search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைனுக்கு கூடுதலாக 1 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத உதவி- அமெரிக்கா அறிவிப்பு
    X

     ரஷியா உக்ரைன் போர்,  பென்டகன்

    உக்ரைனுக்கு கூடுதலாக 1 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத உதவி- அமெரிக்கா அறிவிப்பு

    • ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுபடும் வரை அமெரிக்க பாதுகாப்பு ஆதரவு தொடரும்.
    • உக்ரைன் மக்களை அமெரிக்கா தொடர்ந்து பாதுகாக்கும்.

    வாஷிங்டன்:

    உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஆயுத பாதுகாப்பு உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது உக்ரைன் - ரஷியா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைன் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த உதவி வழங்கப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    இந்த உதவி மூலம் உக்ரைன் படைகள், ரஷிய படைகளை தாக்க உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 75,000 ரவுண்டுகள் கொண்ட பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் 50 கவச மருத்துவ சிகிச்சை வாகனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

    கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அமெரிக்க உதவிகள் உக்ரைன் மக்களையும் அந்த நாட்டையும் பாதுகாக்கவும் என்று பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுவிக்கப்படும் வரை நாங்கள் தொடர்ந்து அந்நாட்டுக்கு ஆதரவு அளிப்போம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

    Next Story
    ×