search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிஷப் பந்த்
    X
    ரிஷப் பந்த்

    ரிஷப் பந்த் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும்: பீல்டிங் கோச்சர் சொல்கிறார்

    அவுட் பீல்டில் ரிஷப் பந்த் வேகமாக ஓட வேண்டும். அதேபோல் பந்தை த்ரோ செய்வதில் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் வங்காள தேச அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நேற்றைய போட்டியின்போது பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அவரது பீல்டிங் பல குறைகள் இருந்தன.

    இந்நிலையில் ரிஷப் பந்த் பீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    ரிஷப் பந்த் பீல்டிங் குறித்து பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறுகையில் ‘‘ரிஷப் பந்துக்கு பீல்டிங் குறித்து அதிக அளவில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அவர் பந்தை த்ரோ செய்யும் டெக்னிக்கலில் முன்னேற்றம் அடைவது அவசியம். அத்துடன் அவுட்பீல்டு பகுதியில் வேகமாக ஓட வேண்டும்.

    ரிஷப் பந்த் எம்எஸ் டோனி

    அவரை நாங்கள் பீல்டிங் பகுதியில் பயன்படுத்தி வருகிறோம். அவருக்கு சரியான நேரத்தில் சரியான இடத்தை ஒதுக்கி கொடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது குறைந்தது ஐந்து ரன்களையாவது பீல்டிங்கின் போது சேமித்திருப்பார். இது அணிக்கு மிகப்பெரிய போனஸாக அமைந்தது. சிறப்பாக கேட்ச் பிடித்தார்’’ என்றார்.
    Next Story
    ×