என் மலர்
உலகம்

ரஷியாவின் கிரீமியாவில் உள்ள கப்பல் கட்டும் தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்
- கப்பல் கட்டும் தளம் தீப்பிடித்து எரிந்து கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
- கருங்கடல் கடற்படையில் உள்ள கப்பல்களின் பழுதுகள் சரி செய்யப்படுகின்றன.
ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா தீபகற்பத்தில் துறைமுக நகரமான செவஸ்டோபோலில் கப்பல் கட்டும் தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கப்பல் கட்டும் தளம் தீப்பிடித்து எரிந்து கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் 24 பேர் காயம் அடைந்தனர். தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இந்த கப்பல் கட்டும் தளம் ரஷியாவுக்கு மிகவும் முக்கியமானது. இங்கு கருங்கடல் கடற்படையில் உள்ள கப்பல்களின் பழுதுகள் சரி செய்யப்படுகின்றன.
Next Story






