என் மலர்tooltip icon

    உலகம்

    டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்- பிரதமர் மோடி உறுதி
    X

    டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்- பிரதமர் மோடி உறுதி

    • கார் வெடி சம்பவத்தில் தொடர்புடைய எவரும் தப்பிக்க முடியாது.
    • தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்திய பிரதமர் மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் வந்துள்ளார். பூட்டான் மன்னரின் 70-வது பிறந்த நாள் விழாவல் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:-

    * இன்று, நான் மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன்.

    * நேற்று மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். இன்று முழு தேசமும் அவர்களுடன் நிற்கிறது.

    * டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த பயங்கர சம்பவத்தில் சதிகாரர்கள் தண்டிக்கப்படுவது உறுதி.

    * சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.

    * உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நீதி பெற்றுத்தரப்படும்.

    * சதிச்செயலின் வேர் வரை சென்று விசாரணை நடத்தி உண்மைகளை கண்டுபிடிப்போம்.

    * கார் வெடி சம்பவத்தில் தொடர்புடைய எவரும் தப்பிக்க முடியாது.

    * இந்த சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகளுடன் நான் நேற்று இரவு முழுவதும் தொடர்பில் இருந்தேன்.

    * தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    * இந்தியாவில், நமது முன்னோர்களின் உத்வேகம் வசுதைவ குடும்பகம், அதாவது உலகம் முழுவதும் ஒரே குடும்பம்... இந்த உணர்வுகளுடன், பூட்டானில் நடைபெறும் இந்த உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவில் இந்தியாவும் பங்கேற்றுள்ளது.

    * இன்று, உலகெங்கிலும் உள்ள துறவிகள் உலக அமைதிக்காக ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்கிறார்கள், இதில் 1.4 பில்லியன் இந்தியர்களின் பிரார்த்தனைகளும் அடங்கும் என்றார்.




    Next Story
    ×