என் மலர்

  செய்திகள்

  பொறுப்பற்ற சில ஷாட்டுகளை அடித்து அவுட் ஆகிவிட்டோம்- வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் வேதனை
  X

  பொறுப்பற்ற சில ஷாட்டுகளை அடித்து அவுட் ஆகிவிட்டோம்- வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் வேதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 15 ரன்னில் தோல்வியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது என ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
  நாட்டிங்காம்:

  12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நாட்டிங்காமில் நடந்த ‘லீக்’ ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 15 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.

  முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 79 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்பின் சுமித் - அலெக்ஸ் கேரி ஜோடி சிறப்பாக விளையாடியது. கேரி 45 ரன்னிலும், சுமித் 73 ரன்னிலும் அவுட் ஆனார்கள். 8-வது வீரராக களம் இறங்கிய நாதன் கவுல்டர் - நைல் அதிரடியாக விளையாடினர். அவர் 60 பந்தில் 92 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும்.

  ஆஸ்திரேலியா 49 ஓவரில் 288 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியால் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 273 ரன்னே எடுத்தது. இதனால் 15 ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா 2-வது வெற்றியை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் முதல் தோல்வியை சந்தித்தது.

  தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறியதாவது:-

  இந்த தோல்வி உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது. போட்டியில் நாங்கள் நல்ல நிலையில்தான் இருந்தோம் என்று நினைத்தேன். அனேகமாக நாங்கள் சிறிது உத்வேகத்தை காட்ட வேண்டிய நேரத்தில் பொறுப்பற்ற சில ஷாட்டுகளை அடித்து அவுட் ஆகிவிட்டோம்.

  ஆனாலும் இப்போட்டியில் இருந்து நிறைய நேர்மறை வி‌ஷயங்களை எடுத்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நாதன் கவுல்டர் நைல் 60 ரன்னில் இருந்தபோது அவரது கேட்சை தவறவிட்டோம்.  அதன்பின் அவர் 30 ரன்கள் சேர்த்து விட்டார். இதுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. பேட்ஸ்மேன்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து விளையாட வேண்டியது அவசியம். இன்னும் போட்டிகள் இருக்கின்றன. நாங்கள் இன்னும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ஆஸ்திரேலியா தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 9-ந்தேதி இந்தியாவுடன் மோதுகிறது. வெஸ்ட்இண்டீஸ் அணி 10-ந்தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
  Next Story
  ×