என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • ஹாரிபார்ட்டர் திரைப்படங்களுக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது.
    • ஹாரிபார்ட்டர் படத்தில் ரூபியஸ் ஹஹ்ரிட் கதாபாத்திர நடிகர் மரணமடைந்தார்.

    எடின்பர்க்:

    பிரபல தொடரான ஹாரிபார்ட்டர், 7 புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு ஹாரிபார்ட்டர் தொடர் இதுவரை 8 திரைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ளது. ஹாரிபார்ட்டர் திரைப்படங்களுக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது.

    ஹாரிபார்ட்டர் திரைப்பட தொடரில் ரூபியஸ் ஹஹ்ரிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரனி (72).

    இதற்கிடையே, நடிகர் ரூபி கால்ட்ரனி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரூபி கால்டரனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வயது முதிர்வு மற்றும் சிகிச்சை பலனின்றி ரூபி கால்ட்ரனி உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இங்கிலாந்து நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து நீக்கினார் பிரதமர் லிஸ் டிரஸ்.
    • புதிய நிதி மந்திரியாக ஜெர்மி ஹன்ட் என்பவர் நியமிக்கப்பட்டார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, பிரதமரின் இத்திட்டத்திற்கு சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இங்கிலாந்து நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார்.

    மேலும், புதிய நிதி மந்திரியாக ஜெர்மி ஹன்ட் என்பவரை நியமித்து செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார் என தகவல்கள் வெளியாகின.

    • மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது.
    • நிதிச்சந்தைகளில் அரசு நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும்.

    லண்டன் :

    இங்கிலாந்தின் புதிய பிரதமராகி உள்ள பெண் தலைவர் லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டார்.

    கடந்த 23-ந்தேதி வெளியான மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு (சுமார் ரூ.4.5 லட்சம் கோடி) வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன்வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது நிதிச்சந்தைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ், இந்த வரிகுறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவரது சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் பின்வரிசை எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இது லிஸ்டிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி அவருக்கு நெருக்கமான மந்திரி ஒருவர் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், "நாம் முற்றிலும் ஒரு மோசமான நிலையில் இருக்கிறோம். இதில் இருந்து வெளியேற வழியில்லை. ஒருவேளை லிஸ் டிரஸ் வழி கண்டுபிடிப்பார். ஆனாலும் என்னால் அதைப்பார்க்க முடியவில்லை" என தெரிவித்தார்.

    இதையொட்டி ரிஷி சுனக்கின் ஆதரவாளரான மெல் ஸ்டிரைட் கருத்து தெரிவிக்கையில், "நிதிச்சந்தைகளில் அரசு நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும், தெளிவான மாற்றத்தைக் காட்ட வேண்டும்" என கூறி உள்ளார்.

    ஏப்ரல் மாதத்தில் மாநகராட்சி வரியை 19 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும், மற்ற வரி குறைப்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்று கூறுகிற பிரதமர் லிஸ் டிரஸ், சொந்தக்கட்சியில் இப்போது எழுந்துள்ள எதிர்ப்பை எப்படி கையாளப்போகிறார், வரி குறைப்பு திட்டங்களை அவர் மறுபரிசீலனை செய்வாரா என்பது அங்கு பேசுபொருளாகி இருக்கிறது.

    • பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல் ஏந்தி அரியணையில் அமர்வார்.
    • இதன் பிறகு மன்னர் சார்லஸ் ஆட்சி அதிகாரப் பூர்வமாக தொடங்கும்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த மாதம் 8-ந் தேதி மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். கடந்த மாதம் மன்னர் சார்லஸ் அரியணையில் அமரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என்ற பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இங்கிலாந்து அரச குடும்பம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா 6 மே 2023 சனிக்கிழமையன்று நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    விழாவில் மன்னர் மூன்றாம் சார்லஸ், மனைவியும் ராணியுமான கமீலா பார்கருடன் முடிசூட்டப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல் ஏந்தி மன்னர் மூன்றாம் சார்லஸ் அரியணையில் அமர்வார்.

    பிறகு, மூத்த மதகுருமார்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு மன்னருக்கு புனித எட்வர்ட் கிரீடம் சூட்டப்படும். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து நாட்டு மக்களுக்கு மன்னர் உரையாற்றுவார். இதன் பிறகு அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும். 74 வயதாகும் சார்லஸ் இங்கிலாந்து வரலாற்றில் முடிசூட்டிக் கொள்ளும் மிக வயதான மன்னர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    • அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்து அரசுக்கான செலவை குறைக்க பிரதமர் லிஸ் டிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • இங்கிலாந்தை கடனில் இருந்து மீட்க அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ்டிரஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இங்கிலாந்தில் 2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்து அரசுக்கான செலவை குறைக்க பிரதமர் லிஸ் டிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பிரிட்டன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ் என்ற அமைப்பு, இங்கிலாந்தை கடனில் இருந்து மீட்க அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

    இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் 5 பில்லியன் பவுண்ட் சேமிப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதில் அரசுக்கான செலவுகளை குறைக்கும் ஒரு பகுதியாக அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டு மட்டும் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மற்ற ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்காது என்றும் தெரிகிறது.

    அடுத்த ஆண்டிலும் பண வீக்கம் அதிகரித்தால் மேலும் ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் லிஸ் டிரஸ்சின் இந்த நடவடிக்கையால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும்.
    • மன்னர் சார்லசின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் 8-ம் தேதி தனது மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக முடிசூடினார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். கடந்த மாதம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறினார்.

    இந்நிலையில், மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இதன்மூலம் இங்கிலாந்தின் வரலாற்றில் முடிசூட்டப்படும் மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் அவரது மனைவியுடன் முடிசூட்டப்படுவார்.இதன்மூலம், அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும். பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்திக்கொண்டு மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார்.

    மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். அதன்பின் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா எளிமையாக நடைபெறும் என்று தெரிகிறது.

    ஏற்கனவே, மன்னர் சார்லசின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவிலான தண்ணீர் இருப்பதற்கு சாத்தியம் உண்டு என்று கண்டறிந்தனர்.
    • திரவ நீர் என்பது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாகும்.

    லண்டன்:

    செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்தில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்து இருக்கிறது. இதுபற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2018-ம் ஆண்டு, மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தில் பனிக்கட்டியின் (மூடுபனி) மேற்பரப்பு தாழ்வதையும், உயர்வதையும் கண்டறிந்து, அதன் அடியில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம் என கூறியது. ஆனால் அதை அந்த காலகட்டத்தில் விஞ்ஞானிகள் நம்பவில்லை. அதே நேரத்தில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிட்டர் கண்டுபிடித்த நேரத்தில், விண்கலம் அளவிட்ட விசித்திரமான ரேடார் சமிக்ஞையை அவர்கள் மூடுபனியின் கீழே உலந்த பொருள் இருக்கலாம் என கருதினர்.

    ஆனால் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு செவ்வாயில் அல்டிமிஸ் ஸ்காபிலி என்றறியப்படுகிற பனிப்படலத்தால் மூடப்பட்ட பகுதியை வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்தனர். அதில்தான் அவர்கள் செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவிலான தண்ணீர் இருப்பதற்கு சாத்தியம் உண்டு என்று கண்டறிந்தனர்.

    "புதிய நிலப்பரப்பு சான்றுகள், எங்களது கம்ப்யூட்டர் மாதிரி முடிவுகள், ரேடார் தரவுகள் ஆகியவை, இப்போது செவ்வாய் கிரகத்தில் குறைந்தபட்சம் ஒரு பகுதியான திரவ நீர் இருப்பதற்கான ஆதாரமாக அமைகின்றன" என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் நீல் அர்னால்டு தெரிவித்துள்ளார்.

    இந்த ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றிய ஷெபீல்டு பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் பட்சர் கூறுகையில், "இந்த ஆய்வு இன்று செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் உள்ளது என்பதற்கான சிறந்த குறிப்பை அளிக்கிறது, ஏனென்றால் பூமியில் உள்ள துணை பனிப்பாறை ஏரிகளை தேடும் போது நாம் தேடும் இரண்டு முக்கிய ஆதாரங்கள், இப்போது செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.

    "திரவ நீர் என்பது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாகும். இருந்தாலும், இதனால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உண்டு என்று அர்த்தம் கொண்டு விட முடியாது" எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆராய்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்கள் 'நேச்சர் ஆஸ்ட்ரனாமி' பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

    • மன்னர் சார்லசின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • மன்னரின் உருவம் கொண்டுள்ள சிறப்பு 5 பவுண்ட் நாணயமும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி 2-ம் எலிசபெத் கடந்த மாதம் 8-ந் தேதி தனது 96 வயதில் மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக முடிசூடினார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார்.

    இந்த நிலையில் மன்னர் சார்லசின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாணயங்களை அதிகாரபபூர்வமாக தயாரிக்கும் ராயல் மின்ட் நிறுவனம் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயத்தை நேற்று வெளியிட்டது.

    இதோடு மன்னரின் உருவம் கொண்டுள்ள சிறப்பு 5 பவுண்ட் நாணயமும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாணயங்களும் அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

    50 பென்ஸ் நாணயத்தில் மன்னர் சார்லஸ் முகம் இடது புறம் பார்த்தபடி உருவாக்கப்பட்டுள்ளது. மறைந்த அவரது தாயார் ராணி 2-ம் எலிசபெத்தின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களில் அவரது முகம் வலது புறம் பார்த்தப்படி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட சுமார் 27 பில்லியன் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இருப்பதாவும், அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கர்ப்பிணி பெண்களை அடிப்படையாக வைத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினார்கள்.
    • கர்ப்பிணி பெண்களுக்கு ‘அல்ட்ரா ஸ்கேன்’ எடுக்கப்பட்டது.

    லண்டன் :

    தாயின் கருவறையில் வளர்கிற குழந்தைகளுக்கு புற உலக தூண்டல்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா?

    - ஏற்படுத்தும் என்று மருத்துவ விஞ்ஞானம் காட்டி இருகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா, உண்மைதான்.

    கர்ப்பிணி பெண்களை அடிப்படையாக வைத்து இங்கிலாந்தில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி நடத்தினார்கள். இந்த ஆராய்ச்சியின்போது 35 கர்ப்பிணி பெண்களுக்கு கேரட் பவுடரைக் கொண்ட கேப்சுல்களை (டியூப் மாத்திரை) வழங்கி விழுங்கச்செய்தார்கள். இன்னும் 35 கர்ப்பிணி பெண்களுக்கு காலே என்று அழைக்கப்படுகிற பரட்டைக்கீரை பவுடரைக் கொண்ட கேப்சுல்களை கொடுத்து விழுங்கச் சொன்னார்கள்.

    20 நிமிடங்கள் கழித்து அந்த கர்ப்பிணி பெண்களுக்கு 'அல்ட்ரா ஸ்கேன்' எடுக்கப்பட்டது.

    அதில் கேரட் கேப்சூல் விழுங்கிய கர்ப்பிணிகளின் கருக்குழந்தைகள் புன்னகைப்பதையும், பரட்டைக்கீரை கேப்சூலை சாப்பிட்ட கர்ப்பிணிகளின் கருக்குழந்தைகள் சிணுங்கி அழுவதுபோல காணப்படுவதையும் கண்டுபிடித்தனர். அதாவது, கேரட் கருக்குழந்தைகளுக்கு பிடித்து, அவர்களைப் புன்னகைக்க வைத்திருக்கிறது. பரட்டைக்கீரை அவர்களை சிணுங்க வைத்திருக்கிறது. கவனியுங்கள். இதில் கருக்குழந்தைகள் எதையும் சாப்பிடவில்லை. அவர்களின் தாய்கள்தான் அவற்றை சாப்பிட்டு இருக்கிறார்கள்.

    அதன் தாக்கம். அவர்களுக்குள் வந்திருக்கிறது.

    இதுபற்றி ஆராய்ச்சியாளரும், டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் கரு மற்றும் பிறந்த குழந்தை ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைவருமான பெய்சா உஸ்துன் கூறுகையில், "கருக்குழந்தைகள் தாயின் கர்ப்பப்பையில் இருக்கிறபோது, தங்கள் தாய்மார்கள் சாப்பிடுகிற உணவுகளின் சுவைகளுக்கு எதிர்வினையாற்றுகின்றன என்பதற்கான முதல் நேரடி ஆதாரத்தை நாங்கள் காட்டி இருக்கிறோம்" என தெரிவித்தார்.

    இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறும்போது, "கேரட் சுவை வெளிப்படும்போது கருக்குழந்தைகள் சிரிப்பு முகம் காட்டவும், பரட்டைக்கீரை சுவை வெளிப்படும்போது, அவை சிணுங்கும் அழுகை முகம் காட்டவும் அதிக வாய்ப்பு உள்ளது. பல்வேறு சுவைகளை உணரவும், பாகுபடுத்தவும் கருக்குழந்தைகளின் திறன்களின் ஆரம்ப கால ஆதாரங்களை புரிந்து கொள்வதற்கு இந்த ஆராய்ச்சிகள் முக்கிய தாக்கங்களை கொண்டுள்ளன" என தெரிவித்தனர்.

    இப்போது ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், கர்ப்பப்பையில் உள்ள கருக்குழந்தைகளுக்கு சில சுவைகளை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறபோது, அவை பிறந்த பின்னர் அவற்றின் மீது விருப்பு, வெறுப்பை காட்ட ஒரு காரணியாக இருக்கலாம் என்கின்றனர்.

    இதே போலத்தான் கர்ப்ப காலத்தில் தாய் விரும்பிக்கேட்கிற பாடல்களை கேட்டு வளர்கிற கருக்குழந்தைகள், பின்னாளில் இந்த உலகில் வந்து பிறந்த பிறகு, அந்த பாடலைக் கேட்கிறபோது உற்சாகமாக ஆட்டம்போடுகின்றன என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.

    மொத்தத்தில் கருக்குழந்தைகளுக்கு விருப்பமான புறத்தூண்டல்கள் அமைகிறபோது, அவர்கள் பிறந்த பிறகு நல்லவிதமாக வளர்வதற்கு வாய்ப்பாக அமையும்.

    • இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
    • இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 68 ரன் குவித்து களத்தில் இருந்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி இருந்தது.

    இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 45.4 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக 68 ரன்கள் குவித்த தீப்தி ஷர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மந்தனா 50 ரன்னும், பூஜா 22 ரன்னும் எடுத்தனர். 


    இதையடுத்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 43.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்லோட் டீன் 47 ரன்னும், எம்மா லாம்ப் 21 ரன்னும் எடுத்தனர். எமி ஜோன்ஸ் 28 ரன் அடித்தார். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளும், ஜூலன் கோஸ்வாமி மற்றும் கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 


    இதன்மூலம் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது. இந்த போட்டியுடன் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்மிருதி மந்தனா விரைவாக 3 ஆயிரம் ரன்களை நிறைவு செய்துள்ளார்.
    • விரைவாக 3000 ரன் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

    கேண்டர்பரி:

    இங்கிலாந்துக்கு எதிராக கேன்டர்பரியில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3 ஆயிரம் ரன்களை நிறைவு செய்து புதிய சாதனை படைத்தார். இதன்படி, இந்த இலக்கை விரைவாக எட்டிய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    அவர் 76 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் 88 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், அதனை மந்தனா முறியடித்துள்ளார்.

    ஸ்மிருதி மந்தனா விரைவாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீராங்கனை என்ற பெருமையுடன், இந்திய அளவில் 3-வது நபர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அவருக்கு முன் ஷிகர் தவான் 72 போட்டிகளிலும், விராட் கோலி 75 போட்டிகளிலும் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து மந்தனா 76 போட்டிகளில் விளையாடி 3-வது இடத்தில் உள்ளார்.

    • முதலில் ஆடிய இந்தியா 333 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    கேன்டர்பரி:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கேன்டர்பரி நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்தார். அவர் 143 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்லின் தியோல் 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. டேனில் வியாட் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 69 ரன்னில் அவுட்டானார். அலிஸ் கேப்சி, எமி ஜோன்ஸ் தலா 39 ரன்கள் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய சார்லட் டீன் 37 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து மகளிர் அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், ஹேமலதா 2 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர்.

    ×