என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையின் போது மட்டும்தான் தீப ஜோதியின் தரிசனம் கிட்டுகின்றது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.
- ஆனால் சூட்சமமாக திருவண்ணாமலையின் உச்சியில் எப்போதும் தீப ஜோதி மிளிர்ந்து கொண்டிருக்கின்றது என்பது நூற்றுக்கு நூறு வேத சத்திய வாக்காகும்.
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையின் போது மட்டும்தான் தீப ஜோதியின் தரிசனம் கிட்டுகின்றது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால் சூட்சமமாக திருவண்ணாமலையின் உச்சியில் எப்போதும் தீப ஜோதி மிளிர்ந்து கொண்டிருக்கின்றது என்பது நூற்றுக்கு நூறு வேத சத்திய வாக்காகும்.
மலை உச்சியைப் பார்! என்று ரமணர் உட்பட, பல மகான்களும் சொல்கின்ற பொழுது, மலை உச்சியில் மலைமுகட்டில் சூட்சுமமாக ஒளிர்கின்ற ஜோதியைப் பார், என்பதே அதன் பொருளாகும்.
எனவே, திருவண்ணாமலையை நோக்கியவாறே கிரிவலம் வருகின்ற பொழுது சர்வேஸ்வரனுடைய நெற்றிக் கண்ணில் ஒளிர்கின்ற ஜோதி சக்தியின் அணுவுள் அணுவாய், அணுவின் பிரிவாய் ஒளிர்கின்ற அந்த ஜோதியை உள்ளூர ஆத்ம ஜோதியாகத் தரிசிக்கின்றோம் என்பது இதன் பொருளாகும்.
இதுவே ஸ்ரீஅகஸ்திய பெருமான் அளிக்கின்ற ஜோதி தரிசன கிரிவல முறைகளுள் ஒன்றாகும்.
ஆத்ம ஜோதி தரிசனத்திற்கு வழிவகுக்கின்ற உத்தமமான ஜோதி யோக முத்ரா கிரிவல முறை இது.
ஆனால், இதற்கு தினம்தோறும் இல்லத்தில் விளக்கு தீப ஜோதியைத் தியானித்து தரிசிக்கின்ற வழக்கத்தைக் கைக் கொண்டால்தான் சூட்சும ஜோதியை ஓரளவேனும் உணர முடியும்.
நாங்கள் திருவண்ணாமலையிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றோமே எங்களால் திருவண்ணாமலை கிரிவலம் வர முடியாதே என்று பலர் நினைக்கக்கூடும்.
உங்கள் ஊர் ஆலயத்தில் பெரும்பாலும் மூலவருக்குப் பின்னால் கோஷ்ட மூர்த்தியாக லிங்கோத்பவ மூர்த்தி எழுந்தருளி இருக்கின்றார் அல்லவா.
தினந்தோறும் ஸ்ரீலிங்கோத்பவ சன்னதியில் மூன்று அகல் விளக்கு ஜோதிகளை ஏற்றி அதனைத் தியானித்து தரிசித்து வாருங்கள்.
எங்கெல்லாம் ஸ்ரீலிங்கோத்பவ மூர்த்தி எழுந்தருளி இருக்கின்றாரோ அங்கெல்லாம் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப ஜோதியின் சக்தி விரவி உள்ளது என்பதை உணருங்கள்.
- உச்சியில் இடும் பொட்டு தேவியின் நெற்றிப் பொட்டு, அடுத்த மூன்றும் திருநயனங்கள்.
- அதற்கடுத்த இரு பொட்டுக்கள் கைகளாகவும், கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் பொட்டுக்கள் திருப்பாதங்கள் எனவும் கொள்ள வேண்டும்.
பித்தளை அல்லது வெள்ளி, வெண்கலத்தால் ஆன விளக்கே பூஜை செய்யச் சிறந்தது.
மரப்பலகை அல்லது தாம்பாளத்தின் மீது விளக்கை வைக்க வேண்டும். தலைவாழை இலை மீது குத்துவிளக்கை வைத்தும் பூஜிக்கலாம்.
திருவிளக்கை விபூதி, குங்குமம், சந்தனம் இவற்றால் பொட்டிட்டு அலங்கரிக்கவும், விளக்கின் உச்சிப் பகுதியில் ஒரு பொட்டு, அதற்குக் கீழே மூன்றும், அதனடியில் இரண்டும், கீழ்ப்பகுதியில் இரண்டு பொட்டு என மொத்தம் எட்டு பொட்டுக்கள் வைக்க வேண்டும்.
உச்சியில் இடும் பொட்டு தேவியின் நெற்றிப் பொட்டு, அடுத்த மூன்றும் திருநயனங்கள்.
அதற்கடுத்த இரு பொட்டுக்கள் கைகளாகவும், கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் பொட்டுக்கள் திருப்பாதங்கள் எனவும் கொள்ள வேண்டும்.
விளக்கில் நிறைய எண்ணெய் ஊற்ற வேண்டும். இடையிடையே எண்ணெய் ஊற்றக்கூடாது.
இரு திரிகள் இட்டு ஐந்து முகங்களிலும் ஏற்ற வேண்டும்.
பூச்சரத்தையோ அல்லது மாங்கல்யச் சரட்டையோ விளக்கின் தண்டுப் பகுதியில் சுற்றலாம்.
விளக்கு பூஜை செய்கின்ற விளக்கின் சுடரிலிருந்து ஊது வத்தி, கற்பூரம் இவற்றை ஏற்றக்கூடாது.
திருவிளக்கிலே தேவியே உறைகின்றாள். விளக்கை வழிபடுவதன் மூலம் தேவியை ஆராதனை செய்கின்றோம்.
அகிலத்தைக் காத்தருள் புரியும் அன்னையின் அருளைப் பெற திருவிளக்கு பூஜை எளிமையானது.
திருவிளக்கை அணைக்கும்பொழுது ஒரு துளிபாலை ஜோதியில் வைத்து அல்லது திரியை மெல்ல உட்புறம் இழுத்தோ அணைக்கலாம்.
குத்துவிளக்கு பூஜையை, சுமங்கலிப் பெண்களும் கன்னியரும் கூடி கோவில்களில் செய்தால் வீடும் நாடும் சுபிட்சமடையும்.
- எவ்வகையான திரியை பயன்படுத்தினால் எத்தகைய பலன் கிடைக்கும் என்பதை நமக்கு முன்னோர் வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.
- அதைப் பின்பற்றினால் நாம் விரும்பும் பலனை அடைவதும் எளிது.
குடும்ப நலனுக்காகவும் உறவினரின் நலனுக்காகவும் விளக்கேற்றி பூஜிக்கும் பொழுது அதற்குரிய எண்ணெயைத் தேர்ந்தெடுப்பதைப்போல விளக்கில் போடப்படும் திரியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எவ்வகையான திரியை பயன்படுத்தினால் எத்தகைய பலன் கிடைக்கும் என்பதை நமக்கு முன்னோர் வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.
அதைப் பின்பற்றினால் நாம் விரும்பும் பலனை அடைவதும் எளிது.
பொதுவாக பஞ்சுத் திரியே விளக்கேற்றத் தகுந்தது. பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றினால் நல்லவையெல்லாம் பெறலாம்.
வாழைத்தண்டிலிருந்து நார் எடுத்து திரித்து காயவைத்து விளக்கேற்றலாம். இத்தகைய திரியைப் பயன்படுத்தி தெய்வ குற்றத்திலிருந்து விடுபடலாம்.
இல்லத்தில் செல்வ வளம் பெருக வேண்டும் என்று விரும்பினால், வெள்ளெருக்கின் இலைப் பட்டையினால் திரி செய்து அதனால் விளக்கேற்றலாம். இதுபோல தாமரைத் தண்டிலிருந்து பிரித்தெடுத்த நூலால் திரிசெய்து போட்டு தீபமேற்றினால் செல்வம் நிலைப்பதுடன், செய்த பாவங்களும் அகலும்.
புதிதாக மஞ்சள் வண்ணத் துணி வாங்கி, அதில் திரி செய்து போட்டு தீபம் ஏற்றலாம். இதனால் அம்பாளின் பேரருள் கிடைக்கும்.
மேலும் நோய்களை அகற்ற வல்லது. சிவப்புத் துணியினால் திரி செய்து போட்டால், திருமண யோகம் கிட்டும். புத்திர பாக்கியமும் ஏற்படும்.
- தேங்காய் எண்ணையால் விளக்கேற்றி, கணபதியை வழிபட்டால், அவருடைய அருளைப் பெறலாம்.
- லட்சுமி கடாட்சம் பெற விரும்பும் பெண்கள், பசுநெய்யால் விளக்கேற்றி வழிபடவேண்டும்.
விளக்கு மங்கலத்தின் சின்னம். விளக்கை பூஜை செய்வது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது.
தீபத்தையே தெய்வமாக வழிபாடு செய்வதும் வழக்கில் உள்ளது.
விளக்கேற்றுவது என்பது காலையிலும் மாலையிலும் நடைபெற வேண்டும்.
மானுட வாழ்வில் ஐம்பொறிகளையும் தன் வசப்படுத்தி ஒளிபெறச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஐந்து முகங்கள் கொண்ட விளக்கினை வழிபடுகின்றார்கள்.
இந்த ஐந்து முகங்களும், அன்பு, நிதானம், சமயோசிதம், சகிப்புத்தன்மை, மனஉறுதி எனும் ஐந்து குணங்களையும் குறிக்கின்றன.
ஐந்து முகங்களிலும் திரியிட்டு தீபமேற்றி வழிபடும் பெண்கள் உன்னத பண்புகளைப் பெற்றிடுவார்கள்.
விளக்கை நன்கு தேய்த்து துடைந்து பின்பு ஏற்ற வேண்டும். விளக்கில் விடும் எண்ணெய், நெய், இவற்றுக்கும் உரிய பலன்கள் உள்ளன.
எதை விரும்புகிறோமோ அதற்குரிய எண்ணெயை, விளக்கில் பயன்படுத்தினால், விரும்பியதை அடையலாம்.
சகல விதமான செல்வங்களையும் சுகபோகங்களையும் விரும்புவோர் பசுநெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
குலதெய்வத்தை வழிபடும் போது வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், பசுநெய் மூன்றையும் சமவிகிதத்தில் கலந்து விளக்கில் ஊற்றி ஏற்றிட வேண்டும்.
கணவன்&மனைவியரிடையே அன்பு நீடித்திருக்கவும் உறவினர்கள் நன்மை அடையவும் விளக்கெண்ணெயால் விளக்கேற்ற வேண்டும்.
தேங்காய் எண்ணையால் விளக்கேற்றி, கணபதியை வழிபட்டால், அவருடைய அருளைப் பெறலாம்.
லட்சுமி கடாட்சம் பெற விரும்பும் பெண்கள், பசுநெய்யால் விளக்கேற்றி வழிபடவேண்டும்.
மகாவிஷ்ணுவுக்கு உகந்தது நல்லெண்ணெய் தீபமே. எந்த தெய்வத்தை வழிபடுவதாயிருந்தாலும் நல்லெண்ணெய் ஏற்றது.
- சுமங்கலிப் பெண்கள் தினமும் குளித்த பின்பு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட வேண்டும்.
- "நிம்பதீபம்" என்பது இலுப்பை எண்ணெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்கு ஆகும். பேய்கள் அகலுவதற்காக நிம்ப தீபம் ஏற்றுவதுண்டு.
சுமங்கலிப் பெண்கள் தினமும் குளித்த பின்பு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட வேண்டும்.
இந்த தீப வழிபாட்டை செய்ய, செய்ய வீட்டில் அஷ்டலட்சுமி வாசம் செய்வதோடு, மாங்கல்யம் பலம் பெற முடியும்.
இதனால் குடும்பத்தினர் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வசதியாக வாழ்வார்கள்.
நிம்ப தீபம்!
"நிம்பதீபம்" என்பது இலுப்பை எண்ணெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்கு ஆகும். பேய்கள் அகலுவதற்காக நிம்ப தீபம் ஏற்றுவதுண்டு.
மேலும் மாரியம்மன் திருவருள் பெற இந்த விளக்கை முறைப்படி ஏற்ற வேண்டும். நிம்ப தீபத்தை புதுஅகண்டம், அகல் இவைகளில் ஏற்ற வேண்டும்.
வீடுகளிலும் இத்தீபத்தை ஏற்றலாம்.
- வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் தீப விளக்கிற்கு மலர்மாலை சாற்றி பூஜிக்க, சகல நன்மைகள் பெறலாம்.
- ஏகமுக தீபத்தை, “பகவதி தீபம்” என்றும், “ஸ்ரீதுர்கா தீபம்” என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள்.
தீப அலங்காரம்!
வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் தீப விளக்கிற்கு மலர்மாலை சாற்றி பூஜிக்க, சகல நன்மைகள் பெறலாம்.
வீட்டில் விளக்கேற்றி வரும் இடம் ஒரே இடமாக இருப்பது நல்லது.
அடிக்கடி இடத்தை மாற்றக்கூடாது.
காலை, மாலை விளக்கேற்றும் போது கல்கண்டை நிவேதனமாகப் படைத்து குழந்தைகளுக்கு கொடுக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
ஏகமுக தீபம்!
ஏகமுக தீபத்தை, "பகவதி தீபம்" என்றும், "ஸ்ரீதுர்கா தீபம்" என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள்.
சர்வசக்திகளும் தன்னுள் இருக்க, தான் ஒருத்தியே ஏகமாக பிரகாசிப்பதை ஏகமுக தீபம் குறிக்கிறது.
எனவே தான் லலிதா சகஸ்ரநாம பூஜைக்கு ஐந்துமுக தீபமும், துர்கா பூஜைக்கு ஏகமுக தீபமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏகமுக தீபத்தில் "ஸ்ரீதுர்க்கா" தேவியை ஆவாகணம் செய்து சகஸ்ரநாமத்தால் அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது.
இந்த தீப வழிபாட்டால் சிறந்த பலன்களை பெறலாம்.
- ஆடி பவுர்ணமி- அமாவாசை: ஆயுள் விருத்தி உண்டாகும்
- ஆவணி பவுர்ணமி- அமாவாசை: புத்திரப்பேறு உண்டாகும்
ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசையன்றும், பவுர்ணமி அன்றும் திருவிளக்கு ஏற்றி அதை மகாலட்சுமியாக எண்ணி பூஜை செய்ய வேண்டும்.
அதனால் ஏற்படும் பலன்கள் விவரம் வருமாறு:-
சித்திரை பவுர்ணமி - அமாவாசை: தான்யம் உண்டாகும்.
வைகாசி பவுர்ணமி- அமாவாசை: செல்வம் உண்டாகும்.
ஆனி பவுர்ணமி- அமாவாசை: திருமணம் நடைபெறும்.
ஆடி பவுர்ணமி- அமாவாசை: ஆயுள் விருத்தி உண்டாகும்
ஆவணி பவுர்ணமி- அமாவாசை: புத்திரப்பேறு உண்டாகும்
புரட்டாசி பவுர்ணமி- அமாவாசை: பசுக்கள் விருத்தி உண்டாகும்
ஐப்பசி பவுர்ணமி- அமாவாசை: பசிப்பிணி அகலும்
கார்த்திகை பவுர்ணமி- அமாவாசை: நற்கதி உண்டாகும்
மார்கழி பவுர்ணமி- அமாவாசை: ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்.
தை பவுர்ணமி- அமாவாசை: வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்
மாசி பவுர்ணமி- அமாவாசை: துன்பம் அகலும்
பங்குனி பவுர்ணமி- அமாவாசை: தர்ம சிந்தனையை ஏற்படுத்தும்.
- வெள்ளிக்கிழமைகளில் அறுபது தீபங்கள் ஏற்றுதல் விசேஷம்.
- மூன்று உள் வட்டமாகக் சுற்றி தீபமேற்றுவது விசேஷம். இவ்வாறு வழிபடுவதால் இல்லத்தில் அனாவசிய செலவுகள் குறையும்.
வெள்ளிக்கிழமைகளில் அறுபது தீபங்கள் ஏற்றுதல் விசேஷம்.
மத்தால் கடைந்து எடுத்த வெண்ணையில் நெய்காய்ச்சி தீபமேற்றுதல் மிகவும் விஷேசம்.
மூன்று உள் வட்டமாகக் சுற்றி தீபமேற்றுவது விசேஷம். இவ்வாறு வழிபடுவதால் இல்லத்தில் அனாவசிய செலவுகள் குறையும்.
கணவனுடைய ஊதாரித்தனம் நிவர்த்தியாகும்.
சனி
சனிக்கிழமைகளில் நல்ல எண்ணெய் கொண்டு 80 விளக்குகள் அல்லது மொத்தத்தில் 80 தீப முகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றுவது விசேஷமாக கருதப்படுகிறது.
இந்த தீப பித்ரு சாபங்கள் நீங்கும்.
மேற்கண்ட வாரதீப பூஜையை திருவண்ணாமலை ஸ்ரீலஸ்ரீவெங்கடராசுவாமிகள் தெரிவித்துள்ளார்கள்.
- செவ்வாய்க்கிழமைகளில், அரிசி மாவுக் கோலம் போட்டு, அதில் தீபம் ஏற்றுதல் வேண்டும்.
- நல்ல எண்ணெய் தீபங்கள் ஏற்றுவது சிறந்தது. இதனால் குழந்தைகளின் மந்தபுத்தி அகலம்.
செவ்வாய்க்கிழமைகளில், அரிசி மாவுக் கோலம் போட்டு, அதில் தீபம் ஏற்றுதல் வேண்டும்.
அரிசி மாவில் இரட்டைக்கிளி உருவம் வரைந்து, அதன் மேல் ஐம்பத்து நான்கு தீபங்களை வரிசையாய் ஏற்றுவது விசேஷமாகும்.
இத்தீபங்களுக்கு பசுநெய் உபயோகிப்பது மிகவும் சிறப்புடையதாகும் இந்த தீப வழிபாட்டால் கணவன், மனைவியர் இடையே தாம்பத்திய உறவு மேம்படும்.
புதன்
புதன்கிழமை அன்று இருபத்து மூன்று தீபங்கள் ஏற்றி, அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேல் சுற்றியும் தீபங்களை ஏற்றலாம்.
நல்ல எண்ணெய் தீபங்கள் ஏற்றுவது சிறந்தது. இதனால் குழந்தைகளின் மந்தபுத்தி அகலம்.
வியாழன்
வியாழக்கிழமைகளில் தேங்காய் எண்ணெய் கொண்டு ஐம்பத்தி ஏழு தீபங்கள் ஏற்றி, அரிசிமாவினால் சுதர்சன சக்கர வடிவில் கோலமிட்டு அதைச் சுற்றி இத்தீபங்களை வைத்து வழிபடுதல் வேண்டும்.
இந்த தீப வழிபாடு காரணமாக பகைமை கொண்டுள்ள உறவினர்கள் இணக்கமாவார்கள்.
- ஞாயிற்றுக்கிழமை அய்யப்பனுக்கு நூறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். தீபங்களைத் தாமரைப் பூ வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது.
- அன்னப்பட்சிகள் போன்று அரிசி மாவு கோலம் வரைந்து அவற்றின் மேல் இத் தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும்.
ஞாயிற்றுக்கிழமை அய்யப்பனுக்கு நூறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். தீபங்களைத் தாமரைப் பூ வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது.
அதாவது தாமரைப்பூ போன்ற அமைப்பில் தீபங்களை வரிசையாக வைத்து ஏற்றுதல் வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படும் இத்தீப வழிபாடுகளுக்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது.
இதுபோன்று தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் வருமானங்கள் தடையை மீறி வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு.
திங்கள்
திங்கட்கிழமை அன்று இலுப்ப எண்ணெய் கொண்டு ஐம்பத்தாறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம்.
இந்த தீபங்களை அன்னபட்சி வடிவத்தில் வரிசையாய் ஏற்றி வழிபடுதல் வேண்டும்.
அன்னப்பட்சிகள் போன்று அரிசி மாவு கோலம் வரைந்து அவற்றின் மேல் இத் தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும்.
மிகவும் கஷ்டப்படுகின்றவர்களுக்கு மனச் சாந்தியைத் தரும் வழிபாடு இது.
- இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை.
- முருகன் சிலை கூட முன்பு மரகத பச்சை கல்லில் இருந்து காலப்போக்கில் பின் நிறுவப்பட்டபோது கருங்கல்லில் செய்யப்பட்டு இருக்கலாம்.
இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை.
முருகன் சிலை கூட முன்பு மரகத பச்சை கல்லில் இருந்து காலப்போக்கில் பின் நிறுவப்பட்டபோது கருங்கல்லில் செய்யப்பட்டு இருக்கலாம்.
இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரகத பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.
அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த ஸ்தலத்தை பாடியுள்ளார். திருப்புகழில் பாடப்படும் நாயகனாக முருகன் இல்லாமல் 6 பாடல்களில் பாடும் நாயகனாக விநாயகப் பெருமானை பாடியுள்ளார்.
மேற்கண்ட திருப்புகழ் ஆய்வின்படி 6 அர்ச்சனை திருப்புகழில் ஒன்றாக சிறுவைக்கு "சீதளவாரிஜ பாதா நமோ நம" என ஒரு பாடலுடன் நான்கு திருப்புகழ் பாடிய 8 ஸ்தலங்களில் ஒன்றாக சிறுவாபுரியும், அமைந்து இருப்பது சிறப்பு.
இந்த தலத்தில் முருகன் பிரம்ம சாந்த மூர்த்தி தோற்றத்தில் உள்ளார். பிரம்மனின் செருக்கை அடக்கி, படைத்தல் தொழிலை மேற்கொண்டு அடைந்த உருவமாகும்.
ஒரு முகமும், நான்கு கரங்களும் விளங்கும்படியாக மூலவர் உள்ளார். வலது கரத்தில் அபயம் அளித்து பின்பக்க வலது கரத்தில் ஜபமாலையும் முன்பக்க இடது கரம் இடுப்பிலும் பின்பக்க இடது கரத்தில் கமண்டலமும் ஏந்தி தம்மைத் தொழுவோர்க்கு அபயம் அளித்துக் காக்கும் பொருட்டு எழுந்தருளி உள்ளார்.
சூரனை அழித்து வெற்றி பெற்ற முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்யச் செல்லும் வழியில் சிறுவாபுரியில் சற்று இளைப்பாறி பிறகு இப்பசுமைச் சோலையில் பாலசுப்பிரமணியராய் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
சிறுவாபுரியில் தங்கி அமுது உண்ட இந்திரன் முதலான தேவர்களுக்கு வீடு பேறு கிடைக்க முருகன் அருளினான். இத்தலத்து சுப்பிரமணியரை வழிபட நல்ல குடும்பம், சிறந்த வீடு அமையும் என்பது ஐதீகம்.
- முக மண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை பாலசுப்பிரமணிய பெருமானை கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடி நிற்கும் கோல வடிவைக் காணலாம்.
- பின்புறத்தில் இருந்து நோக்கும் பொழுது வள்ளி கள்ளத்தனமாக அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார்.
சந்ததமும், அடியார் சிந்தையில் குடியிருக்கும் முருகப் பெருமான், நம் சிந்தையைக் கவர்கிறார். கலியுகத்தின் பேசும் கடவுளான பாலசுப்பிரமணியப் பெருமானின் அருட்பார்வை நம்மை நோக்கிப் பாய்ந்துவர, சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாள் நாம் வேண்டும் வரங்களை அள்ளி அளித்தர, உடலும் உள்ளமும் லேசாகி மிதந்து வர, நம்மை நாம் இழந்து அவன் திருவடிகளில் சரணாகிறோம்.
முக மண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை பாலசுப்பிரமணிய பெருமானை கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடி நிற்கும் கோல வடிவைக் காணலாம்.
முருகப் பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் மரகதப் பச்சையில் கரும்பச்சை வைரம்போல் பிரகார ஜோதியாகக் காட்சி அளிக்கிறார். இத்துணை பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை.
அருணகிரிநாதர் திருவண்ணாமலைக்கு 'மயிலுமாடி நீயுமாடி வரவேணும்' என்று பாடியதற்கு இணையாக, இங்கு மைந்துமயில் உடன் ஆடிவர வேணும்' என பாடி உள்ளதால் அண்ணாமலையாரும், உண்ணமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி இருக்கிறார்கள்.
அருணாசலேசுவரர், அபீத குஜாம்பகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய், அச்சம், மடம், நாணம் பயிர்புடன் கூடிய வள்ளி நங்கை தம் மணவாளப் பெருமான் முருகனை தைத் தலம் பற்றும் திருமண காட்சியாய் பெண்ணுக்கு ஏற்படும் கூச்சம், நாணம், பயிர்பு காரணமாக வள்ளி ஒய்யாரமாக லேசாக முன் சாய்ந்து, ஒரு கண் மூடிய நிலையில் நிற்கின்ற கோலத்தைக் காணக்கண் கோடி வேண்டும்.
பின்புறத்தில் இருந்து நோக்கும் பொழுது வள்ளி கள்ளத்தனமாக அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார்.
மிக நேர்த்தியான வேலைப்பாடு, இதுபோன்ற சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை. ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை, சிலை வடிவமாக இங்கு அமைத்து இருப்பது மிகச் சிறப்பாக வள்ளி மணவாளப் பெருமானின் அழகைக்காண கண்கோடி வேண்டும்.






