என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போலியோ விழிப்புணர்வு முகாம்
    X

    இந்திராணி செவிலியர் கல்லூரியில் போலியோ விழிப்புணர்வு முகாம் நடந்த காட்சி.

    போலியோ விழிப்புணர்வு முகாம்

    • இந்திராணி செவிலியர் கல்லூரியில் போலியோ விழிப்புணர்வு முகாம்
    • போலியோ விழிப்புணர்வு முகாம் ரோட்டராக் சங்கத்துடன் இணைந்து நடைபெற்றது.

    புதுச்சேரி:

    அரியூர் வெங்கடேஷ்வரா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கிவரும் இந்திராணி செவிலியர் கல்லூரியில் போலியோ விழிப்புணர்வு முகாம் ரோட்டராக் சங்கத்துடன் இணைந்து நடைபெற்றது.

    இக்குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன், முதன்மை இயக்குனர் டாக்டர். வித்யா, ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர். மல்லிகா தலைமை தாங்கினர். துணை முதல்வர் டாக்டர். ராஜேஸ்வரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்கத்தின் தலைவர் முகுந்தமாலா போலியோ விழிப்புணர்வு பற்றி உரையாற்றினார், மற்றும் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்களான அருவி முகுந்தன், பூவிழி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கல்லூரியின், இணை பேராசிரியர் கல்பனா இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பு செய்தார். முடிவில் சவுரிராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×