என் மலர்
உலகம்

பஸ்சுக்குள் தொட்டில் கட்டி தூங்கிய வாலிபர்- வீடியோ வைரல்
- ஷாம்பெயின் ஸ்லோஷி என்ற பயனர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோ 57 வினாடிகள் உள்ளது.
- வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் வாலிபரின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ரெயில்களுக்குள் குழந்தைகளுக்காக தொட்டில் கட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் சமீபகாலமாக ரெயில்களில் கடும் கூட்ட நெரிசலால் இருக்கை கிடைக்காத சில பெரியவர்கள் கூட போர்வையால் தொட்டில் கட்டி படுத்து உறங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி இருந்தன.
இந்நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஓடும் பஸ்சுக்குள் வாலிபர் ஒருவர் தொட்டில் கட்டி படுத்து உறங்கிய காட்சிகளும், அதனை அகற்றுமாறு கூறிய டிரைவருடன் அந்த பயணி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் உள்ளது.
ஷாம்பெயின் ஸ்லோஷி என்ற பயனர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோ 57 வினாடிகள் உள்ளது. அதில், பஸ் இருக்கைகளுக்கு நடுவே குறுக்காக பெரிய கயிறுகள் மூலம் தொட்டில் கட்டிய வாலிபர் ஒருவர் அதில் படுத்துக் கொள்கிறார். இதைப்பார்த்த டிரைவரும், கண்டக்டரும் அந்த பயணியிடம் தொட்டிலை அகற்றுமாறு கூறிய போது அவர் மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் ஆவேசம் அடைந்த டிரைவர், நான் பஸ் ஓட்ட மாட்டேன் என கூறும் காட்சிகள் உள்ளது.
வைரலான இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் வாலிபரின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Hammock on the bus?? pic.twitter.com/zWpoZi2Ddb
— Champagne Sloshy (@JoshyBeSloshy) May 13, 2024






