என் மலர்
உலகம்

Iran War | வளைகுடா நாடுகளை தாக்காதீங்க - ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
- தீர்மானம் 13 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.
வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. மேலும், இது குறித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஈரானின் நடவடிக்கைகள் வை சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், "சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக" இருப்பதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.
பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு எதிரான ஈரான் இஸ்லாமிய குடியரசின் அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்தக் கோரிய தீர்மானம் 13 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐ.நா. தீர்மானத்தில் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக சர்வதேச வழித்தடத்தை மூடுவது, தடுப்பது அல்லது வேறுவிதமாக தலையிடுவதை நோக்கமாக கொண்ட ஈரான் இஸ்லாமியக் குடியரசின் எந்தவொரு செயல்கள் அல்லது அச்சுறுத்தல்களை கண்டிக்கிறது."
ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளைத் தாக்கியுள்ளது.
உலக எரிபொருள் வர்த்தகத்திற்கான முக்கியமான கடல் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீதும் இஸ்லாமிய குடியரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது, இது உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும்.






