என் மலர்tooltip icon

    உலகம்

    33 மணிநேரம் படுத்தே இருந்த இளைஞருக்கு ரூ.37 ஆயிரம் பரிசு
    X

    33 மணிநேரம் படுத்தே இருந்த இளைஞருக்கு ரூ.37 ஆயிரம் பரிசு

    • விதிகளை மீறினால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
    • இந்த போட்டியில் 240 பேர் பங்கேற்ற நிலையில், 24 மணிநேரத்துக்குள் 186 பேர் வெளியேற்றப்பட்டனர்.

    சீனாவில் பல்வேறு வினோதமான போட்டிகள் நடத்தப்படுவது சகஜம். அந்த வகையில் பாட்டோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வினோத போட்டி நடத்தப்பட்டது.

    அதாவது நீண்ட நேரம் படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல் படுத்தே இருக்க வேண்டும் என்பது தான் விதி. இந்த போட்டியில் படுத்திருக்கும் போது செல்போன் பயன்படுத்தலாம். படிக்கலாம். உணவு வரவழைக்கலாம். ஆனால் உட்காரவோ, எழுந்து நிற்கவோ, கழிவறைக்கு செல்லவோ கூடாது. விதிகளை மீறினால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

    கடந்த 15-ந் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் 240 பேர் பங்கேற்ற நிலையில், 24 மணிநேரத்துக்குள் 186 பேர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், ஒரு இளைஞர் அதிகபட்சமாக 33 மணிநேரம் 35 நிமிடங்கள் வரை படுத்திருந்து போட்டியில் வெற்றி பெற்றார். அவருக்கு ரொக்கப்பரிசாக ரூ.37 ஆயிரம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×