search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    கேட்ச் மிஸ்சிங் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய ஹிட்மேன்: 3 செஞ்சூரி, 369 ரன்களுடன் முதலிடம்

    ஹிட்மேன் கேட்ச் மிஸ்சிங் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்தி 369 ரன்கள் குவித்ததுடன் மூன்று செஞ்சூரியும் அடித்து அசத்தியுள்ளார்.
    உலகக்கோப்பையில் இந்திய அணியின் துணைக் கேப்டனான ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 7 போட்டிகளில் பேட்டிங் செய்து நான்கில் சதம் அடித்துள்ளார். மழையால் ஒரு ஆட்டத்தில் விளையாடவில்லை.

    ரோகித் சர்மா தென்ஆப்பிரிக்கா,  இங்கிலாந்து மற்றும் வங்காள தேசம் அணிகளுக்கு எதிராக சதம் அடித்துள்ளார். ரோகித் சர்மாவுக்கு திறமையுடன் அதிர்ஷ்டமும் கைக்கொடுத்தது. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வங்காள தேசம் ஆகிய நான்கு அணிகள் ஐந்து முறை ரோகித் சர்மா கொடுத்த கேட்ச்-ஐ பிடிக்க தவறவிட்டன. இதில் தென்ஆப்பிரிக்கா இரண்டு முறை ரோகித் சர்மா கொடுத்த கேட்சை பிடிக்க தவறியது.

    இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரோகித் சர்மா தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காள தேசம் அணிகளுக்கு எதிராக சதம் விளாசினார். கேட்ச் மிஸ்சிங் செய்த பிறகு ரோகித் சர்மா 369 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை ரோகித் சர்மா 544 ரன்கள் குவித்துள்ளார். நான்கு அணிகளும் சரியாக கேட்ச் பிடித்திருந்தால் ரோகித் சர்மா 175 ரன்களே சேர்த்திருப்பார். அதிர்ஷ்டம் அவருக்கு அதிக அளவில் கைக்கொடுத்துள்ளது.

    ரோகித் சர்மா கேட்சை தவறவிட்ட தமிம் இக்பால்

    ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக டேஸ்ட் வார்னர் இரண்டு முறை கேட்சில் இருந்து தப்பித்து 156 ரன்கள் சேர்த்துள்ளார். ஆரோன் பிஞ்ச் 4 கேட்சில் இருந்து தப்பித்து 142 ரன்கள் அடித்துள்ளார். கிறிஸ் கெய்ல் 5 கேட்சில் இருந்து தப்பித்து 118 ரன்கள் அடித்துள்ளார். மோர்கன் ஒரு கேட்சில் இருந்து தப்பித்து 116 ரன்கள் சேர்த்துள்ளார்.
    Next Story
    ×