என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- மரகத கல்லில் பச்சை பசேல் என மின்னிட மரகத விநாயகர் என்ற நாம கரணத்துடன் வேண்டுவதை அளிக்கும் அழகுக் கோலத்துடன் வீற்று இருக்கிறார்.
- இங்கு நவக்கிரகம் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பது சிறப்பாகும்.
சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கம்பீரமாக 'வருக...வருக...' எனக் கட்டியம் கூறி நம்மை வரவேற்கிறது.
ஐம்பொறிகளையும் ஐம்பூதங்களையும் அடக்கு, அடக்கு என ராஜகோபுரம் நம்மிடம் கூறுவது போல் உள்ளது.
உயரமான கொடிமரம், கொடி மரத்துக்கு முன்னால் அழகே திருஉருவம் கொண்டதுபோல மரகதப் பச்சை மயில் கொலுவாக வீற்று இருக்கிறது.
இதுபோல் சிறந்த வடிவமைப்புள்ள மரகத மயில் உலகில் வேறு எங்கும் இல்லை என உறுதியாக கூறலாம்.
கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகத கல்லில் சூரியனார் ஒளி வீசிக்கொண்டு இருக்குக, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்டு கம்பீரமான ராஜகணபதி மரகத கல்லில் பச்சை பசேல் என மின்னிட மரகத விநாயகர் என்ற நாம கரணத்துடன் வேண்டுவதை அளிக்கும் அழகுக் கோலத்துடன் வீற்று இருக்கிறார்.
பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், ஆதிமூலவர் (முன் இருந்த பாலசுப்பிரமணிய சுவாமியின் விக்ரகம்) நாகர், பைரவர், நவக்கிரகம் என பரிவார தேவதைகள் புடை சூழ சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.
இங்கு நவக்கிரகம் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பது சிறப்பாகும்.
சென்னைக்கு வட மேற்கே சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33&வது கிலோ மீட்டரில் இடது பக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் (நுழைவு வாயில்) நம்மை வரவேற்கிறது.
இந்தத் தோரண வாயிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் எனத் தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
நுழைவுவாயிலைக் கடந்து ஆலயம் நோக்கி செல்கையில், சாலையின் இரு பக்கமும் பசுமையான நிலங்கள், வீசியாடும் நெற்கதிர்கள், குலுங்கிக்குலை தள்ளி ஆடும் வாழைத் தோப்புகள், கிராமத்தின் நுழைவாயிலில் சப்த மாதர் கோவில் நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோவில், மேற்கே பெருமாள் கோவில், பெருமாள் கோவிலுக்குப் பின்னால் விஷ்ணு, துர்கை கோவில்கள், வடக்கே வாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் கம்பீரமாக நம் கண்ணுக்கு காட்சி தருகிறது.
இவ்வூரில் ராமர் கோவில், விநாயகர் கோவில், ஜைனர் 22&வது தீர்த்தங்கரர் பள்ளி என கோவில்கள் பல இருப்பதை, அருணகிரிநாதர், 'ஆடகம்பயில் கோபுரம் மாமதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான தென்சிறுவாபுரி' எனத் திருப்புகழில் பாடியுள்ளார்.
- நவகிரகங்கள் ஒன்றையன்று பார்த்த வண்ணம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
- கி.பி. 11&ம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கும், காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கும் நடுவில் இக்கோவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் இது சோமசகந்தரை பூர்த்திசெய்வது போல் அமைந்துள்ளது.
தீபாவளி நீங்கலாக ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. (தேன் அபிஷேகம் பிரியமானதாம்)
முருகன் இத்தலத்தில் தவம் இயற்றும் பிரம்மச்சாரியாக தோற்றமளிப்பதால், வள்ளி-தெய்வானை பிரகாரத்தில் தனித்திருக்கின்றனர்.
முருகன், கச்சியப்ப சிவாச்சாரியாரைக் கொண்டு, "திகடச் சக்கரம்" என அடியெடுத்துக் கொடுத்து கந்தபுராணம் எழுத பணித்த தலம்.
கச்சியப்பருக்கு பெருமைசேர்க்கும் பீடம் எதிரே முருகப்பெருமான் தெற்கு நோக்கி காட்சி தருகிறார்.
நவகிரகங்கள் ஒன்றையன்று பார்த்த வண்ணம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
கி.பி. 11&ம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது.
வள்ளலாருக்கும் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள குமரக்கோட்டம் கோவிலில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
அன்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும்.
பின்னர் காலை 8 மணிக்கு உற்சவ சுவாமிகளாக சுப்பிரமணியர் சமேத வள்ளி, தெய்வாணை கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
காஞ்சீபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பால் காவடி மற்றும் புஷ்ப காவடி எடுத்து வந்து சுவாமியை வலம் வந்து தரிசிப்பர்.
கந்தபுராணம் அரங்கேறிய இடம் இக்கோவில் வளாகத்தில் உள்ளதால் இக்கோவில் சிறப்பு வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது.
- நாக ஸ்கந்த வழிபாட்டிற்காக இந்த விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபட்டால் திருமணத் தடை, நாக தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
- பிரார்த்தனை நிறைவேறியதும் நாக ஸ்கந்தருக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
காஞ்சீபுரம் சுப்பிரமணியர் கோவில் (குமரகோட்டம்) புராணப் பெயர் செனாதீச்வரம் என்பதாகும். காஞ்சியிலுள்ள முருகன் கோவில்களில் இது தனித்துவம் கொண்டதாகும்.
கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமும் இதுதான். (கந்தபுராணம் அரங்கேறிய கல் மண்டபம் தற்போது கச்சியப்பர் நூலகமாக உள்ளது.)
மேலும், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் பாடல் கொண்ட இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் வைகாசி 11ம்நாள் பிரம்மோற்சவத்தில் வள்ளியுடன் சேர்ந்த சுப்பிரமணியருக்கும், ஐப்பசி கந்த சஷ்டியில் தேவசேனாவுடன் முருகனுக்கும் திருமணம் நடக்கிறது.
கந்தசஷ்டி திருவிழாவின் போது இந்தக் கோவிலை 108 முறை சுற்றி தங்கள் கோரிக்கைக்காக பக்தர்கள் வேண்டுவார்கள்.
வைகாசி விசாகப் பெரு விழாவும், திருக்கார்த்திகையும் இங்கு சிறப்பு. இது தவிர செவ்வாய், வெள்ளி, பரணி, கார்த்திகை, பூசம், சஷ்டி முதலியன இங்கு சிறப்பான நாட்களாகும்.
நாக ஸ்கந்த வழிபாட்டிற்காக இந்த விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபட்டால் திருமணத் தடை, நாக தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
பிரார்த்தனை நிறைவேறியதும் நாக ஸ்கந்தருக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
- நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெற வேண்டும்.
- அபிஷேகம் செய்த நெய்யை பாத்திரத்தில் ஊற்றி புரோகிதர் பக்தருக்கு கொடுப்பார்.
நோய் நீக்கும் வழிபாடு:
அய்யப்பன் கோவிலில் மாளிகைப் புறத்தம்மனின் தனி சன்னதி உள்ளது.
இங்கே தேங்காயை உடைக்கக்கூடாது. உருட்டி வழிபட வேண்டும்.
இங்கு மஞ்சள் பொடியை அம்பாளுக்கு படைத்து பொட்டாக இட்டுக்கொண்டால் நோய்கள் நீங்கும் என்பதும் வாய் சாமர்த்தியம் கிட்டும் என்பதும் நம்பிக்கையாகும்.
நெய் அபிஷேகம்:
சபரிமலைக்கு சென்றதும் கோவிலின் அருகில் இருக்கும் பஸ்ம குளத்தை ஒட்டிய குழாய்களில் நீராட வேண்டும்.
இருமுடி கட்டைப்பிரித்து நெய்த் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அபிஷேகம் செய்ய கிளம்ப வேண்டும்.
நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெற வேண்டும்.
அபிஷேகம் செய்த நெய்யை பாத்திரத்தில் ஊற்றி புரோகிதர் பக்தருக்கு கொடுப்பார்.
இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர்.
மகரபூஜை அன்று நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள்.
இந்த ஒரு நாள் மட்டும்தான் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கும்.
ஐயப்பன் கோவிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான். பக்தர்கள் கொண்டு சென்ற நெய்யை தீவட்டி எரிப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும் கொடுத்து விடுகிறார்கள்.
அப்பம், அரவணை ஆகியவை தயாரிக்கவும் நெய்யே பயன்படுத்தப்படுகிறது.
அப்படி இருந்தும் மீதி வரும் நெய்யை நூற்றுக்கணக்கான டின்களில் அடைத்து அதை விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள்.
- சபரிமலை அய்யப்பன் மனித வாழ்வைத் துறந்து சபரிமலையில் ஐக்கியமானார்.
- அவரைக்காண வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னர் அடிக்கடி செல்வார்.
சபரிமலை அய்யப்பன் மனித வாழ்வைத் துறந்து சபரிமலையில் ஐக்கியமானார்.
அவரைக்காண வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னர் அடிக்கடி செல்வார்.
செல்லும் பாதை படு மோசமாக இருக்கும். அவரது இருப்பிடத்தை அடைய பல நாட்களாகும்.
மகனைக் காண செல்லும் தந்தை பண்டங்களை கொண்டு செல்வார்.
நீண்ட நாட்கள் செல்ல வேண்டும் என்பதால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்ப்பண்டங்களை கொண்டு செல்வார்.
நெய்ப்பண்டம் அதிக நாள் கெட்டுப்போகாமல் இருக்கும்.
இந்த வழக்கத்தின் காரணமாகத்தான் பிற்காலத்தில் அய்யப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டு போகும் பழக்கம் ஏற்பட்டது.
- சபரிமலையில் ஓரிடத்திற்கு ஆரியங்காவு என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனின் காடு என்று பொருள்.
- சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன.
ஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்க படுகிறார்.
இன்றும் ஐயப்பனின் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எருமேலியிலுள்ள முன்னாளில் கொள்ளைக்காரனாக இருந்து அய்யப்பனின் அருளால் திருந்தி அவரது நண்பராக மாறிய வாவரின் தர்காவிற்கு சென்ற பின்னரே ஐயப்பனை தரிசிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஐயர் (குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோவில்களில் உள்ள கடவுள்தான் ஐயன் அய்யனார்.
சபரிமலையில் ஓரிடத்திற்கு ஆரியங்காவு என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனின் காடு என்று பொருள்.
சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன.
அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் ஐயனார் கோவில் உள்ளது.
ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடு வழக்கிலுள்ளது.
- அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகனியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன் என்பது ஒரு புராணம்.
- இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஹரி (விஷ்ணு) ஹரன் (சிவன்) என்ற பெயரும் உண்டு.
பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு- பகிர்ந்தளித்த லீலையின்போது சிவபெருமான் ஆழந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது.
பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணு வின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார்.
அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகனியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன் என்பது ஒரு புராணம்.
இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஹரி (விஷ்ணு) ஹரன் (சிவன்) என்ற பெயரும் உண்டு.
ஐயன் என்பது ஆர்ய என்பதின் திரிபு. ஆர்ய என்றால் மதிப்புக்குரிய என்று பொருள்.
- ஐயப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது.
- சபரிமலை ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலம்.
ஐயப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது.
சபரிமலை ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலம்.
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் அய்யனார் வழிபாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்ந்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்கும்மிடையில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு.
ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய பிராமண முறையை தழுவியது.
அய்யனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு சிறுதெய்வ வழிபாடு ஆகும்.
அய்யனார் என்பது ஐயப்பனின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமே.
ஐயப்பனின் வேறு பெயர்கள்
மணிகண்டன்
பூதநாதன்
பூலோகநாதன்
தர்மசாஸ்தா எருமேலிவாசன்
ஹரிஹரசுதன்
ஹரிஹரன்
கலியுகவரதன்
கருணாசாகர்
லட்சுமண பிராணதத்தா
பந்தளவாசன்
பம்பாவாசன்
ராஜசேகரன்
சபரி
சபரீஷ்
சபரீஷ்வரன்
சபரி கிரீஷ்
சாஸ்தா
வீரமணி
என்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.
- ஏற்றம் கடினம்& தூக்கி விடப்பா
- சாமி பாதம்& அய்யப்பபாதம்
சுவாமியே&அய்யப்போ
அய்யப்போ&சுவாமியே
பகவானே&பகவதியே
பகவதியே&பகவானே
தேவனே& தேவியே
தேவியே& தேவனே
வில்லாளி வீரனே&வீரமணிகண்டனே
வீரமணிகண்டனே& வில்லாளி வீரனே
பகவான் சரணம்& பகவதி சரணம்
பகவதிசரணம்&பகவான் சரணம்
தேவன் சரணம்& தேவி சரணம்
தேவிசரணம்& தேவன் சரணம்
பள்ளிக்கட்டு& சபரிமலைக்கு
சபரிமலைக்கு&பள்ளிக்கட்டு
பாத பலம் தா&தேக பலம் தா
தேக பலம் தா&பாத பலம் தா
கல்லும் முள்ளும்&காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை& கல்லும் முள்ளும்
தாங்கி விடப்பா&ஏத்தி விடப்பா
ஏத்தி விடப்பா& தாங்கி விடப்பா
தூக்கி விடப்பா& ஏற்றம் கடினம்
ஏற்றம் கடினம்& தூக்கி விடப்பா
சாமி பாதம்& அய்யப்பபாதம்
அய்யப்பபாதம்&சாமி பாதம்
யாரைக் காண&சாமியைக் காண
சாமியைக் கண்டால்&மோட்சம் கிட்டும்
கற்பூரஜோதி&சுவாமிக்கே
சுவாமிக்கே&கற்பூர ஜோதி
நெய் அபிஷேகம்&சுவாமிக்கே
சுவாமிக்கே&நெய் அபிஷேகம்.
சுவாமியே சரணம் ஐயப்பா!
- சிவன் 96 தத்துவங்களை கடந்தவர். முகருப்பெருமாள் 36 தத்துவங்களை கடந்தவர்.
- தர்மசாஸ்தா அய்யப்பனோ 18 தத்துவங்களை கடந்தவர். எனவே தான் சபரிமலை கோவிலில் 18 படிகள் அமைந்துள்ளன.
சிவன் 96 தத்துவங்களை கடந்தவர். முகருப்பெருமாள் 36 தத்துவங்களை கடந்தவர்.
தர்மசாஸ்தா அய்யப்பனோ 18 தத்துவங்களை கடந்தவர். எனவே தான் சபரிமலை கோவிலில் 18 படிகள் அமைந்துள்ளன.
முதல் 5 படிகள் இந்திரியங்கள் ஐந்தையும் குறிக்கும்.
அடுத்த 8 படிகள் அஷ்டமாசித்திகளை குறிக்கும், 14,15,16 வது படிகள் 3 குணங்களையும் குறிக்கும்.
17 வது படி ஞானத்தையும்,18 வது படி அஞ்ஞானத்தையும் குறிக்கிறது.
புலன் ஐந்து,பொறி ஐந்து, பிராணன் ஐந்து,மனம் ஒன்று,புத்தி ஒன்று, ஆலங்காரம் ஒன்று ஆக மொத்தம் பதினெட்டு.
இவைகளை கடந்து கடவுளை காண வேண்டும் என்ற கருத்தின் படியே 18 படிகளும் அமைந்துள்ளது.
- காட்டுப்பாதையில் சரண கோஷம் நமக்கு ஒரு பாதுகாப்பு.
- படிகள் எற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பது பலரும் அனுபவித்த உண்மை.
சபரிமலை என்றதும் "சாமியே சரணம் அய்யப்போ" என்ற சரண கோஷம் தான் காதுகளில் பாயும் மகத்துவம் மிக்க இந்த சரண கோஷத்தில் "ச" என்ற எழுத்து விரோதிகளை அழிக்கக்கூடியது"ர" என்ற உச்சரிப்பு ஞானம் தர வல்லது "ண" என்ற எழுத்து சாந்தம் அளிப்பது "சுவாமியே சரணம்" என்று அடி வயிற்றில் இருந்து நாம் எழுப்பும் ஒலியானது சக்தி, ஞானம், சாந்தம் ஆகிய மூன்றும் தருகிறது.
மேலும் சம் சரணாகதி கர்ம வினைகளையும் போக்கி விடும் உக்கிரமாக சரண கோஷம் எழுப்பும் போது காட்டில் உள்ள விலங்குகள் பயந்து ஓடும்.
காட்டுப்பாதையில் சரண கோஷம் நமக்கு ஒரு பாதுகாப்பு.
படி ஏற... படி ஏற... வாழ்வு உயருதய்யா!
அய்யப்ப பக்தர்கள் மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும், முறையாகவும் கடைபிடித்து "தான்" என்னும் அகங்காரத்தை விட்டொழித்து இறைவனிடம் முழுநம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து ஒரு முகமாக வழிபட்டால் இறைவனின் அருள் காடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும்.
படிகள் எற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பது பலரும் அனுபவித்த உண்மை.






