search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து உள்துறை மந்திரி பதவி விலகல்
    X

    சுவெல்லா பிரேவர்மேன்

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து உள்துறை மந்திரி பதவி விலகல்

    • இந்திய வம்சாவளியான இங்கிலாந்து பெண் மந்திரி சுவெல்லா பிரேவர்மென் பதவி விலகியுள்ளார்.
    • ஒரு வாரத்திற்குள் லிஸ் டிரஸ்சின் அமைச்சரவையில் இருந்து பதவி விலகியுள்ள 2-வது மந்திரி இவர்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட லிஸ் டிரஸ் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் (42), உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவரது பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், ஒரு தவறு செய்து விட்டேன். அரசு விதிகளை மீறிவிட்டேன் எனக்கூறி அவர் மந்திரி பதவியில் இருந்து விலகியுள்ளார்.

    தனது பதவி விலகல் கடிதம் ஒன்றை லிஸ் டிரஸ்சுக்கு அனுப்பியுள்ளார். எனினும், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டேன் என அவர் கூறியுள்ளார்.

    கடந்த 14-ம் தேதி நிதி மந்திரி பதவியில் இருந்து குவாசி வார்தெங் நீக்கப்பட்டு, ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

    ஒரு வாரத்திற்குள் லிஸ் டிரஸ்சின் அமைச்சரவையில் 2-வது மந்திரி பதவியில் இருந்து விலகி சென்றுள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் சூழலில் அமைச்சரவையில் இருந்து பெண் மந்திரி வெளியேறி உள்ளார்.

    Next Story
    ×