என் மலர்
உலகம்

குவைத் தீ விபத்து- தமிழர்கள் 7 பேரின் உடலை அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது
- குடியிருப்பில் மொத்தம் 25 தமிழர்கள் வசித்துள்ளனர்.
- உடல்கள் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குவைத் தீ விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 25 தமிழர்கள் வசித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் 10 பேர் வேலைக்காக வெளியில் சென்றுவிட்ட நிலையில் மீதமுள்ள 15 பேர் தீ விபத்தில் சிக்கி உள்ளனர்.
இந்த தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல் மங்காப் பகுதியின் அருகே உள்ள மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடலை அனுப்பி வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடலும் இன்றே அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்யும் என தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியம் தெரிவித்துள்ளது.
Next Story






