என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • “சரணம் அய்யப்பா” என்ற சரணாகதி மந்திரத்தை தூய மனதுடன் ஓதுகிறவன் முக்தி பெறுவான்.
    • பதினெட்டு படியேறி தரும சாஸ்தாவின் சந்நிதி எட்டியதும் கடவுள் தரிசனம் கிடைக்கிறது.

    தன்னை காணவரும் பக்தர்களுக்கு அய்யப்பன் சில அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

    தூய மனத்தில் ஞானம் ஒளிரும், ஞானம் வாழ்வின் லட்சியம் ஆகும்.

    நற்கருமத்துக்கு இடையூறாவது காமம், வெகுளி, பேராசை ஆகியன

    இவற்றில் இருந்து விடு பெற கடவுளை நினைத்து தியானம் செய்வது அவசியம்.

    தியானத்தில் மனம் நிலை பெறும் போது சாந்தியும், பேரின்பமும் உண்டாகும்.

    கடவுளிடம் சரணாகதி அடைவதே பக்தியின் இறுதிமொழி.

    "சரணம் அய்யப்பா" என்ற சரணாகதி மந்திரத்தை தூய மனதுடன் ஓதுகிறவன் முக்தி பெறுவான்.

    பதினெட்டு படியேறி தரும சாஸ்தாவின் சந்நிதி எட்டியதும் கடவுள் தரிசனம் கிடைக்கிறது.

    • சபரி என்பவள் ஒரு வேடர் குல தலைவனின் மகள்.
    • சபரி மதங்க முனிவர் ஆசிரமத்தில் பணிவிடை செய்து தவத்தில் ஈடு படுகிறாள்.

    சபரி என்பவள் ஒரு வேடர் குல தலைவனின் மகள்.

    இவளுக்கு வேடர் குலத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்த போது பிராணிகளை வேட்டையாடும் ஒருவரை மணம் முடிக்க மாட்டேன் என்று வெறுத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி தபசியாக மாறிவிடுகிறாள்.

    மதங்க முனிவர் ஆசிரமத்தில் பணிவிடை செய்து தவத்தில் ஈடு படுகிறாள்.

    அப்போது அந்த முனிவர் சபரியிடம் என்னிடம் பணி செய்து உன் காலத்தை கடத்தி விட்டாய்.

    ஆனால் நான் தியானித்து வரும் திருமால், ஸ்ரீராமன், சீதாதேவி ஆகியோர் சித்திர கூடத்தில் இருக்கிறார்கள்.

    அவர்கள் சிலகாலங்களுக்குள் இங்கு வருவார்கள். எனக்கு பதிலாக நீ அவர்களை உபசரிக்க வேண்டும் என்று கூறிய முனிவர் அக்கினியை வளர்த்து தன் பூத உடலை அழித்துக் கொள்கிறார்.

    முனிவர் சொன்னது போல சபரியும் அங்கு வரும் ராமர், சீதாதேவி ஆகியோரை உபசரிக்கிறார். அந்த சபரியின் பெயராலேயே இந்த சிறப்பு மிக்க தலம் சபரிமலை ஆயிற்று.

    • பக்தர்கள் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் சன்னிதானத்திற்கும் மாளிகைபுரத்திற்கும் ஒருவழிப்பாதை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • சபரிமலை வரும் பக்தர்களுக்கு மருத்துவ குணம் கொண்ட மூலிகை கலந்த தண்ணீர் ஆங்காங்கே வழங்கப்படுகிறது.

    சாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் பக்தர்கள் மத்தியில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது. கார்த்திகை மாதம் பிறந்து விட்டால் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள்.

    சபரிமலையில் ஜாதி பேதமின்றி பக்தர்கள் அய்யப்ப சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவதும் அய்யப்பனின் திருநாமத்தில் பக்தர்கள் அழைக்கப்படுவதும் இக்கோவிலுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு.

    மூர்த்தி சிறியது. கீர்த்தி பெரியது என்பது போல சிறு கோவிலாக காட்சி தரும் சபரிமலை அய்யப்பன் சன்னதி பக்தர்களின் மனக்கோவிலில் பெரும் இடத்தைப் பிடித்து விட்டது. 1978ம் ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைகளில் சுமார் 60 லட்சம் பக்தர்கள் மட்டுமே வருகை புரிந்து உள்ளனர்.

    ஆனால் தற்போது 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    பக்தர்கள் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் சன்னிதானத்திற்கும் மாளிகைபுரத்திற்கும் ஒருவழிப்பாதை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சபரிமலை வரும் பக்தர்களுக்கு மருத்துவ குணம் கொண்ட மூலிகை கலந்த தண்ணீர் ஆங்காங்கே வழங்கப்படுகிறது.

    இதற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை தண்ணீர் பந்தல்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டும், மேலும் மலை ஏறும் போது மூச்சு திணறலுக்கு ஆளாகும் பக்தர்களுக்கு ஆக்ஸிஜன் மூலம் மூச்சு திணறல் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.

    சபரிமலையில் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் துப்புரவு பணியில் தினமும் ஏராளமான ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.

    சீசன் காலங்களில் 300 ஊழியர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.

    சீசன் காலங்களில் சபரிமலை, எருமேலி, பம்பை ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சபரிமலையில் மதியம் அன்னதானம் (சாப்பாடு) வழங்கப்படுகிறது. இதில் 3 வகையான கூட்டு மற்றும் குழம்பு வழங்கப்படும்.

    எருமேலியில் பகல் கஞ்சி வழங்கப்படும். இதில் இஞ்சி, சுக்கு உள்பட மருந்துகள் சேர்த்து சமைக்கப்படுகிறது.

    பம்பையில் ரூ.12 கோடி செலவில் ஸ்ரீ அய்யப்பா மெடிக்கல் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆம்புலன்ஸ் வசதி ரூ.50 லட்சம் செலவில் செய்யப்பட்டுள்ளது.

    சபரிமலை வரும் பக்தர்கள் விரதம் இருந்து ஈருமுடிக்கட்டுக் கட்டி வரவேண்டும்.

    சபரிமலை 60 கி.மீ. சுற்றளவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. பத்தினம்திட்டையில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் பம்பை உள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் 4 கி.மீ. தூரத்தில் மலை மீது அமைந்துள்ளது.

    சபரிமலையின் உயரம் 4 ஆயிரம் அடியாகும். சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

    இங்கு அய்யப்ப சுவாமியின் நண்பராக விளங்கிய வாபருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இங்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த வாபரை இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் வணங்கிச் செல்கிறார்கள்.

    சபரிமலைக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடநாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அதுமட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் இருமுடிக்கட்டு கட்டி சபரிமலை வருகிறார்கள்.

    • சுவாமி அய்யப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது மட்டுமல்ல நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னத வரலாறு ஆகும்.
    • காலவ மகிஷியின் மகளான லீலாவதி,, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள்.

    அய்யப்பனின் தரிசனத்தைப்போல அவரின் அவதார வரலாறும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்.

    சுவாமி அய்யப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது மட்டுமல்ல நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னத வரலாறு ஆகும்.

    காலவ மகிஷியின் மகளான லீலாவதி,, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள்.

    தனது சகோதரன் மகிஷாசுரணை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள்.

    வரம் பெற்ற அவள் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினாள்.

    பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார்.

    இதன் விளைவாக அய்யப்பன் அவதாரம் நிகழ்ந்தது.

    அரிகர புத்திரனாக மணிகண்டன் அவதரித்தார். குழந்தையின் கழுத்தில் மணிமாலை இட்டுவிட்டு அவர்கள் இருவரும் மறைந்தனர்.

    காட்டுக்கு வேட்டையாட வந்த பந்தளநாட்டு மன்னன் ராஜசேகரன் குழந்தையை கண்டெடுத்து அதற்கு மணிகண்டன் என்று பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்தான்.

    இந்த நிலையில் ராணி, ராஜராஜன் என்ற மகனை பெற்றெடுத்தாள் மந்திரியின் துர்போதனையால் அவள் மதிமயங்கினாள்.

    சதி திட்டம் தீட்டப்பட்டது. ராணி தலைவலியால் துடித்தாள் ராணியைக் குணப்படுத்த வைத்தியர் புலிப்பால் வேண்டும் என்றார்.

    மன்னன் அதிர்ச்சி அடைந்தான். புலிப்பாலை கொண்டுவர 12 வயது ஆன மணிகண்டன் புறப்பட்டார்.

    பம்பை ஆற்றங்கரையில் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் இடையே கடும்யுத்தம் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள்.

    லீலாவதியாக அவள் சாப விமோசனம் பெற்றாள். அய்யனை தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு திருவடி பணிந்து நின்றாள்.

    அய்யன் தான் நித்ய பிரம்மச்சாரி என்றைக்கு தன்னைத்தேடி கன்னி அய்யப்பன்மார் வராமல் இருக்கிறார்களோ அன்று அவளை மணந்து கொள்வதாக கூறி தமது இடப்பக்கத்தில் மாளிகைப்புறத்து மஞ்சள்மாதாவாக வீற்றிருக்க அருள்பாலித்தார்.

    இந்திரன் புலிவடிவம் தாங்கிட அய்யப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார். அதை கண்டு மிரண்ட ராணி, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள்.

    அய்யப்பன் தமது அவதார நோக்கினை எடுத்துக்கூறி தர்மசாஸ்தாவான தனக்கு விடை கொடுக்குமாறு வேண்டினார்.

    இதைக்கேட்டதும் ராஜசேகர மன்னன் மனம் உடைந்தார். அவர் திருப்திக்காக அய்யப்பன் சபரிமலையில் தங்கி இருக்க சம்மதித்தார்.

    பம்பை நதிக்கரையில் மணிகண்டன் அம்பு எய்தார். அந்த இடத்தில் பந்தளமன்னன் கோவில் கட்டினான்.

    பரசுராமர் அங்கு அய்யப்பன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். சபரி என்ற யோகியின் நினைவாக அந்த இடம் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

    இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று அய்யப்பன் ஜோதிவடிவில் இன்றும் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.

    ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்

    வனமுத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம்

    சாந்தமுத்ராம் சத்தியமுத்ராம் வருதுமுத்ராம் நமாம் யஹம்

    சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே

    குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே

    சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா யஹம்

    சின் முத்ரா கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம் யஹம்

    சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம:

    மாலை கழற்றும் மந்திரம்

    அபூர்வ சாலரோஹ & திவ்ய தரிசன காரினே

    சாஸ்த்ரு ணித்ராத் மகாதேவ

    தேஹமே விரத விமோசனம்

    • மஞ்சமாதா சந்நிதியில் கன்னிசாமிகள் தேங்காய் உருட்டுவது ஒரு சடங்காகும்.
    • மஞ்சள் மாதாவுக்கு மஞ்சள் ஜாக்கெட் துணிகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.

    பதினெட்டாம் படியின் வடதிசையில் மஞ்சமாதா கோவில் உள்ளது. சாஸ்தா சந்நிதியில் இருந்து கீழே இறங்காமல் மேம்பாலம் வழியாகவே அம்பாள் கோவிலுக்குச் சென்று விடலாம்.

    திருநடை திறக்கப்படாத சமயங்களில் திரிசூலம் விளக்கு இவைகளை தரிசிக்கலாம்.

    மஞ்சள்பொடி நிறைந்த தட்டில் எரியும் ஊதுபத்தி, கற்பூரம் சகிதமாக பன்னீரை பக்தர்கள் மீது தெளித்தவாறே மஞ்சள் மாதா தரிசனம் பெறச்செய்வார்கள்.

    மஞ்சமாதா சந்நிதியில் கன்னிசாமிகள் தேங்காய் உருட்டுவது ஒரு சடங்காகும்.

    மஞ்சள் மாதாவுக்கு மஞ்சள் ஜாக்கெட் துணிகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.

    அம்மன் காலடியில் வைத்து வரப்படும் துணியைத் தைத்துப் போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும் என்பதும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் கண்கூடாகக் கண்ட உண்மை.

    அம்மன் கோவிலின் தென்மேற்குப் புறத்தில் மணி மண்டபம் உள்ளது. இங்கு தேவி எபாசனை, அர்ச்சனை, பாராயணம் ஆகியவை நடைபெறுகிறது.

    • இங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார்.
    • இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர்.

    தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல், அய்யப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன.

    அவற்றை "அய்யப்பனின் அறுபடை வீடுகள்" என்றே சொல்லலாம்.

    சபரிமலை

    இங்கு தர்மசாஸ்தாவான அய்யப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார்.

    எருமேலி

    இங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார்.

    ஆரியங்காவு

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கேரளா மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது.

    இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சி தருகிறார் அய்யப்பன்.

    அச்சன்கோவில்

    செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது.

    பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள்.

    இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் அய்யப்பன்.

    இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர்.

    இங்குள்ள அய்யப்பன் "கல்யாண சாஸ்தா" என்று அழைக்கிறார்கள்.

    இதனால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    பந்தளம்

    இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார்.

    அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி அய்யப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.

    குளத்துப்புழா

    செங்கோட்டையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது.

    இங்கு அய்யப்பன் குழந்தையாக இருப்பதால் "பால சாஸ்தா" என்று அழைக்கப்படுகிறார்.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.

    சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அய்யப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ளூர் கோவில்களுக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
    • மேலும் எளிய கருப்பு, நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ள பாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும்.

    மண்டல பூஜை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கன்றும் (ஜனவரி 14 "மகா சங்கராந்தி") மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.

    புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு முதலில் 41 நாட்கள் கொண்ட விரதத்தை (கடினமாக தவம்) பக்தர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இதற்காக பக்தர்கள் துவக்க நாளன்று ருத்ராக்ஷத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும்.

    அப்பொழுது முதலே விரதத்தை மேற்கொள்ளும் அடியார்கள் பொதுவாக மாமிச உணவு, மீன், மதுபானங்கள், பு¬யிலை, பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் வார்த்தைகளை தவிர்த்தல் மேலும் தலைமுடி மற்றும் முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தாமல் இருக்க வேண்டும்.

    இது போன்ற விதிமுறைகளை ஆசாரத்துடன் கடைப்பிடிக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ளூர் கோவில்களுக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    மேலும் எளிய கருப்பு, நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ள பாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும்.

    தற்பொழுது விரதங்களுக்கான விதிமுறைகளை கெடுபிடியுடன் முந்தைய நாட்களில் இருந்தது போன்று பின்பற்றாவிட்டாலும், இருந்தாலும் மக்கள் பொதுவாக ஒரு விதிமுறைக்கு உட்பட்டு நல்லெண்ணத்துடன் அனுஷ்டித்து வருகின்றனர்.

    நூற்றுக்காணக்கான பக்தர்கள் இன்றும், சுவாமி ஐயப்பன் அன்றைய தினங்களில் மேற்கொண்டது போலவே என்ற நம்பிக்கையுடன் எருமேலியில் இருந்து புறப்பட்டு, பரம்பரை பரம்பரையாக வரும் காட்டுப் மலைப் பாதைகளில், (சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் கொண் டது) காலணிகள் அணியாமல் நடந்து செல்வதையே இன்னும் விரும்புகின்றனர்.

    ஆனால் புதிய யாத்திரையை மேற்கொள்ளும் பல பக்தர்கள் வாகனங்களில் பயணம் செய்து மாற்று வழிகளில் புனிதமான பம்பா நதிக்கரையை அடைகின்றனர்.

    அதற்கு பிறகு, புனிதயாத்திரை மேற்கொள்ளும் அனைவரும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஏற்றதுடன் கூடிய (நீலிமலை) காட்டு மலைப் பாதையில் ஏறி சபரிமலையை அடைய வேண்டும்.

    ஒரு காலத்தில் கனத்த காட்டுப் பகுதியாக இருந்த ஒற்றை வழிப்பாதை, தற்பொழுது மேம்படுத்தப்பட்டு, இரு பக்கங்களிலும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய சாலையாக இன்று காணப்படுகின்றன.

    • ஆண்டு தோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
    • உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.

    சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் பத்தனம் தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.

    மஹிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி அய்யப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது.

    பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐய்யப்பன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது.

    மேலும் சராசரியான கடல் நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது.

    மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது.

    சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.

    நிலக்கல், காளகெட்டி மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச் சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம்.

    இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பிழைத்துக் கொண்ட பாகங்களை காணலாம்.

    ஆண்டு தோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.

    சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வோறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உட்கொண்டும், அதாவது இறைவனை சுவாமி ஐயப்பன் திருவடிகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இருந்தாலும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை.

    மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

    சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாறுக் கதைகளில் வீட்டு விலக்குரிய பெண்கள் இங்கு வருவதை தடை செய்துள்ள படியாலும் மேலும் இதர பல காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிவதில்லை.

    இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே.

    • இந்த உலகையும் மற்ற எல்லா கிரகங்களையும் தன் கிரணங்களால் அனுகுகின்றவன் சூரிய பகவான்.
    • அவருக்கு உஷா என்ற மனைவி உண்டு.

    கருப்பு நிறம் சனீஸ்வர பகவானுக்கு ஏற்றது.

    யார் ஒருவர் சபரி மலைக்கு கருப்பு நிற உடை உடுத்தி சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தாவினைக் காண்கிறார்களோ அவர்களுக்கு 7 நாட்டு சனி பகவானின் பாதிப்பு ஏதும் அறவே இருக்காது.

    ஏன் என்றால் சனீஸ்வர பகவான் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவர்.

    இது தொடர்பாக கூறப்படும் கதை வருமாறு:

    இந்த உலகையும் மற்ற எல்லா கிரகங்களையும் தன் கிரணங்களால் அனுகுகின்றவன் சூரிய பகவான்.

    அவருக்கு உஷா என்ற மனைவி உண்டு.

    உஷா தேவி விஸ்வகர்மாவின் மகள் ஆவாள். விஸ்வகர்மா தான் தேவலோகத்து தேவர்களின் ஆணைப்படி பல கட்டிடங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும் செய்பவர்.

    தேவலோக சிற்பி ஆவார். இன்றும் விஸ்வகர்மா வகுப்பினர் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதை காணலாம்.

    சூரியன் & உஷா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். 2 பேர் ஆண்கள். ஒரு மகள்.

    1. வைவஸ்வத மனு & மகன், 2. யமதர்ம ராஜன் & மகன், 3. யமுனா தேவி என்ற மகள். எனவே தான் யமுனா நதி கருப்பாக உள்ளது. (யமதர்ம ராஜனின் சகோதரி என்பதால்).

    சூரியனின் வெப்பத்தை அவரது மனைவியான உஷா தேவியால் கூட தாங்க இயலவில்லை. இங்கு உஷா தேவியினை மக்களாகவும் கருதி சிந்திக்க வேண்டும்.

    "வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்" எனவே உஷா தேவி தன் நிழலை உருவமாக்கி "சாயா தேவி" என்று மாறினாள்.

    "சாயா" என்றால் நிழல் என்றும் பொருள் வரும். சூரியனை விட்டுவிட்டு விஸ்வகர்மாவாகிய தன் தந்தையிடம் உஷா சென்றுவிட்டாள்.

    இந்த சூரியன் மனைவியாகிய சாயாதேவி தன் கணவரிடமும், உஷா தேவியின் குழந்தைகளிடமும் பிரியமாக நடந்து கொண்டாள்.

    நாளடைவில் இந்த சாயா தேவிக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன.

    1. சாவர்ணி மனு & மகன், 2. ச்ருத கர்மா & மகன் மற்றுத் பத்ரை என்ற மகளும் பிறந்தனர்.

    தனக்கு குழந்தைகள் பிறந்ததும் சாயாதேவி உஷா தேவியின் குழந்தைகளை வெறுக்க தொடங்கினாள். குழந்தைகளிடம் கடுமையாகவும் நடந்து கொண்டாள்.

    இதனால் எமதர்மன் மிகவும் துன்பத்திற்கு ஆளானான்.

    ஒரு சமயம் எமதர்மன் காலை தூக்குவதை கண்ட "சாயா தேவி" தன்னைத்தான் உதைக்க வருவதாக எண்ணி அவன் கால் எழுகக்கடவது என சாபமிட்டாள்.

    தாய் சாபமிடுவதை கண்ட எமன் சந்தேகமுற்றான். நல்ல தாய் தன் மகனை ஒருக்காலும் சபிக்கமாட்டாள்.

    தன் சந்தேகத்தினை சூரிய பகவானான தந்தையிடம் கூறினான். சினம் கொண்ட சூரியன் உண்மையினை கூறும்படி கட்டளையிட்டார்.

    சாயா தேவியும் தான் உஷா தேவி அல்ல என்ற உண்மையினை ஒத்துக்கொண்டாள்.

    சூரிய பகவானும் எமதர்ம ராஜனை பூலோகம் சென்று தாயின் நோய் தீர்க்கும் தயாவான தத்துவனாகிய ஸ்ரீ தர்ம சாஸ்தாவினை நோக்கி தவம் செய்து சாப விமோசனம் பெற வழிகாட்டினார்.

    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதனை உணர்ந்த எமன் பூலோகம் வந்து தவம் இருந்து வேண்டினார்.

    அவனது தவ வலிமையினைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றினார். சாப விமோசனம் தந்து எமலோகத்திற்கு அதிபதியாக்கினார்.

    இப்படிப்பட்ட உயர்ந்த நிலையினை ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அனுகிரகத் தினால் எமன் கிடைக்கப்பெற்றதனை அறிந்த ஸ்ரீ சாயா தேவியின் இளைய மகனாகிய "ச்ருத கர்மா" தானும் பூலோகம் வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தாவை காலையும் மாலையும் பூஜை செய்து வழிபட்டான்.

    பின்னர் கடும் தவம் மேற்கொண்டு சகல வரங்ளையும் அருளும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவினையே தியானம் செய்து வந்தான்.

    அவனது அன்பு கலந்த பக்தியினால் மகிழ்ந்த ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றி அவனுக்கு சூரிய மண்டலத் தில் கிரக நிலையினை அருளினார்.

    அவன் மெதுவாக நகர்வதால் (அவன் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும்) "சனீஸ்வரன்" என்ற பெயரும் சூட்டினார்.

    வாரத்தின் கடைசி நாளையும் அவன் பெயரில் அழைக்க அருள்பாலித்தருளினார்.

    மேலும் அந்த சனிக்கிழமையினையே தனக்கு உகந்த நாளாக ஏற்று அய்யப்பன் அருள் செய்தார்.

    இதற்கு பிரிதி உபகாரமாக சனிபகவானும் யார் ஒருவர் கருப்பு நிற உடை உடுத்தி சனிக்கிழமை தோரும் விரதம் இருந்து சபரிமலை வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா சொரூபமாகிய அய்யப்பனை அன்புடன் வேண்டுகிறார்களோ அவர்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்க மாட்டேன் என கூறினார்.

    எனவே தான் சபரிமலைக்கு கருப்பு நிற உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு 7 சனியின் தாக்கம் கடுமையாக இருப்பதில்லை.

    • "கருப்பும் உடுத்து பம்பையில் முங்கி சபரிக்கு போவோம் ஐயப்பன்மார்" என்கிற பாடலின் வாயிலாக ஐயன் ஐயப்பனுக்கு ஏற்ற, பிடித்தமான உடை கருப்பு என்பதை அறியலாம்.
    • பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கருப்பு வேஷ்டி துண்டு அணிந்து தான் மலைக்கு வருகின்றனர்.

    "கருப்பும் உடுத்து பம்பையில் முங்கி சபரிக்கு போவோம் ஐயப்பன்மார்" என்கிற பாடலின் வாயிலாக ஐயன் ஐயப்பனுக்கு ஏற்ற, பிடித்தமான உடை கருப்பு என்பதை அறியலாம்.

    பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கருப்பு வேஷ்டி துண்டு அணிந்து தான் மலைக்கு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வருவோர் கருப்பு நிற ஆடை மட்டும் அணிகின்றனர்.

    இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

    அய்யப்ப ஸ்வாமியின் பரிவார தேவதையான ஸ்ரீ கருப்பஸ்வாமி ஸ்ரீ கருப்பாயி தேவி கருமை நிற ஆடை அணிபவர்கள்.

    அவர்களின் வழி பின்பற்றி அய்யப்ப சாமிகளிடம் கருநிற ஆடை அணிகின்றனர்.

    அடுத்து சபரிமலையில் யானைகள் அதிகம் உள்ளன. காட்டு யானைகள் பெருவழியில் அதிகம் நடமாடும்.

    அவை வெள்ளை நிறம் கண்டால் சினம் கொண்டு பிளிரும்.

    கருப்பு நிறம் கண்டால் வெகுண்டு எழாது. மற்றும் வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கமாக உள்ளது.

    • ஆதிசக்தி மைந்தனேசரணம் ஐயப்பா
    • ஆறுமுகன் சோதரனேசரணம் ஐயப்பா

    ஓம் சுவாமியேஸசரணம் ஐயப்பா

    அரிஹரசுதனேசரணம் ஐயப்பா

    அன்னதானப் பிரபுவேசரணம் ஐயப்பா

    அமுதமலை ஏற்றமேசரணம் ஐயப்பா

    அமுதமலை இறக்கமேசரணம் ஐயப்பா

    அன்புள்ளம் கொண்டவனேசரணம் ஐயப்பா

    அமுதா நதியேசரணம் ஐயப்பா

    அலங்காரப் பிரியனேசரணம் ஐயப்பா

    அச்சன் கோவில் அரசேசரணம் ஐயப்பா

    அனாத ரட்சகனேசரணம் ஐயப்பா10

    ஆபத்தபாந்தவரேசரணம் ஐயப்பா

    ஆரியங்காவு ஐயாவேசரணம் ஐயப்பா

    ஆனந்த ரூபனேசரணம் ஐயப்பா

    ஆதிசக்தி மைந்தனேசரணம் ஐயப்பா

    ஆறுமுகன் சோதரனேசரணம் ஐயப்பா

    இச்சை தவிர்ப்பவனேசரணம் ஐயப்பா

    இருமுடிப்பிரியனேசரணம் ஐயப்பா

    இணையில்லா தெய்வமேசரணம் ஐயப்பா

    இன்சுவை பொருளேசரணம் ஐயப்பா20

    இடர்களை ஒழிப்பவனேசரணம் ஐயப்பா

    இருளகற்றிய ஜோதிசரணம் ஐயப்பா

    இன்பம் தருபவனேசரணம் ஐயப்பா

    இஷ்டம் வரம் தருபவரேசரணம் ஐயப்பா

    ஈடில்லா தெய்வமேசரணம் ஐயப்பா

    ஈசனின் மைந்தனேசரணம் ஐயப்பா

    ஈன்றெடுத்தே தாயேசரணம் ஐயப்பா

    ஈகை நிறைந்தவனேசரணம் ஐயப்பா

    உண்மைப் பரம்பொருளேசரணம் ஐயப்பா

    உலகாளும் காவலனேசரணம் ஐயப்பா30

    உத்தமனே சத்தியனேசரணம் ஐயப்பா

    உடும்பறைக் கோட்டையேசரணம் ஐயப்பா

    ஊமைக்கருள் புரிந்தவனேசரணம் ஐயப்பா

    ஊழ்வினை அழிப்பவனேசரணம் ஐயப்பா

    எங்கள் குல தெய்வமேசரணம் ஐயப்பா

    என் குருநாதரேசரணம் ஐயப்பா

    எங்கள் குறை தீர்ப்பவனேசரணம் ஐயப்பா

    எருமேலி வாசனேசரணம் ஐயப்பா

    எங்களை காத்தருள்வாய்சரணம் ஐயப்பா

    ஏழைப் பங்காளன்சரணம் ஐயப்பா40

    ஏற்றம் மிகுந்தவனேசரணம் ஐயப்பா

    ஏகாந்த மூர்த்தியேசரணம் ஐயப்பா

    ஏத்தமானூர் அப்பனேசரணம் ஐயப்பா

    ஒளிரும் திருவிளக்கேசரணம் ஐயப்பா

    ஓங்காரப் பரம்பொருளேசரணம் ஐயப்பா

    ஓதும்மறை பொருளேசரணம் ஐயப்பா

    ஔடதம் ஆனவனேசரணம் ஐயப்பா

    கன்னி மூலகணபதி பகவானேசரணம் ஐயப்பா

    கருத்த சுவாமியேசரணம் ஐயப்பா

    கரிமலை ஏற்றமேசரணம் ஐயப்பா50

    கரிமலை இறக்கமேசரணம் ஐயப்பா

    கண்கண்ட தெய்வமேசரணம் ஐயப்பா

    கலியுக வரதனேசரணம் ஐயப்பா

    கல்லிடும் குன்றேசரணம் ஐயப்பா

    கற்பூர ஜோதியேசரணம் ஐயப்பா

    கருப்பண்ண சுவாமியேசரணம் ஐயப்பா

    கருணையின் வடிவேசரணம் ஐயப்பா

    காந்தமலை ஜோதியேசரணம் ஐயப்பா

    காருண்ய மூர்த்தியேசரணம் ஐயப்பா

    காமாட்சியே தாயேசரணம் ஐயப்பா60

    காளைகட்டி நிலையமேசரணம் ஐயப்பா

    குலத்துபுழை பாலகனேசரணம் ஐயப்பா

    குறைகளை நீக்கிடுவாய்சரணம் ஐயப்பா

    குற்றங்களை பொறுத்தருள்வாய்சரணம் ஐயப்பா

    குழந்தை மனம் படைத்தவனேசரணம் ஐயப்பா

    குருவாயூர் அப்பனேசரணம் ஐயப்பா

    குன்றின் மீது அமர்ந்திருப்பவனேசரணம் ஐயப்பா

    கொண்டு போய் கொண்டு வரனும் பகவானேசரணம் ஐயப்பா

    சபரி பீடமேசரணம் ஐயப்பா70

    சரங்குத்தி ஆலேசரணம் ஐயப்பா

    சபரி கிரீஸனேசரணம் ஐயப்பா

    சங்கடங்களை தீர்த்துடுவாய்சரணம் ஐயப்பா

    சத்ரு சம்ஹரனேசரணம் ஐயப்பா

    சரண கோஷப் பிரியனேசரணம் ஐயப்பா

    சாஸ்தாவின் நந்தவனமேசரணம் ஐயப்பா

    சாந்த சொரூபனேசரணம் ஐயப்பா

    சாந்தி தரும் பேரழகேசரணம் ஐயப்பா

    சிறிய கடுத்தசாமியேசரணம் ஐயப்பா

    சிதம்பரனார் பாலகனேசரணம் ஐயப்பா80

    சுடரும் விளக்கேசரணம் ஐயப்பா

    தர்ம சாஸ்தாவேசரணம் ஐயப்பா

    திருமால் மருகனேசரணம் ஐயப்பா

    தித்திக்கும் தெள்ளமுதேசரணம் ஐயப்பா

    தேனாபிஷோக பிரியரேசரணம் ஐயப்பா

    நாகராஜக்களேசரணம் ஐயப்பா

    நித்திய பிரம்மச்சாரியேசரணம் ஐயப்பா

    நீலமலை ஏற்றமேசரணம் ஐயப்பா

    நீலமலை இறக்கமேசரணம் ஐயப்பா

    நீல லஸ்தர தாரியேசரணம் ஐயப்பா90

    நெய் அபிஷேக பிரியரேசரணம் ஐயப்பா

    பம்பா நதியேசரணம் ஐயப்பா

    பம்பையின் சிசுவேசரணம் ஐயப்பா

    பம்பை விளக்கேசரணம் ஐயப்பா

    பந்தள மாமணியேசரணம் ஐயப்பா

    மமதையெல்லாம் அழிப்பவனேசரணம் ஐயப்பா

    மகர ஜோதியேசரணம் ஐயப்பா

    வாவரின் தோழனேசரணம் ஐயப்பா

    வன்புலி வாகனனேசரணம் ஐயப்பா

    வில்லாளி வீரனேசரணம் ஐயப்பா

    வீரமணி கண்டனேசரணம் ஐயப்பா

    விபூதிப் பிரியனேசரணம் ஐயப்பா

    பொன்னம்பல வாசனேசரணம் ஐயப்பா

    பஞ்சமாதா திருவருளேசரணம் ஐயப்பா

    மாளிகை புரத்தம்மனேசரணம் ஐயப்பா

    தேவிலோக மஞ்சாதவேசரணம் ஐயப்பா

    ஐங்கரன் தம்பியேசரணம் ஐயப்பா

    ஐஸ்வர்யம் தருபவனேசரணம் ஐயப்பா108

    சுவாமியே சரணம் ஐயப்பா!

    ×