என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- அந்த நாய்கள் யாருக்கும் எந்த துன்பமும் செய்வதில்லை.
- பக்தர்கள் தங்களால் இயன்ற உணவை அந்த நாய்களுக்கு வழங்கி விட்டு செல்கிறார்கள்.
காலபைரவரோடு இருக்கும் நான்கு நாய்களையும் வேதங்கள் நான்காகக் கூறியுள்ளனர்.
எப்போதும் இறைவனோடு சேர்ந்தே இருப்பவை வேதங்கள் என்பதை உணர்த்தவே இவர் கொண்ட கோலம் கால பைரவ மூர்த்தி கோலமாகும்.
பைரவமூர்த்தியோடு நாய் இருப்பதற்கு மேலும் சில காரணங்களைக் கூறுவது வழக்கத்தில் உள்ளது.
அவை, காவலுக்குத் துணை புரியும் நாய் காலத்தை அறிந்து சொல்லும் (உணர்த்தும்) சூக்கும புத்தி கொண்டது. குறிப்பாக எந்த உயிரையும் எடுக்க காலன் வருவது, கண்களுக்குத் தெரியாத தீய சக்திகள் வருவது போன்றவற்றைக் கண்டு அவற்றை தெரிவிக்கும் தன்மை நாய்க்கு உண்டு என்றும் சொல்வார்கள்.
அஷ்டமி திதி நாட்களிலும் சனிக் கிழமைகளிலும் பைரவரை முறைப்படி அர்ச்சித்து வழிபட்டால் சனி தோஷங்களும் சகலவிதமான தோஷ்ங்களும் நீங்கும்.
ராமகிரி தலத்தின் பிரதான மூர்த்தி காலபைரவர் என்பதால் என்னவோ அந்த கோவிலின் அனைத்து பகுதிகளிலும் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
எங்கு பார்த்தாலும் நாய்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
அந்த நாய்கள் யாருக்கும் எந்த துன்பமும் செய்வதில்லை.
பக்தர்கள் தங்களால் இயன்ற உணவை அந்த நாய்களுக்கு வழங்கி விட்டு செல்கிறார்கள்.
பைரவர் சந்நிதியில் வழிபடும் போது பின்வரும் பாடலைப் பாடி வழிபட வேண்டும்.
'தளம் பொலி மலரோன் ஆதி வானவர் தாழ்ந்து போற்ற
உளம் பொலி காசி மேஷம் உயிர்கள் செய் பாவமெல்லாம்
களம் பொழியாது தண்டனை கண்டள பொழிந்து முந்தி
வளம் பொலி வகை செய் கால பைரவற் கன்பு செய்வாம்!
ஸ்ரீபைரவர் காயத்ரி
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கஸிஷ்ணாய தீமஹி
தந்நோ பைரவ; ப்ரசோதயாத்.
- இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும்.
- இவ்வாறு 16 சனிக் கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனி பகவானின் தாக்கம் நின்றுவிடும்.
சனி பகவானின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் வழிபாடே சிறந்தது ஆகும்.
புதிய நீலத்துணியில் கறுப்பு எள்ளை வைத்து முடிய வேண்டும்.
பிறகு அதை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும்.
பிறகு அதை இரும்புக்கிண்ணத்தினுள் வைக்க வேண்டும்.
வைத்தப்பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.
அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும்.
அந்த நீலப் பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும்.
இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும்.
இவ்வாறு 16 சனிக் கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனி பகவானின் தாக்கம் நின்றுவிடும்.
- ராமகிரி ஆலயத்தில் முதலில் தோன்றி அருள்பாலித்தவர் ஸ்ரீகால பைரவர்.
- அதனால்தான் இத்தலத்தை கால பைரவ ஷேத்திரம் என அழைக்கிறார்கள்.
ராமகிரி ஆலயத்தில் முதலில் தோன்றி அருள்பாலித்தவர் ஸ்ரீகால பைரவர்.
அதனால்தான் இத்தலத்தை கால பைரவ ஷேத்திரம் என அழைக்கிறார்கள்.
தனது பத்தினி ஸ்ரீகாளிகா தேவியுடனும் எதிரில் நாய் வாகனத்துடனும், ஐந்து கோஷ்ட மூர்த்திகள் உள்ள பிரத்யேகமான கர்ப்ப கிரகத்தில் சூலம், உடுக்கை, கத்தி, தண்டம், முறையாக வலது நான்கு கரங்களிலும், அங்குசம், பாசம், மணி, கபாலம் முதலியவற்றை இடது நான்கு கரங்களிலும் தரித்து நிர்வாண கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
சூரியன், சந்திரன், கங்கை உள்ள ஜடாமுனியுடன் கோரைப்பற்கள் உடைய முகத்துடனும், தென்திசை நோக்கி எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீகால பைரவ மூர்த்தி.
பெயர் மாற்றம்
ராமகிரி ஊரை ஆதி காலத்தில் "திருக்காரிக்கரை" என்று அழைத்தனர்.
ஸ்ரீராமரின் பூஜை நிமித்தமாக கொண்டு வரப்பட்ட சுயம்புலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதன் காரணமாக "ராம்" என்ற நாமமும், ஆஞ்சநேயர் சாபத்தால் மடுகு மறைந்து "கிரி" (மலை) ஏற்பட்டதால் கிரி என்ற பதமும் சேர்த்து அன்று முதல் திருக்காரிக்கரை கிராமத்திற்கு ராமகிரி என்ற புனிதப் பெயர் உண்டாயிற்று.
காலமாற்றத்தால் திருக்காரிக்கரை என்ற பெயர் மறைந்து ராமகிரி என்ற பெயர் நிலைத்து நின்று விட்டது.
- சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.
- எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.
சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.
எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.
சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர்
வைகாசி தாதா - ருரு பைரவர்
ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர்
ஆடி அரியமான் -கபால பைரவர்
ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி பகன் - வடுக பைரவர்
ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர்
கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர்
மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர்
தை விஷ்ணு - குரோதன பைரவர்
மாசி வருணன் - ஸம்ஹார பைரவர்
பங்குனி பூஷா -சட்டநாத பைரவர்.
ராமகிரி ஆலயத்தில் வாலீஸ்வரர் சன்னதிக்கு அருகே மரகதாம்பிகை தனி சன்னதியில் உள்ளார்.
சுருட்டப்பள்ளி தலத்திலும் அம்பாளின் பெயர் மரகதாம்பிகைதான்.
இந்த இரண்டு மரகதாம்பிகையையும் ஒரே நாளில் தரிசனம் செய்வது மிகுந்த நன்மை தரும் என்பது சித்தூர் மாவட்ட மக்கள் நம்புகிறார்கள்.
ராமகிரி தலம் ஆதிகாலத்தில் தொண்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.
ஆந்திரா மாநிலம் பிரிந்தபோதுதான் அது தனியாக சென்று விட்டது.
அந்த காலத்து தொண்டை மண்டலத்தில் 5 மரகதாம்பிகை ஆலயங்கள் மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்று இருந்தன.
அதில் தற்போது 2 ஆலயங்கள் சுருட்டப்பள்ளியிலும், ராமகிரியிலும் இருப்பது தெரிய வந்தது.
இந்த ஆலயங்களை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதியில் மேலும் 3 மரகதாம்பிகை ஆலயங்கள் உள்ளன.
இந்த 5 மரகதாம்பிகை ஆலயங்களுக்கு ஒரே நாளில் சென்று அம்பிகையை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
ராமகிரி மரகதாம்பாள் சன்னதி சுவற்றில் ஸ்ரீவாலீஸ்வரர் அந்தாதி பாடல் ஒன்று எழுதப்பட்டுள்ளது.
மகரதாம்பிகை புகழ் பாடும் அந்த பாடல் வருமாறு:
மரகதமே,அதிசுகமே மனம் நிறையும் சருதிலயமே
சரனெனவே உளயடைவோர்க்கருளிறியும் மதிவதன்
திரனெல்லாம் தந்தெனையே உன் புகழைப்பாட வைத்தாய்
திருமாலின் தங்கச்சியே குருவாக நிற்பாய்...
* வாழவொரு வழிகாட்டும் வடி வழகி எந்தன்
தோழியைப்போல் துணை நிற்பாள் தூய "மரகதமாய்"
ஆழம் நிறை கடலாகும் அவள் தனையே அறிய
அவனிதனில் முற்பட்டோர்க் கல்லல் என்று மிலையே....
* 'இலை மட்டு முண்டிறைவன் நிலைகன்ட அபர்னை
சிலையாக நிற்கின்றாள் "திருராமகிரியில்"
தொலையாத வினையில்லை இவள் பாதம் பற்ற
தொல்லுலகில் தூயவளாம், இவளை நீ நாடு...
-ஸ்ரீவாலீஸ்வரர் அந்தாதி (1:41:42)
- மோட்சத்திற்கு அதிபதி சிவன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு.
- சிவனின் 64 அவதாரங்களில் ஒன்றான கால பைரவரே மோட்சத்துக்கு அதிபதி ஆவார்.
மோட்சத்திற்கு அதிபதி சிவன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு.
சிவனின் 64 அவதாரங்களில் ஒன்றான கால பைரவரே மோட்சத்துக்கு அதிபதி ஆவார்.
அதனால் தான் காசி தலத்திற்கு கால பைரவர் அதிபதியாக உள்ளார்.
ஒவ்வொருவருடமும் தர்ப்பணம் பூஜையை ஆற்று ஓரமும், கடற்கரை ஓரமும் அல்லது குருமார்களை வைத்து வீட்டிலும் செய்யலாம்.
வீட்டில் செய்யும் பூஜையை சிரார்த்தம்(திதி) பூஜை என்பார்கள். இறுதியாக பிண்டங்களை கடலிலோ,ஆற்றிலோ கரைக்கலாம்.
மோட்ச தீபம் சிவனுக்கு ஏற்றக்கூடாது.அது பைரவருக்கு உரியது, சிரார்த்தம் பூஜை அல்லது மோட்ச தீபம் பைரவருக்கு ஏற்றி, மோட்சத்துக்குரிய அர்ச்சனை செய்த பின் கடைசியில் சிவனுக்கோ அல்லது விநாயகருக்கோ நெய்தீபம் ஏற்றி குடும்ப அர்ச்சனை மட்டும் செய்ய வேண்டும்.
பைரவருக்கு சாம்பராணி தைல அபிஷேகமும் கதம்ப சாதம் நெய்வேத்தியமும் மிகவும் பிடித்தமானவை.
எனவே இவற்றை எல்லா பூஜைகளுக்கும் பயன்படுத்தலாம்.
- ஏழைப் பெண்கள் அவர்கள் குலவழக்கப்படி கொடுத்தால் பைரவர் அருளாசி கிடைக்கும்.
- பல மடங்கு செல்வம் பெருகும். அந்தச் செல்வம் நம்மிடம் நீங்காது நிறைந்து விளங்கும்.
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு நமது பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யும்போது சந்தனாதி தைலம், அத்தர், புனுகு, ஜவ்வாது, சிவப்பு அரளி மாலை அல்லது பூக்களை பூசாரியிடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு 62 வெள்ளிக்கிழமைகளுக்கு தொடர்ந்து வழிபாடு செய்துவர வேண்டும்.
31 வெள்ளிக்கிழமைகள் முடிந்த பின்னர் குறைந்தது ஒரு ஏழைப் பெண்ணுக்கு தாலியில் தங்கம் செய்து கொடுக்க வேண்டும்.
ஏழைப் பெண்கள் அவர்கள் குலவழக்கப்படி கொடுத்தால் பைரவர் அருளாசி கிடைக்கும்.
பல மடங்கு செல்வம் பெருகும். அந்தச் செல்வம் நம்மிடம் நீங்காது நிறைந்து விளங்கும்.
- பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும்.
- பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும்.
பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும்.
பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும்.
இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப் பெருமானை அடையும் சாகாக் கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்.
கும்பிட கால நேரம் கிடையாது
1. கால பைரவரை வணங்கினால் கெட்ட நேரம் நல்ல நேரம் ஆகும்.
2. நான்கு கைகளை உடையவர், சூலம், கபாலம், பாசகுஷம், டமரகம் ஆகியவை கைகளில் இருக்கும்.
3. இவரை கும்பிட கால நேரம் கிடையாது. 24 மணி நேரமும் வழிபடலாம். ஏனென்றால் கால நேரமே இவர்தான்.
4. படைத்தல், காத்தல், அழித்தல் என மும்மூர்த்திகளுக்கும் துணையாய் இருப்பவர் இவரே.
5. இவர் சைவம் மற்றும் வைணவம் இரண்டிற்கும் உரியவர்.
6.பாம்பினை பூனூலாகவும், அரைஞான் கொடியாகவும் அணிந்துள் ளார்.
7. இவரின் வாகனம் அசுரசுன வாகனம் (நாய்வாகனம்) மற்ற கோவிலில் சுன வாகனம் மட்டும் இருக்கும்.
8. நிர்வாண கோலம் இவருக்கு ஆனந்த கோலாகலம்.
9. வியாதிகளை குணப்படுத்துபவர்.
10. மேலும் ராமகிரி கோவிலில் நந்தி, நாய் வாகனம் இரண்டும் இருக்கும், மற்ற கோவிலில் நாய் வாகனம் மட்டும் இருக்கும்.
- மேலும் தினசரி 9 முறை 12 நாட்களுக்கு தொடர்ந்து படிக்க எதிரிகள் அஞ்சுவார்கள்.
- ஆணவங்களை அழிக்கும் பைரவர் உங்களுக்கு எதிராக ஏற்படும் இன்னல்களை நீக்குவார்.
ஞாயிற்றுக்கிழமை ராகுகால வழிபாட்டு நேரத்தில் நெய் தீபம் முப்பது வாரங்கள் ஏற்றி வர திருமணம் முடிவுக்கு வரும்.
ஏவல் பில்லி சூனியம் போன்ற
துஷ்ட காரியங்களின் தாக்கம் குறைய வேண்டுமா?
பைரவர் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் ஆலயங்கள் சென்று முறையாக அங்கு நடைபெறும் வழிபாடுகளை கடை பிடிப்பதால் இதுபோன்ற கஷ்டங்கள் விலகும். சிறப்பான பைரவர் தலங்களை இணைப்பில் காணவும்.
சத்துரு உபாதைகள் நீங்கவும் வழக்குகளில்
வெற்றி பெறவும் வேண்டுமா?
பைரவருக்கு இரவு நேர பூஜையும் செவ்வாய், வெள்ளி நாட்களில் யாகமும் சிறந்த பலனைக் கொடுக்கும்.
முழு மனதுடன் ஈடுபடும் பைரவர் பூஜை சத்ருக்களின் தொல்லை களை நீக்கிவிடும். தேன், உளுந்து வடை நிவேதனம் செய்ய வேண்டும்.
ஆபத்துக்கள் விலக என்ன செய்யலாம்?
கால பைரவ அஷ்டகத்தை தொடர்ந்து படிப்பதாலும், சிகப்பு அரளி மலரால் அர்ச்சிப்பதாலும், ஏற்பட இருக்கும் ஆபத்துகள் நிகழாமல் தடுக்கப்படும்.
மேலும் தினசரி 9 முறை 12 நாட்களுக்கு தொடர்ந்து படிக்க எதிரிகள் அஞ்சுவார்கள்.
ஆணவங்களை அழிக்கும் பைரவர் உங்களுக்கு எதிராக ஏற்படும் இன்னல்களை நீக்குவார்.
12 நாள் முடிவில் முடிந்தால் ஒன்பது நபர்களுக்கு அன்னதானம் செய்யவும்.
சனிக்கிழமைகளில் 6 எண்ணை தீபம் தொடர்ந்து 6 வாரங்கள் ஏற்றி சனீஸ்வரரை வணங்குவதால் எதிர்ப்புகள் நீங்கும்.
- நெய் தீபம் தொடர்ந்து முப்பது தினங்கள் ஏற்றி வர முன்னேற்றம் காணும்.
- ஏழு செவ்வாய் அல்லது ஏழு வெள்ளிக்கிழமைகளில் சிகப்பு மலரால் அர்ச்சித்து வர காரியம் கைகூடும்.
தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி செல்வரளி கொண்டு அர்ச்சனை செய்து ஏழை குழந்தைகளுக்கு ஆடை தானம் செய்ய பலன் கிட்டும்.
உத்தியோக உயர்வு, வியாபார உயர்வு கிடைக்க வேண்டுமா?
வளர்பிறை அஷ்டமி தினத்தில் சுவர்ண ஆகார்ஷன மந்திரமும் தியான மந்திரமும் சொல்லி 108 காசுகளால் அர்ச்சித்த பின்னர் அந்த காசுகளை பணப்பெட்டியில் அல்லது அலுவலக அறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நெய் தீபம் தொடர்ந்து முப்பது தினங்கள் ஏற்றி வர முன்னேற்றம் காணும்.
இழந்துவிடும் நிலையில் உள்ள சொத்து மீண்டும் வரவேண்டுமா?
மிளகு சிறிதளவு எடுத்து மூட்டையாக வெள்ளைத் துணியில் கட்டி நல்லெண்ணை தீபம் ஏற்றி துரோகம் செய்பவரை எண்ணி பொருள்கிட்ட வேண்டிக் கொள்வதுடன் இரண்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
ஏழு செவ்வாய் அல்லது ஏழு வெள்ளிக்கிழமைகளில் சிகப்பு மலரால் அர்ச்சித்து வர காரியம் கைகூடும்.
- தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு ஏற்ற நாள்.
- அந்த நாளில் விரதம் இருந்து இரவு நேரத்தில் அர்ச்சனைகள் செய்து விருப்பத்தை வேண்ட பலன் கிட்டும்.
வறுமை நீங்க வேண்டுமா?
பிரதி வெள்ளிக்கிழமைகளில் வாசனை மலர்களால் தொடர்ந்து எட்டு வாரங்கள் அர்ச்சனை செய்துவர வறுமை நீங்கும் வாய்ப்பு கூடும்.
இல்லத்தில் பூஜை செய்பவரானால் வெல்லம் பருப்பு சேர்த்த பாயசம், உளுந்து வடை செய்து நிவேதிக்கலாம்.
விருப்பங்கள் நிறைவேற வேண்டுமா?
தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு ஏற்ற நாள். அந்த நாளில் விரதம் இருந்து இரவு நேரத்தில் அர்ச்சனைகள் செய்து விருப்பத்தை வேண்ட பலன் கிட்டும்.
ஒரு அஷ்டமி பூஜை மட்டும் உன்னதத்தை கொடுக்காது என்பதை அறியவும்.
பூர்வ ஜென்ம வினைப்பயன் குறைய வேண்டுமா?
செவ்வாய்க்கிழமை வரும் அஷ்டமி நாளில் விரதம் அனுஷ்டித்து மாலை நேரத்தில் பூஜைகள் செய்து வடை மாலை சாற்றி வழிபட வேண்டும்.
மறுநாள் காலை உணவு உட்கொண்டு விரதம் முடிக்க வேண்டும். நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுதல் கூடுதல் சுபம் கொடுக்கும்.
கோள்களின் தாக்கம் குறைய வேண்டுமா?
தயிர் அன்னம் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். தொடர்ந்து அஷ்டமி நாளில் இதை கடைப்பிடிக்க வேண்டும்.






