என் மலர்tooltip icon

    உலகம்

    பிலாவல் பூட்டோ அதிருப்தி எதிரொலி: முன்னாள் கூட்டணி கட்சிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்
    X

    பிலாவல் பூட்டோ அதிருப்தி எதிரொலி: முன்னாள் கூட்டணி கட்சிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்

    • நவாஸ் ஷெரீப் கட்சி பிலாவல் பூட்டோ கட்சி ஆதரவுடன் கூட்டணி ஆட்சி ஆட்சி செய்து வருகிறது.
    • பட்ஜெட் தொடர்பான பரிந்துரைகளை ஏற்காகததால் பிலாவல் பூட்டோ கட்சி அதிருப்தியில் உள்ளது.

    பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் இம்ரான் கான் கட்சியை சேர்ந்தவர்கள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றனர்.

    ஆனால் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி பிலாவல் பூட்டோ-சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி ஆட்சியில் மேலும் சில சிறிய கட்சிகள் இடம் பிடித்துள்ளன.

    நவாஸ் ஷெரீப் பிரதமராக உள்ளார். சர்தாரி அதிபராக உள்ளார். பிலாவல் பூட்டோ கட்சி ஆட்சியில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறது.

    தற்போது பாகிஸ்தான் அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறது. இதற்காக பட்ஜெட்டை தயார் செய்யும் பணியில் தீவிரவமாக ஈடுபட்டு வருகிறது. பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய சில விசயங்களை பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி பரிந்துரைத்துள்ளது.

    ஆனால், நவாஸ் ஷெரீப் கட்சி பிலாவல் பூட்டோ கட்சியின் பரிந்துரைகளை ஏற்கவில்லை எனத் தெரிகிறது. தங்களது பரிந்துரைகள் ஏற்கப்படதாத நிலையில், தங்கள் கட்சியின் ஆதரவை இன்னும் மதிக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளத. இதனால் கூட்டணி ஆட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில்தான் ஏற்கனவே நவாஸ் ஷெரீப் கட்சியுடன் கூட்டணியில் இருந்த ஜமியாத்- உலேமா-இ-இஸ்லாம் (எஃப்) கட்சிக்கு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார். அந்த கட்சியின் தலைவர் மவுலானா பஸ்லுரை கூட்டணியில் இணையுமாறு கேட்டுள்ளார்.

    ஆனால் மவுலானா பஸ்லுர் கூட்டணியில் இணைய மறுப்பு தெரிவித்து விட்டார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தி தொடர்பாளர் கூறுகையில் "ஜேயுஐ-எஃப் கட்சி ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியுடன் இணையும் என நான் நினைக்கவில்லை. ஆட்சியில் இடம் பிடிப்பது எங்களுடைய அரசியல் அல்ல. தற்போது இருக்கும் அரசு அமையதற்கு முன்னதாக நாங்கள் ஏற்கனவே சிறந்த வாய்ப்புகளை பெற்றிருந்தோம்." என்றார்.

    இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்ற கூட்டணில் மவுலானா ரெஹ்மான் இடம் பிடித்திருந்தார். இம்ரான் கான் கட்சி 2022 ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தார். அப்போது பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் ஆட்சி அமைத்தது எனபது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×