என் மலர்tooltip icon

    உலகம்

    தென்கொரியா: பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை
    X

    தென்கொரியா: பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை

    • தென்கொரிய அதிபர் மூன் ஜே இங் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
    • இந்த மசோதா நேற்று பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.

    சியோல்:

    தென் கொரியாவில் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனால் பாலியல் குற்றச் சம்பவங்கள், போதைப் பொருள் பயன்பாடு, ஆன்லைன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் மாணவர்கள் சிக்கி அவர்களின் வாழ்க்கை சீரழிவதாக புகார் எழுந்தது.

    பள்ளியில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்பாடுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இங் பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதற்காக மசோதாவை நேற்று பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.

    இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தென் கொரியாவில் அடுத்த கல்வி ஆண்டு முதல் (மார்ச் 2026) பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×