என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.
    • அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.

    பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தி-ல் மறைத்து வைத்திருந்தனர்.

    அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.

    அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.

    பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    • அம்மனுக்கு இடது பக்கம், வலது பக்கம் என இரு பக்கங்களிலும் விளக்கை ஏற்ற வேண்டும்.
    • ஒரு விளக்கு மண் அகல் விளக்காகவும் மற்றொன்று வெள்ளி அல்லது பித்தளை விளக்காகவும் இருக்கலாம்.

    நவராத்திரி நாட்களில் சகல கலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி, சவுந்தர்ய லகிரி, லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றை தவறாமல் பாராயணம் செய்தல் வேண்டும்.

    அது போல நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, கன்யா பூஜை ஆகியவற்றை செய்தல் வேண்டும். இது அளவற்ற பலன்களை அள்ளித் தரும்.

    வேலை நிமித்தம் காரணமாக எல்லாராலும் இந்த பாராயணம், பூஜைகளை செய்ய முடிவதில்லை.

    இத்தகையவர்களுக்காகவே நமது முன்னோர்கள் அகண்ட தீபம் ஏற்றும் ஒரு வழி முறையை கூறி உள்ளனர்.

    அகண்ட தீபம் என்பது விளக்கை தொடர்ந்து எரிய வைப்பது ஆகும். நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம்.

    தேவியை பூஜிக்கும் இடம் அருகில் ஒரு மரப்பலகையில் மூன்று கோணமாக சந்தனத்தால் கோடு போட்டு நடுவில் சந்தனம் குங்குமமிட்டு, பூ போட்டு அதன் மீது விளக்கு வைக்க வேண்டும்.

    அம்மனுக்கு இடது பக்கம், வலது பக்கம் என இரு பக்கங்களிலும் விளக்கை ஏற்ற வேண்டும்.

    ஒரு விளக்கு மண் அகல் விளக்காகவும் மற்றொன்று வெள்ளி அல்லது பித்தளை விளக்காகவும் இருக்கலாம்.

    நவராத்திரி 9 நாட்களும் இந்த இரு விளக்குகளும் தொடர்ந்து எரிவது நல்லது.

    இல்லையெனில் கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் விடாமல் எரிய வேண்டும்.

    நவராத்திரி முடிந்ததும் இந்த இரு விளக்குகளையும் தானமாக கொடுத்து விட வேண்டும்.

    இந்த அகண்ட தீப வழிபாட்டால், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

    • ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
    • ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி

    ஓம் அறிவுருவேபோற்றி

    ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி

    ஓம் அன்பின் வடிவே போற்றி

    ஓம் அநுபூதி அருள்வாய்போற்றி

    ஓம் அறிவுக்கடலேபோற்றி

    ஓம் அளத்தற்கு அரியவளேபோற்றி

    ஓம் அன்ன வாகினியேபோற்றி

    ஓம் அகில லோக குருவேபோற்றி

    ஓம் அருளின் பிறப்பிடமேபோற்றி

    ஓம் ஆசான் ஆனவளேபோற்றி

    ஓம் ஆனந்த வடிவேபோற்றி

    ஓம் ஆதாரசக்தியேபோற்றி

    ஓம் இன்னருள் சுரப்பாய்போற்றி

    ஓம் இகபர சுகம் தருவாய்போற்றி

    ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி

    ஓம் ஈடேறச் செய்பவளேபோற்றி

    ஓம் உண்மைப் பொருளே போற்றி

    ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி

    ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி

    ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி

    ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி

    ஓம் ஓங்கார வடிவினளே போற்றி

    ஓம் கலைக் களஞ்சியமே போற்றி

    ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி

    ஓம் கலைஞானச் செல்வியே போற்றி

    ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி

    ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி

    ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி

    ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி

    ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி

    ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி

    ஓம் குணக் குன்றானவளே போற்றி

    ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி

    ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி

    ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி

    ஓம் சாந்த சொரூபினியே போற்றி

    ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி

    ஓம் சாரதாம்பிகையே போற்றி

    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

    ஓம் சித்தியளிப்பவளே போற்றி

    ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி

    ஓம் சுத்தஞான வடிவே போற்றி

    ஓம் ஞானக்கடலானாய் போற்றி

    ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி

    ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி

    ஓம் ஞானேஸ்வரியே போற்றி

    ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி

    ஓம் ஞான ஆசிரியையே போற்றி

    ஓம் ஞானத்தின் காவலே போற்றி

    ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி

    ஓம் தகைமை தருபவளே போற்றி

    ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி

    ஓம் தாயான தயாபரியே போற்றி

    ஓம் தண்ணருள் தருவாய் போற்றி

    ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி

    ஓம் நவமி தேவதையே போற்றி

    ஓம் நவராத்திரி நாயகியே போற்றி

    ஓம் நன்னெறி தருபவளே போற்றி

    ஓம் நலம் அளிப்பவளே போற்றி

    ஓம் நாவிற்கு அரசியே போற்றி

    ஓம் நல்லவர்களின் மனமே போற்றி

    ஓம் நா நயம் அருள்வாய் போற்றி

    ஓம் நான்மறை நாயகியே போற்றி

    ஓம் நாவில் உறைபவளே போற்றி

    ஓம் நாதத்தின் தலைவியே போற்றி

    ஓம் நாத வெள்ளமானாய் போற்றி

    ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி

    ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி

    ஓம் நித்தம் வளர்பவளே போற்றி

    ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி

    ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி

    ஓம் பண்ணின் இசையே போற்றி

    ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி

    ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி

    ஓம் பிரணவ சொரூபமே போற்றி

    ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி

    ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி

    ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி

    ஓம் பூரண வடிவானவளே போற்றி

    ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி

    ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி

    ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி

    ஓம் மங்கல வடிவானவளே போற்றி

    ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி

    ஓம் மாயையை அழிப்பவளே போற்றி

    ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி

    ஓம் முற்றறிந்த அறிவே போற்றி

    ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி

    ஓம் மூலமந்திர வடிவினளே போற்றி

    ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி

    ஓம் முக்தி அளிப்பவளே போற்றி

    ஓம் மேதையாக்குபவளே போற்றி

    ஓம் மேன்மை தருபவளே போற்றி

    ஓம் யாகத்தின் பலனே போற்றி

    ஓம் யோகத்தின் பயனே போற்றி

    ஓம் வழித்துணை வருவாய் போற்றி

    ஓம் வரம் அருள்பவளே போற்றி

    ஓம் வாணி சரஸ்வதியே போற்றி

    ஓம் வாக்கின் நாயகியே போற்றி

    ஓம் வித்தக வடிவினளே போற்றி

    ஓம் வித்யா லட்சுமியே போற்றி

    ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி

    ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி

    ஓம் வெண்தாமரையினாளே போற்றி

    ஓம் வீணை ஏந்தியவளே போற்றி

    ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி

    ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி

    ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி போற்றி போற்றி

    • சாதாரணமாக இந்த லட்சுமி பூஜை படம், படி அரிசி, குத்து விளக்கு, இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
    • இதனால் வறுமை அகலும் என்பது ஐதீகம். அன்று சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    நவராத்திரியில் வரும் ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி பூஜை மிகவும் விசேஷமானதொரு பூஜையாகும். மூல நட்சத்திரத்திற்கு முதல் நாள் வரும்.

    தமிழில் கேட்டை நட்சத்திரம் என்று சொல்வார்கள்.

    சாதாரணமாக இந்த லட்சுமி பூஜை படம், படி அரிசி, குத்து விளக்கு, இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

    இதனால் வறுமை அகலும் என்பது ஐதீகம். அன்று சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    மகாலட்சுமியை குறித்து சொல்லும் சுலோகங்கள், அக்ஷ்டோத்திரம், ஸஹஸ்ர நாமம் சொல்லி குங்குமம், புஷ்பம், அட்சதைகளினால் அர்ச்சிக்கலாம்.

    மூலநட்சத்திர தீபம்:

    மூல நட்சத்திர தீபம் என்பது நவராத்திரி பூஜை சமயத்தில் சரஸ்வதி ஆவாகனம் செய்யும் மூலநட்சத்திரத்தன்று ஏற்றும் ஒரு அகண்ட தீபம் ஆகும்.

    இந்த தீபமானது சரஸ்வதி பூஜை வரையிலும் அகண்டமாக அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.

    இதை ஏற்றுவதற்கு நந்தாதீபம் போன்ற நாக்கு வைத்த விளக்கு அல்லது காமாட்சி விளக்கு உசிதமானது.

    மூலா நட்சத்திரத்தன்று காலையில் குளித்து புதிய ஆடை அணிந்து கொண்டு சுவாமியின் முன் ஒரு இடத்தை சுத்தம் செய்து செம்மண் கோலம் போட்டு அலங்கரித்து அதன் மேல் ஒரு சிறிய மர பலகை அல்லது தட்டு வைத்து சிறிய அரிசியை பரப்பி அதன் மேல் விளக்கு வைத்து ஏற்றி பூக்களைப்போட்டு நமஸ்கரிக்க வேண்டும்.

    பசு நெய் ஸ்ரேஷ்டம் ஆனால் மூன்று நாட்களும் எரிந்து கொண்டிருக்க வேண்டியதினால் அந்த அளவு நெய் கிடைப்பது கஷ்டம். ஆகையால் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம்.

    விளக்கு மலையேறாமல் அடிக்கடி எண்ணை ஊற்றி திரியை தூண்டிவிட வேண்டும்.

    இரவில் படுப்பதற்கு முன்பு நிதானமாக திரியின் மேல் பாகத்தை சுத்தம் செய்து எண்ணெய் ஊற்ற வேண்டும்.

    திரியை சுத்தம் செய்யும் பொழுது அணையாமல் இருக்க வேறு திரியை ஏற்றி விட்டு சுத்தம் செய்து பிறகு ஏற்ற வேண்டும்.

    • கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் நாச்சியார் கோவில் என்னும் தலம் உள்ளது.
    • அங்கு எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் வஞ்சுளவல்லி தாயாருடன் அருட்காட்சி தருவது மிகவும் விசேஷமாகும்.

    கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் நாச்சியார் கோவில் என்னும் தலம் உள்ளது.

    அங்கு எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் வஞ்சுளவல்லி தாயாருடன் அருட்காட்சி தருவது மிகவும் விசேஷமாகும்.

    துறையூர்

    துறையூருக்குச் செல்லும் பாதையில் திருவெள்ளறை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது.

    தாயார் தவம் செய்து பெரும் பேறு பெற்ற திருத்தலம்.

    பெருமானின் திருநாமம் புண்டரீகாஷன். இத்திருக்கோவிலில் தாயாருக்குத்தான் முதலில் பூஜை நடைபெறும்.

    இக்கோவிலைச் சேர்ந்த சுவாமி புஷ்கரணி ஸ்வஸ்திகா வடிவில் அமைந்திருப்பது மிக்க சாந்நித்யம் உடையதாகும்.

    தலச்சங்காடு (மாயவரம்)

    மாயவரம் தரங்கம்பாடி வழிதடத்தில் உள்ள தலைச்சங்காடு என்ற திருத்தலத்தில் தாயார் தலைச்சங்க நாச்சியார் செங்கமலவல்லி என்ற திருநாமத்துடன் நின்ற திருக் கோலத்துடன் காட்சி தருகிறாள்.

    • இத்திருக்கோவிலில் அஷ்ட லட்சுமிகளும் அருளை வழங்கும் ஆனந்த ரூபிணியர்களாக காட்சி தருகிறார்கள்.
    • கடலை நோக்கி மகாலட்சுமியும், ஸ்ரீமந் நாராயணனும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்கள்.

    சென்னையில் காமக் கோடி பரமாச்சாரியார் பேரருளோடு, அலைகடல் அன்னைக்கு மிக அற்புதமான ஆலயம் அலைகடல் ஓரம் கட்டப்பட்டுள்ளது.

    இந்தக்கோவில், திருவான்மியூருக்கு அருகிலுள்ள ஓடைக் குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

    இத்திருக்கோவிலில் அஷ்ட லட்சுமிகளும் அருளை வழங்கும் ஆனந்த ரூபிணியர்களாக காட்சி தருகிறார்கள்.

    கடலை நோக்கி மகாலட்சுமியும், ஸ்ரீமந் நாராயணனும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்கள்.

    இவர்களைத் தரிசித்து விட்டு வந்தால், தெற்கே ஆதிலட்சுமி மேற்கில் தானிய லட்சுமி வடக்கில் தைரிய லட்சுமி மூவரையும் தரிசிக்கலாம்.

    மீண்டும் மகாலட்சுமி சந்நிதிக்குள் சென்று இடது கைப்பிடிக்கட்டுகள் வழியாக இரண்டாவது தளத்துக்குச் செல்லலாம்.

    இந்தத் தளத்தில் கிழக்கு நோக்கி கஜலட்சுமி, தெற்கு நோக்கி சந்தான லட்சுமி, மேற்கு நோக்கி விஜய லட்சுமி, வடக்கு நோக்கி வித்யா லட்சுமி காட்சி தருகிறார்கள்.

    அங்கேயிருந்து மூன்றாவது தளத்திற்குச் செல்லலாம். அங்கே கிழக்கே பார்த்தபடி தனலட்சுமியைத் தரிசிக்கலாம்.

    ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று தளங்கள் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.

    இந்த ஆலயத்தில் சங்க நிதிக்கும், பதும நிதிக்கும் இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.

    மற்றொரு விசேஷம் இக்கோவிலில் குருவாயூரப்பனுக்கும், ஆஞ்சநேயருக்கும், கணபதிக்கும் தனித் தனியே சந்நதிகள் அமைந்துள்ளன.

    • இத்த லத்தில் ஜகத்குரு, ஸ்ரீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அஷ்டலட்சுமி திருக்கோவில் உள்ளது.
    • இக்கோவிலின் தல விருட்சமான புன்னை மரத்தினடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார்.

    திருவலம்:-

    சென்னையில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ளது திருவலம் என்ற திருத்தலம்.

    இத்த லத்தில் ஜகத்குரு, ஸ்ரீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அஷ்டலட்சுமி திருக்கோவில் உள்ளது.

    இங்கு அஷ்ட லட்சுமிகளும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    மதுராந்தகம்:-

    சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள மதுராந்தகத்தில் இருக்கும் ஏரிகாத்தராமர் ஆலயத்தில் ஜனக வல்லித்தாயார் என்ற திருநாமம் கொண்டு பிராட்டியார்' அருள்பாலித்து வருகிறாள்.

    மேலும் அதே மதுராந்தகத்தில் தேரடித் தெருவிற்கு அருகில் ஸ்ரீ தேவி சரணம் என்ற வளைவுடன் கூடிய, சாஸ்த்திர அடிப்படையில் அமைக்கப்பட்ட நூதனமான ஒரு ஸ்ரீதேவி திருக்கோவில் உள்ளது.

    இங்குள்ள தாயாரின் திருநாமம் அஷ்டலட்சுமி சவுந்தர்ய மந்த்ர பீடேஸ்வரி ஸ்ரீதேவி என்பதாகும்.

    திருவாரூர்:-

    திருவாரூரில் ஸ்ரீ பஜூலட்சுமி என்ற ஒரு லட்சுமிக்கு ஒரு ஆலயம் உள்ளது.

    இக்கோவிலின் தல விருட்சமான புன்னை மரத்தினடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார்.

    எனவே இந்த பஜூலட்சுமிக்கு புன்னைப்பிராட்டி என்றும் ஒரு திருநாமம் வழங்கப்படுகிறது.

    • கர்நாடக மாநிலம், பெங்களூரில் விவேக நகருக்கு அருகில் உள்ள ஈஜிபுரம் எனும் இடத்தில் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி திருக்கோவில் ஒன்றுள்ளது.
    • இதில் பலகாலமாக அஷ்ட லட்சுமிகளை 8 கலசங்களில் ஆவாஹனம் செய்து அஷ்ட லட்சுமி பூஜை செய்து வந்தார்கள்.

    பெங்களூர்:-

    கர்நாடக மாநிலம், பெங்களூரில் விவேக நகருக்கு அருகில் உள்ள ஈஜிபுரம் எனும் இடத்தில் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி திருக்கோவில் ஒன்றுள்ளது.

    இதில் பலகாலமாக அஷ்ட லட்சுமிகளை 8 கலசங்களில் ஆவாஹனம் செய்து அஷ்ட லட்சுமி பூஜை செய்து வந்தார்கள்.

    இப்போது அங்கு ஸ்ரீ கந்த மரத்தால் (சந்தனமரம்) செய்யப்பட்ட தாருஜம், தாருமயீ எனும் வகை அஷ்ட லட்சுமிகளின் அர்ச்சா மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டில் உள்ளன.

    இது மிகவும் விசேஷமான மூர்த்தங்களாகும்.

    செஞ்சந்தன மரத்தில் மகாலட்சுமி வடிவத்தை சிற்ப முறைப்படி செய்து பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.

    • திருப்பதி திருமலையில் ஸ்ரீ விக்னேஸ்வரரின் ஆலயம் ஒன்றுள்ளது.
    • ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரஹாரத்தில் அஷ்ட லட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது.

    திருப்பதி திருமலையில் ஸ்ரீ விக்னேஸ்வரரின் ஆலயம் ஒன்றுள்ளது.

    அதில் அஷ்டலட்சுமிகளான, ஸ்ரீ ஆதிலட்சுமி, ஸ்ரீ வீரலட்சுமி, ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ தான்யலட்சுமி, ஸ்ரீ விஜய் லட்சுமி, ஸ்ரீ தீப லட்சுமி, ஸ்ரீ தனலட்சுமி, ஸ்ரீ ஐஸ்வரியலட்சுமி எனும் திருநாமங்களோடு அர்ச்சாவதார மூர்த்திகளாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள்.

    இம்மூர்த்தங்களை ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து வைத்தார்.

    ஸ்ரீரங்கம்

    ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரஹாரத்தில் அஷ்ட லட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது.

    அதில் நுழைவுப் பகுதி முன் வாயிலுக்கு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வாசல் என்பது பெயராகும்.

    அம்மண்டபத்தினுள் எண் திசைகளுக்கும் ஒவ்வொன்றாக எட்டு லட்சுமி மூர்த்தங்கள் உள்ளன.

    ஒவ்வொன்றிற்கும் இரண்டிரண்டு திருநாமங்களும் உள்ளன.

    அவை முறையே

    1. ஸ்ரீ வித்யலட்சுமி - யசோலட்சுமி, 2. ஸ்ரீ தனலட்சுமி - கஜலட்சுமி, 3. ஸ்ரீ சந்தானலட்சுமி - தான்யலட்சுமி, 4. ஸ்ரீ தைரிய லட்சுமி - சித்தலட்சுமி, 5. ஸ்ரீ சாம்ராஜ்யலட்சுமி - மோட்ச லட்சுமி, 6. ஸ்ரீ சவுர்யலட்சுமி - வீர லட்சுமி, 7. ஸ்ரீ லட்சுமி - ஜயலட்சுமி, 8. ஸ்ரீ பிரசன்னலட்சுமி - சவுபாக்ய லட்சுமி எனும் திருநாமங்களாகும்.

    • இத்தலத்தில் எழுந்தருளி உள்ள எம்பெருமானுக்கு ‘‘நாவாய் முகுந்தன்’’ என்று பெயர்.
    • இந்த தலம் பித்ருக்கள் பூஜை செய்வதற்கான சிறந்த தலமாக உள்ளது.

    கேரள மாநிலம் திருநாவாய் என்ற ஊரில் புகழ் பெற்ற வைணவத் தலம் ஒன்று உள்ளது.

    108 திவ்ய தேசங்களில் அந்த தலமும் ஒன்றாகும்.

    இத்தலத்தில் எழுந்தருளி உள்ள எம்ெபருமானுக்கு ''நாவாய் முகுந்தன்'' என்று பெயர்.

    இந்த தலம் பித்ருக்கள் பூஜை செய்வதற்கான சிறந்த தலமாக உள்ளது.

    துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

    அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள்.

    கோவில் அருகில் பிரமாண்ட பந்தல் அமைத்து பித்ரு கடமைகள் செய்ய வசதி செய்துள்ளனர்.

    எனவே ஏதாவது ஒரு அமாவாசை தினத்தன்று திருநாவாய் சென்று கிருஷ்ண பரமாத்மா செய்தது போல பித்ரு பூஜைகள் செய்து பலன் பெறலாம்.

    • யக்ஞம் முடிந்த உடன் ஆறுமுக மங்கலத்தையே கிராமதானமாக பெற்றுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக வரலாற்று ஏடு தெரிவிக்கிறது.
    • தொடக்க காலத்தில் இந்த கிராமத்தின் தெற்கு கரையில் பல அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டார்கள்.

    கடவுள் ரூபங்களில் முதன் முதலாக வணங்கப்பட்ட விநாயகர் என்றும் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநயாகர் கோவில் என்றும் சொல்லப்படுவது தூத்துக்குடி எல்லைக்குட்பட்ட ஆறுமுக மங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவில்.

    கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதென்று இந்த ஆலயத்திலன் வரலாறு கூறுகிறது.

    கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோமார வல்லபன் என்ற அரசன் நர்மதை நதிக்கரையில் இருந்து ஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து இங்கு மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்திட முடிவு செய்தான்.

    ஆனால் அங்கு வந்தவர்களோ 999 பேர்தான் ஒரு பண்டிதர் குறைந்ததால் மன்னனின் மனதில் கவலை ஏற்பட்டது.

    பிரார்த்தனை செய்பவர் போல வடிவம் கொண்டு விநாயகரே பண்டிதராக வந்து யாகத்தை நிறைவுசெய்தார்.

    இதனால் இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகப்பெருமான் என்று அழைக்கப்படுகிறது.

    யக்ஞம் முடிந்த உடன் ஆறுமுக மங்கலத்தையே கிராமதானமாக பெற்றுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக வரலாற்று ஏடு தெரிவிக்கிறது.

    தொடக்க காலத்தில் இந்த கிராமத்தின் தெற்கு கரையில் பல அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டார்கள்.

    பின்னர் காளஹஸ்தீஸ்வரர் கல்யாணி தேவி சன்னதிகளோடு மகா மண்டபம் அமைக்கப்பட்டது.

    தேர், கொடிமரம், 10 நாட்கள் உற்சவங்களோடு திருவிழா காணும் முக்கிய விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்றாக கூறப்படுகிறது.

    5 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இந்த கோவிலில் ஒரு சமயம் ஆதிசங்கரருக்கு வயிற்று வலி ஏற்பட்டபோது , இங்கே கணேச பஞ்சரத்ன கீர்த்தனம் பாடி பிறகு திருச்செந்தூருக்கு சென்று முருகன் சன்னதியில் சுப்ரமணிய புஜங்கம் பாடியபின் நோய் வலி நீங்கப்பெற்றார் என்பது இங்கே நடந்த முக்கிய செய்தி.

    வாகன விபத்து, பயண பிரச்சினை, வழக்கு இழுபறி ஆகியவை சுமூகமாக முடிய இந்த விநாயகரை வேண்டினால் நடந்துவிடும் என்று நம்பும் பக்தர்கள் அப்படி நடந்த பிறகு 1008,108 தேங்காய்களை உடைத்து 108 தீபங்களும் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்போது 7ம் திருநாளன்று ஸ்ரீநடராஜ மூர்த்தியுடன் பஞ்சமுக கணபதி திரு வீதி உலா வருவார்.

    நெல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஏரலில் இருந்து அடுத்த 4 கி.மீட்டரில் வடக்கு திசையில் ஆறுமுக மங்கலத்தை அடையலாம்.

    • இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.
    • வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். ஏனென்றால், அன்றைய தினம்தான் அவர் அவதரித்தார்.

    1. வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். ஏனென்றால், அன்றைய தினம்தான் அவர் அவதரித்தார்.

    2. வைகாசி என்ற பெயரில் வட இந்திய புண்ணிய தலமான காசி பெயரும் வருவதால், அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. காசிக்கு சென்று கங்கையில் புனித நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.

    3. வள்ளலார் ராமலிங்க அடிகளார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பை வைகாசி மாதத்தில்தான் தோற்றுவித்தார்.

    4. வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    5. காஞ்சி மகா பெரியவர் அவதரித்ததும் வைகாசி மாதமே!

    6. சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும், லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    7. தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில் இந்த வைகாசி மாதத்தில்தான் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன.

    8. இறை வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது வைகாசி.

    9. இஷ்வாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாக இருப்பதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராம-ராவண யுத்தம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    10. மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி மணிமேகலையிடம் வைகாசிப் பவுர்ணமி அன்று கோமுகி என்ற பொய்கையில் அள்ள அள்ளக் குறையாத "அமுத சுரபி" என்னும் அட்சயப் பாத்திரம் வெளிவரும். உலக மக்களின் பசிப்பிணியை ேபாக்கு வதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன் என்று கூறி மறைந்தது. இதன்படியே மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப்பாத் திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்குத் திரும்பினாள்.

    11. ராஜஸ்தான் மாநிலத்தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள ைபராத் நகரின் எல்லையோரத்தில் ஓடும் பான் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது ராதாகிருஷ்ணன் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமி நாளில் பான்கா விழா நடக்கிறது. இந்நாளில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பான் கங்கா நதியில் நீராடி பூஜைகளும் யாகங்களும் செய்து ராதாகிருஷ்ணனை வழிபடுவார்கள்.

    12. தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன. அவ்வகையில், வைகாசி விசாகம் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாகவும் கொண்டாடப்படுகிறது.

    13. முருகப் பெருமானுக்குரியதாக வைகாசி விசாகம் மிளிர்கின்றது. சிவ பெருமான் தாணு (மரமாக)வாக இருப்பதாகவும், அம்பிகை கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும், முருகப் பெருமான் விசாகமாக (கீழ் கன்றாக) இருப்பதாகவும் சோமாஸ்கந்த தத்துவம் விளக்கி கூறுகிறது.

    14. பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை ேபான்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    15. விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

    16. தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    17. திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும்.

    18. பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில்தான். இந்நாள் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    19. ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப்பொலிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

    20. கன்னியாகுமரி அம்மனுக்கு 'ஆராட்டு விழா' இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

    21. திருப்ேபாரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவ ரது குருபூஜை திருப்ேபாரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடை பெற்று வருகிறது.

    22. ராம-ராவண யுத்தத்தின்ேபாது விசாகம் அமைந்துள்ள கோள் நிலையையும், அது காட்டிய நன்மை, தீமைளையும் மனதில் கொண்டே ராமன் ேபாரிட்டு ராவணனை வதம் செய்து வெற்றி கொண்டார் என்பர்.

    23. ராஜராஜ சோழ மாமன்னரின் சரிதத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடக கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ராஜேந்திர சோழன் வழங்கிய ஆணை, தஞ்சை பெரிய கோவில் வடக்குச் சுவரில் கல்வெட்டாக உள்ளது.

    24. திருச்சி அருகில் 'ஐயர் மலை' என்று வழங்கப்படும் வாட்ேபாக்கி ரத்னாசலேஸ்வரர் (ரத்னகிரி) கோவில் கல்வெட்டில் வைகாசித் திருவிழா சிறப்பாக நடத்திட கோனேரின்மை கொண்டான் என்ற அரசன் நிலம் வழங்கியதை குறிப்பிடுகிறது.

    25. இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.*

    ×