என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • எல்லா உயிரிலும் நான் உள்ளேன், என்னுள் எல்லா உயிரினங்களும் உள்ளன.
    • என்னைச் சரணாகதி அடைந்துவிடு.

    ஸ்ரீ கிருஷ்ணர், வழங்கிய ஒப்பற்ற உபதேசங்களை கவனத்துடன் கேளுங்கள். ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்,  

    "உன்னை எவரேனும் ஏளனம் செய்து சிரித்தால், அதை ஒரு பொருட்டாகக் கருதாதே, உடல் உணர்வை மறந்து விடு.

    அவமானத்தைத் தாங்கிக் கொள். மண்ணில் சாஷ்டாங்கமாக விழுந்து, மிக அற்பமாக கருதுகின்ற நாய், கழுதை மற்றும் சண்டாளனைக் கூட நமஸ்காரம் செய்.

    எல்லா உயிரிலும் நான் உள்ளேன், என்னுள் எல்லா உயிரினங்களும் உள்ளன. என்னைச் சரணாகதி அடைந்துவிடு.

    எனக்காகவே எல்லாக் கர்மங்களையும் செய். பற்றுகளில் இருந்து விலகி விடு.

    தடையில்லாத, தடுமாற்றம் இல்லாத பக்தியினை என் மீது வை. எனது புகழ்பாடு!"

    • குழலோசை கோபிகைகளின் ஆத்மாவில் கலந்தது.
    • அவர்களை அவர்களே மறந்தார்கள். உலகமே அவர்களுக்கு ஒன்றுமில்லாமல் போனது.

    பிரணவத்தின் ஓர் அடையாளம் தான் புல்லாங்குழல், அந்தக் குழலோசை தான் பக்தி நிறைந்த கோபிகைகளைக் கவர்ந்தது.

    அவரது புல்லாங்குழலில் இருந்து வந்த இனிய கானம் அவர்களை இன்பமூட்டி, கிளர்ச்சியுண்டாக்கும்படி செய்தது.

    கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை இருதயத்தில் நுழைந்து, கேட்பவர் எவரையும், தனது சுற்றம், சுற்றியுள்ள உலகம் ஏன் தன்னையே கூட மறக்கடிக்கச் செய்யும்.

    கேட்பவர் எவரையும் ஆனந்தக் கூத்தாடச் செய்து, அவர்களது இருதயம் முழுவதும் தூய அன்பு நிறைத்து விடும்.

    தெய்வீகமான அப்புல்லாங்குழலில் இருந்து வரும் இனிய இசை வெள்ளம், கேட்பவரின் இருதயத்தில் பேரானந்தத்தை வழங்கி, புத்துணர்ச்சி மிக்க புதுவாழ்விற்கு கொண்டு செல்லும்.

    அது ஆன்மீக மயக்கத்தைத் தோற்றுவித்து, உயிரற்ற உணர்வற்ற பொருட்களில் கூட இயக்கத்தை ஏற்படுத்தி விடும்.

    அக்குழலின் இனிமையை விட உயர்வானது ஒன்றுமில்லை.

    யாரொருவர் கண்ணபிரானின் குழலோசையினை ஒரு முறை கேட்டு விட்டார்களோ, அவர்கள் வானத்தில் உள்ள அமிர்தம், சொர்க்கம் ஆகியவற்றைக் கூட கூச்சமாக மதிப்பார்கள்.

    குழலோசை கோபிகைகளின் ஆத்மாவில் கலந்தது.

    அவர்களை அவர்களே மறந்தார்கள். உலகமே அவர்களுக்கு ஒன்றுமில்லாமல் போனது.

    ஸ்ரீகிருஷ்ணரை நோக்கித் தங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாதபடி அவரது கானம் கவர்ந்திழுத்தன.

    அவரவர் தங்களது வீட்டை விட்டு வர பயமோ, தயக்கமோ காட்டவில்லை. அவர்களுக்குள்ளே இருந்த ஆத்மா விழிப்புணர்வு பெற்றது.

    அவர்களது எண்ணம், மனம் இவ்வுலகில் இல்லை.

    • இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.
    • கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.

    பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.

    அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர்.

    வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள்.

    ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.

    அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

    'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

    தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை

    தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க

    போய பிழையும் புகு தருவானின்றன வும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'

    கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.

    பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.

    இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

    கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.

    வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.

    • ஏதாவது தடை எதிர்பட்டால். சுதர்சன சக்கரத்திரன் வேகம் அதிகரிக்கிறது. இதை ‘ரன்ஸகதி’ என்பர்.
    • சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை.

    கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது. அதன் ஆற்றல் அளவிட முடியாதது.

    சுதர்ஷன் என்றால் மங்களகரமானது என்று பொருள் 'சக்ரா' என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம்.

    எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது.

    சாதாரணமாக 'சுதர்சன சக்கரம்' கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும் ஆனால், விஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

    யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார்.

    எதிரிகளை அழித்த பின் சுதர்சனசக்கரம் மறுபடியும் அதன்இடத்திற்கே திரும்பி விடுகிறது.

    சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கிறது.

    எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடிகிறது.

    ஏதாவது தடை எதிர்பட்டால். சுதர்சன சக்கரத்திரன் வேகம் அதிகரிக்கிறது. இதை 'ரன்ஸகதி' என்பர்.

    சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை.

    அதனுடைய உருவம்/வடிவம் எத்தகையது என்றால், சின்னஞ்சிறு துளசி தளத்தில் அடங்கக்கூடியது. அதே சமயம் இப்பிரபஞ்சம் அளவு பரந்து விரிந்தது.

    • கோவிலில் தலவிருட்சம் அருகே மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டி போடுகிறார்கள்.
    • நூற்றுக்காண தொட்டில்கள் காணப்படுகிறது. ஏராளமானோர் இதன் மூலம் பலன் பெற்றுள்ளனர்.

    ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்பிரமணியரை மனம் உருக வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    இதற்கென தனி வழிபாட்டு முறை உள்ளது.

    ஒவ்வொரு மாதமும் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தினத்தன்று இரவு குழந்தை பாக்கியம் பெற விரும்பும் பெண்கள் ஆண்டார் குப்பம் தலத்தில் தங்கி வழிபாடு செய்யவேண்டும்.

    மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்து முருகனுக்கு நடக்கும் பால் அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    மூன்று கிருத்திகை நாட்கள் தொடர்ந்து இந்த பூஜை செய்து வந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கோவிலில் தலவிருட்சம் அருகே மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டி போடுகிறார்கள்.

    நூற்றுக்காண தொட்டில்கள் காணப்படுகிறது. ஏராளமானோர் இதன் மூலம் பலன் பெற்றுள்ளனர்.

    • முருகன் முதியவராக வந்து விளையாட்டு புரிதல்,
    • வள்ளி தினைப்புனம் காத்தல், குறிகேட்டல் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

    மூலவர் எழுந்தருளியுள்ள கர்ப்பகிரக விமானத்தின் கிழக்குப்புறம் திருப்பரங்குன்ற முருகன், சூரியன், சந்திரன்,

    தெற்குப் புறம் காமதகன காட்சி, சம்பந்தருக்கு இறைவிபால் அளிப்பது, விநாயகருக்கு அம்மையப்பர் மாம்பழம் அருளுதல்,

    மேற்குப்புறம் பரமபதநாதர், பாற்கடல் நாதரைக்கருடனும், அனுமனும் வணங்குதல், கோபியருடன் கண்ணன்,

    ராமர் அகலிகையின் சாபம் நீக்கும் காட்சி, விசுவாமித்திரர், லட்சுமணர் ஆகிய சிற்பங்கள் உள் வடக்குத்திசையில் விநாயகர் யானையாக வந்து வள்ளி யைப் பயமுறுத்தல்,

    முருகன் முதியவராக வந்து விளையாட்டு புரிதல், வள்ளி தினைப்புனம் காத்தல்,

    குறிகேட்டல் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

    ராஜகோபுரத்திற்கு வெளியே தென்கிழக்குத் திசையில் குமாரசுவாமி குளமும், வடகிழக்கு திசையில் பாலநதியும் (தற்போது பூமியினுள் அந்தர்வாகினியாய் ஓடி) முருகனுக்கு அணி செய்கின்றன.

    • கருவறையில் ஆஜானுபாகு உருவத்தில் கம்பீரமாக முருகன் உள்ளார்.
    • அவர் முகம் அருள்மழை பொழிந்து பக்தர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.

    கருவறையில் ஆஜானுபாகு உருவத்தில் கம்பீரமாக முருகன் உள்ளார்.

    அவர் முகம் அருள்மழை பொழிந்து பக்தர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.

    திருவருள் பெருகும் கண்களுடன் காட்சி தரும் பாலசுப்பிரமணியரை வணங்கிப்பின் வெளியே வருகையில், இடப்புறம் காசி விஸ்வநாதப் பெருமானின் சன்னிதி உள்ளது.

    அதற்கு அருகே பதினாறுகால் மண்டபத்தின் வடபுறம் விசாலாட்சி அம்பாள், சுப்பிரமணியர், சண்முகர், நடராஜர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

    தெற்குப் பிராகாரத்தில் சுவாமிக்கு நிவேதனப் பொருட்களைத் தயாரிக்கும் மடப்பள்ளியும், அடுத்து திருக்கோவில் அலுவலகமும், அதனையொட்டி கல்யாண மண்டபமும் உள்ளன.

    மேற்குப் பிராகாரத்தில் வாகனக் கிடங்கும், அதனையடுத்து உக்ராண அறையும் உள்ளன.

    கோவிலின் வடகிழக்கு மூலையில் யாகசாலை மண்டபமும், அடுத்து நவக்கிரக சன்னதியும், அதற்கு வெளியே சம்வர்த்தன லிங்கமும் உள்ளன.

    • சங்கர நாராயணர், அர்த்த நாரீஸ்வரர், பழமதிர் சோலை முருகன் முதலான சிற்பங்களும் உள்ளன.
    • அடுத்து அம்மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் பிரசன்ன விநாயகர் சன்னதி இருப்பதை காணலாம்.

    முருகன் பிரம்மனைச் சிறையில் அடைத்ததன் அடையாளமாக, தாமரைப் பூவின் மீது அரூபநிலையில் பிரம்மன், மூலவரை நோக்கி வணங்கி இருக்கும் அருட்காட்சி, அம்மண்டபத்தின் நடுவே உள்ளது.

    இது அனைவரும் கண்டு வணங்க வேண்டிய ஒன்றாகும்.

    மண்டபத்தின் மேல்முகப்பில் ஆண்டார்குப்பத்து ஐயன், வள்ளித் திருமணக்காட்சி, தெய்வானைத் திருமணக்காட்சி,

    பிரணவ உபதேசக்காட்சி, முருகன் பிரமனின் சிரசில் குட்டும் காட்சி ஆகியனவும்,

    இதர பக்கங்களில் கார்த்திகைப் பெண்கள் தாமரை மலர்களிலிருந்து ஆறு குழந்தைகளை எடுப்பது,

    முருகன் சக்திவேல் வாங்குவது, அருணகிரியாருக்கு மயில்வாகனர் அருளுவது, வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்,

    சங்கர நாராயணர், அர்த்த நாரீஸ்வரர், பழமதிர் சோலை முருகன் முதலான சிற்பங்களும் உள்ளன.

    அடுத்து அம்மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் பிரசன்ன விநாயகர் சன்னதி இருப்பதை காணலாம்.

    எண்ணிய காரியங்களை ஈடேற்றும் அந்த விநாயகரை வணங்கிச்சென்று பாலசுப்பிரமணியர் சன்னதியை அடையலாம்.

    • போரில் முருகன், சூரனை வதம்செய்து, பிறகு கருணையால் அவனை ஆட்கொண்டார்.
    • இதனால் சூரனின் ஒரு பகுதி சேவல்கொடியாகவும், மற்றொரு பகுதி மயில்வாகனமாகவும் ஆயிற்று.

    சுப்பிரமணியப் பெருமான் சூரனுடன் போர்புரிந்த சமயத்தில், இந்திரன் மயிலாக உருமாறிப் பெருமானைத் தாங்கினான்.

    இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் கோவில் விழாக்காலத்தில் மயில்வாகனத்தில் பெருமானை எழுந்தருளச் செய்வார்கள்.

    அதில் மயிலின் தலைபாகம் முருகனது இடப்பக்கத்தை நோக்கி இருக்குமாறு அமைப்பார்கள்.

    போரில் முருகன், சூரனை வதம்செய்து, பிறகு கருணையால் அவனை ஆட்கொண்டார்.

    இதனால் சூரனின் ஒரு பகுதி சேவல்கொடியாகவும், மற்றொரு பகுதி மயில்வாகனமாகவும் ஆயிற்று.

    இதனை உணர்த்தும்வண்ணம், உற்சவ காலத்தில் சூரசம்ஹாரம் முடிந்தபின், முருகன் மயில்வாகனத்தில் எழுந்தருளி உலா வருவார்.

    அப்போது, மயிலின் தலை, முருகனது வலப்பாகத்தை நோக்கி இருக்குமாறு அமைப்பார்கள்.

    அடுத்து மிகவும் நேர்த்தியாக வடிக்கப்பெற்ற சிற்பங்களுடன் கூடிய பதினாறுகால் மண்டபம் காட்சி தருகின்றது.

    • அடுத்து கோவிலினுள் நுழைந்தவுடன் காட்சியளிப்பது தங்கம்போல பளபளவென மின்னும் கொடிமரமாகு
    • கோபுர தரிசனம், இறைவனின் பாத தரிசனமாகும். கோபுரம் ஸ்தூல லிங்கம் எனப்படும்.

    கோபுர தரிசனம், இறைவனின் பாத தரிசனமாகும். கோபுரம் ஸ்தூல லிங்கம் எனப்படும்.

    ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்பிரமணியர் கோவிலில் ஓங்கி உயர்ந்த ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் காட்சியளிக்கின்றது.

    அதில் முழுவதும் முருகனின் புராணங்களை விளக்கும் பல்வேறு கதைச்சிற்பங்கள், உயிரோட்டத்துடன் நிறைந்து, காண்போரைக் கவருகின்றது.

    தட்சனுக்குத் தாட்சாயணி மகளாகப் பிறந்த வரலாறு, முருகனின் அவதாரம், நலவீரர்கள் தோற்றம், சூரானாதியர் வேள்விசெய்தல் மற்றும் வரம்பெறுதல், வீரவாகு தூது மற்றும் போர், தேவர்கள் முறையீடு, தெற்குப்புறத்தில் தட்சணாமூர்த்தி, மேற்குப்புறத்தில் தாருக சிங்கமுக சம்ஹாரம், வடக்குத்திசையில் சூரசம்ஹாரம், மாமரம், மயில் மீது அமர்ந்து சேவல்கொடியேந்திய பெருமானின் அற்புத தரிசகம் முதலான சிற்பங்கள் உயிரோட்டத்துடன் அமைந்துள்ளதைக் காணலாம்.

    அடுத்து கோவிலினுள் நுழைந்தவுடன் காட்சியளிப்பது தங்கம்போல பளபளவென மின்னும் கொடிமரமாகும்.

    இது சூட்சும லிங்கம் என வழங்கப்படுகிறது. அதனையடுத்து பலிபீடம் உள்ளது.

    அதற்கடுத்து மயூரதேவரின் சன்னதி உள்ளது.

    உயிர்கள் ஆணவமலத்தை விட்டொழித்தால் இறைவனின் திருவடியை அடையலாம் என்பதை அது உணர்த்துகின்றது.

    • ஒவ்வொரு தடவையும் 2 மாலை சாத்தி அர்ச்சனை செய்தல்வேண்டும்.
    • இந்த பரிகார பூஜை காரணமாக 6 வாரத்துக்குள் திருமணம் கைகூடி விடும் என்கிறார்கள்.

    திருமணம் கை கூடும்!

    திருமணம் ஆகாதவர்கள் ஆண்டார் குப்பம் ஸ்ரீபால சுப்பிரமணியரை தொடர்ச்சியாக 6 வாரம் வணங்கினால் பலன் கிடைக்கும்.

    ஒவ்வொரு தடவையும் 2 மாலை சாத்தி அர்ச்சனை செய்தல்வேண்டும்.

    இந்த பரிகார பூஜை காரணமாக 6 வாரத்துக்குள் திருமணம் கைகூடி விடும் என்கிறார்கள்.

    குல தெய்வம்

    ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமியை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் குல தெய்வமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    அவர்களில் பெரும்பாலானவர்கள் நெல்லூர், சத்யவேடு, சூலூர் பேட்டை, குண்டூர், நாயுடு பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எனவே இந்த ஊர் சுப்பிரமணியபுரம் (புரம் ஊர்) என்று வழங்கப்படலாயிற்று.
    • பிற்காலத்தில் அது ஆண்டவர் குப்பம் என்று மாறியது. தற்போது ஆண்டார்குப்பம் என்று வழங்கப்படுகிறது.

    சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சுமார் முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் தச்சூர் கூட்டுச் சாலையில் இருந்து, இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஆண்டார் குப்பம் எனும் ஊர் பச்சை பசேல் வயல்களுடன் அமைந்துள்ளது.

    திருவள்ளூரிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலும், பெரியபாளையத்திலிருந்து சுமார் இருப்பது கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் உள்ளது.

    ரெயிலில் சென்றால், சென்னையிலிருந்து பொன்னேரிக்குச் சென்று அங்கிருந்து பஸ் மூலம், தச்சூர் செல்லும் வழியாகச்சென்று ஆண்டார்குப்பத்தை அடையலாம்.

    புராண காலத்தில் பாலசுப்பிரமணிய கடவுள், இத்தலத்தில் உரோம முனிவருக்கும், சம்வர்த்தனருக்கும் காட்சியளித்தார்.

    எனவே இந்த ஊர் சுப்பிரமணியபுரம் (புரம் ஊர்) என்று வழங்கப்படலாயிற்று.

    வணங்கும் அடியார்களை ஆண்டு கொண்டு அருள்புரியும் ஆண்டவன் கோவில் கொண்டுள்ள தலம் என்பதால் ஆண்டிகள் குப்பம் (குப்பம் ஊர்) என்று அழைக்கப்பட்டது.

    பிற்காலத்தில் அது ஆண்டவர் குப்பம் என்று மாறியது. தற்போது ஆண்டார்குப்பம் என்று வழங்கப்படுகிறது.

    ×