search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நாங்கள் இணைந்தால் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் வலிமைபெறும்- ஜெலன்ஸ்கி
    X

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் உர்சுலா சந்திப்பு

    நாங்கள் இணைந்தால் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் வலிமைபெறும்- ஜெலன்ஸ்கி

    • ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, உக்ரைனுக்கு சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.
    • உக்ரைனின் கோரிக்கை குறித்து அடுத்த வார இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என தகவல்

    உக்ரைனின் தென்கிழக்கு கெர்சன் மற்றும் ஜபோரிஜியா பிராந்தியங்களில், ரஷிய படைகளிடம் இருந்து கிராமங்கள் மற்றும் நகரங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். எனினும், சிவியரோடோனெட்ஸ்க் பகுதியில் இன்னும் சண்டை தொடர்ந்து நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, உக்ரைனுக்கு சென்று ஜெலன்ஸ்கியைச் சந்தித்து பேசினார். அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான உக்ரைனின் கோரிக்கை குறித்து, அடுத்த வார இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என்று கூறிய நிலையில், ஜெலன்ஸ்கி தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.

    உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் என்ற அந்தஸ்து வழங்கும் முடிவு உக்ரைனை மட்டுமல்ல, முழு ஐரோப்பிய ஒன்றியத்தையும் வலுப்படுத்தும் என்றும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×