சிறப்பு மிக்கதாகும். பவுர்ணமிக்கு பிறகான தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதியை ‘சங்கடஹர சதுர்த்தி’ என்று அழைக் கிறோம். அதே போலவே தேய்பிறையில் வரும் சஷ்டியிலும் விரதம் இருப்பது நம்மவர்களின் வழக்கம். தேய்பிறையில் வரக் கூடிய திரயோதசி திதியைத்தான் ‘பிரதோஷம்’ என்கிறோம். இந்த நாள் எப்பொழுதும் மனிதர்களுக்காக உள்ளது. அதனால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சைவ சமயத்தைப் பொறுத்தவரை, பிரதோஷம் என்பது முக்கியமான விரதம் ஆகும்.
பிற நாட்களில் சிவபெருமானை மட்டும் வணங்குவதே சிறப்புக்குரியது. ஆனால் பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவனோடு, நந்தியும் சேர்ந்து காட்சி தந்து அருள்பாலிப்பார். நந்தி பகவான் அந்த பிரதோஷ கால நேரத்தில் தன்னுடைய தவத்தை துறந்து விட்டு மக்களுக்காக வேண்டியதை நிறைவேற்றக்கூடியவர். அதனால்தான் பிரதோஷ நாள் அன்று, நந்தியின் காதில் சிலர் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற ரகசியத்தைச் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

பிரதோஷ தினத்தில் எல்லா வேளைகளையும் உணவை தவிர்த்து விரதம் மேற்கொள்ள வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பிரதோஷ காலம் வரை, அதாவது மாலை 6 மணி வரை பிரதோஷ வழிபாட்டை முடித்து விட்டு உணவு உட்கொள்ளலாம். பொதுவாக பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால், நமது உடல் நலம் பெறுகிறது. அது ஒரு அற்புதமான வரத்தை வழங்கும் நாளாகும். ஏனென்றால் சந்திரன் சூரியனை நோக்கி பயணிக்கக்கூடிய காலகட்டம் அது. சிறப்பு மிகுந்த அந்த திரயோதசி திதியில் விரதம் இருந்தால் வாயுக்கோளாறு, வயிற்றுக்கோளாறு போன்றவை நீங்கும். உடல் நிலை, மனநிலை சீராகும். மன அழுத்தம் குறையும்.
பிரதோஷ தினத்தன்று, சிவபெருமானுக்கும், நந்தியம்பெருமானுக்கும் கறந்த பசும் பால் கொடுத்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுப்பது விசேஷம். அது தவிர இளநீர் வழங்கியும் ஈசனை வழிபடலாம். சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும்.
இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை, பசும்பால், இளநீர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து வழி படுங்கள். இந்தப் பொருட்களை விட, தும்பைப் பூ மாலை சூட்டி, சிவபெருமானை வழிபடுவது சகல தோஷங்களும், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களும் விலகும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மாதங்களில் வரும் பவுர்ணமிக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். பவுர்ணமி விரத வழிபாட்டால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
* சித்திரை மாத பவுர்ணமி - எமதர்மனின் கணக்கர் சித்ரகுப்தன் அவதரித்த நாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்.
* வைகாசி மாத பவுர்ணமி - முருகப் பெருமான் ஆறுமுகங்களுடன் அவதரித்த நாள். வைகாசி விசாகம். அன்றைய தினம் விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும்.
* ஆனி மாத பவுர்ணமி - காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா. இந்த நாளில் விரதம் இருந்தால் இறை தரிசனம் சித்திக்கும்.
* ஆடி மாத பவுர்ணமி - கஜேந்திர மோட்சம் நடந்த நாள். அன்றைய தினம் அம்மன் ஆலயத்தில் மாவிளக்கு வைப்பது மங்கள வாழ்வை நல்கும்.
* ஆவணி மாத பவுர்ணமி - அன்றைய தினம் விரதம் இருப்பது சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும்.
* புரட்டாசி மாத பவுர்ணமி - இந்த நாளில் விரதம் இருந்தால் முன்னோர் களின் ஆசியைப் பெறலாம்.

* ஐப்பசி மாத பவுர்ணமி - அன்னாபிஷேக திருநாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் வறுமை அகலும்.
* கார்த்திகை மாத பவுர்ணமி - கார்த்திகை தீபத் திருநாள். அன்றைய தினம் வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும்.
* மார்கழி மாத பவுர்ணமி - ஆருத்ரா திருநாள். அன்றைய தினம் ஆருத்ரா தரிசனம் பார்த்தால், சிறப்பான எதிர்காலம் அமையும்.
* தை மாத பவுர்ணமி - தைப்பூசத் திருநாள். இந்த நன்னாளில் விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்.
* மாசி மாத பவுர்ணமி - மாசி மகம் திருநாள். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் ஜெகத்தை ஆளும் வாய்ப்பு உண்டாகும்.
* பங்குனி மாத பவுர்ணமி - பங்குனி உத்திர நாளான அன்றுதான் முருகன் - வள்ளி திருமணம், சிவ- பார்வதி திருமணம் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் வழிபாடு செய்தால் வரன்கள் வாசல் தேடி வரும்.

ஜென்ம நட்சத்திரமன்று, சிவலிங்கத்தை தழுவியபடி இருக்கும் அம்பாளின் படத்தை வைத்து வழிபாடு செய்து வந்தால் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
சில காரியங்கள், ஜென்ம நட்சத்திரத்தில் செய்தால் சிறப்பான பலனைக் கொடுக்கும். ஆனால் இன்னும் சில காரியங்களை ஜென்ம நட்சத்திரத்தில் செய்யக்கூடாது என்பார்கள். கருத்து வேறுபாடு நிறைந்த தம்பதியர் மீண்டும் அன்னியோன்யமாக வாழ, ஜென்ம நட்சத்திரத்தில் விரதமிருந்து அம்பிகையை வழிபடுவது நல்லது.
தம்பதியர் ஒற்றுமையைப் பலப்பட வைக்கும் ஆலயங்கள் தமிழகத்தில் நிறைய உள்ளன. அவற்றில் அவரவருக்கு ஏற்ற கோவில் எது என்பதைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ற வழிபாடுகளை மேற்கொள்ளலாம். சிவனைப் பிரிந்த உமாதேவி, மாங்காட்டில் தவமிருந்து தன் ஜென்ம நட்சத்திரமன்று ‘மணல்’ சிவலிங்கம் செய்து வழிபட்டார்.

அதன்பிறகே சிவபெருமானுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் கிடைத்தது. எனவே ஜென்ம நட்சத்திரமன்று, சிவலிங்கத்தை தழுவியபடி இருக்கும் அம்பாளின் படத்தை வைத்து விரதமிருந்து வழிபாடு செய்யலாம். காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்குச் சென்றும் வழிபடலாம்.
சிவகங்கை மாவட்டம் இளையாற்றங்குடி என்ற ஊரிலும் குழையத் தழுவிய காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. பிரிந்தவரை இணைக்கும் ஆற்றல் இந்த அம்மனுக்கும் உண்டு. ஒவ்வொரு மாதமும் வரும் ஜென்ம நட்சத்திர தேதியை குறித்து வைத்துக்கொண்டு, இங்கு வந்து விரதமிருந்து வழிபாடு செய்தால் கண்டிப்பாக நற்பலன் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

ராம நவமி விரதம் இருப்பவர்கள் குடும்பத்தில் குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும். ராம நவமி விரதம் அனுஷ்டிக்கும் முறையை பார்க்கலாம்.
5-4-2017 இன்று ராமநவமி
திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்கதாகவும், அறம் நிறைந்ததாகவும் உள்ளது ராமாவதாரம். மனிதன் நீதிமுறைகள், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதற்காக மண்ணில் அவதரித்தார் ஸ்ரீராமர். அவர் அவதரித்த நாள் ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது.
அயோத்தியை ஆட்சி செய்து வந்தார் தசரதன் என்ற சக்கரவர்த்தி. அவருக்கு கோசலை, சுமித்ரை, கைகேயி என மூன்று மனைவிகள். உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டிய தசரதனுக்கு, நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லாதது பெரும் கவலையைத் தந்தது. இதுகுறித்து தனது குல குருவான வசிஷ்டரிடம் கூறினார்.
வசிஷ்டரின் ஆலோசனைப்படி புத்திர பாக்கியத்திற்கான யாகத்தை நடத்தினார். அந்த யாகத்தில் தோன்றிய யட்சன், பிரசாதம் நிறைந்த ஒரு கிண்ணத்தை தசரதனிடம் கொடுத்தான். அதனை தனது மூன்று மனைவிகளுக்கும் கொடுத்தார் தசரதன். அதன் பயனாக அவர்கள் மூவரும் கர்ப்பம் தரித்தனர்.

பங்குனி மாதம் நவமி திதியில் கோசலை ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தையே உலகை அறத்தால் ஆள வந்த ராமபிரான். கோசலையைத் தொடர்ந்து கைகேயிக்கு பரதனும், சுமித்ரைக்கு லட்சுமணன், சத்ருகனன் ஆகியோரும் பிறந்தனர். வளர்ந்த காலத்திலேயே ராமன் பல அற்புதங்களை நிகழ்த்தினார். விசுவாமித்திரருடன் காட்டிற்குச் சென்று தாடகை என்ற அரக்கியை வதம் செய்தார். பின்னர் மிதிலை நகரில் ஜனகரின் அரண்மனைக்குச் சென்று பரமேஸ்வரனின் வில்லை உடைத்தார்.
கைகேயியின் வரத்தால் காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ராமனுக்கு ஏற்பட்டது. அவருடன் சீதையும், லட்சுமணனும் சென்றனர். காட்டில் சென்றபோது, அவரது பாதம் பட்டு, பல ஆண்டுகளாக கல்லாகக் கிடந்த அகலிகை பெண்ணாக உருமாறினாள்.
இதற்கிடையில் சீதையை ராவணன் கவர்ந்து சென்றான். அவனைத் தேடுவதற்காக சுக்ரீவன், அனுமன் ஆகியோரின் உதவியை நாடினார். கடலில் நடுவில் பாலம் அமைத்து இலங்கைச் சென்று ராவணனுடன் போரிட்டு அவனை அழித்தார். சீதையையும் மீட்டார். பின்னர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, அயோத்தி திரும்பி அரச பட்டத்தை ஏற்றார்.
ராமனைக் காட்டிலும் ராம நாமமே உயர்ந்தது என்பார்கள் ஆன்மிகப் பெரியோர். ராம நாமத்தை உச்சரித்தால் ராமனின் ஆசியோடு, அவரது பக்தனான அனுமனின் ஆசியையும் பெறலாம். ராமநவமி நாளில் ராமபிரானை வழிபட்டால் நன்மைகள் பலவும் வந்து சேரும்.

விரதம் இருக்கும் முறை :
ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டின் போது நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை போன்ற வற்றை படைக்கலாம். ராமநவமி அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும்.
அன்றைய தினம் ராமர் கோவில் களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும்.
குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.
ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.

சீரடி சாய்பாபாவின் அவதார திருநாளான நாளை (புதன்கிழமை) விரதமிருந்து சாய்நாதரை ஆரத்தி செய்து வழிபடுபவர்களுக்கு அளவில்லாத நன்மைகளும், புண்ணியமும் தேடி வரும் என்பது உறுதி.
நாளை (5.4.2017) சீரடி சாய்பாபா அவதார திருநாள்
ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய்
ராம அவதாரம் மிகவும் மகிமை வாய்ந்தது. ஏனெனில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராம அவதாரம் மட்டுமே முழுமையானதாகக் கருதப்படுகிறது.
பங்குனி மாதம் நவமி திதியன்று ராமபிரான் பிறந்தார். இதனால் அவரது பிறந்த நாள் ‘‘ராம நவமி’’ என்று கொண்டாடப்படுகிறது. ராமர் பிறந்த போது 5 கிரகங்கள் உச்சத்தில் இருந்தன. எனவே ராமர் ஜாதகத்தை எழுதி பூஜையில் வைத்து வழிபட்டால் கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
அது போல ராம நாமமும் மகத்துவம் வாய்ந்தது. ராம நவமி தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும். அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடக்கும் பட்டாபிஷேகத்தை கண்டு களிப்பது மிகவும் நல்லது.
ஸ்ரீராமஜெயம் என்ற மந்திரத்தை தினமும் 108 தடவை உச்சரித்தால் ஆணவம் உள்ளிட்ட அனைத்து தீய குணங்களும் விலகும். மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் குடி கொள்ளும்.
ராமநவமி தினத்தன்று ஏழை-எளியவர்களுக்கு சாதம், நீர் மோர், பானகம், வடை போன்றவற்றை தானம் செய்வதுடன் விசிறிகளையும் வாங்கி ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.
பொதுவாக அஷ்டமி, நவமி தினங்களில் நாம் எந்த நல்ல செயலையும் தொடங்குவதில்லை. என்றாலும் நவமி திதியில் ராமர் பிறந்ததால் நவமி திதிக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது. இதனால் ராமநவமி தினம் ஆண்டு தோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ராம அவதாரத்துக்குப் பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆவணி தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் பிறந்தார். அந்த அவதாரம் நிறைவு பெற்ற பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில் சாய்பாபா அவதாரம் சமீபத்தில் நிகழ்ந்தது. சீரடியில் இருந்தபடி இந்த உலகையே ஆட்சி செய்த சாய்பாபாவின் அவதாரத் தினமாக ராமநவமி தினம் (5.4.17)கணிக்கப்பட்டுள்ளது.

மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரின் இறுதி இலக்கு என்ன? ஆனந்தமாக வாழ வேண்டும். இறுதியில் மறு பிறப்பு இல்லா முக்தியை பெற வேண்டும் என்பது தான். இந்த இரண்டையும் தரும் கண்கண்ட கடவுளாக, குருவாக, நம் கையை பிடித்து செல்லும் தோழனாக, வழிகாட்டியாக அவர் திகழ்கிறார்.
நம்மை பிறவிப் பிணியில் இருந்து மீட்டு துயர் துடைக்க வந்த அவதாரமாக அவர் இந்த பூமியில் தோன்றினார். அவர் எங்கு தோன்றினார்? எப்படி தோன்றினார்? எந்த ஆண்டு அவதாரம் எடுத்தார்? அவர் பெற்றோர் யார்? எங்கிருந்து அவர் சீரடிக்கு வந்தார்? எப்படி அவரால் கோடிக்கணக்கான மக்கள் மனதில் கடவுள் அவதாரமாக மாற முடிந்தது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் யாராலும் இன்று வரை பதில் சொல்ல முடியவில்லை.
கடவுள் அவதாரத்தை எப்படி சாமானிய மனிதர்களால் கணக்கிட்டு விட முடியும்? என்றாலும் ராம நவமி தினத்தை சீரடி சாய்பாபாவின் பிறந்த தினமாக-ஜெயந்தி தினமாகக் கொண்டாடும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் சீரடி சாய்பாபாவின் ஜெயந்தி தினம் நாளை மறுநாள் (புதன்கிழமை) உலகம் முழுவதும் உள்ள சாய் தலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.
“அனைத்து ஜீவராசிக்குள்ளும் கடவுள் இருக்கிறார்” என்பதை பாபா அழுத்தம் திருத்தமாக சொன்னார். அதனால்தான் அவரால் அனைத்து மதங்களுக்கும் தேவையான மரியாதையைத் தர முடிந்தது. இஸ்லாமியர்கள் வந்தால் அவர்களுடன் குர்ஆனில் கூறப்பட்டு இருப்பது பற்றி பேசுவார். விவாதிப்பார்.
அது போல இந்துக்கள் வந்தால் அவர்களுக்கு ராம மந்திரத்தைப் போதிப்பார்.
ஒரு தடவை இயேசுநாதர் பற்றி தரக்குறைவாகப் பேசிய பக்தரை கடும் கோபத்துடன் கண்டித்தார். அவரை மன்னிப்புக் கேட்க வைத்தார். இப்படி எந்த மதத்துக்குள்ளும் தன்னை அடைத்துக் கொள்ளாததால்தான் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் சாய்பாபாவை மனதார கடவுளாக ஏற்றுப் பூஜித்துப் போற்றினார்கள்.
பாபா எப்போதுமே, தான் கடைபிடிக்கும் வாழ்வியல் நடைமுறைகளை தனது பக்தர்களும் உளமாற கடைபிடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதன் காரணமாகத்தான் அவரால் சீரடி தலத்தில் முஸ்லிம்களின் விருப்பப் பண்டிகையான சந்தனக்கூடு விழாவையும், இந்துக்களின் பண்டிகையான ராமநவமியையும் ஒரே நாளில் சீரும் சிறப்புமாக நடத்த முடிந்தது.

மத நல்லிணக்க விழாவாக ராமநவமி-உர்ஸ் விழாக்களை ஒருங்கிணைத்து நடத்தினார். அதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக ஸ்ரீசாய் சத்சரிதம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீரடி அருகில் உள்ள கோபர்கானில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் கோபால்ராவ் குண்ட். இவர் பாபாவின் அதி தீவிர பக்தர்.
மூன்று பெண்களைத் திருமணம் செய்தும் கோபால்ராவ் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தார். 1897ம் ஆண்டு ஒரு தடவை பாபா வழங்கிய அருளாசியால் அவருக்கு குழந்தை பிறந்தது.
இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த கோபால்ராவ், தனது நன்றியை வெளிப்படுத்தும் வகையில் பாபா பெயரில் உருஸ் எனும் திருவிழா நடத்த விரும்பினார். தாத்யா பாட்டீல், சாமா ஆகியோர் மூலம் பாபாவிடம் பேசி அவர் உருஸ் விழா நடத்துவதற்கான அனுமதியை பெற்றார். அடுத்து எந்த தினத்தில் உருஸ் விழாவை நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. அதையும் சாய்பாபாவிடமே கேட்டனர்.
உடனே பாபா கொஞ்சமும் தயக்கமின்றி ராமநவமி தினத்தன்று உருஸ் திருவிழாவை நடத்துமாறு உத்தரவிட்டார். உருஸ் விழாவுக்கு வந்திருந்த “சாய் சகுணோபாசனா” எனும் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணராவ் ஜாகேச்வர் பீஷ்மா, உருஸ் தினத்தன்று ராமநவமி பண்டிகையையும் கொண்டாடினால் என்ன என்று மற்றவர்களுடன் விவாதித்தார். பாபாவின் தீவிர பக்தர்களில் ஒருவரான காகா மாஜினியும் ராமநவமி தினத்தை கொண்டாடலாம் என்றார்.
அந்த ஆண்டு உருஸ் திருவிழா, ராமநவமி விழாவாகவும், சந்தனக்கூடு விழாவாகவும் களை கட்டியது. பாபாவுக்கு மாலை அணிவித்து கொண்டாடினார்கள்.
1913-ம் ஆண்டு முதல் ராமநவமி திருவிழா 7 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் திருவிழாவாக மாறியது. 7 நாட்களும் கீர்த்தனைகள் பாடப்பட்டன.

பாபாவின் அருளால் சீரடியில் நடந்த இந்த விழாக்களில் முதலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். தற்போது லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்கிறார்கள்.
உருஸ்-ராமநவமி- சந்தனக்கூடு விழாவுக்காக பாபா பயன்படுத்த அழகான குதிரைகள், வெள்ளி ரதம், பல்லக்கு போன்றவை பாபாவுக்கு பணக்கார பக்தர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே அவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும்.
ஆனால் எந்த ஆடம்பர, அலங்கார பொருளும் சாய்பாபா நடவடிக்கைகளை மாற்றி விடவில்லை. அவர் ஏதும் இல்லாத சன்னியாசி போலவே சீரடி மசூதியில் வாழ்ந்தார். ராமநவமி நாட்களில் சாய்பாபாவுக்கு அழகு நிறைந்த பட்டுச்சட்டைகள், சால்வைகள் அணிவிக்கும் ஒரு புதிய பழக்கம் தோன்றியது. சாய்பாபாவை சீரடி சமஸ்தானத்தின் மகாராஜாவாக கருதி பக்தர்கள் இந்த அன்பளிப்புகளை வழங்கினார்கள்.
ஆனால் பட்டு சட்டைகள், சால்வைகளை பாபா ஒரு போதும் நிரந்தரமாக அணிந்து கொண்டதே இல்லை. எந்த பக்தர் அந்த பட்டுச்சட்டையை வாங்கி வந்தாரோ அவரிடமே திருப்பிக் கொடுத்து விடுவார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், மறு மலர்ச்சியையும் ஏற்படுத்திய பாபா, இப்போதும் கற்பனைக்கு எட்டாத, நினைத்துப் பார்க்க முடியாத அற்புதங்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறார். அவரை நம்பி, அவர் பாதங்களை இறுகப்பற்றி கொண்ட ஒவ்வொரு வரும், இந்த பிறவியை இன்னலின்றி கடப்பது உறுதி.
அவரது நாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். “ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய, ஜெய சாய்” என்ற மூல மந்திரத்தை சொல்பவர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் நிச்சயம் பெறுவார்கள். பாபாவை அவர்கள் கண்கண்ட தெய்வமாக பார்க்கிறார்கள். அவர்கள் வாழ்வில் பாபா இரண்டற கலந்துள்ளார்.
பாபாவுக்கு நைவேத்தியம் படைக்காமல், ஆரத்தி காட்டாமல் நிறைய பேர் தண்ணீர் கூட குடிப்பதில்லை. இவர்கள் பாபாவின் அருள் மழையில் நனைபவர்கள். ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
நாட்டில் அதர்மம் அதிகரிக்கும் போது, அதை அழித்து தர்மத்தை நிலைநாட்ட இறைவனே பூமிக்கு இறங்கி வந்து அவதார புருஷர்களாக பிறப்பது வழக்கம். அந்த வகையில் பாபா கலியுகத்தின் அவதார புருஷர்.
பொதுவாக சாய்நாதரின் அருள் பெற தினசரி வழிபாடு, விரதம், 4 கால ஆரத்தி செய்வதுண்டு. இதில் 4 கால ஆரத்தி மிகவும் சக்தி வாய்ந்தது. சீரடி சாய்பாபா உயிரோடு இருக்கும்போதும் 4 வேளை ஆரத்தி அவருக்கு காட்டப்பட்டது. அதே போன்று சீரடி சாய்மந்திரில் தினமும் நான்கு வேளை ஆரத்தி நடைபெறுகிறது.
சீரடியில் ஆரத்தி நடைபெறும் அதே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள சாய் தலங்களில் ஆரத்தி நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்த 4 வேளை ஆரத்தியை, செய்வதும், ஆரத்தியில் கலந்து கொள்வதும் சிறப்பான வாழ்வை தரும் என்பது உறுதி.

ஆரத்தி மூலமாக சத்குருவான சாய்பாபாவை வணங்கினால் வாழ்க்கையில் ஒழுக்கமும், பாதுகாப்பும் தேடி வரும். சாய்பாபாவுக்கு தினமும் ஆரத்தி காட்டுவதை பழக்கப்படுத்திக் கொண்டால் நமக்குள் புத்துணர்ச்சி கிடைக்கும்.
நிறைய பக்தர்கள் வாழ்வில் இந்த ஆரத்தி மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காகட ஆரத்தி நாம் நலமாக இருக்க உதவுகிறது. மதிய வேளை ஆரத்தி நமது வாழ்வில் எந்த ஒரு சிறு துன்பம் வருவதையும் தடுத்து நிறுத்துகிறது. மாலை நேர தூப ஆரத்தி, நமது மனம் போன போக்கில் போகாமல் சாய்நாதரை சரண் அடைய உதவுகிறது.
இரவு நேர சேஜ் ஆரத்தி நாம் தினமும் பெறும் நன்மைகளுக்கு நன்றி தெரிவிப்பதாக உள்ளது. ஆரத்தி செய்யப்படும் இடங்களிலும், ஆரத்தி செய்பவர்களிடமும் நான் என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் என்று சாய்நாதர் பல தடவை உறுதிபட கூறியுள்ளார்.
எனவே அவரது அவதார திருநாளான நாளை (புதன்கிழமை) சாய்நாதரை ஆரத்தி செய்து வழிபடுபவர்களுக்கு அளவில்லாத நன்மைகளும், புண்ணியமும் தேடி வரும் என்பது உறுதி.
சாய்நாதர் திருவடியே
சங்கடம் தீர்க்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்தளிக்கும் திருவடியே
தெய்வபாபா திருவடியே
தீவினை தீர்க்கும் திருவடியே
உயர்வை அளிக்கும் திருவடியே போற்றி
மயிலை கோவிலில் பாபா பிறந்தநாள்
மயிலாப்பூரில் உள்ள ஆலயத்தில் வருகிற 5-ந்தேதி சாய்பாபா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை 9 மணிக்கு ருத்ராபிஷேகம், 11.30 மணிக்கு மகா தீபாராதனை, 12.00 மணிக்கு ஆரத்தி, இரவு 7.45 மணிக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலம் மயிலையில் நான்கு மாடவீதிகளையும் சுற்றி வரும். இதற்கான வாகன அலங்காரம் மட்டும் சுமார் ரூ.1 லட்சம் செலவில் செய்யப்பட இருப்பதாக ஆலய நிர்வாக தலைவர் தங்கராஜ் தெரிவித்தார்.

மகாலட்சுமிக்கு உகந்த வழிபாடுகளில் வரலட்சுமி விரதமும் ஒன்று. இன்று வரலட்சுமி விரதம் தோன்றிய கதையை விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
மகத நாட்டில் குஞ்சினாபுரம் என்ற ஊரில் சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். இவள் தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல், இறைவனாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகா லட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள்புரிந்தார்.
‘என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்’ என்று அருளிய மகாலட்சுமி, சாருமதிக்கு வரலட்சுமி நோன்பு இருப்பதன் வழிமுறையைக் கூறி, அதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதை அப்படியே செய்தாள் சாருமதி. அவள் பெற்ற நன்மைகளை கண்ட பெண்கள், தாங்களும் மகாலட்சுமிக்காக விரதம் இருக்க தொடங்கினர். விரைவில் அந்த நாட்டு மக்கள் முழுவதும் விரதம் இருக்க தொடங்கினர். நாடு சுபீட்சம் அடைந்தது.
பத்ரச்ரவஸ் என்ற மன்னன், மகாவிஷ்ணுவின் சிறந்த பக்தனாக திகழ்ந்தான். அவனது மனைவி சுரசந்திரிகா. இந்த தம்பதிகளின் மகள் சியாமபாலா. இவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

காலம் கடந்தது. ஒரு சமயம் மகாலட்சுமி தாயார், வயதான சுமங்கலியின் வேடம் தரித்து, சுரசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தார். சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாக கூறி, அதை கடைப்பிடிக்கும் படி கூறினார். மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள்.
அப்படி விரட்டப்பட்ட லட்சுமி தேவியை, அரசியின் மகள் சியாம பாலா சமாதானப்படுத்தி, அவரிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்றாள். பக்தியுடன் விரதத்தை கடைப்பிடித்தாள். விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள்.
ஆனால் லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோர், வறுமையில் வாடத்தொடங்கினர். விவரம் அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால் அவர்கள் செய்த தீவினையால் அது கரியாகி விட்டது. இதையடுத்து சியாமபாலா, தன் தாயான சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப்பற்றி சொல்லி பூஜை செய்யும் படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்து பூஜை செய்தாள். அதன் பிறகு இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தது.