search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காலாப்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தொழிற்சாலைகளால் குடிநீர் வாழ்வாதாரம் பாதிப்பு
    X

    கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் மண்டபத்தில் பஞ்சாயத்து நிர்வாகிகள் பேட்டி அளித்த காட்சி.

    காலாப்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தொழிற்சாலைகளால் குடிநீர் வாழ்வாதாரம் பாதிப்பு

    • கிராம நிர்வாகிகள் கூட்டாக பேட்டி
    • காலாப்பட்டில் அமைந்துள்ள இது போன்ற கம்பெனிகளால் எங்களுடைய குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிப்படைந்துள்ளது.

    புதுச்சேரி:

    கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் மண்டபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, பிள்ளைசாவடி, கனகச்செசெட்டிகுளம் பகுதி பஞ்சாயத்தார்கள் சரவணன், கண்ணன், கோதண்டம், அருணகிரி, தமிழ்மாறன், சங்கர், ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    காலாப்பட்டில் இயங்கி வரும் தனியார் மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை 1986-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தொடர்ந்து இதுபோன்ற எதிர்பாராத விபத்துக்கள் நடந்து வண்ணம் உள்ளது. காலாப்பட்டில் அமைந்துள்ள இது போன்ற கம்பெனிகளால் எங்களுடைய குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிப்படைந்துள்ளது.

    காலாப்பட்டு தொகுதியில் ஒரு அ.தி.மு.க. உறுப்பினர் கூட இல்லதா நிலையில் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு ஆதரவாக காலாப்பட்டு பகுதியை சேர்ந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் செயல்படுவதாக அ.தி.மு.க.வினர் கூறிய குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

    கடந்த 4-ந் தேதி இரவு தொழிற்சாலையில் விபத்து நடந்து தீக்காயம் அடைந்த தொழிலாளர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல சொல்லி தொழிலாளர்களின் உறவினர்கள் வற்புறுத்தியதின் அடிப்படையிலேயே அவர்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×