என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • அதுவே சரபரின் அஷ்டோத்ர சத நாமாவலியாகத் திகழ்கிறது.
    • நரசிம்மரை சாந்தப்படுத்திய சரபேஸ்வரரே சத்ருசைகர்.

    எட்டு கால்களும் இரண்டு முகங்களும் நான்கு கைகளும் கூர்மையான நகங்களும் நான்கு கைகளும் கூர்மையான நகங்களும் இருபுறத்திலும் இறக்கைகளும், சிம்மத்தின் வால்போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், காளியைப் போன்ற தெத்துப் பல்லும் கொண்டு தோன்றும் சரபேஸ்வரருக்கு இரு இறக்கைகளிலும் பத்ரகாளியும் துர்க்கையும் முறையே பிரத்தியங்கிரா, சூலினி என யந்திர வடிவில் சக்தியாக விளங்குகிறார்கள்.

    நீண்ட நாட்கள் நீடித்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய சரபர் தனது இறக்கைகளில் ஒன்றாக இருந்த காளியை உக்ர பிரத்தியங்கிரா தேவியாக அவதாரமெடுக்க செய்தார்.

    நரசிம்மத்தின் மூர்க்க குணமாக இருந்த கண்ட பெருண்டத்தை தன் வாயிலிட்டு விழுங்கினாள் பிரத்தியங்கிரா தேவி.

    அத்துடன் நரசிம்மர் சாந்தமானார். ஆனாலும், முழுவதும் நீங்கவில்லை.

    சரபத்தினை நரசிம்மம் தாக்கத் தொடங்கியது. சரபத்தின் தாக்குதல் நரசிம்மத்தினைச் சாந்தப்படுத்தவில்லை.

    முடிவில் நரசிம்மத்தின் பாதங்களை இருபுறமும் பிடித்து இரண்டாகக் கிழித்துவிட முயலுகையில் தன்னுணர்வு பெற்ற மகாவிஷ்ணு 18 சுலோகங்களால் சரபேசுவரரைத் துதிக்கிறார்.

    அதுவே சரபரின் அஷ்டோத்ர சத நாமாவலியாகத் திகழ்கிறது.

    நரசிம்மரைச் சாந்தப்படுத்திய சரபேஸ்வரரே சத்ருசைகர்.

    இவரைத் துதிப்போருக்கு எதிரான சக்தியெல்லாம் உடன் ஒழிவது மட்டுமின்றி சரணடைந்தோரின் பிறவிப் பிணியெல்லாம் கூட தீர்ந்துவிடும்.

    சரபேஸ்வரருடன் இருக்கும் பிரத்தியங்கிரா தேவியை வழிபடுவதால் பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளையும் தீர்த்து கொள்ள முடியும்.

    பிரத்தியங்கிரா தேவி பிரத்தியங்கிரஸ், பால பிரத்தியங்கிரா, பிராம்பி பிரத்தியங்கிரா, ருத்திர பிரத்தியங்கிரா, உக்கிர பிரத்தியங்கிரா, அதர்வண பிரத்தியங்கிரா,பிராம்மி பிரத்தியங்கிரா, சிம்ம முகக் காளி, ஸ்ரீ மகா பிரத்யங்கிரா என ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள். 

    • சரபபட்சி என்பது சிங்கங்களை கொன்று உண்ணும் பெரிய பறவையாகும். அவர் தான் ஸ்ரீ சரபேஸ்வரர்.
    • இவர் சிவபெருமானின் மறு அவதாரமாக கருதப்படுகிறார்.

    இரணியனைக் கொன்று அவனுடைய ரத்தத்தை உட்கொண்டதால் அவனுடைய ஆணவம் இவரிடம் வந்து சேர்ந்தது, அதுமட்டுமல்ல, இரணியனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷமும் நரசிம்மத்திற்கு வந்து சேர்ந்து விட்டபடியால் கோபம் தணிவதற்குப் பதில் மேலும் கோபம் மேலிட கர்ஜனை செய்து கொண்டே அண்ட சராசரங்களையும் நடுநடுங்க வைத்தார்.

    நரசிம்மத்தின் கோபத்தைத் தணிவிக்க பிரகலாதனும் தேவர்களும் என்னென்னவோ செய்து பார்த்தார்கள்.

    ஆனால், அவரின் கோபம் தணிந்த பாடில்லை.

    இறுதியாகத் தேவர்கள் எல்லோரும் சிவபெருமானைச் சரண் அடைந்தார்கள்.

    தேவர்களின் முறையீட்டைக் கேட்ட சிவபெருமான் தன் பூதகணங்களின் தலைவனாம் தன் வடிவேயான அகோர மூர்த்தியை அனுப்பி வைக்கிறார்.

    ஆனால், நரசிம்மத்தின் ஆவேச சக்தியை அவராலும் தணிக்க முடியாமல் போக வீரபத்திர வடிவத்திலிருந்து ருத்ர மூர்த்தியாம் சிவபெருமான் சரபபட்சியும், மனித உடலும், மிருகமும் கலந்து ஒரு மகா பயங்கர வடிவெடுக்கின்றார்.

    சரபபட்சி என்பது சிங்கங்களை கொன்று உண்ணும் பெரிய பறவையாகும். அவர் தான் ஸ்ரீ சரபேஸ்வரர்.

    இவர் சிவபெருமானின் மறு அவதாரமாக கருதப்படுகிறார்.

    • பார்த்தாயா உன் நாராயணனை! தூள் தூளாகி விட்டான் என்று கூறி ஆணவமாகச் சிரித்தான் இரணியன்.
    • மறுகணம் அந்தப் பிளந்து விழுந்த தூணில் இருந்து திருமால் நரசிங்க வடிவமாக இரணியனின் முன் தோன்றினார்.

    அப்படியானால் அவனை என் கதையாலே அடித்து அவன் கதையை முடிக்கிறேன் பார் என்றவாறே தன் வலிமையை எல்லாம் ஒன்று திரட்டி தூணை ஓங்கி அடித்தான்.

    தூண் இரண்டாகப் பிளந்து விழுந்தது.

    பார்த்தாயா உன் நாராயணனை! தூள் தூளாகி விட்டான் என்று கூறி ஆணவமாகச் சிரித்தான் இரணியன்.

    மறுகணம் அந்தப் பிளந்து விழுந்த தூணில் இருந்து திருமால் நரசிங்க வடிவமாக இரணியனின் முன் தோன்றினார்.

    என்ன, ஏது என்று நிதானிப்பதற்குள் இரணியன் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கியது.

    விலங்காகவும் இல்லாமல், மனிதனாகவும் இல்லாமல், தேவனாகவும் இல்லாமல் கூட்டுக் கலவையாகத் தோன்றிய அந்த நரசிங்கம்.

    இரவும் பகலுமற்ற மாலை வேளையில், பூமியில் கொல்லாமல் தன்னுடைய மடியில் இரணியகசிபுவைச் சாய்த்து அவன் உடலைத் தன் கை நகங்களால் பிளந்து ரத்தத்தைக் குடித்துக் கொன்றது.

    தேவர்களும் மக்களும் முனிவர்களும் பெரு மகிழ்ச்சி கொண்டார்கள்.

    ஆனால், அவர்கள் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.

    அதிபயங்கரமான நீண்ட கோரைப் பற்களுடன், தொங்குகின்ற நீண்ட நாக்குடன் கோபத்தினால் சிவந்த கண்களுடனும் கூர்மையான நீண்ட நகங்களுடன் தோன்றிய நரசிம்மம் இரணியனைக் கொன்று முடித்த பின்னும் கோபம் குறையாதவராகவே காணப்பட்டது.

    • இரணியனுக்குக் கோபம் உச்சமடைந்தது. என்னிலும் வலிமையான இறைவன் எங்கிருக்கிறான் என்றான்.
    • பிரகலாதனும் ““எங்கும் இருக்கிறார், தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றான்.

    குருகுலத்தில் இருந்து வந்த செய்து கேட்டு இரணியன் கொதித்துப் போனான். தன்னை மூவுலக வாசிகளும் தலைவனாக ஏற்றுக் கொண்ட நிலையில் தன் மைந்தனே தன்னுடைய கருத்துக்கு மாறுபடுவதா என்று பொங்கினான்.

    பிரகலாதனை நயமாக அழைத்து தானே இறைவன் என்பதை ஒப்புக் கொள்ளும்படிச் சொன்னான்.

    ஆனாலும் பிரகலாதன் சர்வ வல்லமை படைத்த கடவுள் எங்கே, இந்த நாட்டுக்கு மட்டுமே அதிபதி யான நீங்கள் எங்கே, என்று மறுமொழி கூறினான்.

    இரணியனுக்குக் கோபம் உச்சமடைந்தது. என்னிலும் வலிமையான இறைவன் எங்கிருக்கிறான் என்றான்.

    பிரகலாதனும் ""எங்கும் இருக்கிறார், தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார். அவர் இல்லாத பொருளே இல்லை"" என்றான்.

    "அப்படியானால் நீ சர்வ வல்லமை பொருந்தி யவராக நினைக்கும் உன் நாராயணன் இந்தத் தூணில் இருக்கிறானா?"" என்று இரணியன் கோபமாகக் கேட்டான்.

    நிச்சயமாக என்றான் பிரகலாதன்.

    • கல்வி துவங்குவதற்கு முன் கடவுள் வணக்கம் சொல்ல சொன்னார்கள்.
    • அந்த நாட்டில் இரண்யன் அல்லவா கடவுள். ஆகவே, “ஓம் இரண்யாய நம” என்று கூறச் சொன்னார்கள்.

    இரணிய கசிபுவுக்கு பிரகலாதன் என்ற ஒரு மகன் பிறந்தான்.

    குழந்தைப் பருவம் முதலே அவன் திருமாலின் தீவிர பக்தனாக விளங்கினான்.

    உரிய வயதில் கல்வி கற்க குருகுலம் அனுப்பினார்கள்.

    கல்வி துவங்குவதற்கு முன் கடவுள் வணக்கம் சொல்ல சொன்னார்கள்.

    அந்த நாட்டில் இரண்யன் அல்லவா கடவுள். ஆகவே, "ஓம் இரண்யாய நம" என்று கூறச் சொன்னார்கள்.

    ஆனால், குரு தவறாகக் கூறுகின்றார் என்று சொல்லி உண்மையான கடவுளான நாராயணனின் பெயரை "ஓம் நமோ நாராயணாய நம" என்று சொன்னான் பிரகலாதன்.

    குழந்தைக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை என்று மறுபடியும் "ஓம் இரண்யாய நம" என்று சொன்னார் குரு. மறுபடியும் பிரகலாதன் "ஓம் நமோ நாராயணாய நம" என்று சொன்னான்.

    மறுபடியும் திருத்திச் சொன்னார். ஆனாலும், பிரகலாதன் முன்பு சொன்ன மாதிரியே "ஓம் நமோ நாராயணாய நம" என்று உறுதிபடக் கூறினான்.

    பிரகலாதன் சொல்வது உண்மையான கருத்தாக இருந்தாலும் நமக்கேன் அரசாங்கத்து வீண் பொல்லாப்பு என்று எண்ணி அரண்மனைக்குச் செய்தி சொல்லி பிரகலாதனைத் திருப்பி அனுப்பினார்.

    • இந்த ஆணவத்தால் தானே இறைவனாகக் கருதித் தன்னை வணங்க ஆணையிட்டான்.
    • இறுதியில் தங்கள் துயரத்திற்கு முடிவு கட்டுபவர் திருமாலே என்று முடிவு செய்து அவரிடம் தங்கள் குறையினைத் தெரிவித்தனர்.

    இறவா வரம் பெற்றமையால் தன்னை இறைவனாகவே கருதி அனைவரையும் அடக்கியாள முற்பட்டான். மானுடர்கள், தேவர்கள், முனிவர்கள் என்று அனைவரும் அவன் அதிகாரத்திற்கு அஞ்சினர்.

    இந்த ஆணவத்தால் தானே இறைவனாகக் கருதித் தன்னை வணங்க ஆணையிட்டான்.

    இறைவன் பெயரைக்கூட உச்சரிக்கக்கூடாது என்றும், அதற்குப் பதில் தன்னுடைய பெயரான "இரண்யாய நம" என்பதையே சொல்ல வேண்டும் என்றும் கட்டளையிட்டான்.

    இறைவனிடம் வரம் வாங்கி மேனிலை அடைந்தவன் அந்த இறைவனின் பெயரைக்கூட சொல்லக்கூடாது என்று ஆணையிடுகிறானே என்று வருந்தினர்.

    இறுதியில் தங்கள் துயரத்திற்கு முடிவு கட்டுபவர் திருமாலே என்று முடிவு செய்து அவரிடம் தங்கள் குறையினைத் தெரிவித்தனர்.

    திருமாலும், அவர்களை நோக்கி வருத்தம் வேண்டாம். இரண்யனுக்குப் பிறக்கும் அவன் மகன் என் தீவிர பக்தனாவான்.

    அவன் மூலமே அவனுக்கு மரணம் சம்பவிக்கும். தகுந்த நேரத்தில் நான் அவனை சம்ஹாரம் செய்வேன் என்றார்.

    அவர்களும் ஆறுதலடைந்து திரும்பிச் சென்றார்கள்.

    • “இரணிய கசிபு” அரக்கர் குலத் தலைவன். இவன் தேவர்களை வெல்வதற்கு வரம் வேண்டி, கடுமையான தவம் செய்தான்.
    • அதற்கு இரணிய கசிபு தனக்கு மரணமே வரக்கூடாது என்ற வரத்தைக் கோரினார்.

    "இரணிய கசிபு" அரக்கர் குலத் தலைவன். இவன் தேவர்களை வெல்வதற்கு வரம் வேண்டி, கடுமையான தவம் செய்தான்.

    அவனுடைய கடும் தவத்தினை மெச்சி சிவபெருமான் அவன்முன் தோன்றினார். ""என்ன வரம் வேண்டும்?"" என்று கேட்டார்.

    அதற்கு இரணிய கசிபு தனக்கு மரணமே வரக்கூடாது என்ற வரத்தைக் கோரினார்.

    ஆனால், சிவபெருமான் அந்த வரத்தைத் தராது உன் விருப்பப்படியே இறக்கும் வரத்தைத் தருகிறேன்.

    நீ எப்படி இறக்க விரும்புகிறாய் என்று கேட்டார்.

    இரணிய கசிபும், "ஐம்பூதங்கள், ஆயுதக் கருவிகள், வானவர், மனிதர், பறவை, விலங்கு யாராலும் எனக்கு மரணம் நேரக்கூடாது. இரவு நேரத்திலும் மரணம் வரக்கூடாது.

    பகலிலும் மரணம் வரக்கூடாது" என்ற வரத்தினைக் கேட்டான்.

    சிவபெருமானும் அவன் கோரியபடியே வரத்தினை அளித்தார்.

    • ஆயிரம் கரங்களிலும் ஆயிரம் ஆயுதங்கள். இவள் மூல மந்திரம் 20 அட்சரங்கள் கொண்டது.
    • நரசிம்மரை அடக்க எழுந்த சரப மூர்த்திக்கு உதவ முன் வந்தவள் பத்ரகாளி என்னும் பிரத்தியங்கிரா தேவி.

    நரசிம்மரை அடக்க எழுந்த சரப மூர்த்திக்கு உதவ முன் வந்தவள் பத்ரகாளி என்னும் பிரத்தியங்கிரா தேவி.

    இவள் பயங்கரத் தோற்றம் கொண்டவள். இவளை சரபத் தீ என்றும் கூறுவார்கள்.

    இவளுடைய பெருமையை விளக்கும் ருக் மந்திரங்கள் ஒன்பது வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

    அதாவது 48 ருக் மந்திரங்கள் இவர் புகழை வெளிப்படுத்துவதால் இவள் அதர்வண பத்ரகாளி என்றும் அழைக்கப்படுவாள்.

    பொதுவாக இந்த மந்திரங்கள் எதிரிகளை வீழ்த்தவே பயன்படுபவையாக உள்ளன.

    நம்மீது பிறரால் ஏவி விடப்படும் தீய சக்திகள் இவள் பேரருளால் ஏவியவர்களைச் சென்று அழிக்கும் என்று ருக் மந்திரம் கூறுகின்றது.

    சிம்ம ரூபம் கொண்டவள். சிம்ம முகம் உடையவள். இறைவன் ஸ்ரீ பைரவரின் துணைவி.

    சூலம், பெரிய கபாலம், பாசம், டமருகம் இவை கொண்ட கரகமலங்கள்.

    கோடிக்கணக்கில் தெற்றுப் பற்கள் நிறைந்த பொந்து போன்ற முகம்.

    சிவப்பேறிய முக்கண்கள். பிறைச்சந்திரன் ஒளி வீசும் தலை. இப்படிப்பட்ட பிரத்தியங்கிரா எட்டு சர்ப்பங்களை அணிந்திருப்பாள்.

    ஆயிரம் கரங்களிலும் ஆயிரம் ஆயுதங்கள். இவள் மூல மந்திரம் 20 அட்சரங்கள் கொண்டது.

    இத்தகைய சிறப்புடைய பிரத்தியங்கிரா தேவியின் அவதாரத்தை அடுத்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    • இங்கு வன்னிமரம் தலவிருட்சமாக இருந்து வருகிறது.
    • வன்னி மரத்தை வணங்குவதன் மூலம் தீவினைகள் அகலும்.

    கோவிலின் தலவிருட் சமாக வன்னிமரம் திகழ்கிறது.

    சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றளவும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது.

    இந்த மரம் எந்த வித இடையூறும் இல்லாமல் மேலோங்கி வளர்ந்து செல்லும் வகையில் இடவசதி செய்யப்பட்டுள்ளது.

    வன்னி இலைகள் விநாயகருக்கும், முருகனுக்கும், சிவபூஜைக்கும், சனீஸ்வரருக்கும் உகந்த பச்சிலைகள் ஆகும்.

    வன்னி மருத்துவ பயன்மிக்க ஒரு சிறந்த மூலிகையும் ஆகும்.

    பொதுவாக சிவன் கோவில்களில் வில்வமரம் இருப்பதைத்தான் பார்க்க முடியும்.

    இங்கு வன்னிமரம் தலவிருட்சமாக இருந்து வருகிறது.

    வன்னி மரத்தை வணங்குவதன் மூலம் தீவினைகள் அகலும்.

    நினைத்தாலும், கைகூப்பி தொழுதாலும், வலம் வந்தாலும் நம் பாவங்கள் விலகும் என விநாயகர் புராணம் சொல்கிறது.

    வன்னி மரத்தின் அடியில் ஒரு முனிவர் தவம் இருந்து வந்தார் என்றும், அந்த மரத்தில் முனீஸ்வரர் குடி கொண்டுள்ளார் எனவும் பெரியவர்கள் கூறுகின்றனர்.

    வன்னி மரத்தை வாரம்தோறும் சுற்றி வந்தால் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

    எல்லா பிணிகளையும் போக்கவல்ல மூலிகையாக திகழும் வன்னியை வணங்கி வந்தால் வாழ்க்கையில் எல்லா துயரங்களும் விலகி நன்மை கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

    • வரதராச பெருமாள் சன்னதி சிறந்த கோபுர அமைப்புடன் சுற்றுப்பகுதியோடு விளங்குகிறது.
    • கோவில் கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

    கோவிலின் வடமேற்கு மூலையாகிய வாயு மூலையில் கோவில் கொண்டுள்ள வரதராச பெருமாள் சன்னதி சிறந்த கோபுர அமைப்புடன் சுற்றுப்பகுதியோடு விளங்குகிறது.

    பண்டைய நடு நாட்டுத்தலமாக விளங்கிய காலத்தில் "அச்சுதக் களப்பாளர்" என்னும் சிற்றரசன் ஆட்சியில் தொண்டை மண்டலத்திற்கு உட்பட்ட கெடில நதிக்கரையில் கோவில் கொண்டுள்ள திருவகீந்திரபுரம் தேவநாத சாமி கோவிலின் கட்டளைக்கு உட்பட்ட அபிமான கோவிலாக இந்த கோவில் இருந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது.

    ஞானாம்பிகை உடனுறை காளத்தீசுவரர் கோவில், "அரியும் அரனும் ஒருவரே" என்னும் உண்மையையும், "சைவமும் வைணவமும் சமயங்களால் பிரிந்தனவேயொழிய வழிபாட்டால் வேறானவையல்ல" என்ற உண்மையையும், "இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றான்; எல்லா இடங்களிலும் அவன் ஒன்றாகவே காட்சியளிக்கின்றான்" என்ற உண்மையையும் உலகோருக்கு உணர்த்துகின்றது.

    சிந்தித்தவருக்கு சிவனே சிவலிங்கம்.

    சீதேவி, பூதேவி உடனுறை வரதராஜ பெருமாள் கோவில் சிறந்த வேலைப் பாடுகளுடன், புதுவண்ணம் தீட்டப்பட்டு பொலிவுடன் காட்சியளிக்கிறது.

    கோவில் கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

    • ஆறு முகங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த சன்னதியின் கோபுரத்தில் 6 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • சஷ்டி விழா இக்கோவிலில் சிறப்பாக நடைபெறும்.

    கோவிலில் விநாயகர் சன்னதியை சுற்றிக் கொண்டு வந்தால், சிவன் சன்னதிக்கு பின்னால் மேற்கில், வள்ளி தெய்வானை உடனுறை சண்முக சுப்பிரமணியர் சன்னதி உள்ளது.

    சன்னதியின் முன் நின்று துதிக்கும் போது, முருகப் பெருமானின் அழகும், அருளும், கருணையும், நம்மை மெய்மறக்க செய்கின்றன.

    "வேலிருக்க வினையில்லை; மயிலிருக்க பயமில்லை" என்ற மெய்மொழிக்கேற்ப பக்தர்களுக்கு நம்மால் துணையாக இருந்து, அவர்களுக்கு ஏற்படும் தீமைகளை களைய கையில் வேல் கொண்டு விளங்குகிறார் என்பது சிவசுப்பிரமணியரை எதிரில் நின்று வணங்கும் போது தான் நம்மால் நன்கு உணர இயலும்.

    தமிழ் தென்றல் திரு.வி.க.வின் உரைப்படி நிலவுலகத்தின் முதற் கடவுளும், குறிஞ்சி நில தலைவனும், தமிழ் மக்களை காக்க வந்த முதல் துணையும் முருகன் ஆவான்.

    முருகு என்றால் அழகு. இளமை, இனிமை என்றும் பொருள்படும். சிவசுப்பிரமணியர் சன்னதிக்கு எதிரில், முருகன் ஏறும் ஊர்தியாகிய மயிலும், அதன்பின் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆறு முகங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த சன்னதியின் கோபுரத்தில் 6 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    சஷ்டி விழா இக்கோவிலில் சிறப்பாக நடைபெறும். இதையொட்டி சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறுவது விஷேசம்.

    • பித்தளைத் தகடுகள் வேய்ந்து வாயில் படிகள், பீடம் யாவும் விளங்குகின்றன.
    • கூத்தப்பெருமான் திருமேனியின் பின்புறம் "அண்டச்சக்கரம்" சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது.

    24 கால் மண்டபத்தின் தென்பகுதி சைவ நெறி விளங்குவதாகவும் வடபகுதி வைணவ நெறி சிறப்பதாகவும் நேர்த்தியான கலைநயம் மிக்க சிற்பங்களுடன் அமைக்கப் பட்டுள்ளது.

    வரதராசு பெருமாள் தென்கலை சார்ந்த கோவிலாக அமைந்திருப்பினும், மூலவருக்குரிய திருவாட்சி சங்கு, சக்கரங்களுடன் கூடிய வடகலை - செய்து வைக்கப்பட்டுள்ளது ஒரு புதுமையே.

    வடகலை, தென்கலை வேறுபாடு அறியாத இறைவன் வேறுபட்டுள்ள மக்களுக்கு உணர்த்துவதாக இது அமைந்துள்ளது.

    காசி விசுவநாதர் சன்னதியின் கிழக்கு வாயிலின் முன்புறம் பால விநாயகரும், கையில் வச்சிராயுதம் தாங்கிய பால கந்தப்பெருமானும் அமைந்துள்ளனர்.

    எங்கும் நிறைந்த இறைவன் எந்நேரமும் தாண்டவமாடும் சபா மண்டபமானது, பஞ்சபூதங்களைப் படிகளாக்கி, ஐம்புலன்களைக் காலடியில் போட்டு, ஆறு ஆதார சக்திகளுக்கு மேற்பட்ட நிலையில் விளங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது.

    சுற்றிலும் கிரானைட் கற்களால் பதிக்கப்பட்டு சுவர்கள் புதிய பொலிவோடு காட்சி அளிக்கின்றன.

    பித்தளைத் தகடுகள் வேய்ந்து வாயில் படிகள், பீடம் யாவும் விளங்குகின்றன.

    கூத்தப்பெருமான் திருமேனியின் பின்புறம் "அண்டச்சக்கரம்" சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது.

    பழனியாண்டவர் (பாலதண்டாயுதபாணி) கிழக்கு நோக்கியவாறு இங்கு நின்றிருக்கின்றார்.

    பஞ்சமூர்த்திகளுக்குரிய மூன்று அலங்கார மண்டபங்கள் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளன.

    காளத்தீசுவரர் கோவிலில் மிக அதிக அளவில் 8 விநாயகர் சிலைகளும், 4 பெரிய காண்டாமணிகளும், 2 சந்தனம் அரைக்கும் பீடங்களுடன் கூடிய கற்களும் காணப்படுகின்றன.

    ×