என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

மாங்கல்யம் பலம் பெற சக்தி வாய்ந்த மகாலட்சுமி பூஜை
- இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் செல்வ வளம் சேரும்.
- மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
மகாலட்சுமி பூஜையின்போது நாம் முற் பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.
பெண்களின் மாங்கல்ய தோசத்திற்கும் ஸ்ரீமகாலட்சுமி பூஜை சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும்.
எப்படி மகாலட்சுமி பூஜை செய்வது?
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும். காலையில் ஸ்ரீமகாலட்சுமி படத்தை 12 அல்லது அதன் மடங்குகளில் வலம் வரவும்.
பால், பழம் அல்லது பாயாசம் நைவேத்தியம் செய்யவும். நெய் தீபம் ஏற்றவும். மகாலட்சுமி அஷ்டகம் அல்லது மகாலட்சுமி துதியை 3 முறை பாடவும்.
நைவேத்தியத்தை பெண் குழந்தைகளுக்கு (பிரசாதமாக) பகிர்ந்து கொடுக்கவும். இதையே ஆடி மாதம் செய்தால் அதன் பெயர்தான் வரலட்சுமி விரதம்.
ஆடி மாதம் செய்யும்போது வயதான சுமங்கலிகளை வர வழைத்து அவர்களை வணங்கி ஆசி பெறுவது நன்று.
இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள்.
இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள்.
இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் உண்டாகும்.
சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும்.
குடும்பத்திற்கு எட்டுவித செல்வங்கள் கிடைக்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும்.






