என் மலர்tooltip icon

    உலகம்

    பதற்றமான சூழ்நிலை: இஸ்ரேல் பிரதமர், ஈரான் அதிபருடன் பேசிய புதின்
    X

    பதற்றமான சூழ்நிலை: இஸ்ரேல் பிரதமர், ஈரான் அதிபருடன் பேசிய புதின்

    • அமெரிக்கா- ஈரான் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • மத்திய கிழக்கு, மேற்கு ஆசிய பிராந்தியங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக அங்கு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தை ஈரான் அரசு கடுமையாக முடக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் போராட்டக்காரர்களுக்கும், ஈரான் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டால் அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்க தாக்குதல் நடத்தும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதனால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதி மற்றும் மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, ஈரான் அதிபர் பெசாஸ்கியான் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஸ்திரதன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை இந்த பிராந்தியங்களில் டிப்ளமேட்டிக் மூலமாக உறுதிப்படுத்துவது, இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தாங்கள் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்

    ஈரானைச் சுற்றியும் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் நிலவும் பதற்றங்களை கூடிய விரைவில் தணிப்பதற்கு ஆதரவாக ரஷியாவும் ஈரானும் தொடர்ந்து ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்து வருவதாகவும், மேலும், எழும் பிரச்சினைகளை அரசியல் மற்றும் ராஜதந்திர வழிகள் மூலமாக மட்டுமே தீர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் புதின் மற்றும் பெசாஸ்கியான் தங்கள் உறுதிபாட்டை வெளிப்படுத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    Next Story
    ×