என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் கடந்த மூன்று மாதங்களில் 1.72 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு பயணம்: காரணம் இதுதான்..!
    X

    பாகிஸ்தானில் கடந்த மூன்று மாதங்களில் 1.72 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு பயணம்: காரணம் இதுதான்..!

    • அதிகபட்சமாக சவுதி அரேபியாவுக்கு 1,21,190 பேர் சென்றுள்ளனர். ஓமனுக்கு 8,331 பேர் சென்றுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 6,891 பேர் சென்றுள்ளனர்.
    • 849 டாக்டர்களும், 1,479 இன்ஜினீயர்களும் சென்றுள்ளனர். 390 செவிலியர்கள், 436 ஆசிரியர்களும் அடங்குவர்.

    பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள், நல்ல வேலைவாய்ப்புகளை தேடி வெளிநாடு சென்ற வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடந்த மூன்று மாதங்களில் 1.72 லட்சம் பேர் பாகிஸ்தானில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாக அந்நாட்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் ஒரு லட்சம் பேர் தனிநபர் பிரிவில் பொதுவான வேலைகள் என்ற பிரிவில் சென்றுள்ளனர்.

    அதிகபட்சமாக சவுதி அரேபியாவுக்கு 1,21,190 பேர் சென்றுள்ளனர். ஓமனுக்கு 8,331 பேர் சென்றுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 6,891 பேர் சென்றுள்ளனர்.

    பிரிட்டனுக்கு 1,454 பேரும், துருக்கி நாட்டிற்கு 870 பேரும் சென்றுள்ளனர். மேலும் கிரீஸ் (815), மலேசியா (775), சீனா (592) அஜர்பைஜான் (350), ஜெர்மனி (264), அமெரிக்கா (257), இத்தாலி (109), ஜப்பான் (108) நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.

    பொது வேலை என்ற பிரிவில் 99,139 தனி நபர்கள் சென்றுள்ளனர். 38,274 டிரைவர்கள், 1,859 கொத்தனார்கள், 2,130 எலக்ட்ரீசியன்ஸ், 1,689 சமையல்காரர்கள், 3,474 டெக்னீசியன்ஸ், 1058 வெல்டர்கள் ஆவார்கள்.

    849 டாக்டர்களும், 1,479 இன்ஜினீயர்களும் சென்றுள்ளனர். 390 செவிலியர்கள், 436 ஆசிரியர்களும் அடங்குவர்.

    Next Story
    ×