search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
    X

    ரஷிய அதிபர் புதினுடன் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்

    லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

    • உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 5வது மாதமாக நீடிக்கிறது.
    • உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மற்றும் அரசு பொது வழக்கறிஞரை அதிபர் ஜெலன்ஸ்கி நீக்கினார்.


    Live Updates

    • 18 July 2022 8:43 AM GMT

      உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மற்றும் அரசு பொது வழக்கறிஞர் ஆகியோரை பணிநீக்கம் செய்து அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். அரசு பொது வழக்கறிஞரின் அலுவலகங்களில் பணியாற்றி வருபவர்கள், உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் உள்பட மூத்த அதிகாரிகளை அதிபர் ஜெலன்ஸ்கி பணிநீக்கம் செய்துள்ளார். இந்த இரு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அந்தப் பிரிவுகளின் தலைவர்களை நீக்கியுள்ளார்.

    • 18 July 2022 12:33 AM GMT

      உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மற்றும் அரசு பொது வழக்கறிஞர் ஆகியோரை பணிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். அரசு பொது வழக்கறிஞரின் அலுவலகங்களில் பணியாற்றி வருபவர்கள், உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் உள்பட மூத்த அதிகாரிகளை அதிபர் ஜெலன்ஸ்கி பணிநீக்கம் செய்துள்ளார். இந்த இரு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அந்தப் பிரிவுகளின் தலைவர்களை நீக்கியுள்ளார்.

    • 17 July 2022 9:08 PM GMT

      உலகப் பட்டினி மற்றும் பஞ்சம் தொடர்பிலான மாநாடு ஒன்றில் இலங்கையின் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

      உக்ரைன், ரஷிய போர் நிறுத்தப்படாவிட்டால் உலக மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்க நேரிடும். மேற்கு உலக நாடுகளினால் விதிக்கப்பட்ட பொருளாதார தடையால் ரஷ்யா மண்டியிடவில்லை. மாறாக, மூன்றாம் உலக நாடுகளே மண்டியிட்டுள்ளது.

      ரஷியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். நிபந்தனைகளை விதிக்காது உக்ரைன் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • 17 July 2022 10:55 AM GMT

      தெற்கு உக்ரைனில் உள்ள தொழில் நகரம் மீது இன்று ரஷிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. அங்குள்ள கப்பல் கட்டும் மையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எனினும் உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பு வழங்கிய ஹார்பூன் ஏவுகணைகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு மீது தாக்குதல் நடத்தி அதை அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • 17 July 2022 12:54 AM GMT

      உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தப் போவதாக ரஷிய அதிகாரிகள் சமீபத்தில் அறிவித்த நிலையில், அந்நாட்டின் மீது மும்முனை தாக்குதலை ரஷியா தொடுத்துள்ளது.

      இந்நிலையில், கிழக்கு டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 16 July 2022 9:56 PM GMT

      இந்தோனேசியாவின் பாலித் தீவில் ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாடு நடைபெற்றது.

      இதில் பங்கேற்ற கனடா நிதி மந்திரி, ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகளின் கூட்டத்தில் ரஷியாவின் பங்கேற்பு அபத்தமானது. இந்தக் கூட்டத்தில் ரஷியா பங்கேற்றது தீயணைப்பு வீரர்களின் கூட்டத்திற்கு தீ வைப்பவர்களை அழைப்பது போல் இருந்தது. உக்ரைனின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் அதன் பொருளாதார விளைவுகளுக்கு ரஷியா நேரடியாகவும் முழு பொறுப்பாகவும் உள்ளது என தெரிவித்தார்.

    • 16 July 2022 11:05 AM GMT

      கிழக்கு டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நகரங்களில் நடத்தப்படும் தாக்குதல்களில், கடந்த 24 மணி நேரத்தில் பொதுமக்கள் தரப்பில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 14 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கவர்னர் கூறியுள்ளார். 

    • 16 July 2022 11:02 AM GMT

      கிழக்கு உக்ரைன் மற்றும் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பிற பகுதிகள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விடும்படி ரஷிய ராணுவப் பிரிவுகளுக்கு ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு உத்தரவிட்டுள்ளார். 

    • 16 July 2022 10:55 AM GMT

      ஜபோரிஜியா அணு மின் நிலையத்தில் பயங்கர ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதால் மிகவும் பதற்றமான சூழல் நிலவுவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவன தலைவர் கூறி உள்ளார். ரஷிய படையெடுப்புக்குப் பிறகு அணுமின் நிலையத்தை பார்வையிட முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • 16 July 2022 7:23 AM GMT

      தென் கிழக்கு உக்ரைனில் உள்ள, ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணு மின் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷிய படைகள், தற்போது அந்த பகுதியை தனது ராணுவ தளமாக பயன்படுத்திவருகிறது. அங்கு ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள ரஷியா, அங்கிருந்தபடி சுற்றி உள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.

      ஜபோரிஜியா அணு உலையில் சுமார் 500 ரஷிய வீரர்கள் முகாமிட்டுள்ளனர். எனினும், அங்கு உக்ரைன் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். 

    Next Story
    ×