என் மலர்tooltip icon

    உலகம்

    அந்தமான் நிகோபார் தீவுகளில் நில நடுக்கம்- பொதுமக்கள் அச்சம்
    X

    அந்தமான் நிகோபார் தீவுகளில் நில நடுக்கம்- பொதுமக்கள் அச்சம்

    • ரிக்டர் அளவுகோலில் இது 3.9 ஆக பதிவானது.
    • அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    போர்ட் பிளேயர்:

    அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள திக்லப்பூர் அருகே இன்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3.9 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கியது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    பல இடங்களில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நில நடுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×