search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்- நெதர்லாந்து ஆய்வாளர் எச்சரிக்கை
    X

    இந்தியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்- நெதர்லாந்து ஆய்வாளர் எச்சரிக்கை

    • துருக்கி, சிரியாவில் இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரணத்தை தாண்டியுள்ளது.
    • ஆப்கானிஸ்தானில் தொடங்கும் ஒரு பெரிய நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6ம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.

    மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரணத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில், துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தை அது ஏற்பட மூன்று நாட்களுக்கு முன்பே அப்பகுதியில் வலிமையான நிலநடுக்கம் ஏற்படும் என்பதை நெதர்லாந்து ஆய்வாளர் ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் கணித்திருந்தார்.

    நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் பிரான்க் ஹூகர்பீட்ஸ். புவியியல் ஆய்வு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று தனது டுவிட்டர் பக்கத்தில், "மத்திய - தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கூடிய விரைவில் அல்லது தாமதமாக பதிவாகும்" என்று கூறி இருந்தார். அப்போது அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், தற்போது அவரின் இந்த பதிவு வைரலாகியுள்ளது. இதற்கிடையே அவர் இந்தியா பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரான்க் ஹூகர்பீட்ஸ் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்

    இதே ஆய்வாளர் நில அதிர்வுவுகள் இறுதியில் பாகிஸ்தானையும் இந்தியாவையும் கடந்து இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் என கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அவர் ஆப்கானிஸ்தானில் தொடங்கும் ஒரு பெரிய நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நில அதிர்வு இறுதியில் பாகிஸ்தான், இந்தியாவைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அவரது இந்த வீடியோ பதிவு இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. துருக்கியில் இந்தளவுக்குப் பேரழிவு ஏற்படுவதை முன்கூட்டியே கணித்தவர் என்பதால் இணையத்தில் இது பேசுபொருளாகியுள்ளது. நாம் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், மற்றொரு தரப்பினர் நிலநடுக்கங்களை எல்லாம் முன் கூட்டியே கணிக்க முடியாது என்றும் இவர் சொல்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×