என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது.
- இந்த கோவில் அருகில், திருமாலுக்கும் ஆலயம் இருக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவில் அருகில், திருமாலுக்கும் ஆலயம் இருக்கிறது.
வருடந்தோறும் இங்கே விழாக்களும் விசேஷங்களும் நடத்தப்படுகிறது என்றாலும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது.
தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா, சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம் என அமர்க்களப்படும்.
நிறைவில், தீர்த்தவாரியின் போது சுற்றுவட்டார ஊர்க்காரர்கள் அனைவரும் நீடாமங்கலம் சிவாலயத்தில் ஒன்று திரண்டிருப்பார்கள்.
காசிக்கு நிகரான இந்தத் தலத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தால் பித்ரு தோஷங்கள் உள்பட 16 வகையான சாபங்களும் தோஷங்களும் விலகும், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது.
- இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.
விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான்.
அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.
அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது.
அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம்.
பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும்.
அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது.
இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
பூமியில் இருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார்.
களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.
பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.
அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது.
இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.
உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது.
இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.
(விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)
பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம்.
அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும்.
பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயாசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.
பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம்.
நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள்.
ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
இந்த விரதத்தை காலையில் இருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம்.
பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள்.
அப்படித் தொடர்ந்து, பவுர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
- அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி.
- கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.
விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.
அதனால்தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.
விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார்.
தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன்.
மருமகனை அவமானப் படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.
இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.
அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள்.
சிறு வயதில் இருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள்.
அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.
அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி.
கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.
அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பவுர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.
அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள்.
அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.
- அங்காரகனின் தவம் பலித்தது. அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சியளித்து அருள்புரிந்தார்.
- வானில் சந்திரன் உதயமாகும் நேரம் அது செவ்வாய்க்கிழமை, மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாள்.
சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானதாகும்.
அதில் தேய்பிறை சதுர்த்தியில் அனுசரிக்கப்படும் 'சங்கடஹர சதுர்த்தி விரதம்' தலை சிறந்தது என்று போற்றப்படுகிறது.
நவக்கிரகங்களில் ஒன்றான அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். அதிலும், செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது.
அங்கராக பகவானுக்கு சதுர்த்தி நாள் எப்படி விசேஷமானது என்பதை பார்க்கவ புராணம் நமக்கு விளங்குகிறது.
பரத்வாஜ முனிவரால் கைவிடப்பட்ட குழந்தை பூமியில் கிடந்தது. அதை அதிசயத்துடன் பார்த்த பூமிதேவி வாரி அணைத்துக்கொண்டாள்.
தனக்கு ஆண்டவனால் அளிக்கப்பட்ட வரப்பிரசாதம் என்று மகிழ்ந்தாள்.
அந்த குழந்தையின் உடல் மாலை நேரத்தில் செவ்வானம் போல் சிவந்து ஒளியுடன் விளங்கியதால் அங்காரகன் என்று பெயரிட்டு பிரியமுடன் வளர்த்து வந்தாள்.
குழந்தை அங்காரகன் வளர்ந்து சிறுவனானான்.
தனது தந்தையைப் பார்க்க விரும்பினான். பூமிதேவி பரத்துவாஜரிடம் கொண்டு போய் ஒப்படைத்தாள்.
அழகு பொருந்திய தன் மைந்தனை அன்போடு அணைத்துக் கொண்டார் மகரிஷி.
உரிய காலத்தில் அங்காரகனுக்கு உபநயனம் செய்வித்து, வேதத்தை அவனுக்கு போதித்தார்.
மேலும் தனது இஷ்ட தெய்வமான விநாயகப் பெருமானின் மூலமந்திரத்தையும் உபதேசம் செய்தார்.
அங்காரகன் தந்தை காட்டிய வழியில் தனித்திருந்து தவ வாழ்க்கை மேற்கொண்டான்.
விநாயகப்பெருமானின் பாத கமலங்களையே சரணம் என்று தியானித்து ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக கடுந்தவம் புரிந்தான்.
அங்காரகனின் தவம் பலித்தது. அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சியளித்து அருள்புரிந்தார்.
வானில் சந்திரன் உதயமாகும் நேரம் அது செவ்வாய்க்கிழமை, மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாள்.
அங்காரகன் அருள் பெற்ற அந்த புனித நாளில் விரதம் அனுஷ்டித்து விநாயகப் ெபருமானை வணங்கித் துதிப்பவருக்கு அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்.
சங்கடங்கள் எல்லாம் பறந்தோடும் பக்தர்களது துயர் நீங்கும் வாழ்க்கை வளம் பெருகும்.
எனவே அங்காரகனின் நாளான செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்திகளை விட விநாயகருக்கு மிகவும் மகிழ்ச்சித் தரவல்லதாகக் கருதப்படுகிறது.
அங்காரகனால் துவங்கப்பட்ட இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து வருபவர்கள் அடையும் நற்பலன்கள் ஏராளம்.
கடன், வியாதி, பகை அகலும், செல்வச் செழிப்பு, வித்தை, செல்வாக்கு ஓங்கும். மகப்பேறு கிடைக்கும்.
- இந்த கோவிலின் அரசு-வேம்பு இணைந்த மரத்தடியில், ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, நாக அணி பூண்டு வீற்றிருக்கிறார் ஸ்ரீ நாகநாத விநாயகர்.
- நாக தோஷம், ராகு-கேது தோஷங்களை நீக்குகிறார் என்பதால் தினமுமே இங்கு விழாக்கோலம் தான்.
திருவாரூர் வன்னியூர் (காரையூர்) கிராமத்தில் உள்ள விநாயகரை வன்னி இலையாலும், மந்தாரைப் புஷ்பத்தாலும் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல பாவங்களும் தீரும்.
தஞ்சாவூர் பில்லுக்காரத் தெருவில் ஸ்ரீ சக்தி முனியாண்டவர் திருக்கோயில் உள்ளது.
இந்த கோவிலின் அரசு-வேம்பு இணைந்த மரத்தடியில், ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, நாக அணி பூண்டு வீற்றிருக்கிறார் ஸ்ரீ நாகநாத விநாயகர்.
நாக தோஷம், ராகு-கேது தோஷங்களை நீக்குகிறார் என்பதால் தினமுமே இங்கு விழாக்கோலம் தான்.
மரண பயம், விஷ ஜந்துக்கள் பயம் நீக்குவதுடன், திருமணத் தடையை அகற்றி மழலை பாக்கியமும் தந்தருள்கிறார் இந்த விநாயகர்.
வேதாரண்யத்தில் உள்ள கோயிலின் வெளிப்பிரகாரத்தில் மேற்கு நோக்கி வீரஹத்தி விநாயகர் வீற்றிருக்கிறார்.
ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, ராமபிரான் ராமேசுவரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
எனினும் அவரை விடாமல் தொடர்ந்து வந்த வீரஹத்தியைத் தீர்த்தருளிய காரணத்தால் இவருக்கு இந்தப் பெயர் அமைந்தது என்கிறது தலப் புராணம்.
நாமும் இவரை வழிபட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை கிரிவலம் சாலையில் இடுக்குப் பிள்ளையார் அமைந்துள்ளார். இவரை பிள்ளையார் வடிவில் காண முடியவில்லை.
கோவிலின் முன்புறம் இரண்டு பாதங்கள் அமைந்துள்ளன.
கோவிலின் பின்புறம் மண்டியிட்டுப் படுத்து சர்க்கசில் இரும்பு வளையத்தில் நுழைவது போல, நுழைந்து முன்புறமாக வெளிவருவது தான் இக்கோவிலில் செய்யும் பிரார்த்தனை, தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு உடல் வலி, பில்லி சூனியம் போன்றவை அகலுதல் ஆகிய பலன்கள் கிடைக்கும்.
- விநாயகரை மூலவராக கொண்ட கோவில்களில் கொடிமரம், திருத்தேர் கொண்டு திருநாள் காணும் கோவில் இது மட்டுமே.
- இத்திருத்கோவிலில் அபூர்வமான பஞ்சமுக விநாயகரும் வீற்றிருக்கிறார்.
திருச்சியிலிருந்துமேற்கு புறம் முப்பத்தைந்து கி.மீ. தொலைவில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள கடம்பனேஸ்வரர் கோவிலிலும் ராகு கேது இருபுறம் இருக்க, நடுவில் இடஞ்சுழி விநாயகராக நின்ற கோலத்தில் வன்னிமரத்தடியில் மேடையில் வீற்றிருக்கிறார்.
தோஷம் நீங்க நெய்விளக்கேற்றி இவரை வழிபடலாம்.
சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டியர்கள் கொற்கையிலிருந்து அரசாண்ட பொழுது, அரசன் செய்த யாகத்தில் கலந்து கொண்ட அந்தணர்களால், நர்மதை நதிக்கரையிலிருந்து கொண்டு வரப்பட்டு இந்த விநாயகர் ஸ்தாபிக்கப்பட்டார்.
எனவே இந்த விநாயகரே தமிழ்நாட்டில் முதலில் வந்த பிள்ளையார் என்கின்றனர்.
விநாயகரை மூலவராக கொண்ட கோவில்களில் கொடிமரம், திருத்தேர் கொண்டு திருநாள் காணும் கோவில் இது மட்டுமே.
இத்திருத்கோவிலில் அபூர்வமான பஞ்சமுக விநாயகரும் வீற்றிருக்கிறார்.
காளஸ்தீஸ்வரரும் இக்கோவிலில் இருந்து அருள்பாலிப்பதால், கால சர்ப்ப தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
- தூமம் என்றால் ராகு, ராகு கேது ஆகிய இரண்டு வடிவமும் இணைந்து விளங்குகிறார் தூம கேது விநாயகர்.
- இவரை வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய் போன்ற நாட்களில் தரிசிக்கலாம்.
108 திருப்பதிகளில் சென்னையை அடுத்த திருநீர்மலையும் ஒன்று.
இங்குள்ள குளத்தின் பெயர் மணிகர்ணிகாதடாகம். இந்த மணிகர்ணிகா தடாகத்தின் கிழக்குக் கரையில் தூம கேது விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
தூமம் என்றால் ராகு, ராகு கேது ஆகிய இரண்டு வடிவமும் இணைந்து விளங்குகிறார் தூம கேது விநாயகர்.
இவரை வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய் போன்ற நாட்களில் தரிசிக்கலாம்.
திருமணமாகாத பெண்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடும் போது, அவர்களது ராகு, கேது தோஷம் நீங்கி திருமணம் நடந்து விடுவதாக கூறுகிறார்கள்.
விநாயகர், சதுர்த்தியன்று இத்தலத்தில் சிறப்பு யாகம் நடைபெறும். குழந்தைப் பாக்கியம் வேண்டுவோருக்கு கணபதி யாகம் நடத்தப்படுகிறது.
வலம்புரிச்சங்கு கொண்டு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் மற்ற விசேஷ நாட்களிலும் வலம்புரிச்சங்கு தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
- இதனால் பயந்த நவகிரகங்கள் திருவாரூர் தியாகராசப் பெருமானிடம் முறையிட அவர்களை அவர் அசுரனிடமிருந்து காப்பாற்றினார்.
- அதனால் இங்கு நவகிரகங்கள் நேர்கோட்டில் சிவபெருமானை நோக்கி அமைந்துள்ளன.
ஒரு தடவை சனிதோசம் பிடித்த சத்யகுப்தன் என்ற அசுரன் நவகிரகங்களை எதிர்த்துப் போரிட்டான்.
இதனால் பயந்த நவகிரகங்கள் திருவாரூர் தியாகராசப் பெருமானிடம் முறையிட அவர்களை அவர் அசுரனிடமிருந்து காப்பாற்றினார்.
அதனால் இங்கு நவகிரகங்கள் நேர்கோட்டில் சிவபெருமானை நோக்கி அமைந்துள்ளன.
நவகிரகங்கள் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க, விநாயகர் சிலையும் இந்த நவகிரக சன்னதியில் உள்ளது.
அதனால் திருவாரூர் கோவிலில் விநாயகரை வணங்கினால் சகல கிரக தோஷங்கள் விலகும்.
- விநாயகரை வழிபட்டால் நல்லவாக்கு, நல்லமனம், லட்சுமி கடாட்சம் ஆகிய பலன்கள் கிடைக்கும்.
- சக்தியையும், சிவனையும் வேண்டிக் கொண்டு இடப்படுகின்ற குறியானது பிள்ளையார் சுழி எனப்படும்.
1. மாதம் தோறும் பவுர்ணமி நான்காம் நாளான (நான்காம் பிறை) ஸ்ரீவிநாயகரை வழிபடுவோர் சங்கடம் நீங்கி, சந்தோஷம் அடைவர்.
2. விநாயகர் பூஜைக்கு உகந்த மலர்கள் அருகம்புல், அரளி, நெல்லி, மரிக்கொழுந்து, ஜாதிமல்லி, வெள்ளெருக்கு, கரிசலாங்கண்ணி, எருக்கு, மாதுளை, புன்னை, மந்தாரை, மகிழம்பூ, வெட்டிவேர், தும்ைப, சம்பங்கி, தாழம்பூ, முல்லை, கொன்றை, செங்கழுநீர், செவ்வந்தி, பவழமல்லி முதலியனவாகும்.
3. விநாயகரின் ஐந்து கைகளில் உள்ளவை. 1) துதிக்கையில் தண்ணீர்க்குடம். 2) பின் இரண்டு கைகளில் அங்குசம் பாசம். 3) முன் கைகளில் வலது கையில் தந்தம், இடது கையில் மோதகம்.
4. விநாயகரை ஒரு முறை வலம் வருதல் வேண்டும்.
5. அமெரிக்காவில் விநாயகருக்காக விவேகானந்தர் கோவில் கட்டினார்.
6. மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார்.
7. விநாயகர் பயிர் தொழிலுக்குரிய தெய்வம் என்று சொல்லப்படுகின்றார். அதாவது பயிரை அழிக்கக் கூடிய பெருச்சாளியைத் தமது வாகனமாக்கி அடக்கி வைத்துள்ளார் என்பது இதன்பொருள்.
8. சிவபெருமான் உமாதேவியைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார். இதனைப் போன்றே விநாயகர் வல்லபையைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார்.
9. விநாயகரின் வாகனங்கள் மயில், காளை, சிங்கம், யானை, குதிரை, பூதம் முதலியனவாகும்.
10. வெள்ளிக்கிழமை தோறும் அருகம்புல், தேங்காய் ஆகியவற்றினைக் கொண்டு கணபதி ஹோமம் செய்து வந்தால், நீண்ட ஆயுளும், செல்வமும் கிடைக்கும்.
11. விநாயகரின் மந்திரம் ஓம் கம் கணபதயே நமஹ என்பதாகும். காலை மாலை 108 தடவை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.
12. திருஞானசம்பந்தர் அன்பிலாந்துறை என்னும் தலத்துக்குச் சென்றபோது ஆற்றில் வெள்ளம் பெருகி ஓடியது. இதனால் அவர் கரையில் இருந்தவாறே பதிகம் பாடினார். அதனைக் கேட்ட விநாயகர் செவிசாய்த்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
13. பல்லவர் காலக் கோவில்களில் பரிவார தேவதையாக முதன் முதலாக அமைக்கப் பெற்ற கணபதி காஞ்சி கைலாசநாதர் கோவிலில் காணப்படுகின்றார்.
14. பஞ்சபூதத் தொடர்பு உடையவர் விநாயகர். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆல மரத்தடியில் மண்வடிவமாகவும் விளங்குகின்றார்.
15. விநாயகப் பெருமான் பிரணவம் ஆகிய ஓங்கார மந்திர சொரூபமாய் விளங்குபவர்.
16. விநாயகருக்கு உகந்த நிவேதனங்கள் சுண்டல், பொரி, கடலை, இளநீர், தேன், அப்பம், அதிரசம், முறுக்கு, சர்க்கரை, கரும்பு, விளாம்பழம், கொழுக்கட்டை, மிளகு அன்னம், சர்க்கரைப் பொங்கல், வடை முதலியனவாகும்.
17. இப்பூவுலகில் விநாயகரின் பரிபூரண அருளைப் பெற்று வாழ்ந்தவர் புருசுண்டி என்ற முனிவர். இவர் விநாயகரைப் போல் துதிக்கையுடன் கூடிய தோற்றத்தில் காணப்பட்டார்.
18. விநாயகர் உருவத்தில் எல்லா கடவுள்களும் உள்ளனர். நாபி - பிரம்ம உருவம், முகம் - விஷ்ணு, கண் - சிவரூபம், இடப்பாகம் - சக்தி, வலப்பாகம் - சூரிய ரூபம் என்று கருதப்படுகிறது.
19. விநாயகருக்கு தேங்காய் எண்ணை காப்புதான் மிகவும் பிரியமானது.
20. விநாயகர் ஏற்காத இலை துளசி இலை.
21. விநாயகரை வழிபடும் நாடுகள் சாவகம், பாலி, போர்னியா, திபெத், பர்மா, சியாம், சீனா, ஜப்பான், இந்தோனேசியா, கம்போடியா, மங்கோலியா, இந்தியா.
22. பிள்ளையார் அழித்த அசுரர்கள் 1) அபிஜயன். 2) ஜூலாமுகன். 3) துராசாரன். 4) சிந்து. 5) கிருத்திராசாரன் (6) குரோசுரன். 7) பாலாசுரன்.
23. விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றோர் அவ்வையார், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார்.
24. விநாயகரை வழிபட்டால் நல்லவாக்கு, நல்லமனம், லட்சுமி கடாட்சம் ஆகிய பலன்கள் கிடைக்கும்.
25. சக்தியையும், சிவனையும் வேண்டிக் கொண்டு இடப்படுகின்ற குறியானது பிள்ளையார் சுழி எனப்படும்.
26. வடக்கே விநாயகர் சதுர்த்தியை உருவாக்கியவர் பாலகங்காதர திலகர்.
27. விநாயக ருத்ராட்சத்தின் மற்றொரு பெயர் எண்முக ருத்ராட்சம் ஆகும்.
28. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை உருவாக்கியது நரசிம்மவர்ம பல்லவன்.
29. பிள்ளையார் அழித்த அரக்கிகள். 1) விரசை. 2) பிரமதை. 3) சிரம்பா.
30. பிள்ளையார் சுழியில் உள்ள ஐந்தெழுத்துத் தத்துவம் நமசிவாய என்பதாகும்.
- ஆஞ்சனேயர் சந்நிதிக்குப் பால், பன்னீர் வாங்கிக்கொடுக்கவும்.
- விநாயகரை வணங்கவும்.
ஆஞ்சனேயர் சந்நிதிக்குப் பால், பன்னீர் வாங்கிக்கொடுக்கவும்.
விநாயகரை வணங்கவும்.
விநாயகர் சந்நிதிக்கு வஸ்திரம் வாங்கித்தரவும்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை வணங்கவும்.
சிவன் சந்நிதியில் விளக்கேற்ற நல்லெண்ணெய் வாங்கிக்கொடுக்கவும்.
- கும்பம் ராசிக்காரர்கள் சனீஸ்வரர் சந்திதியில் விளக்கேற்றுவது நலம்.
- ஒருமுறை திருநள்ளாறு சென்றுவரவும்.
கும்பம் ராசிக்காரர்கள் சனீஸ்வரர் சந்திதியில் விளக்கேற்றுவது நலம்.
ஒருமுறை திருநள்ளாறு சென்றுவரவும்.
ஆஞ்சனேயருக்கு உங்கள் நட்சத்திர நாளில் பூஜை செய்யுங்கள்.
பஞ்சமுக ஆஞ்சனேயர் வழிபாடு சிறப்பு.
விநாயகர் அபிஷேகத்திற்கு தேவையானதைக் கொடுக்கவும்.
வில்வாஷ்டகம் கூறவும்.
ஒம் நமசிவாய என்று கூறவும்.
கால் ஊனமுற்றவருக்கு உதவவும்.
- மகரம் ராசியில் பிறந்தவர்கள் ஆஞ்சனேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.
- அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அபிஷேகத்திற்கும், விளக்குக்கும் நல்லெண்ணெய் வாங்கி கொடுக்கவும்.
மகரம் ராசியில் பிறந்தவர்கள் ஆஞ்சனேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.
அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அபிஷேகத்திற்கும், விளக்குக்கும் நல்லெண்ணெய் வாங்கி கொடுக்கவும்.
சென்னை பொழிச்சலூரில் உள்ள சிவனை வணங்கவும்.
சிவ அஷ்டோத்திரம் கூறவும். "நமசிவாய நம" என்று கூறவும்.
சனீஸ்வரர் கோவில் அர்ச்சகருக்கு அவர் சாப்பிட உணவுக்குரிய பணம் அல்லது அரிசி, பருப்பு வாங்கிக்கொடுங்கள்.






