என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது.
- மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரம் உள்ளது. அம்மனின் கருவறை ‘ஸ்ரீகோவில்’ என்று அழைக்கப்படுகிறது.
ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் அம்மன் குடி கொண்டிருக்கும் கருவறை அருகே இடது புறம் மாடன் தம்புரானுக்கு தனி கோவில் உள்ளது.
அதற்கு அடுத்த சுற்றில் பின்புறம் கணபதிக்கும், சிவனுக்கும் தனி சன்னதி அமைந்துள்ளது.
இது தவிர கோவிலின் உட்பகுதியில் நாகரம்மனுக்கும் தனி கோவில் உள்ளது.
இதில் பெண்கள் மஞ்சள் தூவி வழிபட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஆலய அமைப்பு
இந்த ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவிலில் ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.
கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ-பார்வதியின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
ஆலய கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன.
மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது.
மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரம் உள்ளது. அம்மனின் கருவறை 'ஸ்ரீகோவில்' என்று அழைக்கப்படுகிறது.
- நாலம்பலத்தின் முன்புறம் இருபக்கங்களிலும் ராஜேஸ்வரி ஸ்ரீபார்வதியோடு அமர்ந்திருக்கும் பரமசிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
- தெற்கு கோபுரத்தில் மகேஷ்வரியின் சிற்பம் காட்சி தருகிறது.
ஆற்றுகால் பகவதி கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.
இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் ஆற்றுக்கால் தேவியை வழிபடும் பக்தர்களுக்கு கோவிலில் அமைந்துள்ள ஓவிய சிற்பங்கள் அம்மனின் அவதாரங்களை விளக்குவதாக அமைந்துள்ளது.
இவை தமிழக மற்றும் கேரள சிற்ப கலையின் மகத்துவங்களை உள்ளடக்கியதாக உள்ளது.
இக்கோவிலில் உள்ள கோபுரங்களில் இச்சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
கோபுர முகப்பில் மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
முக்கிய மண்டபத்தின் மேல் அசுரனை அளித்த தேவியின் வடிவம் வடிக்கப்பட்டு உள்ளது.
ராஜகோபுரத்தின் உள்பகுதியில் காளி தேவியின் வடிவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
இதுபோல தென்கோபுரத்தின் உள்பக்கம் வீரபத்திரர் வடிவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
நாலம்பலத்தின் முன்புறம் இருபக்கங்களிலும் ராஜேஸ்வரி ஸ்ரீபார்வதியோடு அமர்ந்திருக்கும் பரமசிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
தெற்கு கோபுரத்தில் மகேஷ்வரியின் சிற்பம் காட்சி தருகிறது.
இவை ஆலயத்தின் சிற்பக்கலைக்கு மட்டுமின்றி அம்மனின் சிறப்புகள் நம் கண் முன்பு வந்து போகவும், நமக்கு பக்தி பரவசத்தை ஏற்பத்துவதாகவும் உள்ளது.
- அதோடு நல்ல வரன் அமையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
- இதற்காக கோவிலுக்குச் செல்லும் பெண்கள் அம்மனுக்கு புடவை காணிக்கை செலுத்துகிறார்கள்.
ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் இளம்பெண்கள் பலரும் புடவை காணிக்கை செலுத்துவது வழக்கம்.
புடவை காணிக்கை செலுத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
அதோடு நல்ல வரன் அமையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
இதற்காக கோவிலுக்குச் செல்லும் பெண்கள் அம்மனுக்கு புடவை காணிக்கை செலுத்துகிறார்கள்.
பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் புடவைகள் அம்மனுக்கு அணிவிக்கப்படும்.
ஏராளமான புடவைகள் காணிக்கையாக வருவதால் தினமும் அம்மனுக்கு குறைந்தது 6 முறையாவது புடவை மாற்றப்படுகிறது.
- இது போல சித்திரை விஷேச தினத்தன்றும் ஆற்றுகால் கோவிலுக்குச் சென்று வழிபடுவது கூடுதல் சிறப்பாகும்.
- இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டாலும், கோவிலுக்கு ஆண்களும் செல்வதுண்டு.
ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் தினமும் அதிகாலை முதல் இரவு வரை வழிபாடுகள் நடக்கும்.
பக்தர்களும் கோவிலுக்கு செல்வார்கள்.
இருந்தாலும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலுக்குச் சென்று அம்மனை வழிபடுவது கூடுதல் விசேஷமாகும்.
இந்த நாட்களில் கோவிலில் பெண்கள் கூட்டம் அலைமோதும்.
இது போல சித்திரை விஷேச தினத்தன்றும் ஆற்றுகால் கோவிலுக்குச் சென்று வழிபடுவது கூடுதல் சிறப்பாகும்.
இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டாலும், கோவிலுக்கு ஆண்களும் செல்வதுண்டு.
பெண்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டால் சுபிட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- இது போல ஸ்ரீகண்டேசுவரர் மகாதேவர் கோவிலும் இதன் அருகிலேயே உள்ளது.
- ஆற்றுகால் தேவி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்த குங்குமம், சந்தனம், விபூதி முதலியன பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றுகால் பகவதி அம்மனை தரிசித்து விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாப சுவாமி கோவிலுக்கு செல்லலாம்.
இக்கோவில் ஆற்றுகால் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இது போல ஸ்ரீகண்டேசுவரர் மகாதேவர் கோவிலும் இதன் அருகிலேயே உள்ளது.
ஆற்றுகால் தேவி பிரசாதம்
ஆற்றுகால் தேவி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்த குங்குமம், சந்தனம், விபூதி முதலியன பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவற்றுடன் அரவணையும் அளிக்கப்படுகிறது.
இவற்றை இந்திய தபால் துறையும், ஆற்றுகால் பகவதி கோவிலும் இணைந்து பக்தர்களுக்கு தபால் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள எந்த பகுதிக்கும் கோவில் பிரசாதம் தபாலில் வழங்கப்படுகிறது.
ரூ. 150 செலுத்தி இதனை பெற்றுக் கொள்ளலாம்.
- கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, ‘பண்டார அடுப்பு’ பற்ற வைக்கிறார்கள்.
- இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலிலே அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.
ஆற்றுகால் பகவதி அம்மன் ஆலயத்தில் பொங்காலைத் திருவிழா 10 நாள் உற்சவமாக கொண்டாடப் படுகிறது.
முதல் நாளில் கண்ணகி கதை பாடலாகப் பாடப்பெறும்.
அதோடு கொடுங்கல்லூர் பகவதியை ஆவாகனம் (அழைத்து வந்து) செய்து, 10 நாள் குடியிருக்கும்படி செய்வார்கள்.
விழா நடைபெறும் 10 நாட்களிலும் இரவு தீபாராதனை முடிந்து நடை மூடுவதற்கு முன்பாக, பலவித வண்ண காகிதங்களாலும், குருத்தோலைகளாலும், தீப விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மனை அமரச் செய்து, நடனமாடியபடி கோவிலைச் சுற்றிவருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
திருவிழாவின் ஒன்பதாவது நாள், உலக பிரசித்திப் பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் விழா நடைபெறும்.
பொங்கல் வைக்கும் நிகழ்வு முறையாக செய்யப்படும்.
தந்திரி, கருவறையில் இருந்து தீபம் ஏற்றி அதை மேல்சாந்தி என்று அழைக்கப்படும் தலைமை பூசாரியிடம் கொடுப்பார்.
அவர் அதைப் பெற்று, கோவில் வளாகத்தில் உள்ள பொங்கல் அடுப்பில் தீ மூட்டுவார்.
பின்னர் அதே தீபச் சுடரை, சக பூசாரியிடம் வழங்குவார். அவர் கோவிலின் முன்பு உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டுவார்.
தொடர்ந்து மற்ற அனைத்து பொங்கல் அடுப்புகளிலும் தீ மூட்டப்படும்.
இதற்கான அறிவிப்புக்காக செண்டை மேளமும், வெடிமுழக்கமும், வாய்க்குரவையும் ஒலிக்கப்படும்.
அந்த ஒலி கேட்டு, பெண்கள் அனைவரும் பொங்கல் வைப்பதற்காக, அடுப்பை மூட்டுவர்.
குறிப்பிட்ட வேளையில் கோவிலில் நியமனம் செய்யப்பட்ட பூசாரிகள், புனித தீர்த்தம் தெளித்து பொங்கல் நைவேத்தியம் படைப்பார்கள்.
அப்போது விமானம் மூலமாக வானத்தில் இருந்து மலர் தூவப்படும்.
இந்த நிகழ்ச்சியின் போது கோவில் உள்ளேயும் பகவதிக்கு பொங்கல் விடுகிறார்கள்.
அந்த அடுப்பிற்கு 'பண்டார அடுப்பு' என்று பெயர்.
கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, 'பண்டார அடுப்பு' பற்ற வைக்கிறார்கள்.
இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலிலே அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.
பொங்கல் திருவிழா முடிந்த அன்றைய தினம் இரவு, ஆற்றுக்கால் பகவதி அம்மன், மணக்காடு என்ற இடத்தில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு எழுந்தருள்வாள்.
ஊர்வலம் செல்லும் வழியெங்கும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.
குத்துவிளக்கேற்றி, பூஜை பொருட்கள் சமர்ப்பித்து வழிநெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் வரவேற்பளிப்பார்கள்.
சாஸ்தா கோவிலுக்கு செல்லும் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும் அலங்கார வண்டிகள் மற்றும் கண்ணைக் கவரும் பல்வேறு களியாட்டங்கள், மேளதாளம், பஞ்சவாத்தியம், நாதஸ்வர இசை முழங்க ஊர்வலம் செல்லும்.
மறுநாள் அதிகாலை சாஸ்தா கோவிலில் பூஜை முடிந்தபின், அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் தன் இருப்பிடத்தை வந்து சேர்வாள், ஆற்றுக்கால் பகவதி அம்மன்.
- கைகளில் தாம்பாளம் ஏந்தி, அதில் பூஜை பொருட்களை எடுத்து வருவார்கள்.
- பின்னர் உறவு பெண்களுடன் இணைந்து அம்மன் சன்னதியை சென்றடைவார்கள்.
சிறுவர்களுக்கு குத்தியோட்டம் நடப்பது போல 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியே தாலப்பொலி.
இதுவும் ஆற்றுகால் பொங்காலை விழாவின் போது நடைபெறும்.
இவ்விழாவின் பொங்காலை பண்டிகையின் போது இச்சிறுமிகள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, தலையில் மலர் கிரீடம் அணிந்தபடி கோவிலுக்கு அணிவகுத்து வருவார்கள்.
கைகளில் தாம்பாளம் ஏந்தி, அதில் பூஜை பொருட்களை எடுத்து வருவார்கள்.
பின்னர் உறவு பெண்களுடன் இணைந்து அம்மன் சன்னதியை சென்றடைவார்கள்.
அங்கு அம்மனின் முன்பு தாம்பாளத்தையும், அதில் இருக்கும் பூஜை பொருட்களையும் சமர்ப்பிப்பார்கள்.
தாலப்பொலியில் பங்கேற்பதன் மூலம் சிறுமிகளுக்கு நீண்ட ஆயுளும், நோய் நொடியற்ற வாழ்க்கையும், எதிர்காலத்தில் அவர்களுக்கு நல்ல வரன் அமையும் என்பதும் நம்பிக்கை.
- விழா தொடங்கிய 3ம் நாள் குத்தியோட்டத்தில் பங்கேற்கும் சிறுவர்கள் கோவிலுக்கு வருவார்கள்.
- அவர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்குவதோடு கோவிலிலேயே தங்கவும் செய்வார்கள்.
ஆற்றுகால் பகவதி கோவிலில் நடைபெறும் பொங்காலை விழாவின் முக்கிய நிகழ்வுகளில் சிறுவர்கள் பங்கேற்கும் குத்தியோட்டம் நிகழ்ச்சியும் ஒன்றாகும்.
இதில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கலந்து கொள்வார்கள்.
விழா தொடங்கிய 3ம் நாள் குத்தியோட்டத்தில் பங்கேற்கும் சிறுவர்கள் கோவிலுக்கு வருவார்கள்.
அவர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்குவதோடு கோவிலிலேயே தங்கவும் செய்வார்கள்.
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து கோவிலில் உள்ள குளத்தில் புனித நீராடி, கோவிலில் 1008 நமஸ்கார பிரார்த்தனை செய்வார்கள். 3ம் திருவிழா முதல் 9ம் திருவிழா வரை வழிபாடுகளில் பங்கேற்பார்கள்.
9ம் திருவிழாவன்று மாலை குத்தியோட்ட சிறுவர்கள் புத்தாடை, ஆபரணங்கள் அணிந்து தேவி சன்னிதானத்தில் கூடுவார்கள்.
அப்போது இச்சிறுவர்களின் விலா பகுதியில் உலோக கம்பியால் லேசாக குத்திகொள்கிறார்கள்.
பின்னர் தேவி வீதி உலா செல்லும் போது குத்தியோட்ட சிறுவர்களும், அவரது படை வீரர்கள் போல அணிவகுத்து செல்வார்கள்.
தேவி கோவிலுக்கு திரும்பியதும், இவர்களின் குத்தியோட்ட விரதம் நிறைவு பெறும்.
அப்போது சிறுவர்களின் விலாவில் குத்தப்பட்ட உலோக கம்பியும் அகற்றப்படும்.
இந்த சடங்கில் பங்கேற்பதன் மூலம் சிறுவர்கள் நோய் நொடி இன்றி, சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
இதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் குத்தியோட்ட நிகழ்வில் பங்கேற்கும் சிறுவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டி வருகிறது.
ஆற்றுகால் பகவதி கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் மண்பானையில் அரிசி, சர்க்கரை, நெய், தேங்காய் ஆகியவற்றை பயன்படுத்தி பொங்கல் சமைக்கிறார்கள்.
இதன்மூலம் நீர், நிலம், நெருப்பு, வாயு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் மகிழ்ச்சி அடைவதாகவும், பொங்கலிடும் பக்தர்கள் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
இதில் பயன்படுத்தப்படும் மண் பானையும், அரிசியும் நிலத்தை பிரதிபலிக்கிறது.
நீர் மற்றும் அடுப்புக்கு வைக்கப்படும் நெருப்பு, பொங்கல் பானையில் இருந்து வரும் வாயு மற்றும் அது பரவும் ஆகாயம் ஆகியவை மூலம் பஞ்ச பூதங்களும் மகிழ்ச்சி அடைவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
- இதன் கருவறை ஆரம்பத்தில் கூரையாலும், பின்னர் ஓடுவேய்ந்த கட்டிடத்திலும் இருந்தது.
- இக்கோவிலில் ஆற்றுகால் பகவதி அம்மன் வடக்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில்.
இப்பகுதி கிள்ளியாறும், கரமனையாறும் சங்கமிக்கும் பகுதியாகும்.
இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இக்கோவில் கட்டப்பட்டு உள்ளது.
இதன் கருவறை ஆரம்பத்தில் கூரையாலும், பின்னர் ஓடுவேய்ந்த கட்டிடத்திலும் இருந்தது.
இக்கோவிலில் ஆற்றுகால் பகவதி அம்மன் வடக்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
ஒரு கையில் சூலமும், மறுகையில் வாளும் ஏந்தி நிற்கிறார். மற்ற கைகளில் பொங்கலும், கேடயமும் தாங்கி இருப்பார்.
அம்மன் சன்னதிக்கு இடது புறம் மாடன் தம்புரான் சன்னதி உள்ளது. இந்த சன்னதியின் பின்புறம் பனை மரம் உள்ளது.
இப்போதும் இந்த சன்னதிக்கு சென்றால் மாடன் தம்புரானின் பின்புறம் பனை மரம் உயர்ந்து நிற்பதை காணலாம்.
அன்னையின் புகழ் பரவ, பரவ ஆலயமும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
கோவிலின் முன்புறம் அலங்கார வளைவு, தெற்கிலும், வடக்கிலும் ராஜகோபுரங்கள், கிழக்கிலும் மேற்கிலும் உப கோபுரங்கள் கட்டப்பட்டன.
ஆலயத்தின் வடிவமைப்பிலும், தோற்றத்திலும் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. கோவிலின் சுற்றுப்புறம் முழுவதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டன.
தேவி கதைகள், ராமாயணம் மற்றும் தசாவதாரம், கண்ணகி கதை போன்றவை சிற்பங்களாக உருவாக்கப்பட்டு உள்ளது.
கோவிலின் முன்பு பிரமாண்ட நடை பந்தல், பொங்கல் வைக்க சுற்றுவட்டார பகுதிகளில் வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளது.
- இக்கோவிலில் நடைபெறும் பொங்காலை விழாவில் லட்சோபலட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்காலையிட்டு அம்மனை வணங்கி செல்கிறார்கள்.
- பொங்காலை விழாவன்று இங்கு கூடுவோர் ஜாதி, மத வேறுபாடு இன்றி திறந்த வெளியில் சுத்த ஆசாரங்களை கடைபிடித்து அம்மனுக்கு பொங்கல் படையலிடுகிறார்கள்.
சர்வமங்கள மாங் கல்யே...
சிவே சர்வார்த்த ஸாதிகே...
சரண்யே த்ரயம்பகே தேவி...
நாராயணி நமோஸ்துதே...
என்ற துதிபாடி நமஸ்கரிக்கும் அன்னை ஆற்றுகால் பகவதி கேரளத்தின் தலைநகராம் திருவனந்தபுரத்தின் தென்கோடியில் உள்ள ஆற்றுகாலில் குடிகொண்டிருக்கிறார்.
இதனால் ஆற்றுகால் பகவதி என பெயர் பெற்ற இக்கோவிலுக்கு சென்று அம்மனை தொடர்ந்து வணங்கி வந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதனால்தான் இக்கோவிலில் நடைபெறும் பொங்காலை விழாவில் லட்சோபலட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்காலையிட்டு அம்மனை வணங்கி செல்கிறார்கள்.
பொங்காலை விழாவன்று இங்கு கூடுவோர் ஜாதி, மத வேறுபாடு இன்றி திறந்த வெளியில் சுத்த ஆசாரங்களை கடைபிடித்து அம்மனுக்கு பொங்கல் படையலிடுகிறார்கள்.
பின்னர் அதனை ஆற்றுகால் அம்மனுக்கு படைத்துவிட்டு மன நிறைவுடன் வீடு திரும்புகின்றனர்.
- ஆற்றுகால் கோவிலில் நடக்கும் பொங்காலை விழாவில் இக்கருத்தை மையப்படுத்தியே திருவிழா கொண்டாடப்படுகிறது.
- விழாவின் முதல் நாள் முதல் இறுதி நாள் வரையிலான நிகழ்வுகள் அனைத்தும் சிலப்பதிகார கதையை மையப்படுத்தியே அமைந்திருக்கும்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றுகாலில் குடிகொண்டிருக்கும் பகவதி அம்மனை சிலப்பதிகார நாயகி கண்ணகியின் மறு அவதாரமாக கருதுகிறார்கள்.
சிலப்பதிகாரம், தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது. இதன் நாயகி கண்ணகி.
இவருக்கும் சோழ நாட்டின் காவிரி பூம்பட்டினத்தை சேர்ந்த கோவலனுக்கும் திருமணம் நடந்தது.
ஆடல், பாடல்களில் ஆர்வம் கொண்ட கோவலன் திருமணம் முடிந்த பின்னர் ஆடல்கலையில் சிறந்து விளங்கிய மாதவியின் மீது ஈர்ப்பு கொண்டு அவரோடு சென்று விட்டார்.
சில காலங்களுக்கு பிறகு அவர் மாதவியை பிரிந்து மீண்டும் கண்ணகியை தேடி வந்தார்.
கோவலனும், கண்ணகியும் மீண்டும் புது வாழ்க்கையை தொடங்க அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது.
இதற்காக கண்ணகி, தான் அணிந்திருந்த கால் சிலம்பை கழற்றி கொடுத்து அதனை விற்று கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை தொடங்கலாம் எனக் கூறினார்.
கண்ணகியின் யோசனைபடி கோவலன், கண்ணகியின் சிலம்பை விற்க பாண்டிய நாட்டின் மதுரைக்கு சென்றார்.
அங்கு பாண்டிய மன்னனின் அரண்மனை பொற்கொல்லனை சந்தித்தார்.
அவரிடம் கண்ணகியின் காற்சிலம்பை விற்று தரும்படி கேட்டார்.
கோவலன் மதுரைக்கு செல்லும் முன்பே பாண்டிய நாட்டு ராணியின் காற் சிலம்பு காணாமல் போயிருந்தது.
இதனை திருடிய தாக அரண்மனை பொற் கொல்லன் மீது பழி சுமத்தப்பட்டது.
அதில் இருந்து தப்பிக்க பொற்கொல்லன் யோசித்து கொண்டிருந்த வேளையில்தான், கோவலன் அவரை சந்தித்து கண்ணகியின் காற்சிலம்பை காட்டி அதனை விற்று தரும்படி கேட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பொற்கொல்லன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தார்.
அவர் கோவலனை, பாண்டிய மன்னனின் அரச சபைக்கு அழைத்து சென்று அங்கு அரசியின் காற்சிலம்பை திருடியது கோவலன் என கூறினார். இதை கேட்டதும் அரசன், ஆத்திரமடைந்து கோவலனுக்கு மரண தண்டனை விதித்தார். கோவலன் கொல்லப்பட்டார்.
இதற்கிடையே காற்சிலம்பை விற்க சென்ற கணவன் கோவலன் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று கண்ணகி பரிதவித்து கொண்டிருந்தார்.
நீண்ட நேரமாகியும் அவர் வராததால் கோவலனை தேடி கண்ணகி மதுரைக்கு வந்தார்.
மதுரை வந்த பின்புதான் கோவலன் கொலையுண்ட தகவலை அறிந்தார். அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பாண்டிய மன்னனின் அரசவைக்கு சென்று தன்னிடம் இருந்த மற்றொரு காற்சிலம்பை காட்டி நீதி கேட்டார்.
கண்ணகியின் ஆவேசமும், அவர் பால் இருந்த நியாயத்தையும் புரிந்து கொண்ட மன்னன், அங்கேயே உயிரிழந்தான்.
அதன்பின்பும் ஆவேசம் அடங்காத கண்ணகி, மதுரை நகரை தீக்கிரை யாக்கினார். அதன்பின்பு அதே ஆவேசத்துடன் சேர நாட்டின் கொடுங்காளூர் நோக்கி புறப்பட்டார்.
மதுரையில் இருந்து புறப்பட்டு கொடுங்காளூர் செல்லும் வழியில் கரமனையாறும், கிள்ளியாறுக்கும் இடையே உள்ள ஆற்றுகால் பகுதியில் தங்கி இளைப்பாறினார்.
அப்போது அங்கிருந்த முதியவர்கள், கண்ணகியிடம் விபரம் கேட்டு அவரை ஆசுவாசப்படுத்தினார்கள்.
அவரது கோபத்தை தணித்து சாந்தப்படுத்தினார்கள். இதனால் சாந்தடைந்த கண்ணகி, அங்கேயே குடிகொண்டதாகவும், இதனாலேயே அவருக்கு ஆற்றுகாலம்மா என்ற பெயர் ஏற்பட்டது.
ஆற்றுகால் கோவிலில் நடக்கும் பொங்காலை விழாவில் இக்கருத்தை மையப்படுத்தியே திருவிழா கொண்டாடப்படுகிறது.
விழாவின் முதல் நாள் முதல் இறுதி நாள் வரையிலான நிகழ்வுகள் அனைத்தும் சிலப்பதிகார கதையை மையப்படுத்தியே அமைந்திருக்கும்.






