என் மலர்
மேற்கிந்தியத் தீவு
- வெஸ்ட் இண்டீசின் ரோவ்மென் பாவெல் அதிரடியாக ஆடி 28 பந்தில் 61 ரன்கள் குவித்தார்.
- வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் தனி ஆளாகப் போராடி 68 ரன்கள் எடுத்தார்.
டொமினிகா:
வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டொமினிகாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் அரை சதமடித்து 57 ரன்னி அவுட்டானார். கடைசி கட்டத்தில் இறங்கிய ரோவ்மென் பாவெல் அதிரடியில் மிரட்டினார். அவர் 28 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 61 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நிகோலஸ் பூரன் 34 ரன் எடுத்தார்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
ஷகிப் அல் ஹசன் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அபிப் ஹொசைன் 34 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வங்காளதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷகிப் அல் ஹசன் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- வெஸ்ட் இண்டீசின் கைல் மேயர்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 2ம் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 340 ரன்கள் எடுத்தது.
செயிண்ட் லூசியா:
வங்காளதேச அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்களாதேச அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது. லிட்டன் தாஸ் 53 ரன்னிலும், தமிம் இக்பால் 46 ரன்னிலும் வெளியேறினர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ், அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் பிராத்வெய்ட் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். கேம்பெல் 45 ரன்னும், பிளாக்வுட் 40 ரன்னும் எடுத்தனர். அடுத்து இறங்கிய கைல் மேயர்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது. கைல் மேயர்ஸ் 126 ரன்னும், ஜோஷ்வா டா சில்வா 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- வங்காளதேசம் அணி 2வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- வெஸ்ட் இண்டீஸ் அணியின் கீமர் ரோச் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஆன்டிகுவா:
வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16 ஆம் தேதி ஆன்டிகுவா மைதானத்தில் தொடங்கியது இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 9 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது.
நான்காம் நாளான இன்று ஜான் கேம்ப்பெல் - பிளாக்வுட் ஜோடி மேலும் விக்கெட்டை பறிகொடுக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 88 ரன்கள் அடித்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
- வங்காளதேசம் அணி 2வது விக்கெட்டில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- வெஸ்ட் இண்டீஸ் அணியின் கீமர் ரோச் 2வது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஆன்டிகுவா:
வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிராத்வெயிட் 94 ரன்னும், பிளாக்வுட் 63 ரன்னும் எடுத்தனர்.
வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், எபாட் ஹுசைன், கலீல் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. கேப்டன் ஷகிப் அல் ஹசன், விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். நுருல் ஹசன் 64 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 63 ரன்னும் எடுத்தனர். மஹ்மதுல் ஹசன் ஜாய் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 3விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. வங்காளதேச வீரர் காலித் அகமது சிறப்பாக பந்து வீசினார். முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஜான் கேம்ப்பெல், பிளாக்வுட் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 265 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
- வெஸ்ட் இண்டீசின் பிராத்வெயிட், பிளாக்வுட் ஆகியோர் அரை சதமடித்தனர்.
நார்த் சவுண்ட்:
வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தது.
கேப்டன் கிரேக் பிராத்வெயிட் பொறுப்புடன் ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்னில் ஆட்டமிழந்தார். பிளாக்வுட் 63 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், எபாட் ஹுசைன், கலீல் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.
- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்காளதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் அரை சதமடித்தார்.
- வங்காளதேச அணியின் முன்னணி வீரர்கள் உள்பட 6 பேர் டக் அவுட்டாகினர்.
ஆன்டிகுவா:
வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் , 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் பந்து வீச்சில் சிக்கியது. ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 51 ரன்னில் வெளியேறினார் ,
இறுதியில், வங்காளதேச அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டும், ரோச், கைல் மேயர்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. கேப்டன் பிராத்வெயிட் நிதானமாக ஆடினார்.
முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெயிட் 42 ரன்னுடன் களத்தில் உள்ளார்.






