என் மலர்

  செய்திகள்

  உலக கோப்பை கிரிக்கெட்- பாகிஸ்தான் அணி 348 ரன்கள் விளாசல்
  X

  உலக கோப்பை கிரிக்கெட்- பாகிஸ்தான் அணி 348 ரன்கள் விளாசல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், 348 ரன்கள் விளாசிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து வெற்றி பெற 349 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
  லண்டன்:

  உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் இமாம்-உல்-ஹக், பகார் ஜமான் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

  தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் குவித்தனர். அடுத்து இறங்கிய பாபர் ஆசம், முகமது ஹபீஸ் மற்றும் சர்பாரஸ் அகமது ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அரை சதமடித்து அசத்தினர்.

  அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 84 ரன்களும், பாபர் ஆசம் 63 ரன்களும் குவித்தனர்

  இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்களை எடுத்துள்ளது.  இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் மொயீன் அலி தலா 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் மார்க் வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

  இதையடுத்து 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இங்கிலாந்து அணி களமிறங்கியது.
  Next Story
  ×